Advertisement

“ஏலியன் அட்டாக் ப்ரெவென்டெட்..  வி ஆர் சேப் சேப்.. சேப்..” என்று இப்போது குறைந்த ஒலியில் கூவிக் கொண்டிருந்தது ஒலிபெருக்கி. 
அப்போதுதான் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டனர் மூவரும். டோராவின் மூக்கு துவார அமைப்பிலிருந்து கூட சிறு புகை வெளியேறியது. 
“ஷப்பா.. ஒவ்வொரு நொடியும் நம்ம பயந்து பயந்து வாழறோம்.. ஆனா பூமியில எல்லாரும் எவ்வளவு பாதுகாப்பா சந்தோசமா இருகாங்க பாரு தேவ்” என்றாள் ரியா வருத்தத்துடன்.  
எப்போது எது மோதுமோ எந்த ஏலியன் இருக்குமிடத்தை அழித்து செல்லுமோ என்று ஒருவித பயத்துடனே நீல கிரக மக்களின் வாழ்வு இருக்கும்.
“ஆமா ரியா அங்க நிம்மதியான வாழ்கை.. ஆன இருக்கற எல்லா வளங்களையும் இவங்களே அழிக்கறாங்க..” என்றான் சோகத்துடன் சற்றுமுன் ஒரு துளி நீர் இல்லாமல் அவனே இல்லாமல் போயிருக்கும் சூழலை எண்ணி. 
“பூமில ஒவ்வொரு வளங்களும் வீணாக்குற அளவுக்கு குவிந்து இருக்கு.. ஆனா இங்க நம்ம சுதந்திரமா மூச்சுவிடக் கூட முடியாம வாழ்த்துகிட்டு இருக்கோம்” என்றாள் ரியா அவள் அணிந்திருந்த மாஸ்க்கை நீவியபடி.. 
மீண்டும் திரை சுழன்று பின் நின்றது. மூவரும் கனத்த இதயத்துடன் திரையை நோக்கினர். 
திரையில்.. 
அது ஒரு லேடீஸ் ஹாஸ்டெல்.. 
மலை மலை மலை மல்லே மலை
மல்லே மருதமலை
சிலை சிலை சிலை சில்லே சிலை 
சில்லே வெங்கலசிலை
என்று ஒரு சிலர் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க.. 
மொட்டை மாடியில் நின்றுகொண்டு தொப்.. தொப்.. என்று சிலர் துணி துவைக்கும் சத்தத்தோடு..  
ஏலேலோ ஐலசா..  
அழுத்தி போடே ஐலசா..
  
பாடலும் வந்து சென்று கொண்டிருந்தது.  
“ஹே நில்லுடி” என ஒரு இளம்பெண் தன் தோழியை துரத்திக் கொண்டு ஓட.. 
“நிக்கமாட்டேன் போடி” என அவளுக்கு போக்குக் காட்டிக்கொண்டு ஓடினாள் மற்றவள். 
“என் கையில சிக்குனா டின்னு கட்டிருவேன்” 
“சிக்குனாத் தானே!! முடிஞ்சா புடி” 
இருவரும் ஆளுக்கொரு பக்கெட்டுடன் மூச்சு வாங்க ஓடிக் கொண்டிருந்தனர். தேவ் ரியாவிற்கு அவர்கள் யாரென்று தெரியவில்லை.. 
முகம் தெரியாமல் பாக் கிரௌண்ட் எபக்ட்டில் திரையில் கேமரா போய்க் கொண்டிருந்தது. 
அது வேறு யாராக இருக்கும்!! அனைத்தும் அவர்களது முன்னோர்களே!! 
சங்கமித்ரா தன் கையிலிருந்த பக்கெட்டை சாய்த்து அதிலிருந்த திரவத்தை சிவாவின் முதுகிற்கு குறிவைத்து வீச.. அதில் நனைந்த சிவபரணிகா தன் கையிலிருந்த பக்கெட்டை சாய்த்து அதிலிருந்ததை திரவத்தை தோழியின் முகத்திற்கு நேராய் வீசினாள்.  
