Advertisement

தனது அலுவலக அறையில் தீவிர யோசனையில் இருந்தான் கலையரசன்.அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்ந கேசவன்,
“என்ன மாப்பிள்ளை…என்ன யோசனை பலமா இருக்கு..”
“ஒண்ணுமில்ல மாமா… ஒரு டீல் பேசியிருக்கேன்…அது முடிய நமக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது…அதான் என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்…”என்றான்.
கேசவனும் யோசனைக்கு செல்ல அப்போது அவரது கைபேசி ஒலியெழுப்பியது,அதில் ஒளிரும் நம்பரை பார்த்தவர் முகம் பிராகாசமானது.அவர் கைபேசியை எடுக்காமல் இருக்கவும் கடுப்பான கலையரசன்,
“மாமா ஒன்னு பேசு இல்ல கட் பண்ணு…நானே பணத்தை எப்படி புறட்டுறதுனு மண்டை காஞ்சிக்கிட்டு இருக்கேன்…நீங்க வேற…”என்று காய்ந்தான்.
“டேய் மாப்பிள்ள பணம் கிடைச்சிடு…நீ ஆக வேண்டிய வேலைய பாரு…”
“எப்படி மாமா…யாரு கொடுப்பா…”என்று அவன் கேள்வி கனைகளை தொடுக்க.கேசவனோ,
“வந்து சொல்றேன்…”என்று கைபேசியுடன் வெளியில் சென்றார்.
கலையரசனின் வீட்டில் வசுந்திராவோ,
“ஏய் அழகி…எனக்கு காபி எடுத்துட்டுவா…”
சாரதாவோ மகளிடம்,
“எருமை மாடு.. உக்கார்ந்தே தின்னு தின்னுதான் இப்படி பெருத்துக் கிடக்கு…இதுல எப்படி பிள்ளை பிறக்கும்..”என்று காய்ந்துக்கொண்டிருந்தார்.
“அம்மா சும்மா இருக்கமாட்ட…காதுல விழுந்துச்சு நமக்கு இன்னக்கி சோறு கிடையாது…நியாபகம் இருக்குல்ல…”என்றாள்.பேசினாலும் கைகள் காபி தயாரிக்கும் வேலையை செய்துக்கொண்டிருந்தது. ஆம் அழகி கூறுவது போல சாரதாவோ,அழகியோ ஏதாவது வசுந்திராவை எதிர்த்து பேசிவிட்டால் அவர்களுக்கு அன்றைய சாப்பாட்டை கொடுக்காமாட்டாள் வசுந்திரா.இதை மகனிடம் சாரதா புகாராக கூற அவனோ தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பது போல சென்றுவிட்டான்.ஆனால் இவர்களின் உரையாடலை காதில் வாங்கிய வசுந்திரா அதற்கும் சேர்த்துவைத்து அழகியை வேலை வாங்கினாள்.தன்னால் தான் மகள் இவ்வளவு கஷ்டபடுகிறாள் என்று உணர்ந்த சாரதா அன்றிலிருந்து யாரையாவது திட்ட வேண்டும் என்றால் மகளிடம் புலம்விட்டு செல்வார்.
சில நேரம் அவர் புலம்பலை கேட்பவள் பல சமயம் இப்படி எரிந்து விழுவாள்.சாரதாவும் மகளை எண்ணி கலங்கிய படியே செல்வார்.வசுந்திரா கூறியபடி காப்பி போட்டு கொடுத்தவள் அடுத்து சமையல் வேலை செய்பவருடன் உதவி செய்ய சென்றுவிட்டாள்.சாரதா கதிரேசன் இறந்திலிருந்து மாலை நேரங்களில் கோவில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.அதே கோவிலில் தான் தரகர் ஒருவரை சந்தித்திருந்தார் அவர் இன்று வரன் பற்றிக் கூறுவதாக கூறியிருந்தார்.அதனால் கோவிலுக்கு கிளம்பினார்.அங்கு தரகரை சந்தித்து அவர் கூறியவற்றை கேட்டவருக்கு திருப்தியே இருந்தும் மகளிடம் பேசிவிட்டு கூறுவதாக கூறிவந்தார்.
கோவில் இருந்து வரும் போதே மகளிடம் எப்படியாவது சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டவர்.வீடு வரும் வழியில் ஒரு அடுகு கடையில் தன் தாலி,அதன் சரடு இன்னும் சில நகைகளை எடுத்து வந்திருந்தார் அவைகளை போட்டுவிட்டு மகளின் கல்யாணத்திற்கு உதவும் என்று பணமாக வாங்கிக்கொண்டார்.வசுந்திராவிடம் பறிக்கொடுத்தது போக மீதி இருந்தது இவைகள் மட்டுமே.
