Advertisement

துளி – 22

“ரெண்டு பெரும் ஒண்ணா வந்தீங்களா…???” என்று அனைவரும் ஆச்சர்யமாய் கேட்க, அனைவர் முகத்திலும் லேசாய் ஒரு சந்தோசம் கூட எட்டி பார்த்தது..

“ஒரே ப்ளைட்ல வந்தோம்…” என்று மட்டும் சரவணன் சொல்ல, தேவி அது கூட பேசவில்லை..

இரவு எட்டு மணி ஆகிவிட்டது, இருவரும் வீடு வந்து சேர.. ராகுல் வழக்கம் போல் கிளம்ப, பிருந்தா “லேட் ஆச்சு டிரைவர் போகட்டும்…” என்று சொல்ல,

“ப்ளீஸ் மா…” என்று கெஞ்சி கொஞ்சி அவனே கிளம்பி டிரைவரோடு சென்றான். அடுத்த அரை மணி நேரத்திலேயே தேவியும் சரவணனும் வீட்டிற்கு வந்துவிட, அனைவருக்குமே இருவரும் ஒன்றாய் வந்தது மகிழ்ச்சி தான்.

ஆனால் அந்த மகிழ்ச்சி சம்பந்தப்பட்ட இருவர் முகத்திலும் இல்லை.

“கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வர்றேன்…” என்று சரவணன் சென்றுவிட, தேவி, இருந்து கல்பனா, பிருந்தா என அனைவரோடும் ஒன்றிரண்டு வார்த்தை பேசிவிட்டே தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு செல்ல, அவர்கள் சென்றதுமே,

“அக்காக்கும் மாமாக்கும் சண்டை போல.. கார்ல பேசிக்கவே இல்லை…” என்று ராகுல் சொல்ல,

“இப்போதென்ன டா…” என்று அனைவருக்குமே அனாயசமாக இருந்தது.

தேவிக்கோ மனம் பொறுக்கவே இல்லை.. அனைத்தும் அவனுக்காக தானே என்று நினைத்திருக்க, அவனோ கடைசியில் பட்டென்று யோசிக்காமல் பேசியது மிக மிக கஷ்டமாய் இருந்தது.

அறைக்குள் நுழைந்ததுமே, கடந்து போன அனைத்தும் மீண்டும் கண் முன்னே காட்சியாய்  வர, ‘ஒருவேளை சனு சொன்னது போல நான் கிளம்பி போயிருக்கவே கூடாதா…’ என்று கூட யோசித்தாள்..

‘அதெப்படி… ஒருவேளை நான் இங்கேயே இருந்து ஆன்ட்டிக்கு ஏதாவது இன்னும் சீரியஸா ஆகிருந்தா.. என்ன பண்றது…’ என்று யோசிக்கும் போதே கோதாவரி உள்ளே வந்தார்.

“ஆன்ட்டி….” என்று யோசனையாய் அழைக்க,

“ம்ம்… தேங்க்ஸ் மா நான் சொன்னதுக்காக வந்ததுக்கு…” என்றவர் அவள் கைகளை பிடித்துக்கொண்டார்.

கோதாவரிக்கும் சரி தேவிக்கும் சரி அடுத்து அத்தனை சுலபத்தில் பேச்சே வரவில்லை.. எதை எப்படி என்ன ஆரம்பிக்கவென்று தெரியாமல் இருவரும் திணற, கோதாவரியே முதலில் தொடங்கினார்..

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் தேவி…” என,

“சொ.. சொல்லுங்க ஆன்ட்டி…” என்று தேவியும் அவர் முகம் பார்க்க,

“பேசணும்னு சொல்றதை விட, சாரி சொல்லணும்… அதான் சரியா இருக்கும்.. உன் வயசுக்கு நீ ரொம்ப பெருந்தன்மையா நடந்துகிட்ட, ஆனா நான் அப்படி ஈசியா நடந்துக்களை… ஆனா இப்போ வருத்தபடுறேன்…” என்று பேச்சை ஆரம்பித்தவர், ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லிவிட்டார்..

தான் அன்று மயங்குவது போலவும், இயல்பாய் சுவாசிக்கவே சிரமப்பட்டது போலவும் நடித்தது என்று அனைத்தையும் சொல்லிவிட்டார்..

“ஆன்ட்டி….” என்று அதிர்ந்து போய், பார்த்தவளை கண்டு வருந்தியவாறே,

“நான் கீழயே எல்லார் முன்னாடியும் சொல்லிருப்பேன்.. ஆனா கொஞ்சம் தயக்கமா இருந்தது.. ரொம்ப வருஷம் கழிச்சு மஞ்சுகிட்ட இப்போதான் முகம் பார்த்து பேசுறேன்.. இதை சொல்லி கெடுத்துக்க விரும்பல.. இங்க அம்மாக்கு மட்டும் தான் தெரியும்.. சரவணன், அவங்கப்பா ரெண்டுபேருக்குமே முன்னாடியே தெரியும் போல.. ஆனா சரோ.. அவன் நேத்து தான் இதை என்கிட்டே கேட்டான்…

பண்றது எல்லாம் பண்ணிட்டு சாரின்னு சொல்றது சரியான்னு நீ கேட்கலாம்.. ஆனா.. என்ன சொல்ல….” என்று மேற்கொண்டு பேச வார்த்தைகளை தேடி, இவள் என்ன நினைதுகொள்வாளோ என்று தயக்கமாய் தேவி முகம் பார்க்க,

அவள் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை.. அப்போது பார்த்தது போலவே இருக்க, அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று கண்டுகொள்ள முடியவில்லை..

