Advertisement

துளி – 6

பொதுவாகவே சின்கொரியம் கடற்கரையில் அத்தனை கூட்டம் இருக்காது. அதுவும் அந்த காலை பொழுதில் விரல் விட்டு எண்ண கூடிய ஆட்களே இருந்தனர். அதுவும் கூட வெளிநாட்டவரே.

மாலை ஆறு மணிக்கு மேல் தான் பார்ட்டி என்பதால், எங்காவது போகவேண்டும் என்று  முதல் நாள் இரவே அனைவரும் சொல்ல, பிருந்தா தான் இந்த கடற்கரை நன்றாய் இருக்கும் என்று சொல்லி, டிரைவரோடு அனுப்பி வைத்தார்,

வந்து சில நேரம் அனைவரும் கடல் அலையில் விளையாடியவர்கள்,

“அக்கா போட்டோ எடுப்போம்…” என்று சொல்லி, அந்த கடலை பின்புலமாய் வைத்து, தேவியை பலவேறு நடன அசைவுகள் செய்யச் சொல்லி  புகைப்படமாய் எடுக்க, சரவணனுக்கு கேட்கவும் வேண்டுமா.

புகைப்படங்கள் எல்லாம் அலைபேசியில் பதிவனதோ இல்லையோ அவன் மனதில் மிக நன்றாகவே பதிந்தது..    

“மாம்ஸ் நீங்கலும் போங்க…” என்று சொல்லி அவனையும் உடற்பயிற்சி போஸ்கள் கொடுக்க செய்ய, அவனையும் ஒரு வழியாக்கினர்..

“டேய் இதெல்லாம் ஓவர்டா…” என்று சலித்தாலும், சளைக்கமால் அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தான் சரவணன்..

இது போதாது என்று தேவியையும் அவனையும் வைத்து ஒன்றாய் நிறைய நிறைய எடுக்க, போதும் போதும் என்று சொல்லு வகையில் புகைப்படமும், செல்பியும் எடுத்து முடித்து அலுத்துப் போய்,

“நாங்க கொஞ்ச நேரம் ஸ்விம் பண்ணிட்டு வர்றோம்.. நீங்க அதுக்குள்ள பேசுறதை எல்லாம் பேசி முடிங்க.. கொஞ்ச நேரம் தான்.. வந்திடுவோம்..” என்று பெரிய மனித தோரணையில் சொல்லி சென்றனர். 

அங்கே தனியாய் நீச்சல் குளமும் அமைக்கப்பட்டிருக்க அங்கே தான்   செல்வதாய் சொல்ல, சரவணன் தேவிக்கும் சிறிது தனிமை கிடைத்தது..      

பார்த்து மூன்றே நாளில் இத்தனை ஆழமாய் ஒருவரை காதலிக்க முடியுமா என்று கேட்டால் முடியும் என்று தான் தேவிக்கு இப்போது சொல்ல தோன்றும்.. அவளே எதிர்பாராத நிகழ்வு.

இருவரை பற்றி இருவருக்குமே அத்தனை ஒன்றும் இன்னனும் தெரியாது தான். ஆனால் மனதிற்கு பிடித்து இருந்தது. ஒருவரின் அருகாமை மற்றொருவருக்கு ஒரு இதம் தர, மனம் தன்னப்போல் இந்த உறவை விரும்பியது.     

“ஹ்ம்ம்… என் லைப்ல இவ்வளோ ஷார்ட் பீரியட்ல… அதுவும் இவ்வளோ இம்பார்டன்ட் டிசிஷன் எடுப்பேன்னு நினைக்கவே இல்லை.. உனக்கு தெரியுமா சனு என் டாட் அண்ட் மாம் லவ் மேரேஜ் தான். அப்பா என்கிட்டே கூட கேட்டிருக்கார் யாரையும் லவ் பண்றியான்னு.. பட் இப்போ சொல்லணும் எஸ் டாட் ஐம் இன் லவ்வுனு…” என்று சரவணின் தோளில் சாய்ந்தபடி, ஒரு கரத்தை அவன் கரத்தோடு கோர்த்தபடி சொல்ல,

