Advertisement

அன்று,
அருள்வேந்தன் வெகு நாட்களுக்கு பிறகு வீடு வந்திருந்தான்.அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து இருந்தது.அதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி செல்லவே வந்திருந்தான்.மகன் வந்த சந்தோஷத்தில் அவனுக்கு பிடித்த அனைத்தும் சமைத்து அமர்கள படுத்தியிருந்தார் மஞ்சுளா.ராமலிங்கமோ,
“உன் மவன் வந்திருக்கானு எல்லா வேலையும் ஓரே நாள்ல செஞ்சிட்டு அப்புறம் முடியல படுத்துகுகாத மஞ்சு…நாளைக்கு வேற பக்கத்துவீட்டுல விசேஷம் இருக்கு…”என்று மனைவிக்கு எச்சரிக்கை விடுத்து சென்றார்.அவர் சொல்வது போல தான் மஞ்சு மகன் வந்தால் அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு இருநாட்களுக்கு முடியாமல் படுத்துவிடுவார்.அவருக்கு மகன் ஹாஸ்டல் சாப்பாடு எப்படி இருக்கிறதோ அதனால் வீடு வந்தால் அவன் செல்லும் வரை அவனுக்கு என்ன பிடிக்குமோ பார்த்து பார்த்து செய்வார்.வேந்தனும்,
“அம்மா…என்ன சொல்லு உன் சமையல யாரும் அடிச்சிக்க முடியாது…ஹாஸ்டல்ல உப்பு சப்பு இல்லாம அந்த சாப்பாடு சாப்பிடவே பிடிக்கல…”என்று கூறிவிட்டு உணவை ஓருவெட்டு வெட்டுவான்.அதை காணும் போது மஞ்சுவுக்கு தான் மனது வலிக்கும் மகன் சாப்பாட்டுக்கு கஷ்ட படுகிறானோ என்று அதனால் வீடு வந்தால் அவன் கேட்கும் முன் அனைத்தும் அவன் கண்முன் இருக்கும்.அவன் வயிறு நிறைய உண்வதைக் கண்டு தன் மனது நிறையும் அந்த தாய்க்கு.
“ஐய்யா…லிங்கு அவ ஏதோ அவ புள்ளைக்கு செய்யுறா…நீ போ…”என்றார் வள்ளியம்மை.அருள்வேந்தனோ தன் நண்பர்களை காண தயாராகி வந்தவன்,
“அம்மா…நான் என் பிரண்ட்ஸ பார்த்துட்டு வரேன்…”என்று கிளம்ப ராமலிங்கம்,
“தம்பி அப்படியே வரும் போது பூ,பழம் எல்லாம் கொஞ்சம் வாங்கிட்டு வாய்யா…”என்றார்.அவர் எதற்கு கூறுகிறார் என்று தெரிந்து பல்லைக் கடித்துக்கொண்டு,
“சரிப்பா…”என்றான்.மஞ்சுவோ,
“இருய்யா சாப்பிட்டு போவ…”என்றார்.
“சரிம்மா…”என்றவன் உண்ண அமர,அவனுக்கு உணவு பரிமாறியரினார்.அப்போது வள்ளி,
“ஏன் மஞ்சு நாளைக்கு எத்தனை மணிக்கு விசேஷம்…”என்றார்.
“காலைல பத்து மணினு சொன்னாங்க அத்த…”
“அவங்க நம்மல ஒரு மனுஷாலா கூட மதிக்கிறது இல்ல…அப்புறம் எதுக்கு போகனும்….இவ்வளவு செய்யனும்…இந்த அப்பாக்கிட்ட சொன்னா கேக்குறாரா…”என்று தந்தையை குறை கூறினான் வேந்தன்.
“சின்னவனே…அவங்க நம்மல மதிக்கிறாங்க இல்ல அது நமக்கு முக்கியம் இல்ல ஆனா நாம எப்போதும் போல இருப்போம் புரியுதா…”என்றுவிட்டு சென்றார் வள்ளி.வேந்தனும் சாப்பிட்டு வெளியில் வர பக்கத்து வீட்டு வாசலில்,
“போம்மா…என்னால முடியாது நான் பிரண்டு வீட்டுக்கு போறேன்…”என்று தன் அன்னையிடம் கத்திக் கொண்டிருந்தாள் அழகி.அந்த நீள நிறச்சுடி அவளுக்கு பொறுத்தமாக இருந்தது.இடை வரை நீண்டு இருந்த கூந்தலை அழகாக வரித்து விட்டு சிறிய கிளிப் போட்டிருந்தாள்.அவளை ஒரு நிமிடம் ரசித்த வேந்தன் அடுத்த நிமிடம் தன் தலையை உலுக்கி”ச்ச என்ன வேலை செய்யுறேன் நான் இது நமக்கு ஒத்துவராது வேந்தா…”என்று தனக்குள் கூறிக்கொண்டு சென்றுவிட்டான்.
