Advertisement

“ஹோ,  அந்தத் தள்ள (கிழவி) எப்பழும் இங்கனே தன்னே… மோள் அது ஆலோயிச்சு விஷமிக்கண்டா…”

“இல்லம்மே… அவங்க மனசுல தோணினதை அவங்க சொன்னாங்க, இல்லாததை சொல்லலியே… எனக்கு அதுல எந்த விஷமமும் இல்லை…”

“ம்ம்… நந்தாயி மோளே, எல்லாக் காரியத்திலும் இங்கனே பாஸிடிவ் ஆயிட்டு விசாரிச்சால் யாரோடும் நமக்கு தேஷ்யம் உண்டாவில்லா, ரெண்டு பேரும் டிரஸ் மாற்றி வரின்… இலை அடை அடுப்பிலுண்டு, சூடோட கழிக்காம்…” எனவும் இருவரும் மாடிக்கு சென்றனர்.

ஆத்ரேயன் அறைக்கு சென்றதும் அப்படியே மொபைலுடன் கட்டிலில் சரிய, “நான் டிரஸ் மாத்தணும்…” என்றாள் நியதி.

“மாற்றிக்கோ, ஞான் ஹெல்ப் செய்யனோ மோளு…” குறும்புடன் கேட்டுக் கண்ணடித்தவனை முறைத்தாள் நியதி.

“ப்ச், போங்க ஆதி…”

“அதொண்ணும் பற்றில்ல மோளே… எனிக்கு ஒரு டவுட் உண்டு, அதோக்கே தீர்க்கண்டே…”

“டவுட்டா, என்ன டவுட்…?”

“அது, இங்கனே எட்டி நின்னு கேட்டா சொல்ல முடியாது, பக்கத்துல வா…” என சொல்லிக் கொண்டே அவளைத் தன்னிடம் இழுக்க அவன் மீதே விழுந்தாள் நியதி.

“ப்ச், விளையாடாதிங்க ஆதி… அத்தை நமக்காகக் கீழே காத்திருப்பாங்க…” அவள் எழுந்து கொள்ள முயன்றாள்.

அவள் கழுத்தில் இதழ் பதித்து அவளை நெளிய வைத்தவன், “என் டவுட்டைத் தீர்த்திட்டு போ…” எனக் கிசுகிசுக்க அவள் தவிப்புடன் அவனைத் தள்ளிவிட முயன்று தோற்றாள். அவனது கைகள் நெகிழ்ந்திருந்த அவளது சேலைக்குள் நுழைந்து இடுப்பில் தழுவி தொப்புளை வருடத் தொடங்க கூச்சம் தாங்காமல் எழுந்து அமர்ந்தாள் நியதி.

“ப்ச்… விடுங்க ஆதி, என்ன டவுட்டு.. கேளுங்க…”

“காதில் பரயாம்…” என்றவனிடம்,

“இம்சை பண்ணறீங்க…” என சலித்தபடி காதைக் கொடுக்க அவன் அப்படி என்ன கேட்டானோ காளியாய் முறைத்தவள் அவன் நெஞ்சில் குத்தி கன்னத்தில் அடித்து மீசையை இழுக்க, “ஆ…” அலறினான் ஆத்ரேயன்.

“ச்சீ… இதெல்லாமா உங்களுக்கு டவுட் வரும்…?” என்றவளை மேலே பேச விடாமல் இதழால் இதழ் மூடியவன்,

“என்ன பண்ணறது டவுட்னு வந்திட்டா, கிளியர் பண்ணணும்ல…” என்றவனை மேலும் அடிக்க சிரிப்புடன் அவளது அடிகளை சந்தோஷமாய் வாங்கிக் கொண்டான்.

“அது ஏன் என்னைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்டிங்க..?”

அவள் சீறலாய் கேட்க, “இல்ல, உனக்கும் அது பெருசா தானே இருக்கு, அதான் டவுட் கிளியர் பண்ணிக்கலாம்னு…”

“ச்சீ… கருமம், கருமம்… இதெல்லாம் எப்படி கேக்கறிங்க…?”

“நீ அங்க சாஸ்திரம் எல்லாம் படிச்சதில்லையா…?” அவன் கேட்க தலையில் அடித்தபடி கட்டிலில் இருந்து இறங்கினாள்.

“நான் பாத்ரூம்ல போயே டிரஸ் மாத்திக்கறேன்…” அவள் சொல்ல, “சரி சரி, நான் டிஸ்டர்ப் பண்ணல, இங்கயே மாத்திக்க…” என்றவன் திரும்பிப் படுத்துக் கொள்ள சேலையை அவிழ்த்து கட்டிலில் எறிந்து விட்டு மாற்று உடையுடன் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள் நியதி.

