Advertisement

தூரம் போகாதே வெண்ணிலவே…16
ஒரு புகழ்பெற்ற துணிக்கடையில் இருந்தனர் அருள்வேந்தனும்,அழகியும்.வள்ளி செய்த கலகத்தின் வெளிபாடு தான் இது.அழகிக்கோ வள்ளி ஏன் அவ்வாறு பேசினார் என்திபலேயே மனது உழன்றது.இவ்வளவு நாள் பாசத்திற்காக ஏங்கியவளுக்கு வள்ளி மற்றும் மஞ்சுளாவின் அரவணைப்பு கிடைக்கவும் மனது சற்று மகிழ்ந்து இருந்தது.ஆனால் இன்று வள்ளியின் பேச்சு அவள் மனதில் ஆறிய காயங்களை மீண்டும் கிழித்தது போல அமைந்தது.அதன் பின் எதுவும் செய்ய பிடிக்கவில்லை அதனால் வேந்தன் அழைத்ததுக்கு வர மறுத்தவளை கிட்டதட்ட இழுத்து வந்திருந்தான்.புடவை பிரிவில் இருந்தனர் இருவரும்.அழகி ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்ட வேந்தன்,
“ஓய் என்ன கனவு காணுறியா…புடவை பாரு..”என்று வேந்தன் கூறவும் தன்னிலை பெற்றவள்,
“ஆங்..சரி…”என்றுவிட்டு சில புடவைகளையும் அதன் விலையையும் பார்த்துவிட்டு,
“இதெல்லாம் விலை ஜாஸ்தியா இருக்கு…கொஞ்சம் விலை கம்மியா காட்டுங்க…”என்று அவள் அந்த கடை ஊழியரிடம் அவள் கூற அதைக் கேட்டுக்கொண்டிருந்த வேந்தனுக்கு கோபம் கட்டுக் கடங்காமல் வந்தது.இவ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா என்னை பத்தி என்று நினைத்தவன் அதுவரை அவள் பார்க்கட்டும்  என்று ஒதுங்கி நின்றவன் அவளது பேச்சில் அவளை நொந்துக் கொண்டு அவளது அருகில் வந்து,
“நீ சும்மா இரு…”என்று அவளிடம் கூறியவன் அந்த ஊழியரிடம் திரும்பி,
“நீங்க இதே ரேட்டுலே காட்டுங்க…”என்றான்.அதற்குள் அழகி,
“இல்ல…விலை கம்மிய காட்டுங்க…என் கிட்ட பணம் கம்மியா தான் இருக்கு…”என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.அவள் அண்ணாமலை கொடுத்த பணத்தை எடுத்து வந்திருந்தாள்.அவளுக்கு வள்ளியின் பேச்சிற்கு பிறகு யாரிடமும் எதற்கும் வேண்டி நிக்க பிடிக்கவில்லை.அவளது பேச்சில் கடுப்பான வேந்தன் அவளை  தன்னை நோக்கி திருப்பி,
“என்னடி திமிறா…கொன்னுடுவேன்…”என்று வார்த்தைகளை கடித்து துப்ப.அவளது கண்களில் நீர் படலம் அதைக் கண்டவன்,
“சும்மா எதுக்கு எடுத்தாலும் அழறது நிறுத்து…புரியுதா…”என்றான்.அதற்கு அவள் எந்தவித பதிலும் கூறாமல் அவனிடம் இருந்து விலகி நின்றுகொண்டாள்.இனி இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்தவன் தானே புடவைகளை தேர்வு செய்தான்.அவள் வேண்டாம் என்று மறுக்க அவளை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை வேந்தன்.ஒருகட்டத்தில் அவளுக்கு கோபம் வர,
“நீங்க வாங்கி கொடுத்தாலும் நான் கட்டமாட்டேன்…”என்று அவள் சிறு பிள்ளை போல கூற,அவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவன்,
“சரி கட்டிக்காத அதுவும் நல்லா தான் இருக்கும்…”என்றான் விஷமமாக.அவனது பதிலில் அழகிக்கு தான் பேச்சு நின்று  முகம் செம்மையுற்றது அவளை அறியாமல்.