“தேவி…” என்று அவர் மீண்டும் அழைக்க,

“ஹா.. ஆன்ட்டி…” என்றவளிடம் மீண்டும் சாரி சொல்ல,

“ஐயோ.. ப்ளீஸ் ஆன்ட்டி.. இதில யாரும் யாருகிட்டயும் சாரி சொல்லிக்க வேண்டியதே இல்லை.. நீங்க என்னை பெருந்தன்மையான்னு சொன்னீங்க.. ஆனா நீங்க தான் இப்போ அவ்வளோ பெருந்தன்மையா வந்து பேசுறீங்க.. எத்தனை பேர் இப்படி தான் பண்ணத, அதுவும் தன்னை விட வயசில சின்னவங்க கிட்ட வந்து சொல்லி பேசுவாங்க… இதுவே புரியலையா நீங்க, உங்க மனசில எதுவும் வச்சுக்கலைன்னு..” என்று கோதாவரியை சமாதானம் சொல்ல,

“அதில்லைம்மா.. சரோ…” என்று அவர் இழுக்க,

“ம்ம்.. சனுக்கு கொஞ்சம் கோவம் தான்.. கொஞ்சமில்ல நிறைய.. என்னவோ நான் அவனை விட உங்களுக்கு இம்பார்டன்ஸ் கொடுக்கிறேன்னு நினைக்கிறான்… பொசசீவ்நெஸ்.. பொதுவா இது லேடீஸ்க்கு தான் தலை தூக்கும்.. கொஞ்சம் மாற்றமா உங்க மகனுக்கு தலை தூக்குது…” என்று சொல்லி லேசாய் சிரிக்க,

“எப்.. எப்படி நீ எல்லாத்தையும் அழகா புரிஞ்சிக்கிற…” என்று ஆச்சர்யமாய் கேட்டார் கோதாவரி..

“அப்படியில்ல ஆன்ட்டி… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி, விட்டு கொடுத்து போறதில தப்பில்லல.. பிளைட்ல வரும் போது கூட எங்களுக்குள்ள சண்டை தான்.. ஆனா நான் பொறுமையா போயிருந்தா சனு கூல் ஆகிருப்பான்… நானும் பேசிட்டேன் பதிலுக்கு…” என,

“ம்ம் நான் பேசுறேன் அவன்கிட்ட.. என்னால தானே இதெல்லாம்…” என்று கோதாவரி எழப்போக,

“ஐயோ வேணாம் ஆன்ட்டி.. அதுக்கும் அப்புறம் கோவம் வரும்.. நீங்க எனக்கு சப்போர்ட் பண்றீங்கன்னு.. நான்.. நானே பேசுறேன்… இன்னிக்கு வேணாம் நாளைக்கு பேசுறேன்..” என,

“ம்ம் அதுவும் சரிதான்.. ரெண்டு பெரும் மனசுவிட்டு பேசினா பிரச்சனை வராது…” என்றவர் மேலும் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டே  சென்றார்.

கோதாவரி சென்றதுமே “ஹப்பா….” என்று ஒரு ஆழ்ந்த மூச்சை வெளிவிட்டவள், மீண்டும் கட்டிலில் வந்து பொத்தென்று அமர, அவர் சொன்னது கேட்டு மனம் லேசாய் வருந்தியது தான், ஆனால் அதிக வருத்தம் கொண்டது சரவணனை எண்ணி தான்.

‘அவனுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் போல’ கோதாவரி சொன்னது நினைவில் வர,

“ஓ… காட்.. சனு….” என்று தலையில் கை வைத்தவள்,

“இதுனால தான் என்னை போகாதன்னு அவ்வளோ சொன்னானா??? காட்.. எப்.. எப்படி இத்தனை நாள் மனசில வச்சிட்டு இருந்தான்.. ஆன்ட்டிகிட்ட கேட்கவும் முடியாம, என்கிட்ட சொல்லவும் முடியாம.. ரியல்லி… ரியல்லி… ஹீ பீல் பேட்…

இதெல்லாம் மனசில வச்சிட்டு தான் நான் ஒவ்வொரு டைம் ஆன்ட்டி பத்தி பேசும் போதும் சண்டை போட்டானா… ம்ம்ச்.. இது தெரியாம நானும் பேசிட்டேன்..” என்று வருந்தினாள்.

உண்மை தானே.. அவனுக்கு வெளியே சொல்லவும் முடியாமல், கோதாவரியிடம் நேரடியாய் கேட்கவும் முடியாமல், தேவியிடமும் சொல்லா முடியாமல் தவித்து தானே போயிருப்பான்..

