Advertisement

அழகிக்கு அருள்வேந்தன் கூறியதிலேயே மனது உழன்றது”உன் அண்ணன் இப்ப ஜெயில்ல இருக்கான்…”என்று கூறியதில் அதிர்ந்தவள்.
“என்னங்க சொல்ரீங்க…”என்றாள் அதிர்ச்சி குறையாமல்.
“என்ன பாசம் பொங்குதோ…இவ்வளவு அதிர்ச்சியாகுர…”என்றான் நக்கலாக.அவனுக்கு கலையரசனை பற்றி அனைத்து விவரமும் தெரிந்த பின் இவன் எல்லாம் என்ன மாதிரி மனிதன் கூட பிறந்தவளை பணத்திற்காக கல்யாணம் என்ற பெயரில் விற்க முயன்று இருக்கிறான். கலையரசனை பற்றி நினைக்கும் போது வேந்தனின் மனமும்,உடலும் தன்னால் இறுக அழகியோ,
“இல்ல நீங்க நினைக்கிற மாதிரி இல்ல…எனக்கு அண்ணனு ஒரு மரியாதை இருந்தது உண்மை தான் எப்ப அவன் என் அப்பாவ கொல்ல திட்டம் போட்டானு அம்மா சொன்னாங்கலோ அப்பவே எனக்கு அவன் மேல் எந்த உணர்வும் இல்ல…”என்றாள் உணர்ச்சிகள் அற்ற முகபாவத்துடன்.அவளை ஆதரவாக அணைத்தான் வேந்தன்.
“சொல்லுங்க…எப்படி ஜெயிலுக்கு போனான்…”என்றாள்.
“ம்ம்…வேறென்ன பிராடு வேலை பார்த்து தான்….உன் அண்ணனும்,மாமனும் வெளிநாட்டுக்கு தானியம் அனுப்புறேன் என்ற பேருல போதை பொருள் சப்ளை பண்ணிருக்கானுங்க…இதுல வேற ஒருத்தவனையும் பணத்தேவைக்காக பார்டனரா சேர்த்து இருக்கானுங்க…அவன் எக்குத்தப்பா போலீஸ்ல மாட்டி உங்க அண்ணனையும் மாட்டிவிட்டுடான்…அதான் இப்ப சார் கம்பி எண்ணுறாரு…”என்று கூற அழகி,
“அப்ப மாமா…அவரு என்ன ஆனாரு…அவரும் தான கூட்டு…”என்று கேட்க அதற்கு வேந்தன் ஒரு நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டு,
“அந்த ஆள் தான் எதுவும் செய்யலேயே…அப்புறம் எப்படி மாட்டுவார்…”என்று கூற அவனை புரியாமல் பார்த்த அழகி,
“உன் மாமா சரியான சகுனி டி…அவன் எதுலேயேயும் தன் பேர் இல்லாம உன் அண்ணன் பேர்ல இருக்குற மாதிரி செட் செஞ்சுட்டான்…அது உங்க கூமுட்டை அண்ணனுக்கு தெரியல…அவனுக்கு பணம் மட்டும் தான் தெரிஞ்சது மத்த விஷயத்துல கோட்டவிட்டுடான்…”என்றான்.அழகி அமைதியாக இருக்கவும்,
“என்ன அமைதி ஆகிட்ட…”
“இல்ல மாமாவும் தப்பு பண்ணாரு அவருக்கு தண்டனை கிடைக்கலயே…”என்று வருத்துவது போல கூற அவள் தலையை செல்லமாக ஆட்டியவன்,
“ஏன் கிடைக்காம…போன மாசம் அவன் போன கார் ஒரு ஆக்ஸிடன்ட்ல மாட்டி இருண்டு காலும் அவுட்…உங்க அண்ணியார் தான் இப்ப எல்லாம் பார்த்துக்குறது…”என்றவன் அழகியிடம் மேலும்,
“ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறுந்துட்டேன் பாரு…உங்க அண்ணி இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க…யாரைனு கேட்க மாட்டியா…சரி நானே சொல்லுறேன் கேளு…உனக்கு பார்த்தாங்களே அவன தான்…பணம் வேணுமில்ல அதுக்காக…”என்று எள்ளலாக கூறி முடித்தவன் அழகியிடம்,
“சரி இன்னக்கி ரொம்ப நேரம் பேசியாச்சு தூங்குவோம்…நாளைக்கு நான் சென்னை வேற போகனும்…”என்று கூறிக்கொண்டே படுக்கையில் விழ அழகிக்கு இப்போது தான் புரிந்தது அவன் இன்னும் சமதானம் ஆகவில்லை என்று.அவனை எவ்வாறு சமாதானம் செய்வது என்று யோசித்தவள் அவனின் அருகிலேயே நிற்க.
“ஏன்டி நிக்குற வா வந்து படு…”என்று எப்போதும் போல தன் நெஞ்சைக் காட்ட மறுக்காமல் அவன் நெஞ்சில் தஞ்சம் அடைந்தவள் அவனிடம்,
“சாரி…”என்றாள்.
