Advertisement

“வ்வாட், இடியட்டோ… என்டே சுந்தரிக் குட்டிக்கு என்னோடு அத்தர தேஷ்யமானோ…?”

“இல்ல, ரொம்ப குளுகுளுன்னு இருக்கேன்… மனுஷனா நீங்க, எங்காச்சும் போனா ஒரு போன் பண்ண மாட்டிங்களா…?”

“ஆஹா, என்ட சுந்தரிக் குட்டி பயங்கர சூடிலானல்லோ, மோளு அத்தரைக்கும் என்னை மிஸ் செய்தோ…?” அவன் குரலில் காதலைத் தேக்கிக் கேட்க அவள் பொருமினாள்.

“மிஸ்சும் இல்ல, மிசஸ்சும் இல்ல… உருகறது எல்லாம் பக்கத்துல வரும்போது மட்டும் தான், தள்ளி இருந்தா என் நினைவு கூட உங்களுக்கு வரலையே…”

“ஹேய்… எந்தா மோளே இது…? ஞான் காரியம் பரஞ்சில்லே… ஸாரிடி சக்கரே, இனி எப்பளும் நின்னே விழிச்சு தொந்தரவு பண்ணிட்டே இருக்கேன், மதியோ…?” அவன் பாவமாய் சொல்ல இறங்கி வந்தாள் நியதி.

“சரி, அந்த பெஞ்சமின் சாருக்கு எப்படி இருக்கு…”

“ட்ரீட்மென்ட் போகுது, இனி பிராப்ளம் இல்லன்னாலும், கொஞ்சநாள் ரெஸ்ட்ல இருக்க டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க… நீ கழிச்சோ…?” அக்கறையாய் கேட்டவனிடம் அதற்கு மேல் கோபத்தை பிடித்து வைக்க அவளால் முடியவில்லை.

“ம்ம்… நீங்க…?”

“ஞான் இப்பளானு ஹாஸ்பிடல்ல இருந்து வந்தது, போனில் மிஸ்டு கால் கண்டப்போ உடனே விளிச்சு. குளிச்சிட்டு லஞ்ச் கழிக்கான் போகணம்…”

“ம்ம்… சரி, டைம் ஆச்சு பாருங்க…”

“எந்து பார்க்கான், இப்ப விஷப்பில்லா… (பசிக்கல) நிறைஞ்சு…” அவன் குரலில் காதலை உணர்ந்தவள் மனம் லேசானது.

“ப்ச்… போங்க ஆதி, முதல்ல சாப்பிடுங்க…”

“எனிக்கு விஷப்பில்லடோ, நின்னோடு சம்சாரிச்சா மதி…”

“ஹூக்கும், இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல, இனி காலை, மதியம், ராத்திரி மூணு நேரமும் எனக்கு கால் பண்ணலேன்னா அப்புறம் இருக்கு உங்களுக்கு…” அவள் உரிமையோடு சண்டையிட அவனுக்குப் பிடித்திருந்தது.

“எந்தா, நின்ட போனில் அவுட்கோயிங் போவில்லே… பர்த்தாவினோடு அத்தர சிநேகம் உண்டெங்கில் அப்பப்போ போனில் விளிச்சூடே… ஞான் விளிச்சாலே நினக்கு சம்சாரிக்கான் பற்றுல்லோ…” அவன் கிண்டலாய் கேட்க அவள் பொங்கி வந்த புன்னகையை விழுங்கிக் கொண்டாள்.

“அதெல்லாம் முடியாது, நீங்க அங்க ஏதாச்சும் வேலையா இருப்பிங்க, எப்ப கூப்பிடறதுன்னு எனக்குத் தெரியாது, ஏன், ஐயாவுக்கு ப்ரீ டைம்ல பொண்டாட்டிக்கு கால் பண்ணக் கூட முடியாதோ…?” அவள் அதிகாரமாய் கேட்க அவன் சிரித்தான்.

“ஓகே, மலர் டீச்சர் பரஞ்சது போலே ஞான் கேக்கும்…”

“சரி போயி சாப்பிடுங்க…” என்றவளின் குரல் கனிந்திருந்தது.

“நிதி மோளே…!”

“ம்ம்…”

“சத்யம் பர, நீ என்னை மிஸ் செய்யுந்தோ..?”

“ம்ம், லைட்டா…” என்றவளின் குரலில் இருந்த தேடல் அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது.

அதற்குப் பிறகு தினமும் காலை எழுந்ததும் மனைவிக்கு அழைத்துவிட்டு தான் அவன் விடியல் தொடங்கியது. இரவு அழைத்து கொஞ்சி, மிஸ் யூ சொல்லிவிட்டு தான் இரவுகள் நகர்ந்தன. சில நேரம் உறங்கா இரவுகளாய் நீண்டன.

