Advertisement

அருள்வேந்தனக்கும்,அழகிக்கும் மனசு ஒத்த பிறகு முதல் பயணம் இருவரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர் அவனது புல்லட்டில்.ராமலிங்கம் கார் புக் செய்து வர சொல்லியிருந்தார் ஆனால் வேந்தன் பிடிவாதமாக மறுத்துவிட்டான் அதில் சிறிய வருத்தம் மகன் மேல்.முதன் முதலில் மருமகள் உடன் வருகிறான் யார் கண்ணும் விழக் கூடாது என்று அந்த தந்தையின் எண்ணம்.ஆனால் வேந்தனுக்கோ தனது புல்லட்டில் காதல் மனைவியுடன் செல்ல வேண்டும் நெடுநாள் ஆசை அதனால் காரில் வர மறுத்தான்.இதோ கோவில் போயிக்கொண்டிருக்கின்றனர் அழகியோ இரு கைகளையும் கம்பிகளை பிடித்தபடி வர சிறிது தூரம் சென்றவன் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்த அவளோ,
“ஏன் இங்க நிருத்தினீங்க…”என்று புரியாமல் அழகி கேட்க.அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் கைபேசியை எடுத்தவன் யாருக்கோ அழைத்து கார் புக் செய்ய போக அவனிடம் இருந்து கைபேசியை பிடிங்கி அதனை அணைத்தவள்,
“என்ன தான் உங்க பிரச்சனை…”என்று அவள் மூச்சு வாங்க கேட்க அதில் அவளது முகமும் செம்மையுற அவள் கேட்டவிதம் வேந்தனை கவர்ந்து இழுத்தாலும் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு,
“நீயெல்லாம் வண்டில வர லாயிக்கு இல்ல அதான் நீ கார்ல போ….நான் நல்ல பிகரா வண்டில ஏத்திக்கிறேன்…”என்று அவன் நக்கலாக கூறி முடிக்கும் முன்,
“என்னடா சொன்ன உன்னை….”என்று கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அடிக்க ஆரம்பிக்க அவனோ அவளது அடிகளை லாவகமாக தடுத்தவன்,
“என்னை ஏன்டி அடிக்க வர…நீ ஒழுங்க உக்கார்ந்து வந்தா நான் ஏன் இன்னொருத்திய கூப்பிட போறேன்…”என்று கூற அவன் எதற்கு கூறுகிறான் அவளுக்கு புரிந்துதான் இருந்தது.ஆனால் ராமலிங்கம் கூறியதற்கு மறுத்து சண்டை போட்டு வண்டியில் வந்ததாள் கோபத்தில் வந்தாள்.இவன் இவ்வாறு செய்வான் என்று அவளுக்கு தெரியாதே. “சரி சரி…நான் ஒழுங்கா வரேன் வண்டியை எடுங்க…கோவில்ல எல்லாரும் காத்துட்டு இருப்பாங்க…”என்றாள்.
“அப்படியா….பார்க்கலாம் உக்காரு…நீ ஒழுங்கா வரல வழியிலே விட்டுட்டு போயிடுவேன் பார்த்துக்க…”என்று பெரிதாக மிரட்டி வண்டியில் ஏறியவன் அவளை அமர சொல்ல இப்போது முன் போல் அல்லாமல் நெருங்கி அமர்ந்தவளின் ஒரு கை வேந்தனின் இடையை சுற்றி வளைத்திருந்தது.புது மனைவியின் அருகாமை ஆள் அரவமற்ற அந்த நெடுஞ்சாலை என்று வேந்தனின் புல்லட் மிதமான வேகத்தில் செல்ல அழகிக்கோ இது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது.
ஒருவாறு வேந்தனின் குலதெய்வ கோவிலுக்கு வந்தவர்களை வாயிலேயே நின்று வரவேற்றார் ராமலிங்கம்.
