Advertisement

அருள்வேந்தன் கடையை விரிவாக்கம் செய்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு அதில் சில பிரச்சனைகள் அதை பற்றி யோசிக்கவே நேரம் சரியாக இருந்தது.இதில் நேற்று வீட்டில் தாலி பிரித்துக்கோர்பதை பற்றி பேசிக்கொண்டிருக்க ஏற்கனவே கடை வேலைகள் சரிவர நடக்காததால் கோபத்தில் இருந்தவனுக்கு இந்த பேச்சு மேலும் கோபம் மூட்டியது அதனால் கத்திவிட்டான்.ஆனால் இப்போது தவறு செய்துவிட்டோமோ என்று மனது சொன்னது.எவ்வளவு சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தனர் இவன் வேண்டாம் என்று கூறியவுடன் அனைவரின் முகமும் தொங்கிவிட்டது.சற்று பொறுமையாக பேசியிருக்க வேண்டுமோ என்று இப்போது நினைத்தான்.
வள்ளியம்மையோ பேரனின் பேச்சில் கோபத்தில் இருந்தவர் இனி பேரனை அவன் போக்கில் விடுவதில்லை என்று மனதில் கூறிக்கொண்டவர் சில முடிவுகளை எடுத்தார்.அதன் முதல் கட்டமாக மதிய உணவை அழகியின் கையில் கொடுத்தனுப்பினார்.அழகி சாப்பாட்டுன் வெளியேறும் நேரம் அங்கு வந்த மஞ்சுளா,
“எங்கம்மா போற…”என்றார்.
“சாப்பாடு கொடுக்கக் கடைக்கு போறேன்…”என்றாள்.மஞ்சு கேள்விக் கேட்கவும் வள்ளி,
“நான் தான் கொடுத்தனுப்புறேன் மஞ்சு நீ போ…”என்றவர் தன் மருமகளுக்கு ஜாடைக் காண்பித்தார்.அதை புரிந்துக்கொண்டவர்,
“உன் புடவை..”என்று ஆரம்பிக்கும் நேரம் வள்ளி,
“நீ பேசிக்கிட்டே இருந்தா நேரம் ஆகுதுல…நீ கிளம்புமா…”என்றார்.சரி என்று கூறிவிட்டு சென்றாள் அழகி.
அவள் சென்றவுடன் மஞ்சு,
“அத்த அவ கட்டியிருக்குற புடவை நல்லா இல்லை…இதுக்கு தான் முன்னேடியே சொன்னேன் அவளுக்கு புடவை வாங்கலாம்னு நீங்க தான் வேண்டாம்னு சொன்னீங்க…இப்ப அவன் பார்த்தா திட்டுவான்…”என்று புலம்ப.வள்ளியோ,
“திட்டனும்னு தான அனுப்பியிருக்கேன்…”என்றார் கண்களில் குறும்பு மின்ன.
“என்ன அத்த சொல்ரீங்க எனக்கு ஒன்னும்புரியல…”என்றார் மஞ்சு.
“உனக்கு புரிய வேண்டாம் வா…”என்று கூறி அழைத்து சென்றார்.
ஆர்.வி சூப்பர் மார்க்கேட் என்ற பொன்னிற எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட பலகை அந்த முக்கிய சாலையில் கம்பீரமாக தெரிந்தது.அதை பார்த்துக்கொண்டே நின்றாள் அழகி சிறுவயதில் பார்த்தபோது சின்ன மளிகை கடையாக இருந்தது இப்போது நவீன சூப்பர் மார்கெட்டாக மாற்றியிருந்தான் வேந்தன்.கடையை நோட்டமிட்டுக்கொண்டே அவள் உள்ளே வர கடையில் வேலை செய்யும் அவளை பார்த்து,
“என்ன வேணும்…”என்றாள்.
“அது சாப்பாடு…”என்று அழகி திணர.அவளையும் அவள் உடையையும் கண்டு முகம் சூழித்தவரே,
“என்னது சாப்பாடு வேணுமா…இது என்ன சத்திரம்னு நினைச்சியா…”என்று அவள் வாய்க்கு வந்தபடி பேச.இதே பழைய அழகியாக இருந்தால் இந்த நேரம் அவள் கை பேசியிருக்கும் ஆனால் அவளது நிலையை நினைத்து கண்ணீர் வடிக்கவே முடிந்தது.
