Advertisement

அந்த காலை பொழுது அழகாக விடிந்தது அருள்வேந்தனுக்கு.வெகு நாட்களுக்கு பிறகு நல்ல உறக்கம்.மெதுவாக தலையை அசைக்க அப்போது தான் உணர்ந்தான் அவன் அழகியின் மடியிலேயே உறங்கிருக்கிறான் என்று.வேகமாக அவன் அவளது மடியில் இருந்து எழ அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.இரவு முழுக்க பழைய நினைவுகள் அது தந்த தாக்கத்தில் தூக்கத்தை துளைத்தவள் விடியற்காலையில் தான் கண்யர்ந்தாள்.வேந்தன் அழகியின் முகத்தை பார்த்தவன் அதிர்ந்தான்.அழுதிருக்கிறாள் என்பதற்கு அறிகுறியாக அவளது இரு கன்னங்களிலும் கண்ணீர் கோடுகள்.தான் எழுந்தது கூட தெரியாமல் உறங்குறாள் என்றால் இரவு முழுக்க உறங்கவில்லை என்று உணர்ந்தவன். அவளது மனதில் உள்ள பழைய  சுவடுகளை எவ்வாறு அழிப்பது என்று யோசித்தவன் அவளது தூக்கம் கலையாமல் அவளை அள்ளி தன் அறையில் படுக்கையில் படுக்கவைத்துவிட்டு வெளியில் வந்தான்.
வேந்தனின் கைபேசி அழைக்கவும் எடுத்தான் ராமலிங்கம் தான் அழைத்திருந்தார்.அப்போது தான் வேந்தனுக்கு இன்று கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதே நியாபகத்திற்கு வர அட்டன் செய்து,
“சொல்லுங்கப்பா…அது…”என்று இவன் சொல்லும் முன் லிங்கம்,
“தம்பி…நீங்க எங்க இருக்கீங்க…”என்றார் பதட்டமாக.அவரது பதட்டத்தை உணர்ந்தவன்,
“நாங்க இன்னும் கிளம்பலப்பா…ஏன் என்ன ஆச்சு ஒருமாதிரி பதட்டமா பேசுறீங்க…எல்லாரும் நல்ல இருக்கீங்கள்ல…”என்றான் இவனும் பதட்டமாக.
“நாங்க எல்லாரும் நல்லா தான் இருக்கோம் தம்பி…வர வழில ஏதோ  அரசியல்வாதிக்கு ஆக்ஸிடன்ட் ஆகி கலவரம்னு நியூஸ் பார்த்தோம் அதான் கேட்டேன்…நீங்க இன்னக்கி வர வேண்டாம்…இதெல்லாம் ஓஞ்சி வாங்க…நான் நாளைக்கு பூஜைக்கு சொல்லிக்கிறேன்…”என்றார்.
“சரிப்பா…”என்றவன் தாயும்,பாட்டியும் அழகியை பற்றி விசாரிக்க அவள் உறங்குகிறாள் என்று பதிலளித்தவன் பேசிவிட்டு போனை வைத்தான்.
வேந்தன் பேசி வைக்கவும் மஞ்சுளா வள்ளியிடம்,
“என்ன அத்த எப்போதும் சீக்கிரம் எந்திரிச்சுடுவா இன்னக்கி தூங்குறானு சொல்லுறான்…”என்றவருக்கு இருவருக்குள்ளும் அனைத்தும் நல்லது நடக்கவேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே. வள்ளியும்,
“ம்ம்…இரண்டும்  நாளைக்கு இங்க வருதுங்கல்ல பாத்துக்கலாம் விடு…”என்றார்.அவருக்கும் அதே வேண்டுதல் தான் தன் பேரனின் வாழ்வு செழிக்க வேண்டும் என்று.
போனை வைத்தவன் அழகியைக் காண அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.இவ இப்ப எந்திரிக்கமாட்டா என்று உணர்ந்தவன் குளியல் அறை சென்று குளித்து வர அப்போதும் அழகி எழவில்லை.இன்று கோவில் செல்லவதாக இருந்ததால் கடைக்கு இருநாள் விடுமுறை விட்டிருந்தான்.அதனால் நிதானமாக காலை உணவிற்கு ஏதாவது வாங்கி வர சென்றான்.