“ஹ்ம்ம் மீ டூ.. லவ் இப்படி சட்டுன்னு வரும் அதுவும் ப்ளைட்ல பறந்து வரும் எல்லாம் நினைக்கலை.. கோவா கிளம்ப முன்னாடி என் அப்பாகிட்ட சொன்னேன்.. கோவா போயிட்டு வரும் பொது என் லவ்வரை கூட்டிட்டு வருவேன்னு.. நான் சும்மாதான் சொன்னேன்.. பட் இப்போ அதுவே நிஜமாகிடுச்சு…” என்று அவன் சொல்ல,

“ஓஹோ…. ஒருவேளை தேவதை எதுவும் ததாஸ்து சொல்லிருக்கும்…” என்று அவள் விளையாட்டாய் சொல்ல,

“தேவதை சொல்லலை… இந்த மோகினி தான் ததாஸ்து சொன்னா…” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட,

“எதிர்பார்க்கவே இல்லை….” என்று சொல்லியபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“ஹ்ம்ம் நானும்… தான்…”

நான் உன்னை காதலிக்கிறேன் என்றெல்லாம் அவள் சொல்லவில்லை. அவன் அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லை. கேள்விகேட்டு பதில் வாங்கி வருவதல்ல சில உறவுகள். முதலில் அவன் கேட்டால் சொல்வோம் என்று தான் தேவி நினைத்திருந்தாள், ஆனால் என்னவோ சரவணனிடம் அத்தனை பிகு செய்ய முடியவில்லை.

தன்னை தொடரும் பார்வையை அவளால் விலக்கி நிறுத்த முடியவில்லை. ‘உனக்கு தான் பிடிச்சிருக்குல்ல பின்ன என்ன…??’ என்று தோன்ற,   தனக்குண்டான உணர்வுகளை  அடுத்து அவனிடம் இருந்து மறைக்கவும் இல்லை.

இருவரின் இடக்கரத்திலும் அவரவர் செருப்புகள் இருக்க, வலக்கரமோ ஒன்றோடு ஒன்று பிண்ணியிருக்க, இயல்பாக ஒருவரில் ஒருவர் பொருந்தி போயினர்.

“தேவி…….” என்று சரவணன் ஆழ்ந்த குரலில் அழைக்க,

இந்த மூன்று நாட்களில் ஓரிரு முறை மட்டுமே அவன் அப்படி அழைத்தது நினைவு வர,

“ம்ம்…” என்று தலைதூக்கி கேள்வியாய் பார்க்க,

“உன்னை நான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு சொன்னேன்ல அது உண்மை தான்…” என்று சொல்ல,

“எங்க…???!!!” என்றாள் ஆவலாய்.

“எங்க வீட்ல தான்… ஆனால் நிஜமில்லை.. நிழற்படம்…”

“என்ன…???!!” என்று லேசாய் புரிந்தாலும் முழுதாய் புரியாது புருவம் சுருக்கி கேட்க,

“எஸ்.. உன்னோட போட்டோ.. ஒரு மேரேஜ் ப்ரோக்கர் கொண்டு வந்திருந்தார். பொதுவா எனக்கு அதில இன்ட்ரெஸ்ட் இல்லை.. ஷாப்ல ட்ரெஸ் செலக்ட் பண்ற போல பத்து போட்டோ வச்சி, அது இதுன்னு கம்பேர் பண்ணி, தென் எது பெஸ்ட்னு பார்த்து சோ நான் அந்த பக்கமே போக மாட்டேன்..

அம்மா தான் போட்டோஸ் வந்தா போதும் உடனே அலசி ஆராய்ச்சி பண்ணுவாங்க… அன்னிக்கு உன் போட்டோ பார்த்திட்டு டாட் கிட்ட காட்டி எதோ பேசிட்டு இருந்தாங்க. மாம் ஓவர் எமொசன்ஸ்ல பேசுறாங்களேன்னு நான் ஜஸ்ட் போட்டோவ எட்டி மட்டும் பார்த்திட்டு போயிட்டேன்.. பட் உன்னை ப்ளைட்ல அந்த கெட்டப்ல பார்க்கவும் நிஜமா அடையாளம் தெரியலை.. அகைன் சேரில பார்க்கவும் தான் தெரிஞ்சது…” என,

“ஓ..!!!” என்றவளுக்கு அதற்குமேல் என்ன சொல்ல தெரியவில்லை. அமைதியாய் அப்படியே நிற்க,

“என்ன சைலென்ட் ஆகிட்ட..??” என,

“ஹ்ம்ம் நம்ம அம்மாஸ் பத்தி தான்….” என்றாள் லேசாய் கவலையாய்..