தனது அறையில் இருந்து அழகி வந்ததை சிசி கேமரா வழியாக பார்த்தவன் வெளியில் வந்திருக்க அங்கே தன் கடை ஊழியர் அவளிடம் பேசியதைக் கேட்டு,
“அவ சாப்பாடு கேட்கல…எனக்கு எடுத்திட்டு வந்திருக்கா…அவ என்னோட மனைவி…”என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக கூறினான் அருள்வேந்தன்.அவனை அங்கு சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அவனது பதிலில் மேலும் நடுங்கி போனாள்,
“மன்னிச்சுடுங்க சார்…எனக்கு தெரியாது…”என்று வேந்தனிடம் மன்னிப்பை வேண்டியவள்.அழகியிடம் திரும்பி,
“சாரி மேடம்…”என்றாள்.அதற்கும் தலையாட்டல் மட்டுமே அழகியிடம் இருந்து.அருள்வேந்தனுக்கு அழகியைக் காண கோபமாக வந்தது இருந்தும் அனைவரும் தங்களை பார்க்கிறார்கள் என்று உணர்ந்தவன் அந்த பெண்ணை அனுப்பிவிட்டு.அழகியிடம் திரும்பி,
“வா…”என்று தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.
வேந்தனின் பின்னாள் கீ கொடுத்த பொம்மை போல சென்றாள் அழகி.அவனது அறைக்குள் வந்த அடுத்த நொடி கதவை தாழிட்டவன் அழகியின் கையை பிடித்து திருப்பி,
“ஏய் நீ எதுக்கு இங்க வந்த…வரவ ஒரு நல்ல புடவைக் கூட கட்டத்தெரியாது…”என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.அவளோ அவனது கைகளில் இருந்து தன் கையை உருவ முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள்.ஒருகட்டத்திற்கு மேல் வலி தாங்க முடியாமல் அவளது அழுகை கேவலாக மாற அவளது கலங்கிய முகத்தை காண முடியாமல் கையை விட்டான்.அவளுக்கு கை உடைந்துவிட்டதோ என்ற பயமே வந்திருந்தது.கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல வர அவன் முன் அழ பிடிக்காமல் முயன்று அடக்கியவள்,
“நான் சாப்பாடு கொண்டு வந்தேன்…”என்றாள் ஒருவாரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
“இத அந்த பொண்ணுக்கிட்ட சொல்ல முடியலயா…எரும எரும…என்னடி இது புடவை…”என்று அவளை நெருங்கி அவளது புடவையின் தலைப்பை பிடித்துக் கேட்க  இவள் இரண்டடி பின் சென்றாள்.அதில் மேலும் கோபமுற்றவன் அவளை மேலும் நெருங்க இவள் விலக என்று ஒரு கட்டத்தில் இவள் சுவற்றில் மோதி நின்றுவிட அவளை சுவற்றோடு சாய்த்து இரு கைகளையும் அரண் போல இருபுறம் வைத்து மேலும் நெருங்க,அவனது நெருக்கத்தில் அழகிக்கு மூச்சு முட்டியது அவன் மேல் இருந்து வந்த ஆணிற்கே உரிய வாசனையும் அவளை மேலும் தடுமாற செய்ய கண்கள் படபடக்க பார்த்துக்கொண்டு நின்றாலே தவிர அவனை தடுக்க முயலவில்லை.
அவளது முன் நெற்றியில் உள்ள முடிகளை ஒத்திக்கியவனின் கைகள் தன் போல் அவளது கன்னங்களை கிள்ள பட்டென்று அடித்திருந்தாள் அழகி.இது அவனது சிறு வயது பழக்கம். அழகி சிறிய பெண்ணாக இருக்கும் போது அவளை எங்கு பார்த்தாலும் கிள்ளி அவளிடம் அடிவாங்கி விட்டு தான் செல்வான்.இவ்வாறு ஒருமுறை அவன் அவளைக் கிள்ள அதைக் கண்ட சாரதா அவனை கண்டபடி திட்டியிருந்தார் அதன் பிறகு தான் அந்த பழக்கத்தை விட்டான்.அவளது அடியில் சுயத்திற்கு வந்தவன் தான் செய்ய இருந்த காரியத்தை நினைத்து வெட்கி பின்வாங்கினான்.அழகிக்கோ”அய்யோ பழைய நினைப்புல அடிச்சிட்டோமே…இப்ப இவரும் அடிப்பாரோ…”என்று பயந்துகொண்டு நின்றாள்.
வேந்தனோ”ச்ச…என்ன இது இவள பார்த்தாலே எல்லாம் தப்பு தப்பா நடக்குது…இனி இவ மூஞ்சிய பார்க்கவே கூடாது…என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவளிடம் தான் விட்ட விசாரணையை தொடர்ந்தான்,
“உன்ன யாரு அனுப்புனது…”என்றான்.
“பாட்டி…”
“ம்ம் நினைச்சேன்…ஏன்டி வர ஒரு நல்ல புடவை கட்டிட்டு வரலாம் இல்ல…”என்றான்.
“என் கிட்ட இது மாதிரி தான் இருக்கு…”என்றாள் அவள்.அவளை முறைத்தவன்,
“ஏன் உன் பாட்டியும்,உன் அத்தையும் உனக்கு ஒன்னும் வாங்கிதரல…”என்றான் கோபமாக.