மேலுக்கு குளிக்கத் தோன்ற உடையைக் களைந்து சோப்பு தேய்க்கும்போது கணவன் கேட்டது நினைவில் வர முகம் நாணத்தில் சிவந்தது.

“ச்சே… என்னல்லாம் டவுட் கேக்குறான், எனக்கு அவ்வளவு பெருசாவா இருக்கு…” என்றவளின் விரல்கள் இடுப்பில் வலம் வந்து தொப்புளுக்கு மேல் பெரிய ஒரு வட்டப் பொட்டு போல் பளிச்சென்றிருந்த மச்சத்தைத்  தடவியது.

“இருந்தாலும் இந்த வாரியலுக்கு ரொம்ப தான் ஏத்தம்…” என நினைத்தாலும் இதழ்கள் சிரிக்க புன்னகையுடனே குளித்து வெளியே வந்தாள்.

ஆத்ரேயன் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.

“ம்ம்… சரி, நான் இன்னைக்கு நைட் பிளைட்டுக்கே கிளம்பறேன், மார்னிங் பார்ப்போம்…” சொன்னவன் அலைபேசியை வைத்துவிட்டு ஏதோ யோசனையுடன் நின்று கொண்டிருந்தான்.

“என்ன ஆதி, எங்கயோ கிளம்பனும்னு சொல்லிட்டு இருந்திங்க…” நியதி கேட்க அவளைப் பார்த்தவன்,

“ம்ம்… ஒரு அவசர வேலை, பெங்களூர் போகணும்…” சொன்னவன் அலமாரியைத் திறந்து உடைகளை எடுத்து வைக்கத் தொடங்க அவள் திகைப்புடன் நின்றிருந்தாள்.

“எ..எப்ப கிளம்பணும் ஆதி…?”

“இப்பவே கிளம்பினா கொச்சில காரை விட்டுட்டு நைட் பத்தே முக்கால் பிளைட்டுக்கு பெங்களூர் கிளம்பிடுவேன்…”

“ஓ… எதுக்கு இந்த நேரத்துல இவ்ளோ அவசரமா…?”

“அதெல்லாம் விரிவா சொல்ல நேரமில்ல முத்தே, பெங்களூர்ல பத்து நாள்ல இன்டர்நேஷனல் யோகா கான்பரன்ஸ் நடக்குது, அதுக்கான ஏற்பாடுகளை என் பிரண்டு ஒருத்தர்தான் கவனிச்சிட்டு இருந்தார், நானும் கூட அந்தக் கான்பிரன்ஸ்ல கலந்துக்கப் போறதா இருந்தேன்… இப்ப அந்த பிரண்டுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல இருக்காராம். பாரின்ல இருந்தெல்லாம் நிறையப் பேரு இந்த கான்பிரன்ஸ்ல கலந்துக்க வர்றதால புரோகிராமைத் தள்ளிப் போட முடியாது… சோ, என்னை பாங்களூர் போயி அங்குள்ள ஏற்பாடுகளை கவனிச்சுக்க முடியுமான்னு நம்ம அசோசியேஷன்ல இருந்து கேக்குறாங்க… இந்த சூழ்நிலைல என்னால மறுக்க முடியல…” சொன்னவனின் கைகள் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த உடைகளை எடுத்து வைக்க நியதியின் மனதில் ஒரு சோகம் நிறைந்தது.

கல்யாணம் முடிந்த இந்த சில நாட்களில் அவனை விட்டு அவள் சிறிது நேரம் கூடப் பிரிந்திருக்கவில்லை. நேற்றைய நெருக்கத்துக்குப் பிறகு அவன் மீதுள்ள உரிமையும், நெருக்கமும் அதிகமாகி இருக்க, கணவனின் சீண்டலும், கொஞ்சலும், அருகாமையும் எப்போதும் வேண்டுமென  மனம் ஏங்கியது. வாடிய மலர் போல் அவனையே பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றவளின் மனநிலை அவனுக்கும் புரிய பாகில் வேண்டியதை எடுத்து வைத்து ஜிப்பை மூடியவன் நியதியிடம் வந்தான்.

அவனை ஏறிட்டவளின் விழிகளில் தெரிந்த தவிப்பைக் கண்டவன் சட்டென்று அவளை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அப்படியே உருகிவிடத் தோன்ற அவளது கரங்களும் அவனைத் தன்னோடு இறுக்கிக் கொண்டன.

அவளது நெற்றியிலும், கன்னத்திலும், மூக்கிலும் இதமாய் இதழ் பதித்தவன் அவளது காது மடலை மெல்லக் கடித்து, கழுத்தில் முகம் புதைத்து “முத்தே…! எனிக்கும் நின்னே விட்டுப் போக இஷ்டமல்ல, அங்கேயுள்ள சிச்சுவேஷனுக்கு இப்ப உன்னைக் கூட்டிட்டுப் போகவும் முடியாது, நான் சீக்கிரமே வந்துடறேன்…”  என விடுவித்தான்.

