Advertisement

துளி –  15

ஸ்ருதியை கண்டுபிடித்து அவள் பெற்றோர் கையில் ஒப்படைக்கும் போது அதிகாலை மணி நான்கு..

ஆம் ஒருவழியாய் பாதுகாப்பாய் எவ்வித சேதாரமும் இல்லாமல் ஸ்ருதியை கண்டுபிடித்தாகிவிட்டது.

சரவணனுக்கு அதன் பின்னே தான் மூச்சு விடவே முடிந்தது..

“ரொம்ப தேங்க்ஸ் சார்….” என்று ஸ்ருதியின் பெற்றோர் சொல்ல,

அவர்களிடம் அந்த நன்றியை மறுத்தவன், “இது என்னோட கடமை…” என்றுவிட்டு,

“ஒரு டூ மினிட்ஸ் உங்ககிட்ட பேசலாமா…” என்றான்.

அவர்களும் என்னவென்பது போல் அவன் முகம் காண,

“இந்த நிமிஷம் உங்க மைன்ட் செட் எப்படி இருக்கும்னு நல்லா எனக்கு தெரியும். ஆனா இது என்னோட கடமை..  சொல்லித்தான் ஆகணும்… அன்ட் இன்னொரு விஷயம் உங்க பொண்ண ஏன் கடத்தினாங்க தெரியவேணாமா….” என்று தன் காக்கி பேண்டில் கை விட்டு கேட்க,

“ஏன்.. ஏன் சார்.. ஆ.. ஆனா எங்களுக்கு கடத்தினோம்னு எதுவும் டிமாண்ட் பண்ணி ஒரு போன் கூட வரலியே…” என்று கோபால் சொல்ல,

லேசாய் சிரித்த சரவணன், “கடத்தியது உங்க கிட்ட இருந்து பணம் வாங்கவோ, இல்லை வேறேதுக்குமோ இல்லை. வெரி சில்லி ரீசன்.. ஆனா அது அவங்கவங்க மனநிலை பொருத்தது. பணநிலை பொருத்தது..ஸ்ருதிய கிட்னாப் பண்ணது அவகிட்ட இருக்க ஐ போனுக்காக..” என்று சொன்னதும் எதிரே இருந்தவர்களின் முகம் ஆச்சர்யத்தில் விரிந்தது.

“என்.. என்ன.. ஐ போனுக்கா…” என்று ஸ்ருதி அம்மா விளிக்க,

“எஸ்… அதுக்கே தான்.. உங்களுக்கு வேணும்னா அது நார்மல் திங்கா இருக்கலாம்.. ஆனா முக்கால்வாசி பேருக்கு அது பிரம்மாண்டம் தான்… அன்ட் இன்னொரு தின்க் நான் கேட்கணும், ஷி இஸ் ஜஸ்ட் போர்ட்டீன்… அவளுக்கு ஐ போன் தேவையா..??

பிள்ளைகளை கஷ்டம் தெரியாம வளர்க்களாம் தப்பில்ல, ஆனா இந்த மாதிரி லக்ஸரி திங்க்ஸ்லாம் அவங்களுக்கு ஹேண்டில் பண்ற அளவு வளர்ந்த அப்புறம் வாங்கி கொடுக்க.. இல்லை அதை அவங்களே வாங்கிக்கிற அளவுக்கு திறமைய வளர்த்துக்க உதவி செய்யுங்க… போங்க சார்.. இனிமேலாவது கொஞ்சம் கவனமா இருங்க..” என்று நீளமாய் சரவணன் பேசி முடிக்க,ஸ்ருதியின் பெற்றோர்கள் தலைகுனிந்தனர்.

உண்மை தானே.. பெற்றவர்கள் செய்யும் சிறு தவறு, பிள்ளைகளின் வாழ்வை தடம் புரள செய்கிறது. நல்லவேளை ஸ்ருதி கிடைத்துவிட்டாள் இல்லையெனில் யாரை சொல்லி என்ன பயன்.

