Advertisement

தூரம் போகாதே வெண்ணிலவே…5
காலை வேளையில் சமையலறையில் பம்பரம் சுழன்று கொண்டு இருந்தாள் அழகி.அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு அடுத்த வேலை செய்ய ஆரம்பித்தாள். சாரதாவிற்கு மகளை பார்க்க பார்க்க தான் எடுத்த முடிவு சரியனவேபட்டது.அதை செயல்படுத்த தக்க சமயத்தை எதிர் நோக்கி இருந்தார்.கலையரசனும்,கேசவனும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.வசுந்திராவும் அவள் தோழி ஒருவளை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்தாள்.இது தான் சமயம் என்று உணர்ந்தவர் தனது அறைக்கு வந்து தான் எடுத்து வைத்த பொருட்களை ஒருமுறை சரிபார்த்தவர்,ஒரு கட்ட பையுடன் வெளியில் வந்தார்.கையில் பையுடன் வரும் சாரதாவை பார்த்த வசுந்திரா,
“என்ன அத்த…காலையிலேயே எங்க கிளம்பிட்ட அதுவும் பையோட…”என்றாள்.எரும இதெல்லாம் மட்டும் கரட்டா நோட்பண்ணும் என்று நினைத்தவர்.
“நான எங்க போகப்போறேன் கோவிலுக்கு தான்…”
“அது தெரியிது உனக்கு வேற எங்க போக்கிடம் இருக்கு…சாய்திரம் தான போவ…”என்றாள் யோசனையாக.அவளுக்கு சாரதா மாலை நேரங்களில் கோவில் செல்வார் என்று தெரியும்.இன்று காலை கிளம்பவும் கேட்டாள்.சாரதாவோ சனியன் புடிச்சவ எப்படி கேள்வி மேல கேள்வி கேட்குறா பாரு எல்லாம் என் போதாத நேரம் என்று நினைத்தவர்,
“இன்னக்கி பிரதோஷம் டிம்மா…அதான் போறேன்…அதோட கோவில் பக்கத்துல தான மளிகை கடை அழகி சாமான் வாங்கனும்னு சொன்னா அதான் பைய் எடுத்துட்டு போறேன்…போதுமா…”என்றார்.
கிழவிக்கு திமிரு இன்னும் குறையல இருடி உன் பொண்ண அனுப்பிட்டு உன்ன என் வேலைக்காரியாக்குறேன் என்று மனதில் கருவியவள்,
“சரி சரி போய்யிட்டு வாங்க…”என்றுவிட்டு கிளம்பி சென்றாள்.
பின் அழகியும்,சாரதாவும் கோவில் வந்தார்கள்.அழகிக்கு தன் அன்னை இரவு தன்னிடம் கூறிவைகளே மனதில் ஓடியது.நடுஇரவில் தூக்கம் கலையிந்த அழகி தன் அன்னை இன்னும் தூங்காமல் இருப்பதைப் பார்த்து,
“என்னம்மா…ஏன் உக்கார்ந்து இருக்க…ஏதாவது உடம்புக்கு பண்ணுதா…”என்றாள் நடுங்கிய குரலில்.அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தாய் தான் அவருக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம் பிடித்துக்கொண்டது.மகளின் கலங்கிய முகத்தைக் கண்டவர் மனது ஊமையாக அழுதது,எவ்வாறு கூறுவார் தன் உடன்பிறப்பே இவளை பணத்திற்காக விற்க போகிறான் என்றா அவனால் தன் மாங்கல்யம் இழந்து நிற்கிறேன் என்றா சொன்னால் உடைந்துவிடுவாள் மகள் என்று அஞ்சியவர் தன் துக்கங்களை முயன்று விழுங்கினார்.இது தான் கலங்கும் நேரம் இல்லை என்று தனக்குள் நூறாவது முறையாக கூறிக்கொண்டார்.ஆம் நூறாவது முறைதான் தன் மகனின் அறையில் இருந்து வந்ததில் இருந்து இதை மட்டும் தானே மனதில் கூறுகிறார்.மகனின் வாயால் கேட்ட அனைத்து விஷயத்திற்கு பிறகும் இவ்வளவு அமைதியாக இருக்கிறார் என்றார் என்றால் அதற்கு வாழ்க்கை கற்று தந்த பாடம் தான் என்று கூறலாம்.தன் அன்னையிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் போகவே ஒருவேளை தான் பேசியதை நினைத்து கவலை படுகிறாறோ என்று நினைத்தவள்,
“அம்மா..நான் சும்மா ஏதோ பயத்துல பேசிட்டேன்…இனி அப்படி பேச மாட்டேன்…நீ அதையே நினைச்சுக்கிட்டு இருக்காத…”என்றாள்.மகளின் பதிலில் விரக்தி புன்னகை புரிந்தவர்,
“அழகி..அம்மா ஒண்ணு சொன்னா கேட்கனும் கேட்பியா…”
“என்னம்மா சொல்லு…”
“நாம நாளைக்கு இந்த வீட்ட விட்டு போறோம்…”
“என்னம்மா சொல்ர…எங்க போக போறோம்…”என்றாள் அதிர்ச்சியாக.
