Advertisement

அருள்வேந்தனின் வீடு விழா கோலம் பூண்டு இருந்தது.இன்று மதியழகிக்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபோகம்.அதையே சிறிய விழா போல ஏற்பாடு செய்திருந்தார் ராமலிங்கம்.அவருக்கு மகனின் திருமணத்தில் ஏற்பட்ட குலர்படியால் மனதில் வருத்தம் இருந்தது.அதிலும் மகன் யார் பேச்சை கேட்காமல் அழகியை திருமணம் செய்ததில் அவருக்கு மகன் அழகியை பழிவாங்க தன் வாழ்க்கையை பாழாக்கிவிட்டானோ என்ற பயம்.அதற்கு ஏற்றார் போல தான் அவனது நடவடிக்கையும் இருந்தது.மனதளவில் சோர்ந்து தான் போனார் மனிதர் அவருக்கு மகனிடம் நேரிடையாக பேசவும் சங்கடமாக இருந்தது.வள்ளியம்மை தான் பார்த்துக்கொள்வதாக கூறினாலும் மகன் மனது வைத்தாலின்றி எதுவும் நடக்கபோவது இல்லை என்று அவருக்கு  தெரியும்.அதனால் வள்ளியம்மை இரு நாட்களுக்கு முன்பு தனக்கு போன் செய்து வேந்தனும்,அழகியும் சேர்ந்து வெளியில் சென்றுள்ளனர் என்று மகிழ்ந்து கூறும்போது கூட அவரால் மகிழ முடியவில்லை.மகன் கடமைக்கு அழைத்து சென்றுள்ளான் என்று தான் எண்ணினார்.அவரது நினைப்பை பொய் ஆக்கி அவரது மனதை குளிர்வித்தான் வேந்தன். இருநாட்களுக்கு முன்பு நடந்தை நினைவு கூர்ந்தார் ராமலிங்கம்.
இரு நாட்களுக்கு முன்பு கடையில் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து இருந்தார் ராமலிங்கம்.அவருக்கு காலையில் வள்ளி போன் செய்து கூறியதே சென்றுக் கொண்டிருந்தது.காலை பத்து மணி போல் கைபேசி அழைக்கவும் எடுத்தவர்,
“ஏலெய் லிங்கு…நான் சொல்லல எல்லாம் மாறும்னு…இன்னக்கி உன் புள்ளையும்,மருமவளும் சேர்ந்து வெளியில போயிருக்காங்க…”என்று குதுகலித்தார் வள்ளியம்மை.ராமலிங்கமோ,
“சரி ம்மா…”என்றார் குரலில் எந்தவித மகிழ்ச்சியும் இல்லாமல் அதைக் கண்டக்கொண்ட வள்ளி,
“ஏன்ய்யா ஒருமாதிரி பேசுற…”என்றார் கவலையாக.
“என்னத்தம்மா சொல்ல அவன் நமக்காக இதெல்லாம் செய்யுறானு தோணுது…”என்றார் மனதை மறையாமல்.வள்ளியோ,
“எல்லாம் உடனே மாறாது லிங்கு நாம தான் கொஞ்சம் கொஞ்சமா மாத்தனும்… நீ மனச தளரவிடாம இரு அதுவே போதும்…நான் இருக்கேன்ல நான் பார்த்துகுதன்…புரியுதா…”என்றார்.ராமலிங்கத்துக்கு மனது தெளியவில்லை என்றாலும் தன் தாயின் வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.அதனால்,
“சரிம்மா…நீ சொன்னா சரியா தான் இருக்கும்…”என்று கூறிவிட்டு வைத்தார்.
