Advertisement

 அத்தியாயம் – 29

டேக் மொமன்ட் பரீத் இன்… பரீத் அவுட்…

ரிலாக்ஸ் யுவர் ஷோல்டர். ரிலாக்ஸ் யுவர் பேஸ் மஸில்.

அண்ட் ரிலாக்ஸ் யுவர் ஹோல் பாடி…

சுரேந்தர் மென்மையான குரலில் சொல்லிக் கொண்டிருக்க யோகா பயிற்சிக்கு வந்தவர்கள் நிமிர்ந்து அமர்ந்து அவர் சொல்லுவதை செய்து கொண்டிருந்தார்கள். ஜான்ஸியும் மற்றொரு பயிட்சியாளரும் தப்பாய் செய்பவர்களை கவனித்து சரியாய் அமர வைத்தனர்.

“இன்னைக்கு நாம தரையில் உக்கார்ந்தபடி செய்யும் சில ஆசனங்களைப் பார்க்கலாம். முதல்ல தண்டாசனம்…” அவர் சொல்லவும் முன்னில் அமர்ந்து செய்து காட்டினர். இரு கால்களையும் முன்னே நேராக நீட்டி கைகளை பக்கவாட்டில் வைத்து நிமிர்ந்து அமர்ந்து, “இதுதான் தண்டாசனம்…” எனக் காட்ட மாணவர்களும் செய்தனர். “அடுத்து பத்மாசனம்…” என்றதும் ஜான்சி தயாரானாள்.

“முழங்கால்கள் தரையில் படும்படி நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, வலது காலை இடது காலின் தொடையில் போட்டு, இடது காலை வலது தொடையில் வைத்து உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருப்பது போல் அமர வேண்டும். இரு குதிகால்களும் இருபக்கமும் அடிவயிற்றைத் தொட வேண்டும். இரு கைகளும் சின்முத்திரை நிலையில் வைக்க வேண்டும். சுவாசத்தை நிதானமாகவும், முழுமையாகவும் இழுத்து நிதானமாய் விட வேண்டும்…” சுரேந்தர் சொல்ல ஜான்சி அமர்ந்து காண்பிக்க எல்லாருக்கும் அது உடனே வரவில்லை.

சிலர் சிரமப்பட சுரேந்தர் அருகே வந்து சொல்லிக் கொடுத்தார். “தொடையும், முழங்காலும் நல்லா நிலத்தில் படணும்… முதுகை வளைக்காமல் நிமிர்ந்து உக்காரு…” என ஒவ்வொருத்தரையும் கவனித்து சுரேந்தர் சரி செய்தார். அப்போது நியதி உள்ளே வர அவளைக் கண்டு சிநேகமாய் புன்னகைத்து தலையசைத்து வரவேற்றார்.

ஜான்சி நியதியைக் கண்டு கையசைக்க புன்னகைத்தவள், “டிரஸ் மாற்றி வருகிறேன்…” என்றவள் உள்ளே சென்று உடை மாற்றி வந்தாள். அடுத்த ஆசனப் பயிற்சியில் அவளும் ஜான்சியுடன் சேர்ந்து கொண்டாள்.

வகுப்பு முடிந்ததும் அவளது கையைப் பற்றி வெளியே அழைத்துச் சென்ற ஜான்சி புன்னகையுடன் அவளை அங்குல அங்குலமாய் அளவு எடுப்பது போல் தலை முதல் பார்க்க நியதி நாணத்துடன் அவள் தோளில் அடித்தாள்.

“ஹேய்…!”

“ஆஹா, அப்பளேக்கும் மதுவிது ஒக்கே கழிஞ்சு புது மணவாட்டி இவிடே எத்தியல்லோ…” எனக் கண்ணடித்துக் கேட்க நியதி நாணத்துடன் குனிந்து கொண்டாள்.

