Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 13

நேத்ரா தன் பயனத்திற்க்கு தேவையான எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொண்டு இருந்தால். இன்னும் 1 வாரத்தில் அவள் கல்லூரி தெடங்கிவிடும்.

இந்த வாரத்தில் அங்கு சென்றுவிட்டால் மற்ற வேலைகளை முடித்துக்கொள்லாம். கல்லூரி கட்டணம் செலுத்தியாகி விட்டது, இனி விடுதி மற்றும் கல்லூரி செல்ல தேவையான வற்றை வாங்க வேண்டும்.

இங்கு சென்னையில் எல்லாம் கிடைக்கும் என்றாலும், இங்கு வாங்கி எப்படி இரயில் பயனத்தில் அவ்வளவையும் எடுத்து செல்முடியும். அதனால் தான் முன்பே கிளம்பிவிட்டாள், அங்கு சென்று பார்த்துக்கொள்லாம். 

அவள் செல்ல போகும் பரபரப்பு இல்லாமல் வீடு அமைதியாக இருந்து, தயாளன் தன் கம்பெனிக்கும், அவர் மனைவி வழக்கமாக லேடீஸ் கிளப்க்கும் கிளம்பி இருந்தனர்.

நேற்று இரவு உணவின் போது இவள் கிளம்புவதை பற்றி கூறி இருந்தால்,  எப்படி போக போற என்ற கேள்வி மட்டும் தயாளன்னிடம், உன் மார்க் இங்க சென்னையிலை சீட் கிடைச்சிருக்கும், எதுக்கு மதுரைக்கு போற, இங்க படிச்சாலும் நாலு பேர்கிட்ட பெருமையா சொல்லாம்.

பணம் எதாவது வேண்டும்மா என்றதோடு ரேகா தன் பணியை முடித்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

இந்த கேஸ் முடியரவரைக்கும் பார்த்து பத்திரமா இரு எதாவது பிரச்சனை னா போன் பன்னு. இப்போதைக்கு செலவுக்கு உன் அக்கவுன்டுக்கு பணம் போடுறேன்.

என்றவரை மௌனமாக எதிர்க்கொண்டவள் இல்லை வேண்டாம், என்னோட பாட் டைம் சேலரி இப்போ என் செலவுக்கு போதும், இன்னும்    3 மாசத்துல என்னோட ஸ்காலர்ஷிப் பணம் வந்துடும் என்னால சமாளிக்கமுடியும் என்றவள் அவர் பதிலை எதிர் பார்க்காமல் தன் அறைக்கு வந்தாள்.

இது எப்போதும் நடப்பது தான் என்றாலும், இந்த முறை மணம் வெறுமையாக இருந்து.

அதுவும் இன்று காலையில் தான் சிவநேசன் மாமாவை சந்திக்க சென்று இருந்தால்.

அவரை பார்த்தபின் தன் கடந்த காலத்தை மறுபடியும் தோன்டிபார்த்த வலி, மணம் இரணமாய் வலித்து.

எப்படி எல்லாம் இருந்து இருக்க வேண்டிய வாழ்க்கை இன்று, எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை.

இவள் மருத்துவமனை செல்ல போவதாக செல்ல இளா அதை முற்றிலும் மறுத்து இருந்தான், அதற்காக அவன் கூறிய காரணமும் நியாயமானது தான். ஆனால் இவளால் அவரை சந்திக்காமல் இருக்கமுடியவில்லை.

இளா வேறு ஒரு வேலையாக வேலுர் வரை சென்று இருக்க அந்த நாளை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டவள், மருத்துவமனை சென்று இருந்தால்.

இவள் சென்ற நேரம் அங்கு காவலுக்கு இருந்தவர், டிஜிபி யுடன் அவர் வீட்டில் பார்த்து இருக்கிறாள். இவளை அவருக்கும் அடையாளம் தெரிந்து இருந்து.

