Advertisement

“ஹூம், சரிக்கும் இவிடே வரான் மனசில்லா, எங்கிலும் என்ட மகள் விளிச்சதினு வேண்டி வந்ததானு… நிங்களே மகன் கண்டு பிடிச்ச தமிழத்திக் குட்டி என்டே மகளைக் காட்டிலும் ஏது விதத்தில் உசத்தினு அறயனமல்லோ…” பணத்தின் கம்பீரத்தில் புச்சமாய் வந்த அவரது வார்த்தைகளைக் கேட்டு ஷோபனாவுக்கு அறையலாம் போலத் தோன்றினாலும் புன்னகையுடன் அவர் கை பற்றிய சாதனாவைக் கண்டதும் அது மறைந்தது.

“வா மோளே…”

“ம்ம்… ஆன்ட்டி டாடி ஒரு தேஷ்யத்தில் பரயனதா, அதொண்ணும் கார்யமாயிட்டு எடுக்கண்டா…”

“ம்ம்… மனசிலாயி மோளே, நீயும் நல்ல குட்டியானு… நின்டே மனசு போல் நல்ல ஒரு மாப்பிள்ளை நினக்குக் கிட்டும்…”

“ஹஹா… கிட்டிய மாப்பிள்ள தன்னே மிஸ் ஆகிப் போயில்லே, இட்ஸ் ஓகே… யாருக்கு யாரைக் கிட்டணம்னு பகவான் அல்லே தீர்மானிக்கனது…” என்றவளின் உதடுகள் பக்குவமாய் பேசினாலும் மனதுக்குள் ஒரு ஏமாற்றம் இருப்பதை ஷோபனா புரிந்து கொண்டார்.

“மேடைக்குப் போயி மணமக்களைக் கண்டிட்டு வா…” எனவும், திரும்பி தந்தையை அழைத்தாள் சாதனா.

“டாடி, வரின்… ஸ்டேஜ்லேக்கு போகாம்…”

“நான் வருனில்லா மோளே, நீ போயி கிப்ட் கொடுத்திட்டு வா… ஞான் இவிடே இரிக்காம்…” என்றவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ள அவரைக் கண்டதும் தெரிந்த சிலர் பேச அருகே வந்து அமர்ந்தனர்.

“ஹா ஸாரே, மகளை ஆத்ரேயனுக்கு கல்யாணம் கழிக்கான் அந்நேஷிச்சதாயி அறஞ்சு… எந்து செய்யானா, இப்போலத்த குட்டிகள்க்கு பிரேமம் அல்லே குடும்ப கௌரவத்தைக் காட்டிலும் வலியது… நிங்கள் விஷமிக்கண்டா, நிங்களே மோளுக்கு இனியும் நல்ல சம்மந்தம் கிட்டுமாயிரிக்கும், அவளு சுந்தரியல்லே…” என சமாதானப்படுத்தினார் ஒருவர்.

“அய்யே… எனிக்கெந்து விஷமம்…? பின்னே, என்டே மோளுக்கு இந்த பந்தம் இஷ்டமாயது கொண்டு குட்டனோடு பார்க்கலாம்னு சொன்னேன்… என்ட ஸ்டேட்டஸ்னு இதை விட நல்ல குடும்பத்துல இருந்து மாப்பிள்ளையைக் கொண்டு வர மாட்டேனா…?” அவர் சொன்னாலும் இது நடக்காமல் போன வேதனை உள்ளதென முகமே சொன்னது.

மேடைக்கு சென்ற சாதனா பாகிலிருந்து ஒரு கிப்ட் பாக்ஸை எடுத்து ஆத்ரேயனிடம் நீட்டினாள்.

“ஹாப்பி மாரீட் லைப், ரெண்டு பேரும் மேட் பார் ஈச் அதர்னு காணுந்த எல்லாருக்கும் தோணும்…”

“தேங்க்ஸ் சாதனா, என்னே மனசிலாக்கியதோடு ஞான் விளிச்சதினு ரிஷப்ஷனுக்கு வந்ததினும்….” ஆத்ரேயன் நன்றி சொல்ல நியதி சிறு குற்றவுணர்வுடன் அவளைப் பார்த்தாள்.

“ஹேய்… குறச்சு திவசம் அறஞ்சாலும் நம்மள் பிரண்ட்ஸ் அல்லே, பின்னே நிங்கள் ரெண்டு பேரும் என்டே யோகா டீச்சர்சும் கூடியானு, எங்கனே வராதிரிக்கும்… நியதி யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் டிரஸ், ஆதி போல ஒரு ஹஸ்பன்ட் கிட்டியதில் யூ ஆர் லக்கி டூ…” என்றவள் புன்னகைக்க நியதி கணவனைப் பார்த்துக் கொண்டாள்.

“இது என்டே செறிய கிப்ட், திறந்து நோக்கு…” என ஆத்ரேயனைப் பரிசுப் பெட்டியைப் திறக்க வைக்க அதில் ஒரு ஜோடி கைகடிகாரங்கள் அழகாய் பளிச்சிட்டது.

