Advertisement

திருமணம் முடிந்து அனைவரும் களைய தொடங்கினர்.அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.நேற்று சந்தோஷமாக இருந்த திருமண வீடு இன்று கலையிழந்து காணப்பட்டது.இதில் மஞ்சுளாவுக்கு தான் மனது ஆரவே இல்லை மகன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.வள்ளி பாட்டிக்கோ மதியழகியை கண்டது ஒரு அதிர்ச்சி என்றால் பேரன் அவளை திருமணம் செய்தது அடுத்த அதிர்ச்சி.ராமலிங்கமோ ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்.எப்படியெல்லாம் மகனின் திருமணத்தைக் காண எண்ணினார் ஆனால் அவரது ஆசைகள் எல்லாம் கருகிவிட்டன.பேசக்கூட தெம்பில்லாமல் போனது அவருக்கு.
அருள்வேந்தனும்,அண்ணாமலையும் தான் மற்ற வேலைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டனர்.வேந்தன் அனைத்து வேலைகளையும் செய்தாலும் முகத்தில் சிறிதளவு கூட மலர்ச்சியில்லை தன் கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறான் என்று அவனது முகமே கூறியது.அண்ணாமலைக்கு இந்த திருமணத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.அவருக்கு அழகியின் எதிர்காலத்தை பற்றிய கவலை இப்போது இல்லை.இந்த திருமணம் யாருக்கும் விருப்பமில்லை என்றாலும் காலப்போக்கில் அனைத்தும் மாறும் என்று நம்பினார்.
மதியழகியோ கை,கால்கள் நடுங்க ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.குனிந்து தன் கழுத்தில் புதிதாக தொங்கும் மாங்கள்யத்தை தொட்டுப் பார்த்தாள் நடந்தது கனவில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.அழுவதற்கு கூட தெம்பில்லை அவளுக்கு காலையில் இருந்து உண்ணாது இருந்தது வேறு அவளுக்கு தலைசுற்றுவது போல இருந்தது.யாரும் அவளது பக்கத்தில் கூட வரவில்லை.கொண்டவனோ தாலிக்கட்டியதோடு தன் கடமை முடிந்தது என்பது போல சென்றுவிட்டான்.அவனது வீட்டில் உள்ளவர்களோ இவளை ஏற்எடுத்தும் பார்க்கவில்லை.மனதில் சொல்லான வேதனைக் குடிகொண்டது தனக்கென்று யாருமில்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது.
அருள்வேந்தனோ அனைத்து வேலைகளையும் முடித்தவன் ஒரு இறுக்கையில் தளர்வாக அமர்ந்தான்.மனதில் கோபக் கனல் கனன்றுக்கொண்டு தான் இருந்தது.கண்களை மூடி இருக்கையின் பின்புறம் தலை சாய்தவனது நினைவுகள் நேற்று இரவு நடந்தவைகளை அசைப்போட்டது.
தன் நண்பர்களுடன் பேசிவிட்டு அறைக்கு வந்தனது அறைக்கதவு தட்டப்படவும்.கதவை திறந்தான் வெளியில் ஒரு ஐம்பது வயது மதிக்க தக்க பெண்மணியைக் காணவும் யார் என்று தெரியாமல் புருவம் சுருக்கினான்.அந்த பெண்மணியோ,
“தம்பி…என் பேரு வைதேகி…உங்க வருங்கால மாமனாரோட தங்கச்சி…”என்றார்.வேந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் என்றால் பெருமால் தனக்கு தங்கை இருப்பதாக இதுவரைக் கூறியதில்லை.அப்படி இருக்க இவர் தங்கை என்கிறார் என்று புரியாமல் பார்த்தான்.அவரோ,
“என்ன பத்தி எங்க அண்ணன் யார்கிட்டேயும் சொல்லாது…நான் எங்க வீட்ட பொறுத்தவரைக்கும் இறந்து போனவ…”என்றார் கலங்கிய விழிகளோடு.
“நீங்க என்ன சொல்லவரீங்க எனக்கு புரியல…”என்றான் வேந்தன்.