அதை முயன்று மறைத்து அவனை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு முகம் திருப்பினாள்.அவளது செய்கையில் வேந்தன் முகத்திலும் இறுக்கம் தளர்ந்து முகம் மலர்ந்தது.வேந்தன் கோபமாக அழகியை கடைக்கு கூட்டி வந்தாலும் அவளுக்கு ஒவ்வொன்றும் பார்த்து தான் வாங்கினான்.வீட்டில் கட்ட சாதாரண புடவை எடுத்தவன் அடுத்து சில சுடிதார் செட்களையும் எடுத்துவிட்டு அடுத்து பட்டு பிரிவுக்கு அவன் நுழைய போக அவன் கையை பிடித்து இழுத்த அழகி,
“என்ன எடுத்துக்கிட்டே இருக்கீங்க…போதும் வாங்க போவோம்…”என்றாள் அவன் கையை இழுத்தப்படி.அவளுக்கு ஏற்கனவே அவன் தனக்கு நிறைய செலவு செய்துவிட்டான் என்ற நினைப்பு அதனால தடுக்க.அவனோ அவளை பார்த்துக்கொண்டு நின்றானே தவிர அந்த இடத்தை விட்டு நகரவில்லை,அவளோ அது புரியாமல் அவனது கைகளை பிடித்து இழுத்தவள் அவன் நகரவில்லை என்றதும் அவனை பார்க்க,அவனோ அவளையும் அவளது கையையும் பார்த்துக்கொண்டே இருக்க அப்போது தான் அவள் செய்த காரியம் புரிய அவன் கைகளை விட்டவள் தலை நிமிராமல்,
“வாங்க போலாம்…ப்ளீஸ்…”என்றாள்.அவள் கைகளை விட்டவுடன்,
“வா…”என்று அவள் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு பட்டுபிரிவுக்கு சென்றான்.
“அய்யோ…உள்ள இல்ல வெளில..”அவள் திமிற அவளை முறைத்தவன்,
“நீயா வந்தா கூட்டிட்டு போவேன் இல்ல..தூக்கிட்டு போவேன் என்ன சொல்லுர…”என்று அவள் கைகளை விடாமல் அவன் கேட்க.அவனது தோரணையே கூறியது அவன் செய்வான் என்று அதற்கு மேல் அவள் வாயே திறக்கவில்லை.பட்டுபிரிவில் புடவைகளை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அப்போது வேந்தன் கண்களில் முன்பு பார்த்த அரக்கு நிற புடவை விழ அதை எடுக்க சொல்லியவன் அதை அவள் மேல் வைத்து அழகு பார்க்க,அவனுக்கு அது சாதாரணமாக இருந்தாலும் அழகிக்கு தான் அவனது தொடுகை,அருகாமை எல்லாம் ஒருவித அவஸ்தையை தந்தது.அதன் தாக்கத்தில் அவள் நெலிய,
“ஏய் ஒழுங்கா நில்லு…”என்று அவன் அவள் தோள்களை பற்றி நிறுத்த அதற்கு மேல் அவளால் முடியாமல்,
“போதும் நல்லாதான் இருக்கு எடு…”என்றாள் ஒருவித எரிச்சலோடு.கோபத்தில் அவள் அவனை ஒருமையில் அழைத்தைக் கண்டவன் தனக்குள் சிரித்துக் கொண்டான் அவளிடம்,
“சரி இன்னும் இரண்டு புடவை பாரு…”என்று கூறிவிட்டு அவனது மொபைலை எடுத்துக் கொண்டு யாரிடமோ பேச சென்றான்.அவன் சென்ற பின்பு அழகி,
“என்ன இன்னும் இரண்டா…வேண்டாம்னு சொன்ன வேற ஏதாவது சொல்லுவான் அழகி…எதாவது எடுத்துடு..”என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.