“ஸ்ருதிய நார்மலா இருக்க விடுங்க.. ஆனா மானிட்டர் பண்ணிட்டே  இருங்க.. டேக் கேர்…” என்று அவர்களை அனுப்பி வைத்தவன் வீடு வந்து சேரும் பொழுது ஐந்தை தொட்டுவிட்டது.

கண்கள் எல்லாம் கபகபவென்று எரிந்தது. உடலில் அத்தனை அசதி.. ஆனாலும் அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல் மனம் ஒரு நிம்மதியில் திளைத்தது.

ஆம் நிம்மதி தான்.

தன் கடமையை, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்து முடித்த திருப்தியையும் தாண்டி, ஒரு பெண்ணை காப்பாற்றினோம் என்ற நிம்மதி.

தேவியிடம் ஸ்ருதியின் முக புத்தக பக்கத்தை கட்ட சொன்னதும், சரவணின் கண்கள் அதில் தங்களுக்கு சாதகமாய் ஏதாவது இருக்கிறதா என்று ஆராய, ஸ்ருதி கடைசியாய் போட்ட பதிவையே மீண்டும் மீண்டும் பார்த்துக்  கொண்டிருந்தான்.

“successfully finished a full fusion song of western n classic…” என்று மகிழ்ச்சியாய் பதிவு போட்டிருக்க, அதற்கு அத்தனை லைக்குகளும், கம்மெண்ட்டுகளும்…

அதிலேயே பார்வையை ஒட்டியவன், பின் வேறெதுவும் தட்டுபடாமல் போக,

“ஓகே Mrs. கோபால் நீங்க வீட்டுக்கு போங்க.. அன்ட் தேவி நீங்களும் தான்.. நான் என் ட்ரூப்போட ஜாயின் பண்ணிக்கிறேன்…” என,

“சார் என் பொண்ணு கிடைச்சிடுவாளா….??” என்று கண்ணீர் மல்க கேட்டவரிடம்,

“நல்லதே நடக்கும்.. எதிலும் நம்பிக்கை மட்டும் தான் வேண்டும்…” என்றவன்,

தேவியை நோக்கி “இவங்களை வீட்டில விட்டு, என்னை அந்த ஏரியா போலீஸ் ஸ்டேசன்ல டிராப் பண்ணிட முடியமா…??” என, தேவியின் தலையோ தானாய் சரியென்று ஆடியது.

போகும் வழியெலாம் சரவணன் தன் குழு ஆட்களோடு பேசிக்கொண்டே தான் வந்தான். ஸ்ருதி இருப்பது அவளது வீட்டு ஏரியாவில் என்று திண்ணமாய் தெரிந்தாலும், அது எங்கே என்று தான் தெரியவில்லை..

எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்று உறுதி பிறக்க, ஸ்ருதியின் அம்மாவை வீட்டில் விட்டு, தேவியின் காரிலேயே சென்று அருகில் இருந்த காவல் நிலையம் சென்று இறங்க, இடைப்பட்ட இந்த நேரத்தில் தேவிக்கும் சரவணனுக்கும் மனதில் ஸ்ருதியை தவிர வேறெந்த எண்ணமும் இல்லை.

அவள் முகத்தை பார்த்தே இவளால் தனியாய் வீடு போய் சேர முடியுமா என்று தோன்ற,

“நீ.. நீயா போயிப்பியா…??” என்று சரவணன் சொல்ல,

“எனக்கு தனியா போய் பழக்கம் தான்…” என்று தேவி சாதாரணமாகவே சொன்னாலும், அது சரவணனுக்கு பழைய நினைவுகளை கிளற,

“அதானே.. சாரி தெரியாம கேட்டேன்.. அன்ட் டிராப் பண்ணதுக்கு தேங்க்ஸ்…” என்று சொல்லி பல்லை கடித்தவன், விடுவிடுவென்று சென்றுவிட்டான்.

சரவணன் அப்படி சொல்லி சென்ற பிறகு தான், தான் சொன்னதும், அவன் சொன்னதும் புரிய, பெருமூச்சு மட்டுமே அவளால் விட முடிந்தது.