“வா தம்பி…வா ம்மா…உள்ள வாங்க…”என்று அழைத்து செல்ல உள்ளே மஞ்சுளாவும்,வள்ளியும் பொங்கல் செய்வதற்கான வேலையில் இருக்க தூரத்தில் அவர்களை பார்த்த அழகி,
“அதோ அத்தையும்,பாட்டியும் இருக்காங்க…நான் போறேன்…”என்று கூறிவிட்டு நகர பார்க்க,
“ஏய் இரு…”என்று தடுத்த வேந்தன் ராமலிங்கத்திடம்,
“அப்பா நீங்க பூசாரி கூப்பிட்டு வாங்க…”என்று அனுப்பிவிட்டு மனைவியிடம் திரும்பி,
“என்னடி அதுக்குள்ள அவசரம் நானும் வரேன்…”என்று கூறிக்கொண்டே அவளது கைகள் உடன் கைகோர்த்து நடக்க.அழகிக்கோ சங்கடமாக இருக்க,
“அய்யோ…கைய விடுங்க…அத்த நம்மல தான் பாக்குறாங்க…”என்று கையை உருவ முயல வேந்தனோ,
“பார்த்தா பார்க்கட்டும்…நீ வா…”என்று கூறி அவளை அழைத்துச்சென்றான்.
இருவரின் முகத்தை வைத்தே கண்டுகொண்ட வள்ளியம்மை மஞ்சுளாவிடம்,
“அப்பா என் பேரன் வாழ்வு செழிச்சிடுச்சு…நான் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடல மஞ்சு…”நெகிழ்ச்சியாக கூற கேட்டிருந்த மஞ்சுவிற்கோ உள்ளம் நிறைந்துவிட்டது.அதற்குள் வேந்தனும்,அழகியும் இவர்களை நெருங்கிவிட வேந்தன் அசந்த நேரம் வேகமாக கையை உருவிய அழகி,
“அத்த என்கிட்ட சொல்லுங்க நானும் செய்யிரேன்…”என்று பொங்கல் வைக்க தேவையான வேலைகளை செய்ய வேந்தனோ அழகி கைகளை உருவி சென்றதில் கடுப்பானவன் அவளை முறைத்துக்கொண்டு நின்றான்.மஞ்சுவோ அழகியின் மலர்ந்த முகத்தை கண்டவருக்கு மகிழ்ச்சி தாளாமல் கன்னம் வழித்து சுத்திப்போட்டார்.அவரது செய்கையில் அழகிக்கு மேலும் புன்னகை விரிய அதைக் கண்ட வேந்தனுக்கு தான் மனது ஒரு நிலை இல்லாமல் தவித்தது.இதை எல்லாம் கண்டும் காணாதது போல இருந்துகொண்டார் வள்ளியம்மை.
மதியழகியின் கையால் பொங்கல் வைத்து வழிப்பட்டவர்கள்,கோவிலேயே மதியம் வரை இருந்துவிட்டு மாலை கிளம்பி வீடு வந்தனர். இரவு அனைவரும் பயண களைப்பில் உறங்கிவிட வேந்தன் மட்டும் அழகியை உறங்க விடாமல் அவளிடம் சீண்டிக்கொண்டும்,பேசிக்கொண்டும் இருந்தான்.