வேந்தன் சென்ற சில நிமடங்களில் உறக்கம் கலைந்த அழகி வேகமாக எழுந்தவள் நேரத்தைப் பார்க்க அது காலை பத்து மணி என்று காட்ட “அய்யோ…இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்…”என்று வேகமாக எழ அப்போது தான் அவள் மெத்தையில் படுத்திருப்பதை உணர்ந்தவள்,
“நேத்து நாம சோபால தான உக்கார்ந்து இருந்தோம் அவங்க தான் மடில படுத்திருந்தாங்க…”என்று  நினைத்தவளுக்கு அப்போது தான் இன்று கோவில் செல்ல வேண்டும் என்பதே உறைக்க,
“அய்யோ…இன்னக்கி கோவிலுக்கு போகனும்னு சொன்னாங்க…இப்படி தூங்கிட்டோமே திட்ட போறாங்க…”என்று நினைத்தவள் எழுந்து வேந்தனை தேட அவனோ வீட்டை வெளியில் பூட்டிவிட்டு சென்றிருந்தான்.கதவை திறக்க முயன்று தோற்றவள்,
“போச்சு அழகி நீ தூங்கிட்டேனு விட்டுட்டு போயிட்டாரு போல…”என்று நினைத்தவளுக்கு இரவு வேந்தன் பேசியது நினைவில் வர,
“நேத்து அவ்வளவு பேசினாரு இன்னக்கி இப்படி விட்டுட்டு போயிட்டாரு…அதுவும் இப்படி யாராவது மனுஷால உள்ள வச்சு பூட்டிட்டு போவாங்களா….”என்று நினைத்தவளுக்கு கண்கள் கலங்க சோபாவில் அமர்ந்துவிட்டாள். சிறிது நேரம் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்கவும் அழகிக்கு பயம் பிடித்துக்கொண்டது.யாராக இருக்கும் நினைத்தவள் கை,கால்கள் நடுங்க அமர்ந்திருந்தாள்.அப்போது கதவை திறந்து கொண்டு வேந்தன் வரவும் மனதில் இருந்த பயமெல்லாம் நீங்கி ஓடிச்சென்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டவள்,
“எங்க போனீங்க என்னவிட்டுட்டு பயந்து போயிட்டேன்…”என்று அவள் அழுதுக் கொண்டே அவனை இறுகி அணைக்க வேந்தனின் நிலை தான் கொஞ்சம் ஆட்டம் கண்டது.
சாப்பாடு வாங்கி வந்தவன் அழகி இப்படி ஓடிவந்து கட்டிப்பிடிக்கவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவளது அழுகைக் கண்டவனுக்கு ஏதோ பயந்துள்ளாள் என்று புரிய,
“ஏய் மதி…என்னடி ஏன் இப்படி அழற…நான் எங்கேயும் போலடா சாப்பாடு வாங்கத்தான் போனேன்…நீ நல்ல தூங்கிட்டு இருந்த அதான் கதவ பூட்டிட்டு போனேன்…”என்றான் அவளை தேற்றும் விதமாக அவளோ,
“நேத்து நீங்க கோவிலுக்கு போகனும்னு சொன்னீங்க நான் தூங்கிட்டேனா அதான் விட்டுட்டு போயிட்டீங்களோனு பயந்துட்டேன்…”என்று கூறி கட்டிக்கொண்டு அழ அவளை தன்னில் இருந்து பிரித்தவன்,
“லூசா டி நீ…யாராவது இப்படி உன்ன பூட்டி வச்சுட்டு போவாங்களா…நல்ல நம்பிக்கை என் மேல…”என்று பல்லைக்கடித்துக் கூற அவனை காண முடியாமல் தலைகுனிந்தாள்.