அடுத்து அடுத்து நேரம் போனதே தவிர, ஸ்ருதி பற்றிய உருப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை..

ஆனாலும் சரவணனுக்கு மனதில் என்னவோ ஒரு எண்ணம், உள்ளுணர்வு என்பார்களே அது தான்.. ஸ்ருதி இங்கே தான் இதே தெருவில் தான் எங்கோ இருக்கிறாள் என்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது..

“சர், புல்லா செர்ச் பண்ணிட்டோம்.. எங்கேயும் இல்லை…” என்று கான்ஸ்டபில் சொல்ல,

“ம்ம்…” என்று மட்டும் சொல்லியவன், வெகு நேரம் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டே இருந்தான்.

மனதில் எதுவோ ஓர் உறுத்தல், சரியான முறையில் தான் தேடல் தொடங்கியது, ஆனாலும் எங்கு தொய்கிறது என்று தெரியவில்லை.. கண்களை மூடி மனதை ஒருநிலை படுத்தி யோசித்தான்..

இதுவரை தான் கேட்டது, கண்டது என்று எல்லாம் மனதில் வைத்து மீண்டும் ஓட்டிப்பார்க்க எதுவோ பொறி தட்டியது.

அவன் கடைசியாய் பார்த்தது ஸ்ருதியின் முக புத்தக பக்கத்தை. மறுபடியும் தன் அலைபேசியில் ஸ்ருதியின் பக்கத்தை காண,

அவன் மனமோ “சரவணா உனக்கானது இதில் தான் இருக்கிறது…” என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

சில நேரங்களில் புத்தியை விட மனம் தெளிவாய் காட்டிகொடுத்து விடும்.. அதுபோலவே இப்போதும் சரவணனுக்கு அவன் மனமே துணை செய்தது.

ஸ்ருதி இறுதியாய் போட்டிருந்த பதிவிற்கு வந்த பதில்களை நிதானமாய் வாசித்து பார்த்தான்.

ஒவ்வொரு நபரின் முக புத்தக பக்கத்தை எல்லாம் பார்த்தான். யார் எவர் எந்த ஏரியா என்று ஒவ்வொன்றும் பார்த்தான். பார்த்ததை எல்லாம் ஒரு பேப்பரில் குறித்துக்கொள்ள, கிட்ட தட்ட அதற்கே அரைமணி நேரம் ஆனது.

அனைவரும் “வாவ்….” “சூப்பர்….” “வே டு கோ…” “வெய்டிங் பார் லைவ்…” என்று இப்படியெல்லாம் கருத்துக்களை சொல்லியிருக்க, அதனையெல்லாம் படித்துக்கொண்டே வந்தவனின் பார்வை ஒருவனின் கருத்தில் மட்டும் அப்படியே நிலைத்து நின்றது…

“வெய்டிங் ஸ்ருதி… நேரமாச்சு…” என்று ஒருவன் மட்டும் கருத்து சொல்லியிருக்க, சரவணனின் விழிகள் கூர்மையாக, அறிவு விழித்துக்கொண்டது.

‘யார் இவன்.. சம்பந்தமே இல்லாம கம்மென்ட் போட்டிருக்கான்…’ என்று சொல்லிக்கொண்டே, ‘காசி…’ என்ற அந்த பையனின் பக்கத்திற்கு போய், அவனை பற்றி விஷயம் பார்க்க, அந்த காசியும் கடைசியில் இந்த ஏரியா தான் என்று இருக்க, சரவணன் மனதில் ஓர் நம்பிக்கை, இவனை பிடித்தால் விஷயம் வரும் என்று.