சரவணன் அப்போதும் கூட கோதாவரியிடம் கேட்டிருக்க மாட்டன், அவர் அன்று செய்தித்தாள் பார்த்து மஞ்சுவின் மகள் என்று சொன்னதும் தன்னை மீறிய ஒரு கோபத்தில் தான் அவன் பேசியது.. ஆனால் அதன் பின்னே நிறையவே வருந்தினான்.

தேவியின் எண்ணமோ, என்ன சொல்லி அவனை சமாதானம் செய்வது என்று யோசித்துகொண்டிருக்க,

சரவணனோ, அவனுக்கு கொடுக்கப்பட்ட அறையில், “ஒரு வார்த்தை.. ஒருவார்த்தை என்னை கேட்கிறது இல்லை.. ஆனா கோவம் மட்டும் வந்திடுறது..” என்று அப்போதும் தேவி மீது தான் கோவத்தில் இருந்தான்.

அவனுக்கு எப்போதுமே எதிலுமே தேவிக்கு தானே முக்கியமாய் இருந்திட வேண்டும் என்ற எண்ணம்.. நியாயமானதும் கூட.. ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் கோதாவரியை முன்னிறுத்தும் போதும், அது தன் அம்மாவாகவே இருந்தாலும், அதை ஏற்றுகொள்ள முடியவில்லை.

அவனும் தான் என்ன செய்வான்….

தேவியிடம் கோதாவரி செய்ததை சொல்லும் தைரியம் இல்லை.. அப்படி சொல்லவும் முடியுமா என்ன..???

என் அம்மா நடிக்கிறாள் என்று கட்டிய மனைவியிடமே சொல்ல முடியாது, அப்படியிருக்கும் போது காதலிக்கும் பெண்ணிடம் எப்படி சொல்ல முடியும்.. அதுவும் ஏற்கனவே கோதாவரிக்கும் மஞ்சுவிற்கும் ஆகாது எனும் போது, அவனால் என்னதான் செய்திட முடியும்..

வெளியே எதையும் காட்டிக்கொள்ளது அவனால் முடிந்த அளவு தேவியை போக விடாது தடுத்தான், அவளோ அதை கேட்கும் மனநிலையிலேயே இல்லை.. அதன் பிறகு வந்த நாட்களிலும், கோதாவரி சொன்னால் தான் எதுவும் என்று முடிவாய் சொல்லிவிட, அவனது காதல் மனமோ,

‘அப்போ இதில எனக்கென்ன இம்பார்டன்ஸ்….?? நான் சொல்றதுக்காக எதுவும் இல்லையா…’ என்ற கோணத்தில் வாதிட, ஏற்கனவே மனதில் போட்டு அழுத்திக்கொண்டிருக்கும் அழுத்தம் வேறு இன்னும் தன் அழுதத்தை கூட்ட எல்லாம் சேர்ந்து தேவியிடம் தான் கொட்ட வேண்டிய சூழ்நிலை.

சொல்லபோனால் இப்போது ஏன் டா கிளம்பி வந்தோம் என்றுகூட தோன்றியது… அறையை விட்டு வெளியே போக எண்ணமில்லை. ஆனால் வெளியில் இருப்பவர்கள் விடுவரா…??

“மாமா… உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க… சீக்கிரம் அப்புறம் ட்வெள்வோ கிளாக் பாட்டிக்கு கேக் கட் பண்ணனும்…” என்று சரவணன் வந்தழைக்க,

“ஓ.. இதோ வரேன்…” என்றவன், “இன்னும் யாரும் சாப்பிடலையா டா…” என்று கேட்டபடி கீழிறங்கி வர,

அங்கே டைனிங் டேபிளிலோ, அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அதுவும் கோதாவரி, மஞ்சு, தேவி, பிருந்தா என நால்வரும் அப்படி பேசி சிரித்துக்கொண்டிருக்க, சரவணனுக்கு தான் ஆச்சர்யமாய் போனது..

‘என்னடா நடக்குது இங்க…’ என்று தனக்கு தானே சொல்லியபடி, அவனும் சென்று அமர, பார்வை என்னவோ தன் அம்மாவையும், மஞ்சுவையும், தேவியையுமே அலசியது..

‘இவங்க எப்போ கூட்டு சேர்ந்தாங்க… டேய் சரவணா.. உனக்கு தெரியாம எதுவும் கூட்டு சதி நடக்குதா…’ என்று கேள்வியாய் பார்க்க,      

“என்னடா திகைச்சு போய் பார்க்கிற…நாங்க இப்போ பிரண்ட்ஸ் ஆகிட்டோம்…என்று சிரித்தபடி மஞ்சுவை காண,  ஒரு திணறல் புன்னகை வெளிவந்தாலும், இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.

தேவி அப்படியே இவனை பார்த்தபடி தான் அமர்ந்திருந்தாள்.. நேராய் அவனுக்கு ஏத்தி இருக்காய்..  உதட்டில் புன்னகை உறைந்திருந்தாலும், கண்களோ கண்ணீரில் மின்னியது.

