Advertisement

“சேச்சி… நம்முடே செறியவனு நல்லொரு ஆலோசன (அலயன்ஸ்) வந்துட்டுண்டு… வேண்டந்து பறயான் மனசு வந்தில்லா, அதானு ஓடி வந்தது…”

“நீ எத்தர ஆலோசன கொண்டு வந்தாலும் நின்டே மருமவன் சம்மதிக்கன்டே…” என்றார் ஷோபனா.

“ஹோ…! என்டே குட்ட மாமா, ஞான் எத்தர பிராவஸ்யம் பறயும்… நிங்கள் பெண்ணு நோக்கி கஷ்டப் படன்டா எந்து…”

“என்ட ஆதி மோனே, மாமன் பரயனது கேக்கு… இது நல்லோரு சம்பந்தம் ஆனு… பெண்ணின்டே அச்சனு சொந்தமாயிட்டு தேயில எஸ்டேட்டும், தேயில பாக்டரியும் ஒக்கே உண்டு… ஒரே மகள் சாதனா, MSC கம்ப்யூட்டர் சயின்ஸ் லாஸ்ட் வருஷம் படிக்குனு… மகள்டே படிப்பு முடிஞ்சதும் கல்யாணம், இப்ப அலயன்ஸ் நோக்குனுண்டு.. நம்முடே குடும்பம் அவருக்கு இஷ்டமாவாதே இரிக்கில்ல, என்டே மோள் காலேஜ் படிக்கன குட்டியாகிப் போயி, அல்லெங்கில் நின்னே ஞான் புறமே யாருக்கும் விட்டு கொடுக்கில்லா, நீ சம்மதிக்கு மோனே…” என்றார் அன்புடன்.

“மாமா, என்னை கம்பெல் செய்யண்டா… நான் கல்யாணம் கழிக்காதே சந்நியாசி ஆவானொந்தும் போனில்ல… எனிக்கு இஷ்டப்பட்ட குட்டியை நான் நிங்கடே முன்னில் கொண்டு வந்து நிறுத்தும், நிங்கள் கல்யாணம் கழிச்சு தந்தா மதி…”

“எந்தாடா, நீ யாரே எங்கிலும் கண்டு வச்சிட்டு உண்டோ…?”

“ஹூம், மாமன் சோதிக்குனு பரயு…” ஷோபனா மகனிடம் சொல்ல அவன் அன்னையை நோக்கிப் புன்னகைத்தான்.

“எனிக்கு குறச்சு சமயம் வேணம், பின்னே பரயாம்…”

“ஆஹா, எனக்கு சீக்கிரம் கல்யாணம் கழிச்சு தான்னு என்னை தொந்தரவு பண்ணிட்டு இப்ப மாமன் நல்ல இடத்து சம்மந்தம் கொண்டு வரும்போது வேண்டான்னு சொல்லுற, எனிக்கொந்தும் மனசிலாவுனில்லா…”

“என்டே ஷோபக் குட்டிக்கு ஞான் எல்லாம் பின்ன வந்து மனசிலாக்கித் தராம்… இப்ப இறங்கட்டே, சமயமாயி…”

“எடா மருமோனே, மாமனுக்கு இப்ப என்ன சொல்லுற…?”

“நீ வேணமெங்கில் அப்பெண்ணினே கெட்டிக்கோ மாமா…”

“அதுசரி…! ஞான் சம்மதிக்கும், நின்டே அம்மாயி சம்மதிக்குமோ…? கொஞ்சம் யோசிக்கலாம்ல…”

“யோசிக்கான் ஒண்ணும் இல்ல மாமா, என்டே மனசில் சில கார்யங்கள் தீர்மானிச்சு வச்சிருக்கேன், சமயம் வரும்போது உங்க எல்லாருக்கும் சொல்லறேன், இப்ப கிளம்பறேன்…”

சொன்னவன் ஹெல்மெட்டுடன் ஓடியே விட்டான்.

“எந்தா சேச்சி, மருமவன் இங்கனே பரயனது…?”

“ம்ம்… அவன் கிடக்கட்டே, நீ அப்பெண்ணின் ஜாதகம் வாங்கி வா, நமக்கு பணிக்கர்கிட்டே கொடுத்து நோக்காம்… ரெண்டு பேருக்கும் ஜாதகம் சேர்ந்தா சம்சாரிக்காம்…”

“சரி சேச்சி…” என்ற குட்ட மாமா அங்கே விளையாடும் குழந்தைகள் அருகே சென்றார்.

“எடா மக்களே…! ரெண்டு பேரும் எந்தா செய்யனது…?”

