Advertisement

தாலி பிரித்துக் கோர்க்கும் நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது.மதிய உணவு உண்டுவிட்டு அனைவரும் கலைய கடைசி பந்தியில் அருள்வேந்னும்,அழகியும் அமர்ந்தனர்.வேந்தன் வேண்டும் என்றே அழகியுடன் நெருங்கி அமர்ந்தான்.அவனது நெருக்கத்தில் அழகிக்கு மனது,உடலும் பதறத் துவங்கியது.அவளது கை வெளிப்படையாகவே நடுங்க அதைக் கண்ட வேந்தனோ,
“நெருங்கி உட்கார்ந்ததுக்கே இப்படி நடுங்கினா மத்ததெல்லாம்…”என்று குனிந்து விஷமமாக கூற.அழகிக்கோ தன் செம்மையுறும் முகத்தை மற்றவர் அறியா வண்ணம் மறைப்பது பெரிய பாடாகி போனது.அவளது முகச்செம்மையை ரசித்தவன்,
“சாப்பிடு…இப்ப ஒண்ணும் பண்ணமாட்டேன்…”என்றான் நல்லபிள்ளையாக.அவனை முறைக்க முயன்று அவள் தோற்றுக்கொண்டிருக்க,அதை மேலும் ரசித்தவன்,
“சும்மா என்னயே பார்க்காதடி அப்புறம் ஏதாவது தப்பு நடந்தா நான் பொறுப்பில்ல…”என்று அதற்கும் அவன் ஏடாகூடமாக பேச அதற்கு பிறகு அழகி நிமிர்வாளா என்ன.இருவரும் சாப்பிட்டுவிட்டு வர ஒரு உறவினர் வேந்தனிடம் பேச இவள் மஞ்சுளாவை காண சென்றுவிட்டாள்.வேந்தன் உறவினர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாலும் மனது என்னவோ அழகியிடமே இருந்தது.எப்படியும் தங்களுக்கு இன்று முதல் இரவு ஏற்பாடு செய்திருப்பார்கள் என்ற நினைப்பில் வேந்தன் இருந்தான்.ஆனால் வள்ளி அவனது நினைப்பில் மண்ணை போடுவார் அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.தன் கடையில் இருந்து அழைப்பு வரவும் மஞ்சுவிடம்,
“அம்மா…எனக்கு கடையில கொஞ்சம் வேலையிருக்கு போயிட்டு வரேன்…”என்று கூறினாலும் கண்கள் அழகியை தேடின.எங்க போயிட்டா இவ என்று இவன் நிற்க மஞ்சுவோ,
“சரிப்பா போயிட்டு சீக்கிரம் வந்துடு…”என்று அவர் கூற வேந்தன் தாயிடம் சில விசயம் அறியும் பொருட்டு,
“ஏன் ம்மா…ஏன் சீக்கிரம் வரனும்…”என்று அவன் கேட்க அதற்கு மஞ்சு பதில் கூறும் முன் அங்கு வந்த வள்ளி,
“ஏலெய் எல்லாமுமா சொல்லுவாங்க போவே போயிட்டு சீக்கிரம் வா…”என்றார்.ஆகாக இன்னக்கி நம்ம காட்டுல மழை தான்  என்று உல்லாச மனநிலையில் அவன் செல்ல வள்ளியம்மையோ,
“டேய் எங்க எல்லாரையும் சுத்தல்ல விட்டல இரு உன்ன நான் விடுறேன்…”என்று மனதில் கூறினார்.