“லவ் மேரேஜ்ல ப்ராப்ளம்ஸ் வரலைன்னா தான் ஆச்சர்யம்.. சம்திங் என்னவோ போகுது.. அதான் நாளைக்கு ரெண்டு பேமிலியும் வர்றேன் சொல்லிருக்காங்க…” என்றான்.

“என்ன என்ன போகுது…???”

“பாட்டி எதோ கெஸ் பண்ணிருக்கணும்.. அதான் எல்லாரையும் வர சொல்லிருக்காங்க…”

“உனக்கு எப்படி தெரியுமா.. என்கிட்ட அம்மா கேசுவலா தான் சொன்னாங்க.. வேற எதுவுமே கேட்கலை…”

“நோ நோ கண்டிப்பா நம்ம விசயம்னு தான் எனக்கு தோணுது…” என, அவனுக்கும் மனத்தில் தன் அம்மாவை நினைத்து லேசாய் ஒரு கலக்கம் மூண்டதுவோ என்னவோ.

ஏனெனில் சரவணனுக்கு நன்றாகவே தெரியும், கோதாவரி, தனக்கு பிடிக்காத ஒருவிசயத்தை எந்த காலத்திலும் ஏற்க மாட்டார் என்று.   இதுவரை கோதாவரியை அவன் எதிர்த்து ஒன்றுமே சொன்னதில்லை. பொதுவாய் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இவன் வீட்டில் இருந்திருந்தால் தானே. அப்படியே இருக்க நேரும் தருணங்களும் பெரிதாய் எதுவும் கருத்து வேறுபாடு வந்ததில்லை.

ஆனால் இன்றோ மஞ்சுவை சுத்தமாய் பிடிக்காது என்று தெரிந்தும், தெரிந்தும் என்ன தெரிந்தும், அதற்குமுன்னே தான் சரவணனுக்கு தேவியை பிடித்துவிட்டதே. அதன் பிறகுதானே அவள் யாரென்றே தெரியும். இதெல்லாம் தோன்ற, இவளை தான் விட்டுவிட கூடாது என்றும் ஒரு எண்ணம் பிறக்க, இதுநேரம் வரை கைகள் மட்டுமே பிடித்திருந்தவன்,

“மோகினி… உன்னை டைட்டா ஹக் பண்ணனும் போல இருக்கு…” என,

அவளுக்கு என்ன தோன்றியதோ, ஒருவேளை அவன் மனத்தில் இருந்த கலக்கம் அவளும் உணர்ந்தாளோ, இல்லை அவளுக்குமே அந்த அணைப்பு வேண்டுமாய் இருந்ததோ,

“ஹ்ம்ம் ஹக் பண்ணிக்கோ…” என்று திரும்ப,

“அடிப்பாவி.. இது பப்ளிக்…” என்று வாயில் அவன் விரல் வைக்க, அவன் செய்ததில் அவளுக்கு சிரிப்பு வந்தாலும், சுற்றி முற்றி பார்த்தவள்,

“அதான் யாரும் இல்லையே.. அப்படியேன்னாலும் பாரினர்ஸ் தானே…” இலகு போல் சொல்ல,

“பாரினர்ஸ் இருந்தாலும், நம்ம இந்தியால இருக்கோம்.. நமக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கு..” என, மீண்டும் அவளை தன் தோள்களில் சாய்த்துகொண்டான்..

“ஹ்ம்ம் இப்போதான் இன்னும் உன்னை ரொம்ப பிடிக்கிது…” என்ற தேவியின் குரலில் லேசாய் பெருமை எட்டி பார்க்க, அவனோ ஏன் என்பது போல் பார்த்தான்.