‘நான் சொன்னேனே அனைத்தும் சரியாகும் என்று’ என்று சொல்லாமல் சொல்லியது அவள் கண்கள்.. எவ்வித ஒப்பனையும் இல்லாமல், வெகு சாதாரணமாய் இருந்தவள் அவன் கண்களுக்கு அப்போதும் மோகினியாக தான் தெரிந்தால்.

புத்திக்கு உரைத்தது, அனைத்தும் சரியாகி விட்டது என, ஆனால் மனமோ அதை நம்ப முடியாமல் தவித்தது..

“என்ன டா. நாங்களே சட்டுன்னு பேசிட்டோம்.. நீங்க என்ன இப்படி அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் போல பார்த்துட்டு மட்டும் இருக்கீங்க..” என்று கோதாவரி பேச ஆரம்பிக்க,

“கோதா முதல்ல எல்லாம் சாப்பிடட்டும்… நேரம்மாச்சு.. அப்புறம் சாவகாசமா பேசுங்க…” என்று கல்பனா சொல்ல, சரியென்று அனைவரும் உண்ண, சரவணனுக்கு இன்னுமே கூட நம்ப முடியவில்லை.

கோதாவரி தேவியை ஏற்றுகொள்வார் என்று ஒரு நம்பிக்கை இருந்தது தான். ஆனால் மஞ்சுவோடு இத்தனை இயல்பாய் பேசி சிரிப்பது நிச்சயம் ஆச்சர்யம் தான்..

“என்ன டாட் நடக்குது இங்க…” என்று அருகே அமர்ந்திருந்த அசோக் குமாரின் காதை கடிக்க,

“எனக்கு தெரியாதுடா மகனே.. பெண்கள் கூட்டணி…” என்று தோளை குளுக்கிவிட்டார்.

சரி இந்த தேவியாவது ஏதாவது ஹின்ட் கொடுப்பாள் என்று பார்த்தால், அவளோ தட்டில் இருப்பது மட்டும் தான் என் கண்களுக்கு தெரியும், வேறெதுவும் தெரியாது என்பது போல் தட்டிலே கவனம் வைத்து அமர்ந்திருக்க, 

“என்னடா பேராண்டி இப்போவாது எனக்கு எதுவும் வாங்கிட்டு வந்தியா…” என்று கேட்டபடி உண்டார் கல்பனா..

“ஹா… அது… அவசரமா கிளம்பி வந்தேன்ல பாட்டி அதான் எதுவும் வாங்க முடியலை…” என்று சமாளிக்க,

“தேவி கூட தான் அவசரமா கிளம்பி வந்தா, ஆனா எனக்கு கிப்ட்டோட வந்திருக்கா…” என்று கல்பனா வழக்கம் போல் சரவணனை வார,

‘இவளுக்கு இதே வேலையா போச்சு…’ என்று முனங்கியவன், தனக்கும் பசிக்கிறது என்பது போல் உணவில் கவனம் செலுத்த, அனைவருமே அமைதியாய் உண்டு முடித்தனர்.

இத்தனை பேர் அதுவும் வெகு நாட்கள் கழித்து ஒன்றாய் கூடியிருக்கும் போது, பேச்சிற்கு பஞ்சமிருக்குமா என்ன??

வயிறு நிறைய உண்டுவிட்டு வாய் வலிக்க அனைவரும் பேசிக்கொண்டிருக்க, தாங்கள் மட்டுமே தனித்து இருப்பது போல் தோன்றியது சரவணனுக்கும், தேவிக்கும்.

அனைவருமே மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டு இருந்தாலும், தாங்களும் ஒப்பனைக்கு பேசி சிரித்தாலும், இருவர் மனதுமே ஒருவரை ஒருவர் நாடியது என்றுதான் சொல்ல வேண்டும்..

கண்கள் அவ்வப்போது தொட்டு மீள, உதட்டில் உறைந்திருக்கும் புன்னகை கண்களில் தெரியவில்லை. இவர்களின் கண்ணா மூச்சி ஆட்டத்தை கவனித்த கல்பனா,

“தேவிம்மா.. எதோ கப் எல்லாம் வாங்கினியாமே.. நான் இன்னும் உன் டான்ஸ் பார்த்ததில்ல… ஒரு தடவ ஆடேன்…” என்று கேட்க,

“நா.. அது.. பாட்டி இப்போவா…???” என்று தேவி தயங்க,

மஞ்சு “கேட்கிறாங்கல்ல.. லைட்டா ஆடு தேவி…” என,

“ம்ம்…” என்று சொல்லியபடி எழுந்தவளின் கண்கள் சரவணனை தான் பார்த்தது..

“நான்… நான் தான் சாங் போடுவேன்…” என்ற ராகுல், அன்றைய நியாபகத்தில்,

‘கள்வரே கள்வரே…’ படலை ஒலிக்க விட, அதனை, கேட்டதும் தேவியும் சரவணனும், உடலில் ஒரு மெல்லிய அதிர்வலை பரவி, இருவரையும் மீண்டும் பார்த்துக்கொள்ள வைத்தது…

எத்தனை சந்தோசமான தருணம் அது… இப்போது நினைத்தாலும் மனதில் இனிக்க, தேவி மெல்ல ஆடத் தொடங்கினால். அனைவரும் அவளையே பார்த்தபடி அமர்ந்திருக்க, சரவணனுக்கோ கேட்கவும் வேண்டுமா.