அந்த ஸ்டேசன் சப் இன்ஸ்பெக்டரிடம் காசியின் புகைப்படத்தை காட்டி,

“இந்த ஏரியா தான்.. ஒரு வீடு விடாம செர்ச் பண்ணுங்க… கம்மான் கிவிக்…” என்று சொல்லியபடி சரவணன் முன்னே நடக்க, அவன் புகை படத்தை கண்ட கான்ஸ்டபிலோ,

“சார்… இது… இந்த பையன்… நம்ம ஸ்டேசனுக்கு பின்னாடி தெரு தான் சார்.. நானே அடிக்கடி பார்த்திருக்கேன்.. மெக்கானிக் கடை வச்சிருக்கான்…” என்று சொல்ல,

“இஸிட்… அப்போ வாங்க சீக்கிரம்…” என்று சொல்லிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சரவணனும், இன்னும் இரண்டு காவலர்களும் காசி வீட்டில் இருந்தனர்.

வாழ்விற்கு தேவையான அடிப்படை வசதிகள் கொண்ட நடுத்தர குடும்பம் வசிக்கும் வீடு. வீட்டின் அருகிலேயே மெக்கானிக் ஷாப்..

போலீஸ் உள்ளே நுழையவும், அதுவும் இந்த நேரத்தில் உள்ளே நுழையவும், வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்னவோ ஏதோவென்று பயப்பட,

“பயப்பட ஒன்னும் இல்ல.. ஒரு சின்ன என்கொயரி தான்.. அதுவுமே சந்தேகம் தான்..  சோ ப்ளீஸ் எங்களுக்கு கோ ஆப்ரேட் பண்ணுங்க…” என்று சரவணன் சொல்ல, காசியோ மிக அலட்சியமாக நிற்பது போல் நின்றிருந்தான்.

தூங்குபவனுக்கும் தூங்குவது போல் நடிப்பவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமே. அதே போல், இயல்பாய் இருப்பவனுக்கும் இருப்பது போல் நடிப்பவனுகும் அப்பட்டமாய் தெரியும் வித்தியாசம் காசி முகத்திலும் தெரிய, அது சரவணன் கண்டுபிடிக்க மாட்டனா என்ன.

“சோ காசி… எத்தனை வருசமா இங்க இருக்கீங்க…” என்று நேரடியாகவே விசாரணையை அவனிடம் தொடங்க,

அவனை பெற்றவர்களோ, “சார்.. என்.. என்ன பிரச்சனை… நாங்க பல வருசமா இங்க தான் சார் இருக்கோம்.. வசதி ரொம்ப இல்லைனாலும் கெளரவம பிழைக்கிறோம்..” என்று கிட்டத்தட்ட கெஞ்சல் குரலில் சொல்ல,

“ஒண்ணுமில்ல… ஒரு அஞ்சு நிமிஷம் அவ்வளோதான்.. விசாரிச்சிட்டு எங்களுக்குத் தேவையான பதில் கிடைச்சா போயிட்டே இருப்போம்.. நீங்க சத்தம் போடாம இருக்கிறது வரைக்கும் நாங்களும் வெளிய காட்டிக்க போறதில்ல…” என்று சொன்னவன்,

“ம்ம் சொல்லு காசி…” என,

“அது.. அதான் சார் ரொம்ப வருசமா…” என்று மிடறு விழுங்கினான் காசி. இயல்பாய் இருக்க முயன்றாலும் அவனால் இருக்க முடியவில்லை. கையில் இருக்கும் ஐ போனை இறுக பற்றி நிற்க, அது சரவணன் கண்களில் தெளிவாய் விழ, அவன் கையில் இருந்த ஐ போனை வாங்கியவன்,

“நியு மாடல்…” என்று புருவம் உயர்த்தி, காசியை பார்க்க, அவனோ சரவணனையும், அவன் கையில் இருந்த ஐ போனையும் மாறி மாறி பார்க்க, சரவணனோ போனை தன் பேன்ட் பக்கெட்டில் போட்டுவிட்டு,        

“ம்ம் எப்போ இருந்து மெக்கானிக் ஷாப் வச்சிருக்கீங்க…”

“அது… அப்.. அப்பாவோடது.. இப்போ நானும் பார்த்துக்கிறேன்…”