அவரது மனம் சமன்பட்டு இருந்தது தாயிடம் பேசிய பின்பு ஆனால் அது மதியம் வரை தான்.மதியம் மூன்று மணியளவில் மகனிடம் இருந்து போன் வரவும் ராமலிங்கத்துக்கு மனது பதற துவங்கியது ஏதாவது பிரச்சனையா என்று நினைத்தவர் பதட்டதுடனே போனை இயக்கி காதில் வைக்க மறுபக்கம் கூறிய செய்தியில் அவருக்கு மயக்கம் வரதா குறைதான்.இருமுறைக் கேட்டுவிட்டார் மகனிடம்,
“ஏன்ய்யா…நிசமா தான் சொல்லுதியா…”என்றார் நம்பமுடியாமல் அவனோ,
“ஆமா அப்பா நிஜமா தான் சொல்லுரேன் நீங்க நல்ல நாள் பாருங்க…”என்று கூறி வைத்துவிட்டான்.அவன் கூறியதை நம்ப முடியாமல்  அப்படியே அமர்ந்துவிட்டார்.கடையில் யாரோ வாடிக்கையாளர் அழைக்கவும் நிகழ்வுக்கு வந்தவர் அந்த வாடிக்கையாளிரிடம் பேசிவிட்டு தன் வீட்டுக்கு போன் செய்தார் வள்ளியம்மை எடுக்கவும்,
“அம்மா..உன் பேரன் போன் போட்டு தாலி பிரிச்சு கோர்க்க நல்ல நாள் பார்க்க சொல்லுரான்…எனக்கு நம்பவும் முடியல,நம்பாம இருக்கவும் முடியல…”என்றார் உணர்ச்சி மிகுதியில்.அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
வள்ளியம்மையோ,
“ம்ம் எதிர்பார்த்தேன்…”என்று நினைத்தவர் ராமலிங்கத்திடம்,
“சந்தோஷமான செய்தி தான் சொல்லிருக்க லிங்கு…நீ கடை வேலையெல்லாம் வேகமாக முடிச்சிட்டு வா…அதுக்குல்ல நானும் மஞ்சுவும் ஜோசியர பார்த்துட்டு வந்துடுறோம்…”என்று கூறி வைத்தார்.பின் வேலைகள் வேகமாக நடந்தன இதில் மஞ்சு வள்ளியிடம்,
“அத்த அப்படியே சாந்திமூகூர்த்ததுக்கும் நாள் குறிச்சிடுலாம்…”என்று கூற அதற்கு வள்ளி,
“அவசரபடாத மஞ்சு…நமலே செஞ்சா உன் புள்ள அதுக்கும் குதிப்பான்…அதுக்கு நான் வேற பிளான் வச்சிருக்கேன்…”என்றார்.
“என்ன பிளான் அத்த…”என்று மஞ்சு ஆர்வமாக கேட்கவும்,
“உன்கிட்ட இப்ப சொன்னா நீ ஏதாவது உலரிடுவ…நான் சமயம் வரும் போது சொல்லுதேன்…”என்றார்.அதற்கு மஞ்சு,
“என்னமோ போங்க அத்த இரண்டும் நல்லா இருந்தா சரி…”என்றார் கவலை தேய்ந்த குரலில்.
“எல்லாம் நல்லா தான் இருக்குங்க நீ போ…”என்று மஞ்சுவை அனுப்பிவிட்டு அடுத்து பேரனையும்,அழகியையும் சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.இந்த பயல வழிக்குக் கொண்டுவர எவ்வளவு மெனக்கட வேண்டியிருக்கு என்று தன் பேரனை மனதில் திட்டி தீர்த்தார் வள்ளி.
வள்ளிக் கூறியதுப் போல வீடு சீக்கிரம் வந்த ராமலிங்கத்திடம் இரு நாள் கழித்து நாள் நல்லா இருப்பதாக வள்ளி கூற இதோ சிறு விழா போல அமர்க்கள படுத்திவிட்டார் மனிதர்.மகன் தடுத்து ஏதோ கூறவர அவனை தடுத்தவர்,
“என் மன சந்தோஷத்துக்காக வேந்தா..தடுக்காத..”என்றுவிட்டார்.வேந்தனுக்கும் தந்தையின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கெடுக்க மனதில்லை அதனால் விட்டுவிட்டான்.வாசலில் சிறிய பந்தல் போல அமைத்து அதில் வரவர்கள் அமர்ந்திருக்க வரவர்களை வரவேற்த்துக்கொண்டிருந்தார் ராமலிங்கம்.முகம் கொள்ளா சிரிப்புடன் மனநிறைவுடன் வரவர்களை வரவேற்கும் தந்தையை பார்க்க வேந்தனுக்கே ஆச்சிரியமாக இருந்தது.என்னோட சின்ன மாற்றம் வீட்டில் உள்ளவர்களை இவ்வளவு மகிழ்ச்சியடைய செய்யுமா என்று நினைத்தவன் தன் தாய் மற்றும் பாட்டியைக் காண,அவர்களும் உள்ளார்ந்த மலர்ச்சியுடன் வந்தவர்களை கவனித்துக்கொண்டும் மற்ற ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டும் இருந்தனர்.யாரோ அவனை அழைக்க கலைந்தவன் மற்ற வேலைகளை காண சென்றான்.