“அய்யயோ!!” என்று அலறினான் தேவ். 
“என்னாச்சு தேவ்” 
“நம்ம பொக்கிஷத்தை தான் அவங்க வீணாக்கிட்டாங்க” ரியாவும் உற்று பார்த்தாள்.. அந்த வாளியில் நிரப்பப்பட்ட அனைத்தும் தண்ணீர் என்றறிந்து அதிர்ச்சியில் உறைந்தாள்.  
“யாரு தேவ் இவங்க ரெண்டு பேரும்” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அவள் வினவ.. 
“அதுல ஒன்னு உன் பாட்டியாகத் தான் இருக்கும்” என்றான் அப்போதும்.. 
“கண்டிப்பா இருக்காது.. அதுல ஒன்னு உன் பாட்டி தான்” என்றாள் ரியா.. 
அங்கொரு யுத்தம் துவங்க..  
“இதுக ரெண்டும் உங்க பாட்டிங்க தான்” என்றது டோரா.. இருவரையும் கேவலமாக பார்த்தபடி.

இதை கேட்டபின் இருவருக்குள்ளும் இதயம் வெடித்து சிதறுவதுபோல் இருக்க.. சிறிதுநேரத்திற்கு எல்லாம் ஆழ்ந்த அமைதி.. 
காலக்ஸி பாக்சில் சார்ஜ் குறைந்துகொண்டே வந்தது. அது அணைந்துவிட டோரா எழுந்து சென்று அதன் உடம்பிலிருந்து அதற்கு சார்ஜ் ஏற்றிவிட்டு வந்தது. 
தேவும் ரியாவும் கையிலிருந்த அசைன்மெண்டை பார்த்தனர் பின் ஒருவரை ஒருவர் பார்த்தனர் ‘பொக்கிஷத்தை வீணாக்குதல்.. பூமி அழிய எங்களது பாட்டிகள் தான் முக்கிய காரணிகள்’ என இருவரும் பார்த்து தெரிந்து கொண்ட விஷயங்களை வைத்து அசைன்மெண்டை முடித்தனர். 
“இதுக்கெல்லாம் காரணம் நம்ம பாட்டிங்க தானா தேவ்” என்று கேட்ட ரியாவின் கண்களில் புகை வந்து வந்து போனது. அவள் அழுகிறாள். கண்களில் கூட நீர் இல்லை நீல கிரஹத்தில்..  
“இல்ல ரியா அவங்க மட்டும் காரணம் இல்ல..” இது டோரா 
“அப்போ தாத்தாவுமா காரணம்” என்று தன் சந்தேகத்தை முன்வைத்தான் தேவ். 
“அப்படி சொல்லல தேவ்.. உங்க பாட்டிக செஞ்சதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. காலம் மாற.. காட்சி மாற.. ஆட்சி மாற.. சுயநலம் தலைதூக்க.. அடுத்த கால கட்டத்தில் வந்தவங்க எல்லாம் பூமியை அதிகமா சுரண்டுனதாலதான் எல்லா வளங்களும் குறைந்து நமக்கு இந்த நிலைமை. பூமியே இல்லாம போற அளவுக்கு மக்கள் ஆட்டம் போட்ருக்காங்க.. பூமில உயிர்கள் வாழத் தகுதியற்று இப்போ நம்ம எல்லாம் நீல கிரஹத்துல இருக்கோம்” என்றது டோரா.. கம்ப்யூட்டர் வாய்ஸில். 