“குட்….” என்றவன், காசியின் மிக அருகில் சென்று,

“ஏன் ஸ்ருதியை கடத்தின…??” என்று கேட்க, காசி அப்படியே அதிர்ந்து நிற்க,

“ஐயோ.. என்ன சொல்றீங்க.. கடத்தலா.. என் பையனா.. இல்ல சார்.. அவன் அப்படிபட்டவன் எல்லாம் இல்லை…” என்று காசியின் பெற்றோர்கள் பதற,

“ஷ்.. சைலன்ஸ்… உங்க மகனே சொல்லட்டுமே.. ஏன்னு..” என்றவன் மீண்டும் காசி பக்கம் திரும்பி,

“ம்ம் டெல் மீ… ஏன் ஸ்ருதியை கடத்தின…” என்று அடி குரலில் சீர,

“ஸ்.. சுருதியா… யா… யாரு…” என்று கேட்ட அடுத்த நொடி அவன் கன்னம் எரிந்தது.

சரவணன் விட்ட அடியில் காது ஜவ்வே கிழிந்திருக்கும்..

“என்னடா..?? எங்களை எல்லாம் என்னன்னு நினைச்சிட்டு இருக்க.. இந்த கேள்வி கேட்ட அந்த நிமிஷம் வரை எனக்கு சந்தேகம் மட்டும் தான்.. ஆனா ஊர்ஜிதமானது  உன்னோட பதில்ல தான்…” என்றவன்

“என்ன புரியலையா… ஸ்ருதியும் நீயும் பிரண்ட்ஸ்ன்னு தெரியும்.. ஸ்ருதிய கடத்தினன்னு கேட்டதுமே அதை நீ செய்யலைன்னா, பிரண்ட்க்கு இப்படி ஆகிடுச்சேன்னு நீ பதறியிருக்கணும்.. ஆனா அதுவுமில்லாம, யாரு ஸ்ருதின்னு கேட்ட பாத்தியா.. அப்போ மாட்டின நீ..” என்று அவன் சட்டையை பிடித்து சுவரில் வைத்தழுத்தி அப்படியே தூக்க,

“சார்.. சார்.. நான் நான் எதுவும் பண்ணலை…” என்று அவன் கத்த,

“நீ ஏன் பண்ண எதுக்கு பண்ண அதெல்லாம் அப்புறம், முதல்ல எங்க அந்த பொண்ணு, அதை சொல்லு…” என்று இன்னும் பிடியை அழுத்த, அவனையும் அறியாது காசியின் கண்கள், ஒரு அறைக்கு சென்று மீள,

“கான்ஸ்டபில்….” என்றவன் அந்த அறையை கண் காட்ட, அவரும் அடுத்தநொடி சென்று வெளி பூட்டை உடைத்து திறக்க, உள்ளே ஸ்ருதி நன்றாய் உறங்கி கொண்டு இருந்தாள்.

வீட்டில் இருந்தவர்களுக்கும் அதிர்ச்சி.. காசியோ சரவணன் கைகளை பொறியில் மாட்டிய எலி போல் நின்றிருந்தான்.

“டேய் என்னடா இதெல்லாம்..யாரு டா இந்த பொண்ணு…” என்று காசியின் அம்மா அரற்ற, காசியின் அப்பவோ

“சார் எங்களுக்கு இது.. இது எதுவுமே தெரியாது சார்…” என்று சொல்ல, காசியோ தலைகுனிந்து நின்றான்.

ஸ்ருதியை எழுப்பி பார்க்க முதலில் எவ்வித அசைவும் இல்லை, பின் முகத்தில் நீர் தெளிக்க, லேசாய் கண்களை சுருக்கி, இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து, கண்களை திறக்க, எதிரே போலீஸ் நிற்கவும் என்னவோ ஏதோவென்று பயந்து எழ,

“கூல் கூல் பேபி… யு ஆர் சேப்…” என்றவன், அவளை மெல்ல எழுப்பி, வெளியே அழைத்து வர, காசியோ மற்ற போலீசின் பிடியில் நின்றிருந்தான்.

