Advertisement

தன் தாயிடம் பேசிவிட்டு கடைக்கு வந்த அருள்வேந்தனின் நினைவுகள் முழுவதும் மதியழகியே ஆக்கரமித்தாள்.சின்னவயசுல கொஞ்சம் கன்னம் எல்லாம் பூசுபூசு இருக்கும்ல அவளுக்கு இப்ப என்னடான ஒள்ளியா நல்லாவே இல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தவன்,ச்ச என்ன இது அவள பத்தியே யோசிச்சிட்டு இருக்கேன்..நியாமா பார்த்தா அவள் மேல எனக்கு கோபம் தான் வரனும் ஆனா ஏன் நான் அவள ரசிக்கிறேன்…ஒருவேலை அவள விரும்புறேனா…என்று தன்னையேக் கேட்டுக்கொண்டவன் தன் தலையை உலுக்கி,இல்ல அவ மேலே எனக்கு கோபம் மட்டும் தான் இருக்கு…என் கனவு எல்லாத்தையும் சிதைச்சிட்டுட்டா…அவளாள தான் வாழ்க்கையே போச்சு…எனக்கு அவள பிடிக்கல அவ்வளவு தான் என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் தன் கடை வேலைகளை கவனிக்கத் தொடங்கினான்.அழகியை பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டே அவளை தன் மனதில் பதிய வைத்தான் அருள்வேந்தான்.
அழகியோ வேந்தனின் அறையில் நடை பயின்று கொண்டிருந்தாள்.காலை உணவை வள்ளி அறைக்கு எடுத்திட்டு வர,
“பாட்டி எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்…ஏன் இங்க…”என்று சிறு பிள்ளை போல கூற.அவளை வாஞ்சையாக பார்த்தவர்,
“நீ புது பொண்ணு புரியுதா..ஊர்காரங்க எல்லாம் வரதும் போறதுமா இருப்பாங்க…ஒருத்தி கண்ணு மாதிரி ஒருத்தி கண்ணு இருக்காது…அதனால கொஞ்ச நேரம் நான் சொல்ரபடி கேளு…”என்று கூறிவிட்டு அவள் சாப்பிடும் வரை இருந்தவர்.அவள் சாப்பிட்டு முடிக்கவும்,
“இந்த அறைய விட்டு நான் சொல்ர வரைக்கும் வராத புரியுதா…”என்று கூறிவிட்டு சென்றார்.வள்ளி கூறியதை போல கல்யாணம் நின்ற போனதை விசாரிக்க,அழகி வந்ததை விசாரிக்க என்று ஊரில் உள்ளவர்கள் வந்து சென்றுக்கொண்டிருந்தனர்.அவர்களில் சிலர் நல்லவிதமாக பேசி சென்றார்கள் என்றால் சிலர் புரணி பேச வந்தனர்.அதனால் தான் வள்ளி அழகியை வெளியே வர வேண்டாம் என்றார்.அழகிக்கோ பொழுது ஓடவில்லை சிறிது நேரம் வேந்தனின் அலமாரியில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டவள்.பின் அங்கு உள்ள கட்டிலில் அமர்ந்தாள்.இப்படி ஒரு வேலையும் இல்லாமல் அமர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது அவளுக்கு.
ஆம் சிறு வயதில் தன் வேலைகளைக் கூட செய்யமாட்டாள் காரணம் சாரதா.நம்மிடம் பணம் உள்ளது அதனால் வேலை செய்ய ஆட்கள் வருவார்கள் என்று கூறியே வளர்த்தார்.அனைத்தும் மாறியது தந்தையின் இறப்புக்கு பின் அண்ணனின் அரவனைப்பின் கீழ் வந்த பிறகு அவள் ஓய்ந்து அமர்ந்திருக்கக்கூட விட்டதில்லை வசுந்திரா.அதில் அழகி சற்று திணரி தான் போனாள்.பல நாள் வேலையில் ஏதாவது தவறு செய்து விட்டு வசுந்திராவிடம் திட்டுவாங்குவாள். வசுந்திராவின் திட்டிற்கு பயந்தே வேலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.தாயும்,அவளும் தனியே வந்த பிறகு அனைத்து அவள் தான் செய்வாள்.இதில் ஓய்வு என்பது இரவு உறங்கும் நேரம் மட்டுமே.அதனால் தான் எண்ணவோ அவளால் ஒரே இடத்தில் அமர முடியவில்லை.மதியவேளை நெருங்கும் நேரம் வெளியில் எட்டிபார்த்தாள்.