இன்று சற்று மனது லேசாக இருப்பது போல இருந்தது சாரதாவிற்கு,ஆனால் பாவம் அறியவில்லை அவரது சந்தோஷம் நிலைக்கபோது இல்லை என்று.வீடு வந்தவுடன் தன் முகத்தை எப்போதும் போல் வைத்துக்கொண்டார்,மகளுக்கு ஒரு நல்லது முடியும் வரை எதுவும் யாருக்கும் தெரிய கூடாது என்று முடிவு செய்துக்கொண்டார்.
கேசவன் கூறியவற்றை தன் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தான் கலையரசன்.
“அண்ணா சாப்பிடும் போது மட்டும் எதுவும் யோசிக்காத…சாப்பிடு…”என்று பரிமாறிக்கொண்டிருந்தாள் அழகி. அவளை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அவனுக்கு மனது வலித்தது அடுத்த நிமிடம் பணமா,பாசமா என்றால் பணம் தான் வேண்டும் என்று கூறிக்கொண்டான்.அவனுக்கு பெரிதாக வீட்டில் உள்ளவர்களிடம் ஒட்டுதல் கிடையாது.சிறு வயதில் இருந்தே சாரதா பணம் தான் முக்கியம் அரசு மத்தது அப்புறம் தான் என்று கூறிய வார்த்தைகள் இன்று அவனை பணத்திற்காக தன் தங்கையின் வாழ்வைக் கூட நாசமாக்கலாம் என்று முடிவு செய்துவிட்டான்.
இரவு உணவு முடிந்து அழகி படுக்க செல்லும் நேரம் அழைத்தான் கலையரசன்.இவன் எதுக்கு  இவள கூப்பிடுறான் என்று நினைத்த சாரதாவும் மகளின் பின்னே சென்றார்.
“அழகி உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு அண்ணன் முடிவு பண்ணிருக்கேன் மா…இந்தா போட்டோ பாரு…நம்ம பாட்னரோட பையன் தான்..இன்னும் இரண்டு நாள் கழிச்சு அவுங்க வீட்ல இருந்து வராங்க..உனக்கு தேவையானத வாங்கிக்க என்று அவளிடம் பணத்தை நீட்டினான்…”அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த சாரதா அதிர்ச்சியில் உறைந்திருந்தார் என்றால் வசுந்திராவோ கோபத்தின் உச்சியில் இருந்தாள்.அவளுக்கு அழகிக்கு கல்யாணம் என்றதிலேயே எரிய ஆரம்பித்தது,இதில் இவன் பணமும் கொடுக்கவும் அவளை கொல்லும் வெறியே வந்தது.அண்ணன் கூறியவற்றை கேட்ட அழகிக்கோ ஒன்றும் புரியாத நிலை ஆனால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று நினைத்தவள்,
“எனக்கு பணம் எல்லாம் வேண்டாம் அண்ணா…”என்று மேலும் ஏதோ கூறவதற்கு முன் வசுந்திரா,
“அது தான் அவ பணம் வேணாம்னு சொல்ரால்ல…கொடுங்க…”என்று கிட்டதட்ட பிடுங்கினாள் கலையரசன் கையில் இருந்து.பணத்தை வாங்கியவள் சென்றுவிட இவ ஒருத்தி நம்ம பிளானே புரியாம ஏதாவது செய்வா என்று நினைத்தவன் தங்கையிடம் திரும்பி,
“நீ போ மா…”என்றான்.
தனது அறைக்கு வந்த அழகிக்கு அழுகையாக வந்தது.இனி தாயுடன் இருக்கபோது சில நாட்களே என்று நினைத்தவளுக்கு மனது கனத்தது.தன் தாயிடம்,
“அம்மா உன் மடில கொஞ்ச நேரம் படுத்துக்கவா…”என்றாள் ஏக்கமாக.சாரதாவிற்கும் மகளின் நிலை புரிந்தாலும் இது கலங்கும் நேரமில்லை என்று நினைத்தவர் அவளது தலையை கோதிவிட்டார்.
