Advertisement

வேந்தனின் வீட்டில் திருமண வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருந்தன.ராமலிங்கத்துக்கு மகனின் திருமணத்தை விமர்சியாக செய்வதில் ஏக மகிழ்ச்சி அதனால் காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக்கொண்டிருந்தார் மனிதர்.வள்ளியோ தன் செல்ல பேரனின் கல்யாணம் முடிவானதிலிருந்து இளமை திரும்பியது போல ஆட்டம்,பாட்டமாக பொழுதை கழித்தாலும் திருமண வேலைகளை பார்பதிலும் தவறவில்லை.வேந்தனே வள்ளியிடம்,
“ஏய் கிழவி கொஞ்ச நேரமாவது படுத்து எந்திரி…ரொம்ப ஆடாத உடம்புக்கு ஏதாவது வந்துடபோகுது…”என்று கிண்டல் செய்தான்.அதற்கெல்லாம் அசுருபவரா வள்ளி,
“எலேய் என்ன கிழவினு சொல்லாதனு சொல்லிருக்கேன்ல்ல…போடா அங்கிட்டு…”என்றுவிட்டு செல்வார்.மஞ்சுளாவோ தன் மகனின் மலர்ந்த முகத்தைக் கண்டு கடவுளே என் புள்ள முகம் எப்போதும் இப்படி சிரிச்ச மாதிரியே இருக்கனும் என்று அனைத்து கடவுளிடமும் வேண்டுதல் வைப்பார்.வேந்தனுக்கே வீட்டாரின் சந்தோஷத்தைக் கண்டு இவ்வளவு நாள் தன் ஒருவனால் இவர்களின் சந்தோஷத்தை அழித்துவிட்டேனோ என்ற குற்றவுணர்ச்சி எழத்தான் செய்தது முயன்று அதை ஒதுக்கியவன் தன் திருமண வேலைகளில் கவனம் செலுத்தினான்.
மதியழகிக்கோ மனது பதட்டத்தோடே தன் வேலைகளை பார்த்தாள்.அண்ணாமலைக் கூறியது போல மதியம் அவரிடம் சமான்களை பட்டியலிட்டவர்கள் அதனை சுத்தபடுத்தி வைத்தாள்.பின் மளிகை சமான்களின் பட்டியல் இட அண்ணாமலையின் அலுவலக அறைக்கு சென்ற போது,
“நீங்க ஒண்ணும் கவலைபடாதீங்க தம்பி எல்லாம் பார்த்துக்கலாம்…அப்போ மளிகை உங்க கடையிலிருந்தே எடுத்துக்கலாங்களா…”என்று அவர் யாருடனோ கைபேசியில் பேசுவதை கண்டு திரும்பி செல்ல எத்தனிக்கும் வேலை,
“இரும்மா அழகி…பாத்திரமெல்லாம் சுத்தம் பண்ணியாச்சா…”என்றார்.
“ஆச்சு அண்ணாச்சி…நீங்க தான் மளிகை லிஸ்ட் எடுக்கனும்னு வர சொன்னீங்க…”என்றாள்.
“சரிம்மா இரு வரேன்…”அவர் அழகி என்றவுடன் வேந்தனின் பேச்சு நின்றுவிட்டது அடுத்த அழகியின் குரலைக் கேட்டவன் ஒருவேளை அவளாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேலையில்,
“ஹலோ தம்பி இருக்கீங்கலா…”என்றார் அண்ணாமலை.தன் நினைவில் இருந்து மீண்டவன்,
“ஆங் சொல்லுங்க…”என்றான்.
“மன்னிச்சிக்குங்க என்னகிட்ட வேலை செய்ர பொண்ணு வந்துட்டு அதான்…”என்று மன்னிப்பை வேண்டியவர் மேலும் சிலவற்றைக் கேட்டுவிட்டு வைத்தார்.அவர் வைத்தவுடன் வேந்தனுக்கு அந்த குரல் அவளோடது மாதிரி இருந்துச்சே இல்லை எனக்கு தான் அப்படி தோனுதோ என்று நினைத்தவன் தன் தலையை உலுக்கி,
“வேந்தா என்ன இது நல்லது நடக்குற சமயத்துல அவள பத்தி யோசிச்சிகிட்டு…அதுவும் அவரே சொன்னார்ல என்கிட்ட வேலை செய்யுற பொண்ணுனு…அப்படினா கண்டிப்பா அவளா இருக்காது…அந்த திமிர் பிடிச்சவ காசுலே பொறந்து வளந்தவ அவளாவது வேலை செய்யிறதாவது…”தனக்குள் சொல்லிக்கொண்டவன்  பின் வேலையில் ஆழ்ந்து போனான்.