மதியழகியோ வேந்தனின் அறையில் முடங்கி இருந்தாள்.அவளுக்கு மஞ்சு பேசியதே மனதில் சென்றது.வேந்தனுடன் உணவு உண்டுவிட்டு வந்தவள் மஞ்சுவை தேட அவர் பின்கட்டில் விசேஷத்திற்கு வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவரை நோக்கி சென்றாள்.அப்போது அவர்களில் ஒருவர்,
“என்ன மஞ்சு உன் மருமவ கல்யாணத்துக்கு முன்னாடி பத்துபாத்திரம் தேச்சாலேமே…நம்ம வேந்தனுக்கு என்ன குறை அவனுக்கு பொண்ணா இல்ல…இந்த மாதிரி ஒருத்திய கட்டிக்கிட்டான் நீங்களும் அவள தாங்கு தாங்குனு தாங்குரீங்க…ஏதுக்கும் நீ சூதானமா இரு மஞ்சு…உன் பிள்ளை இப்பவே இப்படி மயக்கி வச்சிருக்கா நாளைக்கே உன்ன வெளில துரத்தினாலும் துரத்திடுவா…”என்று மஞ்சுவின் மனதில் விஷத்தை விதைக்க.மற்றவர்களும் அதற்கு ஒத்து ஊதினர்.மஞ்சுவிற்கு உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டு தான் இருந்தது இருந்தாலும் இவர்கள் போன்றவர்களை திருத்த முடியாது என்று வள்ளி கூறியது நியாபகத்திற்கு வர,
“அப்படி நான் விட்டுவேனே…என் புள்ளைக்கு யார எங்க வைக்கனும்னு தெரியும்…”என்று கூறியவர் அங்கு நிற்காமல் சென்றுவிட்டார்.மஞ்சுளா அவர்களிடம் நம் மருமகளை பற்றி சொல்லி புரியவைக்க தேவையில்லை என்று நினைத்தவர் அவர்களுக்கு ஒத்தூவது போல பேசிவிட்டு  அங்கு இருந்தால் மேலும் அவர்கள் மேலும் ஏதாவது கேட்பார்கள் என்ற நோக்கத்தில் வேலை இருப்பதாக நழுவினார்.ஆனால் இவர்கள் பேச்சைக் கேட்ட மதியழிக்கு மனது வலிக்க அமைதியாக வேந்தனின் அறையில் முடங்கினாள்.விடியற் காலை எழுந்தது களைப்பாக இருக்கும் என்று வள்ளியியும் அவள் தூங்கட்டும் என்று விட்டுவிட்டார்.
மஞ்சுவின் பேச்சை தவறாக புரிந்து கொண்ட அழகிக்கு இவர்கள் அனைவரும் கடமைக்காக தன்னை ஏற்றுக்கொடண்னரோ என்ற எண்ணம் பிறந்தது.அந்த எண்ணமே இவ்வளவு நேரம் இருந்த அத்தனை மகிழ்ச்சியையும் அழித்தது.அவளது மனது ஒரு நிலையில்லாமல் தவித்தது.தன்னை யாரும் மனதால் ஏற்க்கொள்ளவில்லையோ வெறும் கடமைக்காக தான் பேசுகிறார்களோ என்று நினைத்தவள் மனதில் வள்ளியின் வார்த்தைகளும் சேர மேலும் துவண்டு போனாள்.இரவு உணவு உண்ண மஞ்சு அழைத்தபோது கூட மறுத்துவிட்டாள்.மஞ்சுளா அழகியின் முகத்தை பார்த்தவர் அவள் அழுது இருப்பது தெரியவும் பதறி,
“ஏன்மா அழுதுறுக்க என்ன ஆச்சு…”என்று கேட்க
“ஒண்ணுமில்லமா அம்மா,அப்பா நியாபகம் அதான்…”என்று அவள் மழுப்பிவிட்டாள்.மஞ்சுவும் இதுபோன்ற சமயங்களில் தாய்,தந்தை நினைவு வருவதுண்டு தான் என்று உணர்ந்தவர் அவளை மேலும் தொந்தரவு செய்யவில்லை. ராமலிங்கம் மாத்திரை போடுவதால் சீக்கிரம் உறங்கிவிடுவார்,இதில் இன்று மகனின் விசேஷத்தில் சற்று அதிகமாக வேலை செய்ததில் களைத்து போயிருந்தவர் உறங்கிவிட்டார்.வள்ளியம்மை காலையில் இருந்து பேரனின் விழாவில் வேலை செய்தவர் அன்று சற்று நேரத்துடனே படுத்துவிட அவருக்கும் அழகியின் நிலை தெரியவில்லை.
அருள்வேந்தனோ தன் கடையில் விரிவாக்கத்துக்காக டைல்ஸ் வந்திருப்பதாக போன் வர வந்தவன் அனைத்தையும் குடோனில் அடுக்கும் பணியில் இருந்தான்.என்னதான் வேலையில் கவனம் இருந்தாலும் அவ்வபோது நேரத்தையும் பார்த்துக்கொண்டவன் என்ன இன்னும் நம்மள கூப்பிடுல என்ற யோசனையும் வந்தது.ரொம்ப அலையுறனோ என்று நினைத்தவன் தலையை உலுக்கி தன்வேலையில் கவனம் செலுத்த காலையில் இரு கன்னங்களிலும் சந்தனம் பூசி தன்னைக் கண்டு வெட்கப்பட்ட அழகியின் முகமே கண் முன்னே வந்தது.
