Advertisement

துளி –4

தேவிக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை.. என்ன முயன்றும் சுத்தமாய் முடியவில்லை. கண்களை மூடினால் அடுத்த நொடி சரவணன் முகமும் அவன் பேசுவது செய்வதும் வந்துவிட, என்னென்னவோ செய்து பார்த்தாள் ஆனால் தோல்வி தான் மிஞ்சியது..

“தேவி திஸ் இஸ் நாட் குட் பார் யு… கண்ணை மூடி மனசை ஒருநிலை படுத்தி தூங்கு…” என்று மனம் கட்டளையிட, சரி முயற்சி செய்கிறேன் என்பது போல் மீண்டும் கண்ணை மூட,

ம்ம்ஹும் முதன் முதலில் ஹாய் சொன்னானே அந்த முகமே கண்ணில் வந்து நிற்க, மனமோ ‘படுபாவி தூங்க விடேன்டா..’ என்று கெஞ்சித் திட்டியது.

இன்னமும் கூட அவள் கைகளில் சரவணனின் கரம் பதித்த சூடு உணர்வது போல் இருக்க, இரு கைகளையும் பரபரவென்று தேய்த்துக்கொண்டாள். ஒரு பலனும் இல்லை கைகள் இன்னும் சூடேறியது தான் மிச்சம் ஆனாலும் அவ்வுணர்வு மட்டும் மாறவேயில்லை.   

இப்படி அப்படி உருண்டு புரண்டு, தலையனையை கட்டிக்கொண்டு, இல்லை மறுபுறம் தலை வைத்து என்று என்னென்னவோ குட்டிக்கரனை அடித்தாலும் நித்திரை மட்டும் அவளை தீண்டவில்லை.

உறக்கம் வராதது ஒருபக்கம் இருந்தாலும் மனம் வேறு அலைபுர அது தான் இவளால் தாங்க முடியவில்லை. என்னவோ தன்னை போட்டு படுத்தும் இந்த இம்சையான உணர்வு அவளுக்கு பிடிக்கவில்லை.

பிடிக்கவில்லை என்பதை விட முதல் முறை அல்லவா அதான் தன்னை தானே  எப்படி கையாள்வது என்று அவளுக்கு புரியவில்லை. அந்த கடுப்பு அவளுக்கு.    

‘எல்லாம் இவனால…’ என்று நொடிக்க,

‘அவன் என்னவோ பண்ணிட்டு போறான், ப்ளைட்ல அவ்வளோ பேசின.. இப்போ என்ன அப்படி உறுகுற…’ என்று எனக்கு தானே கேட்டுக்கொண்ட கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

‘நீ பண்றது ரொம்ப தப்பு தேவி… உங்க அம்மாக்கும் அவன் அம்மாக்கும் ஆகவே ஆகாதாம்.. அப்படி இருக்க அவன் தான் எதோ உளறிட்டு இருக்கான்னா.. நீ எங்க புத்தியை அடகு வைச்ச…???’ என்று மனசாட்சி பாரபட்சம் பார்க்காமல் திட்ட,

“ச்சு நீ வேற என்னை திட்டாத…” என்று அதை ஒதுக்கி தள்ளினாள். 

ஏனோ அந்த அறையில் ஒரே புழுக்கமாய் இருப்பது போல் இருந்தது. இதற்கும் ஏசி வேறு  தன் வேலையை செவ்வனே செய்துகொண்டு இருக்க, தேவிக்கு தான் அனைத்துமே பிடிக்காமல் போனது.

“ஹா…!!!!!” என்று எழுந்தமர்ந்து தலையை பிடித்தவள்,

“பார்த்து முழுசா ஒருநாள் கூட ஆகலை.. ஆனா இப்படி என் உயிரை வாங்குறானே… நான் உனக்கு என்னடா பண்ணேன்…” என்று எதிரே அவன் இருப்பதாய் நினைத்து சொல்ல, அவளுக்கே தன்னிலை பிடிக்கவில்லை.

பால்கனி கதவை திறந்து வெளி செல்ல, கடல் காற்று முகத்தில் மோதியது. சுற்றிலும் ஒரே இருட்டு தான், அங்கங்கே இரவு விளக்குகளின் ஒளி. தூரத்தே கேட்கும் கடல் அலையின் சப்தம் மனதிற்குள் ஒரு அழகிய ரிதமாய் ஒலிக்க, கண்களை மூடி ரசித்து நின்றாள்.