“வருங்காலத்தை பற்றி யோசிக்காமல் இப்படி பண்ணிட்டாங்களே!! நமக்கும் பூமியும் அதிலிருக்கும் வளங்களும் சொந்தம் ஆகியிருக்கும்.. அவங்கள மாறி நாமளும் சந்தோசமா பூமியில வாழ்ந்திருப்போம்.. எதுவும் கையில இருக்கும்போது தெரியாது அதோட மதிப்பு.. அது இல்லாமல் ஏங்கும்போது தான் நம்ம பாதுகாத்து வைக்காம போய்ட்டோமேன்னு தோணும். இவர்களுக்கும் நம்ம நிலைமை வந்தா தான் புரியும் போல.” என ஏக்கப் பெருமூச்சுடன் அமர்ந்திருந்தனர். 
இவர்கள் இப்படி இருக்க.. டோரா தான் திரையையே பார்த்தபடி இருந்தது. அதற்கும் பூமியில் வாழ ஆசை.  
“தேவ் எனக்கு ஒரு கடைசி ஆசை” “சொல்லு ரியா”
“இதுவரைக்கும் நம்ம பாட்டிகளை மட்டும்தானே பார்த்தோம்.. எனக்கு நம்ம பாட்டிகளோட தாத்தாவை பார்க்கணும்.. ஐ மீண் அவங்க பார்ட்னர்ஸ்” 
“எனக்கும் ஆசைதான்.. ஆனா அந்த நேரத்துல அவங்க கூட யார் இருக்காங்களோ அவங்கதான் நமக்கு தெரிவாங்க.. இதுவரைக்கும் பாட்டிக தனியாத்தான் இருந்துருக்காங்க நம்ம பார்த்த சீன்ல எல்லாம்..” என்று தேவ் கூறிக் கொண்டிருக்கும்போதே 
“தேவ் அங்க பாரு நம்ம பாட்டிக பக்கத்துல யாரோ வராங்க” என்றபடி என்று ரியா திரையையே பார்க்க.. டோராவும் தேவும் வேகமாய்த் திரும்ப.. 
திரையில்.. 
அந்த அரை மணி நேரம் முடிய சில நொடிகளே மீதம் இருக்க..
“மிஸ். சங்கமித்ரா.. மிஸ். சிவபரணிகா..” என்று இரு வேறு கம்பீரமான குரல்கள் ஒலிக்க.. குறிப்பாக அது ஆண்மகன்களின் குரல்.. 
அது யாரென்று பார்க்க சிவாவும் சங்கமியும் ஸ்லோவ் மோஷனில் திரும்ப.. 
தேவ், ரியா மற்றும் டோரா மூவரும் ஆவலாய் காத்திருந்தனர்..
டிக்டிக்.. டிக்டிக்.. 
அறை முழுதிலும் அவ்வொலி ஆக்கிரமித்தது.. அனைத்து விளக்குகளும் ஒருநொடி விட்டு விட்டு எரிய.. 
“டேஞ்சர்.. டேஞ்சர்.. ஆஸ்டெராய்டு கமிங் நியர் அவர் பிளேஸ் மூவ் டு சேப் ஜோன்..  டேஞ்சர்.. டேஞ்சர்..” என்று ஒலிப்பெருக்கி அபாயக் குரலில் கூவிக்கொண்டிருக்க.. 
தேவ், ரியா, டோராவின் முகத்தில் பய ரேகைகள்.. 
டிக்டிக்.. டிக்டிக்..  என்ற ஒலி விட்டுவிட்டு ஒலிக்க.. 
டமார்ர்… வெடித்து சிதறுவதுபோல் ஒரு பெரும் சப்தம். 
“ஆஆ..” என்ற அலறல் சத்தமும் அதோடு ஒலித்தது..
***** 
10
டிக்டிக்.. டிக்டிக்.. 
டமார்ர்… 
இப்போது ஒலித்த சத்தத்தில் நீல கிரகத்தில் விண்கல் மோதி சிதைத்ததாகவே நினைத்துக்கொண்டு “ஆஆ” வென அலறியபடி படாரென கண் விழித்த சங்கமித்ரா கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தாள். 