“அத அப்புறம் சொல்றேன்…நீ நாளைக்கு என் கூட கோவில் வர மாதிரி வா…எதுவும் யார் கிட்டேயும் சொல்லக்கூடாது புரியுதா…”அழகிக்கோ ஒன்றும் புரியவில்லை.வீட்டை விட்டு எங்கு செல்வது இந்த அம்மா என்ன சொல்ராங்க என்று யோசித்தவள்.தன் அன்னையிடம்,
“அம்மா நாம எங்க போறது…அண்ணனுக்கு தெரிஞ்சா கொன்னுடுவான்…”என்றாள் தமையனின் நினைவில்.சாரதாவிற்கு மகளின் பதட்டம் புரிந்தாலும்.
“இங்க பாருடி நான் உனக்கு அம்மா…உனக்கு நல்லது தான் சொல்வேன் என் மேல நம்பிக்கையிருந்தா வா…”என்று கோபமாக கூறிவிட்டு படுத்தார்.
“என்னம்மா நீ உன்ன நம்பாம நான் வேற யார நம்ப போறேன் வரேன் போதுமா…ஆனா அண்ணா..”என்று கூற வந்தவளை தடுத்தவர்.
“வரேன் சொல்லிட்டல போதும் படு மத்தத நான் பார்த்துக்குறேன்…”என்றார் அவருக்கும் உள்ளுக்குள் மகனை நினைத்து பயமும் இருந்தது தான் இருந்தும் அவர் வெளிகாட்டிக்கவில்லை.தன் அன்னை இவ்வளவு திடமாக இருக்கவும் தானும் மனதில் திடத்தை வரவழித்துவிட்டு உறங்க முற்பட்டாள்.இதோ கிளம்பி விட்டனர் தாயும்,மகளும் எங்கு செல்கறோம் என்று தெரியாமலே தன் தாயின் பின் சென்றாள் அழகி.
மகளுக்கு இருந்த குழப்பமெல்லாம் தாய்க்கு இல்லை கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஒரு ஆட்டோ பிடித்து இரயில் நிலையம் வந்தார்கள்.
“அம்மா…எங்க போகப்போறோம் சிவகங்கையா???”என்றாள் மகள்.அங்கே போகலாம் தான் ஆனால் தான் செய்த செயலால் அவர்கள் தங்கள் முகத்தில் முழிக்க கூட மாட்டார்கள் என்று ஊகித்தவர்.தன் மகளை தான் எவ்வளவு பெரிய இழி செயலை செய்ய வைத்துள்ளோம் என்று கூறினால் மனதுடைந்துவிடுவாள் என்று எண்ணியவர் தனது தூரத்து சொந்த்து அத்தை ஒருவர் மதுரையில் உள்ளார் அங்கு செல்லாம் கூறினார்.
“அம்மா அங்கேயும் மாமாவும்,அண்ணனும் வந்துட்டா…”என்றாள் நடுங்கிக்கொண்டு.
“அந்த அத்தைய பத்தி உன் மாமனுக்கும்,அண்ணுக்கும் அவ்வளவா தெரியாது…அவங்க நம்மல விட வசதி கம்மி அதனால ரொம்ப பழக்கம் இல்ல…அதனால வரமாட்டாங்க…நீ பயந்து என்னையும் பயமுறுத்தாத…”என்று எரிந்துவிழுந்தார்.
“ஆனா அம்மா ரொம்ப பழக்கமில்லனா நமல எப்படி சேர்த்துப்பாங்க…”என்று கேள்வி எழுப்பினாள் மகள்.
“முதல்ல இந்த இடத்துல உக்காரு அழகி…வண்டி எடுத்துட்டாங்க…எதுவா இருந்தாலும் அங்க போய் பேசிக்கலாம்…”என்றார்.பின்னே அவரும் என்ன தான் செய்வார் அவருக்கே சில விஷயங்களில் பயம் இருக்கும் போது அவர் எவ்வாறு மகளை தேற்றுவார்.இவ்வாறு தாயும்,மகளும் மதுரை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.இதற்கு பிறகாவது தங்களுக்கு கடவுள் ஒரு வழி சொல்வரா என்ற யோசனையுடன் அவர்கள் பயணம் தொடங்கியது.