அழகிக்கு ஏதுவும் புரியாத நிலை தன் கையில் உள்ள மருதானி,காலில் இருநாட்கள் முன்பு கணவன் வாங்கி தந்த கொலுசு முகத்தில் தெரிந்த மலர்ச்சி என்று தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டவளுக்கு பல நாட்களுக்கு பிறகு பழைய அழகியாக மிளிர்ந்தாள்.அப்போது உள்ளே வந்த வள்ளி,
“போதும் அழகு பாத்தது…போத்தா எல்லாரும் வந்துட்டாங்க சீக்கிரம் புடவை கட்டு…”என்றுவிட்டு போனார்.அவரை கண்டவளுக்கு அன்று கடைக்கு சென்று வந்த போது அவரது கிண்டல் எல்லாம் நியாபகம் வர முகம் தன்னையும் அறியாமல் செம்மையுற்றது.இருந்தும் மனதில் சிறு நெருடல் அன்று வள்ளி ஏன் அவ்வாறு கூறினார் என்று புரியாமல் தவித்தாள்.அதை வள்ளியிடம் கேட்டிருந்தால் பின்னால் வர போகும் நிகழ்வை தடுத்திருக்கலாம் ஆனால் கேட்காமல் விட்டது அவளின் தவறா இல்லை விதியின் செயலா என்று தெரியவில்லை.
வேந்தன் எடுத்துக்கொடுத்த அரக்கு நிற பட்டு புடவை,காதில் ஜிமிக்கி,கையில் பொன் வளையல் என்று தேவதை போல இருந்தாள் மதியழகி.அனைத்து அலங்காரமும் வேந்தனின் தூரத்து உறவு தங்கை ஒருவள் செய்திருக்க அவளே அழகியின் இடை வரை நீண்டு வளர்ந்திருந்த கூந்தலைக் கண்டு,
“அண்ணி…உங்க முடிக்கு நீங்க என்ன எண்ணெய் போடுறீங்க இவ்வளவு நீளமா இருக்கு…”என்று கேட்க அதற்கு அழகி அழகான சிரிப்பை பதிலாக தர எதையோ எடுக்க வந்த வேந்தன் கண்ணில் அழகியின் சிரித்த முகம் விழ ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டான்.பட்டு புடவையிலும்,தங்க அணிகலனும் அணிந்த தங்க தாரகை போல இருந்தவளைக் காண காண மனதிலும்,உடலிலும் பல வேதியில் மாற்றங்கள் நிகழ்ந்தன.இதில் அழகி அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டே தன் தலைக்கு பூ வைத்து முன்ம் பின்னும் அழகு பார்க்க அப்போது அவளது இடுப்பு பகுதி அவன் கண்ணில் விழ வேந்தனுக்கு தான் மூச்சடைத்தது,
“அய்யோ…என்ன இவ இன்னக்கி இவ்வளவு அழகா தெரியுறா… டேய் வேந்தா இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா உன்பாடு திண்டாட்டம் தான் முதல்ல கிளம்பு…”என்று மனதில் கூறிக்கொண்டாலும் கால்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தன,கண்களோ அவளை அஙகுலம் அங்குலமாக ரசித்துக்கொண்டிருந்தது.
“வேந்தா…”என்ற தந்தையின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன்.”டேய் வேந்தா இந்த விசேஷேம் முடியிற வர அவள பார்க்காத இல்ல உன் மானம் போயிடும்…”என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தந்தையிடம் சென்றான்.ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவனது சபதங்களை எல்லாம் அவள் உடைத்து எறிந்துவிடுவாள் என்று அறியாமல்.
சபையில் அமரவைக்கப்பட்டாள் அழகி வந்தவர்களே அழகியின் அழகில் சொக்கி தான் போனர் சிலர் வெளிப்படையாகவே,
“என்ன மஞ்சு உன் மருமவ இம்புட்டு அழகா இருக்கா…சுத்திப்போடு…”என்று மஞ்சுளாவிடம் கூற அவருக்கு பெருமை பிடிபடவில்லை.அவர்கள் கூறியது போல தான் ஜொலித்தாள் அழகி.வள்ளியம்மை,
“எம்புட்டு அழகா இருக்கா என் பேத்தி…”என்று கூறி திர்ஷிட்டி கழித்தார்.விழா துவங்க ஒவ்வொரு பெண்களாக அழகிக்கு சந்தனம் பூசி குங்குமம் வைத்துவிட்டு,
“சீக்கிரமே உன்ன போலவே ஒரு புள்ளைய பெத்துக்கொடு…”என்று வாழ்த்திவிட்டு செல்ல அவளது முகமும் குங்கும நிறம் கொண்டது.அனைவரும் முடிந்து வேந்தனை அழைக்க அவனோ,
“நான் எதுக்கு ம்மா…”என்றான்.
“டேய் தாலி பிரிச்சுக் கோர்த்தாச்சு வந்து நீ தான் அவளுக்கு மாட்டிவிடனும் வரியா இல்லையா…”என்று மிரட்டுவது போல கூற வேந்தனோ,
“என்னம்மா மிரட்டுரீங்க…”என்றான்.