நியதி வீட்டிலும், யோகா சென்டரிலுமாய் பொழுதை ஓட்டினாலும் இரவும், தனிமையும் கணவனைத் தேட மனம் அவன் வருகைக்காய் காத்திருந்தது. பத்து நாட்களில் வருவதாய் சொன்னவன் இரண்டு வாரம் கழிந்திருக்க அவனைக் காண மனம் ஏங்கத் தொடங்கியது. கான்பரன்ஸ் முடிந்த பின்னும் வேறு சில வேலைகள் இருக்க முடித்து இரண்டு நாளில் வந்துவிடுவதாய் சொன்னான்.

காலையில் யோகா வகுப்புக்கு சென்ற நியதி இடைவேளையில் வழக்கம் போல் கார்டனுக்கு சென்றாள்.

கண்ணை மூடி அமர்ந்தவளின் விழிகளுக்குள் கணவனின் காதல் வழியும் முகமே தோன்றி இம்சை செய்ய, இதழ்களில் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். சூரியனின் இதமான வெயில் சுகமாய் அவளைத் தழுவ முகம் தங்கமாய் பளபளத்துக் கொண்டிருந்தது.

சட்டென்று எதுவோ தன் மீது விழுந்தது போலிருக்க கண்ணைத் திறந்தவள் முன்னே புன்னகையுடன் நின்ற கணவனைக் கண்டு திகைத்தாள். அவனைக் கண்டவள் வேகமாய் எழுந்திருக்க மடியிலிருந்து ரோஜா விழுந்தது.

எதுவும் பேசாமல் அவனையே திகைத்து பார்த்து நின்றவளை நோக்கிப் புன்னகையுடன் வந்தான் ஆத்ரேயன். முகத்தில் தாடி, மீசை அடர்ந்து வளர்ந்திருக்க, சிகையும் நிறைந்திருந்தாலும் அதை திருத்தம் செய்திருந்தான். பாங்களூர் இன்னும் அவனைக் கலராக்கி இருந்தது.

அருகே வந்தவன் இரு கையை விரித்து வாவென்று தலையசைக்க சட்டென்று அந்தக் கைகளுக்குள் நிறைந்தாள்.

“முத்தே…!” அவன் குரல் இனிமையாய் அவள் காதை உரச, இத்தனை நாள் தவிப்பெல்லாம் விலகி ஓட மனமெங்கும் இன்பம் மட்டுமே நிறையத் தொடங்கியது. கண்கள் கலங்க அவன் நெஞ்சில் சாய்ந்தவளுக்கு சட்டென்று தாங்கள் இருக்கும் இடம் நினைவில் வர விலகியவளின் கைகளை அவன் கைகள் கோர்த்துக் கொண்டன.

அவள் கலங்கிய கண்களும், துடிக்கும் இதழ்களும் அவனில்லாத தனிமையின் வேதனை சொல்ல அவள் விரல்களை இறுக்கிக் கொண்டவன், அவளையே பார்க்க பின்னில் ஜான்சியின் குரல் கேட்டது.

“ஆஹா, பாஸ் எப்பலானு வந்தது…”

“ஜஸ்ட் நவ், சுகமானோ ஜான்சி..? இவிடே ஓகே அல்லே…”

“ம்ம்… பைன் சார், நியதியானு நிங்கள் இல்லாதே வளர விஷமிச்சு போயி, பாவம்…” அவள் சொல்ல ஆத்ரேயன் நியதியைப் பார்க்க அவள் குனிந்து கொண்டாள்.

“சுரேந்தர் சார் வந்திட்டுண்டோ…?” கேட்டபடி சென்டரை நோக்கி நடந்தவனை ஜான்சி பின் தொடர அவன் கைகள் நியதியின் கையை விடவே இல்லை.

“சரி ஞான் ஈவனிங் வராம், சுரேந்தரோடு பரயு…” என்றவன் நியதியை அழைத்துக் கொண்டு காருக்கு செல்ல ஜான்சி புன்னகையுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்டருக்கு சென்றாள்.

காரை நெருங்கியதும் அவள் கையை விட்டவன், கதவைத் திறக்க உள்ளே ஏறி அமர்ந்தவளுக்கு நடப்பது எல்லாம் கனவோ என்பது போல் திகைப்பாகவே இருந்தது.

காரை எடுத்தவன் அமைதியாய் சிலை போல் அமர்ந்து கொண்டிருந்தவளின் கையைப் பற்ற, நிமிர்ந்தாள்.