கலையரசன் வீடு ஒரே கலவரமாக இருந்தது கேசவன் கூறியிருந்த அவரது பாட்னரும்,அவரது குடும்பமும் இன்று மாலை அழகியை நிச்சயம் செய்வருகிறேன் என்று கூறவும்,கேசவன் மகளிடம் தகவல் சொன்னவர் அழகியை தயார்படுத்தும் படி கூறினார்.தந்தை கூறியபடி வீடு வந்தவள் அழகியை தேட அவள் இன்னும் வரவில்லை என்று வேலையாட்கள் சொல்லவும் சற்று பயந்து தான் போனாள்,இருந்தும் எங்க போயிட போதுங்க இதுங்களுக்கு தான் யாருமில்லையே,அதுமட்டும் இல்லாம கையில காசும் கிடையாது என்று எளனமாக நினைத்தவள் தன் கார் டைவரிடம் சாரதா செல்லும் கோவிலில் பார்த்து அழைத்தும் வரும்படி கூறினாள்.அவரும் கோவில் முழுக்க தேடியவர் இருவரும் காணவில்லை என்று வசுந்திராவிடம் கூறவும் வசுந்திராவுக்கு பயம் பிடித்துக்கொண்டது.உடனடியாக கலையரசனுக்கு அழைத்தவள் தகவல் சொல்ல அவனோ வசுந்திராவை கண்டபடி திட்டிவிட்டு தனது ஆட்களை விட்டு தேட சொல்லிவிட்டு வீடு வந்து அவர்கள் தங்கியிருந்த அறையை நோட்டமிட்டவன் ஒன்றும் கிடைக்காமல் போகவே எவ்வளவு தைரியம் இருந்த போய்ருப்பாளுக என்று தாயையும்,தமக்கையும் வசைபடினான்.அவனது ஆட்களும் தோல்வியுடனே வர அவனுக்கு கோபம் கட்டுக் அடங்காமல் வந்தது,இதில் கேசவன் கூறிய பாட்னர் குடும்பம் விஷயம் அறிந்து கலையரசனையும்,கேசவனையும் கண்டபடி திட்டிவிட்டு இனி பணத்தை தன்னிடம் எதிர்பார்க்காதீர்கள் சொல்லி சென்றுவிட்டார்.
கலையரசனோ தன் தாயையும்,தமக்கையையும் கொல்லும் வெறியில் இருந்தான்,இதில் வசுந்திரா அவனது ஆத்திரத்தில் மேலும் எண்ணைய் ஊற்றும் விதமாக,
“எனக்கு எனமோ அத்த மேல சந்தேகமா இருக்கு…அவங்க நேத்தி பேசமா இருந்ததே போதே எனக்கு சந்தேகம் தான்…அவங்க தான் அழகியையும் தூண்டிவிட்டுருக்கனும்…”
“அப்படியே போகனும்னா கையில காசு வேணுமே மா…”என்றார் கேசவன்.
“அது தான் அப்பா எனக்கு புரியல கையில காசில்லாம எங்க போக முடியும்,ஒருவேல சிவகங்கை போயிருப்பாங்களோ…”என்றாள் சந்தேகமாக.
“மாட்டாங்க…அவுங்க செஞ்ச காரியத்துக்க அந்த வீட்ல உள்ள விடமாட்டாங்க…”என்றான் கலையரசன்.
“வேற எங்க போக முடியும்…”என்று யோசனைக்கு சென்றாள் வசுந்திரா.கலையரசனோ இருவரையும் பிடித்துட்டு வரும் படி தன் ஆட்களுக்கு உத்திரவிட்டவன் பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசனைக்கு சென்றான்.
இந்த குள்ளநரிக்கூட்டதிடம் இருந்து தப்பித்த சாரதாவும்,மதியழகியும் மதுரையில் சாரதாவின் தூரத்து உறவான கற்பகத்திடம் இருந்தனர்.கற்பகம் சாரதாவிற்கு அத்தை முறை அவரது கணவனை இழந்தவர் குழந்தைகளும் கிடையாது.வசதி கம்மி என்ற காரணத்தால் கேசவனும்,சாரதாவும் இவரிடம் நெருக்கம் கிடையாது.ஆனால் சாரதாவின் அப்பா சதாசிவம் மிகவும் அருமையான மனிதர் அவருக்கு கற்பகம் மேல் தனி பிரியம்.அதற்கு காரணம் சிறுவயதில் இருந்தே கற்பகம் தைரியசாலி மற்றம் கடின உழைப்பாளி யாரையும் எந்தவிதத்திலும் எதிர்பார்க்கமாட்டார்.கணவனை இழந்து குழந்தையும் இல்லாமல் இருக்கும் கற்பகத்தைக் கண்டலே சதாசிவத்துக்கு மனது கனக்கும்,அவரும் பலமுறை கற்பகத்தை தன்னுடன் வருமாறு அழைத்தார் தான் ஆனால் கற்பகம் வரமறுத்துவிட்டார்.அதனால் பண்டிகை தினங்களில் சதாசிவம் கற்பகத்தை பார்க்க வருவார்,அவ்வாறு வரும் சமயங்களில் சில சமயம் சாரதாவும் வருவார்,ஆனால் வசதி குறைந்தவர் என்பதால் சரியாக பேசமாட்டாள்.இவை அனைத்தையும் இப்போது நினைத்தால் சாரதாவிற்கு மனது வலித்தது.