ஹாலில் உள்ள சோபாவில் வள்ளி அமர்ந்து ஏதோ டிவி பார்த்துக்கொண்டிருக்க மஞ்சுளாவோ மதிய சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.வள்ளி டிவியில் ஐய்க்கியமாகி விட மஞ்சு அவரிடம் பேச தலை நிமிர்த்தியவர் கண்களில் அறையில் இருந்து வெளியில் வரவா வேண்டாமா என்று பார்த்துக்கொண்டிருந்த அழகி விழ,
“வா ம்மா…”என்றார்.அவர் தன்னை தான் அழைக்கிறாரா என்று தயங்கி சுற்றுமுற்றும் பார்க்க அவளது பார்வை உணர்ந்த வள்ளி,
“உன்னைய தான் உன் அத்த கூப்பிடுறா வா…வந்து இப்படி உட்காரு…”என்றார்.அவர்கள் அழைக்கவும் வந்தவள் மஞ்சுவின் அருகில் அமர்ந்து,
“நான் நறுக்க வா…”என்று கேட்க சரி என்று அவளிடம் கொடுத்தவர்.இங்கு இருந்து சென்னை சென்ற பின்பு என்ன நடந்தது அவள் எவ்வாறு அண்ணாமலையுடம் வந்தாள்,என்ற கதைகளை கேட்டார் அனைத்திற்கும் எந்தவித தயக்கமும் இயல்பாக நடந்த அனைத்தையும் கூற கேட்ட மஞ்சுளாவிற்கு மனது கனத்தது என்றால் வள்ளிக்கோ கலையரசனை கொல்லும் வெறியே வந்தது.இவ்வாறு பெண்கள் மூவரும் பேசிக்கொண்டே சமையல் வேலைகளை முடித்திருந்தனர் என்பதை விட அழகி முடித்துவிட்டாள் என்று தான் கூற வேண்டும்.
“பராவாயில்லையே நீ சீக்கிரமா தான் சமைக்கிர…”என்று மஞ்சு கூற அதற்கு அழகாக சிரித்த அழகி,
“நானா நீங்க வேற இதுவே லேட்…அண்ணாச்சி இருந்திருந்தா என்னை பிழிஞ்சிருப்பாரு…”என்று இயல்பாக கூற மஞ்சுவிற்கு கண்கள் கலங்கி விட்டது.இந்த சிறிய வயதில் இந்த பெண்ணிற்கு எவ்வளவு இழப்புகளும்,கஷ்டங்களும் என்று நினைத்தவர் மௌனமாகிவிட பேசிக்கொண்டிருந்தவர் திடீர் என்று அமைதியாகவும் என்னவென்று பார்த்த அழகி அவர் கண் கலங்குவதைக் கண்டு அதிர்ந்துவிட்டாள்.
“ஏன் அழுவுறீங்க அத்…”அத்தை என்று கூற வந்தவள் தயங்க
“அத்தைனு கூப்பிடு அழகி…”என்றார் வள்ளியம்மை.அவருக்கு மஞ்சுவின் மனநிலை புரிந்தது.
பின் ஒருவாறு அனைவரும் பேசி சமையலையும் முடித்து வெளியில் வந்தனர்.ஒரு மூன்று மணி நேரத்தில் அழகி,மஞ்சுளா மற்றும் வள்ளியம்மையுடன் நெருங்கி இருந்தாள்.இவ்வளவு நாள் தனிமையில் வாடியவளுக்கு இப்போது தன்னிடம் பாசம் காட்டும் இருவரையும் மிகவும் பிடித்துவிட்டது.எவ்வளவு நாள் இவர்களின் அருமை தெரியாமல் முகம் திருப்பியுள்ளேன் என்று நினைத்தவளுக்கு மனது வலித்தது.அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளை கண்ட வள்ளியம்மை,
“பழைசை நினைக்காத இது உன்னோட புகுந்த வீடு…அத மனசுல பதிய வை…”என்றார்.
“ம்ம்…”அவள் தலையாட்ட.அவளது தலையை ஆதரவாக தடவினார்.அவளது ஒவ்வொரு செய்கையிலும் இது அவளது வீடு என்று வள்ளி உணர்த்திக்கொண்டே இருந்தார்.
மதிய உணவிற்கு வந்தனர் ஆண்கள் இருவரும்.அனைவரும் அமர வேந்தன் அமர்ந்தவுடன் அழகியின் கைப்பிடித்து இழுத்து வந்து அவனது பக்கத்தில் அமர வைத்தார் வள்ளியம்மை.அவரது செய்கையில் கடுப்பான வேந்தன் எழ முற்பட,
“வேந்தா…இது வெறும் சோறு கிடையாது நமக்கு சாமி…இப்படி எந்திரிக்கிறது சாமிய அவமதிக்கிறது மாதிரி…அத நியாபகம் வச்சுக்க…”என்றார்.அவர் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்திக்கூறினார்.அவரது குரலே கூறியது அவர் கோபமாக உள்ளார் என்று.வள்ளிக்கு பொதுவாக இப்படி கோபப்படுபவர் எல்லாம் கிடையாது ஆனால் தெரிந்தே யாரவது தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்க மாட்டார்.அந்த மாதிரி சமயங்களில் வேந்தனே அவரை எதிர்க்க மாட்டான்.இன்றும் அதே போல் தான் எதை எவ்வாறு செய்தால் வேந்தன் மறுத்துக் கூற முடியாது என்று உணர்ந்தவர் இவ்வாறு செய்தார்.அவர் நினைத்தபடியே வேந்தன் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அமரவும்.அனைவரையும் அமர வைத்து அவரே பரிமாறினார்.ராமலிங்கமோ மகனின் முகத்தை பார்த்துக்கொண்டே சாப்பிடாமல் இருக்க.அதை கவனித்த வள்ளியம்மை,
“ய்யா லிங்கு…நீ எதை பத்தியும் கவலைப்படாம சாப்பிடு…நான் இருக்கேன்ல நான் பார்த்துக்குதேன்…”என்று கண்களால் செய்கை செய்ய.அதில் மனதில் சற்று நிம்மதி பரவ சாப்பிட ஆரம்பித்தார்.
