Advertisement

அந்த தனியார் மருத்துவமனை வரவேற்பறையில் நடைபயின்று கொண்டிருந்தான் வேந்தன்.அவனது கண்கள் சிவந்து ஒருவித இறுக்கத்துடன் தான் இருந்தான்.அப்போது வந்த மருத்துவர் அவனிடம்,
“சின்ன காயம் தான் பயப்பட ஒண்ணுமில்ல…கொஞ்சம் அனிமிக்கா இருக்காங்க டிரிப்ஸ் பொட்டுருக்கேன்…ஒரு மூணு மணி நேரம் கழிச்சு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்…”என்றார்.அழகிக்கு தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.மருத்துவர் கூறிய அனைத்திர்கும் தலையாட்டல் மட்டுமே வேந்தனிடம் எந்தவித பதிலும் பேசவில்லை.மனதில் அழகி பேசிய வார்த்தைகளே சுழன்று கொண்டிருந்தன எவ்வளவு தைரியம் இருந்த அப்படி பேசியிருப்பா…இன்னக்கி காலையில எவ்வளவு ஆசையா பார்க்கபோனேன் இப்ப எங்க நிக்குறேன்…ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது…என்று தன்னையே நொந்துகொண்டவன் காலையில் நடந்த நிகழ்வை அசைப்போட்டான்.
அழகியிடம் வேலையிருப்பதாக கூறி கடைக்கு வந்த வேந்தனுக்கு அவளது கலங்கிய முகமே நியாபகத்திற்கு வர சிறிது நேரத்திற்கு மேல் தாக்கு பிடிக்காமல் கிளம்பிவிட்டான் வீட்டுக்கு.வீடு வந்தவன் வாசல் கதவு திறந்து கிடக்கவும் எப்படி திறந்து போட்டுவச்சுருக்கா என்று திட்டியவரே உள்ளே வர ஹால்,சமையலறை என்று அழகியை தேடியவன் தனது அறைக்கு செல்ல அங்கு அவளோ கட்டிலில் கவிழ்ந்து அழுதுக்கொண்டிருந்தாள்.தான் முகம் திருப்பியதால் அழுகிறாளோ என்று நினைத்தவன் வேகமாக அவளின் தோளை தொட திடுக்கிட்டு எழுந்தவள் அவனைக் கண்டு மேலும் அழுதாலே தவிர எதுவும் பேசவில்லை.
அழததில் அழகியின் கண்கள் சிவந்து முகம் வீங்கி இருந்தது.ச்ச நாம ஏதோ கோபத்துல செய்யபோய் அது இவள ரொம்ப பாதிச்சுடுச்சோ என்று நினைத்தவன் அவளிடம்,
“ஏய் சாரிடி….”என்ற படி அவளிடம் நெருங்க இவள் இரண்டடி பின் சென்றாள்.நேற்று அவன் நெருங்கும் போது கூட விலகாமல் முகம் சிவந்தவள் இன்று விலகவும் துணக்குற்றவன்.என்ன பிரச்சனை என்று கேட்கும் முன் அழகி,
“ஏன் என்னை கல்யாணம் பண்ணீங்க…உங்களுக்கு தான் என்ன பிடிக்காதுல…இப்ப கடமைக்காக என் கூட சிரிச்சி பேச வேண்டாம் போங்க போங்க…எனக்கு யாரும் இல்லை…”என்று அழகி வேந்தனை பேசவிடாமல் பேசிக்கொண்டே செல்ல
“ஏய்…”என்று கை ஓங்கி கத்தியிருந்தான் அருள்வேந்தன்.கண்கள் சிவந்து முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது அவனிடம்.அவனைக் கண்ட அழகிக்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது.கோபமும்,ஆத்திரமும் ஒரு மனிதனின் அறிவை செயலிழக்க வைக்கும் அது தான் அழகியின் விஷயத்திலும் நடந்தது.வேந்தன் அழகி எதற்கு இவ்வாறு பேசுகிறாள் என்ற கோபத்தில் கை ஓங்க அழகியோ அதற்கும் தப்பர்த்தம் கண்டுபிடித்தாள்,
