Advertisement

                                  துளி – 3

“பாட்டி கூப்பிட்டீங்களாமே…” என்று குரலில் அத்தனை பவ்யம் காட்டி வந்த தேவியை பார்த்து சத்தியமாய் அதிர்ந்து தான் நின்றான் சரவணன்.

‘மோகினி… நீ.. நீ… தேவிக்கா… ச்சி இல்ல… தேவி… எஸ்.. எஸ்… மை மோகினி இஸ் தேவி… தேவி இஸ் மை மோகினி…. யா யா… யே.. ஐ காட் இட்.. எஸ் ஐ  காட் இட்…  தேவி……………….

உன்னை எங்க பார்த்தேன்னும் தெரிஞ்சது… இப்போ மறுபடி ஏன் பார்தேன்னும் புரிஞ்சது… ஜென்ம சாபல்யம் டா சரவணா……’  என்று மனதில் ஆனந்த கூத்தாடியவனுக்கோ, கை முஸ்டிகளை மடக்கி அப்படியே கத்தவேண்டும் போல் இருந்தது.

ஆனால் சூழ்நிலை.. முடியவில்லை..  தன் உணர்வுகளை அடக்கி அவ்விடத்தில் ஒருநிலையில் நிற்கவே அவனால் முடியவில்லை. உடலெல்லாம் ஒரு பரவச அலை பரவ,

இனி காணவே முடியாதோ.. பெயரையாவது கேட்டிருக்கலாம்.. எங்கே தங்குகிறாள் என்றாவது கேட்டிருக்கலாம்… என்றெல்லாம் தவித்தவனுக்கு கண் முன்னே அவளை கண்டதும் போய் இறுக்கமாய் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

இரண்டொருமுறை ஆழ மூச்சுக்களை வெளிவிட்டவன், தன்னை போலவே அவளும் பார்த்து அதிர்ந்தாளா என்று கவனிக்க, அவளோ சரவணன் என்று ஒருவன் அங்கே நிற்பது கூட எனக்கு தெரியாது என்ற ரீதியில் அத்தனை பவ்யமாய் அடக்க ஒடுக்கமாய் நின்றிருந்தாள்.

‘அடிப்பாவி…..’ என வாய் பிளக்க,

“சரவணா…” என்று கல்பனா பல்லை கடிக்க சரியாய் இருந்தது.

“ஹா என்ன.. என்ன பாட்டி…”

“என்ன என்ன பாட்டி… நாலு முறை கூப்பிட்டுட்டேன்… அப்படி என்னடா யோசனை.. உன் போலீஸ் புத்தி எல்லாம் வெளிய இருக்கட்டும்.” என்று அதட்டியவர்,

“இதோ இவ தான் தேவி.. உங்க அத்தை ஓட அக்கா மஞ்சுவோட பொண்ணு.. அத்தனை பாந்தம்.. பதவிசு… தேவி இவன் என் பேரன் சரவணன்.. என் மகள் மகன்…” என்று முறையாய் அறிமுகம் செய்துவைக்க, கரம் குலுக்க கை நீட்ட விளைவதற்குள் அவளோ

“வணக்கம்….” என்று கரம் குவித்தாள்..

‘உலக நடிப்பு டா சாமி….’ என்று சரவணின் கண்கள் தானாய் விரிய, பதிலுக்கு அவன் கரங்களும் தன்னப்போல் குவிய,

‘பாந்தமாம்… பதவிசாம்… பாட்டி இவ ப்ளைட்ல எப்படி வந்தான்னு நீங்க பார்த்திருக்கணும்.. அவ்வளோ தான்…’ என்று எண்ணியவனின் பார்வை அவன் எதிரே உன்னை இப்போது தான் முதன் முதலில் பார்க்கிறேன் என்பது போல் நின்றிருந்த தேவியை உச்சி முதல் பாதம் வருட,

‘அம்மாடி இவ பயங்கரமான ஆள் தான்…’ என்றே தோன்றியது அவனுக்கு.

காரணம் அவள் தோற்றம்.. விமானத்தில் பார்த்த தேவிக்கும் இப்போது கண் முன்னே நிற்பவளுக்கும் அத்தனை வித்தியாசங்கள்.. சொல்லபோனால் எல்லாமே வேறு தான்.ஆளே வேறாய் இருந்தாள்.

