Advertisement

 அத்தியாயம் – 7

மலரே மௌனமா

மௌனமே வேதமா…

கண்ணாடி முன் நின்று விசில் அடித்தபடி தனது தாடியை சீவிக் கொண்டிருந்தான் ஆத்ரேயன். நீண்ட தீர்க்கமான கண்கள், ஏழைத் தலைகீழாய் போட்டது போல் எடுப்பாய் இருந்த மூக்கு, சந்தன நிற முகத்துக்கு பளிச்சென்று வசீகரத்தைக் கூட்டிய தாடி, கட்டி மீசை… தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் புன்னகைத்தன.

மீசையை முறுக்கிக் கொண்டு கண்ணாடியில் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்ட ஷோபனா, “எடா ஆதி, மதி நின்டே சவுந்தர்யம் நோக்கியது… பாவம்…! அக்கண்ணாடிக்கு வாய் உண்டெங்கில் கரஞ்சிரிக்கும்… (டேய் ஆதி, போதும்… உன் அழகைப் பார்த்தது… பாவம், அந்தக் கண்ணாடிக்கு வாய் இருந்தா அழுதிருக்கும்…)

“ஹோ, என்டம்மே…! நிங்கள்க்கு அசூயா…” (பொறாமை)

“ஓ..! பின்னே… நின்னே கண்டு அசூயப்படான் மாத்திரம் நீ யாரு கமலஹாசனோ…?”

“ஈ பழஞ்சன் அம்மைக்கு கமலஹாசனே அறயுள்ளு… இப்ப பெண் குட்டிகள்டே கிரேஸ் யாராந்து அறயுமோ…? ராக்கி பாய்…! நான் குறச்சு அவனே போலே உண்டோந்து எனிக்கொரு சம்சயம்…” (இந்த ஓல்டு அம்மாக்கு கமலஹாசனை தான் தெரியும்… இப்ப பெண் பிள்ளைகளுக்கு கிரேஸ் யார் தெரியுமா…? ராக்கி பாய்…! நான் கொஞ்சம் அவனைப் போல இருக்கனோன்னு எனக்கு ஒரு சந்தேகம்…) தாடியை உருவிக் கொண்டே சொன்னவனை முறைத்தார்.

“எனிக்கு நின்னே கண்டால் யாரே போல தோணுதுன்னு பரயட்டே…?” என்றார் கிண்டலுடன்.

“ஆஹா, யாரானு அம்மே…? பிருத்விராஜோ, உன்னி முகுந்தனோ…?” என்றான் ஆவலுடன் அன்னையிடம்.

“ஹேய்…! அவரு யாரும் அல்ல, பண்டு அச்சனோடு காசிக்கு போயப்போ அவிட நிறைய சந்நியாசிமாரைக் கண்டு… அதிலு ஒராளு நின்ன போல தன்னே உண்டாயிருந்து…” (அப்பாகூட காசிக்கு போனப்போ நிறைய சாமியாரைப் பார்த்தோம், அதில் ஒராளு உன்னைப் போலவே இருந்தார்…) அன்னை சொன்னதைக் கேட்டு புன்னகைத்தான் மகன்.

“ஹூம், நிங்களே போலே ஒரு பார்ய கிட்டியது கொண்டு பாவம் சந்நியாசியாயிட்டு காசிக்கு போயதாயிரிக்கும்…” (உங்களைப் போல ஒரு மனைவி கிடைச்சதால பாவம் சாமியாராகி காசிக்குப் போயிட்டார் போலருக்கு)

“டா செருக்கா (பையா), என்னைப் பரஞ்சால் உண்டல்லோ…?”

“என்ட ஷோபி டார்லிங்கே அல்லாதே நான் யாரைப் பரயான் ஆனு, வேணமெங்கில் வேகம் என்னைக் கட்டிச்சு விடு… நான் அவளைப் பரஞ்சோலாம்…” (சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை, என் பொண்டாட்டியை சொல்லிக்கறேன்)

“நீ தாடியும், முடியும் எடுத்தாலே நினக்கு பெண்ணு நோக்குள்ளு… இங்கனே உண்டெங்கில் ஏது பெண்ணா கல்யாணத்தினு சம்மதிக்குவா…”

“அதொக்கே எனிக்கு ஒரு மலர் டீச்சர் வராதிரிக்கில்லா…” என்றவன், “மலரே நின்னே காணாதிருந்தால்…” என்று விசில் அடித்தபடி அன்னையின் கையைப் பற்றி டான்ஸ் ஆட, குழந்தைகள் இருவரும் ஆதிராவுடன் அங்கே வந்தனர்.