ஏனோ இத்தனை நேரம் இருந்த குழப்பம் எல்லாம் சற்றே சமன் படுவது போல் இருந்தது.. ஆழ மூச்சுகளை எடுத்துவிட்டு கண்களை மூடி அப்படியே நின்றிருந்தாள்.

“லவ் பண்ணா தப்பா.. அப்பா அம்மா கூட லவ் மேரேஜ் தானே.. எவ்வளோ அழகான வாழ்க்கை அவங்களோடது.. எத்தனை டைம்ஸ் நானே சொல்லிருப்பேன்.. ரியல்லி இவ்வளோ லவ்லி கப்ல்ஸான்னு.. அப்படி இருக்கும்போ நான் லவ் பண்ண கூடாதா…??

அதென்ன உலக மகா குத்தமா.. இல்லையே யார் சொன்னது.. அப்பா அம்மா கூட சொல்லலையே… சொல்ல போனா டாட் கேட்டாரே.. நீ யாரையும் லவ் பண்றியான்னு..” இப்படியெல்லாம் அவள் மனம் சற்றே தங்கள் வீட்டை பற்றி சிந்திக்க, இன்னும் இன்னும் அவளுக்கு ஒரு அமைதி கிடைத்தது.

நிச்சயம் தான் காதலித்தால் அதற்கு அவர்கள் வீட்டினர் எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள் என்பது உறுதி. அந்த எண்ணமே ஒரு நிம்மதி கொடுக்க,

“ஐயோ.. அம்மாக்கும், சரவணன் அம்மாக்கும் சேராதாமே…” என்று மனம் திடுக்கிட்டாலும்,

“இருக்கட்டும்.. பிரச்சனை அவங்களுக்குள்ளனா அது அவங்களோடது.. அதுக்கு நானோ சரவணனோ பொறுப்பில்லையே…” என்று தெளிவு கிடைக்க,

‘ஹ்ம்ம் பாப்போம்.. இன்னும் இவன் எவ்வளோ தூரத்துக்கு தான் போறான்னு.. அப்படி என்னவாம்.. இவன் யோசிக்க சொன்ன நான் யோசிச்சு உடனே போய் பதில் சொல்லிடனுமா???

நான் என்ன ஸ்கூல் பொண்ணா.. சொன்னதுமே ஹோம் வொர்க் முடிச்சிட்டு போறது போல போய் நிற்க.. நோ நோ… சார் எப்போ கொஞ்சம் சீரியஸா ப்ரொபோஸ் பண்றாரோ அப்போ சரி சொல்வோம்…’ என்று முடிவெடுத்து வந்து உறங்கியும் போனாள்.

இங்கே தேவி இப்படி இருக்க, அங்கே சரவணனோ இன்னமும் குழம்பி போய் இருந்தான். அவன் மனமெல்லாம் ‘ரேம்ப் வாக்…’ என்ற சொல்லிலேயே உழன்றுகொண்டு இருந்தது.

“ரேம்ப் வாக்கா… மாடலா இவ… இல்லையே.. அப்படி எல்லாம் நம்ம குடும்பத்துகள்ள விடமாட்டாங்களே… ஒருவேளை அதுனால தான் அம்மாக்கு இவங்க பேமிலி பிடிக்காதோ…” என்று யோசிக்க, முதலில் தன்னாலேயே இதனை ஏற்றுகொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

“வேணும் வேணும் நல்லா வேணும்.. யார் என்னன்னு தெரியுறதுக்கு முன்னாடியே அவ்வளோ பேசினேனே.. நல்லா வேணும்.. ஓ காட்…!!! இப்போ நான் செய்வேன்…” என்று தலையை பிடித்துகொண்டு அமர்ந்திருந்தான்.

“நாளைக்கு வந்து தேவி என்கிட்டே ஏதாவது கேட்டா நான் என்ன சொல்ல…?? பெரிய இவனாட்டம் யோசிச்சு சொல்லுன்னு அலைபாயுதே மாதவன் ரேஞ்சுக்கு டியலாக் பேசினேனே…” என்று சிந்தனை எழ,  

“சுத்தம்.. சரவணா என்னடா நீ இப்படி உன் வாழ்கையில் சொதப்பி வச்சிட்ட.. எப்படியாவது அம்மாவை சரி சொல்ல வச்சிடலாம்னு இருந்தா இப்போ இவ ரேம்ப் வாக் பண்ண ஒரு போட்டோ அவங்க கண்ல கிடைச்சா போதும்..

