Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய வீதியில் ஒரு காம்போன்டின் உள் இரு வீடுகள் பெயர் வானவில் இல்லம்.இரு வீடுகள் ஒன்று போல அமைப்பு இருக்கும்.தங்கள் நட்பின் எடுத்துக்காட்டாக கட்டினர் வேதாசலமும் அவரது நண்பர் மாணிக்கமும்.இருவரும் சிறுவயது முதல்லே நண்பர்கள் வேதாசலம் சிறிய மளிகை கடை வைத்திருந்தார்.மாணிக்கத்துக்கு சொந்தமாக நிலம் மேலும் சில பரம்பரை சொத்துகள் இருந்தன.
மாணிக்கம் வேதாசலத்தை விட சற்று வசதி தான் என்றாலும் எந்தவித வேறுபாடும் இன்றி பழகும் நல்ல மனிதர். தற்பொழுது வேதச்சலம் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே அங்கு வசிக்கின்றனர். பெரியவர்கள் இடத்தில் இருந்த ஒற்றுமை சிறியவர்களிடம் இல்லை போல மாணிக்கம் அவரது துனைவியும் இறந்த பின் நடந்த சில கசப்பான சம்பவங்களால் அவர்களது குடும்பத்தார் இந்த இடத்தை விற்று விட்டு சென்னை சென்றுவிட்டனர்.மாணிக்கம் இறந்து ஒருவருடத்திலேயே வேதாச்சலமும் மார்டைப்பால் இயற்க்கை எய்தினார்.
மதிய வேளை வேதாச்சலம் வீட்டில்,
தொலைக்காட்சியில் தான் தினமும் பார்க்கும் நாடகத்தை பார்த்துக்கொண்டு இருந்தார் வள்ளியம்மை.அவருக்கு வயது எழுபத் ஐந்து.ஆனால் இன்றும் இளமையுடன் இருப்பது போல் ஒரு தோற்றம்.அது அவரது அயராத உழைப்பின் பரிசு என்றும் கூறலாம்.தன் மாமியார் உடன் அன்றைய மதிய உணவை தயாரித்துக்கொண்டே தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தார் மஞ்சுளா.
“பார்த்தியா மஞ்சு…நான் சொல்ல அந்த மருமக தான் எல்லாம் செஞ்சது…எப்படி திமிர பேசுறா பாரு..திமிரு பிடிச்சவ…”என்று சீரியலை பார்த்துக்கொண்டு கூறினார் வள்ளி.
“ஆமா அத்த…இந்த கிரகம் புடிச்சவ தான் எல்லாம் பண்ணியிருக்கா…அவ ஆளையும் மூஞ்சியும் பாருங்க குரங்கு மாதிரி…”என்று அவரும் வள்ளிக்கு ஒத்து ஊதினார்.
“நீ ஒண்ணு நான் என்ன சொன்னாலும் அதுக்கு ஆமா சாமி போடு…எப்ப தான் திருந்த போறியோ…”என்று மருமகளுக்கு ஒரு கொட்டு வைத்தார் வள்ளி.அவரை பார்த்து அசடு வழிந்தார் மஞ்சுளா.அவர் கூறுவது போல தான் மஞ்சுவும் இருப்பார்.
“மாமியாருக்கும்,மருமகளுக்கும் வேற வேலையே இல்லையா…இந்த உருப்படாத நாடகத்தை பாத்து சண்டை போடுறது தான் வேலையா…”என்று திட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ராமலிங்கம்.
“வாடா… நாங்க இரண்டு பேரும் சண்டை போடுறத எப்ப பார்த்த நீ…”
“அது தான எப்ப பார்த்தீங்க…”என்று மஞ்சு கூறவும் அவரை முறைத்தார் ராமலிங்கம்.
“அவள முறைக்கிறத விட்டுபுட்டு நீ போன விஷயம் என்ன ஆச்சுனு சொல்லு லிங்கா….”என்றார் வள்ளி.