மாம்பழ நிற பட்டுபுடவை கட்டி, அடர் பச்சை நிற ரவிக்கை அதுவும் புஸ் கை வேறு.. தலை நிறைய மல்லிகை சூடி.. மங்கள ரூபிணியை நின்றிருந்தாள். அவன் முதல் முதலில் பார்த்த விதத்திற்கும் இப்போது பார்க்கும் விதத்திற்கும் நிச்சயம் அவனுக்கு அதிர்ச்சி ஆகும் தானே..

‘அந்த பச்சை கலர் ஐ லைனர்…’ என்று யோசித்தவன், அவள் விழிகளோடு தன் ஆராய்ச்சியை துவங்க, அங்கே கண்களில் மெல்லிய கண் மை மட்டுமே குடிகொண்டு இருந்தது..

அடுத்து அப்படியே விழிகளில் இருந்து இறங்கி ‘அந்த மெரூன் கலர் லிப்ஸ்டிக்…’ என்று அவள் இதழ்களுக்கு வர, அங்கேயே இளம் ரோஜா நிறமே அவனுக்கு வரவேற்ப்பு கொடுத்தது.

அவனது ஆராய்ச்சி என்னவென்று தேவிக்கு புரிந்ததுவோ என்னவோ, லேசாய் அவனை பார்த்து தன் இதழ்களை வளைத்து ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்க,

“ஆத்தாடி… இவ மோகினியே தான்…” என்று தன் மனதிற்குள் சொல்வதாய் எண்ணி வெளியே சொல்லிவிட்டான்.

இத்தனை நேரம் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கருத்தில் படாமல் போக, இப்போது இவன் உளரியத்தில்,“சரவணா….” என்று கல்பனாவும், பிருந்தாவும் அதிர்ந்து விளிக்க, தேவியோ வந்த சிரிப்பை வாய்க்குள்ளே மென்றுகொண்டு இருந்தாள்.

ஆனால் அவள் கண்கள் காட்டிக்கொடுத்து விட்டது.. நான் உன்னை கண்டு சிரிக்கிறேன் என்று.. அவள் சிரிப்பை அடிக்கியத்தில் லேசாய் கண்களில் நீர் படர, அவள் கண்ணிற்கு கீழ் இருந்த சிவப்பு நிற மச்சமோ மிச்சம் மீதமில்லாமல் அவனை கேலி பேசியது.

‘செய்றதை எல்லாம் செஞ்சிட்டு என்னை இப்படி புலம்ப வச்சிட்டியே…’ என்று ரீதியில் அவளை பார்க்க,“சரவணா….” என்று பல்லை கடித்தார் கல்பனா..

அவன் பதில் சொல்வதற்குள், “பாட்டி… நான் கொஞ்சம் ரூம் வரை போயிட்டு வர்றேன்… அம்மாகிட்ட பேசணும்…” என்று சொன்னவள், பிருந்தாவையும் பார்த்து தலையை ஆட்டிவிட்டு, நடந்தவள், அறையின் வாசல் கடக்கும் முன்னே ஒருமுறை திரும்பி இவனை பார்த்துவிட்டு போனாள்.

அவ்வளவு தான் சுத்தமாய் கவிழ்ந்துவிட்டான் சரவணன்.

“டேய் மானத்தை வாங்காத டா…” என்று பாட்டி அவன் முதுகில் பட்டென்று ஒரு போடு போடா,

“ஹா பாட்டி…. அப்படியே மாம் போலவே பண்றீங்க…” என்று முதுகை தடவியபடி சொல்ல, பிருந்தா சிரித்தபடி மகனை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல,

கல்பனவோ “ஏன் டா சரவணா.. நீ முன்ன பின்ன பொண்ணுங்களை பார்த்ததே இல்லையா..?? ” என்று வினவ..

‘மானம் போச்சு டா சரவணா…’ என்று நொந்து கொண்டான்.

“உன் அம்மா பொண்ணு பார்க்கிறதா சொன்னா.. என்னடா ஆச்சு…??”