“இல்லை…”என்று ஒற்றை வார்த்தையே பதிலாக வர கடுப்பானவன்,
“ஏன் மாகாராணி அவங்க கிட்ட கேட்டு வாங்கிக்க வேண்டியது தான…மத்ததெல்லாம் பேசறாங்க ஒரு புடவை வாங்கி தரமாட்டாங்கலாமா…”என்றான் காரமாக.அவள் மௌனமாக நிற்கவும்,
“சரி கிளம்பு…”என்று கூற.அவள் வேகமாக,
“சரி…”என்றுவிட்ட தப்பித்தால் போதுமென வெளியேற எத்தனிக்க,
“ஏய் இரு…”என்றவன்.அவனது வண்டி சாவியை எடுக்கவும்.இவள் அவசரமாக
“வேண்டாம் நானே…”என்று முடிக்கும் முன் அவனது முறைப்பில் தானாக வாய் மூடினாள்.அவனுடன் வண்டியில் எப்படி செல்வது என்று அவள் தயங்க அவளது தயக்கத்தை உணர்ந்தவன்,
“உன்ன ஒன்னும் பண்ணிடமாட்டேன் வா…”என்று பல்லைக் கடித்து கூற அழகி ஒன்றும் கூறமால் வண்டியில் ஏறினாள்.வண்டியில் செல்லும்போது தன் பாட்டியையும்,தன் தாயையும் வசைபாடியவன் நேராக வீட்டிற்கு சென்றான்.
வீட்டின் வாயிலுக்கும்,ஹாலுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தார் வள்ளியம்மை.அவரையே பார்த்துக்கொண்டிருந்த மஞ்சுளா,
“அத்த ஏன் இப்படி நடந்துக்கிட்டே இருக்கீங்க…”என்றார்.வள்ளியோ பதில் கூறாமல் என்ன இது இவ்வளவு நேரம் ஆகுது இன்னும் வரல என்று நினைத்தவர் தெருமுனையில் புல்லட் சத்தம் கேட்கவும் வேகமாக வந்து சோபாவில் அமர்ந்தவர்,
“மஞ்சு இப்ப நான் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போடு புரியுதா…”என்று ஒரு கண்டிப்புடன் கூறினார்.அவர் காரணம் இல்லாமல் கூறமாட்டார் என்று உணர்ந்த மஞ்சுவும் சரி என்றார்.வேந்தனோ வீட்டின்  முன் வண்டியை நிறுத்தியது தான் தெரியும் அழகி இறங்கி உள்ளே ஓடியிருந்தாள்.அவள் ஓடுவதைக் கண்டவன் இவள என்றபடியே உள்ள வர அங்கு வள்ளியும்,மஞ்சுவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.அழகிக்கு முன் உள் நுழைந்த வேந்தன்,
“ஏய் கிழவி…நீ தான இவள கடைக்கு அனுப்பின…உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை…”என்று பாட்டியைக் காய்ந்தவன்  மஞ்சுவிடம் திரும்பி,
“ஏன் ம்மா…எப்ப பார்த்தாலும் இவ உன் கூட தான இருக்கா…இவ புடவை எல்லாம் சாயம் போய் இருக்கு…இவளுக்கு புடவை எடுத்துக்கொடுத்தா என்ன…”என்றான்.
“ஏன்…”என்றார் வள்ளி வேந்தனை கூர்மையாக பார்த்தபடி.அவரது கேள்வியில் கடுப்பானவன் மேலும் பேசும் முன்,
“நாங்க ஏன் எடுத்து தரனும் கட்டிக்கிட்ட உனக்கே அவ மேல அக்கறை இல்ல…நாங்க மட்டும் அக்கறை படனுமா…உன் பொண்டாட்டிக்கு புடவை வேணும்னா நீ வாங்கி கொடு அதவிட்டுபுட்டு எங்க கிட்ட வந்து சண்டைக்கு நிக்குற…”என்றவர் மஞ்சுவிடம் திரும்பி,
“இந்தா மஞ்சு..அவன் பொண்டாட்டிக்கு அவன் எடுத்துக்கொடுக்குறான் கொடுக்காம போறான் நமக்கு என்ன…தாலி பிரிச்சு கோர்க்க வேணாம்னு சொல்லிட்டான்…அந்த பொண்ணு கழுத்துல ஒரு பொட்டு நகை கிடையாது…வரவ போறவ எல்லாம் அவள வேலைக்காரினு தான் நினைக்குறாங்க…அப்படியே நினைக்குட்டும் நமக்கு என்ன…சரி வா பின்னாடி தோட்டத்துல தேங்காய் பறிக்கச் சொன்னேன் போய் கணக்கு பார்போம்…”என்று அவர் வேந்தனுக்கு பேசும் வாய்பை தராமல் பேசிவிட்டு மஞ்சுளாவை அழைத்துச் சென்றார்.அருள்வேந்தனோ வள்ளியின் பேச்சில் பல்லைக்கடித்தான் என்றால்,அழகியோ வள்ளி கூறியதைக் கேட்டு கண்கள் கலங்க நின்றாள்.

Advertisement