அவ்வளோதான்.. எல்லாத்துக்கும் குழி தோண்டி புதைச்சிடுவாங்க.. அம்மாவை விடு அம்மாவை.. முதல்ல நீ… நீ இதுக்கெல்லாம் ஒத்துப்பியா…???”  என்று அவன் மனம் கேள்வி எழுப்ப, என்னவோ அவள் ரேம்ப் வாக் என்றதும் மனதில் அதை சட்டென்று ஏற்றுகொள்ள முடியவில்லை. இனியும் அதை ஏற்றுகொள்ளும் பக்குவம் இருக்குமா என்றும் தெரியவில்லை.

தேவி இடுப்பில் கை வைத்து ஒய்யாரமாய் நடந்துவருவது போல் நினைத்து பார்த்தவன் “நோ….” என்று தலையை உலுக்கி  தன்னால் இதை ஏற்க முடியாது என்று ஒத்துக்கொண்டான் பொதுவாய் அனைத்து ஆண்களுக்கும் இருக்கும் எண்ணம் தான் இது. 

“ஏன் இவளுக்கு வேற பீல்ட் கிடைக்கவே இல்லையா.. இவங்க வீட்ல எப்படி விட்டாங்க.. ஐயோ நினைக்கவே எப்படி இருக்கு.. ஷி இஸ் மைன்.. யாரும் சும்மா கூட பார்த்திட கூடாது…” என்று மனதில் உறுதியாய் எண்ணம் பிறக்க,

இதை பற்றி பிருந்தாவிடம் கேட்போமா என்று கூட யோசித்தான். இல்லை இல்லை இந்த நேரத்தில் வேண்டாம் என்று தோன்ற அடுத்து கல்பனாவின் நினைவு வந்தது.

“பாட்டி.. சத்தியமா இதெல்லாம் தெரிஞ்சா தேவியை இவ்வளோ உயர்வா நினைக்கவே மாட்டாங்க.. ஆனா தெரியுமா??” என்று யோசித்தவனின் போலீஸ் மூளை வேலை செய்ய,

“இல்லை இதிலே என்னவோ இருக்கு டா சரவணா…” என்று தனக்கு தானே சொல்லிகொண்டான்.

“கண்டிப்பா இவ ரேம்ப் வாக் எல்லாம் பண்ணிருக்க மாட்டா.. நைட் சாப்பிடும் போது பார்த்தேனே… ஹப்பா அந்த சாக்லேட் கேக்க எப்படி முழுங்கினா… கண்டிப்பா மாடலா இருக்க யாரும் இப்படி இவ்வளோ சாப்பிட மாட்டாங்க.. ரொம்பவே புட்ல கேர் எடுப்பாங்க…” என்று யோசித்தவன்,

வேகமாய் தன் அலைபேசியில் கூகிள் செய்து என்னென்னவோ பார்த்தான்.

வெகு நேரம் இப்படியே போக, மனதில் ஒரு எண்ணம், ஏன் இத்தனை குழப்பம்.. நாளை எதுவாக இருந்தாலும் அவளிடமே கேட்டு விடலாம் என்று. எப்போதடா பொழுது விடியும் என்று இருந்தது அவனுக்கு. ஆனால் தேவியோ வெகு நிதானமாகவே உறக்கம் கலைந்து எழுந்தாள்.

நேரத்தை பார்த்தவள், “ஓ.. லேட் ஆகிடுச்சு….” என்று வேகமாய் தயாராகி கீழே வர, அங்கே டைனிங் ஹாலில் அனைவரும் இருக்க, ஒருமுறை சரவணன் இருக்கிறானா என்று அவள் பார்வை அலசியது.

டிசைனர் சுடிதார் அணிந்து, ஒருபக்கம் துப்பட்டாவை தவழ விட்டு, இன்னொரு பக்கம் தன் கேசத்தை மொத்தமாய் போட்டு, அவள் நடந்து வந்ததை ரகசியாமாய் ரசித்துக்கொண்டு தான் இருந்தான்.