“ஏன் நிறுத்திடீங்க அடிங்க…எனக்கு தான் யாரும் இல்லையே…”என்று மேலும் ஏதோ கூறும் முன் வேந்தன்,
“ஏய்ய்…என்னடி ரொம்ப பேசிக்கிட்டு இருக்க…உன்னை…”என்று நெருங்க இவள் தன்னை அடித்துவிடுவானோ என்ற பயத்தில் பின் செல்ல அவளது செய்கை வேந்தனின் கோபத்தை மேலும் தூண்டியது,
“ஏய் என்னை என்ன பொறுக்கினு நினைச்சியா…நேத்து கிட்ட வந்த போது உன் முகம் சிவந்துச்சு இப்ப எனவோ உன்னை கெடுக்க வந்தவன் போல பின்னாடி போற…என்ன தான் உன் பிரச்சனை…”என்று வேந்தன் கேட்டுக்கொண்டே நெருங்க அவளோ அவனது கோப பேச்சில் பயந்து நகர,அது வேந்தனின் மனதை மிகவும் பாதித்தது.ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவளது தோள்களை பற்றியவன்,
“என்னடி நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் நீ ரொம்ப ஓவரா போற…இப்ப சொல்லப் போறியா இல்லையா…சொல்லு…”என்று அவன் உலுக்க,ஏற்கனவே சரியான தூக்கமும்,உணவும் இல்லாமல் இருந்தவளுக்கு கை,கால்கள் நடுங்க மயக்கம் வருவது போல இறுக்க,வேந்தனை தன் இரு கைகளாலும் தள்ள அவள் தன்னை தவறாக புரிந்துள்ளாள் என்று நினைத்தவன் கோபம் தலைக்கேற அவளை உதரினான்.அவன் அவ்வாறு உதறுவான் என்று எதிர்பாராதவள் நிலை தடுமாறி அருகில் இருந்த டீப்பாயில் தலை மோதி மயங்கி சரிந்தாள்.
சஷன நேரத்தில் அனைத்தும் நடந்திருந்தது.வேந்தனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.அழகியின் நேற்றியிலிருந்து குருதி வெளியேற அவனுக்கு மூளை வேலை செய்ய மறுத்தது.அவள் மயங்கவும் அவளை தாங்கியவன்,
“ஏய் மதி…எந்திரிடி…ஏய்…”என்று அவளது கன்னங்களைத் தட்ட அவளுக்கோ நினைவு வருவதும்,போவதுமாக இருக்க அவளைக் கைகளில் ஏந்தியவாறே  வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்தவன் வேகமாக மருத்துவமனையை அடைந்திருந்தான்.
“சார்….”என்ற அழைப்பில் கண்விழித்தவன் தன் எதிரில் நர்ஸ் ஒருவர் நிற்கவும்,
“சொல்லுங்க…”என்றான்.
“உங்க வொய்ப் கண் முழிச்சிட்டாங்க நீங்க போய் பார்க்கலாம்…”என்று கூறிவிட்டு செல்ல,மூச்சை இழுத்துவிட்டவன் அழகியின் அறைக்கு சென்றான்.வாடிய கொடி போல கிடந்தவளைக் காண காண வேந்தனுக்கு மனது வலித்தது.அவளிடம் சற்று பொறுமையாக பேசியிருக்க வேண்டுமோ என்று நினைத்தவன் மெல்ல அவளை நெருங்கினான்.
அழகியோ தலையில் உள்ள காயம் வலித்தாலும் கண்களால் கணவனை தேடியவள் அருகில் அவன் வரவும் சற்று ஆசுவாசமானாள்.அழகி அருகில் வந்தவன்,
“இப்ப எப்படி இருக்கு…சாரி ஏதோ கோபத்துல அப்படி நடந்துக்கிட்டேன்…”என்று மன்னிப்பை வேண்ட அழகிக்கு தான் என்னவோ போல் ஆனது.