“என்னத்தமா சொல்ல…இந்த ஜோசியரும் அதையே தான் சொல்லுருராரு…”என்றார் கவலையாக.
“என்னங்க நீங்களே இப்படி இடிஞ்சி போன மாதிரி உக்கார்ந்தா…அவன் கிட்ட யார் பேசுறது…”என்று கவலையாக கேட்டார் மஞ்சுளா.
“நீ சும்மா இரு மஞ்சு…அவனே இப்ப தான் வந்திருக்கான்…போய் காபி போட்டு எடுத்துட்டு வா…”என்றவர் மகனிடம் திரும்பி,
“நீ கவலை படாத லிங்கு…நான் சின்னவன் கிட்ட பாத்து சூதனமா பேசிக்கிறேன்..”என்றார் வள்ளி.வெளியில் கூறினாலும் அவருக்கும் உள்ளுக்குள் உதரல் தான் பேரனிடம் எவ்வாறு கூறுவது என்று.கடவுளிடம் பல வேண்டுதல்களை வைத்துவிட்டு தன் பேரனின் வரவிற்காக காத்திருந்தார் வள்ளியம்மை. வேதச்சலம்,வள்ளியம்யின் ஒரே மகன் தான் ராமலிங்கம்.ராமலிங்கம் மிகவும் வெகுளி அதிர்ந்து கூட பேசாதவர்.அவருக்கும் சேர்த்து வைத்து பேசுவார் அவரது மனைவி மஞ்சுளா.தன் மாமியாரை தாய் போல எண்ணும் மருமகள்.அவர்களது ஒற்றை வாரிசு தான் அருள்வேந்தன்.சிறுவயதில் ஏற்பட்ட அவமானத்தால் சிரிப்பை துளைத்த கட்டிலம் காளை.அவனது ஓரே குறிக்கோள் தான் தலைகுனிந்த ஊரின் முன் தலை நிமிர வேண்டும்.அதற்கு என்று இரவு பகலாக உழைத்து முன்னேரி இருக்கிறான்.
நள்ளிரவு நேரம் தன் புல்லட்டை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் வேந்தன். ஆறடி உயரமும் முறுக்கேறிய புஜங்களும் கருமை நிறமும் அவனைக் கண்டால் ஒரு அடியாள் போல் இருப்பான்.அவனைக் கண்டலே அனைவரும் சற்று பயந்து தான் போவர்.அதற்கு ஏற்றார் போல தான் அவனது செயலும் இருக்கும்.கோபம் வந்தால் முதலில் கை தான் பேசும் பிறகு தான் வாய் பேசும்.கடின உழைப்பாளி தன் தந்தை வைத்திருந்த மளிகை கடை இப்போது உள்ளது போல சூப்பர் மார்க்கெட் ஆக்கியுள்ளான்.
வீட்டின் உள்ளே காலடி வைக்கும் நேரம் தொலைகாட்சியில்,
“வாத்தி கம்மிங் ஒத்து…
டோம்ப…
டோம்ப…
அண்ணா வந்தா ஆட்டம் பாம்மு…”என்று ஹை பிச்சில் பாட்டு ஒலிக்கவும் ஏற்கனவே கோபத்தில் வந்தவன் முகம் மேலும் இறுகியது.உள்ளே வள்ளியம்மையோ சோபாவில் அமர்ந்து பாடலுக்கு தகுந்தாற் போல கை,கால்களை அசைத்துக்கொண்டிருந்தார் அதைக் கண்டவன்,
“இந்த கிழவிய…”என்று பல்லைக் கடித்துக்கொண்டு வேகமாக சென்று டிவியை அணைத்தான்.