அவனையும் அறியாது அவன் மனம் ‘அப்படியே மாடல்ஸ் நடந்து வர்ற போலவே நடக்குறா டா சரவணா…’ என, நொந்துகொண்டான்.

அவன் ஆராய்ச்சி பார்வையை கண்டு, “என்ன இது சார் பார்வையே ஒரு தினுசா இருக்கே…” என்று எண்ணிக்கொண்டே,

“ஸாரி… கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” என்று அனைவருக்கும் பொதுவாய் சொல்ல,

“என்ன தேவிம்மா, புது இடம் அதுனால தூக்கமில்லையா..” என்று பிருந்தா வினவ,

“ஆமா சித்தி.. டோட்டலா தூக்கமே இல்லை… ரொம்ப நேரம் ஆச்சு…” என்றவளின் பதில் தன் சித்திக்காய் இருந்தாலும், பார்வையோ அனைத்துமே உன்னால் தான் என்று சரவணனிடம் சொல்லாமல் சொன்னது.

‘ஐயோ என்னை ஏன் பார்க்கிறா.. ம்ம்ச் நான் என்னையே டிஸ்டர்ப் பண்ணது போதாதுன்னு அவளையும் பண்ணிட்டேனா…?? ஆமா நேத்தே அப்படி கண் மூடி நின்னாளே… டேய் சரவணா இப்படி அநியாயமா ஒரு பொண்ணு மனசில ஆசை வளர்த்திட்டியே..’ என்றெல்லாம் தோன்ற, தட்டில் கை இருந்தாலும் அது வாய்க்கு செல்லவில்லை.

“சரவணா என்ன யோசனை… நானும் பார்க்கிறேன்.. வந்ததுல இருந்து எதோ யோசனை பண்ணிட்டே இருக்க…” என்று கல்பனா சொல்ல,

“என்ன சரவணா…” என்று புண்ணியகோடி கேட்க,

“ஹா.. ஒண்ணுமில்ல.. நத்திங்…” என்று தோளை குலுக்க,

“மாமா… இந்தாங்க.. இன்னும் ரெண்டு சான்ட்விச் எடுத்துகோங்க…” என்று ராகுல் சொல்ல, தட்டில் வைத்ததே தொண்டையில் இறங்கவில்லை, இதில் இன்னும் ரெண்டா என்று வேறு தோன்றியது.

‘நம்ம இப்படி சாப்பிட முடியாம தவிக்கிறோம்.. இவ என்ன செய்றா..’ என்று பார்க்க, தேவியோ வாயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் நன்றாய் உண்டுகொண்டு இருந்தாள்.

‘நிஜமாவே தேவி மாடலா..??’ என்று அப்போதும் சிந்தனை எழ, பார்வை அவளிலேயே நிலைத்திருக்க,

பிருந்தா மெல்ல தன் கணவரை சுரண்டி சரவணனை காட்ட, புண்ணியகோடி அதே வேலையை தன் அம்மாவிடம் செய்ய. பெரியவர்கள் மூவரும் தன்னை பார்ப்பதை கூட கவனிக்காமல் தேவியை மட்டுமே பார்த்திருந்தான்.

தேவிக்கும் உள்ளூர ஒருமாதிரி தான் இருந்தது. என்னவோ சரவணனை அவளால் விலக்க முடியவில்லை. எத்தனை ஆண்களை கடந்து வந்திருக்கிறாள் அப்போதெல்லாம் தோன்றாத ஓர் உணர்வு, இப்போது இவனிடம் என்று நினைக்கும் போது ஒருவேளை இதுதான் காதலா என்று தோன்றியது.

ஆனாலும் உறுதியாய் சொல்லவும் முடியவில்லை.

தன்னையே தான் பார்க்கிறான் என்பது உணர முடிந்தாலும், தலையை நிமிர்த்தாமல் எத்தனை நேரம் தட்டிலேயே கவனமாய் இருக்க முடியும்.??

ராகுல் ஏதோ அவளிடம் பேச, அதற்கு பதில் சொன்னவளின் பார்வையும் சரவணனை தொட்டு மீள, இதெல்லாம் அனைவரின் கண்களிலும் பட்டுக்கொண்டு தான் இருந்தது.

“தேவிஈவ்னிங் தான் எல்லாம் வருவாங்க.. சோ இப்போ கோவிலுக்கு போகலாமா…?? இல்லை நீ ரெஸ்ட் எடுக்கணுமா??”