“எந்தா மோளே, முகம் சிந்தூரம் கலக்கியது போல டாலடிக்குனுண்டல்லோ, எவிடயா பாஸ்…? டயர்டாகி வீட்டில் கிடக்குவானோ…?” எனக் கேட்டவளின் தோளில் மீண்டும் அடித்த நியதி, “ப்ச் அவர் பாங்களூர் போயிருக்கார்…” எனவும் திகைத்தாள் ஜான்சி.

“இதெந்தா, ரெண்டு பேரும் ஹனிமூன் போகும் விசாரிச்சா பாஸ் மாத்திரம் பாங்களூர் போயது, இது சரியல்ல கேட்டோ. நீ எங்கனே போகான் சம்மதிச்சது…?”

“அது இன்டர்நேஷனல் யோகா கான்பிரன்ஸ் சம்மந்தமா ஏதோ வேலைக்குப் போயிருக்கார்…”

“ஓ… அதினு இனியும் சமயம் உண்டல்லோ…?”

“ம்ம்… அங்கே அதை ஏற்பாடு பண்ணுறவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல இருக்காராம்…”

“யாரு, பெஞ்சமின் சார்க்கோ…?”

“அது தெரியலை, அவரோட வேலையைப் பார்க்க இவரை வர சொன்னாங்கன்னு போயிருக்கார்…”

“ஹோ ஜீசஸ்… பெஞ்சமின் சார் நல்ல மனுஷன், அவர்க்கு எதுவும் இல்லாம காத்தோளனம்…” என சிலுவையிட்டு வேண்டிக் கொண்டவள், நியதியை நோக்கினாள்.

“அப்ப, பாஸ் இல்லாத்தது கொண்டு வீட்டில் போரடிச்சப்போ நீ இங்கோட்டு வந்ததானு அல்லே…” எனக் கிண்டலாய் கேட்க, நியதிக்கு மேலும் முகம் சிவந்தது.

“ப்ச்… போதும் கிண்டல் பண்ணது…”

“சரி பரா, எங்கனே போவுந்து கல்யாண ஜீவிதமொக்கே…”

“ம்ம்…” என்றாள் குனிந்தபடி.

“பாஸ் வீட்டில் எல்லாரும் நல்லவரானு, பாஸின்டே மம்மி வெரி பிரண்ட்லி… பாஸ் பத்தி சொல்லவே வேண்டாம். நீ ரொம்ப லக்கியானு நியதி…”

“ம்ம்…” என்றவளின் மனம் எல்லாரையும் நினைவு கூர்ந்து ஆத்ரேயனில் வந்து நின்றது.

“பாங்களூர் ரீச் ஆகிட்டேன்னு ஒரு மெசேஜ் போட்டதோட சரி, இதுவரைக்கும் எனக்கு ஒரு போன் பண்ணனும்னு அவருக்குத் தோணுச்சா…” மனம் பொருமியது.

“நியதி… நீ லைட்டா, தடிச்சோன்னு (குண்டாகிட்டயோ) எனக்கு ஒரு டவுட்…” என்றவள் அவள் ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்து, “எந்தா, சாரை மிஸ் பண்ணறியா…?” எனக் கேட்க, “ப்ச்… வா, அவங்க யாருகிட்டயும் பேசவே இல்ல…” என தோழியை அழைத்துக் கொண்டு நடந்தாள்.

ஆத்ரேயன் இல்லாமல் வீட்டில் இருக்கவே அவளால் முடியவில்லை. என்னதான் அருமையாய் அவளைப் பார்த்துக் கொள்ளும் மாமியார் என்றாலும் அவனில்லாத ஒரு இரவை நகர்த்தவே அவளுக்குத் தவிப்பாய் இருந்தது.

அவன் கிளம்பியது முதல் உறங்க முடியாமல் ஒரு வித வெறுமை உணர்வுடனும், சொல்ல முடியாத தவிப்புடனும் இருந்தவளை அவன் பாங்களூர் ரீச் ஆகி விட்டதாய் வந்த குறுஞ்செய்தி சற்று சமாதானப் படுத்தினாலும் தனிமை மிகவும் கொடுமையாய்த் தோன்ற காலையில் கிளம்பி யோகா சென்டருக்கு வந்துவிட்டாள்.