அவளது குனிந்த தலையை நிமிர்த்தி,
“நீ இன்னும் என்ன நம்பல அப்படி தான…”என்றான் கூர்மையாக அவளைப் பார்த்து.அதற்கு அழகி,
“இல்ல அப்படியில்ல…”என்று கூற அவனோ,
“பின்ன வேற எப்படி சொல்லு மதி…நேத்து தான் சொன்னேன் பழசை நினைக்காதனு ஆனா நீ என்ன செஞ்சுக்கிட்டு இருக்க..”என்று நேத்து அவளது மனநிலையை சரியாக கூற அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.என்வென்று கூறுவாள் தன் குடும்பத்தார் தன்னை வைத்து செய்த இழி செயலால் ஒருவனது வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிறுக்கிறது அது கூட தெரியாமல் தான் இருந்திருக்கிறோம் என்று நினைத்தவளுக்கு மனது மேலும் வலிக்க அவளது மனநிலை உணர்ந்த வேந்தன் அழகியை இழுத்து அணைத்தவன்,
“ஏன்டி இப்படி உன்னையே வதைச்சுக்கிற ஏதாவது சொல்லுடி…”என்றான் ஆற்றமாட்டாமல்.அவனது நெஞ்சில் புதைந்துவிடுபவள் போல இறுகி அணைத்தவள்,
“என்னால முடியலங்க என் குடும்பம் பண்ண தப்புக்கு நீங்களும் உங்க குடும்பமும் எவ்வளவு கஷ்ட பட்டுருப்பீங்க…நினைச்சு பார்க்கவே வேதனையா இருக்கு…”என்றவள் மெல்ல அவனிடம் இருந்து விலகி அவனது முகம் பார்க்க அவனோ,
“எல்லாத்தையும் சொல்லிடு உன் மனசுல பழசு எதுவும் இனி இறுக்கக்கூடாது…”என்று அவளை சரியாக கணித்துக் கூற,
“அன்னக்கி எனக்கு வெளியில என்ன நடந்துச்சுனே தெரியாது மாமாவும்,அம்மாவும் நாங்க என்ன சொன்னாலும் அதுக்கு நீ ஆமாம்னு சொல்லனும்னு சொன்னாங்க…நானும் சரினு சொன்னேன்..எனக்கு நீங்க என்ன அப்படி பார்த்ததே ஒருமாதிரி இருந்துச்சு அதான் எல்லார் முன்னாடியும் அம்மா சொன்னது தான் நடந்துச்சுனு சொல்லிட்டு உடனே போயிட்டேன்…எனக்கு அம்மா இப்படி சொல்லிருப்பாங்கனு சத்தியமா தெரியாது…அம்மா சாவும் போது தான் எல்லாத்தையும் சொல்லி அழுதாங்க…எனக்கு அப்ப தான் தெரியும்…என்னை மன்னிச்சிடுங்க…”என்ற விளக்கம் கொடுத்தாள் மதியழகி.
அருள்வேந்தனுக்கு அழகி கூறியதை கரகிக்கவே சில நிமிடங்கள் ஆனது இப்படியும் ஒரு தாய் இருப்பாளா என்று சாரதா மேல் கோபம் தான் வந்தது.இதில் ஒன்று அழகி எந்த தவறும் செய்யவில்லை என்று புரிந்துகொண்டவனுக்கு மனதில் இது நாள் வரை அழுத்துக்கொண்டிருந்த பாரம் நீங்கி லேசாகியது இருந்தும் அவளை சீண்டும் பொருட்டு ,
“ம்ம் மன்னிப்பா உனக்கா அது இந்த ஜென்மத்துல கிடையாது…உனக்கு எப்படியெல்லாம் தண்டனைக்கொடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்…”என்று குரலில் தீவிரம் இருந்தாலும் முகத்தில் குறும்புடன் கூற அழகியோ அவனது பதிலில் அதிர்ந்து நோக்கியவள் அவனது முகத்தில் தெரிந்த குறும்பில் அவளது முகம் செம்மையுற தலைகுனிந்தாள்.அவளது முகச்செம்மையை ரசித்தவாறு அவளை நெருங்கி அவளது முகத்தை நிமிர்த்தி அவளது செவ்விதழ்களை வருடி,
“என்னடி இது இவ்வளவு சின்னதா உதடு வச்சுருக்க…எனக்கு இது பத்தாதே..”என்று கூறிக்கொண்டு குனிய வேகமாக விலகினாள் அழகி.அதில் சலிப்புற்றவன்,
“இன்னும் என்னதான்டி வேனும் உனக்கு…”என்று கடுமையாக கேட்க,
“நம்ம கோவிலுக்கு போகனும் மறந்துட்டீங்களா…”என்று கேட்க,
“ம்ம்…நான் மறக்கல ஆனா நீ தான் மறந்துட்ட போல இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும்…”என்று விஷமாக கூறியவன்,பின் ராமலிங்கம் காலையில் போன் செய்து கூறியதைக் கூறினான்.அழகி,
“நான் தூங்கிட்டு இருந்தேனா அத்தைக் கிட்ட சொன்னீங்க அவங்க என்ன நினைப்பாங்க…”என்றாள் பரிதவிப்பாக.அதற்கு வேந்தனோ,
“என்ன நினைப்பாங்க பையன் நைட்டெல்லாம் தூங்கவிடல போல அதான் இப்ப தூங்குறா அப்படினு சந்தோஷம் தான் படுவாங்க…”என்று அவன் விஷமமாக கூறி அவளை இழுத்து அணைக்க அவளோ திமிறவும் கடுப்பானவன்,
“என்னடி…”என்று பல்லைக்கடிக்க,
“நான் இன்னும் பல்லு விளக்கல,குளிக்கல…”என்று அசடு வழிய வேந்தனோ தலையில் அடித்துக்கொண்டான்.அழகி அவனது அணைப்பு தளரவும்மே கூறிவிட்டு குளியல்  அறைக்கு சென்றிருந்தாள்.