“ஆச்சு ஆச்சு எல்லாம் ஆச்சு.. உங்க பொண்ணு தானே… சோ அவங்களை போலத்தான் பொண்ணு பார்ப்பாங்க…” என்று சலித்துகொண்டான்.

“ஓ…!!!!” என்று யோசித்தவர், என்ன நினைத்தாரோ,

“டேய் பேரா… இந்த பொண்ணு போச்சே தேவி… அவ அம்மா மஞ்சுக்கும் உன் அம்மாக்கு சுத்தம் ஆகவே ஆகாது…” என சொல்ல,

‘இதுவேறயா…’ என்பது போல் பார்த்தவனுக்கு அப்போது தான் நினைவில் வந்தது. இவளை விமானத்தில் பார்த்ததும் எங்கோ பார்த்தது போல் இருப்பது போல் ஏன் தோன்றியது என்று.

போன வாரமோ என்னவோ, வீட்டிற்கு ஒரு தரகர் வந்திருக்க, அவர் கொண்டு வந்த ஐந்து சம்பந்தத்தில் தேவியும் ஒன்று. ஆனால் புகைபடத்தில் இன்றுபோலவே பட்டுபுடவை கட்டி பாந்தமாய் இருந்தாள்.

ஆகையால் தான் அவனால் விமானத்தில் சட்டென்று அவளை அடையாளம் காண முடியாமல் போனது. எங்கோ பார்த்தோமே என்ற எண்ணம் மட்டும் தோன்றியது.

‘மாடர்ன் மங்காத்தா…’ என்று இப்போதும் தோன்ற, அவன் அம்மா அன்று தேவியின் புகைப்படத்தை கையில் வைத்துகொண்டு எதோ அவன் அப்பாவிடம் காரசாரமாய் பேசிக்கொண்டு இருந்தார்.

இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று அன்று விலகி போனது தப்போ, அன்றே என்னவென்று விசாரித்து இருக்க வேண்டுமோ என்று தோன்ற, அமைதியாய் தன் பாட்டியை பார்த்தான்.  

“என்னடா இப்படி பார்க்கிற.. இந்த பொண்ண ப்ளைட்ல வரும்போது பார்த்தியா இல்லையா..??”

“ம்ம்ஹும்…” என்று தலையை உருட்ட, அவன் மனமோ ‘நான் பார்த்த விதத்தை மட்டும் நீங்க பார்த்து இருக்கணும்.. அவளா இவன்னு சொல்லிருப்பீங்க…’ சொல்லி சிரித்தது.

“அதானே நல்ல பொண்ணு… இருக்கிற இடமே தெரியாது..”

“பார்த்தேன் பார்த்தேன்..அடக்க ஒடுக்கத்தை…” என்று முனுமுனுத்தவன்,  முதலில் இந்த பாட்டியிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று தோன்றியது.

அப்போது தான் நியாபகம் வந்தவனாய், “ஸ்.. பாட்டி மறந்தே போயிட்டேன்… அம்மா கால் பண்ணிருந்தாங்க.. நான் இங்க வந்திட்டேன் உங்களை பார்க்க…” என்று நெற்றியை தடவியபடி சொல்ல,

“டேய் டேய் போடா… அம்மாட்ட பேசுவியோ யார்ட்ட பேசுவியோ.. பிரச்சனை ஆகாம இருந்தா சரி..” என்று சிரித்தார் கல்பனா.

அவர் எப்போதுமே இப்படிதான் ஒருநேரம் சிரிக்க சிரிக்க பேசுவார். திடீரென்று இடக்காய் பேசுவார். எப்போது எப்படி பேசுவார் என்றே தெரியாது. ஏன் இப்படி என்றும் புரியாது. அவரை போலவே தான் கோதாவரியும்.

“இவ்வளோ பெரிய வீட்ல நான் இவளை எங்கன்னு போய் தேட…எப்போ பார் என்னை தேட வைக்கிற மோகினி…” என்று யோசித்தபடி வர,

அவன் கல்பனாவின் அறையில் இருந்து வெளியே வந்து சுற்றி முற்றி பார்த்து இங்கும் அங்கும் யாரையோ தேடுவதை எல்லாம் மாடி வராண்டாவின் தூணில் சாய்ந்து நின்று பார்த்துகொண்டு தான் இருந்தாள் தேவி.