அழகி வீட்டில் நாளை சாரதா,கதிரேசன் தம்பதியருக்கு இருபத்தய்ந்தாவது திருமண நாள்.அதனை கொண்டாட வீடு சிறிய விழா கோலம் பூண்டிருந்தது.அழகியை காலையில் இருந்து நாளை தினத்திற்கு புடவை அணியச் சொல்லி சாரதா கேட்க அவள் மறுத்துக்கொண்டிருந்தாள்.பின் இறுதியாக அவளது தந்தை,
“கட்டிக்க பாப்பா எனக்காக…”என்று கேட்கவும் மனமிறங்கி வந்தாள் மகள்.மாலையில் வந்தார் கேசவன் சாரதாவின் அண்ணன்.
“என்னம்மா எப்படி இருக்க…”என்று தங்கையிடம் கேட்க அவரோ,
“ம்ம் இருக்கேன்…”என்றார் சுரத்தையில்லாமல்.
“என்னம்மா…ஏன் ஒருமாதிரி பேசுற…என்ன ஆச்சு…”என்று இவர் கேட்க அதற்கு சாரதா பதில் சொல்லும் முன் அங்கு வந்த கலையரசன் சாரதாவிடம்,
“அம்மா நான வெளில போறேன் வர நேரமாகும்…”என்று சென்றான்.அவனது முகமும் கடுகடுவென இருக்க கேசவன் சாரதாவிடம்,
“என்னம்மா இவனும் எனவோ போல போறான்…என்ன ஏதாவது பிரச்சனையா…”என்றார்.
“என்னத்த சொல்லண்ணே எல்லாம் அந்த பக்கத்து வீட்டு குரங்கு பய இருக்கான அவனால வரது…அவனுக்கு வேலை கிடைச்சுடுச்சாம் அத இவர்கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டு போனான்…அப்போதுலெந்து இந்த மனுஷன் அந்த பய புறானத்த பாடுறாரு…அவன மாதிரி உனக்கு ஏன்டா பொறுப்பு வரமாட்டேங்குது அப்படி,இப்படினு ஒரே அறுத்திட்டாரு….அவன மாதிரி என் புள்ள ஒண்ணும் பிச்சைக்காரன் கிடையாதுனு நான் சொன்னதுக்கு என்னையும் திட்டுறாரு…”என்றார் சாரதா.
“விடும்மா நமக்கு ஒரு நேரம் வராமாலா போயிடும் அப்ப பாத்துக்கலாம்…”என்றார் தங்கைக்கு ஆதரவாக.
“எனவோ அண்ணா நீ தான் சொல்லுர நமக்கு இன்னும் காலம் வர மாட்டேங்குதே…”என்றார் தளர்வாக.அவரும் பலவாறு முயன்றுவிட்டார் இந்த இரு குடும்பங்களையும் பிரிக்க ஆனால் முடியவில்லை.ஆனால் அவர்கள் ஆசைப்பட்டது நாளையே நடைபெறும் என்றும் அதற்கான வாய்ப்பை வேந்தனே உருவாகிகொடுப்பான் என்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்..
காலை எப்பொழுதும் எழுந்த வேந்தன் தன் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு கீழே வர அனைவரும் அழகி வீட்டிற்கு தயாராகி கொண்டிருந்தனர்.
