Advertisement

தன் கையில் உள்ள தட்டில் முகம் பார்த்துக்கொண்டிருந்தாள் மதியழகி.அது அவளது சிறுவயது பழக்கம் இன்று வரை தொடர்கிறது.அதே கலையான முகம் இன்று அழுக்கு படிந்து காணப்பட்டது.தன் வாழ்க்கை இந்தளவுக்கு கீழ் இறங்கும் என்று ஒரு வருடத்திற்கு முன்பு கூறியிருந்தால் சிரித்திருப்பாள்,ஆனால் இன்று அனைவரும் இவளைக் கண்டு அல்வா சிரிக்கிறார்கள் என்று நினைத்தவளுக்கு விரக்கிதி புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.
சில சமயம் தன் தாய் கூறியது போல தாங்கள் செய்த பாவத்தின் விளைவு தற்பொழுது அனுபவிக்கிறேன் என்று கூட தோன்றும்.அந்த  ஒரு நிமிடம் அவனது கண்கள் கண்முன்னே வந்து செல்லும் அதில் இருந்தது என்ன நிச்சயமாக காதல் இல்லை வெறுப்பு தான் செய்த செயலின் மிதமிஞ்சிய வெறுப்பு,ஆற்றாமை,என்ன செய்தேன் உன்னை என்ற பாவனை மட்டுமே…ஆம் அது மட்டுமே என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்…..தனது நினைவுகளில் இருந்தவளை,
“இந்தாடி அழகி…என்ன தட்டை வச்சுக்கிட்டு கனவு காணுற…சீக்கிரம் விலக்கு அண்ணாச்சி பார்த்தா திட்டுவாங்க…”என்றார் தன்னுடன் வேலை செய்யும் பெண்.அவள் அண்ணாச்சி என்றவுடன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்தவள் வேகமாக பாத்திரங்களை கழுவினாள்.அண்ணாமலைக்கு வேலை நேரத்தில் கண்ட பேச்சோ சிந்தனையோ இருக்க கூடாது மீறி செய்தால் அவர்களுக்கு ஒரு மாததிற்கான வேலையும் இருக்காது சம்பளமும் இருக்காது,அதுமட்டுமில்லாமல் அவர்கள் வெளியில் வேலையும் செய்யமுடியாத படி செய்துவிடுவார். அதனாலே அவருக்கு பயந்து அனைவரும் ஒழுங்காக இருப்பர்.அவர் என்ன தான் அழகி மேல் தனி பிரியம் வைத்திருந்தாலும் வேலை சரியில்லை என்றால் அவளுக்கும் அதே நிலை தான்.அழகியும் அனாவசியமாக யாரிடமும் பேசமாட்டாள்,சிலருக்கு இவளுக்கு பேச வருமா என்ற சந்தேகம் கூட வரும்.
மதியழகி அமைதியானவள் எல்லாம் கிடையாது நன்று பேசுபவள் தான் ஆனால் தற்பொழுது வாழ்க்கை கற்று தந்த பாடத்தில் பேச்சு குறைந்துவிட்டது.அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அண்ணாமலையிடம் சென்றாள்,
“அண்ணாச்சி…எல்லாம் முடிஞ்சுது..நான் கிளம்புறேன்…”என்றாள்.
“சரிமா…கிளம்பு..”என்றவர் அன்றைய வேலைக் காண சம்பளத்தை கொடுத்தனுப்பினார்.செல்லும் அவளையே பார்த்தவர்,
“ம்ம்…ரொம்ப அழுத்தம் தான் அவுங்க அம்மா போல…”என்று தனக்குள் சொல்லிக்கொண்டு சென்றார்.
இந்த மாத சம்பளம் வாங்கியவுடன் தனக்கு அத்தியாவசத்துக்கு தேவையான பொருட்களை வாங்கியவள் தன் வீடு நோக்கி நடந்தாள்.இன்று ஏனோ மனதில பல வேண்டாத நினைவுகள் அவளை பாடாய் படுத்தின.அதே யோசனையோடே தன் வீடு வந்தடைந்தாள்.