“ஹ்ம்ம் சில விசயங்கள்ல நீ ரொம்ப கரக்டா இருக்க.. நோடீஸ் பண்ணேன்.. மோர் ஓவர் உங்க மாம்க்கு நீ குடுக்கிற இம்பார்டன்ஸ்… இதெல்லாம் தான்.. இன்னும் இன்னும் உன்னை பிடிக்க வைக்குது…”

தேவி இப்படி சொல்ல, சரவணனுக்குமே முகத்தில் ஒரு ஜொலிப்பு தான். அவளுக்கு என்னவோ பதில் சொல்ல வாய் திறக்க, சரியாய் அதே நேரம் அவன் அலைபேசி அடிக்க, எடுத்து பார்த்தவன், “மாம்….” என்று சொல்லி அவள் முகம் பார்த்து பின், அழைப்பை ஏற்றான்.           

“ரியல்லி எப்போ மாம் வந்தது…???” என்று சரவணன் கேட்கும் போதே அவன் குரலில் அத்தனை உற்சாகம்.  குரல் மட்டுமில்லை முகமும் அதை அப்படியே பிரதிபலித்தது.. தன் அம்மாவோடு பேசிக்கொண்டே அருகே இருந்த தேவியை அவனது மோகினியை இறுக்கமாய் தோள் சேர்த்து அணைத்துகொண்டான்..   

“ஏன் நேத்தே சொல்லலை…..??” 

……

“ஓகே. ஓகே சார்ஜ் இல்லை… ஐ டிட்ன்ட் எக்ஸ்பெக்ட் திஸ் மாம்…” என்று உற்சாகமாய் சொல்ல, அந்த பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ,

“தேங்க்ஸ் மாம்…” என்று சிரித்தபடி சொன்னவன் சட்டென்று “நீங்க எப்போ வர்றீங்க…??? ” எனகேட்க, 

….

“ஈவ்னிங் தான் பார்ட்டி….இப்போ ஜஸ்ட் பீச்சுக்கு வந்தோம்…”

….

“ஹ்ம்ம் ஓகே… ஏர்போர்ட் வந்திட்டு சொல்லுங்க…” என்று அழைப்பை துண்டித்தவன்,

“எஸ் எஸ் எஸ்….” என்று கை முஷ்டியை மடக்கி லேசாய் குதித்தபடி சொல்லியவனை, ‘என்ன டா….’ என்பது போல் பார்த்தாள்.

அவன் முகம் பார்த்தாலே தெரிகிறது வந்தது எதுவோ மகிழ்வான செய்தி என்று. ஆனால் அப்படி என்ன சரவணனை இப்படி குதிக்க வைக்கும் செய்தி என்று தெரிந்துகொள்வதில் ஆவலாகவே,    

“சனு…. என்ன..??” என்று இதழில் ஒட்டிய சிரிப்புமாய், கண்களில் ஆவலும் கேள்வியும் சரிவிகிதத்தில் கலந்து கேட்டவளை பார்த்து சிரித்தவன், 

“எஸ்… ஐ காட் இட்…..” என்று இரு கைகளையும் தன் வாயருகே வைத்து கூவி சொல்வது போல் கத்த, அவனது ஆனந்த கூச்சலோ அந்த கடல் காற்றோடு சென்று பரவியது.

அவனது உற்சாகமே எதோ மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று புரிய,“ஹேய் சனு என்னன்னு சொல்லேன்…” என்று சட்டையை பிடித்து தேவி உலுக்க,      

“நெக்ஸ்ட் மன்த் வரவேண்டிய போஸ்டிங் ஆர்டர், நெக்ஸ்ட் வீக் ஜாயின் பண்ண சொல்லி வந்திருக்கு…. அதுவும் சென்னைலயே… அசிஸ்டெண்ட் கமிசனர் ஆப் போலீஸ்…” என்று தன் சட்டையை பிடித்த அவள் கைகளை அப்படியே பிடித்து தன் நெஞ்சில் அழுத்தியபடி சொல்ல,