“பூஜ்ஜி என்னடி ஒன்னும் பேச மாட்டேங்கிற…ஏய்…”என்று அவளை தன் அணைப்பில் வைத்துக்கொண்டு அவளது காதுகளில் ரகசியம் பேச அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவும் அவளை தன் திருப்ப அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள்.இவள சரியான தத்தி என்று தலையில் அவளது செல்லமாக கொட்ட அதில் தூக்கம் கலைந்தவள்,
“என்னங்க ஏன் கொட்டுனீங்க…”என்று உதடு பிதுக்க அவளது உதடை தன் விரலால் வருடி,
“ஓய் வெள்ளச்சி…”என்றான் கிறக்கமாக அவனது பார்வை,பேச்சு இரண்டும் மாறி இருப்பதை உணர்ந்தவள்,
“என்னடா கருவாயா…”என்றாள் அவளும் குறும்பாக,
“கருவாயானா…இருடி இந்த கருவாயான் என்ன பண்றேன் பாரு….”என்று அவளது ஆடைகளை களைய அதில் மேலும் நாணமுற்றவள் அவனிடமே தஞ்சம் பூக அவளை நிமிர்த்தி,
“என்னை உனக்கு பிடிக்குமா டி…”என்று தாபத்துடன் அவன் கேட்க அவனது  வாயில் ஒரு அடி போட்டவள்,
“கேள்விய பாரு பிடிக்கமா தான்….”என்று மேலும் சொல்லமுடியாமல் அவனது நெஞ்சில் புதைய அவளை வாக அணைத்தவன் கைகள் அவளது மேனி எங்கும் ஊற அதில் மேலும் கூசி சிவந்தவளை அள்ளி அவளது மென்மையான அதரங்களை தன் வன்மையான அதரங்களால் மூடியவன் நீண்ட நேரம் கழித்தே விட்டவன்,
“ஐ லவ் யூ டி வெள்ளச்சி…இப்ப இல்ல எப்ப உன்ன முதன் முதல்ல சேலையில பார்த்தேனோ அப்பவே விழுந்துட்டேன்….ஆனா இது நமக்கு சரிவராதுனு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்…அந்த கசப்பான சம்பவம் மட்டும் நடக்காம இருந்திருந்தா ஒருவேல உன்கிட்ட சொல்லிருப்பேனோ என்னவோ…”என்று காதலாக கூற அவளுக்கோ பேச வார்த்தைகள் வரவில்லை பதிலாக தன் அணைப்பை இறுக்கி தன் மனதை உரைக்க அதை உணர்ந்தவன் மனதும் நிறைக்க இருவரும் ஒருவரில் ஒருவர் தேடி களைத்த பின்னரே உறங்கினர்.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அழகியின் வாழ்வில் வேந்தன் என்பவன் இன்றியமையாதவன் ஆகி போனான்.காலை நேரங்களில் வள்ளி மற்றும் மஞ்சுவுடன் சுற்றுபவள் வேந்தன் வந்தவுடன் அவளது முகம் குங்கும நிறம் கொள்ளும் சில நேரங்களில் வள்ளி பாட்டிக் கூட கிண்டல் செய்வார்.அவரது கிண்டலுக்கு அழகிய புன்னகையை பதிலாக தருவாள்.இதோ இன்றும் அதே போல காலை பதினோரு மணி போல வீட்டில் சமையல் வேலையில் இவள் இருக்க,
“மதீ…”என்ற வேந்தன் குரல் கேட்கவும் திடுக்கிட்டாள்.அதை கவனித்த வள்ளியோ,
“ஏன் இப்படி பயப்படுற என் பேரன் தான் கூப்பிடுறான் போ…”என்று அவள் கையில் காபி திணித்தவாரே கூற அழகியோ அசடு வழிய வாங்கி சென்றாள்.இதை முகம் கொள்ள புன்னகையுடன் பார்த்தும் பார்க்காமல் இருந்தார் மஞ்சுளா.
தன் அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தான் வேந்தன்.அப்போது உள்ளே வந்த அழகி,
“உங்கள எத்தனைதடவ சொல்லிருக்கேன் இப்படி பகல் நேரத்துல என்னை கூப்பிடாதீங்கனு…”என்று மூக்கு விடைக்க கேட்க அவனோ அவளைக் கண்டு கொள்ளாமல்,
“ப்ச்…ஏய் இங்க வச்சிருந்த பைல் எங்க…”என்றான் கபோடில் இருந்து தலையை நிமிர்த்தமால்.அவனது பதிலில் “ச்ச நாம தான் ஏதோ யோசிச்சிட்டோம் போல….”என்று நினைத்தவள் அவன் கேட்ட பைலை தேடி எடுத்துக்கொடுத்தாள்.