அன்றுபோலவே இன்றும் அவளை தூக்கி சுத்த வேண்டும் போல் தோன்ற, எங்கே தன்னை மீறி எதுவும் செய்துவிடுவோமோ என்று கஷ்டபட்டே அமர்ந்திருந்தான்..                 

பாடலின் வரிகள் நகர்ந்து செல்ல செல்ல, தேவியின் எண்ணங்கள் பின்னோக்கி செல்ல செல்ல, ஒருகட்டத்தில் அவளால் ஆட முடியவில்லை.. அப்படியே நின்றுவிட,

அதற்கு மேல் அவளால் முடியவில்லை.. என்னதான் கோதாவரி நடந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு என்று கேட்டாலும், சரவணன் என்னதான் தன் மனபாரம் தாங்காது இவளிடம் பேசிவிட்டாலும், அவளும் பெண் தானே எத்தனை மனதில் போட்டு குமைவாள்..

ஆட முடியவில்லை.. சிந்தனை வேறெங்கோ  சென்றுவிட, கால்கள் நின்றுவிட்டது..

“தேவி…” என்று மஞ்சு அழைக்க,

அவ்வழைப்பில் தன்னிலை உணர்ந்தவள், “சாரி…” என்று சொல்லி வேகமாய் பின்னே தோட்டம் இருக்கும் பகுதிக்கு ஓடி விட்டாள்.

சரவணனுக்கு சட்டென்று மிகுந்த வருத்தமாய் போனது. அவள் எதை நினைத்து ஆட முடியாமல் நின்றாள் என்று அவனுக்கு தெரியாதா என்ன..??அனைவரும் அவள் சென்ற திசையையே வருத்தமாய் பார்த்துவிட்டு பின் சரவணன் முகம் நோக்க,

“சரவணா போய் பேசுடா…” என்று கோதாவரி சொல்ல,

“மாம்…” என்று அதிர்ந்து விழித்தான்… 

“நீங்க ரெண்டு பெரும் எனக்காக யோசிக்கும் போது.. நான் உங்களுக்காக யோசிக்க கூடாதா.  நான் பண்ணதை பொறுத்துகிட்ட, தேவி பண்ணது சரின்னு புரியலையா…” என்று கோதாவரி மகனின் முகத்தில் ஒரு அழுத்தமான பார்வையை நிலைக்கவிட்டு, 

“நானும் கொஞ்சம் நல்லவா தான்டா.. போ.. போய் தேவி கிட்ட பேசு..”என்று அவன் முதுகில் தட்ட,

அடுத்த நொடி சரவணன் ‘மாம்…’ என்று இறுக கோதாவரியை கட்டிப்பிடித்தவன், பின் ஆவலாக எழுந்தாலும், “ஆன்ட்டி.. அங்கிள்”என்று தயக்கமாய் மஞ்சுவையும் தியாகுவையும் காண, அவர்களோ  சம்மதமாய் தலையாட்டினர்.

அடுத்த இரண்டு நிமிடத்தில், வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் இருக்க, தேவியோ அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள், வானத்தை வெறித்திருந்தாள்.சரவணனோ அத்தனை நேரம் இருந்த புன்னகை எல்லாம் மாறி, தன் பேன்ட் பக்கெட்டில் கை விட்டு தான் ஒரு போலீஸ் என்ற தோரணையில் அவள் முன்னே சென்று நிற்க,

சரவணன் வருவான் என்று தெரியும், இருந்தாலும் அவனை கண்டதும் ஒருவித உணர்வு..  

அதுவும் அவன் வந்து நிற்கும் தோரணை, முதல் நாள் இவன் தன்னிடம் எப்படி பேசினான் இப்போ எப்படி இருக்கிறான், என்று தோன்ற, அவனுக்கு தன் மீது இருக்கும் கோவமும் நினைவில் வந்தது. ஆனால் இப்போது தான் புரிந்தது.. கோவமில்லை அது, தன் மனக்குமுறலை வெளிப்படுத்த இயலாது தன்னிடம்  காட்டிவிட்டான் என்று. 

‘அவ்வளோ சொல்லியும் நானே தானே போனேன்.. நான் தான் பேசணும்…’என்று தோன்ற..

“சனு…”என்று மெல்ல அழைக்க, அத்தனை நேரம் அமைதி காத்தவன் பொங்கி விட்டான்.

“பேசாத…போறேன் சொன்ன.. இப்பவும் என்னை தான் தேடி வர வச்சிருக்க… இப்போ கூட நான் தான் உன் பின்னாடி வந்திருக்கேன்… அலைய வைக்கிற…”என்று கோவமாய் சொன்னவனும், அப்படியே அவளருகே அமர, இருவருக்குமே சொந்த இடம் வந்து சேர்ந்தது போல் இருந்தது.

“சா…”என்று அவள் தொடங்க,

“உன் சாரி எல்லாம் நீயே வச்சிக்கோ.. அப்படி என்ன டி உனக்கு பிடிவாதம்.. நான் எல்லாமே பார்த்துக்கிறேன் சொன்னேன்ல.. கிளம்பி போன.. இப்போ மட்டும் என்ன.. ”என்று தலையை திருப்பி சலித்தான்..