“தம்பி நீயும் சீக்கிரம் கிளம்புப்பா…”என்று லிங்கம் கூற முதலில் மறுக்க நினைத்தவன் பின்,
“சரிப்பா…நீங்க போங்க நான் வரேன்…”என்றான்.அதன்படி மற்ற மூவரும் கிளம்பி சென்றனர்.வேந்தன் குளித்து தயராகி வந்தவன் அழகியின் வீட்டிற்கு வந்தான்.அவன் வந்த போது விழா தொடங்கி இருந்தது.வீட்டின் பின் பக்கம் சிறிய பந்தல் அமைத்து அதில்  சாரதாவும்,கதிரேசனும் வந்தவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.வேந்தன் கதிரேசன்,சாரதாவிடம் சென்று வாழ்த்து சொன்னான் அவனது வாழ்த்தை மகிழ்ச்சியோட கதிரேசன் ஏற்றார் என்றால் சாரதாவோ இவன் எல்லாம் வரலனு யார் அழுதா என்று நினைத்தவாரு ஏற்றார்.
வேந்தன் குடும்பத்துடன் ஒரு இருக்கையில் அமர்ந்தான் அப்போது அரக்கு நிற பட்டுத்தி தலையை தளரபின்னி பட்டாம்பூச்சி போல சிரகடித்தபடி இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த அழகியை கண்டவனுக்கு ஒரு நிமிடம் மூச்சடைத்தது.
“என்ன இது வெள்ளச்சி இன்னக்கி ரொம்ப அழகா தெரியுறா…”என்று நினைத்தவன் அவளிடம் இருந்து கஷ்டபட்டு கண்களை பிரித்து வேறு புறம் திருப்பினான்.ஆனால் அவனை பழிவாங்கவே அழகி அவன் இருக்கும் பக்கமாகவே வந்து சென்று கொண்டிருந்தாள்.அவள் இங்கும் அங்கும் செல்லும் போது அவளது புடவை விலகி அவளது வெண்ணிற இடுப்பு பகுதி தெரிய அது வேந்தனை மிகவும் இம்சித்தது.ஒருகட்டத்திற்கு மேல் அவனால் அமர முடியவில்லை இவ ஒருத்தி சும்மா என் முன்னாடியே சுத்தி உயிர வாங்குறா என்று அழகியை திட்டிக்கொண்டவன் தன் தாயிடம் சொல்லி கிளம்பிவிட்டான் வீட்டுக்கு.
வீட்டிற்கு வந்தவன் நினைவுகள் எல்லாம் அழகியே ஆக்கிரமித்தாள்.என்ன இது இவ மூஞ்சியே தெரியுது தப்புடா வேந்தா தேவையில்லாம நீயே ஏழரைக் கூட்டாத என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அவன் தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன் கண்களில் அப்போது தான் தன் தந்தை கதிரேசனுக்கு வாங்கி வைத்திருந்த பரிசு பொருள் கண்களில் விழ இத இங்க வச்சுட்டு போயிட்டாரா என்று நொந்தவாரே அதை எடுத்துக்கொண்டு அழகி வீட்டுக்கு சென்றான்.
வீட்டின் உள் இவன் செல்லும் போது அனைவரும் பின்கட்டில் இருந்தனர்.இவன் அவர்களை நோக்கி செல்ல எத்தனிக்க அப்போது பக்கவாட்டு அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்கவும் யாருக்கு என்ன என்று இவன் விரைய அங்கு ஒரு அறையில் இருந்து அந்த சத்தம் வந்தது.அனைவரும் பின்கட்டில் இருந்ததால் அவர்கள் யாருக்கும் கேட்கவில்லை.இவன் அந்த அறையை நெருங்கும் போது தான் அது ஒரு பெண்ணின் அலறல் என்று உணர்ந்தவன் வேகமாக அந்த அறையின் உள் நுழைந்தவன் அங்கு கண்ட காட்சியில் மூச்சடைத்து நின்றான்.