“இல்ல என்மேலுயும் தப்பு இருக்கு…”என்று இறங்கிய குரலில் அவள் கூற சற்று நேரம் அமைதி இருவரிடமும்.அவளாக கூறப்போவதில்லை என்று உணர்ந்தவன் நேரிடையாக,
“உன்ன யாரு என்ன சொன்னா…”என்றான்.அவள் பதில் சொல்லாமல் தலை குனியவும்,
“இங்க பாரு அழகி…என்னு சொன்னாதான் எனக்கு தெரியும்…நீ உன்  மனசுல எதையோ வச்சுக்கிட்டு ஏதெதோ பேசுற…நான் எப்ப…”என்று ஏதோ சொல்லவந்தவன் நிறுத்தி,
“நீ சொல்லு என்ன பிரச்சனை…”என்றான்.அவனது குரல் உடைந்து இருப்பதை போல உணர்ந்தவள் நிமிர்ந்து அவனைக் காண அவளது பார்வை உணர்ந்தவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.அதற்கு மேல் முடியாமல் அன்று நடந்தது அனைத்தையும் கூற வேந்தனுக்கு அழகி மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது அவளது நிலையைக் கருத்தில் கொண்டு அடக்கியவன் அவளிடம் முடிந்தளவு பொறுமை இழுத்து பிடித்து,
“இங்க பாரு ஊர்ல உள்ளவங்க ஆயிரம் சொல்லுவாங்க அதெல்லாம் நாம காதுல போட்டுக்கக் கூடாது இத முதல்ல உன் மனசுல பதிய வை…அடுத்து எங்க அம்மா அப்படி பேசியிருக்காங்கனா ஏதாவது காரணம் இருக்கும்…இத நீ நேரிடையாவே அம்மாக் கிட்ட கேட்டு இருக்கலாம்ல…அதவிட்டு நீயாவே கற்பனை பண்ணிக்குவியா…”என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் நேரம் அவனது கைபேசி அழைத்தது எடுத்தவன் அப்பா தான் கூப்பிடுறாரு இருவரேன் என்று எழபோக அழகி அவசரமாக அவன் கைகளை பிடித்தாள் அவன் என்ன என்று கேட்கும் முன்,
“இங்க நடந்த எதுவும் சொல்ல வேண்டாம் எல்லாரும் பயப்படுவாங்க…”என்று அவள் கூற அவளையும் தனது கையையும் கூர்மையாக பார்த்தவன்,
“அவுங்க ஏன் பயப்படனும் அவுங்க தான் உனக்கு எந்தவித உறவுமில்லையே அப்புறம் ஏன் பயப்படுற போறாங்க…”என்று எள்ளலாக அவன் கேட்க அழகி பதில் கூறமுடியாமல் தலைகுனிந்தாள்.பின் அவளது நிலை உணர்ந்தவன்,
“ம்ம் சரி…ஆனா அவங்க நாளைக்கு நம்மல கோவிலுக்கு வர சொல்லிருக்காங்க இப்ப நீ இருக்குர நிலைமையில…”என்று அவன் யோசிக்கும் முன்,
“இல்ல அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்ல நாம போகலாம்…”என்றாள்.அவனும் சரி என்னும்விதமாக தலையாட்டிவிட்டு சென்றான்.
அடுத்த அரைமணிநேரத்தில் வீடு வந்திருந்தனர் வேந்தன்,அழகி தம்பதியினர்.அழகியை வீட்டில் விட்டவன்,
“எதுவும் செய்ய வேண்டாம் நான் வாங்கிட்டு வரேன்…கொஞ்சம் கடையில வேலையிருக்கு போய்யிட்டு அப்படியே சாப்பாடும் வாங்கிட்டு வந்துடுறேன்…”என்றவன்,
“நீ பாட்டுக்கு கதவ திறந்து போட்டுட்டு அழுவாத…கதவ மூடிக்கிட்டு அழுவு…புரியுதா…”என்று நக்கலாக கூற அதற்கு அழகி,
“சாரி…”என்றாள் இறங்கிய குரலில்,
“ம்ம்…ரொம்ப சீக்கிரமா சொல்லிட்ட…போ போய் ரெஸ்ட் எடு…”என்றுவிட்டு சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்த அழகிக்கு வேந்தன் மருத்துவமனையில் பேசியதே நினைவில் வர,
“ச்ச அவரு சொன்ன மாதிரி நான் அத்தைக்கிட்ட நேராவே கேட்டிருக்கனுமோ….அதவிட்டுட்டு இவர்கிட்ட சண்டை போட்டுட்டேன்…அப்ப அவர் ஏதோ சொல்ல வந்து நிறுத்திட்டாரே என்னவா இருக்கும்…”என்று யோசனை செய்தவரே அமர்ந்திருந்தாள்.