ஆத்ரேயன் அவளை உறக்கத்தில் தொந்தரவு செய்ய வேண்டாமென்று தான் மெசேஜ் அனுப்பி இருந்தான். ஆனால் உறங்காமல் கிடந்தவளோ அவனது குரலைக் கேட்கத் தவித்திருந்தாள். தானாகவே கணவனுக்கு அழைக்கவும் ஏதோ ஒன்று தடுத்தது. அவன் அங்கே எந்த சூழலில் இருக்கிறானோ, அவனே அழைக்கட்டும் என மனதை சமாதானித்துக் கொண்டாலும் அவன் இன்னும் அழைக்கவில்லையே… என்று மனம் சுணங்கியது.

“அம்மே…! ஆதி போன் செய்தோ…” யோகா வகுப்பு முடிந்து வீட்டுக்குச் சென்றவள் உள்ளே நுழைந்ததும் கேட்ட கேள்வியில் மருமகள் மனதின் தேடலும், மகன் இன்னும் போன் செய்யவில்லை என்பதும் புரிய ஷோபனாவே ஆத்ரேயனுக்கு அழைத்தார். அது முழுதும் அடித்து ஓய அழைப்பு எடுக்கப்படவில்லை.

“ஆதி போன் எடுக்குனில்லா மோளே…” ஷோபனா சொல்ல நியதியின் முகம் அச்சத்துக்குப் போனது.

“ஹேய்..! நீ விஷமிக்கண்டா, இவன் எப்பளும் இங்கனே தன்னே… எவிடப் போயாலும் உடனே போன் செய்யில்லா,  அவிடே ஒக்கே செட்டிலாகிட்டு மிஸ் கால் நோக்கியிட்டு விளிக்கும்…” என மருமகளை சமாதானம் செய்தார்.

“ம்ம்…” என்றவள், குழந்தைகள், ஷோபனா என்று மனதை அவர்களில் செலுத்த முயன்றாலும் ஆத்ரேயனின் நினைவே மனதுக்குள் வந்து இம்சை செய்தது.

அவள் மனநிலையைப் புரிந்து கொண்ட ஷோபனா, மகனின் சின்ன வயசுப் புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்தை அவளிடம் கொடுத்து மனதை மாற்ற முயன்றார். அதைப் பார்த்தாலும் கருத்தில் பதியாமல் எழுந்தவள், “அம்மே, நா..நான் கொஞ்சம் ரூம்ல இருக்கேன்…” என்று சொல்லி மாடிக்குச் சென்றுவிட்டாள்.

“அச்சோ, இவளு விஷமிக்குனல்லோ… இச்செறுக்கனு ஒரு போன் செய்தூடே…” என மகனைத் திட்டிக் கொண்டவர் மீண்டும் அவன் எண்ணுக்கு அழைக்க அப்போதும் எடுக்கப் படாததால் அவருக்கும் சற்று கவலையானது.

“ஒ..ஒருவேளை, நியதி பேடிச்சது போல் எந்தெங்கிலும்…” என அச்சுறுத்தத் தொடங்கிய எண்ணத்தை, “ச்ச்சே… அவள் செறிய பெண்ணு, ஏதோ புரியாம பயப்படறா, என் மகனைப் பத்தி தெரிஞ்சும் நான் பயப்படலாமா…? அவன் மிஸ்கால் பார்த்திட்டுக் கூப்பிடுவான்…” எனத் தன்னை சமாதானம் செய்து கொண்டு குழந்தைகளை கவனிக்கத் தொடங்கினார்.

மதிய உணவுக்கு மருமகளை அழைக்க பேருக்கு ஏதோ சாப்பிட்டு எழுந்தவளின் சோர்ந்த, கவலையான முகம் கண்டு ஷோபனாவுக்கும் கவலையானது.