“ப்பா…தேங்க்ஸ் டி…”என்றவனிடம்,
“இந்தாங்க காபிக் குடிங்க…”என்றாள்
“ம்ம் கொடு…”என்று வாங்கி பருகியவன் அந்த பைல்களில் தீவிரமாக படிக்க,
“என்ன பைல் இது…”என்றாள்
“ம்ம்…இதுவா நாம கடை விரிவாக்கம் செய்யுறோம் இல்ல அதுக்கு கவர்மெண்ட் பர்மிஷன் வாங்கின பேப்பர்ஸ்…”என்றவன் அவளது கன்னம் தட்டிவிட்டு செல்ல இவளுக்கு ஏதோ ஒன்று குறைந்தது போல இருந்தது.ஏதோ யோசனையில் வெளியில் செல்ல எத்தனிக்க அவளை இழுத்து யாரோ பின்னிருந்து அணைக்கவும் பயந்து பார்க்க வேந்தன் அவளது இரு கன்னங்களிலும் முத்தமிட்டு,
“மீதி நைட்…பை டி வெள்ளச்சி…”என்றுவிட்டு சென்றான்.கணவனின் செய்கையில் முகம் மலர்ந்தவள் மற்ற வேலைகளைக் காண சென்றாள்.
மறுநாள் வேந்தன் அழகியிடம் தன் நண்பன் திருமணத்திற்கு அழைக்க அழகியோ கல்யாணம் நடக்கும் இடம் சென்னை என்பதால் எங்கே தன் அண்ணன் கண்ணில் பட்டுவிடுவோமோ என்று பயந்து வரவில்லை என்று மறுத்தாள்.அதில் இருவருக்கும் சற்று வாக்குவாதம் ஆக வேந்தன்,
“அப்போ நீ வரப்போறது இல்ல அப்படி தான…”என்று கடுமையாக கேட்க அவள் தலை குனிந்தாள்,
“போடி இங்கருந்து…”என்று அவளிடம் காய்ந்துவிட்டு தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.வள்ளியோ வேந்தனின் கோபத்தைக் கண்டு அழகியிடம்,
“ஏன்மா ஆசையா தான கூப்பிடுறான் போனா என்ன…”என்றவர் அவளது கலங்கிய முகத்தைக் கண்டு மேலும் ஒன்று கூறாமல் சென்றுவிட்டார்.அவர் சென்ற பிறகு தளர்வாக கட்டிலில் அமர்ந்தவள் மனதில் உள்ளதை கணவிடம் பகிரவும் பயம் அவனது கோபம் அறிந்தவள் அல்லவா ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடுமோ என்று நடுங்க அமர்ந்திருதாள்.
எப்போதும் விட சற்று தாமதமாக வந்த வேந்தன் அழகியிடம் பேசாமல் இருக்க பொருக்க முடியாமல் அவனிடம்,
“ஏங்க நான் வரேன்…”என்றாள் வெளிவராத குரலில் அவளைக் கூர்ந்து நோக்கியவன்,
“என்ன இப்ப உனக்கு பயம் போச்சா…”என்றான் குரலில் நக்கலாக அவனது பேச்சில் திடுக்கிட்டு அவனைக் காண,
“என்ன உங்க அண்ணன் எங்கயாவது உன்னை பார்த்து உன்னையும்,என்னையும்…”என்று மேலும் அவன் கூறும் முன் அவனது வாயை மூடியவள் கண்கள் கலங்க அதை காண முடியாமல் அவளை இழுத்து அணைத்தவன்,
“உன்ன எப்ப அந்த மாதிரி பார்த்தேனோ அப்பவே உன்னோட எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன்…இப்ப உனக்கு தெரியாதையும் சொல்றேன் கேட்டுக்கோ…உங்க அண்ணன் இப்ப ஜெயில்ல இருக்கான்…”என்று வேந்தன் கூற அழகி அதிர்ந்தாள்.

Advertisement