கற்பகம் சாரதாவிடம் தெளிவாக கூறிவிட்டார் இருவரும் தங்க வேண்டும் என்றால் அவர்ரவருக்கு பணம் சம்பாதித்துக்கொண்டு வாழ்க்கை ஓட்டவேண்டும் விருப்பம் இருந்தால் இருங்கல் இல்லயேல் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று.அவர் கூறியதை ஏற்ற தாயும்,மகளும் வேலைக்கு செல்ல முடிவுசெய்தனர்.கற்பகம் தான் இருவரையும் அண்ணாமலையிடம் வேலையில் சேர்த்துவிட்டார்.சில வருடங்களில் கற்பகமும் உடல் நலக்குறைவால் இறந்துவிட தாயும்,மகளையும் அண்ணாமலையிடம் தஞ்சமடைந்தனர்.அண்ணாமலையும் அழகியை தன் மகள் போலவே கருதினார்.அவரும் பலமுறை சாரதாவிடம் அவர்களின் சொந்தங்களை பற்றி கேட்பார் ஆனால் சாரதா தங்களுக்கு யாருமில்லை என்று கூறுவார்.ஒரு கட்டத்தில் கேட்பதையே நிறுத்திவிட்டார்.
சாரதாவிற்கு திடீர் என்று மாரடைப்பு வந்து இடது காலும்,கையும் செயல்லிழந்தது.அதற்கு பிறகு அழகி தான் அவருக்கு தாயாகி போனாள்.தன் மகளை தானும் படுத்துகிறோமோ என்று புலம்புவார்.அழகியும் அப்படியெல்லாம் எதுவும் இல்ல ம்மா என்று கூறுவாள்.இதுவே தொடர ஆரம்பித்தது ஒருநாள் நெஞ்சுவலி வருவது போல இருக்க சாரதா தன் மகளிடம் கலையரசன் செய்தவற்றை கூறியவர்,தாங்கள் உன்னை வைத்து வேந்தனை அவமானபடுத்தியதையும் கூறி கதறிவிட்டார்.தன் தாய் கூறியவற்றை கேட்ட அழகிக்கு உலகமே நழுவது போல இருந்தது தன் தாயே தன்னை இவ்வளவு பெரிய பாவத்தை செய்ய வைத்திருக்கிறார் என்று நினைத்தவள் மௌனமாக கண்ணீர் வடித்தாள்.மகளிடம் அனைத்தையும் கூறிய நிம்மதியில் சாரதாவும் இறைவன் அடி சேர்ந்தார்.தன் வீட்டின் கதவு விடாமல் தட்டப்படவும் தன் நினைவில் இருந்து வெளிவந்த மதியழகி.யார் என்று பார்க்க சென்று கதவை திறந்தாள் அவளுடன் வேலை செய்யும் பெண் தான்,
“என்னபுள்ள உறங்கிட்டியோ…உன்ன அண்ணாச்சி கூப்பிடுதாக…போ…”என்றுவிட்டு சென்றாள்.அவர் சென்றவுடன் அண்ணமலை வீட்டுக்கு சென்ற அழகி,
“அண்ணாச்சி கூப்டீகலா…”என்றாள்.
“ஆமா ம்மா..இரண்டு வாரம் கழிச்சு சிவகங்கை போகனும் ஒரு கல்யாணம் புக் ஆகிருக்கு…நீ நாளைக்கு மதியம் போல வா என்ன பொருள் எடுக்கனும் விவரம் சொல்ரேன்….”என்றார்.அழகியோ சிவகங்கை என்று கூறியதிலேயே அதிர்ந்து நின்றுவிட்டாள்.அவள் மனதில் பல உணர்வுகளின் போராட்டம் இயந்திரம் போல வீடு வந்தவள் மனது பதட்டம் கொண்டது ஒருவேளை வேந்தனை பார்க்க நேர்ந்தால் என்று நினைத்தவள் உடல் தன்னால் நடுங்கியது.அழகியின் வருகை வேந்தனின் வாழ்வை செழிக்க வைக்குமா இல்லை அழிக்குமா??

Advertisement