“இனி அப்படித்தான் வா டா…”என்றுவிட்டு அவர் உள்ளே செல்ல இவன் தலையாட்டி உள் நுழைவதைவிட வேறு வழி இருக்கவில்லை.
மஞ்சுளாவின் பின்னே வந்த வேந்தன் அழகியைக் கண்டவுடன் அப்படியே நின்றுவிட்டான்.இரு கன்னங்களிலும் சந்தனம் நெற்றி நிறய குங்குமமும் அவளது முக சிவப்பை கண்டவனுக்கு அமிழ்திருந்த உணர்வுகள் எல்லாம் ஆட்டம் காட்ட தான் எடுத்த சபதம் அனைத்தையும் மறந்து அவளை ரசிக்கத் தொடங்கினான்.பேரன் உள் வந்ததிலிருந்து அவனையை நோட்டம்விட்டுக் கொண்டிருந்த வள்ளியம்மை அவன் அழகியை கண்டு நின்ற நிலையே கூறிவிட்டது,
“பய விழுந்துட்டான் போலவே…இனி நம்ம வேலை சுலபம்…”என்று கூறிக்கொண்டார்.சிறிது நேரம் பொறுத்தவர் அவன் அதே நிலையில் இருக்கவும் அவனின் அருகில் யாரும் அறியா வண்ணம் சென்று,
“டேய் பேரா…ரொம்ப சைட் அடிக்காத டா…எல்லாரும் உன்ன ரொம்ப நல்லவனு நம்புராங்க…போ போய் மாங்கல்யத்த மாட்டிவிடு…”என்று கூற அதுவரை இருந்த மாயவலை அறந்து வள்ளியை திரும்பி முறைத்துவிட்டு சென்றான்.
வேந்தன் அருகில் வர அழகிக்கு தான் கை,கால் நடுங்கியது.பட்டு வேட்டியில் கம்பீரமாக இருப்பவனை பார்த்தும் பார்க்காதது போல பார்த்துக்கொண்டு தலைகவிழ்ந்து கொண்டாள்.அவளது அருகில் வந்து குனிந்து இரு கன்னங்களிலும் சந்தனத்தை பூசுகிற சாக்கில் இரு கன்னங்களையும் நன்கு கிள்ளிவிட்டான்.அதில் எப்போதும் அவனை அடிக்க அவள் கை ஓங்கியவள் பின் அனைவரும் இருப்பதை உணர்ந்து இறக்கினாள்.அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் கண்களை பார்த்து கண் சிமிட்டிவிட்டு “போடி வெள்ளச்சி…”என்று வாயசைக்க அவனை முறைத்தவள் “போடா கருவாயா…”என்று வாயசைத்துவிட்டு பின் தன் உதடு கடித்தாள் அதில் மேலும் கிறங்கியவன் தன்னை உலுக்கி நிலைபடுத்திக்கொண்டு மாங்கல்யத்தை மாட்டிவிட்டு செல்ல.
“ஏன்பா இப்படி ஓடுற உன் பொண்டாட்டி ஏதாவது சொன்னாளா…”என்று ஒரு பாட்டி கிண்டல் செய்ய அனைவரும் கொள்ளென சிரித்தனர்.இதை எல்லாம் பார்த்த மஞ்சுவிற்கு மகனது முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் உள்ளம் பூரித்து போனது.ஆனால் ஒரு விழாவிற்கு வருபவர்கள் அனைவரும் ஒரே போல வாழ்த்த வருபவர்கள் கிடையாதே சிலர் பொறாமையில் வேகுபவர்கள்,சிலர் வந்த இடத்தில் தேவையில்லாதை பேசி அடுத்தவரை நோகடிக்க வேண்டும் என்றே வேலையாக இருப்பவர்கள் இவர்கள் போன்ற வம்பர் கூட்டம் பேசியதைக் கேட்ட அழகிக்கு தான் மனது ஒருநிலையில் இல்லை. சிலரின் வார்த்தைகள் அடுத்தவர்களை வாழ்வை செழுமையாக்கும் என்றால் சிலரின் வார்த்தைகளும் அதில் உள்ள சூட்சமும் அடுத்தவர் வாழ்வை சிதைக்கும். .இவர்களை நாம் ஒதுக்கவும் முடியாது ஆனால் கடந்து செல்லாம். இவர்களை போல் உள்ளவர்களை கடந்து வந்தவள் ஆனால் இன்று வேந்தனின் பார்வை பேச்சு என்று சந்தோஷ மனநிலையில் இருந்தவளுக்கு அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பது தான் நிஜம்.

Advertisement