அவள் மேல் இருந்தது காலக்ஸி பாக்ஸ்.. 
அதிலிருந்து டிக்டிக்.. டிக்டிக்.. என்று சத்தம் வர.. சிவப்பு நிற எலீடி விளக்கும் விட்டு விட்டு எரிய.. பயத்தில் அதை தூக்கி எறிந்துவிட்டாள். 
அது சுவரில் மோதி டிக்.. டிக்.. டிக் என்று மூன்று முறை ஒலித்தபின் அணைந்து போனது. 
அதோடு நில்லாமல், “ஐயோ காப்பாத்துங்க.. காப்பாத்துங்க” என்று கூச்சல் எழுப்ப ஆரம்பித்துவிட்டாள். 
சில நொடிகளுக்கு முன்.. டமாரென்று அறைக் கதவை திறந்தபடி வந்த சிவபரணிகாவின் கைப்பேசி வைபரேஷன் மோடில் ஆட்டம் போட.. அறையினுள் செல்லாமல் அப்படியே காரிடோரில் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தாள். தூரத்தில் வார்டன் வருவது தெரிந்ததும் கையிலிருந்த செல்போனை மறைத்துக்கொண்டாள்.  
இரவில் இரண்டு மணி நேரம் மட்டுமே கைப்பேசி உபயோகிக்க அனுமதி அளிக்கப்படும். அதன்பின் அனைவரது கைப்பேசியையும் வார்டனின் அறையில் ஒப்படைத்துவிட வேண்டும் அடுத்தநாள் இரவுதான் மீண்டும் அதை உபயோகிக்க முடியும். இப்படி கெடுபிடியான விதிமுறைகள் அந்த ஹாஸ்டலில். 
சிவபரணிகா போன்ற ஆட்கள் தனக்கு ஒன்று வார்டனுக்கு ஒன்று என்று கைபேசியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆயிற்றே அதுதான் இப்போது வார்டனை பார்த்ததும் இந்த பதுக்கல்.. 
அந்த வேளையில் வாடர்ன் ரௌண்ட்ஸ் வந்து கொண்டிருக்க..  அந்நேரத்தில் தங்களது பக்கத்துக்கு அறையான தொலைக்காட்சி வசதியுடன் கூடிய பெரிய ஹாலிலிருந்து “காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..” என்று அபாயக்குரல் ஒலிக்க.. விரைந்து அறைக்கு திரும்பி கதவை அடைத்தாள். 
தன் தோழி கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதை கண்டு அவள் அருகில் வந்தவள் தலை கீழாய் விழுந்திருந்தவளை நிமிர்த்தி “ஏய்ய்.. கத்தாதேடி வார்டர்ன் உள்ள வந்து தொலையப் போகுது.. அப்பறம் நம்ம பல நாளா பதுக்கி வெச்சிருந்த செல்போன் ஹோகயா..” என அவள் வாயை தன் கைகளால் பொத்தினாள்.  
இது என்ன இடம் என்பதுபோல் சுற்றிலும் பார்வையை செலுத்தினாள் சங்கமித்ரா. 
“இது ஹாஸ்டல்டி.. நீ இருக்கிறது நம்ம ரூமுக்கு பக்கத்துல இருக்குற ஹால் ஒன்.. ரொம்ப நேரம் தூங்கிட்டு இருக்கயேன்னு எழுப்ப வந்தேன்” என்றாள் அவள் பார்வை அறிந்து. 
இன்னும் சங்கமித்ரா தெளியாமல் இருக்க..  
“மொதல்ல இங்கிருந்து கிளம்பு நம்ம ரூம்க்கு போலாம்” என அவளை இழுத்துக்கொண்டு அவர்களது அறைக்கு சென்று கட்டிலில் அமரவைத்து மின்விசிறியை வேகமாய் வைத்துவிட்டு தண்ணீர் எடுத்து வந்து பருக குடுத்தாள். அதனை வாங்க சங்கமியின் கைகள் நடுங்கியது. இருந்து வாங்கி மெல்ல பருகிவிட்டு மூச்சை இழுத்து விட்டாள். 