ஒரு கட்டத்தில் கடையில் இருக்க முடியாமல் மணியிடம் மற்ற வேலைகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வீடு வர வீடே அமைதியாக இருந்தது.என்ன இன்னக்கி இவ்வளவு அமைதியா இருக்கு என்று நினைத்தபடியே புல்லட்டை நிறுத்திவிட்டு வந்தான்.வீட்டின் உள்ளே வந்தவன் கண்கள் அழகியை தேட அவள் தான் அகப்படவில்லை.ஒருவேலை முன்னாடியே ரூமுக்கு போயிட்டாளோ என்று நினைத்தவன்,சமையல் அறையில் சத்தம் கேட்கவும் அங்கு சென்றான் மஞ்சுளா தான் சாப்பாடு பத்திரங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்தார்.
“சாரிம்மா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..அதுக்குல்ல வீடே அமைதியா இருக்கு கிழவியைக் கூட காணும்…”என்று விஷியம் அறியும் பொருட்டு.அவரோ,
“வாப்பா…கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்ல சுத்திப்போட தான் கூப்பிட்டேன்…ஆனா அழகி இன்னக்கி காலையிலே முழிச்சதால சீக்கிரம் படுத்துட்டா…பாட்டியும் உடம்பு அசதியா இருக்குனு படுத்துட்டாங்க…நீ சாப்பிடு வா…”என்று அவர் அழைக்க வேந்தனுக்கு தான் சொத்தென்று ஆனது,
“என்ன இது அப்ப இன்னக்கி ஒண்ணும்கிடையாதா…அடபாவிகளா இப்படி ஏமாத்திட்டீங்களே…இந்த கிழவி கூட இன்னக்கி சீக்கிரம் தூங்கிடிச்சு..இவளாவது நான் வர வரைக்கும் தூங்காம இருந்தரிக்கக்கூடாது…காலையில அப்படி பார்த்து வச்சா தத்தி தத்தி…”என்று அனைவரையும் வசைபாடியவன் சாப்பாட்டை மறுத்துவிட்டு மாடிக்கு சென்றவிட்டான்.
மாடிக்கு வந்தவன் நடைபயின்று கொண்டிருந்தான் மனதில் காலையில் அழகியுடன் செலவிட்ட நிமிடங்களே மனதில் வந்து அவனை நிலைகுலைய வைத்தன. ஒருவாறு கால்கள் அசந்த பின்னரே அவனுக்கு தூக்கம் வந்தது.
அடுத்த நாள் விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரயாக இருந்தது.அழகியோ காலையில் எப்பொழுதும் போல் எழுந்தவள் அனைத்து வேலைகளையும் செய்தாலும் முகத்தில் சிரிப்பில்லை.மஞ்சுவோ இன்னும் அவள் தாய்,தந்தை நினைவில் உள்ளாள் என்று நினைத்தவர் தான் மேலும் கேட்டு அவளை காயப்படுத்த விரும்பாதவராக அமைதிகாத்தார்.வள்ளியம்மை அழகியின் முகத்தை பார்த்தவர் ஏதோ தவறாக பட நேரிடையாகவே கேட்டார்.அதற்கு மஞ்சுவிடம் கூறிய காரணத்தையே அவள் அவரிடமும் கூற.அவள் எதையோ மறைக்க இந்த காரணத்தைக் கூறுகிறாள் என்று சரியாக ஊகித்தவர்.அவளை மேற்கொண்டு வற்புறுத்தவில்லை ஆனால் அவளது நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
தன் உடற்பயிற்சிகளை முடித்துக்கு கொண்டு கீழே வந்த வேந்தன் அழகியை தேட அவனது பார்வையை உணர்ந்த வள்ளி,
“ஏம்மா அழகி இங்க வா…”என்று அழைத்தார்.சமையல் அறையில் வேலையில் இருந்தவள் அழகி அழைக்கவும் வெளியில் வர அங்கு அவளையே விழுங்கும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் வேந்தனைக் கண்டு என்ன இப்படி பார்க்குறாரு என்று நினைத்தவள் அவனது பக்கம் திரும்பாமல் வள்ளியிடம் சென்றவள்,
“என்ன பாட்டி…”என்றாள்.அவள் தன்னை பார்க்காமல் வள்ளியிடம் செல்லவும் “இவள நினைச்சு நான் நைட்டெல்லாம் தூங்காம வந்தா இவ நம்மல கண்டுக்குறாளா பாரு…”என்று மனதில் திட்டியவன்,
“அம்மா…சாப்பாடு எடுத்துட்டு வாங்க…” என்றான்.மஞ்சுளா அவனுக்கு சாப்பாடு பரிமாரியவர் மற்ற வேலைகளை காண செல்ல வள்ளியோ அழகியை அவரது அறைக்கு அழைத்து சென்றுவிட்டார்.தன் மனதில் வள்ளியை பொருமிய படியே சாப்பிட்டு முடித்தவன் கடைக்கு செனறுவிட்டான்.