குளியல் அறையில் அழகிக்கு வேந்தனின் அணைப்பும்,பேச்சும் நினைவில் வர மனதில் இருந்த சுணக்கமெல்லாம் நீங்கி உற்சாகம் பிறந்தது.அதே உற்சாகத்தோடு அவள் குளித்து துண்டுடன் வெளியில் வர அவளுக்காகவே காத்திருந்தான் வேந்தன்.அவன் வெளியில் இருப்பான் என்று நினைத்து இவள் துண்டுடன் வர அவனோ அறையில் கட்டில் அமர்ந்து இவளையே ரசித்துக்கொண்டிருந்தான்.அவனைக் கண்டவுடன் அழகி மீண்டும் குளியலறை செல்ல எத்தனிக்க அவளது எண்ணம் புரிந்தவன் இரண்டே எட்டில் அவளை அனுகி அணைத்திருந்தான்.
அழகிக்கோ வேந்தனின் கணவனாக இந்த பரிமாணம் சற்று பயம் கலந்த வெட்கத்தை தர அவனை விலக்கினால் திட்டுவானோ என்று நினைத்தவள் கை,கால் நடுங்க நிற்க.அவள் நிற்கும் நிலையிலேயே அவளது மனநிலையை அறிந்தவன்,
“நீ பயப்படுற மாதிரி இருக்காதுடி…ப்ளீஸ்..”என்று அவன் கெஞ்ச அவனது கெஞ்சலில் இவள் மயங்கி தான் போனாள்.தன் தலைகவிழ்ந்து அவனுக்கு சம்மதத்தை தெரிவிக்க அடுத்த நிமிடம் அழகியை அள்ளி கட்டிலில் இட்டவன் அவள் மேல படற இவளோ அவனது தொடுகையில் கூசி சிவக்க அதில் மேலும் கட்டுண்டவன் அவளது மேனியில் முத்த ஊர்வலத்தை தொடர பெண்ணவளுக்கோ அவனது முத்தத்தில் சித்தம் கலங்க அவனது நெஞ்சில் சஞ்சம் அடைந்தாள்.தன் நெஞ்சில் புதைந்து போவது போல் மூழ்கியவளின் முகத்தை  தன் இரு கைகளால் ஏந்தி அவளது சிவந்த உதடுளில் முத்தமிட்டவனுக்கு அதைவிடும் எண்ணமில்லை போல அவள் மூச்சுக் காற்றுக்கு ஏங்கவும் விட்டவனது கைகளோ அவளது மேனியின் மேன்மையை பரிசோதிக்க ஒருகட்டத்தில் இவள் கெஞ்ச அவன் மிஞ்ச என்று இருவரும் ஒருவரில் ஒருவர் கரைந்தனர்.மனதில் உள்ள அத்தனை கசப்புகளும் இருவரும் மனவிட்டு பேசியதில் நீங்கி இருக்க தாம்பத்தியத்தில் நிறைவைக் கண்டனர்.ஒருவரை ஒருவர் பின்னிக்கொண்டு உறங்க அந்த வானத்து வெண்ணிலவு இவர்களைக் கண்டு தூரம் சென்றது.