“எதுக்கு…”என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான்.அவனது நெஞ்சில் இருந்து தலையை நிமிர்த்தி,
“நான் தேவையில்லாம பயந்துட்டேன் அதனால தான் வரலனு சொன்னேன்…”என்று கூறிவிட்டு அவன் முகம் பார்க்க அவனோ நீ சொல்வதை கேட்கிறேன் என்னும் விதமாக அமைதியாக இருக்க அவனை மேலும் நெருங்கி,
“அதான் சாரி சொல்லிட்டேன்ல…அப்புறம் ஏன் இப்படி இருக்கீங்க பேசுங்களேன்…”என்று அவள் அவன் தாடை பிடித்து கெஞ்ச அவளை விலக்கி தானும் எழுந்தவன் அழகியிடம்,
“மதி உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் ஏதுவா இருந்தாலும் மனசுல உள்ளத மறைக்காம சொல்லுனு…ஆனா நீ என்ன செய்யுற…”என்றவன் அவளைக் காண அவளுக்கு இப்போது தான் செய்த தவறு புரிந்தது.தன் மனதில் உள்ளதை அவனிடம் காலையிலேயே கூறியிருந்தால் இவ்வளவு சண்டை வந்திருக்காதே என்று நினைத்தவள் அவனை பார்க்க அவனோ,
“சொல்லு மதி நீ இன்னும் என்ன நம்பல அப்படினு தான் எனக்கு தோணுது…”என்று ஒருமாதிரியான குரலில் கூற அழகிக்கு வேந்தனை எவ்வாறு சமாதான படுத்துவது என்றே தெரியவில்லை.வேந்தனே தொடர்ந்தான்,
“உன்னை ஒரு இடத்திக்கு கூட்டிட்டு போற எனக்கு உன்னை பார்த்துக்க தெரியாதா…உனக்கு எதாவது ஒண்ணுனா அப்படியே விட்டுட்டு வந்துடுவேனு நினைச்சியா…சொல்லு…”என்று இப்போது அவனின் குரலில் சீற்றம் இருந்தது.இவ்வளவு தூரம் நாம் கூறியும் மனைவி தன்னை நம்பவில்லை என்ற எண்ணம் அதனால் வந்த கோபம் அவளிடம் வெளிபட.அழகிக்கு தான் அவனது கோபத்தைக் கண்டு கை,கால் நடுங்கியது.அவள் மறுத்து ஏதோ கூற வர அவளை தடுத்தவன்,
“இல்ல மதி அப்படி இல்லனு மட்டும் சொல்லாத…”என்றவன்
“தூங்கு மதி…நான் கொஞ்ச நேரம் மாடில நடந்துட்டு வரேன்…”என்றுவிட்டு அவளின் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டான்.அழகிக்கு வேந்தனின் இந்த ஒதுக்கம் மனதை வலிக்க செய்ய படுக்கையில் விழுந்தாள்.மாடிக்கு சென்று அவனிடம் பேசி கூட்டிவர கை,கால்கள் பரபரத்த போதும் எங்கே தான் ஏதாவது கூறி அது அவனை மேலும் காயபடுத்திவிடுமோ என்று நினைத்தவள் கண்ணீர் படுக்கையை நினைத்தது.எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தாள் என்று தெரியவில்லை பக்கத்தில் படுக்கும் அரவம் கேட்ட போதும் அவளது நிலை மாறவில்லை.
மாடியில் வானத்தை வெறித்தவன் மனதில் தன் மனைவி இன்னும் தன்னை மனதளவில் நெருங்கவில்லையோ என்ற வருத்தம்,எங்கே கீழே இருந்தாள் அவளை மேலும் காயப்படுத்திவிடுவோமோ என்று பயந்தே மாடிக்கு வந்தது.ஆனால் அழகியின் கலங்கிய முகமே நினைவில் வர சிறுது நேரத்திற்கு எல்லாம் கீழே வர அவளோ அழுதுகொண்டு இருக்கவும் ச்ச நாம கொஞ்சம் பொறுமையா சொல்லிருக்கனுமோ என்று தன்னையே திட்டிக்கொண்டு கட்டிலில் விழ அவளோ திரும்பவே இல்லை.
சிறிது நேரம் பொருத்தவன் அவள் திரும்ப போவது இல்லை என்பதை உணர்ந்து அவளை தன் பக்கம் இழுத்து தன் மேல் போட்டான்.அப்போதும் அவளது தேம்பல் நின்றபாடில்லை,
“ப்ச் மதி விடு டா….எதை பத்தியும் யோசிக்காத உன்மேல எனக்கு கோபம் எல்லாம் இல்ல சின்ன வருத்தம் தான்…அதுவும் இப்ப இல்ல…தூங்கு டா ப்ளீஸ்…”என்றான் அவளது முதுகை வருடிய படி,
“இல்லங்க என் மேல தான் தப்பு…உங்க மனசு எவ்வளவு கஷ்டபட்டுருக்கும்…என்னை மன்னிச்சிடுங்க…”என்று அவனைக் கட்டிக் கொண்டு அழ அவளை சிறிது நேரம் அழவிட்டவன் அவளது முதுகை வருடிய படியே,
“தூங்கு…”என்று மென்மையாக கூறி அவளை தன் நெஞ்சில் உறங்க வைத்தவன்,அவளையே பார்த்துக்கொண்ட உறங்க முற்பட்டான்.