“வாத்தீ…வாத்தீ…”என்று வள்ளியம்மையின் குரல் வீடு எங்கும் எதிரொலிக்கவும் தூக்கத்தில் இருந்த மஞ்சுளாவும்,ராமலிங்கமும் பயந்து எழுந்து வந்தனர்.தன் குரல் மட்டும் கேட்கவும் கண்களை திறந்த வள்ளியமையின் முன் ருத்ரமூர்த்திய போல நின்றிருந்தான் வேந்தன்.
“ஆத்தி இவன் எப்ப வந்தானு தெரியலையே…இவ்வளவு நேரம் முழுச்சி இருந்ததுக்கே திட்டி தீர்ப்பான் இதுல டிவில பாட்டு கேட்டா….”என்று நினைத்தவர் திருதிருவென முழித்தார்.
அவனோ,
“என்ன இளமை திரும்புதோ…அத்தராத்திரில பாட்டு கேட்டு இருக்க…உன்னை…”என்று வார்த்தைகளை கடித்து துப்பியவன் மேலும் ஏதோ திட்டும் முன்,
“அய்யா சாமி லிங்கு பாத்தியா அய்யா….உன் புள்ள என்ன திட்டுறத….தூக்கம் வரலனு பாட்டு கேட்டது தப்பா…”என்றவர் தன் கணவர் படத்தின் முன்பு சென்று,
“பாத்தீங்கலா உங்க பேர புள்ளைய என்ன எப்படி திட்டுறானு…நீங்க பாட்டுக்கு என்ன தனியா விட்டுட்டு போய்யிட்டீங்க…எனக்குனு பேச யார் இருக்கா…”என்று தன் புடவை முந்தானையால் வராத கண்ணீரை வந்தது போல துடைத்தார்.
“நம்ம அம்மா என்ன இப்படி நடிக்குது…”என்று வாய் பிளந்து பார்த்திருந்தார் ராமலிங்கம்.மஞ்சுளா தான் எப்போதும் போல மாமியாருக்கு உதவ வந்தார்.
“ஏன்பா பாட்டியை திட்டுற அவங்களுக்கு தூக்கம் வரல அதான் கொஞ்சம் சவுண்ட அதிகமா வச்சுட்டாங்க…அதுக்குனு அவங்கள திட்டுவியா…அவுங்க வயசு என்ன உன் வயசு என்ன…இது தான் என் வளர்ப்பா…”என்று மஞ்சு தன் மனதில் உள்ளதை ஒப்பிக்கவும்.
“அய்யோ இவ ஒருத்தி காரியத்தையே கெடுத்துடுவா போலயே…ஏதாவது உளருதே இவ வேலையா போச்சு…வள்ளி ஏதாவது செஞ்சு இவ வாய அடை இல்ல அவ்வளவு தான்…”என்று எண்ணிய வள்ளியமை,
“அய்யோ மயக்கம் வருதே…எடி மஞ்சு செத்த தண்ணி கொண்டா…ஐயா லிங்கு அந்த பேன கொஞ்சம் வேகமா வைய்…:என்றார்.
“இருங்க அத்தை எடுத்துட்டு வரேன்…”என்று மஞ்சு செல்லவும்.லிங்கம் வள்ளியை கைத்தாங்களாக சோபாவில் உட்கார வைத்தவர் பேனின் வேகத்தை அதிக படுத்தினார்.அதை அனைத்தையும் ஏதோ நாடகம் பார்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் வேந்தன்.அவனுக்கு தெரியும் இது எல்லாம் நடிப்பு என்று இப்போது கோபமாக பேசினால் அதற்கும் பாட்டி வேறு ஏதாவது ஆர்ப்பாட்டம் செய்வார் என்று சரியாக ஊகித்தவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.ஏன் என்றால் அவனுக்கு கோபம் வந்தால் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது.
“என்ன இவன் அமைதியா இருக்கான்…இந்நேரம் கத்து கத்துனு கத்தனுமே…என்ன ஆச்சு இவனுக்கு…”என்று பேரனையே கவனித்த வள்ளியம்மை அவன் கண்களால் இன்னக்கி நீ என்ன செஞ்சாலும் நீ நினைக்கிறது நடக்காது வள்ளி என்று அவன் அவருக்கு சவால் விடுவது புரிந்தது.