தான் வந்த விஷயம் சொல்ல முதலில் மறுத்தவர் பின் அவளை அனுமதித்தார். அதுவும் அந்த சமயம் யாரும் அங்கு இல்லை, அவர் மனைவியும் வீட்டிற்க்கு சென்று வருவதாக கூறி இருந்தார்.

அதனால் அவர்கள் வரும் முன் 10 நிமிடத்தில் வந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதித்தார்.

அறைக்கு வந்தவள் அவரை பார்த்தாள், நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தார். ஆக்சிஜன் மாஸ்க்கு பெருத்தி இருந்தனர் அவர் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் அவர் கைகளை பற்றிக்கொண்டாள்.

வந்து விட்டாள் தான் ஆனால் என் பேச வந்தாள் எப்படி அவரிடம் விளக்கமுடியும் என்று அவளுக்கு தெரியவில்லை.

ஆளால் அவள் வந்த சிறுது நேரத்தில் கண்விழுதவர் வாமா எப்படி இருக்க? என்ற அவர் கேள்வியில் அவள் தான் வீக்கித்து இருந்தாள்………..

………………………………………………..

ப்பா ஒரு வழியா அந்ந வளவன் தலைவலி முடிஞ்சுது! இனிமே இந்த பிரச்சனைல இருந்து சுலபமா வெளிய வந்துடலாம் என்று எண்ணியவாறே, ஹாலில் உள்ள ஷேபாவில் அமர்ந்தவாரு தன் கைப்பேசியை பார்த்துக்கொண்டு இருந்தார் ரவியின் தந்தை (இவன் என்ன நல்ல விஷயத்தையா பார்க்க போறான்)

ரொம்ப நாள் ஆச்சு இன்னிக்கு கெஞ்சம் ரிலக்சா இருக்கலாம், அதுக்கு யாரை வரச்சொல்லாம் என்று எண்ணமிட்டவாரு.

அங்கு வந்த அவர் தர்ம்பத்தினி, என்ன தான் நினைச்சி இருக்கிங்க, இதுக்கு முன்னால தான் அந்த வளவன் இருந்தான் கேஸ் ஒன்னும் பன்ன முடியில, இப்பதான் அவன் தற்கொலை பண்ணிடு போய்டானே என் பையனை வெளியில கொடு வரவேண்டிய வேல பாக்கரதவீட்டு, போன்ல எண்ண வேல?

எவள இன்னிக்கு பீச்சு ஹவுசுக்கு வர சொல்லாம் யோசனையே? உனக்கு என்னயா? என் புள்ள இல்லனா நிறைய வாரிசு இருக்குனு நினைப்பா?

ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ என் புள்ளய மட்டும் இது இருந்து வெளி கொண்டு வரலனு வெச்சுக்கோ!? அப்பறம் உன் வண்டவாளத்தை எல்லாம் நானே தன்டவாளத்துல ஏத்திடுவேன்!

அட இவ எவடி உனக்கு நான் ஒன்னும் பண்ணலனு தெரியுமா?

இப்ப அந்த வளவன் உயிரோட இல்லாம இருக்கறதுக்கு காரணம் யாரு தெரியுமா?

என்ன சொல்ரிங்க அப்போ அந்த வளவன போட்டது நீங்கதானா?

என்றார் மகிழ்ச்சி பொங்க !

இல்லை அது நான் இல்ல!

அப்போ ஆள வச்சு போட்டிங்களா?

அது அப்படியும் சொல்லாம்? அது கொலை தான் ஆனா கொல இல்ல!

எண்ண சொல்ரிங்க எனக்கு எதும் புரியல! என்றாள் அவள் 

அவன அரஸ்ட் பன்னப வேன அவன் முக்கிய குற்றவாளியா இருந்து இருக்கலாம், ஆனா கேஸ் நடந்து இருந்தா எல்லாமே வெளிய வந்து இருக்கும்.