“இந்தப் பையன் இன்னும் ஏன் கூப்பிடாமல் இருக்கிறான்…” என அவர் யோசிக்கும்போதே ஷோபனாவின் அலைபேசி சிணுங்கி மகனின் எண்ணைக் காட்டியது.

“ஹா, மோனே…”

“ஞான் தன்னே அம்மே, விளிச்சிருந்தோ…” என்றவனின் குரலில் சோர்வை உணர்ந்தாலும்,

“எடா, நினக்கு அவிட எத்தியிட்டு ஒரு போன் செய்தூடே…”

“ஹா… ராத்திரி எத்தியதும் மெசேஜ் செய்தல்லோ அம்மே, ராவிலே உறங்கிப் போயி. எந்திரிச்சப்போ போன் சுவிட்ச் ஆப். அதுகொண்டு சார்ஜில் இட்டிருந்து… அப்பலேக்கும் என்னைக் கூட்டிப் போகான் ஒரு பிரண்டு வந்தது கொண்டு போனை ரூமில் தன்னே வச்சிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு இப்பளானு ரூமில் வந்தது. நிங்கள்டே மிஸ்டு கால் கண்டதும் உடனே விளிச்சு…” அவன் விளக்கம் சொல்லி ஒரு பெருமூச்சு விட்டான்.

“ஹா, அதொக்கே சரி… எந்தாலும் அவிடே எத்தியதும் மெசேஜ் செய்ததினு பகரம் நியதிக்கு ஒரு கால் செய்தூடே…”

“அது, அவள் அந்த சமயத்து உறங்கிக் காணும் விசாரிச்சு, எந்தாம்மே, எந்தா பிரஸ்னம்…?” என்றவனின் குரலில் ஒரு தவிப்பு ஏற, “நியதிக்கு ஒண்ணும் பிரஸ்னம் இல்லல்லோ…?” என்றான் சிறு படபடப்புடன்.

“எடா, இதுவரே நீ நியதிக்கு ஒரு போன் செய்தோ, அவள் எந்தொக்கயோ ஆலோயிச்சு விஷமிக்கான் தொடங்கி, ஆத்யம் அவளை ஒண்ணு விளிச்சு சம்சாரிக்கு…” என்றார்.

“ம்ம்… சரியம்மே…” என்றவன் உடனே அழைப்பைத் துண்டித்து மனைவிக்கு அழைத்தான்.

நியதி அம்பிகையோடு பேசிக்கொண்டிருக்க எண் பிஸியாக இருந்தது. யோசனையுடன் இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் அழைக்க ஒரே ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட்டு எதிர்ப்புறம் மௌனமாய் இருக்க ஆத்ரேயனே பேசினான்.

“ஹ..ஹலோ, முத்தே…” அவன் அழைப்பிற்கும் மௌனமே பதிலாக தவித்தான்.

“முத்தே…! மோளே, எந்தாடி மிண்டாத்தது, என்ட சக்கரைக்கு என்னோடு தேஷ்யமானோ…? சாரி மோளே… விஷமிச்சு போயோ, என்டே போன் சார்ஜ் செய்யான் ரூமில் வச்சிட்டு ஆசுபத்திரியில் போயிருந்து. ரியல்லி சாரிடி சக்கரே…!” அவன் குரலுக்கு எதிர்ப்பக்கம் இருந்து ஒரு விசும்பல் கேட்க அவனது தவிப்பு அதிகமானது.

“ஹேய்…! கரயுவானோ, இனி ஒரிக்கலும் இங்கனே செய்யில்ல, திவசம் ராவிலயும், ராத்திரியும் ஞான் விளிக்கும், ப்ளீஸ் மோளே, விஷமிக்காதடி…” அவன் கெஞ்ச அவள் விசும்பல் நின்று கோபமாய் குரல் ஒலித்தது.

“இடியட், போடா…” அவள் சொல்லவும் திகைத்து சிரித்தான்.

Advertisement