ஒரே ஒரு அறைக்கொண்ட சிறிய இடம் தான் அவளது வீடு.அண்ணாமலை வீட்டிற்கு பக்கத்தில் உள்ளது,இவளும் இவள் தாயும் வருவதற்கு முன் அதை குடோனாக உபயோகித்தார் இப்போது அழகியின் வசிப்பிடம் அதுவே.வீட்டின் உள்ளே வந்தவள் தன் தாய்,தந்தை படத்துக்கு வாங்கி வந்த பூவை போட்டவள் கண்கள் கரித்துக்கு கொண்டு வந்தது.
“ஏன்மா என்னை தனியா விட்டுட்டு போனீங்க…என்னால முடியல நானும் உங்க கூடவே வரேன்…”என்று மௌனமாக அழுதவள் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
மாணிக்கதிற்கு ஒரே மகன் பெயர் கதிரேசன்.அவனுக்கு தன்னைவிட சற்று வசதியான இடத்தில் திருமணம் முடித்தார் மாணிக்கம்.சாரதா கதிரேசனின் மனைவி பணசெருக்கும்,ஆடம்பரம் இல்லாமல் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்று நினைப்பவர்.அப்படி பட்டவருக்கு கதிரேசனை பார்த்தவுடன் பிடித்துவிட திருமணத்திற்கு சம்மதித்தார்.கதிரேசன்,சாரதா தம்பதியின் செல்ல மகள் தான் மதியழகி.அவர்களுக்கு கலையரசன் என்ற மகனும் உள்ளான்.சாரதாவிற்கு அண்ணன் உள்ளார் பெயர் கேசவன்.தங்கையை போலவே பணத்திமிர் பிடித்தவர்.திருமணத்திலேயே சாரதாவிற்கும்,கேசவனுக்கும் வேதாச்சலம் குடும்பத்தை பிடிக்காமல் போனது. மாணிக்கம் இருந்தவரை சாரதாவால் இருகுடும்பத்தையும் பிரிக்க முடியவில்லை,அவர் இறந்தவுடன் தன் அண்ணன் உதவியுடன் பிரித்தவர் தங்கள் குடும்பத்துடன் தான் நினைத்தபடி சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.
சென்னையில் தான் நினைத்தபடி வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தவருக்கு வாழ்க்கை நல்ல பாடத்தை புகட்டியிருந்தது.இருகுடும்பத்தை பிரிக்க அவர் செய்த ஈனசெயல் அவர் பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்கும் என்று தெரிந்தால் செய்திருக்கமாட்டார்.அவர் செய்த வினை அவரை மட்டும் இல்லாமல் அவரது மகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிருந்தது.
தன் அண்ணன் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் சென்னை வந்த கதிரேசன்,சாரதா தம்பதியருக்கு ஆரம்பத்தில் அனைத்தும் நல்லவிதமாகவே சென்றது.அழகியின் விருப்படி பெரிய கல்லூரியில் இடம் வாங்கி சேர்த்திருந்தனர்.அதில் ஏக மகிழ்ச்சி அவளுக்கு.அவளாள் ஒருவன் வாழ்க்கையும்,கனவும் சிதைந்து போனது பற்றி எந்த கவலையும் இல்லாமல் சுற்றி திறிந்தாள்.
கலையரசனையும்,கதிரேசனையும் தான் செய்யும் தொழிலான சிறு தானிய ஏற்றுமதியில் சேர்த்துக்கொண்டார் கேசவன்.சாரதாவோ சொல்லவே வேண்டாம் பணம் கையில் இருந்தால் போதும் ஊர் சுற்றுவது,விதவிதமாக ஆடை,நகை என்று செலவுசெய்தார்.அனைத்தும் நல்லவிதமாகவே சென்றது,அழகி தன் கல்லூரி படிப்பின் இறுதியில் காலடி வைத்த சமயம்,கலையரசனுக்கும்,கேசவனின் மகள் வசுந்திராவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.சாரதாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி தன் அண்ணன் மகளே மருமகளாக வருவதில்.