ஒரே ஒரு இயரிங் நடந்து இருந்தாலும் வளவன் எல்லாத்தையும் கோர்ட்டுல சொல்லி இருப்பான், அது அப்பறம் நான் இல்ல அந்த ஆடவனே வந்த கூட இவனுங்க இரண்டு பேரும் வெளிய வந்து இருக்க முடியாது. 

அது மட்டும் இல்ல இன்னும் யார் எல்லாம் இதுல மாட்டி இருப்பாங்கனு சொல்லமுடியாது.

அதனால தான் வளவன் கைது பன்ன அடுத்தநாளே, நான் ஆனந்தனை வேற கேஸ்ல உள்ள அனுப்பி வைச்சேன்.!

என்னது ஆனந்தனையா?

ஆமா…

என்ன இருந்தாலும் அவன் என் பையன்டி என்னோட மூளைய முழுசா அவனுக்குதான் ஆடவன் கொடுத்து இருக்கான். அவன் சிந்தனை செயல் எல்லாமே என்ன மாதிரியே.

போதுமே உங்க வப்பாடியோட புள்ள புரானம்!!!

அப்போ அவன் தான் அந்த வளவன கொன்னதா?

இல்ல ஆனா அவன் சாகறதுக்கு ஆனந்தன்தான் காரணம்!

புரியல?

நான் நினச்ச மாதிரி அந்த டிஜிபி இந்த கேஸ் மூலமா எப்படியாவது என்ன சிக்க வைக்கனும் நினச்சான். ஆதனால தான் இந்த கேஸ் ஆரம்பத்துல இருந்து இளா கிட்ட கொடுத்து விசாரிக்க வைச்சான்.

இளா நேர்மையா அதே சமயத்துல எல்லாத்தையும் நேர்ரடையா பன்னதால என்னால ஆரம்பத்துல இந்த கேஸ்ல ஒன்னும் பன்ன முடியில.

அதனால தான் ஆனந்தன இதுல கொண்டு வர வேண்டியதா போச்சு. 

அவனுக்கு பணம் ஒன்னுதானு கூறி. பணத்துகாக என்ன வேன செய்வான். அவனபத்தியும் அவனுக்கும் எனக்கும் இருக்க உறவு முறை பத்தியே யாருக்கும் தெரியாது.

அவன அடுத்த நாள் ஒர் ஈவிடீசீங் கேஸ்ல அரஸ்ட் பன்னாங்க, அவனையும் வளவனோட பக்கத்து செல்ல தான வைச்சி இருந்தாங்க, அவன் மொதுவா வளவனோட பழக முயற்சி பன்னான் முதல அவன் பிடி கொடுக்கல, ஆனா அப்பறம் அவனே நம்மவலையில் தானா வந்து சிக்கினான்.

………………………….

இளா வளவனை கைது செயித பிறகு அடுத்த இரண்டு நாளில் வழக்கின் முக்கிய குற்றவாளி யார் என்று தெளிவாக அறிந்துக்கொண்டான்.

அதே சமயம் வளவன் இதில் சிக்க வைக்க பட்டு இருக்கிறான் என்பதையும், பின்னால் இப்படி எதும் பிரச்சனை வந்தால் வளவனை சிக்க வைப்பது தான் அவர்கள் திட்டம் என்னும் அவன் புரிந்து க்கொண்டான்.

ஆனால் அவர்கள் எதிர்பார்க்காது இளாவை போல் ஒருவனிடம் வழக்கு ஒப்படைக்கபடும் என்பது தான். எப்படியும் போலீஸ்சை சரிகட்டி தப்பித்து விடலாம் என்ற அவர்கள் கணக்கு இங்கு தவறானது.

இளா வளவனிடம் வெளிபடையாக வழக்கின் நிலையா விலக்கி இதில் அவன் எப்படி சிக்கி இருக்கிறான் என்பதையும் விளக்கினான்.