“செரியச்சா…” இருவரும் இரு புறமும் அவன் காலைக் கட்டிக் கொள்ள இரு கையிலும் அவர்களை அள்ளிக் கொண்டவனை நோக்கிப் புன்னகைத்தாள் ஆதிரா.

“இந்தெந்தா…? ஆதி யோகா சென்டரில் போயில்லே…”

“டவுனில் குறச்சு பணியுண்டு ஏடத்தி… போகணம், ஏட்டன் நேரத்தே போயல்லோ… நிங்கள் போயில்லே…”

“இதா, புறப்பட்டு கழிஞ்சு… நவீன், நயனா ரெண்டாளும் அச்சம்மையே புத்தி முட்டிக்காதே நல்ல குட்டிகள் ஆயிட்டு இரிக்கணம்… ஞான் போயிட்டு வராம், அம்மே…”

“சரி மோளே…” ஷோபனா சொல்ல குழந்தைகளுக்கு முத்தமிட்டு ஆத்ரேயனிடமும் சொல்லிவிட்டு சென்றாள்.

“சரி, செரியச்சனு குறச்சு ஜோலியுண்டு… நானும் போட்டே…” சொன்னவன் குழந்தைகளைக் கீழே இறக்கி விட நயனா அவன் தோளை விட்டு இறங்காமல் சிணுங்கினாள்.

“சிஞ்சு மோளும் செரிச்சன் கூதே வரும்…” நயனா கொஞ்சலாய் சொல்ல நவீனும் துள்ளினான்.

“நானும் வரும், நானும் வரும்… பீஸ் செரிச்சா…” சித்தப்பனின் காலைப் பிடித்துக் கெஞ்சினான் குழந்தை.

“ஹேய்…! அதொந்தும் வேண்டா குட்டிகளே… செரியச்சனு பணி உண்டெந்து பரஞ்சில்லே…” ஷோபனா சொல்ல,

“சரி… சாரமில்ல அம்மே, குட்டிகளே பைக்கில் ஒரு ரவுண்டு அடிச்சு கூட்டிட்டு வராம்…” அவன் சொல்ல குழந்தைகள் அவனைக் கட்டிக் கொண்டனர்.

புல்லட்டில் அமர்ந்தவனின் முன்னில் நயனாவும், பின்னில் நவீனும் அமர, “நந்தாயி பிடிக்கனே…” என்றார் ஷோபனா. தடதட சத்தத்துடன் சிவப்பு புல்லட்டில் கிளம்பியவனுக்கு மிகவும் பொருத்தமாய், கம்பீரமாய் இருந்தது வண்டி. ஹெல்மெட்டைப் போட்டவனின் நிமிர்ந்த தோற்றமும், கருநீல டீஷர்ட்டில் மேல் பட்டனைப் போடாமல் திறந்து விட்டிருந்த விதமும் அவனை அழகனாய் காட்டியது.

வீட்டைத் தாண்டி ரோட்டுக்கு வந்தவன் சற்றுத் தொலைவில் ஸ்கூட்டரில் வந்த மாமனைக் கண்டதும் திகைத்தான்.

“ஆஹா…! குட்ட மாமா… கையில் கிட்டியா பிளேடு போட்டே கொல்லுவாரே…” யோசித்தவன் சட்டென்று புல்லட்டை சந்தில் வளைக்க, எதிரில் வந்து கொண்டிருந்த நியதி பயந்து தடுமாறி விழப் போனவள் கோபமாய் நிமிர்ந்தாள்.

“ஹலோ மிஸ்டர்…! கண்ணை என்ன பின்னாடி வச்சிருக்கியா…?” திட்டுவதற்காய் நிமிர்ந்தவள் வண்டியில் இருந்த குழந்தைகளைக் கண்டதும் சற்றுத் தணிந்தாள்.

“ஏன் சார், குழந்தைகளை வண்டில வச்சுட்டு இப்படி தான் கண்ணை மூடிட்டு ஓட்டிட்டு வருவிங்களா… பாவம், விழுந்திருந்தா என்னாயிருக்கும்…?” என்றவளின் விழிகள் நயனாவின் அழகு முகத்தையும், பளபளப்புடன் மின்னிய கருந்திராட்சை விழிகளையும் கண்டதும் சட்டென்று அவளை முன்னமே கண்டது நினைவில் வர புன்னகைத்தாள்.