அவளும் தான் அப்போது அப்படி அவசரமாய் கிளம்பி வந்தது தவறு என்று உணர்ந்து தானே இருந்தாள். அனைவருக்கும் அது இன்னமும் மன கஷ்டத்தை கொடுத்தது என்று அவளுக்கு புரிந்தே இருந்தது.

“இல்ல சனு.. அது.. அது…”

“என்ன அது அது… சொல்லு.. அப்போ நான் சொன்னது போல ஒரு துளி அளவு கூட என்மேல உனக்கு காதல் இல்லை…” என்று பேசிக்கொண்டே போக, அமர்ந்த நிலையிலேயே சட்டென்று அவனை அணைத்துக்கொண்டாள். இவர்களின் அசைவில் ஊஞ்சலும் லேசாய் ஆடத் துவங்க,

“ப்ளீஸ் அப்படி மட்டும் சொல்லாத…”என்று அவன் மார்பில் முகம் புதைக்க,

“வேறென்ன சொல்ல சொல்ற.. ம்ம்ப்ச் எப்பவும் என்னை படுத்தற மோகினி.. யாரு யாருமே என்னை புரிஞ்சுக்கலை…”என்றவனின் கரங்களும் இறுக அவளை தன்னோடு பிணைத்துக்கொண்டது..

அவன் அணைப்பை உணர்ந்தவள், “ஸாரி…”என்று சொல்லியபடி அவன் முகம் பார்க்க நிமிர, அவள் தலையில் தன் கன்னம் வைத்து அழுத்தியவன்,

“உன் சாரி நீயே வச்சுக்கோ.. எனக்கு நீ மட்டும் போதும்…”என, அவளுக்கு இன்னும் உடல் குலுங்கியது.

“ஏய்.. இப்படி அழுதா, நான் போயிடுவேன். தென் நீ தான் வரணும்..”என்று மிரட்ட,

“சரி சரி.. அழல.. நீ தான் என்னை அழுமூஞ்சியா மாத்திட்ட.. அடுத்து என்னை பார்க்க ஒன் டைம் கூட வரல்ல.. இவ்வளோ கோவம் உனக்கு..ஆனா நான் இப்போ அழுதது உன் கோவத்தை பார்த்து இல்லை.. நீ எவ்வளோ பீல் பண்ணிருப்பன்னு நினைச்சு தான்.. எதையும் வெளிய சொல்லவும் முடியாம.. உனக்கு தான் ரொம்ப கஷ்டம்ல…” என்று கண்களை துடைத்தபடி கூற,

“என்.. என்ன சொல்ற…???” என்று கண்களை விரித்தான்…

“ம்ம் எனக்கு எல்லாமே தெரியும்…ஆ.. ஆன்ட்டி சொல்லிட்டாங்க…” என்று தேவி அவனை பார்த்து சொல்ல,  இது சரவணனுக்கு பெருத்த அதிர்ச்சி தான்..

‘ஒரு நாள்ல எத்தனை ஷாக் டா குடுப்பீங்க..’ என்று அவன் மனம் சொல்லியதோ என்னவோ…

“என்.. என்ன சொல்ற தேவி….???” என்று மீண்டும் நம்ப மாட்டாமல் கேட்க,    தேவியோ, கோதாவரி தன்னிடம் கூறிய அனைத்தையும் மீண்டும் அவனிடம் சொல்ல. சரவணனுக்கு நம்பவே முடியவில்லை..

‘நிஜமா….’ என்று திரும்ப திரும்ப கேட்டான்.அவளும் ஆம் என்று சொல்ல, இத்தனை நாள் கோதாவரி மீதிருந்த வருத்தம் இப்போது மறையக்கண்டு, ஒருவித பெருமையாய் கூட இருந்தது..

எத்தனை பேர் இப்படி செய்வர்.. ???

‘தேங்க்ஸ் மாம்…’ என்று மனதில் கூறிக்கொண்டவன்,

“ஹ்ம்ம் சாரி.. இது… இதெல்லாம் உன்கிட்ட எப்படி சொல்றது தெரியலை அதான்.. நீ அம்மா பத்தி பேசும் போதெல்லாம், எங்க எதாவது உளறிடுவேனோன்னு கோவமாவே பேசிட்டேன்.. நிஜமா எனக்கு இதை பேலன்ஸ் பண்ண தெரியலைன்னு தான் சொல்லணும்..சாரி… ” என,

“ஹ்ம்ம் விடு சனு.. எல்லாருமே ஒவ்வொரு மாதிரி ரியாக்ட் பண்ணிட்டோம்.. ஒருவேளை அந்த இடத்தில என் அம்மா இருந்திருந்தா, நீ என்ன பண்ணிருப்ப.. கண்டிப்பா நீயும் அப்போ கிளம்பி தான் போயிருப்ப… அதை தான் நானும் செஞ்சேன்…” என்று சொன்னவள்,

“ஆனாலும் நீ ரொம்ப என்னை பேசிட்ட. எல்லாம் தெரிஞ்சிருந்தும் ரொம்ப பேசிட்ட…” என்று குறைபட்டாள்.. ஏனோ அவளுக்கு மனத்தாங்கலாய் இருந்தது..     