கலங்கிய அவள் கண்களைக் கண்டவன், “ஹேய்…! கரையுகயானோ…?” எனக் கண்ணைத் துடைக்க அவனை ஏறிட்டவளின் முகமும், கண்ணும் சிவந்திருக்க இதழ்கள் மெல்லத் துடித்தன.

“எந்தாடி சக்கரே…?” என்றவனின் விரல்கள் அவளது துடித்த இதழை மெல்லத் தடவ அவன் கையைப் பிடித்தவள்,

“என் உதடு மட்டும் என்ன பாவம் பண்ணுச்சாம்…?” எனக் கேட்க, அதற்குமேல் அந்தக் கள்வன் சும்மா இருப்பானா…? அவள் இதழ் கள்ளை வேண்டுமட்டும் உறிஞ்சிக் குடித்து சுவைக்கத் தொடங்க அவள் தவிக்கத் தொடங்கினாள்.

கஷ்டப்பட்டு அவனை விலக்கியவள் பெரிதாய் மூச்சு விட, மீண்டும் மெல்ல அணைத்து அவள் இதழில் மெல்ல முத்தமிட்டு விலகினான் ஆத்ரேயன்.

“சரிடி செல்லக்கிளி, மச்சான் திரும்பி வர்ற வரைக்கும் என் பிராப்பர்ட்டி எல்லாம் பத்திரமாப் பார்த்துக்க…” எனச் சொல்ல அவள் முழித்தாள்.

“பிராப்பர்ட்டியா…?” அவள் கேள்விக்கு உல்லாசமாய் சிரித்தவனின் பார்வை அவளது தலை முதல் பாதம் வரை தடவ, நாணத்தில் சிவந்தவள் குனிந்து கொண்டாள்.

“ச்சீ… நான்தான் உங்க பிராப்பர்ட்டியா…?” எனப் பொய்யாய் கோபிக்க அவள் தலையில் செல்லமாய் முட்டினான்.

“பின்ன…? உன் மனசு உடம்பு தான் எனக்கான பிராப்பர்ட்டி…” என மீசையைக் கடித்தபடி சொல்ல அந்த அழகிலும், காதலிலும் மயங்கினாள் அவள்.

அவள் கை பிடித்துக் கீழே வந்த ஆத்ரேயன் அன்னையிடம் விஷயத்தை சொல்ல நியதியின் கலங்கிய முகத்தைக் கண்டவர், “இவளையும் நின்னோடு கூட்டிப் போயிக்கூடே…” எனக் கேட்க, அவன் சூழ்நிலையை சொல்லி மறுத்தான்.

“சரி, ஆடை கழிச்சிட்டுப் போ…” என்றவர் இலையில் வேவித்த அடையை அவனுக்குத் தட்டில் எடுத்து வைக்க எடுத்து சாப்பிடத் தொடங்கியவன்,

“அம்மே, சாய்…” எனக் கேட்க அவர் அடுக்களைக்கு நகரவும் சட்டென்று எழுந்து தன்னருகே நின்றே நியதியின் இதழைத் தன்னிதழால் அணைத்து விடுவிக்க, அவன் செயலில் திகைத்து நின்றிருந்தவளின் இதழ்களில் உணர்ந்த அடையின் சுவைக்குத் தித்திப்பு கூடுதலாய் இருப்பதாய் உணர்ந்தாள்.

மீண்டும் பேக் எடுப்பதற்காய் மாடிக்கு சென்றவன், “மோளே…” எனக் குரல் கொடுக்க பரபரப்புடன் மாடிக்கு விரைந்த மருமகளைப் புன்னகையுடன் பார்த்தார் ஷோபனா.

மீண்டும் அவளை அணைத்து, முத்தமிட்டு, மனமில்லாமல் கிளம்பியவன், “ஷோபக் குட்டியே, என்ட சக்கரக் குட்டியே பத்திரமாய் நோக்கனே…” என அன்னையையும் அன்போடு அணைத்து முத்தமிட்டு விடை பெற்றான்.

நேசக் கரங்களின் விரல்களில்

களைப்புக்கான மருந்துகள்

தேங்கிக் காத்திருக்கின்றன…

உன் விரல்களின் தொடுதலில்

இதுவரை அனுபவித்த

தனிமைப் பிணிகள் நீங்கி

மீண்டும் குழந்தையாய்,

குமரியாய் உனக்கான

எல்லாமாய் ஜனிக்கிறேன் நான்…

Advertisement