நிச்சயமாய் தேவி அவனை இங்கே எதிர்பார்க்கவில்லை.  இவன் கண்ணிலேயே படக்கூடாது என்றல்லவா நினைத்தாள். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன.அதுவும் கல்பனாவின் அறையில் அவனை கண்டதும், தன் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் இருக்கவே பெரும்பாடு பட்டாள்.

‘நல்லவேளை என்னை பார்த்ததை சொல்லலை.. சொல்லியிருந்தான் அவ்வளோ தான்..’ என்று நினைத்தவளுக்கு ‘கொஞ்சம் நல்லவன் தானோ…’ என்று தோன்றியது.

“நல்லவனோ கெட்டவனோ யாரா இருந்தா உனக்கென்ன… பார்ட்டிக்கு வந்தோமா, வந்த வேலையை பார்த்தோமான்னு இருக்கணும் தேவி…” என்று தனக்கு தானே சொல்லிகொண்டாள்.

ஆனாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு அவன்பால் தோன்றியதை தன்னிடமே மறைக்க முடியாதே. அதுவும் அவன் திகைத்து பார்த்த விதம்.. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்தது.

“பாவம் ரொம்பவும் குழம்பியிருப்பான்..” என்று தோன்ற,அவனையே தான் பார்த்தபடி மேலே நின்றிருந்தாள்.

உள்ளுணர்வு என்பார்களே அதுவோ என்னவோ, சரவணனுக்கு என்ன தோன்றியதோ, சட்டென்று மேலே பார்க்க, அத்தனை நேரம் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவள், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க, சில நொடி தாமதித்து வேகமாய் தனக்கு ஒதுக்கியிருந்த அறைக்கு சென்றுவிட்டாள்.

அவள் தன்னை பார்க்கிறாள் என்பதே அவனுக்கு உவகையாய் இருக்க “மோகினி.. இதோ வர்றேன்…” என்று வேக வேகமாய் மாடி ஏறினான் சரவணன்.

தன்னை கண்டுகொண்டவன் எப்படியும் தன்னை தேடி வருவான் என்று தெரியும் அவளுக்கு.. ‘கடவுளே காப்பாத்து….’ என்று கண்களை மூடி இறைவனை துணைக்கழைத்து கொண்டிருந்தவள் முன்,

“யாமிருக்க பயமேன்.. இந்த சரவணன் இருக்க பயமேன்…” என்று சிரித்தபடி ஆசிர்வாதம் செய்வது போல் கை வைத்து நிற்க, திடீரென்று கேட்ட அவனது குரலில் தூக்கி வாரி தான் போட்டது தேவிக்கு.

“ஹே… ஈசி ஈசி கூல் மா…” என்று சொன்னவன் மீண்டும் ஒருமுறை அவளை மேலிருந்து கீழாக பார்க்க,

அவளோ அவன் செய்ததில் சிரிப்பு வந்தாலும் வெளிக்காட்டாமல், “ஹலோ Mr. இங்க என்ன பண்ற…???” என்று கெத்தாகவே கேட்டாள்.

“வெரி சிம்பிள்.. என் மோகினியை பார்க்க வந்தேன்….” என்று அசராமல் சொல்ல,

“மோகினியா…???” என்று வாய் பிளக்க வேண்டியது அவள் முறையாய் போனது.

“எஸ்.. எஸ்.. மோகினி தான்.. ஆள் மாறாட்ட மோகினி… ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி இருப்பா…” என்று பேசியபடி அவளருகே நெருங்க,

‘என்னடா செய்ய போற….’ என்பது போல் அவனை லேசாய் அஞ்சிய பார்வை பார்க்க, மெல்ல மெல்ல அவளிடம் நெருக்கமாய் நெருங்கியவன்,

“யுவர் ஐஸ் ஆர் எக்ஸ்ப்ரசீவ்…” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல, அவன் பேச பேச பின்னே நகர்ந்துகொண்டே போனவள், மதிலில் மோதி நிற்க,

சரவணனும் அவளோடு சேர்ந்து சாய்ந்து நின்றான். அவள் காதருகே மெல்ல, “மோகினி…” என்றழைக்க,

அவளுக்கோ “ம்ம்….” என்பதை தவிர சப்தமே வரவில்லை.