“நோ நோ சித்தி… போகலாம்… பாட்டி நீங்க வர்றீங்களா…??”

“பின்ன நான் இல்லாமையா…?? நானும் தான்… சரவணா நீயும் வர்றியா…” என்று தன் மூக்கு கண்ணாடியை தூக்கிவிட்டபடி கேட்க, ஒருநொடி யோசித்தவன் சரி என்று தலையை ஆட்டினான்.

“சரி நீங்க எல்லாம் போய்ட்டு வாங்க.. நான் ஹோட்டல் போறேன்… கார்டன்ல டெக்கரேட் பண்ண த்ரீ ஓ கிளாக் வரேன் சொல்லிருக்காங்க.. அதுக்குள்ள வந்திடனும்…” என்று புண்ணியகோடி சொல்ல,

“அவ்வளோ நேரம் எல்லாம் ஆகாது…” என்று பிருந்தா சொல்ல, சரவணனுக்கு என்னவோ தேவியிடம் தனியே பேசவேண்டும் போல் இருக்க, வாய்ப்புக்காக காத்திருந்தான்.

“சரி சித்தி நான் ரெடி ஆகிட்டு வர்றேன்…” என்று தேவி உண்டு முடித்து மீண்டும் தன்னறைக்கு கிளம்ப,

‘சரவணா போய் பேசு…’ என்று அவன் மனம் உந்த, அவளை போலவே சொல்லி அவனும் எழ,

“தேவிம்மா இதுவே நல்லாதானே இருக்கு.. இனியென்ன ரெடியாக போற…” என்று கல்பனா அவளை நிறுத்திக்கொண்டார்.

சரவணனின் பார்வை என்னவோ அவன் தன்னிடம் பேச விழைகிறான் என்பதை அவளுக்கு உணர்த்த, கல்பனா வேறு இப்படி சொல்ல, லேசாய் தவித்து தான் நின்றாள் தேவி. இருப்பதா போவதா என.

சரவணனின் பார்வையோ, “மேலே போ நான் உன்னிடம் பேசவேண்டும்…” என்று சொல்ல, அவனையே இரண்டொரு நொடிகள் பார்த்தவள்,

“ஹா.. பா.. பாட்டி.. என்.. மொ.. மொபைல் மேல இருக்கு எடுத்திட்டு வந்திடுறேன்…” என்று சொல்லிக்கொண்டே மேலே படியேற, சரவணனும் இது தான் சாக்கென்று வேகமாய் பின்னே சென்றான்.

அவர்கள் இருவரும் செல்வதையே பார்த்த கல்பனா, என்ன நினைத்தாரோ, “கோதா பார்க்கணும் அவ்வளோதான்…”  என்று சிரித்தவர், பின் லேசாய் யோசனைக்கு போய்,

“புண்ணியா… அவளுக்கு போன் பண்ணி கண்டிப்பா நாளைக்கு வர சொல்…” என்று சொல்ல, பிருந்தா திகைத்து போய் தன் மாமியார் முகம் பார்க்க,

“நீயும் தான் மஞ்சுவை வர சொல்…” என்று கட்டளை போல் சொல்ல, இருவருக்கும் அவர் தொனியில் என்ன புரிந்ததோ சரி என்று தலை அசைத்தனர்.

தேவி அறைக்குள் நுழைந்த அடுத்த நொடியே சரவணனும் உள்ளே நுழைய, தேவி என்னவென்பது போல் பார்த்தாலும் அவள் கண்கள் அழகாய் அவள் உள்ளத்தை காட்டி கொடுக்க,

“மோ… ம்ம்ச்… தேவி.. நீ நீ.. நிஜமாவே.. ரேம்ப் வாக் போனியா…???” என்று கேட்க, அவன் தொனியும், முகமும், கண்களும், விளையாடாமல் உண்மையை சொல் என்பது போல் சொல்ல,

“வாட்…?? என்ன உளறல் இது… இதை கேட்க தான் என்னை மேல போ சொன்னியா…???” என்று முகத்தை சுருக்கி தேவி கேட்க,

“ம்ம்ச்.. ப்ளீஸ்… நைட் புல்லா நான் தூங்கலை.. இதே தான் மண்டைல…சொல்லு எப்போ இருந்து மாடலிங் பண்ற நீ…?? ” என அவளது இரு கைகளையும் பற்றி கேட்க,

“மாடலிங்கா….” என்று விழி விரித்தாள்.