அண்ணாமலையுடன் மளிகை சமான்களை பட்டியலிட்டவள்,
“சரி அண்ணாச்சி நான் போய் இத நம்ம செட்டியார் கடையில கொடுத்திட்டு வரேன்…”என்று கிளம்பினாள்.
“இரும்மா என்ன அவசரம்…இந்த கல்யாணம் பண்றவங்களே பெரிய மளிகை கடை வச்சிருக்காங்க அதனால நாம அங்க போய் இதெல்லாம் வாங்கிக்கலாம்..”என்றார்.அவர் மளிகை கடை என்றவுடன் அழகிக்கு உள்ளுக்குள் பதட்டம் தொற்றிக்கொண்டது ஒருவேளை அவர்களாக இருக்குமோ என்று எண்ணியவள் கடையின் பெயரைக் கேட்டாள்.அண்ணாமலை கூற எத்தனிக்கும் நேரம்,
“அண்ணாச்சி…”என்ற படி வந்தார் கந்தன் அவரிடம் வேலை செய்பவர்.கந்தன் வந்து பேசவும் அழகி வெளியில் வந்துவிட்டாள்.அவளது மனது ஏதோ நிலையில்லாமல் தவித்தது முயன்று அடக்கியவள் அடுத்த வேலைகளை செய்ய சென்றுவிட்டாள்.அவள் கடையின் பெயரைக் கேட்டுறிருந்தால் அங்கு போகிருக்க மாட்டாள் ஆனால் விதி யாரை விட்டது  என்பது போல அவளை வேந்தனிடம் இழுத்து சென்றது.
வேந்தனின் வீட்டில் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர் இன்று கல்யாண சவுளி எடுக்க இருவீட்டாரும் செல்கின்றனர்.வள்ளி தான் பேரனை ஒருவழியாக்கிக் கொண்டிருந்தார் வரமாட்டேன் என்றவனை வற்புற்த்தி அழைத்தவர் அவன் போடும் உடைகளை குறை கூறிக்கொண்டிருந்தார்.பொதுவாக வேந்தன் தன் உடைகளில் கவனமாக தான் இருப்பான் இடத்திற்கு தகுந்தார் போல தான் அணிவான்.அப்படியிருக்க அவனை படுத்திக்கொண்டிருந்தார்,
“இது என்ன டா மங்கி போன சட்டைய போடுற…நல்ல கலரா போடு…உன்ன பொண்ணு திரும்பி திரும்பி பார்க்கவேண்டாம்…இப்படி வந்தா என்னாலே பார்க்கமுடியல அப்புறம் அவ எங்கேந்து பார்ப்பா…”என்றார் நக்கலாக.வேந்தனோ அவரை வெட்டவா,குத்தவா என்ற ரீதியில் பார்த்தவன் தான் அணிந்திருந்த சட்டையை கழட்டிவிட்டு வேறு ஒன்றை எடுத்தான்,
“இது என்ன டா கலரு…”என்று மீண்டும் ஆரம்பிக்க அவரை தடுத்தவன்,
“ஏய் கிழவி என்ன ரொம்ப ஓவரா போற நான் வரல நீங்கலே போய்யிட்டுவாங்க…”என்றான் கோபமாக.வள்ளியோ கொஞ்சம் ஓவர தான் போய்யிட்டோம் போல என்று நினைத்தவர் பேரனிடம்,
“சரி சரி கண்ணு நான் ஒண்ணு சொல்ல உனக்கு பிடிச்சத போட்டுட்டு வா…”என்று அவனை மலையிறக்கி அவனை கடைக்கு கிளப்பினார். வேந்தனின் குடும்பம் கடைக்குள் நுழையும் நேரம் அவர்களை கண்டு வந்தார் பெண்ணின் தந்தை பெருமால்.அனைவரையும் வரவேற்றவர் உள்ளே அழைத்துச் சென்றார் அங்கே பெண்களின் துணி பிரிவில் துணிகளை பார்த்துக்கொண்டிருந்தனர் பெண்ணின் தாய் கமலம்,மணபெண் ரம்யா.மாப்பிள்ளை வீட்டாரைக் கண்டவுடன் வரவேற்ற கமலம் மஞ்சு,வள்ளியிடம் பேசிக்கொண்டிருந்தார்.இதில் எதிலும் வேந்தனும் கலந்து கொள்ளவில்லை மனபெண் ரம்யவும் கலந்து கொள்ளவில்லை.ரம்யாவோ ஏதோ ஒரு புடவை பார்பதும் பின் தன் மொபைலை பார்பதுமாக இருக்க,வேந்தனோ கடையை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான்.அனைவரும் பேசும் மும்மரத்தில் இவர்களை பார்க்கவில்லை ஆனால் வள்ளி பாட்டி கவனித்துவிட்டார்.என்ன இதுங்க இரண்டும் பார்த்துக்கூட மாட்டேங்குதுங்க என்று நினைத்தவர்,
“நல்ல நேரம் முடியரதுக்குள்ள புடவைய எடுத்துடலாம் மஞ்சு…”என்றவர்.