தேவி வேண்டாம் விலகு.. அவன் உன்னை எதோ செய்கிறான்.. அவனிடம் நீ இப்படி நிற்பது சரியில்ல விலகு.. விலகி நில் என்றெல்லாம் அவளது மனம் கத்தி கூப்பாடு போட்டாலும் ஏனோ அவளால் விலகி நிற்க முடியவில்லை.அவளும் அமைதியாய் கண்கள் மூடி சுவரில் சாய்ந்து நிற்க, அவள் கரம் பற்றி அவனும் அதுபோலவே அமைதியாய் சுவரில் சாய்ந்து நின்றிருந்தான்.

அவனுக்கு சரி அவன் மனம் என்னவென்று தெரியும். ஆனால் அவளுக்கு??என்னவென்று தெரியும் முன்னே அவளால் எதுவுமே செய்யமுடியாமல் நிற்பதும் எப்படியோ இருந்தது.

“யோசிக்கவேண்டும்..” என்று தோன்ற, மெல்ல கண்கள் திறந்தவள், விலக போக, அவளது கரமோ அவனது கரத்தினுள் அடங்கியிருந்தது.

“ப்ளீஸ் மோகினி…..” என்று கண்களில் யாசிப்பை வேண்ட,

“நான் தேவி… மோகினி இல்லை.. நீ தேடி வந்த மோகினி இங்க இல்லை.. அது யாரோ வேற…” என்று வேண்டுமென்றே சொல்ல,

“நீ மோகினி தான்.. என்னை மயக்கிய மோகினி நீ தான்.. எல்லாருக்கும் தேவி.. ஆனா எனக்கு நீ மோகினி தான்.. ஏர் போர்ட்டையே  என்னை சுத்த வச்ச மோகினி பிசாசு….” என்று சொல்ல, அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஹே…!!!! என்ன இப்படி பேசுற..” என்று சிரித்தவள் தன் கைகளை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்ய,

“எப்படி பேசுறேன்… அப்போ முறைச்ச.. இப்போ சிரிக்கிறா… கொஞ்சம் கூட மரியாதை இல்ல….” என்றவனின் பிடி இறுகினாலும், பார்வையோ காதல் பேசியது.

“மரியாதையா… ஹ்ம்ம் உனக்கும் எனக்கும் என்ன ஏஜ் வித்தியாசமோ அதே தானே எனக்கும் உனக்கும்.. அப்போ நீ என்னை நீ சொல்லலாம் நான் உன்னை நீ சொல்ல கூடாதா…??” என்று லேசாய் அமட்டு கடித்து, தலையை ஆட்டி கேட்க,

“நிஜமாவே நீ மோகினி தான்….” என்றான் அவளை தன்னருகே இன்னும் இழுத்து.   

“ஹேய்… என்ன பண்ற நீ..???!!!”

“ஷ்.. சைலன்ட்…” என்று அவள் இதழில் விரல் வைத்தவன்,

“இதுக்கு முன்ன பார்த்தப்போ உன்னை எனக்கு யார்னு தெரியாது.. உனக்கும் தான்.. ஆனா இப்போ எல்லாமே நல்லா தெரியும்… உன் பேர் தெரியதப்போவே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சது..

இப்போ உன்னை மட்டும் தான் பிடிக்கும்னு தோணுது.. சி.. நான் பேசுறது செய்றது எல்லாம் ஜாலியா தோணலாம்.. பட் என்னோட நேச்சர் இது.. யோசிச்சு சொல்லு…” என்று ஆழ்ந்த குரலில் அவள் கரங்களை பிடித்து தன் நெஞ்சில் வைத்து சொல்ல,

பேசா மடந்தையாகி போனாள் தேவி.