அவளை மீண்டும் தன் மீது சாய்த்து கொண்டவன், “ஆமா நான் அவ்வளோ சொல்லியும் நீ போன.. அப்போ என்மேல் நம்பிக்கை இல்லையோன்னு நினைச்சேன்.. இப்போ கூட நான் தான் வந்திருக்கேன்.” என்றவன், தேவியின் கண்கள் மீண்டும் நீரில் மின்னக்  கண்டு 

“இந்த அழுமூஞ்சிக்கு கொஞ்சம் டச்சப் பண்றேன்….”என்று, அவள் முகம் முழுக்க முத்தம் பதிக்க, நிஜமாகவே ஒப்பனை செய்தது போன்று தான் பளீரிட்டது அவள் முகம்.

“ம்ம் இதான் என் மோகினி….”என்று சொல்லிக்கொண்டே இன்னும் இறுக்கமாய்  அணைக்க,

“ம்ம் இப்போ உனக்கு என்மேல கோவமெல்லாம் போச்சா…??”என்று கேட்டாள்.

“கோவம்… ஹ்ம்ம்… கோவம் இருந்தது.. உன்மேல அம்மா மேல.. பட்.. கோவப்பட்டு என்ன செய்ய. இதெல்லாம் நடக்கனும்னு இருந்திருக்கு, நடந்திடுச்சு அவ்வளோதான்… லீவ் இட்…”

“ஹ்ம்ம் உனக்கு தெரியுமா நமக்கு பேசி முடிச்சிடாங்க.. சீக்கிரமே கல்யாணம் எதிர்பார்க்கலாம்..” என்று ஊஞ்சலை கால் ஊன்றி ஆட்டியபடி தேவி சொல்ல,

“வாட் இப்போவே கல்யாணமா.. நோ நோ.. நான் லவ் பண்ணனும்.. ஜஸ்ட் போர் டேஸ் தான் இதுவரை ஒழுங்கா லவ் பண்ணிருக்கேன்…” என்றான். 

“ஹே இதெல்லாம் ஓவர்… டேட் எப்போவேணா பிக்ஸ் பண்ணதட்டும்.. சேம் சென்னை தான்.. அடிக்கடி பார்க்கலாம்.. நிறைய நிறைய பேசலாம்…”என்று முன்போலவே சொல்ல,

அவனோ “முதல்லயும் இப்படிதான் சொன்ன.. ஆனா பார்க்கவே சரியா முடியலை… ” என்று சொல்லிபடி,  தன்னருகே இருந்தவளை எழுப்பி நிறுத்தி, அவளை தன் கண்களால் அளக்க,

“ஏய் சனு… என்ன..??”என்று கேட்டவளுக்கு, குரலே எழும்பவில்லை. பின்னே அப்படி பார்த்தால்.தன் கைகளால் அவள் தோள் பற்றியிருந்தவன், சட்டென்று இறுக அணைத்துகொண்டான்.

“சனு…” என்று அவள் சொல்ல,

“ஹப்பா… இது.. இதெல்லாம் இன்னும் நிஜமான்னு தெரியலை.. அதான்..”என்று சொன்னவன்.. அவன் வழக்கம் போல,“எஸ்.. எஸ்.. மை மோகினி என்கிட்டே வந்துட்டா…”என்று கை முஷ்டி மடக்கி கத்த,

“சனு.. சனு.. போதும்.. மெல்ல..”என்று அவள் அடக்க, இருவருக்குமே சிரிப்பு அடக்க முடியாமல் வந்தது.                 

சிரித்து முடித்தவள் “ஹ்ம்ம் ஆன்ட்டி எனக்கு கால் பண்ணி வர சொன்னதே பெரிய ஷாக்…”என

“எஸ் நானே இதை எதிர்பார்க்கலை… ரொம்பவே ஷாக்.. அதுவும் அம்மாவே பேசினது ரொம்பவே ஷாக்…” என்றான்.

“ஹ்ம்ம் நீ லவ் சொன்ன வேகத்தை வச்சு பார்த்தா, துரத்தி துரத்தி வருவன்னு நினைச்சேன்.. ஆனா… நீ டூ பேட்..” என்று இலகுவாய் மாறி அவனை வம்பு பேச,

“ஹேய்… நான் போலீஸ் மா.. அப்படியெல்லாம் செய்ய கூடாது.. தப்பு…”என்று இரு கன்னத்திலும் லேசாய் தட்ட, அவளுக்கு அதற்குமேல் சிரிப்பை அடக்க முடியவில்லை..

பேச பேச இருவருக்குமே மனம் இலேசானது… இதுநாள்வரை பேசாத பேச்செல்லாம் பேசினார்கள். எத்தனை நேரம் இப்படி போனதோ, இத்தனை நாள் நடந்ததை எல்லாம் பேசி பேசி தீர்த்தனர் இருவரும். இதெல்லாம் இத்தனை நாள் இழந்தோமே என்று தோன்றும் போது சிரமமாய் இருந்தாலும், இந்த பிரிவும் கூட தேவை தானோ என்றே தோன்றியது.தங்கள் உறவு இன்னும் ஆழம் சென்றதை உணர்ந்தனர்.   