“அடியேய் தாறு மாறா படிச்சிட்டு இருந்தியேன்னு உன்ன கொஞ்ச நேரம் தூங்க விட்டா இப்படியா கத்துவே காட்டேரி” 
“இல்லடி நம்ம பேரப் பசங்களுக்கு ஆபத்து அதான் கத்தினேன்” என்றாள் சாதாரணமாக.  
பேரப் பசங்களா!! நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்துவிட்டாள் சிவபரணிகா..  
‘நாளைக்கு இன்டெர்னல்ஸ் வெச்சுட்டு இவ பெணாத்தறது என்ன.. படிச்சு பைத்தியமே ஆகிட்டாளா!! ஐயோ கடவுளே காப்பாத்து.. இவளை உன் கோயிலுக்கு கூட்டிட்டு வந்து பூக்குழி இறங்க வைக்கிறேன்’ என்று மனதில் வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்க..
சங்கமித்ராவோ, “அப்போ ஆஸ்டெராய்டு மோதலையா!! உலகம் அழியலயா!! ஆகமொத்தம் ப்ளூ பிளானெட்டே இல்லையா!!” என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி.. நிறுத்தி கண்களை இங்கும் அங்கும் உருட்டியபடி கூறிக்கொண்டிருக்க..  
“பேயே ஓடிவிடு ஷுவாகா.. பைத்தியமே தெளிந்துவிடு ஷுவாகா..” என்று மந்திரங்களை கூறிக்கொண்டு சங்கமியின் தலையில் ஒரு பாட்டில் தண்ணீரை கொட்டினாள் சிவபரணிகா. 
“ஏய் ஏண்டி தண்ணிய இப்படி வேஸ்ட் பண்ணறே!! நம்ம பேர பசங்க தண்ணி இல்லாம எப்படி கஷ்ட படறாங்க தெரியுமா” இன்னும் கனவின் தாக்கத்தில் இருந்து மீளாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
“என்னடி உளர்றே.. எரும எரும.. நம்ம காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் டி.. நமக்கு எப்போ!! ம்ம்ம்ம்.. க்கும்.. பேர பசங்க வரைக்கும் போயிருக்க.. கனவு ஏதாச்சும் கண்டியா?” என்று கேட்டேவிட்டாள். 
அவளுக்குத் தெரியும் இதுபோல் பல கனவுகளைக் கண்டு தங்களை உயிரோடு கொள்ளுவாள் என்று. போனமுறை நடு ஜாமத்தில் அவளுக்கு இதுபோல் ஒரு கனவு வர.. அவள் கட்டிலில் சந்தியாவிற்கு சிவபரணிகாவிற்கும் நடுவில் படுத்திருக்க.. பாரபச்சம் பார்க்காமல் இருவருக்கும் குடுத்த உதையில் இருவரும் ஆளுக்கொரு திசையில் விழுந்தது நினைவில் வந்து போனது சிவாவிற்கு. 
அதனால் தான் எந்த பதற்றமும் இன்றி ‘இன்னிக்கு என்ன காத்துகிட்டு இருக்கோ’ என்று அதைத் தெரிந்துகொள்ள அமைதியாக நின்றிருந்தாள். 
“கனவுதான் போல.. ஆனா நிஜமா நடந்தமாதிரி இருந்துச்சு” 
“அப்படி என்ன பார்த்தே!! சொல்லித்தொலை” என்று சிவா கேட்டதும் தன் கனவை கூறி முடித்தாள் சங்கமி. 