“நான் எங்க வீட்ட எதிர்த்துக்கிட்டு கல்யாணம் செஞ்சுகிட்டேன் அதனால என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க…”தேம்பியவர் மேலும் தொடர்ந்தார்,
“எனக்கு ஒரே புள்ள பேரு கதிரேசன்…அவனுக்கு எங்க வீட்ட பத்தின விஷயம் அவங்க அப்பா இறப்புக்கும் போது தான் தெரிஞ்சிது…அவன் எங்க குடும்பத்தை இணைக்க அவன் மாமா கிட்ட பொய் சொல்லி அவரோட உரக்கடையில வேலைப் பார்த்தான்…அப்போ…”என்றவர் வேந்தனின் முகம் பார்க்க அவனோ மேலும் சொல்லுங்க என்று செய்கை செய்தான்.அவனுக்கு ஓரளவு புரிந்தது இருந்தும் அவர் வாயல் வரட்டும் என்று அமைதிகாத்தான்.மேலும் அவரே,
“என் பையனுக்கும்,ரம்யாவுக்கும் பழக்கமாச்சு… ரம்யாவ ஒருதடவ என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து எங்கள பத்தின உண்மை எல்லாத்தையும் சொன்னான்…ரம்யாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம்னா இன்னொரு பக்கம் அவங்க அப்பா நினைச்சு பயம் வர ஆரம்பிச்சிடுச்சு…அதிலேந்து என் புள்ளைக்கிட்ட நாம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்கா…முதல்ல என் புள்ள ஒத்துக்கல ஆனா ரம்யா ரொம்ப வற்புற்தவும் சம்மதிச்சான்…என்கிட்டேயும் விரத்தை சொல்லி வேற வழியில்லமா நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க கேட்கவும் நானும் ஒத்துக்கிட்டேன்…ஒரு கோவில்ல ரம்யாவும் என் புள்ளையும் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க….. இந்த விஷயம் எப்படியோ தெரிஞ்சு அவுங்க ஆட்களோட வந்து பொண்ண மிரட்டினாங்க…முதல்ல ரம்யா வரமுடியாதுனு தான் சொன்னா ஆனா  நீ வரலனா நான் செத்துபோயிடுவேனு மிரட்டி அவள கூட்டிட்டு பொயிட்டாங்க..அதுமட்டும் இல்ல தம்பி என் புள்ளையையும் ஆள் வச்சு அடிச்சி போட்டார்….அவன் இப்ப ஆஸ்பத்திரில ரம்யானு ரம்யானு புலம்பிக்கிட்டு கிடக்கான்….”என்று அனைத்தையும் கூறியவர்,
“தம்பி…இப்ப என் புள்ள இந்த பொண்ண நினைச்சு பைத்தியம் போல ஆயிடோவானோ எனக்கு பயமா இருக்கு…உங்களால முடிஞ்சா  என் புள்ளைய காப்பாத்துங்க…”என்று கை கூப்பி அவனிடம் வேண்டிவிட்டு அவனது பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டார்.
வேந்தனுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே புரியவில்லை.ஒருபுறம் தன்வீட்டில் இந்த திருமணத்தால் எவ்வளவு சந்தோஷமாக உள்ளனர் அவர்களிடம் இதை எவ்வாறு கூறுவேன் என்ற கேள்வி எழுந்தாலும் மற்றொரு புறம் ரம்யா மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது…எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் ஏற்கனே கல்யாணம் ஆனதை மறைத்து தனக்கு கல்யாணம் பேசியிருப்பார்கள்…தன் தலையை கோதி தன்னை ஒரு நிலைக்கக் கொண்டு வந்தவன் “வேந்தா இது கோப படுற நேரம் இல்ல…”என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்.அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள் சில முடிவுகளை எடுத்தவன்,நேராக ரம்யா இருக்கும் அறைக்கு சென்றான்.
ரம்யாவோ தனது அறையில் அழுகையில் கரைந்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு கதிரேசன் உயிரோட இருந்தால் போதும் என்ற எண்ணம் வந்திருந்தது.காரணம் பெருமால் தன்னை மீறி ஏதாவது செய்ய நினைத்தால் கதிரேசனை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியிருந்தார்.அவரது கண்களில் தெரிந்த கோபத்தில் அவர் செய்வார் என்று கூறியது.அதனால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தது.ஆனால் அவளால் இன்னொருவனை ஏமாத்துகிறோமே என்ற எண்ணமே அவளைக் கொஞ்சம் கொஞ்சம் கொன்றுக்கொண்டிருந்தது.எங்காவது சென்றுவிடலாம் என்றால் அதற்கும் செக் வைத்திருந்தார் தந்தை.எல்லாம் தன்னை மீறி நடப்பதால் அவளால் எதுவும் செய்யவும் முடியாமல் இந்த திருமணத்தை ஏற்கவும் முடியாமல் தடுமாறினாள்.ஒரு கட்டத்தில் அவளது அழுகை கேவலாக வெடிக்க பக்கத்தில் படுத்திருந்த அவளது அன்னைக்கு கேட்டு,
“இதோ பாருடி சும்மா அவனையே நினைச்சுக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்காத…நாளைக்கு உனக்கு கல்யாணம் அதமட்டும் மனசுல பதியவை…”என்றார் கட்டளையாக.ரம்யாவோ,
“எப்படிம்மா…என்னால அத்தான மறக்க முடியாது மா…ப்ளீஸ்…நீயாவது என்ன புரிஞ்சிக்கியேன்…”என்றாள் கண்களில் வலியோடு.தாயோ சற்றோ இலகவில்லை.அப்போது அங்கு வந்த பெருமால்,
“இன்னும் தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…”என்றவர் மகளின் அழுது வீங்கிய முகத்தைக் கண்டு,
“என்ன அவன மறக்க முடியலனு உன் பொண்ணு அழுது தான் நினைச்சத சாதிக்கலாம்னு பாருக்குறாளா…கதிர் இன்னும் ஆஸ்பத்திரில தான் இருக்கான்…”என்று மேலும் சொல்லும் முன்,
“என்ன செஞ்சிடுவீங்க அவன…”என்று அழுத்தமாக கேட்டான் அருள்வேந்தன்.ரம்யாவிடம் பேச வந்தவன் இவர்களின் உரையாடலைக் கேட்டு அமைதியாக நின்றான்.பெருமால் கதிரைக் காட்டி மிரட்டவும்  அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது அதனால் அவனே முன் வந்தான்.