“ஞங்கள் களிக்குவானு குட்ட மாமா…”

“சேச்சி, வீட்டில் சக்கையும் (பலாப்பழம்), மாங்கயும் பறிச்சு பழுக்கான் வச்சிட்டுண்டு… பழுத்ததும் கொடுத்து விடாம்…”

“அச்சார்ன்னு குறச்சு கன்னி மாங்கா கிட்டுமோடா குட்டா…?”

(ஊறுகாய்க்கு கொஞ்சம் குட்டி மாங்காய் கிடைக்குமா…?)

“பறிச்சு கொடுத்து விடாம் சேச்சி… இந்த தடவை தேங்கா குறைஞ்சு போயி, எண்ணெய் எடுக்க காய வச்சிருக்கு, ஆட்டிட்டு அதும் கொடுத்து விடறேன்…”

“ம்ம்… நீ உள்ள வந்து உக்காரு, உச்ச ஊணு கழிச்சிட்டு போகாம்…” என்றார் தம்பியிடம்.

“அல்ல சேச்சி, கடையிலு பரஞ்சிட்டு வந்ததா… குறச்சு சாதனங்கள் மேடிக்கணம், பின்னே வராம்…”

“சரி, அடுத்த பிராவஸ்யம் ரமா, ஷீப மோளையும் கூட்டிட்டு வா…” என்றவர், “வசந்தே… நேத்து செய்த சக்கப் பழ உன்னியப்பம் பாத்திரத்தில் எடுத்திட்டு வந்து கொடுக்கு, என்ட ஷீப மோள்க்கும், குட்டனும், வளரே இஷ்டமானு…”

“சரி அம்மே…!” என்ற வசந்தா ஒரு தூக்குப் பாத்திரத்தில் பலாப்பழ உன்னியப்பம் கொண்டு வந்து கொடுத்தார்.

“ஆஹா…! சேச்சிக்கு சக்க கிட்டியோ…?”

“நம்மட சோமு கொண்டு வந்து தந்ததா… நல்ல தேன்வரிக்க சக்க, அதில் உன்னியப்பம் செய்துட்டோம்…”

“ம்ம்… சரி சேச்சி, நான் இறங்கட்டே…” அவர் கிளம்பினார். ஷோபனா தம்பி, மகனுக்கு சொன்ன சம்மந்தத்தைப் பற்றி யோசித்தபடியே குழந்தைகளுடன் உள்ளே சென்றார்.

அன்றும் அடுத்து நாட்களும் ஆத்ரேயன் யோகா சென்டருக்கு வரவே இல்லை. நியதிக்கு வகுப்புகள் எப்போதும் போல் சாதாரணமாய் கழிய வார விடுமுறை வந்தது.

காலையில் துவைத்து, வீட்டைத் துடைத்து, குளித்து வந்தவள் கொஞ்சமாய் அவளுக்கு மட்டும் ரவா உப்புமா செய்து கொண்டிருந்தாள். அடுத்த மாதம் அம்பிகை அம்மாவுக்குப் பிறந்தநாள் வருவதால் அவருக்கு ஒரு கேரளா சேலை பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தவள் ஜான்ஸியிடம் கேரளா சேலை எடுக்க உதவ முடியுமா என்று கேட்க, அவள் சந்தோஷமாய் உடன் வந்து தேர்வு செய்து கொடுக்க சம்மதித்தாள்.

காலை உணவை வீட்டில் முடித்துக் கொண்டு ஜான்ஸியுடன் சேலையும், தனக்கு சில இன்னர் அயிட்டங்களையும் வாங்கிக் கொண்டு மதியம் ஹோட்டலில் சாப்பிட்டு வரலாம் என்று நியதி சொல்ல, ஜான்ஸி அவள் வீட்டில் உணவருந்த வருமாறு அன்போடு அழைத்திருந்தாள்.

அவளிடம் சம்மதித்தவள், ஜான்ஸியின் இரண்டு வயதுக் குழந்தைக்கும் ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தபடி உப்புமாவைக் கிளறிக் கொண்டிருந்தாள். சார்ஜ் ஆகிக் கொண்டிருந்த அலைபேசி செல்லமாய் சிணுங்க, கிளறியது போதுமென்று அடுப்பை ஆப் செய்தவள் போனை எடுக்க புது எண்ணாக இருந்தது.

“யாரு நம்பர்…” யோசித்தபடி காதில் வைத்து ஹலோவினாள்.

“நி..யதிமா, எப்படி..டா இருக்க…?” போனில் ஒலித்த சாவித்திரியின் தளர்ந்த குரலைக் கேட்டதும் சட்டென்று அவள் முகம் மாற கண்ணீர் சுரப்பிகள் திறந்து கொண்டன.