கூறிமுடித்ததும், “இனிமேல் நீ குளிக்க ஒரு பக்கெட் தண்ணி தான் யூஸ் பண்ணனும்.. நீ மட்டுமில்ல எங்க அந்த சந்தியா.. அவகிட்டயும் சொல்லிடு” என்று சங்கமி கட்டளையிட 
“அவகிட்ட எல்லாம் நீயே பேசிக்கோ.. ஆனா ஒரு பக்கெட் தண்ணி எனக்கு பத்தாதே டி” என்றாள் சிவபரணிகா. 
“பத்தலைனா குளிக்காத.. தண்ணிய வேஸ்ட் பண்ணவே கூடாது.. தண்ணி மட்டுமில்ல எதையுமே வேஸ்ட் பண்ண கூடாது” 
சிவா வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். மோட்டிவேஷன் வீடியோ பார்த்தால் ஐந்து நிமிடங்கள் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அடுத்த நிமிடம் இருந்த சுவடில்லாமல் போவைதைபோல் தான் இவளது கதையும் என்றெண்ணிக்கொண்டு நின்றிருந்தாள். 
“அப்பறம் நம்ம ரூம் வெக்கேட் பண்ணும்போது பழைய டெஸ்ட் பேப்பர் எல்லாம் பேப்பர் காரருக்கு போட்டுரலாம்.. ரீசைக்கிள் பண்ணிடுவாங்க” 
“ஐயோ நம்ம மார்க்கு பார்த்து காரித் துப்புவாங்களே” சிவபரணிகாவிற்கு தன்மானப் பிரச்சனை தலை தூக்கியது. 
“நம்ம யாருன்னா தெரிய போகுது” 
“இருந்தாலும்.. நான் போடும்போது என்னோடதுன்னு தானே நினைப்பாங்க.. பேரெல்லாம் இருக்கும் பிராண்ட் பேஜ்ல.. வேற யாராவது பார்த்துட்டா..?” 
“ஆமா உன் பேரை பார்த்துட்டு உன்ன இன்டெர்வியூ எடுக்க வருவாங்க பாரு.. அப்போ ஒழுங்கா நல்ல மார்க் வாங்கு.. இல்லைனா பிரண்ட் பேஜை கிழிச்சுட்டு போடு..” 
“செகண்ட் ஆப்சன் ஓகே” 
“அப்பறம் நம்மளால அதிகமா செடி எல்லாம் நட முடியாது திடீர் புரட்சி எல்லாம் வேணாம்.. சோ ரொம்ப ஸ்பெஷல் டேய்ஸ் அதாவது பர்த்டேக்கு ப்ரெண்ட்ஷிப்டேக்கு எல்லாம் ஒரு மரம் நடலாம்.. அட்லீஸ்ட் வீட்ல ஒரு நியூ பிளான்ட் ஆச்சு வளர்க்கலாம்” 
“இது எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை.. டபுள் ஓகே..” 
இன்னும் நீல கிரஹத்திலேயே குடியிருந்த சங்கமி, “கனவு என் கண்ணை தொறந்திருச்சுடி.. அதுக்கு காரணமா இருந்தவர்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்” என்றாள் கனவில் வந்த தேவ் டோரா ரியாவை நினைத்து.. 
யோசனையில் இருந்த சிவா,  “நான்தான் டமார்ன்னு கதவை தொறந்துட்டு வந்து உன்னைய கண்ணை தொறக்க வெச்சேன்.. சோ எனக்கு தான் நீ தேங்க்ஸ் சொல்லணும்.. இட்ஸ் ஓகே நமக்குள்ள என்ன தேங்க்ஸ்.. பரவால்ல விடு” 
சங்கமி இதை கேட்டு புல் பைட்டிற்கு செல்லும் காளை போல் புஷ்.. புஷ் என்று வேக மூச்சோடு முறைக்க.. “நோ.. நோ வைலென்ஸ்.. ஷாந்தி ஷாந்தி..” என்று தோழியை அமைதி படுத்த முயன்றாள் சிவா. 