அனைவரும் அதிர்ந்துவிட்டனர் யாரும் அந்த சமயத்தில் அருள்வேந்தனை எதிர்பார்க்கவில்லை.பெருமாலுக்கும்,கமலத்துக்கும் உறைந்துவிட்டனர் என்றால்,ரம்யாவோ தன்னை காக்க வந்த கடவுளை போல பார்த்துக்கொண்டிருந்தாள்.அவர்கள் அனைவரையும் தீர்க்கமாக பார்த்தவன்,
“இப்ப சொல்ரீங்கலா இல்லையா…”என்றான் அழுத்தமாக.இது தான் தக்க சமயம் உணர்ந்த ரம்யா அனைத்தையும் கூறியவள்,
“முடிஞ்சா என்னை மன்னிச்சிடுங்க…எப்படியாவது என் அத்தானை காப்பாத்துங்க…”என்று அவனது கால்களில் விழுந்தாள் ரம்யா.அவளது செய்கையில் இரண்டு அடி பின் சென்றான் வேந்தான்.பெருமாலும்,கமலமும்,
“தம்பி…அது சின்ன பொண்ணு ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கும்…நீங்க அதெல்லாம் பெருசா எடுத்துகாதீங்க…”என்றனர்.அவர்களை முறைத்தவன்,
“இன்னும் கொஞ்ச நேரத்தில எது உண்மை,எது பொய்னு…”என்றான்.சிறிது நேரத்தில் வேந்தனின் மொத்த குடும்பமும் அந்த அறையில் தான் இருந்தது.அதில் வைதேகியும்,கதிரேசனும் அடக்கம்.அவர்களை அங்கே கண்டவுடன் பெருமாலுக்கும்,கமலத்துக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டிது.
ராமலிங்கத்துக்கோ ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்து போனது அதனால் அவர்,
“வேந்தா…என்னப்பா…ஏன் இந்த நேரத்துல எல்லாரையும் கூப்பிட்டு இருக்க…”என்றார் பதட்டமாக.அவரது கைகளை பற்றி கண்களால் அமைதியாக இருங்க என்றவன்,பெருமாலை பார்த்து,
“சொல்லுங்க…”என்றான் கூர்மையாக
இதுக்கு மேல் மறைக்க எதுவும் இல்லை உணர்ந்தவரும் அனைத்தையும் கூறினார்.அதுவரை எதுவும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த வேந்தனின் குடும்பத்துக்கு இவை அனைத்தும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.மஞ்சுளாவும்,வள்ளி பாட்டியும் இடிந்து போய் அமர்ந்துவிட்டனர்.ராமலிங்கமோ எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று நினைத்தவர் வெடித்துவிட்டார்.அவரை அவ்வளவு கோபமாக இதுவரை யாரும் பார்த்ததில்லை வேந்தனுக்கே தன் தந்தை கண்டு சற்று அதிர்ச்சி தான்.அவர் பெருமாலின் சட்டையை பிடித்திட வேந்தன் தான் அவரை அடக்க வேண்டியது ஆயிற்று. அதில் கோபம் கொண்ட பெருமாலோ,
“யோவ் உன் பையன் என்ன உத்தமனா அவனும் ஒரு பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தவன் தான…”என்று அவர் மேலும் கூறும் முன்,
“ஏய்…”என்று சிவப்பேறிய கண்களுடன் ஒரு விரலைக் காட்டி மிரட்டினான் வேந்தன்.அதில் பெருமால் நடுங்கிவிட்டார் அவனது தோற்றத்தைக் கண்டு.