உன்னுடைய ஒத்துழைப்பு இருந்தால் இந்த வழக்கிலு உண்மை குற்றவாளிகள் பிடி படுவார்கள் என்றும், எதற்க்கும் பயபடமால், இருக்கும் படியும் சொன்னான்.

முதலில் இளா வை நம்பலாம வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவன், பின் அவனின் நடவடிக்கையில் அவனை முழுமையாக நம்பினான்.

அதோடு ஒரு முக்கியமான ஆதாரம் பற்றியும் அது இருக்கும் இடம் பற்றியும் அவன் இளாவிடம் பகிர்ந்துக்கொண்டான்.

அதே சமயம் இளா சிவநேசனையும் சந்தித்து எல்லாவற்றையும் கூறினான், அதே சமயம் அந்த ஆதாரம் பற்றியும் அது இருக்கும் இடம் பற்றியும் சொல்லி அதை தன்னிடம் ஒப்படைக்கும் படியும் கோட்டுக்கொண்டான்.

அவரும் மகன் மீது தவறு இல்லை என்று தெரிந்தவுடன், இளாவிற்கு உதவுதாக கூறினார்.

இந்த நிலையில் தான் ஆனந்தன் மேதுவாக வளவனுடன் நட்புக்கொண்டான், அதற்கு சிறையில் இருக்கும் அவன் ஆட்கள் அவனுக்கு உதவினர்.

தீடீர் என்று அவனை சிறையில் சிலர் தாக்க தொடங்க அருகில் இருந்த வளவன் காவலரை அழைத்து அவனை காபாற்றினான். அது முதல் அவர்கள் நட்பு வளர ஆரம்பித்து.

தான் படிப்பு முடித்து விட்டு வேலை தேடுதாகவும், நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன் என்றும், ஒர் நாள் பஸ்சில் தன் சான்று இதழ்கள் தெலைந்துவிட்டதால் அது பற்றி புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றதாகவும்.

அங்கு என்னை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதால், அந்த ஏட்டை அடித்துவிட்டேன், அதனால் என் மேல் பொய் கேஸ் போட்டுவிட்டாற்கள் என்னும் தன் பொய் கதையை வளவனிடம் கூறினான். 

மெல்ல மெல்ல அவனுக்கு உதவுது போல் அவன் போலீஸ்சில் என்ன சொன்னான் என்ற தகவல்களை அவனிடம் இருந்து தெரிந்துக்கொண்டான்.

பின் அவன் ஆட்கள் மூலம் வழக்கு அவனுக்கு எதிர்ராக போவதாக அவனை நம்பவைத்தான், முதலில் அவன் அதை நம்பாவிட்டாலும், ஒர் நாள் இரு காவல்கள் ரவி மற்றும் ராகவ் ஜாமீனில் எடுக்க நடவடிக்கைகள் மேற்க்கொள்வதாகவும் இன்னும்  ஒர் இரு நாளில் அவர்கள் வெளியில் வந்து விடுவார்கள் என்னும் ஆனந்தன் சென்னபடி அவன் அருகில் இருக்கும் போது பேசினர்.

அதி பற்றி அவன் ஆனந்தனிடம் கேட்க அவங்களுக்கு நிறைய செல்வாக்கு இருக்கு ஒர்வாட்டி வெளிய வந்துடா , அப்பறம் எங்க அவனுங்க உள்ள வரபோறானுங்க?

என்றவன் உன்னை ஜாமீனில் உங்க வீட்டில் எடுக்க ஏதும் முயற்ச்சி செயலையா? என்றான்.

அதற்க்கு வளவன் இல்லை எனும் விதமாக தலையாட்ட…

சிறிது நேர அமைதிக்கு பிறகு வளவன் அந்த யோசனையை கூறினான்.

அவனின் அந்த யோசனை அவனயே பலிவாங்கும் என்று அப்போது வளவனுக்க தெரியாது ……………………..

     நிலவு தேயும்………… 

Advertisement