“ஹேய்… வாவ்வ்வ்… சூப்பர்…. கங்கிராஜுலேசன்….” என்று தேவி அவன் கரத்தை பிடித்து குலுக்கி, அவன் நெற்றியில் முத்தமிட,

பதிலுக்கு மீண்டும் அவனும் தன் மகிழ்ச்சியை அவளோடு பகிர்ந்துகொள்ள, மீண்டும்  “ACP….” என்று சொல்லி மீசையை முருக்க,  என்ன நினைத்தானோ சட்டென்று அவன் முகம் அப்படியே மாறிவிட்டது.  அவன் முகத்தையே பார்த்து பேசிக்கொண்டிருந்தவள், திடீரென சரவணன் முகம் மாறவும்,

“என்னாச்சு …??” என்று வினவ,

“நத்திங்…” என்று தலையை குலுக்கி,

“போலாமா.. இட்ஸ் கெட்டிங் லேட்… இந்த பசங்க இன்னும் வரலை…” என்று சொல்லிக்கொண்டே திரும்பி நடக்க முயல,

அத்தனை நேரம் மகிழ்ச்சியில் குதித்தவன், பட்டென்று இப்படி முகம் மாறியதும் இல்லாமல், கிளம்பவும் எத்தனிக்க, என்னவோ அவனது வருத்தம் தோய்ந்த முகமே அவளுக்கு கஷ்டத்தை அளிக்க,

“சனு… என்னன்னு சொல்ல போறியா இல்லையா…???!!” என்றவள் நீ சொல்லாமல் நான் வரவே போவதில்லை என்பது போல் அப்படியே மணலில் அமர்ந்துவிட்டாள்.

“ஹேய் தேவி என்ன இது…???” என்று கேட்டவன், அவள் அசையாமல் இருப்பதை கண்டு,

“ஹ்ம்ம் படுத்தற மோகினி…” என்று சொல்லிபடி அவனும் அவளருகே அமர்ந்தவன்,

“இன்னும் ஒன் மன்த் கேப் இருக்கும்.. அதுக்குள்ள நம்ம விஷயம் பேசி முடிச்சிடலாம்னு நினைச்சேன்…” என்று தீவிரமாய் சொல்ல, தேவிக்கு அப்போது அவனின் காதலின்  ஆழம் மிக நன்றாகவே புரிந்தது.

எத்தனைக்கு எத்தனை சரவணன் ஜாலியோ அத்தனைக்கு அத்தனை அவன் இமோசனல் என்றும் புரிந்தது. ஆனாலும் அவன் இப்படி முகத்தை ஒருமாதிரி வைத்திருப்பது பிடிக்காமல்,

“ஹ்ம்ம் அப்படியா..?? என்ன பேச போற..?? என்ன முடிக்க போற…???” என்று விளையாட்டாகவே கேட்பது போல் கேட்க, அவள் பேசும் தொனியே அவள் உள்ளதை பிரதிபலிக்க, அவள் கண்கள் பேசும் பாசை எல்லாம் புரியாத என்ன…

காற்றில் பறக்கும் அவள் கேசத்தை ஒதுக்கி விட்டபடி, “நம்ம கல்யாணம் பத்தி தான்…” மெல்ல சிரித்தபடி சொன்னாலும் குரலில் அவ்வளவு தீவிரம் இருந்தது.

“நம்ம கல்யாணம் பத்தியா..??” என்று புருவம் சுருக்கியவள்,

“கல்யாணம் பத்தி பேச என்ன இருக்கு…?? இப்போதானே லவ்வே ஆரம்பிச்சு இருக்கு…? கொஞ்ச நாள் போகட்டுமே சனு…” என்று கேட்க,

“கல்யாணம் கொஞ்ச நாள் போகட்டும் தேவி… பட் வீட்ல சொல்லிடலாம்… எப்படியும் மாம் சரி சொல்லமாட்டங்க உடனே.. சோ இட் டேக் சம் டைம்.. அன்ட் நம்ம ஒன்னும் டீன் ஏஜ் இல்ல வீட்டுக்கு தெரியாம லவ் பண்ணிட்டு லாஸ்ட்ல சொல்லி… நமக்கு நம்மை பிடிச்சிருக்கு.. அதை பேரன்ட்ஸ் கிட்ட சொல்ல என்ன பயம்…” என்றான்.