“ஆன்ட்டி எப்படி இப்படி மாறினாங்க….”என்று அவள் கேட்க,

“மாம்…. ரொம்ப நல்ல டைப்… அவங்களுக்கு பிடிக்காத விசயம்னா தான் கொஞ்சம் இப்படி.. அதுக்காக இந்த மாதிரி இல்லை… ”என்று அவன் என்ன சொல்லவென்று தெரியாமல் சொல்ல,

“ஹா ஹா.. நான் அதை கேட்கலை…”என்று சிரிக்க,

“பின்ன…??” என்றான்.

“வந்ததில் இருந்து அவ்வளோ சிரிப்பு கேலி அம்மாவும் அவங்களும்.. அவ்வளோ கேஸ்வலா பேசினாங்க.. நான் தான் ஞேன்னு பார்த்திட்டு இருந்தேன்…”

“நீ சும்மாவே அப்படிதான் தான் பார்ப்ப..”என்று அவளை போட்டு வார,

“ஹே.. யுவர் ஐஸ் ஆர் டூ எக்ஸ்ப்ரசீவ்னு சொன்னது யாரம்…”என்று சண்டைக்கு தயாரானாள்.

“போதும் போதும்.. சண்டை போடாத.. எஸ் நீ மோகினி தான்… என்னை மயக்கிய மோகினி தான்.. ஆனா இந்த கேப் கூட நல்லது தான்ல.. நம்மை நாமே புரிஞ்சுக்க ஒரு கேப்…”என, அவன் சொன்னது புரிந்தும் வேண்டுமென்றே தள்ளி அமர்ந்தவள்,

“எஸ் சனு.. எனக்கும் இந்த கேப் சரின்னு தான் தோணிச்சு… நானும் அதான் கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன்.. நீ சொன்ன போல துளி காதல் எல்லாம் இல்லை… நிறையவே இருக்கு.. லைப் லாங் சொல்ற அளவு.. காட்ற அளவு..என்று சொல்ல,

“ஒய்.. எங்க தள்ளி போற…”என்று தன்னருகே இழுத்தவன்

“துளி காதல் இருந்தாலே நீ மோகினியா இருப்ப… இதுல நிறைய நிறைய இருந்தா நான் என்னாவேன்…” என்று வேண்டுமென்றே சொல்லி சிரிக்க,

“என்ன ஆகுவ… ஹ்ம்ம் மோகினிய மயக்கிய…ஹா..என்ன சொல்ல… தெரியலையே…”  என்று தலை சரித்து யோசிக்க,

“அதெல்லாம்… உள்ள ஏதாவது இருந்தா தான் ஐடியா வரும்…” என்று சொல்ல,

“அது உண்மை தான்… இல்லாட்டி உன்னை பார்த்ததுமே லவ் பண்ணிருப்பேனா…” என்றவள், அவன் மார்பில் குத்த,  

“நோ வையலஸ் மோகினி. இனி லவ் அண்ட் லவ் ஒன்லி தான்…”என்றவன் அவளை தன்னோடு இறுக அணைத்துக்கொள்ள போக,

அந்நேரம் பார்த்து சரியாய் தேவி சரவணன் இருவரது அலைபேசியும் சிணுங்கியது..

“நேரமாச்சு… கேக் கட் பண்ணனும்….” என்று அழைப்பு வர,

“இதோ வரோம்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவர்கள்,

“ரொம்ப நேரமாச்சுல.. டைம் போனதே தெரியலை…” என்று சொல்லியபடி கரங்களை கோர்த்துக்கொண்டு, வீட்டினுள்ளே செல்ல, அங்கே இவர்களது மலர்ந்த முகமும், கோர்த்திருந்த கரங்கலுமே, இருவருமே சமாதானம் ஆகிவிட்டனர் என்று சொல்லாமல் சொல்ல, அனைவரின் முகத்தில் ஒரு புன்னகை..

மணி சரியாய் பன்னிரண்டை தொட, “ஹேப்பி பர்த்டே டூ யூ…” என்று அனைவரும் கை தட்டியபடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாட, மெழுவர்த்தி ஊதி கேக்கை வெட்டிய கல்பனா, ராகுலுக்கு தான் முதலில் ஊட்டினார்.. சிறுவன் அல்லவா.

“அம்மா எங்களை மறந்தாச்சா…” என்று புண்ணியகோடியும், கோதாவரியும் கேட்க, அங்கே அனைவருக்குமே இன்னும் புன்னகை விரிந்தது…

அதே புன்னகையோடு தேவி சரவணனை காண, அவனோ இன்னும் இறுக்கமாய் தன் கரத்தோடு அவள் கரத்தினை பின்னிக்கொண்டான்.. 

துளி காதல் கேட்டான்…..

                 அவளோ சிறுதுளி பெருவெள்ளம் என்றாள்…      

 

 

 

 

 

 

 

 

Advertisement