“ம்ம்.. நேத்து நீ சொன்னியே… ரேம்ப் வாக் போனேன்னு…” என்று கேட்டவனின் முகம் ‘ஆம்’ என்று சொல்லிவிடுவாளோ என்று தவியாய் தவிக்க, அவன் முகத்தையே தன் இருகண்களால் அளந்தவள்,

“ரேம்ப் வாக் சொன்னேன்.. ஆனா நான் போனேன்னு சொன்னேனா..??” என்று வினவ,

“என்ன சொல்ற…???!!!” என்றவனுக்கு ஆதிர்ச்சி ஒருபக்கம்.. நிம்மதி ஒருப்பக்கம்..

“ஓ.. அதான் சார் இவ்வளோ டென்சனா…?? ஏன் மாடலிங் பண்ணா லவ் பண்ண மாட்டீங்களோ..??” என்று கிண்டலாய் வினவ, அவளுக்கு தெரியவில்லை அவன் வெகுவாய் தவித்திருப்பான் என.

“ஹேய்.. கேட்கிறேன்ல…” என்று அவள் இரு கைகள் கொண்டே தன்னை அணைக்க செய்தவன், தானும் அது போல் செய்து, “ஏன் பொய் சொன்ன..” என,

அவன் அணைப்பில் நிற்பது ஒருமாதிரி கூச்சமாய் இருந்தாலும், தேவி விலகவில்லை.

“நான் எங்க போய் சொன்னேன்.. நீயா ஒன்னு நினைச்சா அதுக்கு நான் என்ன செய்ய…” என்றவள், “கீழ எல்லாம் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க…” என்றும் சொல்ல,

“பரவாயில்ல… அப்போ ஏன் அப்படி ஒரு கெட்டப்ல வந்த… சொல்லு மோகினி என்னை மயக்கவா…” என, அவன் மோகினி என்ற அழைப்பிலேயே அவன் சகஜமாகி விட்டான் என்று உணர்ந்தாள்.

“ரேம்ப் வாக் போனது என் பிரன்ட்.. மும்பை வர வந்தா.. தென் தான் பிளைட் கனக்சன் கோவாக்கு.. ஜஸ்ட் எனக்கும் லைட் டச்சப் போட்டுவிட்ட போதுமா..” என்று கேட்டவள் இப்போது திருப்தியா என்ற கேள்வியையும் சேர்த்தே கேட்க, அவள் ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல, சரவணனின் மனதில் பிரிட்ஜில் வைத்த பாலை வார்த்தது போல் இருந்தது.

“அப்.. அப்போ.. இதுக்கா சிங்கப்பூர் போன…”

“ஷப்பா….!!!! போலீஸ்ன்னு காட்டறீங்களா…?? எத்தனை கேள்வி.. ” என்று சலிக்க,

“ஹேய் சொல்லு சொல்லு…” என்று அவனும் ஊக்க,

“என் ஸ்டூடன்ட் ஓட அரங்கேற்றம்.. சோ அதுக்காக போனேன்..” என்று தலை சரித்து சிரித்தபடி சொல்ல,

“அரங்கேற்றமா…???!!!” என்று அதிர,

“ஆமா… நான் தானே குரு… குரு இல்லாத அரங்கேற்றமா…???” என்று பதில் கேள்வி கேட்டாள்..

“அப்போ நீ…??”

“கிளாசிக்கள் டான்சர்.. ப்ளஸ் டீச்சர்…” என்று சொல்லவும், நிச்சயமாய் இதை எதிர் பார்க்கவில்லை என்ற பாவம் இருந்தாலும், ஹப்பாடி என்ற ஒரு நிம்மதியும் இருந்தது.

ஒன்றுமே சொல்லாமல் அவளை தன்னோடு சேர்த்து இன்னும் அதிகமாய் இறுக்கி அணைத்துக்கொள்ள, “என்ன இது… ப்ளீஸ்….” என்று அவள் சொன்னதெல்லாம் அவன் காதிலேயே விழவில்லை.

இன்னும் இன்னும் இறுக்கமாய் அணைத்தான்..                                          

 

Advertisement