திருமணமும் வெகு விமர்சியாக நடந்தேரியது,தம்பதியர் இருவரும் தேன்நிலவு சென்றுவிட்டு திரும்பினர்.கலையரசன் தன் மாமனாரின் வீட்டில் தங்க முதலில் பெரிதாக தெரியவில்லை.பின் வந்த நாட்களில் அவனது வரத்து குறைய ஆரம்பித்தது,அதுமட்டுமில்லாமல் தொழில் விஷயங்களிலும் கதிரேசனை ஒதிக்கினர் கேசவனும்,கலையரசனும்.தனது சந்தோஷத்தையே பார்த்துக்கொண்டு இருந்த சாரதாவிற்கு மகனின் மாற்றம் தெரியவில்லை.அழகிக்கோ தினமும் விதவிதமாக உடையணிந்து நண்பர்கள் முன் தற்பெருமை பேசுவது என்று பொழுது வண்ணமயமாக சென்றது.ஆனால் கதிரேசனுக்கு மகனின் மாற்றம் உவப்பானதாக இல்லை அதனால் நேரிடையாகவே கேட்டுவிட்டார்.முதலில் மழுப்பியவன் பின் இனி தொழிலை தானும் மாமாவும் பார்த்துக்கொள்கிறோம் உங்களுக்கு மாதம் ஒரு தொகையை தருவதாக கூறினான்.
அவனின் பதிலில் வெகுண்டவர்,
“என்ன டா…சொல்ரா…ஏன் நான் வரக்கூடாது…நானும் இதுல ஒரு பாட்னர்…”என்றார் ஆவேசமாக.அதற்கு மகன் வெகு நிதானமாக,
“அப்படினு யார் சொன்னா…இத படிச்சுபாருங்க..”என்று ஒரு பத்திரத்தை காண்பித்தான்.அதில் இந்த தொழிலுக்கும் எனக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை,தன் பங்கு அனைத்தையும் தன் மகனுக்க் கொடுப்பதா எழுதி கையெழுத்து இட்டிருந்தார் கதிரேசன்.தான் எப்போது கையெழுத்திட்டது என்று யோசித்தவருக்கு அப்பொழுது தான் நியாபகம் வந்தது திருமணம் முடிந்த பின் தன்னிடம் பணம் வாங்க மகன் கையெழுத்து வாங்கினான் என்று.தன் மகனே தன்னிடம் ஏமாத்து வேலை பார்த்திருக்கிறான் என்று நினைத்தவர்,
“டேய்…பெத்தவனையே ஏமாத்துறியா…”என்று அவன் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்திருந்தார்.அதுவரை அனைத்தையும் பார்வையாளராக பார்த்துக்கொண்டு இருந்த கேசவன் வெளியில் இருந்த தன் ஆட்களை வைத்து கதிரேசனை வெளியில் அனுப்பியிருந்தார்.அவரது நோக்கமும் அதுவே கதிரேசன் நேர்மையானவர் எந்தவித கேட்ட செயலையும் செய்யமாட்டார்.ஆனால் அவரது மகனுக்கு அனைத்தும் அத்துபடி அவனுக்கு தொழிலில் பெரியாள் ஆக வேண்டும் என்ற வெறி அவனை தவறாக சிந்திக்கத் தூண்டியது.அதனால் தன் மாமாவுடன் கூட்டு சேர்ந்து தான் அனுப்பும் தானிய வகைகளில் திருட்டு வேலைகள் செய்ய திட்டமிட்டான்.அதிக லாபம் என்றவுடன் கேசவனுக்கு மகிழ்ச்சி.தன் தந்தை இருந்தால் இதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார் என்று உணர்ந்தவன் தன் மாமனுடன் திட்டம் தீட்டி வெளியில் அனுப்பினான்.ஆனால் கலையரசன் கேசவனை குறைவாக எடை போட்டுவிட்டான் அவர் தன்னை காத்துக்கொள்ள என்ன வேண்டுமானுலும் செய்வார் என்று உணரும் காலம் வெகு துலைவில் இல்லை என்பதை மறந்தான்.