அழகிக்கு புடவை கட்டிக்கொண்டு வெகு நேரம் இருக்க முடியவில்லை அதனால் சாரதாவிடம் சொல்லிவிட்டு உடை மாற்ற வந்தாள்.அவள் உடை மாற்றிக்கொண்டிருக்கும் போது ஏதோ பூச்சி போல மேல விழவும் அதிர்ந்தவள் அலறி விட்டாள்.இவள் துள்ளி குதித்ததில் பூச்சி எக்குத்தப்பாக அவளது ஜாக்கேட்டின் உள்விழ இவளது அலறல் மேலும் அதிகமானது.இவள் புடவை பாதி அவிழ்ந்த நிலையில் கதவை யாரோ திறந்து வரவும் சாரதா தான் என்று எண்ணி,
“அம்மா…அம்மா…”என்று கத்த.உள்ளே வந்த வேந்தனுக்கு அவளது நிலையைக் கண்டு ஒருமாதிரி ஆகியது.அழகியோ கண்களை மூடியவாரே அவனைக் கட்டிக்கொள்ள வேந்தனுக்கு மூளை மறத்து போன நிலை.அதற்குள் அழகி ஒரு முரட்டு உடலின் மேல் சாய்ந்துள்ளோம் என்று உணர்ந்து கண்களை திறந்தவள் அங்கே வேந்தனைக் காணவும் தன்னை குனிந்து பார்த்தவள் கைகள் தானாக அவளது மார்புக்கு குறுக்கே சென்றது,
“ஏய் நீ நீ…வெளிய போ…”என்று பதட்டத்தில் கத்தினாள்.வேந்தனும் விலகி,
“சாரி…”என்று கேட்டு முடித்து திரும்பும் போது அங்கே அறை வயிலில் கதிரேசன் நின்றார்.எதையோ எடுக்க வந்தவர் மகளின் அலறில் உள்ளே வர அங்கே மகள் அலங்கோலமாகவும் வேந்தனை திட்டிக்கொண்டும் இருக்க
மனது ஏதெதோ தப்பு கணக்கு போட்டது வேகமாக உள்ளே வந்து வேந்தனின் சட்டையை பிடித்து இழுத்து வெளிவந்தவர்,
“என்னடா பண்ண என் பொண்ண…”என்றார்.அதற்குள் சாரதாவும் மகளை தேடி வர அங்கே அவள் அறைக்குள்ளே வர அவளோ அழுதுக் கொண்டு இருந்தாள்.அவளிடம் என்ன என்று விசாரிக்க நடந்ததை கூற அவருக்கு வேந்தனை அசிங்கப்படுத்த இந்த நிகழ்வு போதும் என்று நினைத்தாரே தவிர தன் மகளின் மானம் அதில் அடங்கியிருப்பதை அவர் அறியவில்லை.
சற்று நேரத்தில் வீடே போர்களம் போல மாறியது கதிரேசனோ வேந்தனை கன்னத்தில் மாற்றி அறைந்து,
“டேய் உன்ன என் புள்ளைய விட மேல நினைச்சேனேடா இப்படி பண்ணிட்டியே…படுபாவி…”என்று கத்த மொத்த உறவும் கூடிவிட்டது.
“நான் சொல்ரத கேளுங்க…”என்ற வேந்தனின் வார்த்தைகளை யாரும் காதில் வாங்கவில்லை.ராமலிங்கம் தன் மகனை அடிக்கவும் வேகமாக தடுக்க வர அவரை தள்ளியிருந்தான் கலையரசன்.அவன் தன் தாயின் மூலம் விசயம் தெரிந்து கொண்டவன் தன் மாமனுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டி அதன்படி வேந்தனை பழிவாங்க எண்ணினான்.அதில் தன் தங்கையை பயன்படுத்துகிறோமே என்ற எண்ணமே அவனுக்கு இல்லை அவனை பொருத்தவரை வேந்தனை ஏதாவது ஒருவிதத்தில் அவமதிக்க வேண்டும்.
அதற்கு சூழலும் அவனுக்கு சாதகமாக அமைய அவன் வேந்தனை அடிக்கும்முன் வேந்தன் அவனை எட்டி உதைத்திருந்தான்.தன் மகளின் அறையில் இருந்து வெளி வந்த சாரதா,
“டேய் படுபாவி முதல்ல என் பொண்ண கெடுக்க பார்த்த இப்ப என் புள்ளைய அடிச்சே கொல்லப்பார்கிறியா…இத தட்டிக்கேட்க யாரும் இல்லையா…”என்று வீடே அதிரும் படி ஒப்பாரி வைக்க மஞ்சுளாவும்,வள்ளியியும் ஏற்கனவே கதிரேசன் மற்றும் கலையரசன் செய்கையில் அதிர்ந்து இருந்தவர்கள் இப்போது சாரதா இவ்வாறு கூறவும் தங்கள் உலகமே இருண்டது போல நின்றனர்.வேந்தனோ சாரதா கூறியதைக் கேட்டு அதிர்ந்தவன்,
“இல்ல இவங்க பொய் சொல்லுராங்க…நான் சொல்ரத கொஞ்சம் கேளுங்க…நீங்க நினைக்கிற மாதிரி ஏதுவும் நடக்கல…வேணா அழகிய கூப்பிட்டு கேளுங்க…”என்றான் அனைவர் முன்னும்.அதில் சற்று அதிர்ந்த சாரதா,
“நீ பண்ண காரியத்தை வெளில வேற சொல்லி என் பொண்ண நோகடிக்க பார்கிறியா…என்னங்க நீங்களும் இப்படியே நிக்குரீங்க…அசிங்கப்பட்டது நம்ம பொண்ணு அய்யோ நான் என்ன செய்வேன்…”என்று புலம்ப கதிரேசன் வேந்தனை மேலும் அடிக்க வர அப்போது சரியாக உள்ளே வந்தார் வள்ளியம்மை.