“எந்தானு முத்தே, ஒண்ணும் மிண்டாத்தது…?”

“வர ரெண்டு நாள் ஆகும்னு நேத்து நைட் சொன்னிங்க…”

“ம்ம்… சொன்னேன், பட் முடியல…”

“ஏன், என்னாச்சு…”

“கண்ணுக்குள்ள வந்து நின்னுட்டு இம்சை பண்ணிட்டே இருந்தா எப்படி அங்க இருக்கறதாம்…” புன்னகையுடன் தாடியை நீவியபடி அவன் கேட்க சந்தோஷமாய் இருந்தது. மனம் மிகவும் லேசாகி பறப்பது போல் உணர்ந்தாள்.

“என்னை மிஸ் பண்ணீங்களா ஆதி…?”

“ப்ச்… இல்ல, அதான் கண்ணுக்குள்ள நின்னு தூங்கக் கூட விடாம பாடாப் படுத்துனியே, எப்படி மிஸ் பண்ணுவேன்…” என்றவனின் தோளில் காதலுடன் சாய்ந்து கையைக் கோர்த்துக் கொண்டாள். மனம் நிறைந்திருக்க வேறு எதுவும் பேசக் கூடத் தோன்றாமல் அமைதியாய் இருந்தாள்.

“போன்ல பேசிட்டே இருப்ப, இப்ப என்ன மௌனம்…?” அவன் கேட்க முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“இது எந்தா…? மீசை தாடி எல்லாம் நீட்டி புது லுக்…?”

“உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னியே, அதான் வளர்த்த முடிவு பண்ணிட்டேன்…”

“நான் எப்ப பரஞ்சது…”

“என்னோட யாஷ் லுக் நல்லாருக்குன்னு சொன்னியே…”

“அது அப்போ…”

“அப்ப இப்போ…” என்றவன் மீசையைப் பல்லால் கடித்தபடி கண்ணடித்துக் கேட்க அவள் சொக்கித்தான் போனாள்.

“ப்ச்… இது என்ன பழக்கம்…? மீசையைக் கடிக்கறது…?”

“ஏன் பிடிக்கலியா…?” அவளுக்குப் பிடிக்குமென்று அறிந்தே அவன் புருவம் உயர்த்திக் கேட்க, “பிடிக்குது, ரொம்பப் பிடிக்குது… அதான் பிரச்சனை…” என்றபடி அவன் மீசையைப் பற்றி மெல்ல இழுக்க அலறினான்.

“ஏய்…! வலிக்குதுடி…”

“இனி மீசையைப் பல்லுல கடிச்சா இப்படிதான் பிடிச்சு இழுப்பேன்…” அவள் சிரிப்புடன் சொல்ல,

“வேற ஏதாச்சும் தண்டனை கொடுத்தா என்னவாம்…?”

“ஐயா என்ன தண்டனை எதிர்பார்க்கறிங்க…?” காரை மெல்ல செலுத்தியபடியே சாலையில் யாரும் இல்லாததை உறுதி செய்தவன் சட்டென்று வண்டியை நிறுத்தி அவள் இதழில் இதழ் பதித்து விடுவிக்க அவள் கண்கள் திகைப்பில் விரிய,

“ப்பா… எந்தொரு கண்ணானு மோளே…” என்றவன் அந்தக் கண்களிலும் சட்டென்று முத்தமிட்டு விலக அவள் திகைத்துப் போயிருந்தாள்.

“அச்சோ ஆதி, என்ன பண்ணறிங்க…? யாராச்சும் பார்க்கப் போறாங்க…” அவள் சுற்றிலும் பார்க்க அவன் புன்னகையுடன் அவளைப் பார்த்திருக்க தாங்காமல் குனிந்து கொண்டாள்.

இந்த இரண்டு வாரப் பிரிவு அவர்களை உடலால் தள்ளி வைத்திருந்தாலும் உள்ளத்தால் நெருங்க வைத்திருந்தது. இருவர் மனமும் துணையின் அருகாமை தேடிக் காதலில் நிறைந்திருந்தது. மகனும், மருமகளும் காரில் ஒன்றாய்  வந்திறங்குவதைக் கொண்ட ஷோபனாவின் விழிகள் சந்தோஷத்தில் விரிந்தது.

சில நேரம் பிரிவு

சிறகில்லா உணர்வு…

சில நேரத் தவிப்பு

சிந்தைக்குள் நெருப்பு…

சில நேர ஊடல்

சிலிர்க்க வைக்கும் சாரல்…

சில நேரக் கோபம்

சிந்தை மயக்கும் சாபம்…

சிறகடிக்கும் காதலில்

சிறைப் பறவையாய் மனம்…

Advertisement