என்னதான் இலகு போலவே பேசினாலும், அவன் கண்களில் இருந்த தீவிரம், எப்படியும் இதை தான் பேசி முடித்து பின் தான் எதுவும் என்று உறுதியை காட்டியது. அவன் சொல்வது சரியென்று அவளுக்கும் தோன்றியது. என்று இருந்தாலும் தெரியபோகிறது. அது இப்போது என்றால் என்ன. 

கோவா வரவில்லை என்றிருந்த கோதாவரி திடீரென்று கிளம்பியிருப்பதும், போதாத குறைக்கு தேவியின் பெற்றோர்கள் வேறு கடைசி நேரத்தில் கிளம்பி வருவதும் என்று எல்லாம் சேர்த்து அவனுக்கு மனதில் ஒரு கணக்கு தோன்றியது, என்னவோ தங்களை சுற்றி நடக்கிறது என்று.

சரி இங்கேயென்றால் பாட்டி மாமா அத்தை என்று அனைவரும் இருக்கிறார்கள். கோதாவரி உடனே சம்மதம் சொல்லவில்லை என்றாலும், நிச்சயம் இவர்கள் எல்லாம் எடுத்து சொல்வர். அதுவும் கல்பனா ஒன்று சொன்னால் அதை பற்றி நிச்சயம் கோதாவரி கருத்தில் கொள்வார். சொல்லபோனால் இந்த ஏற்பாடே கல்பனா செய்தது தான் என்ற முடிவுக்கே வந்திருந்தான்.

போலீஸ் அல்லவா, சரியாய் ஒவ்வொரு விசயத்தையும் ஒன்றாய் கோர்த்து இது தான் நடந்திருக்கும் என்று புரிந்துகொண்டது அவன் மூளை .

அதுவுமில்லாமல் தேவியும் கண்ணெதிரே இருக்கிறாள், நேரிலே அவளது பழக்க வழக்கம் எல்லாம் பார்த்து ஒருவேளை இதற்கு கோதாவரி சம்மதிக்கலாம் என்ற ஒரு நப்பாசையும் இருந்தது. காதல் மனமல்லவா கண்டபடி நினைத்தது.

அவன் அப்பாவை பற்றி பிரச்சனை இல்லை, சொல்லபோனால் தேவி வீட்டு பக்கமும் எவ்வித பிரச்சனையும் இருப்பது போல் இல்லை. ஆக இதற்கு சரி என்று சொல்லவேண்டியது எல்லாம் கோதாவரி மட்டுமே.

சொல்வாரா???

தேவியை தன் மகனுக்கு பிடித்தவள் என்பதனையும் தாண்டி, அவளை அவளுக்காகவே ஏற்கவேண்டும். ஆனால் கோதாவரி அவளை மஞ்சுவின் மகளாய் தான் பார்ப்பார்.    

இதெல்லாம் யோசித்தவன் இங்கே இருந்தால் தான் எதுவும் நடக்கும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. சரி இன்னும் ஒருமாதம் இருக்கிறதே, அதற்குள் இங்கே மேற்கொண்டு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை இருந்தே அனைத்தையம் பேசி முடித்து மகிழ்வோடு ஊர் திரும்பலாம் என்று நினைத்திருந்தான்.

ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடாமல் அடுத்த வாரமே வேலையில் சேர வேண்டும் என்று ஆர்டர் வந்திருக்க, முதலில் அது மகிழ்ச்சியை கொடுத்தாலும், பின் அது ஒரு தயக்கமும் யோசனையையும் கொடுக்க அப்படியே முகம் வாடி விட்டது.