காலையில் எப்போதும் போல எழுந்தவன் மனைவியை காண அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள்.அவளது தலையை வருடியவன் தன் உடற்பயிற்சிகளை செய்ய சென்றான்.தான் விழிக்கும் நேரத்தில் விழித்த அழகி அருகில் கணவனைக் காணாமல் தேடி மாடிக்கு வர அங்கு உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தான்.கொலுசு ஓலியில் மனைவி வந்ததை அறிந்தவன்
“என்ன மேடம்…”என்றான் உடற்பயிற்சி செய்துக் கொண்டே.அவளோ
“இல்ல உங்கள காணும் அதான் வந்தேன்…”என்று மழிப்ப.உடற்பயிற்சி விடுத்து அவளை முறைத்து,
“ஏன் நான் தினமும் எப்போதும் எக்ஸசைஸ் செய்வேன் தான அப்பபெல்லாம் வராதவ இன்னக்கி வந்திருக்க…எங்க உன்னைவிட்டுட்டு கல்யாணத்துக்கு போயிட்டேன் நினைச்சு தான தேடி வந்த…”என்று சரியாக கூற அவளோ,
“அப்படியெல்லாம் இல்ல…நம்ம எப்ப கிளம்புனும்னு கேட்க வந்தேன்…”என்று கூற அவளை ஒரு நமுட்டு சிரிப்புடன் பார்த்தவன்,
“கீழ போ வரேன்…”என்றான்.அவனிடம் தலையை உருட்டிவிட்டு கீழே இறங்க முற்பட ஒரு நிமிடம் தலைசுற்றுவது போல உணர்ந்தவள் பின்”ச்ச நம்ம நினைப்பு போல…”என்று நினைத்து கீழே வந்தாள்.
வேந்தனும் உடற்பயிற்சி முடித்து கீழே வந்தவன் குளித்துவிட்டு வர அறையில் அவனுக்கான உடைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் அழகி.அவளை பின்னிருந்து அணைத்தவன்,
“என்னடி வெள்ளச்சி ஊருக்கு போக பெட்டிக் கட்டிட்ட போல…”என்றான் அங்கே இருந்த பெட்டியைப் பார்த்து.
“ஆமா எல்லாம் ரெடி…எத்தனை மணிக்கு கிளம்புனும்…”என்று கேட்டுக் கொண்டே வெளியில் செல்ல எத்தனிக்க திரும்பவும் தலைசுற்றுவது போல இருக்க விழாமல் இருக்க கதவை பிடித்து நிற்க அவளது தடுமாற்றத்தை உணர்ந்த வேந்தன்,
“ஏய் பார்த்துடி…என்ன ஆச்சு…”பதறிய படி வர
“ஒண்ணுமில்லங்க…”என்று கூற அவளது முகமோ வேர்த்து இருப்பது போல இருக்க தன் அன்னையையும்,பாட்டியையும் அழைத்தான்.வேந்தனின் அழைப்பில் இருந்த பதட்டத்தைக் கண்டு ஓடி வந்த இருவரும் அழகி தலையை தாங்கிய படி அமர்ந்திருப்பதைப் பார்த்து,
“என்னம்மா ஏன் ஒருமாதிரி இருக்க…”என்று மஞ்சு கேட்க வேந்தனோ
“என்னனே தெரியலமா திடீர்னு தடுமாறுரா…”என்று பதட்டமாக கூற வள்ளிப் பாட்டிக்கு புரிந்து போனது,
“டேய் நீ கொஞ்ச நேரம் வெளில இரு…மஞ்சு நீ இவளுக்கு தண்ணி எடுத்துட்டு வா…”என்று இருவரையும் அனுப்பியவர் அழகியிடம் சில கேள்விக் கேட்டுவிட்டு அவளது நாடியை பிடித்து பார்க்க அவர் நினைத்து போல தான் என்று ஊர்ஜிகபடுத்தியவர் அவளிடமும் கூறிவிட்டு வெளியில் சென்று அனைவரிடமும் சொல்ல வேந்தனோ சந்தோஷ மிகுதியில் வள்ளியை தூக்கி சுற்ற அவரோ,
“அடேய் என்னை விடுடா…”என்று கத்தினார் அவரை இறக்கி விட்டவன் அவரது இருகன்னத்திலும் முத்தமிட்டு தன் மனைவியைக் காண செல்ல அவளோ கண்ணாடியில் தன் வயிற்றை தடவிக் கொண்டிருந்தாள்.அவளை பின்னிருந்து அணைத்தவன் அவளது வயிற்றை வருட அவளோ திரும்பி அவனை இறுக அணைத்திருந்தாள் பேச்சுக்கள் இல்லை இருவரிடமும் மௌனமே தாங்கள் தாய்,தந்தை ஆன அந்த தருணத்தை இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து அனுபவித்தனர்.

Advertisement