“ஹேய் கியூட்டி…!” என்றவள் குழந்தையிடம் வர அதுவரை அவளுக்கு பதில் சொல்லாமல் அமர்ந்திருந்த ஆத்ரேயன்,

“ஹலோ மலர் டீச்சர்…!” என்றபடி ஹெல்மெட்டை எடுக்க அவனைக் கண்டவள் திகைப்புடன் நோக்கினாள்.

“நீ…நீங்களா…!”

“எஸ்… தட் வாரியலே தான், எந்தா இவிடே…?”

“காலைல மொபைல் எடுக்க மறந்துட்டேன்… அதான், அடுத்த பாட்ச் தொடங்கறதுக்கு முன்னாடி பிளாட்டுக்குப் போயிட்டு எடுத்திட்டு வரலாம்னு போனேன்… இந்தக் குழந்தைங்க…?”

“அண்ணன் குழந்தைங்க…” என்றவனின் பின்னிருந்து நவீன், “செரிச்சா, போகாம்…” என்று சொல்ல,

“நான் டிராப் பண்ணனுமா…?” என்றான் ஆத்ரேயன் வாரியர்.

“இ..இல்ல, நான் போயிக்கறேன்…” என்றவள் நயனாவின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியபடி, “ரெண்டு பேரும் ட்வின்சா…” ஆத்ரேயனிடம் கேட்க, தலையாட்டினான்.

“ரொம்ப அழகாருக்காங்க…”

“அப்ப நான் அழகாயில்லையா…?” அவன் கேள்வியில் திகைத்து நிமிர்ந்தவளை நோக்கி கண் சிமிட்டிவிட்டு புன்னகையுடன் புல்லட்டை எடுத்து கிளம்பி விட்டான்.

அவர் சென்ற பின்னரும் சில நொடிகள் அப்படியே நின்ற நியதி, “இவன் என்ன லூஸா, கொஞ்சம் கூட கூச்சமில்லாம தானே தன்னை அழகன்னு சொல்லிட்டுத் திரியுறான்…” என நினைத்தபடி நடக்க மனசாட்சி கேள்வி கேட்டது.

“அப்ப, அவன் அழகா இல்லையா…?”

“அப்படி சொல்ல முடியாது, ஆனா ஆம்பளைங்க இந்தளவுக்கு அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்குறது கொஞ்சம் கடுப்பா இருக்கு…” பதிலடி கொடுத்தவள் நடந்தாள்.

குழந்தைகளை வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டு எஸ்கேப் ஆகி விட நினைத்த ஆத்ரேயன் முன் கேட்டில் வண்டியை நிறுத்த, அவனுக்காகவே அங்கே காத்திருந்த குட்ட மாமா அவனைப் பார்த்து விட்டு அருகில் வந்தார். குட்டன் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற சங்கரன் குட்டி வாரியர் ஷோபனாவின் தம்பி. மூணாரில் சின்னதாய் ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறார்.

“ஆதி… நீ குட்டிகளை வண்டியில் ரவுண்டடிக்க கொண்டு போயிருக்குனு ஷோபி சேச்சி பரஞ்சு… நின்னே காணான் ஆனு மாமன் வந்தது…” என்றார் முகமெல்லாம் சிரிப்பாக.

“ஹா, மாமா, சுகம் தன்னே அல்லே…! வீட்டில் அம்மாயி, ஷீபா எல்லாரும் சுகமல்லே…”

“எல்லாருக்கும் சுகமானு மோனே… நீ வா, நின்னோடு சில காரியம் பரயானுண்டு…”

“ஹையோ மாமா, எனிக்கு அர்ஜன்டாயிட்டு டவுனில் போனமல்லோ… அவிடே ஓராளு வெயிட் செய்யுனுண்டு…”

“ஓ…! ஆயிக்கோட்டே, மாமன் அஞ்சு மினிட்டில் பரயானுள்ளது பரஞ்சிட்டு விடாம்…” அவரும் விடுவதாய் இல்லை. அதற்குமேல் மறுக்க முடியாமல் சிட்டவுட்டில் அவருடன் அமர்ந்தான். அதற்குள் ஷோபா தம்பிக்கு சாயா தயாரிக்க சொல்லிருக்க வசந்தா டீயுடன் வந்தார்.

“குட்டா…! இரிக்கு, வந்ததும் என்னோடு சம்சாரிக்காதே மருமகனைத் தேடிட்டுப் போயிட்ட…”

“பின்னே மருமகனைப் பிடிக்கான் பற்றில்லால்லோ…”

“சரி சரி, நீ வேகம் காரியம் பரயு…” என்றார் ஷோபனா.

Advertisement