தன் மனதில் உள்ளதை எல்லாம் சரவணன் தேவியிடம் சொல்ல சொல்ல, இவன் இத்தனை சிந்தனை செய்திருக்கிறானா என்ற ஆச்சர்யத்தில் விழிகள் விரிந்தாலும், அவன் அனைத்தையும் விட தன்னை முக்கியமாய் நினைப்பது மனதை நிறைத்தாலும்,

அதெல்லாம் பின்னே போய், அவன் இப்படி முகத்தை சுருக்கி, கண்கள் இடுக்கி அமர்ந்திருப்பது என்னவோ போல் செய்ய,

“ஏய் சனு….” என்று சலுகையாய் அழைத்தவள்,

“இங்க பாரு..” என்று அவன் முகம் திருப்பி, 

“இது நீ சந்தோசமா இருக்க வேண்டிய நேரம்.. செலிபரேட் பண்ண வேண்டிய நேரம்… வேற எதுவும் நினைக்காத….” என்று அவனை சகஜமாக்க சொல்ல,

“இல்ல மோகி…” என்று அவன் எதுவோ சொல்ல வர,

“ஷ்…” என்று அவன் உதட்டில் விரல் வைத்து, பேசாதே என்பது போல் தலையை இப்படி அப்படி அசைத்து,

“இது உன்னோட ஹார்ட் வொர்க்குக்கு கிடைச்ச பரிசு… நீ ஆசைப்பட்ட வேலை. நம்ம விஷயம் எங்கேயும் போகாது.. நானும் எங்கேயும் போக போறதில்ல.. தென் உன் அம்மா அண்ட் என் அம்மா, அவங்களுக்கு அவங்க பசங்க சந்தோசம் முக்கியம் தானே.. கண்டிப்பா யோசிப்பாங்க… சோ டோன்ட் வொர்ரி எல்லாம் நல்லதே நடக்கும் 

சேம் சென்னை தானே. அடிக்கடி மீட் பண்ணலாம்.. தினமும் பேசலாம்.. இன்னும் இன்னும் நிறைய நிறைய லவ் பண்ணலாம்.. ஊர் சுத்தலாம்… இன்னும் நம்ம சண்டை போட வேண்டியது எல்லாம் நிறைய இருக்கு.. அதுக்குள்ள அவசரப்பட்டு இந்த போலீஸ்கார் என் ஆத்துக்கார் ஆக ஆசை பட்டா எப்படி…” என்று அவளுமே சீரியசாய் பேச ஆரம்பித்து, கொஞ்சமே விளையாட்டு போல் சிரித்தபடி பேச, இறுதியில் அவள் சொன்னது அவனுக்குமே மெல்ல சிரிப்பை கொடுக்க,

“குட்… இப்படிதான் இருக்கணும்..” என்று அவன் மீசை லேசாய் பிடித்து இழுக்க,

“ஏய் மோகினி பிசாசு….” என்று அவள் கைகளை தட்டிவிட்டவன், மீசையை அழகாய் முறுக்கி விட்டுக்கொண்டான்.

அவன் செய்வதைய ரசித்து பார்த்தவள், “ஹ்ம்ம் என்னவோ மேஜிக் இருக்கு உன்கிட்ட…” என்று தலையை ஆட்டி ஆட்டி சொல்ல,

“நீங்க குரலி வித்தை எல்லாம் அப்புறமா காட்டுங்க… இப்போ எங்களுக்கு பசிக்குது….” என்றபடி நீச்சலுக்கு போன அனைத்து உடன் பிறவா சகோக்களும்  பின்னே வந்துநிற்க,

இத்தனை நேரம் இருந்த அமைதியில், திடீரென்று மொத்தமாய் குரல் கேட்கவும் இருவருமே அதிர்ந்து தான் பார்த்தனர்.

“என்ன ரெண்டு பேரும் இப்படியே டைம் போக்கிடலாம்னு ஐடியா பண்ணிட்டீங்களா… வாங்க வாங்க பசிக்கிது…” என்று ராகுல் இருவரின் கைகளை பிடித்து இழுக்க,

அவன் இத்தனை நேரம் உண்ணாமல் இருந்ததே பெரிது என்று தோன்றியது அனைவர்க்கும்.சரியென்று அனைவரும் அங்கிருந்த ரிசார்ட் ஒன்றிலேயே உணவருந்திவிட்டு, வீடு செல்ல, அடுத்து வேலைகள் சரியாய் ஒவ்வொருவருக்கும் வரிசை கட்டி நின்றது.

 

Advertisement