இவள் இன்னும் இரண்டு புடவைகளை எடுத்துவிட்டு வேந்தனை தேட அவன் பில் பிரிவில் போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தவன் இவளைக் கண்டவுடன் கை அசைத்துக் கூப்பிட அவனிடம் சென்றாள் அவனோ போனில்,
“ஆமாம் அப்பா நிஜமா தான் சொல்லுறேன் நீங்க நல்ல நாள் பாருங்க…வைச்சுடுறேன்…”என்றுவிட்டு அவளிடம் திரும்பி,
“எடுத்துட்டியா…அங்க போய் உனக்கு தேவையானது எடுத்துட்டு வா…”என்று அவன் கூற
“என்ன கையில இருக்கிறது எல்லாத்தையும் கரைக்க போறீங்களா…நான் வரமாட்டேன் போங்க…நான் வீட்டுக்கு போறேன்…”என்று அவள் படபடவென்று பொரிந்துவிட்டு நகர முனைய அவளது கைகளை பற்றியவன்,
“சொன்னத செய்…”என்று கட்டளை போல அவன் கூற இவளோ,
“முடியாது,முடியாது…நீங்களே போங்க…”என்று அவள் சண்டை பிடிக்க,
“மதீ…”என்று கத்தியவன் அவளது தலையை திருப்பி தான் போக சொன்ன இடத்தை காட்டி,
“நீ போறியா…இல்ல..”என்று அவனை மேற்கொண்டு பேச விடாது,
“இல்ல இல்ல நானே போறேன்…”என்று கூறிவிட்டு வேகமாக சென்றாள் உள்ளாடைகள் பிரிவிற்கு.ஒருவழியாக துணி எடுத்துவிட்டு வண்டியில் ஏற வீடு செல்வோம் என்று அழகி நினைத்திருக்க ஆனால் அவர்கள் சென்றது நகை கடைக்கு கடை வாசலில் வண்டியை நிறுத்தியவன் அவளை இறங்க சொல்ல அவளோ,
“இங்க எதுக்கு…”என்று கேட்க,
“ம்ம்…எனக்கு தோடு, ஜிமிக்கி எல்லாம் வாங்க…”என்றான் சிரிக்காமல்.அவனது பதில் அழகி முறைக்க,
“இப்ப நீ வரியா இல்ல…”என்று முடிக்கும் முன் அவள் கடைக்குள் நுழைந்து இருந்தாள்.அங்கு அவளுக்கு ஏழு பவுனில் தாலி சரடு வாங்கியவன் காதில் சாதாரணமாக அணிய ஒரு தோடு,கைக்கு ஒரு ஜோடி வளையல் வாங்கி பில் போடும் போது அங்கு மாட்டியிருந்த ஜிமிக்கி கம்மல் அவனை கவர அதையும் வாங்க போக,
“அய்யோ…போதும்  வாங்களேன்..ஏன் என்னை இப்படி படுத்துறீங்க…”என்று அவள் புலம்ப.அவனோ அவளது புலம்பலை காதில் வாங்கவே இல்லை.அனைத்தையும் வாங்கிவிட்டு வீடு வரும் போது அழகி கேட்டே விட்டாள்,
“நீங்க மளிகை கடை மட்டும் தான நடத்துறீங்க…”என்று அவள் கேட்க
“ஆமா ஏன் கேட்குற…”என்றான்
“இல்ல ஒரே நாள்ல இவ்வளவு செலவு செய்றீங்க அதான் கேட்டேன்…”என்றாள்.அவளது பதிலில் சடன் பேரக் போட்டு வண்டியை நிறுத்தியவன்,
“ஏய்…ஏன் இப்படி கேட்குற..”என்றான் அவளை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே.அவனது கேள்வி கேட்கும் பாங்கைக் கண்டு நடுங்கியவள் ஒருவேலை அதிகமா பேசிட்டமோ என்று தயங்கி பின்,
“இல்ல இவ்வளவு வாங்கிட்டீங்களே…இதுக்கு செலவு நிறையா ஆய்யிடுச்சு…அதான்…”என்று அவள் இழுக்க அவள் தன்னை தவறாக நினைத்துவிட்டாளோ என்று நினைத்தவன் அவளது பதிலில் திருப்பதியுற்றவனாக,
“ஏய் அப்படி ஒன்னுமில்ல..நான் கடையோட வெளிநாட்டுக்கும் சில சாமான்கள் எல்லாம் நாம ஏற்றுமதி செய்யுறோம் அதுல வர லாபத்தை எப்போதும் நான் செலவு செய்யமாட்டேன் ரொம்ப அவசியம் இருந்தா மட்டும் தான் அத தான் இப்ப எடுத்தேன்…”என்று அவன் கூற அழகியோ,
“நீங்க எவ்வளவு நாள் கஷ்டபட்டு சம்பாரிச்சதோ…இன்னக்கி ஒரே நாள்ல…”என்று சொல்ல முடியாமல் அவள் தடுமாற அவளை வண்டியில் இருந்து இறங்க சொன்னவன் அவள் கைகளை பற்றி தன் முன்னே நிறுத்தியவன்,
“இங்க பாரு மதி…இது என்னோட உழைப்பு இத செலவு செய்ய எனக்கு உரிமை இருக்கு…நான் ஒன்னும் வெட்டியா செலவு செய்யல இது எல்லாம் அடிப்படை மற்றும் அத்தியாவசியமான செலவும் கூட…புரியுதா…”என்று அவளுக்கு விளக்க இவள் தலையை உருட்டினாள். அவள் தலையை செல்லமாக தட்டி,
“இப்ப மேடம்க்கு குழப்பம் தீந்துடுச்சா…போகலாமா…”என்றவன் வண்டியை எடுக்க இவள் பின்னால் ஏறி அமர்ந்தாள்.இந்த பயணம் இருவருக்குள் நெருக்கத்தை கொண்டு வந்ததை விட மனதில் உள்ள கசப்புகளை நீக்கியது.

Advertisement