அதனை கண்ட ஸ்ருதி குழப்பமாய் சரவணனை காண,

“ஸ்ருதி… ஐ தின்க் என்ன நடந்ததின்னு உனக்கு தெரியல இல்ல.. இவன்.. உன்னை கிட்னாப் பண்ணி வீட்ல மறைச்சு வச்சிருந்தான்.. பட் யு ஆர் கம்ப்லீட்லி சேப் பேபி…” என, ஸ்ருதி இன்னும் பயந்து போனாள்.

“இ.. இவன்… மெக்கானிக்.. என் ஸ்கூட்டி சர்வீஸ் பண்ணுவான்…  என் பேஸ் புக் பிரண்ட்…” என்று உள்ளே போன குரலில் சொல்ல,

“எப்படி முன்னாடியே தெரியுமா….” என்று சரவணன் கேட்க,

“ம்ம்ஹூம்.. வண்டி சர்வீஸ் பண்ண வர்றபோ தெரியும்.. தென் ரெக்வெஸ்ட் அனுப்பினான்.. தெரிஞ்சவன்னு அக்செப்ட் பண்ணேன்..”என்று சொல்லும் போதே ஸ்ருதிக்கு வியர்த்து வழிந்தது. பயம் ஒருபக்கம் என்னவோ எதோ என்ற எண்ணம் ஒருபக்கம்.. சிறு பெண் அல்லவா.. கண்களில் நீர் நிறைய சரவணனை பார்க்க,   

“ம்ம் நத்திங் டூ வொரி… ஓகே.. இனிமே கொஞ்சம் கேர்புல்லா இருக்கணும்… சரி நம்ம அப்பா அம்மாவை பார்க்கலாம்…” என்று சொல்லிவிட்டு,

“அவனை ஸ்டேசன் கூட்டிட்டு வாங்க…” என்றவன், ஸ்ருதியை அழைத்துக்கொண்டு முன்னே சென்றான்.

ஸ்ருதியின் அப்பா அம்மா காவல் நிலையம் வருவதற்குள், ஸ்ருதியின் முன் வைத்தே காசியை விசாரிக்க, அவன் சொன்ன காரணமோ அனைவரையும் திகைக்க வைத்தது.

“அது.. இந்.. இந்த பொண்ணு ஐ போன் வச்சிருக்கு சார்.. அது.. அதுக்காக தான் கடத்தினேன்..” என, அனைவருக்குமே அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.. ஆனாலும் நம்ப முடியவில்லை..

“என்னடா பொய் சொல்றியா.. இன்னொரு அடி வேணுமா…” என்று சரவணன் முன்னே ஓர் எட்டு வைக்க,

“இல்.. இல்ல சார் நிஜம் தான்.. இந்த பொண்ணு ரெண்டு மூணு தடவ என் கடைல வண்டி சரி பண்ணிருக்கு, அப்போ அது கைல இருந்த ஐ போன் பார்த்தேன்.. ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.. அதான் வண்டிய புது மாடலா மாத்தி தரேன்னு சொல்லி கடைக்கு வர சொன்னேன்..

குடிக்க கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி அதில மயக்க மருந்து கலந்து தந்து, வண்டிய கடை குள்ள வச்சு கடையை பூட்டிட்டேன்.. ஸ்ருதிய பின் பக்க வழியா ரூம்ல வச்சு அடைச்சேன்.. நைட் எல்லாரும் தூங்கவும், ஸ்ருதியையும் வண்டியையும் அவங்க வீட்ல கொண்டு போய் அப்படியே விட்டிடலாம்னு…” என்று பயந்தபடி காசி சொல்ல, இவனை எல்லாம் எந்த வகையில் சேர்ப்பது என்பது போல் பார்த்தான் சரவணன்.