“ஐய்யா வேந்தா நீயும் ரம்யாவும் போய் புடவை பாருங்க…”என்றார்.வேந்தன் பதில் கூறும் முன் மஞ்சு,
“அத்த அவனுக்கு என்ன புடவைய பத்தி தெரிய போகுது…”என்றார்.இவ ஒருத்தி காரியத்த கெடுக்குறதை வேலைய வச்சுருக்கா கண்ணுகாட்டினாலும் புரியாது இவளை முதல்ல கிளப்புனும் என்று நினைத்தவர்,
“ஏன்ய்யா லிங்கு இங்க வா…”என்றார்.அதுவரை தன் சம்மந்தி பெருமாலிடம் பேசிக்கொண்டிருந்தவர் தன் அன்னை அழைக்கவும் வந்தவர்,
“என்னம்மா…ஏன் கூப்பிட்ட..”என்றார்.
“உன் பொண்டாட்டிக்கு போய் புடவை எடுக்க உதவு போ…”என்றார் வள்ளி.
புரியாமல் விழித்தவரை அருகில் அழைத்த வள்ளி,
“இவள அழைச்சிட்டு போடா…”என்றார் தன் அன்னை ஏதோ செய்யவுள்ளார் என்று ஊகித்தவர்,
“ஏம்மா..நீ ஏதாவது ஏடாகூடமா செஞ்சு வைக்காத அவன் ஏச ஆரம்பிச்சுடுவான்…”என்றார் மகனுக்கு பயந்து.வள்ளியோ,
“எல்லாம் எனக்கு தெரியும் போடா…”என்று கூறி அனுப்பியவர்.கமலத்தை,பெருமாலையும் பேசி அழைத்து சென்றார்.வேந்தனுக்கோ இந்த கிழவி இருக்குதே சரியான ஆளு என்று நினைத்தவன் ரம்யாவிடம் திரும்பி,
“நீ உனக்கு பிடிச்சதா எடு…எனக்கு இந்த புடவை பத்தியெல்லாம் அவ்வளவா தெரியாது…”என்றான்.
ரம்யாவோ,
“சரி…”என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டாள்.அவள் புடவை எடுப்பதில் கவனமாக வேந்தன் அங்கிருக்கும் புடவைகளை பார்த்தவன் கண்களில் விழுந்தது அந்த புடவை அரக்கு கலரில் பட்டு பாடர்யிட்டு சிறிய அன்னபட்சி புடவை முழுவதும் பட்டால் நெய்யப்பட்டிருந்தது.அதைக் கண்டவுடன் மனதில் பல நியபகங்கள் அலைமோதின அன்று அவளும் இதே போல் ஒரு புடவை தானே அணிந்திருந்தாள் என்று நினைத்தவன் ஒருநிமிடம் அழகியின் முகம் தெரிய என்ன இது பக்கத்துல நான் கட்டிக்க போறவ நிற்குறா அவ முகம் வரமா அந்த ராங்கி முகம் வருது என்று யோசிப்பவனது யோசனையை கலைத்தாள் ரம்யா,
“இது நல்லாயிருக்கா…”என்று ஒரு புடவையை கையில் வைத்துக்கொண்டு கேட்டாள்.