“நீங்க ஷட்டப் பண்ணிட்டு நான் சொல்லுறத கேளுங்க மிஸ்.சிவா” என்ற சங்கமிக்கு, 
“அப்படியே ஆகட்டும் சங்காத்தா.. சொல்லுங்கள்” என்று கைகளை உபதேசம் கேட்பவள் போல் வாய் முன் வைத்துக்கொண்டு கூறினாள் சிவபரணிகா.  
பூமியை அழிவிலிருந்து காப்பதாய் சங்கமி கொடி பிடித்து அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என்று பேசிக்கொண்டே போக.. அனைத்திற்கும் தலையை ஆட்டிவைத்தாள் சிவா. 
சங்கமி இப்போதைக்கு நிறுத்துவது போல் தெரியவில்லை.. திடீர் ஞானம் அல்லவா அதான் எண்டு இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது..  
குறுக்கிட்ட சிவபரணிகா, “ஏய் நிறுத்து நிறுத்து நீ அவென்ஜர்ஸ் பாரு.. இல்ல ஒண்டெர் வுமனா.. சூப்பர் பவெர்சோட அப்டியே பூமியை காப்பாத்த கெளம்புறாங்கலாமா.. பேசுது பாரு பைத்தியம்.. இவ சொன்னா மட்டும் எல்லாரும் கேட்டிருவாங்களா!!” என்றவள் 
‘என்னாலேயே கொஞ்ச நேரத்திற்கு மேல கேட்கமுடியால இவை போடுற ப்ளேடை.. இவளுக்கு என்கூட சண்டை கட்டிக்கிட்டு போன அந்த சந்தியாவே மேல்’ இதை மட்டும் முணுமுத்துக் கொண்டாள்.
அவள் அப்படிக் கூறியதும்  
“ப்ச்.. எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்ல.. நாளைக்கு நம்ம பேர பசங்க நம்மள குறை சொல்லக்கூடாது.. அவ்வளவு தான் எனக்கு..” என்றாள் சங்கமி பிளானட் ப்ளுவின் எபக்ட்டில்.
“ஏய் சும்மா அதவே சொல்லாத கேர்ள்.. எனக்கு தலை சுத்துது..” 
“சரி இது மட்டும் சொல்லு.. நான் சொன்னா நீ கேட்பியா மாட்டியா!!” 
“இதுல என்ன டவுட்.. கேட்க மாட்டேன்”  
“என்ன சொன்னே!! கம் அகைன்” என்று கண்களை சுருக்கியபடி ஸ்லோவ் மோஷனில் கூற.. 
“கண்டிப்பா கேட்பேன்னு சொன்னேன் செல்லம்.. ஷாந்தி.. ஷாந்தி.. நோ டென்ஷன்” என்று சிரித்துவைத்தாள். 
“ஹ்ம்ம்.. நான் செய்றத பார்த்து நீ செய்வ.. நம்ம சந்தியா செய்வா.. அப்பறம் என்ன!! நீ செய்ற சில விஷயங்களை உன்ன பிடிச்சவங்க செய்வாங்க.. சந்தியா செய்யுறதை அவளுக்கு பிடிச்சவங்க செய்வாங்க.. மாற்றத்துக்கு இது போதும்”  
‘ஒரு கனவை கண்டுட்டு இவ ஓவரா அலம்பல் பண்ணறாளே!!  நீ எத சொன்னாலும் கேக்கறேன் டி.. ஆனா தீபாவளி அன்னிக்கு நான் வெச்ச பாம்பு பட்டாசாலைதான் டெல்லி வரைக்கும் பொல்லுஷன்னு சொன்ன பாரு!! இதுக்குமேலயும் நான் தீபாவளி கொண்டாடணுமா!! நோ நெவெர் ‘ என்று ரத்த கண்ணீருடன் அமர்ந்திருந்தாலும் சங்கமித்ரா கூறிய விஷயங்களை ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை உணர்ந்து ஏற்றாள்.
***** 

Advertisement