“இன்னும் இரண்டு நிமிஷம் டையம் தரேன் நீங்க என்று பெண்வீட்டாரைக் காட்டியவன் யாரும் என் கண்முன்னாடி இருக்கக்கூடாது…”என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.அதன்பின் பெண்வீட்டினர் அனைவரும் கிளம்பினர்.ரம்யாவோ தன் தந்தையின் முகத்தைக் கூட காண பிடிக்காமல் கதிர் மற்றும் வைதேகியுடன் சென்றுவிட்டாள்.
வேந்தனோ மண்டபத்தின் மாடியில் நின்றுக் கொண்டிருந்தான்.அவனது காதில் பெருமால் கூறிய வார்த்தைகளே சுழன்றுக்கொண்டிருந்தன.ஆக என்ன செய்தாலும் இந்த அவபெயர் போகபோவதில்லை என்ற தனக்குள் சொல்லிக்கொண்டவன் சுவற்றில் வேகமாக குத்தியவன் கண்களில் கீழே சமையல் வேலையில் இருந்த அழகி விழுந்தாள்.பக்கத்தில் உள்ள பெண்ணிடம் சிரித்துக்கொண்டு காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள்.அவளைக் கண்டவுடன் எல்லாம் இவளால இவ செஞ்சதுக்கு நான பழிசுமக்குறேன் என்று கூறிக்கொண்டவன் மனதில் ஒரு முடிவுடன் கீழே சென்றான்.அங்கு அவனது வீட்டினர் ஓய்ந்து போய் அமர்ந்துதிருந்தனர்.அவர்களிடம் சென்றவன் தன் முடிவினைக் கூறிவிட்டு அனைவரையும் தயாராகும் படி கூறினான்.அவனது குடும்பத்தார் எவ்வளவு தடுத்தும் அவன் செவிசாய்க்கவில்லை.அடுத்த அரைமணிநேரத்தில் அழகி அழைத்தார் அண்ணாமலை.
மதியழகி அண்ணாமலை அழைக்கவும் சென்றவள் அங்கு வேந்தனைக் கண்டு அறைவாயிலேயே தேங்கி நின்றாள்.அவளது வரவை உணர்ந்த வேந்தன் அண்ணாமலையிடம்,
“நீங்க சொல்லி புரியவைங்க…”என்றுவிட்டு சென்றுவிட்டான்.அழகியிடம் அனைத்தையும் கூறிய அண்ணாமலை அவளை வேந்தனை திருமணம் செய்யுமாறு கேட்கவும்,அவள் பயந்து வேண்டாம் என்றாள்.ஆனால் அண்ணாமலையோ அவளை பேசியே கரைத்து சம்மதம் வாங்கினார்.
குறித்த மூகூர்த்த வேலையில் அழகியின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான் அருள்வேந்தன்.
“வேந்தா…”என்ற குரலில் நிகழ்வுக்கு வந்தவன் அங்கே தனது தூரத்து உறவு அத்தை அவனை அழைத்து,
“நல்லநேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு போகனும் பா…கிளம்பு…”என்றவர் அழகியின் அருகில் சென்று,
“கிளம்பு மா வீட்டுக்கு போகனும்…”என்று பட்டுபடாமல் கூறிவிட்டு சென்றார்.அவருக்கு வேந்தன் எவ்வளவு தடுத்தும் அழகியை திருமணம் செய்ததில் விருப்பம் இல்லை,இருந்தாலும் சம்ரதாயங்களை செய்து தானே ஆக வேண்டும் என்று செய்தார்.மஞ்சுவோ இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல வீட்டிற்கு சென்றுவிட்டார்,வள்ளி பாட்டியோ பேரனின் இந்த முடிவில் சற்று கோபம் தான் என்றாலும் எதையும் தடுக்கவும் இல்லை.
அழகியோ இயந்திரகதியில் வேந்தனுடன் அவனது வீடு நோக்கி பயணமானாள்.எவ்வளவோ மனவேதனைகள் இருந்த போதும் மனதின் ஓரத்தில் சிறு நிம்மதி பரவ தான் செய்தது இருந்தாலும் அதை உணரும் நிலையில் தான் அழகி இல்லை.அருகில் அமர்ந்து இருக்கும் வேந்தனின் முகம் பார்த்தாள் அவனோ ஏதோ தீவிர யோசனையில் இருந்தான்.வாழ்க்கை யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்று யாரும் அறியார்.அதே போல் தான் வேந்தனுக்கு,அழகிக்கும் அவர்களது வாழ்க்கை பயணமும் ஆரம்பம் ஆனது ஆனால் சந்தோஷமாகவா என்று கேட்டால் பதில் இல்லை இருவரிடமும்.

Advertisement