“ஆகாக…பையன் சுதாரிச்சுட்டான் போலவே கூடாதே…ஏலே இந்த வள்ளியவே ஏய்ச்சுபுடலாம்னு பார்க்கிறியா விடமாட்டேன் இருடா….”என்று கருவியவர்.
“ஏன் ஐயா லிங்கு எனக்கு எனமோ பண்ணுதுய்யா…அய்யோ படபடனு வருதே…”என்று மயக்கம் வருவது போல நடிக்க.
“இந்தா ம்மா…ஓவரா நடிக்காத அவனுக்கு தெரிஞ்சுது நம்மல கொன்னுடுவான்…”என்று குனிந்து தாயிடம் கூறியரினார்.அதற்குள் சமையல் அறையில் இருந்து ஓடி வந்த மஞ்சு,
“அய்யோ அத்த என்ன பண்ணுது உங்களுக்கு…வேந்தா…சீக்கிரம் போய் ஆட்டோ கூப்பிடு பாட்டியை ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய்டலாம்…”என்று கூறவும்,
“இவ ஒருத்தி மாமியாருக்கு மேல நடிச்சுக்கிட்டு…”என்று நினைத்த ராமலிங்கம்,
“போதும் நிப்பாட்டுறீங்களா உங்க நாடகத்தை…”என்று கத்தியிருந்தார்.எப்போதும் கோபப்படும் வேந்தன் கூட தன் தந்தையின் அதட்டலில் சற்று அதிர்ந்து தான் போனான்.ஏன் என்றால் ராமலிங்கம் யாரிடமும் சற்று என்று தன் கோபத்தைக் காட்டமாட்டார் இப்போது கத்தியேவிடவும் அவனுக்கு தந்தை ஏதோ அதிக மனததுளைச்சலில் உள்ளார் என்று புரிந்தது.
“அப்பா…”என்றவன் அவரை கைபிடித்து ஒரு சாரில் அமரவைத்தான்.பின் தன் தாயிடம் திரும்பி அந்த தண்ணிய இங்க கொடுங்க…என்றவன் தன தந்தையிடம் தந்து குடிங்க…”அவருக்கு வேர்க்க தொடங்கவும்,
“பிபி மாத்திரை போட்டீங்களா…”என்றான் அவர் இல்லை என தலையட்டவும்.தன்னே சென்று மாத்திரை எடுத்து வந்தவன் அவரை முழுங்க வைத்தான்.வள்ளிக்கும்,மஞ்சுக்குமே பயம் பிடித்துக்கொண்டது. தாங்கள் ஏதுவோ செய்ய போய் இது என்ன டா உண்மையில் தன் மகனுக்கு ஏதோ ஆகிவிட்டதே கடவுளே என் புள்ளைக்கு ஒண்ணும் ஆக கூடாது என்று வேண்ட ஆரம்பித்துவிட்டார்.
மாத்திரை முழுங்கியவுடன் தான் சற்று தேவலாம் போல் ஆனது ராமலிங்கத்துக்கு.அவரது நெஞ்சை நீவி விட்டவன்,
“கொஞ்சம் அப்படியே உட்காருங்க…”என்றவன் கைபிடித்துக்கொண்ட ராமலிங்கம்,
“எனக்கு ஒண்ணுமில்ல ஐயா…நான் நல்லா தான் இருக்கேன்…எனக்கு ஏதாவது ஆவரதுகுள்ள…”என்று அவர் முடிக்கும் முன் அவரது வாயை மூடினான் வேந்தன்.