ஏதோ வம்பு செய்வான்.. விளையாட்டாய் பேசுவான்.. பின்னே சுற்றுவான் என்று தான் இப்போது வரைக்கும் நினைத்திருந்தாள். ஆனால் அவனோ தன் மனதில் இருப்பது இது தான் என்று மறைக்காமல் தெள்ளத் தெளிவாய் சொல்லிவிட அவளுக்கு தான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அவன் நெஞ்சில் பதிந்திருந்த தன் கரத்தின் வழியே அவன் இதய துடிப்பை நன்றாகவே உணர முடிந்தது. சில நொடிகள் முன் தன் கைகளை  உருவிக்கொள்ளவாவது முயன்றாள் இப்போது அதுவும் இல்லாமல் போக,

“சரவணன்.. யாராவது பார்த்திட போறாங்க….” என,

அவனோ யார் பார்த்தாலும் பரவாயில்லை என்பது போல் நின்றிருந்தான். எத்தனை நேரம் அப்படி நிற்க முடியும்??

“சரவணன் ப்ளீஸ்.. என்ன இது…” என்று லேசாய் கடிந்தபடி தன் கைகளை உருவ,

“சொல்லு மோகினி.. இதில எது நிஜம்.. அந்த பச்சை கலர் ஐ லைனரா.. இல்லை இந்த பட்டுபுடவை மல்லி பூவா… இதுல எந்த மோகினி நிஜம்…” என்று அவளது முகத்தை மட்டுமே பார்த்தபடி கேட்க,

தேவியோ அவன் கேட்ட விதத்தில் முதலில் மெல்லிய அதிர்வு தோன்றினாலும், பின் லேசாய் உதடு சுளித்து, புருவம் உயர்த்தி,

“ஹ்ம்ம் நீ போலீஸ் தான.. கண்டுபிடி…. ” என்று சொல்ல,

“ஷ்… உன்கிட்ட நான் கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கு… வாழ்நாள் முழுக்க உன்கிட்ட புதுசு புதுசா ஏதாவது கண்டுபிடிப்பேன்.. ஆனா இப்போ இதை மட்டும் சொல்லு…” என்றவனின் பேச்சில் மெல்ல மெல்ல மயங்க ஆரம்பித்தது அவளுள்ளம்.

சரவணின் பார்வையோ ‘நீ சொல்லாமல் நான் விடமாட்டேன்…’ என்று அடம் பிடிக்க,

‘தேவி… யு ஆர் லூசிங் யுவர்செல்ப்…’ என்று அவளுக்கு தோன்றினாலும், அவனை விட்டு விலகி நின்றாள் தான் மூச்சே விட முடியும் போல் இருந்தாலும், ஏனோ இதெல்லாம் அவளால் செய்ய முடியவில்லை.

“சொல்லு மோகினி…..”

“ஹ்ம்ம் ரெண்டுமே இல்லை… சிங்கபூர்ல ஒரு ஷோ.. அது முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட் வந்திட்டேன்.. நோ டைம் டூ சேஞ்.. தென் இதோ இங்க.. இப்படி…” என்று தன்னை தானே சுட்டிக்காட்டியவள்,

“இது பாட்டிக்காக.. அவங்க கொஞ்சம் கர்நாடகம்… சோ இப்படி தான் முதல் முறை பார்க்கனும்னு சித்தி சொன்னங்க.. சோ ஒன்லி… ஆக நீ பார்த்த ரெண்டுமே நான் இல்லை… இப்போ நிம்மதியா..” என்று இருபுருவம் உயர்த்திக் கேட்டவள், இவள் பேச்சில் சரவணன் லயித்திருந்த நேரம் தன் கைகளை உருவி விலகி நின்றிருந்தாள்.

“அப்போ எது தான் நீ.. நான் பார்க்கணுமே… ”   

“கண்டுபிடி… நீ போலீஸ்ல…”

“நான் போலீஸ் தான்… பட் அது வேலை.. இது வாழ்க்கை..”

“அது எனக்கு தெரியாது… நான் போறேன்…” என கிளம்ப,

“ஹேய் நில்லு… என்ன ஷோ சிங்கபூர்ல.. அதும் அப்படி ஒரு மேக்கப்ல…” என்று ஆர்வமாய் கேட்க,

“ஹா.. ரேம்ப் வாக்…” என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு செல்ல,

“என்னது… ரேம்ப் வாக்கா…!!!!!!!!”

 

Advertisement