“நல்லாயிருக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்க…”என்றான்.இவர்கள் இருவரையும் கண்கானித்துக்கொண்டிருந்த வள்ளிக்கு இருவரும் பேசிக்கொள்ளவும் மனது சற்று அமைதியடைந்தது.பின் அனைவருக்கும் உடைகள் எடுத்துவிட்டு வீடு வந்தனர்.அன்று முழுவதும் அழகியின் முகம் வேந்தனை படாபடுத்தியது.ச்ச அவ மூஞ்சி ஏன் இன்னக்கி திரும்பி திரும்பி நியாபகத்துக்கு வருது என்று தன்னை கடிந்து கொண்டவன் தன் வேலைகளில் கவனம் செலுத்த முயன்றான்.
அழகிக்கு இந்த கல்யாண நாள் நெருங்க நெருங்க ஒரு வித பதட்டம் தொற்றிக்கொண்டது.என்ன இது இப்படி மனசு படபடக்குது சிவகங்கையில அவங்க ஒருத்தங்க தான் மளிகை கடை வச்சிருக்காங்கலா இது வேற யாராவது கூட இருக்கலாம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.அவளுக்கு மாப்பிள்ளை வீட்டில் மளிகை வைத்துள்ளார்கள் என்று அண்ணாமலைக் கூறவும் மனது பதற துவங்கியது இருந்தும் அடக்க முயற்ச்சி செய்தாள்.முதலில் போகவே வேண்டாம் என்று நினைத்தவள் பின் அண்ணாமலை கேள்வி கனைகளை தொடுப்பார் என்று தெரியுமாதலால் அந்த யோசனையைவிட்டாள்.இப்போது என்னவென்றால் ஏதாவது காரணம் கூறி மறுத்திருக்க வேண்டுமோ என்று புத்தி கூறியது.காலம் கடந்த யோசனையில் பயன்னில்லை என்று நினைத்தவள் உறங்க முற்பட்டாள்.இரு நாட்களுக்கு முன்பே அண்ணாமலையும் மற்றவர்களும் ஒரு வேனில்,சமையல் பத்திரங்கள் ஒரு வேனில் சிவகங்கை செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி இதோ கிளம்பிக்கொண்டிருந்தனர் அனைவரும்,
“அழகி எல்லாம் சரியா இருக்கானு பார்த்திட்டியாமா…”என்றார் அண்ணாமலை.அவளோ ஏதோ தீவிர யோசனையில் இருந்ததால் அவர் கூறியதை கவனிக்கவில்லை.அவளிடமிருந்து பதில் வராமல் இருக்கவும்,
“அழகி…”என்று மீண்டும் அழைத்தார் அண்ணாமலை.
“ஆங்…என்னங்க அண்ணாச்சி…”
“எல்லாம் சரியா இருக்கானு கேட்டேன்…”என்றார்.
“எல்லாம் சரியா இருக்கு அண்ணாச்சி…”என்றாள்.
“அப்ப நீ தான் சரியில்லயோ…”என்றார்.அவர் சாதரணமாக தான் கேட்டார் ஆனால் அழகிக்கு தான் வேர்த்துவிட்டது.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணாச்சி…”என்று மழுப்பிவிட்டு சென்று வேனில் அமர்ந்தாள்.அவளுக்கு தெரியும் அங்கே இருந்தால் அண்ணாச்சி கேள்வி கேட்பார் என்று ஏற்கனவே மனது ஒரு நிலையில் இல்லை என்பதை உணர்ந்தவள் தன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினாள்.அவளையும் மீறி கண்ணீர் வெளி வந்தது அதை யாரும் அறியா வண்ணம் துடைத்தவள் தூங்க முயன்றாள்.ஆனால் தூக்கம் தான் வரவில்லை வண்டி நகர துவங்கியது சிவகங்கையை நெருங்கும் நேரம் அழகிக்கு தன் சிறுவயது நியாபகங்கள் அலைமோத அதை முயன்று அடக்கினாள்.ஆனால் முடியவில்லை அதனால் யாரும் அறியா வண்ணம் அழுகையில் தன் மனபாரங்களை வெளியேற்றினாள்.அனைவரும் பாட்டு கேட்டுக்கொண்டும்,கதை பேசிக்கொண்டும் வந்ததால் யாரும் அவளை கவனிக்கவில்லை.விதியின் விளையாட்டில் தப்பித்தோர் யாருமில்லை அதே போல் தான் வேந்தனையும்,அழகியையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க வைத்தது அவர்களின் விதி.

Advertisement