“என்ன வார்த்த சொல்லிபுட்ட லிங்கு…உன்ன பெத்தவ நான் இருக்கும் போதே…அங்க பாரு அவள எப்படி இடிஞ்சு போயிட்டா…என்று மஞ்சுவை காண்பித்தார்…”
மஞ்சுளாவுக்கு இந்த குடும்பம் தான் எல்லாம் இன்று தன் கணவர் கூறியவார்த்தையில் திக்பிரம்மை பிடித்தது போல நின்றுவிட்டார்.
“ஏலே சின்னவனே இந்த குடும்பத்தோட சந்தோஷமே உன்கிட்ட தான்ய்யா இருக்கு…நீ ஏன் இப்படி இருக்க…இன்னும் என்ன என்ன பார்க்கனுமுனு எனக்கு இருக்கோ தெரியலையே…”என்று அழவே தொடங்கிவிட்டார்.
“ஏய் கிழவி அழுகையை நிப்பாட்டு…இப்ப என்ன நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கனும் அவ்வளவு தான…சரி சம்மதிக்கிறேன் போதுமா…”என்று கூறிவிட்டு விடு விடுவென தன் அறைக்கு சென்றுவிட்டான்.அவன் சென்றவுடன்,
“நீ என்ன விட நல்லாவே நடிக்கிற லிங்கு…”என்றார் வள்ளி.அதைக் கேட்டவுடன் மஞ்சுளா,
“அத்த அப்ப இவங்க செஞ்சதெல்லாம் நடிப்பா…நான் கூட பயந்து போய்யிட்டேன்…”என்றார் ஆசுவாசமாக.ராமலிங்கமோ இருவரையும் வெட்டவா,குத்தவா என்ற ரீதியில் முறைத்தார்.
“ஏடி போய் அந்த ஜோசியர் நம்பர எடுத்துட்டு வா…..” என்றார் வள்ளி.
“இப்பவா???”என்று கேட்ட மஞ்சுவிடம் காலையில் தான் பேசுவதாக கூறி அனுப்பினார்.மஞ்சு சென்றவுடன் தன் மகனிடம் திரும்பியவர்,
“இப்ப எப்படிய்யா இருக்கு…”புரியாமல் விழித்த ராமலிங்கத்தின் கைகளை பற்றி மஞ்சுவை காண்பித்தவர்,
“ஏற்கனவே பயந்தவ…இதுல உனக்கு ஏதாவதுனா ரொம்ப உடைஞ்சி போய்டுவா…நீ வெசன படாம இரு…அவன் தான் சம்மதிச்சுட்டான்ல…நான் பாத்துக்குத…”என்று கூறிவிட்டு மகனை  படுக்க செல்லுமாறு பணிந்தார்.
ராமலிங்கம் சென்றவுடன் தன் கணவர் வேதாச்சலம் படத்தின் முன் வந்தவர்,
“நீங்க என் கூட இருக்குற நினைப்புல தான் நான் இன்னும் இருக்கேன்…இந்த வீடு இழந்த சந்தோஷத்தை திரும்பி எப்படியாவது கொண்டு வரதுக்கு நீங்க தான் உதவனும்…”என்று வேண்டிவிட்டு படுக்க சென்றார்.
வேந்தனோ தன் நிலையை எண்ணி தூக்கம் இல்லாமல் தவித்தான்.ஒருகட்டத்தில் உறக்கம் வராமல் எழுந்து ஜன்னல் பக்கம் சென்றவன் கண்ணில் பட்டது பக்கத்து வீடு.அதை பார்த்தவுடன் உள் அமிழ்ந்திருந்த அனைத்து நினைவுகளும் மேல் எழுந்து பேய்யாட்டம் ஆடியது.ஏற்கனவே உறக்கம் துளைத்து சிவந்த விழிகள் மேலும் சிவந்தன.அவனது மனதின் ஏற்பட்ட ரணங்கள் அவனை மேலும் ஏதோ சுழலுக்கு கொண்டு செல்வது போல இருந்தது.

Advertisement