அதன் பின் சிறிது நேரத்திலேயே, ஸ்ருதியின் அப்பா அம்மா வந்துவிட, மேற்கொண்டு என்ன செய்வது என்று பேச, அவர்களோ வெளிப்படையாய் கம்ப்ளைன்ட் கொடுக்க தயங்கினர்.சரவணனிடம் கோபால் தனியாக பேசினார்.

“கம்ப்ளைன்ட் எல்லாம் வேணாம் சார்.. கேஸ் அது இதுன்னு பிரச்சனை ஆகும்.. ஸ்ருதி மைனர் பொண்ணு…” என்று கோபால் தயங்க,

“அக்கியுஸ்ட் இவன் தான்… ஸ்ருதிக்கு எந்த பிரபலமும் இல்ல.. ஒரு கம்பளைன்ட் கொடுங்க.. என்ன செய்யனுமோ நான் செய்றேன்…” என்று சரவணன் சொல்ல,

“ம்ம் வேணாம் சார்… இதுனால ஸ்டேட்டஸ் பிராப்ளம் ஆகும்.. எதிர்காலத்துல இதுவே ஸ்ருதி வாழ்க்கைக்கு பிரச்சனை ஆக கூடாது…” என்று அப்பாவாய் கோபால் சொல்ல, அவர் மனைவியும் அதையே சொன்னார்.

“ம்ம் சரி நீங்க கிளம்புங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என்று சொன்னவன் அவர்கள் சென்றதும்,  காசியை ஒரு நொடி பார்த்தவன், பின் அவனிடம் சென்று “இனிமே இப்படி எதுவும் பிராப்ளம் பண்ணுவியா..??” என,

“இல்.. இல்ல சார்… தெ.. தெரியாம பண்ணிட்டேன்..” என்று தலையை வேகமாய் உலுக்கினான்.

“ம்ம்…. இதில் சைன் பண்ணு…” என்று வெற்று காகிதத்தை அவனிடம் நீட்ட,

“சார்…” என்று திகைத்து விழித்தான்..

“போடு டா…” என்று சரவணன் கர்ஜிக்க, பட்டென்று அதில் கையெழுத்து வந்து விழுந்தது.   பின் காசியை லாக்கப்பில் வைத்து அடைத்தவன், அந்த ஏரியா சப் இன்ஸ்பெக்டரிடம் வந்து, 

“இவன் நாளைக்கு நைட்டு வர இங்கவே இருக்கட்டும்… ஏன் உள்ள இருக்கோம், எப்போ போவோம் என்ன செய்யா போறாங்கன்னு பயந்தே இனிக்கு புல்லா அவன் தூங்க கூடாது. இந்த பயம் அவனுக்கு கடைசி வரைக்கும் இருக்கணும்…   நாளை ஈவ்னிங் போல விட்ருங்க.. ஆனா நாளைக்கு விட்ருவோம்னு அவனுக்கு தெரிய கூடாது… தென் இதில் இனிமே எந்த பிராப்ளமும் என்னால வரதுன்னு அவனே எழுதின மாதிரி டைப் பண்ணிடுங்க… சைன் இருக்கு… ”என்றுவிட்டு,  வீடு வந்து சேர்ந்து கட்டிலில் விழும் போது, நேரம் போனதே  போனதே தெரியவில்லை.

“இவ்வளோ நேரமாச்சா…” என்று தன் நினைத்தவனுக்கு அப்போது தான் தேவியின் நினைப்பு வந்தது.

“ஓ காட்.. இவளை எப்படி மறந்தேன்..” என்று லேசாய் தன் தலையில் தட்டியவன்,

அவளும் தவித்துக்கொண்டு தானே இருப்பாள் என்று தோன்ற, இந்நேரத்தில் அழைப்பதா என்று யோசித்தான்.

“வேணாம்.. இந்த டைம்ல கால் பண்ணா என்னவோன்னு டென்சன் ஆகிடுவா…” என்று எண்ணியவன்,

“ஸ்ருதி இஸ் சேப்…” என்று குறுந்தகவல் மட்டும் தட்டிவிட்டு கண்களை மூடினான்.

 

 

 

 

 

 

 

Advertisement