அவரைக் கண்டவுடன் கையை கீழ் இறக்கிய கதிரேசன் கோபம் குறையாமல்,
“அம்மா…நீங்க இதுல வராதீங்க…”என்றார்.
“இருப்பா அடிவாங்குறது என் பேரன் அப்ப நான் வராம வேற யாரு வருவா…”என்றவர் வேந்தனிடம் திரும்பி,
“நீ என்ன நடந்ததுனு சொல்லு…”என்றார் அவரிடம் அனைத்தையும் சொன்னவன்,
“நீங்க அழகியை கூப்பிட்டு கேளுங்க…”என்றான்.
“சரிப்பா எனக்கு என் பேரன் மேல நம்பிக்கை இருக்கு…இந்தாப்பா கதிரேசா அழகியை வரச் சொல்லு…”என்றார் அதட்டலாக அவருக்கு பேரன் இப்படி ஒரு இழி செயலை செய்திருக்க மாட்டான் என்பது திண்ணம்.சாரதாவோ தடுத்து ஏதோ கூறவர,
“நீ ஏன் இவ்வளவு பயப்படுற நம்ம பொண்ணு வர சொல்லு…”என்றார் கதிரேசன்.ஆனால் இதை எல்லாம் மூலையில் அமைதியாக பார்த்த கேசவன் யாரும் அறியாதவாரு அழகியின் அறைக்கு சென்றவர்.அவளிடம்,
“இங்க பாரும்மா இப்ப யாரு என்ன கேட்டாலும் நீ வெறும் ஆமாம் மட்டும் சொல்லு வேற எதுவும் நீ பேசாத புரியுதா…”என்று கூறிக்கொண்டிருக்க உள்ளே வந்த சாரதாவும் மகளின் மனதில் விஷத்தை விதைத்தே அழைத்து சென்றார்.அவளுக்கு வெளியில் இவர்கள் என்ன சொன்னார்கள் என்றெ தெரியவில்லை.தன்னை வேந்தன் அவ்வாறு பார்த்துவிட்டான் என்ற அதிர்ச்சியில் இது வரை இருந்தவள் தன் தாய் மற்றும் மாமானின் பேச்சைக் கேட்டு அங்கு வர வள்ளி பேசும் முன் கேசவன்,
“நீ சொல்லும்மா…உங்க அம்மா சொன்னது எல்லாம் உண்மைனு…”என்றார்.அவரை தடுத்து வள்ளி பேசும் முன்,
“ஆமா எங்க அம்மா சொன்னது தான் நடந்தது…”என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.அவளுக்கு அனைவர் முன் நிக்கவே ஏதோ கூச்சமாக இருக்க அவள் தன் தாய் கூறியதை போல் சொல்லி செல்ல.பின் அனைத்தும் கேசவன்,சாரதா நினைத்தது போல அமைந்தது.வேந்தனையும் அவனது குடும்பத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவமானபடுத்தி அனுப்பினர்.வேந்தனோ அழகி ஏன் இப்படி சொன்னா என்ற எண்ணமே மற்ற எதையும் சிந்திக்கவிடவில்லை.
சிலரது மனதில் இருக்கும் வன்மம் என்னும் விஷம் பலபேர் வாழ்க்கையை நாசமாக்கும்.அது தான் நடந்தது வேந்தன்,அழகி விஷயத்தில்.சாரதா விதைத்த விஷம் வேந்தன் மற்றும் அவர்களது குடும்பத்தின் சந்தோஷத்தை அழித்து அவனது வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கியது.

Advertisement