இரவு சொன்னது போல சாப்பாட்டு பொட்டலங்களுடன் வந்தவன் அவள் ஏதோ யோசனையில் அமர்ந்திருக்கவும்,
“இப்ப என்னத்த யோசிச்சிட்டு இருக்கானு தெரியலையே…இவள…”என்று மனதில் திட்டிய படியே அவள் முன் சொடுக்கிட அதில் கலைந்தவள்,
“எப்ப வந்தீங்க…சாரி ஏதோ யோசனை…”என்று அசடுவழிய,
“அதுதெரிது என்ன யோசனை…அடுத்து என்ன சண்டை போடலாம்னா…”என்றான் ஒருவித சலிப்போடு,
“இல்ல அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல…இனி யோசிக்கமாட்டேன்…”என்று அவள் சிறுபிள்ளை போல கூற,
“யோசி ஆனா மூளையோட யோசி…உன்ன ஏன் எல்லாரும் வெறும் அழகினும் கூப்பிடுறாங்கனு எனக்கு இப்ப தான் புரியுது…உனக்கு தான் மூளையே இல்லையே…”என்று கூற அவன் கோபமாக கூறுகிறானா என்று பார்த்தவள் அவன் எப்போதும் போல் இருக்கவும்,
“உங்களுக்கு என் மேல கோபமில்லையா….”என்றாள்.அவளையே ஊன்றி பார்த்தவன்,
“இருக்கு நிறைய இருக்கு ஆனா ஏதோ ஒண்ணு என்ன தடுக்குது…உன்கிட்ட இவ்வளவு இயல்பா நான் பேசுவேனு எனக்கே இப்ப தான் தெரியுது…இதே ஒரு மாசத்துக்கு முன்னாடி உன் மேல எனக்கு கோபம் தான் இருந்தது இப்ப அது இல்லனு சொல்லமாட்டேன் ஆனா உன் பார்த்ததுக்கு அப்புறம் அதுவும் அந்த மாதிரி ஒரு நிலையில பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு தெரியல சொல்ல தெரியல…என் மனசுல உன்ன அப்படி விட வேணாம்னு மட்டும் தோணுச்சு…”என்று நீண்ட விளக்கம் கொடுத்தவன் தளர்வாக அவளுக்கு எதிர் இருக்கையில் அமர.அழகிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை வேந்தனின் மனதை அறிந்த பிறகு மனதில் இருந்த பாரமெல்லாம் இறங்கியது போல உணர்ந்தவள் அவனைக் கண்டாள் அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்,
“ஏதாவது சொல்லனுமா என்கிட்ட…”என்று அவன் கேட்க,
“இல்ல அது அன்னக்கி நான்…”என்று பழைய விஷயத்தை அவள் ஆரம்பிக்கவும்,
“அழகி பழசை என்னால மறக்க முடியாது தான் ஆனா கடந்து போகலாம்…அதனால பழசை பத்தி என்கிட்ட பேசி என்னை மீண்டும் காயப்படுத்த ப்ளீஸ்…இன்னக்கி இது போதும் சாப்பிட வா…”என்றான்.அவனது குரல் ஏதோ போல இருந்தது அவனும் சோர்ந்து தெரியவே அவளும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் உண்டாள்.
இருவரும் உண்டுவிட்டு எந்திரிக்க அழகி பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வர வேந்தன் சோபாவில் படுத்திருந்தான்.அவனிடம் சென்றவள்,
“ம்ம்…எனங்க…”என்று அவள் அழைக்க,
“என்ன…”என்ற ஒற்றை வார்த்தையில் கேட்டவன் எழுந்து அமர,அழகிக்கு அவனிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் ஆனால் எவ்வாறு பேச என்று தயங்கியவள் அப்படியே நிற்க அவளது கைகளை பிடித்து இழுத்து தன் அருகில் அமரச்செய்தவன்,
“என்ன சொல்லு…என்கிட்ட இப்படி நீ எல்லாத்துக்கும் தயங்கினா எப்படி…முன்னாடி எப்படியோ ஆனா இப்ப நீ என்னோட பொண்டாட்டி புரியுதா…”என்றான் அவளுக்கு புரியவைக்கும் பொருட்டு.பின் அவளை பார்த்து,
“உன்னோட மடில படுத்துக்கவா தள்ளமாட்டியே…”என்று அவன் கேட்க அவளோ பதில் ஏதும் சொல்லாமல் அவன் படுக்க வாக அமர்ந்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்.அவளது செயலில் குறுநகை பூக்க அவளது மடியில் தலைசாய்ந்தான்.அவளையும் அறியாமல் அவளது கைகள் அவனது கேசத்தைக் கோதின.அவளது கைகள் தந்த இதத்தில் படுத்த சிலநிமடங்களிலே அவன் உறங்கிவிட அழகிக்குத் தான் தூக்கம் தூரப்போனது தூங்கும் அவனையே பார்த்தவள் இவனை ஏன் நாம் நல்லமுறையில் பார்க்கவில்லை என்ற எண்ணம் பிறந்தது.எவ்வளவு தூரம் காயப் பட்டிருப்பான் அன்று நினைத்தவளது நினைவுகள் அன்றைய நாளை அசைப்போட்டன.

Advertisement