அழகிக்கு தான் கை,கால் நடுங்க சாப்பட முடியாமல் தவித்தாள் வேந்தனின் அருகாமையால்.அவனைக் கண்டாலே அவளது மனது பதற துவங்கியது.அவனது சிவந்த கண்களும் இறுகிய முகமும் அவளை மேலும் பயமுறுத்தியது.அதனால் சாப்பிட முடியாமல் அவள் தவிக்க அதைக் கண்ட வள்ளியம்மை,
“என்னம்மா சாப்பிட சொன்னா உன் புருஷன பார்த்துக்கிட்டு இருக்க…இனி காலம் புராவும் நீ தான் பார்க்கபோற…”என்றார்.அவரது பேச்சில் அவரை முறைத்த வேந்தன் மதியழகியையும் முறைத்துவிட்டு எழுந்தான்.
“என்னடா அதுக்குள்ள எந்திரிச்சிட்ட சாப்பிடு…”என்றார் வள்ளி.
“போதும்…”என்று ஒற்றை சொல்லோடு சென்றுவிட்டான்.இதற்கு மேல் அவனை வற்புற்தினால் விபரீதம் ஆகிவிடும் என்று உணர்ந்தவர் அமைதியாகிட.அழகிக்கு அவன் சென்ற பின்பு தான் மூச்சே வந்தது.இவ்வாறு வீட்டில் உள்ளவர்கள் உடன் அழகியை இனணத்தார் வள்ளியம்மை.ராமலிங்கம் அழகியிடம் அதிகம் பேசமாட்டார் என்றாலும் பேசாமல் ஒதுங்கவும் மாட்டார்.
இதோ மூன்று வாரங்கள் கடந்திருந்தன அழகி,வேந்தன் திருமணம் முடிந்து. அழகி,வேந்தனின் வாழ்க்கையில் எந்தவித மாறுதலும் இல்லை.வேந்தனின் அறை அழகியின் அறையாக மாறிவிட அவன் மாடியில் தங்க ஆரம்பித்தான்.அழகியை வேந்தனுடன் சேர்க்க வள்ளி எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சியையும் வேந்தன் முறியடித்தான்.காலை அனைவருக்கும் முன்பே உண்பவன் கடைக்கு சென்றால் இரவு தான் வருவது.மதிய நேர சாப்பாடும் இப்போது கடையில் தான்.இதை எல்லாம் கண்ட மஞ்சுளா கலங்கினார்.அழகிக்கோ வள்ளி மற்றும் மஞ்சுவுடன் பேசுவது,கூட வேலை செய்வதிலேயே பொழுது கழிந்தது.தப்பி தவிரிக் கூட வேந்தன் இருக்கும் பக்கம் கூட போக மாட்டாள்.
இதில் ஒரு நாள் வள்ளிப் பாட்டி அழகிக்கு தாலி பிரித்துக்கோர்ப்பதைப் பற்றி மஞ்சுவிடமும்,ராமலிங்கத்திடமும் கேட்க அப்போது அங்கு வந்த வேந்தன்,
“ரொம்ப முக்கியம்…போங்க வேற உருப்பிடியான வேலை இருந்தா பாருங்க…”என்று கோபமாக திட்டிவிட்டு செல்ல அனைவரின் முகமும் சோர்ந்தது என்றால் அழகிக்கோ கண்கள் கலங்கியது அதை யாரும் அறிய வண்ணம் மறைத்தாள்.ஆனால் வள்ளி அதை கவனித்துவிட்டார்.அதன் பின் வள்ளி மனதில் முடிவுடன் சில விஷயங்களை செய்தார்.அதன்படி மறுநாள் மதிய உணவை எடுக்கவந்தவனை அனுப்பியவர் அழகியை போகுமாறு பணிந்தார் முதலில் தயங்கியவள் பின் வள்ளி முறைத்த முறைப்பில் எடுத்து சென்றாள்.

Advertisement