வள்ளிக்கு பேரனின் மனது புரிந்தாலும் அழகியின் முகத்தில் தெரிந்த சுனக்கம் அவரை யோசிக்க செய்தது.தன் அறையில் வைத்து அவரும் கேட்டுவிட்டார் ஆனால் அழகி அதே பாட்டை படிக்கவும் இவள் கூறப்போவதில்லை உணர்ந்தவர் என்ன இவள் மனதில் உள்ளது என்று யோசிக்க ஆரம்பித்தார்.அவள் முன்போல தன்னிடம் பேசவில்லை என்பதை உணர்ந்தவர் இந்த விழா முடிந்த அன்று கூட அழகி ஏதோ போல் உள்ளாள் என்று மஞ்சு கூறியது நியாபகத்திற்கு வர விசேஷத்திற்கு வந்தவர்கள் யாரோ ஏதோ கூறியிருக்கிறார்கள் என்று சரியாக ஊகித்தார். இவள் தங்களிடம் பகிரமாட்டாள் என்று நினைத்தவர் இதை கணவன்,மனைவி இருவரும் தீர்த்துக்கொள்ளட்டும் என்று முடிவுசெய்தார்.ராமலிங்கம்,மஞ்சுவை அழைத்த வள்ளி நாளைக்கு நாம மூன்று பேர் மட்டும் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதாக கூறினார்.அதற்கு மஞ்சு,
“அத்த அழகியும்,வேந்தனும் வரனுமே…”என்று கூற
“நாம முதல்ல போவோம்…இரண்டு நாள் கழிச்சு அவுங்க வரட்டும்…”என்றார்.அவர் ஏதோ திட்டமிட்டு தான் இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்த ராமலிங்கமும்,மஞ்சுவும் அமைதியாக தலையாட்டினர்.வள்ளி கூறியபடி அடுத்த நாள் காலை ராமலிங்கம்,மஞ்சுளா மற்றும் வள்ளியம்மை மூவரும் கிளம்பி சென்றனர்.அருள்வேந்தனோ அழகியின் மேல் சற்று கோபத்தில் இருந்தான் அதனால் அவர்கள் சென்றவுடன் அழகியிடம்,
“எனக்கு கடையில வேலை இருக்கு வரத்துக்கு நேரமாகும்…”என்று எங்கோ பார்த்துக்கொண்டு கூறிவிட்டு புல்லட்டை எடுக்க சென்றான்.ஏற்கனவே மனதில் குழப்பத்தில் இருந்தவளுக்கு வேந்தனின் இந்த பாராமுகம் வருத்தத்தை தர எதுவும் பேசாமல் தலையை உருட்டினாள். ஏதாவது சொல்லுராளா பாரு என்று அவளை வசைப்பாடியவன் புல்லட்டைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.அவன் சென்றபின் தன் அறைக்கு வந்தவள் கட்டிலில் விழுந்து மனதில் உள்ள அனைத்தும் கரையும் வரை அழுது தீர்த்தாள் அழகி எவ்வளவு நேரம் அப்படி அழுதிருப்பாள் என்று அவளுக்கே தெரியவில்லை தன் தோளை ஒரு வலிய கரம் விழவும் அதிர்ந்து எழுந்தவள் அங்கு தன்னையே துளைக்கும் பார்வை பார்த்துக்கொண்டு நின்ற அருள்வேந்தனைக் கண்டு அதிர்ந்துவிட்டாள்.

Advertisement