“அம்மா…பயமா இருக்குமா..”என்றாள் கலக்கமாக.அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ அனைத்தும் விரைவாக நடப்பது போல இருந்தது.அவளின் மனதை சொல்லாமலே புரிந்துக்கொண்டவர் அவளிடம்,
“அம்மா இருக்கேன்டா…நீ பயப்படாத…”என்று தனக்கும் அவளுக்கும் சேர்த்தே தைரியம் சொன்னவர் அவளை உறங்க வைத்துவிட்டு தானும் யோசனையுடனே படுத்தார்.நள்ளிரவில் திடீர் என்று விழிப்பு தட்டியது சாரதாவிற்கு நாக்கு வரட்சியாக இருக்க தண்ணீர் குடிக்கு சென்றவர் மேலே ஏதோ பேச்சுக்குரல் கேட்கவும் பூனை போல ஏறியவர் தன் மகன் அறையில் இருந்து பேச்சுக் குரல் கேட்கவும் கதவின் ஓரமாக நின்று கவனிக்க தொடங்கினார்.உள்ளே கலையரசன்,கேசவன் மற்றும் வசுந்திரா ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.கேசவன் தன் மகளிடம் இன்று காலையில் நடந்ததைக் கூறினார்,
“என்னோட பாட்னர் தான்மா அவனோட பையனுக்கு உன்ன கேட்டான் விசாரிச்சு பாத்ததுல அவன் புள்ள ஒரு பொறுக்கி தெரியவும் நான் ஜாதகம் அமையல அதுஇதுனு பொய்ய சொன்னேன்…இப்ப மாப்பிள பணம் தேவைனு சொல்லவும் தான் இப்படி யோசிச்சேன்…நம்ம அழகிய கல்யாணம் பண்ணிகொடுத்துட்டு அவன்கிட்டேந்து பணம் வாங்கலாம்னு சொன்னேன்…என் பாட்னருக்கும் வேற இடம் அமையல நாங்க சொன்ன கண்டீஷனுக்கு ஒத்துக்கிட்டான்…”என்றார்.
“அது என்ன கண்டீஷன் ப்பா…”என்றாள் மகள்.
“வேறு ஒண்ணுமில்லமா உனக்கு பொண்ணு வேணும்னா எங்களுக்கு பணம்…அவனோட புள்ள லெட்சனத்துக்கு வெளியில கிடைக்கில அதான் அவனும் ஓகே சொல்லிட்டான்…”என்று ஒரு பெண்ணை பணத்திற்காக விற்க போவதாக பெருமையாக கூறிக்கொண்டிருந்தார் கேசவன்.
“ஆனா அத்த இதுக்கு ஒத்துக்குவாங்கனு எனக்கு தோணல…”என்றாள் சந்தேகமாக.
“அவ ஒத்துக்கலனா அவளையும் அவ புருஷன் போன இடத்துக்கே அனுப்பிட வேண்டியது தான்…”என்றார் சர்வசாதரனமாக.
“என்னப்பா சொல்ரீங்க நீங்க தான் மாமா…”என்று முடிக்கும் முன் குறிக்கிட்ட கலையரசன்,
“நாங்க போடலாம்னு யோசிச்சோம் அதுக்குள்ள அவரே போயிட்டார்…”
“என்ன..”என்று புரியாமல் கேட்ட வசுந்திராவிடம் அன்று கம்பெனியில் நடந்த அனைத்தையும் கூறினான்.
“அவரால பிரச்சனை வரும் நினைச்சு தான் போடலாம்னு திட்டம் போட்டோம் அதுக்குள்ள…”என்று மேல் நோக்கி செய்கை செய்து சிரித்தான்.
இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்ட சாரதாவோ உறைந்துவிட்டார்.தன் அண்ணனும்,மகனும் பணத்திற்காக என்னவெல்லாம் செய்துள்ளார்கள் என்று நினைத்தவர்  ரத்தம் உறைந்தது.
“சரி நீங்க படுங்க…”என்று கேசவன் கதவு நோக்கி வரவும் தான் வந்த தடம் தெரியாமல் சென்றார் சாரதா.தன் அறைக்குள் நுழைந்தவருக்கு மனது உலைகலன் போல கொதித்தது,தன் மகனே இவ்வளவு கீழ் இறங்குவான் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை அவர்.தான் ஒருவனிடம் கல்யாணம் என்ற பெயரில் விற்கப்பட்டுள்ளேன் என்று தெரியாத அழகியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.குனிந்து தன் மகளின் தலைகோதியவர்,
“என் மக வாழ்க்கை சீர் அழிய நான் விடமாட்டேன்…”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர் சில முடிவுகளை எடுத்துவிட்டே உறங்க சென்றார்.

Advertisement