“நியதியின் கையில் கட்டி விடு ஆதி…” அவள் சொல்ல ஆத்ரேயன் புன்னகையுடன் அந்த குட்டி வாட்சை எடுத்து மனைவியின் கையில் கட்டினான்.

“பியூட்டிபுல், தேங்க் யூ சாதனா…”

“ம்ம்… நியதி, நீயும் கட்டிவிடு…” என அவளும் கட்டி விட்டாள். ஆத்ரேயனின் நீண்ட வெண்ணிற விரல்களும் அதில் இருந்த குட்டி ரோமங்களும், அளவாய் வெட்டப்பட்ட ரோஸ் நிற நகங்களும் என அவன் கை மிகவும் அழகாய் இருப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டே வாட்சைக் கட்டினாள் நியதி. அதற்குள் வேறு யாரோ மேடைக்கு வர மீண்டும் வாழ்த்திவிட்டு சாதனா அங்கிருந்து நகர்ந்தாள்.

அபிநந்தனின் நண்பர்களும், சில டாக்டர்களும் வர அவர்களை அறிமுகப்படுத்திய அபிநந்தன் நண்பர்களிடம், “என் தம்பி மட்டுமல்ல, நியதியும் யோகா டீச்சரானு…” என்று பெருமையுடன் சொல்ல,

“ஹோ, நின்னைப் போல இனம் இனத்தோட சேரும்னு சொல்லு… நினக்கு நின்டே புரபஷனில் உள்ள பார்யா (மனைவி) கிட்டிய போல அனியனும் அவன்டே புரபஷனில் தன்னே கிட்டி, இதானு ஒரு கணக்கில் நல்லது… நம்முடே வொர்க் நேச்சர் அவருக்கும் அறயுமல்லோ…” என கலகல பேச்சுடன் மேடையை நிறைத்தனர். அவர்கள் சென்றதும் “இத்தன பேரு வர்றாங்க, ஆதிக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்லையா…?” என நியதி யோசிக்க, அவளிடம் சின்னக் குரலில் சொன்னான் ஆத்ரேயன்.

“எனிக்கு குளோஸ் பிரண்ட்ஸ் யாரும் இல்ல… பார்த்துப் பழகிய எல்லாரும் பொதுவான நட்புகள், இப்ப தான் ஒரு கேர்ள் பிரண்டு கிடைச்சிருக்கா, அவளோட குளோசா பழகணும்னு ஆசைப்படறேன்…” ஆத்ரேயன் புன்னகையுடன் சொல்ல நியதிக்குப் புரியவில்லை.

“கேர்ள் பிரண்டா, அது யாரு…?” எனக் கேட்டுவிட மனது துடித்தாலும் வார்த்தைகளை அடக்கிக் கொண்டாள். ஆனாலும் முகத்தில் ஒரு குழப்பம் இருந்தது.

“எந்தா, மலர்டீச்சர் என்டே குளோஸ் பிரண்டாயிரிக்கில்லே…” அவனே அவள் முகத்தைக் குறுகுறுவென்று நோக்கிக் கேட்க, சட்டென்று தெளிந்தவள் முகம் சாந்தில் கலக்கியது போல் நாணத்தில் சிவந்து போக தலையைக் குனிந்து கொண்டாள்.

அந்த அழகான தருணத்தை ஆத்ரேயன் மனதில் பதித்துக் கொண்டதோடு போட்டோகிராபரும் கவனித்துக் காமிராவில் பதித்துக் கொண்டார்.

ஓரளவு கூட்டம் குறைந்ததும் அவர்களை சாப்பிடச் செல்லுமாறு அழைத்தார் ஷோபனா. நான்வெஜ், வெஜ் இரண்டு வகையிலும் பல உணவுகள் இரண்டு பக்கத்திலும் பிரித்து வைத்திருக்க, பரிமாறத் தலையில் தொப்பியுடனும், யூனிபார்ம் உடையுடனும் காட்டரிங் மக்கள் நின்றிருந்தனர்.

“முத்தே…! நினக்கு எந்தா வேண்டது…?” ஆத்ரேயன் கேட்க, “வெஜ் போதும்…” என்றாள் நியதி.

அவளுக்கு பனீர் மசாலா, புலாவ் சப்பாத்தி, குருமா என ஒரு பிளேட்டில் அளவாய் வாங்கி கொடுத்து விட்டு அவனுக்கு ஆப்பம், புட்டு சிக்கன் கறி வாங்கிக் கொண்டு அவள் முன்னே வந்து அமர்ந்தான் ஆத்ரேயன். அவர்களைக் கண்டு ஆதிரா, ஷோபனாவும் சாப்பிட சேர்ந்து கொண்டனர்.

