Advertisement

துளி – 14

சரவணனும் தேவியும் தங்கள் நினைவுகளில் மூழ்கி, திகைத்து நின்றது ஒருசில நொடிகளே, அதன் பின் தாங்கள் இருக்கும் இடமும், சரவணனுக்கு அவன் வேலையும், தேவிக்கு தான் வந்த விசயமும் நினைவில் வர சட்டென்று தங்களை சுதாரித்து கொண்டனர்.

“யூ ஆர் ஸ்ருதி பேரன்ட்ஸ் ரைட்..” என்றவன் கேள்வியாய்  தேவியை நோக்கி. “ஷி…???” என்று கேட்க,

ஸ்ருதியின் அம்மா பதில் சொல்வதற்குள், “ஐம் தேவி, ஸ்ருதி‘ஸ் குரு.. என்னோட ஸ்கூல்ல தான் ஸ்ருதி டான்ஸ் கத்துக்கிறா…” என ஒரு வறண்ட குரலில் சொல்ல,

“ஓ.. ஐ சி…” என்றவன்,

“சோ.. டான்ஸ் கிளாஸ் முடிச்சிட்டு போறப்போ தான் ஸ்ருதி மிஸ் இல்லையா…” என்று மூவரையும் பார்த்து கேட்க, தேவிக்கோ மிகவும் சங்கடமாய் போனது.

முதல் முறை காவல் நிலையம் வந்திருப்பது வேறு மனதில் ஒருமாதிரி இருக்க, அதுவும் சரவணன் முன் இப்படி வந்து நிற்பது இன்னமும் சங்கடமாய் இருந்தது. இருந்தாலும் மனதில் ஓர் திடம், அவன் இருக்கிறானென்று.    

ஸ்ருதியின் அம்மாவோ,“அஞ்சு மணிக்கே கிளாஸ் ஓவர் ஆகிடும் சார்.. வீட்டுக்கு வந்தான்னு தான் சர்வன்ட்ஸ் சொன்னாங்க.. ஆனா அதுக்கப்புறம் அவளை காணோம்…” என்று சொல்ல,

“என்ன சொல்றீங்க.. வீட்டுக்கு வந்திட்டு தென் காணோமா…??” என்று சரவணன் புருவம் உயர்த்தினான்.

“சார் ஒன் மினிட் நான் சொல்றேன்…” என்று கோபால் முன்வந்து,

“அஞ்சு மணிக்கு கிளாஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திருக்கா, தென் அகைன் கிளம்பி வெளிய போயிருக்க.. அடுத்து வீட்டுக்கு வரவேயில்ல…” என்று கலங்கி போய் சொல்ல,

“தென் வொய் இவங்களை கூட்டிட்டு வந்தீங்க…” என்று தேவியை காட்டி சரவணன் கேட்க,

“ஒருவேளை அகைன் டான்ஸ் கிளாஸ் எதுவும் போனாலோன்னு தான்…” என்று தயக்கமாய் ஸ்ருதி அம்மா இழுக்க, அப்படியா என்பது போல் சரவணன் தேவி முகம் பார்த்தான்.

“இல்.. இல்ல.. சன்.. சார்.. ஒன்ஸ் பேட்ச் முடிச்சிட்டா அகைன் அந்த ஸ்டூடன்ஸ் யாரும் வர மாட்டாங்க… ஸ்ருதி கிளம்பி போனதா ஸ்கூல் வாட்ச் மென் அண்ட் அவர் வொய்ப் சொன்னாங்க..” என்றாள்.

இயல்பாய் தேவியால் பேசவே முடியவில்லை. இருப்பதோ ஒரு மனது அதுவும் எத்தனை விசயங்களுக்கு தான் கலங்கி தவிக்கும்.

“ம்ம்” என்று சற்றே யோசித்தவன்,

“உங்களுக்கு எப்போ தெரியும் ஸ்ருதி வீட்ல இல்லைன்னு.. ஐ மீன் எப்படி நோடீஸ் பண்ணீங்க…” என்று கேட்க,

“அது.. அது வந்து.. இப்போதான் கொஞ்ச நேரம் முன்னாடி வீட்டு வேலை செய்றவங்க சொன்னாங்க ஸ்ருதி வீட்டுக்கு இன்னும் வரலைன்னு…” என்று ஸ்ருதியின் அம்மா சொல்ல, சரவணனுக்கு சட்டென்று கோவம் வந்துவிட்டது.

என்ன பெற்றோர்கள் இவர்கள் என்று. மகள் வீட்டில் இருக்கிறாளா, இல்லையா என்பது கூட தெரியாமல் இவர்கள் எல்லாம் என்ன என்று நினைக்க,

“சோ.. பொண்ணு வீட்ல இருக்கிறதும் இல்லைன்றதுமே வேலை செய்றவங்க சொல்லி தான் தெரியுது இல்லையா…” என்று கோவமாய் கேட்க, ஸ்ருதியின் பெற்றோர்கள் இருவருமே தலை குனிந்தனர்.