கதிரேசனுக்கு மகன் தன்னை இவ்வளவு கேவலபடுத்துவான் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.எப்படி வீடு வந்தார் அப்போது தான் கல்லூரியில் வந்திருந்தாள் அழகி.அவளும் தன் கைபேசியுடனே ஐக்கியமானதால் தன் தந்தையை கவனிக்கவில்லை.சாரதா வெளியில் சென்றிருந்தார்.ஏதோ தான் பெரிய தவறு செய்துவிட்டது புரிந்தது கதிரேசனுக்கு ஆனால் காலம் கடந்து யோசித்து என்ன பயன்.ஏதேதோ பினாத்திக்கொண்டே படுத்திருந்தவர் பின் எழவே இல்லை. அதிக மனவுளைச்சலில் அவரது உயிர் பிரிந்திருந்தது.இதில் அவர் தன் மகனால் அவமானப்பட்டு தான் இறந்தார் என்று தாய்க்கும்,மகளுக்கும் தெரியாமல் போனது விதியின் செயலா இல்லை இவர்கள் செய்த பாவத்தின் விளைவா என்று தெரியவில்லை.
கதிரேசன் இறந்ததிலேயே சாரதா மிகவும் உடைந்துவிட்டார்.அழகிக்கு ஒன்றும் புரியவில்லை அவள் தந்தையின் நினைவிலேயே உழன்றாள். தாயை விட தந்தையிடம் அவ்வளவு ஒட்டுதல் இல்லை என்றாலும் வாஞ்சையாக தன் தலைகோதி விடும் தந்தை இப்போது இல்லையே என்று நினைக்கும் போது மனது கனத்தது அழிகிக்கு.ஒருவர் இருக்கும் போது அவரது அருமை புரியாது என்பது தாய் மகள் இருவருக்கும் கதிரேசன் இறந்து இரண்டு மாதங்களில் புரிந்தது.
சாரதாவும்,அழகியும் கலையரசனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.முன் தெரியாத தன் மகனின் மாற்றம் இப்போது தெரிந்தது சாரதாவிற்கு,இருந்தும் ஒன்றும் கேட்கமுடியாத நிலை கையில் காசும் இல்லை வயது பெண்னை வைத்துக்கொண்டு எங்கும் செல்ல முடியாத நிலை.கேசவனை மிஞ்சியிருந்தாள் அவரது மகள் வசுந்திரா சாரதா வாங்கிய நகைகளை அவருக்கே தெரியாமல் திருடியிருந்தாள்.அனைத்தும் இழந்த நிலையில் வேறு போக்கிடம் இல்லாமல் தவித்தனர் தாயும்,மகளும்.அழகியின் படிப்பும் நிறுத்தப்பட்டு தன் வேலையாள் போல மாற்றினாள் வசுந்திரா.
சாரதா இதை மகனிடம் கேட்ட  போது அவரை தறைகுறை வாக திட்டி அனுப்பியிருந்தான் மகன்.தன் மகன் இவ்வளவு கீழ் தனமாக பேசுவான் என்று எதிர்பாராதவர் ஒடுங்கிப் போனார்.இப்போது அவருக்கு இருக்கும் ஓரே ஆறுதல் அழகி மட்டுமே.தங்கள் நிலையை உணர்ந்தவள் தாய்க்கு சமாதனம் செய்வாள்.அனைத்தையும் தன் மகளுக்காக கடக்க பழகினார் எப்படியாவது அவளை கரை சேர்க்கவேண்டும் என்று மறைமுகமாக தன் மகளுக்கு வரன் பார்க்கத்தொடங்கினார்.ஆனால் அவரது எண்ணங்களை தவுடுபொடியாக்கி தன் தங்கையின் வாழ்க்கையையும் நாசமாக்க கலையரசன் திட்டம் போட்டிருந்தான் என்பது அவருக்கு தெரியாதே.

Advertisement