“அ…அத்த… எப்படி இருக்கீங்க அத்த…? உடம்புக்கு இப்ப பரவால்லியா…? ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கா…?”

“ம்ம்… எ..ன்ன விடு கண்ணு, நீ எப்ப..டி இருக்க…?” மிகவும் சிரமப்பட்டு பேசினார் சாவித்திரி. இருந்தாலும் முன்பு குழறலாய் சுத்தமாய் புரியாமல் வந்த குரல் இப்போது நன்றாகவே மெச்சப்பட்டது போல் நியதிக்குத் தோன்றியது.

“அத்த… இருக்கேன் அத்த, நல்லாத்தான் இருக்கேன்… நீங்க அம்மாகிட்ட சொன்ன போல மூணார்ல யோகா டீச்சரா வேலைக்கு சேர்ந்துட்டேன்… புது இடமும், சூழ்நிலையும் நீங்க சொன்ன போல மனசுக்கு ஆறுதலா தான் இருக்கு, ஆனா எனக்கு உங்களைப் பார்க்கணும் போலருக்கு, அத்த…” என்றவளின் குரல் உடைந்து கண்களில் நீர் பொங்கியது.

“ம்ம்… நி..யதி…! அழாத கண்ணு… நம்ம வாழ்..கைல என்ன நடக்கும்னு இருக்கோ அதானே நடக்கும்… உனக்குன்னு கடவுள் கொடுத்த வாழ்க்கையை நீ வாழ தான் வேணும், உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…” அவர் திணறலாய் கஷ்டப்பட்டு பேச இவள் வருந்தினாள்.

“அத்த, பேச சிரமமா இருக்கா, இந்த மொபைல் நம்பர் யாரோடது…? உங்களோட பேசணும்னா இதுல கூப்பிடவா…?”

“வே..வேணாம் மா, நானே உன்னைக் கூப்பிடறேன்…”

“அத்த, உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்… இங்க நான் வேலை செய்யற யோகா சென்டர் ஒரு பெரிய ஆயுர்வேத ஹாஸ்பிடல் கூட சேர்ந்தது தான், நிறைய பேர் எங்கெல்லாமோ இருந்து ட்ரீட்மென்டுக்கு வராங்க, நானும் இங்கே ஸ்டாப்ங்கறதால உங்க சிகிச்சைக்கு கம்மியா தான் செலவாகும், உங்களுக்கு இங்கே சிகிச்சை பண்ணிப் பார்க்கலாமா அத்த…” என்றாள் கனிவுடன்.

“ம்ம்… இப்போதைக்கு இது போதும், அப்புறம் பார்க்கலாம்… புது இடமாச்சும் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கட்டும், எல்லாத்தையும் மறந்திட்டு நீ ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கணும்கிறது தான் என்னோட ஆசை…”

“நா..நான் எப்படி மறப்பேன் அத்தை…”

“மறந்து தான் ஆகணும்னு விதி இருந்தா மறக்கத்தான் வேணும், நீ எனக்கு ஒரு வாக்கு தரணும் நியதி மா…”

“என்ன வாக்கு அத்தை…” என்றாள் கண்ணீருடன்.

“எந்த சூழ்நிலைலயும், யாருக்காகவும் நீ இப்ப சேர்ந்த யோகா டீச்சர் வேலையை விட்டுட்டு வரக் கூடாது… வர மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு…”

“சத்தியமா…? என்ன அத்த, எதுக்கு பெரிய வார்த்தை சொல்லறீங்க, நான் எதுக்கு வேலையை விடப் போறேன், உண்மைலயே இந்த மாற்றம் மனசுக்கு தெம்பா இருக்கு…”

“ம்ம்… சந்தோஷம், ஆனாலும் சத்தியம் பண்ணு…”

“சரி அத்தை, நீங்களும், அம்மாவும் வற்புறுத்திதான் என்னை இவ்ளோ தூரம் தள்ளி இருக்கிற யோகா சென்டருக்கு அனுப்பி வச்சீங்க, இவங்களா என்னை வேலையை விட்டுப் போக சொல்லாம நானா இந்த வேலையை விட்டு வர மாட்டேன்… இது சத்தியம்…”

“ம்ம்… நல்லது மா, நான் வச்சிடறேன்… முடியல…” என்றவர் அழைப்பைத் துண்டிக்க இவள் யோசனையுடன் நின்றாள்.

நடந்து முடிந்த ஒன்றை

ஒருபோதும் மாற்ற முடியாது…

காலங்களை கடந்து போக

நம் மனதை தான்

மாற்றிக் கொள்ள வேண்டும்…

ஏனெனில் மாற்றம் ஒன்றே

என்றும் மாறாதது…

Advertisement