விடியற் காலையில் விழித்த அழகிக்கு கன்னங்களில் ஏதோ குத்த எழுந்தாள்.வேந்தனின் பரந்த மார்பில் புதைந்து இருந்தாள் அவனது செயின் அசைந்ததில் இவள் கன்னத்தைக் குத்த கண்விழித்தவளுக்கு தான் இருக்கும் நிலையை எண்ணி கூச்சமாக உணர்ந்தவள் மெல்ல அவனது தூக்கம் கலையாமல் எழ நினைத்தவளை மேலும் இறுக்கிக் கொண்டது வேந்தனின் கரம் அவனது அணைப்பே அவனும் முழித்துவிட்டான் என்பதை உணர்த்த அவனை நிமிர்ந்து முறைத்தாள்.வேந்தனோ அவளை விழுங்கும் பார்வை பார்த்துக்கொண்டு இருக்க அவனது கண்களை மூடியவள்,
“போதும் பார்த்தது…நான் குளிக்க போனும்…”என்றாள் வெளிவராத குரலில்,
“ம்ம் போ…யாரு வேணாம்னு சொன்னா…”என்று அவள் கைகளை கண்களில் எடுத்து ஒவ்வொரு விரலும் முத்தம் மிட்ட படியே அவன் கூற அவளுக்கு தான் அய்யோ என்றானது.இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்தவள் அவனது இடைகளில் கிச்சுகி்ச்சு மூட்ட அதில் துள்ளி அவனது பிடி தளர இவள் வேகமாக குளியல் அறைக்கு சென்றிருந்தாள்.
“ஓய்…வெளில வாடி உனக்கு இருக்கு…”என்று குறும்பாக கூற அவளோ உள்ளிருந்தே,
“இதோ பாருங்க நாம இப்ப கோவிலுக்கு போகனும் முதல்ல எந்திரிச்சு குளிக்க போங்க…”என்றாள்.
“என்னடி அதிகாரம் தூள் பறக்குது கொன்னுடுவேன் பார்த்துக்க…”என்று இவன் கூற,
“போய்யா…அப்புறம் நான் கொச்சுக்கிட்டு பாட்டி ரூமுக்கு போயிடுவேன் பார்த்துக்க…”என்று இவள் பெரிதாக பயமுறுத்த அதற்கு சத்தமாக சிரித்தவன்,
“பாட்டி உன்ன உள்ள விட்டாதான…அதுவே உன் ஜடையை புடிச்சு இழுத்து இங்க வந்து விட்டுட்டு போகும்…”என்று இவனும் அவளிடம் வம்பு வளர்க்க.ஒருகட்டத்தில் இவள் தான் கெஞ்ச வேண்டியதாயிற்று.
“ப்ளீஸ்…ப்ளீஸ்…எனக்காக இன்னக்கி கோவிலுக்கு போறோம் இல்ல…ப்ளீஸ்…”என்று இவள் கெஞ்ச வேந்தனோ,
“சரி சரி போனாபோகுதுனு விடுறேன்….ஆனா ஒரு கண்டீஷன்…”
“என்ன சொல்லுங்க…”
“நான எப்ப ரூமுக்குள்ள வந்தாலும் நீயே உள்ள வந்து ஒரு முத்தம் கொடுக்கனும் சரினு சொல்லு போறேன்…”
“அய்யோ அப்ப பகல்ல நீங்க வந்தா கூடவா…”என்று அவள் வாய்பிளக்க,
“ஓய் நான் எப்ப வேணா வருவேன் உனக்கு என்ன…சீக்கிரம் சொல்லு கோவிலுக்கு வேற போகனும்…”என்று வெளியில் நின்று இவன் கேட்க
“சரி சரி இப்ப போங்க…”என்று இவள் மழுப்ப பார்க்க அதைக் கண்டுகொண்டவன்,
“ஓய் என்கிட்டயே மழுப்ப பார்க்குறியா இரு உள்ள வரேன்…”என்று அவன் பாத்ரூம் கதவை உடைத்து தள்ள,
“அய்யோ வேணாம் நீங்க சொன்னதுக்கு ஒத்துக்கிறேன் ப்ளீஸ் போங்க…”என்று அவளிடம் சம்மதம் வாங்கியே வெளியில் சென்றான்.

Advertisement