“நியதி, நினக்கு நான் வெஜ் வேண்டே, குறச்சு பிரியாணி கழிச்சு நோக்கு…” ஷோபனா சொல்ல, “இல்லம்மே, இது மதி…” என்றாள் நியதி.

அவள் மலையாளம் சொல்லுவதைக் கேட்டு ஆத்ரேயன் ஆச்சர்யமாய் பார்க்க, “எந்தாடா பையா நோக்கனது, என்டே ட்ரெயினிங் எங்கனே…” என்று கேட்க,

“ம்ம், கொள்ளால்லோ…” என்றான் மகன் புன்னகையுடன்.

நல்லபடியாய் அன்றைய நிகழ்ச்சி முடிய கிளம்பினர். இருவரையும் வாசலில் நிற்க வைத்து பெரிய பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்துவிட்டே வீட்டுக்குள் விட்டார் ஷோபா. உள்ளூர் சொந்தங்கள் எல்லாம் ஹாலிலிருந்து அப்படியே அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்க வெளியூர் சொந்தங்கள் சிலர் மட்டும் இங்கே தங்கியிருந்தனர்.

அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துவிட்டு உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த சின்ன மகனிடம் வந்த ஷோபனா, “சமயமாயில்லே, அவர்க்கு க்ஷீணம் உண்டாகும், நீ போயி கிடக்கான் நோக்கு…” எனக் கூற, “நல்லவேளை, அம்மா இந்த அறுவை மன்னனிடமிருந்து நம்மைக் காப்பாற்றினார்…” என மனதுக்குள் நினைத்தபடி எழுந்து அவனது அறைக்கு சென்றான் ஆத்ரேயன்.

“அல்ல ஷோபே, இவர்க்கு ஜாதகம் ஒந்தும் நோக்கியில்லே…” அவர் மீண்டும் இவரிடம் தொடங்க, “மனசு ஒத்தால் பின்னே எந்தினு ஜாதகம் ஏட்டா, எனிக்கு செறியொரு தலவேதன, நிங்கள்க்கும் நல்ல க்ஷீணம் காணும், கிடந்தோளு…” என்றவர் அங்கிருந்து நழுவினார்.

“ஹூம், குடும்பக்காரை சமாளிக்கவே நான் தனியே கோர்ஸ் எடுத்துப் படிக்கணம் தோணுது, ஒவ்வொருத்தருக்கும் எத்தர மாத்திரம் சோத்யங்களானு…” (எவ்ளோ கேள்விகள்) என முணுமுணுத்தபடி தனது அறைக்கு சென்றார்.

ஆத்ரேயன் செல்லும்போது நியதி கட்டிலில் உறங்கத் தொடங்கி இருக்க, பாத்ரூமுக்கு சென்று வந்தவன் ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் அவளையே சில நிமிடங்கள் பார்த்து சிரித்துக் கொண்டான். “மலரே நின்னே காணாதிருந்தால்…” சின்ன குரலில் பாடலை முணுமுணுத்தபடி அவளுக்கு போர்த்திவிட்டு தானும் மறுபக்கம் படுத்துக் கொண்டான். மனம் நிறைவை உணர காலை முதல் பல கண்களின் வட்டத்துக்குள் இருந்த சலிப்பில் நித்ரா தேவி வேகமே அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து உறக்கத்தில் புரண்டு திரும்பிப் படுத்த நியதிக்கு உறக்கம் தடைபட கண்ணைத் திறந்தாள். சீரான மூச்சை வெளியேற்றியபடி தன் பக்கமாய் திரும்பி ஆழ்ந்து உறங்கிக்  உறங்கிக் கொண்டிருந்த கணவனைக் கண்டதும் மனம் நெகிழ்ந்தது. அந்த அரையிருட்டான அறையில் இரு கால்களை மடக்கி ஒரு கையில் அவளது புடவையைப் பற்றி மறு கையைக் குறுக்கி தலைக்கு கொடுத்திருந்தான்.

குழந்தை அன்னையின் புடவையைப் பற்றியபடி உறங்குவது போல் தோன்ற அவன் முகத்தையே புன்னகையுடன் பார்த்தாள் நியதி. முகத்தை வருடத் தோன்றிய மனதைக் கட்டுப்படுத்தி மெல்ல தலை முடியை வருடிக் கொடுத்தாள். மூச்சுக் காற்று தன் மீது உரசுவதை ரசனையுடன் பார்த்தவள் திரும்பிப் படுக்க நினைக்கையில் சட்டென்று அவனது நீண்ட வலிமையான கை அவளது இடுப்பை வளைத்து தன்னருகே இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டது.

உறங்கும் கண்கள்

உணராமல் போனாலும்

உனக்காக ஏங்கும் நெஞ்சம்

உணராமல் போகாது

உன் நேசப் பார்வையை…

உன் பேச்சுக்கள் வேண்டாம்…

உன் மூச்சுகள் சொல்லும்

உனக்குள் நான் முழுமூச்சாய்

உறைந்திருப்பதை…

Advertisement