“சாரி சார்.. நான் ஒரு மீட்டிங் போயிட்டேன்.. இவ.. ஒரு பாங்க்சன் போகவேண்டி இருந்தது..” என்று கோபால் கமரிய குரலில் சொல்ல, தன் உணர்வுகளை அடக்கியவன்,     

“சாரி என்ட சொல்லி என்ன ஆக போகுது.. மிஸ் ஆனது உங்க பொண்ணு..” என்று கடிந்தே சொன்னவன், 

“ஸ்ருதி போட்டோ இருக்கா…??” என்று வினவ, அவரும் உடனே தன் அலைபேசியில் இருக்கும் ஸ்ருதியின் புகைப்படத்தை காட்ட,

“ஓகே ரைட்..” என்றவன், வேகமாய் தன் அலைபேசியிலும் ஸ்ருதியின் புகைப்படத்தை பதிவேற்றிக்கொண்டு,

“டான்ஸ் கிளாஸ் ஸ்ருதி எதில போவா..??” என,

“ஸ்கூட்டி…” என்று அப்பா அம்மா இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல,

“ஹ்ம்ம் மைனர் பொண்ணு.. வண்டி ஓட்டுறா.. சட்டப்படி இதே தப்பு.. இதுக்கே நான் உங்க மேல ஆக்சன் எடுக்கணும்.. பிள்ளைங்க கெட்டு போறதே முக்காவாசி பேரன்ட்ஸ் பண்ற விஷயங்கள்னால தான்…” என்று கோவமாய் சொல்ல, அவர்களால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

உண்மையும் அது தானே.. பத்து வயது பையன் அனாசயாமாய் பல்சர் ஓட்டுகிறான். அதை அவன் பெற்றோர்களும் பெருமையாய் பார்கிறார்கள். எது எது எந்த வயதில் நடக்கவேண்டுமோ,  வாங்கி கொடுக்க வேண்டுமோ அப்போது தான் செய்ய வேண்டும்.

அதை விட்டு பிள்ளைகள் பத்து பதினைந்து வயதிலேயே இருபது வயது பிள்ளைகள் போல் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்து, ஒரு பொருளின் அருமை தெரிவதற்கு முன்னே வாங்கி கொடுத்து விடுவது.பின் ஏதாவது ஒன்று அசம்பாவிதம் நடந்தால் ஐயோ அம்மா என்று கதறுவது. 

தன் எதிரே இருப்பவர்களையே உறுத்து விழித்தவன்  “ரஞ்சன்…” என்று சற்றே சத்தமாய் அழைக்க, மற்றொரு காவலதிகாரி வேகமாய் உள்ளே வந்து

“எஸ் சார்…” என்று சல்யுட் வைக்க,

“அந்த பொண்ணு போட்டோ வாங்கிகோங்க. ஸ்கூட்டி வச்சிருக்கா நம்பர் வாங்கிகோங்க…” என்றவன், “மொபைலும் இருக்கணுமே…” என்று கோபாலை பார்த்து கேட்க,அவரோ ஆமாம் என்று சொல்ல,

“எல்லா டீடைல்ஸும் வாங்கிகோங்க… அடையார் சுத்தி, தென் அவங்க வீடு இருக்க ஏரியா.. எல்லாமே ஒன்னு விடாம செர்ச் பண்ணுங்க.. தென் இம்பார்ட்டன் ஒன் திங்.. வெளிய தெரிய கூடாது.. மைனர் பொண்ணு..

பார்த்து ஹேண்டில் பண்ணனும். லாஸ்ட் சிக்னல் எங்கன்னு பாருங்க.. அடையார் சுத்தி அண்ட்இவங்க வீடு சுத்தி இருக்க சிசிடீவி பூட்டேஜ் செக் பண்ணுங்க. நான் அவங்க ஸ்கூல் வர போறேன்… அப்டேட் பண்ணிட்டே இருங்க…”  என்று கட்டளைகளை பிறப்பிக்க,

“ஓகே சார்..” என்று ரஞ்சன் மீண்டும் சல்யூட் அடித்து செல்ல,


“Mr கோபால், நீங்க ரஞ்சன் கூட போங்க.. நான் இவங்க கூட ஸ்கூல் போறேன்..” என்றவன், அவர் சென்றதும், 

“Mrs கோபால்.. டோன்ட் வொர்ரி.. மார்னிங்குள்ள ஸ்ருதி வந்திடுவா…” என்று ஆறுதலாய் சொன்னாலும், அவனுக்குமே மனதில் ஓர் எண்ணம் அந்த பெண் கிடைத்துவிட வேண்டும் என்று.

வேலைக்கு சேர்ந்ததில் இருந்து, எத்தனை பார்கிறான்.. நினைக்கும் போதே ஐயோ என்று இருந்தது. தேவியின் முகத்தை பார்க்கவே முடியவில்லை அவனுக்கு.

முதல் முறை அவளை பார்த்ததற்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம்.. அவள் தானா இது என்பது போல். அதுவும் இப்போது இந்த பிரச்சனையும் சேர்ந்து மிகவும் சோர்ந்து போய் தெரிந்தாள்.       

“நான் மப்டில வர்றேன்.. போலீஸ் ஜீப் வேணாம்.. இந்த டைம்ல போலீஸ் ஸ்கூல்க்கு வந்தது தெரிஞ்சா தேவை இல்லாம அதுவும் ஒரு இஸ்யூ ஆகும்…” என்றவன் அடுத்த சில நொடிகளிலே உடை மாற்ற போனான்.

தேவிக்கு சரவணனை காணும் போது ஆச்சர்யமாய் இருந்தது. சொல்ல போனால் பிரமிப்பாகவும் இருந்தது. அவனுள் இப்படியொருவனா..?? இல்லை அவனே தானா ?? காதலனாய் பார்த்தவனுக்கும், இன்று கடமை நிறைந்த காவல் துறை அதிகாரியாய் பார்ப்பவனுக்கும் எத்தனை வித்தியாசங்கள்.

பேச்சு, பார்வை, நடை உடை பாவனை என்று அனைத்திலுமே வித்தியாசம்.. ஆனால் இதுவும் தேவிக்கு மனதை அத்தனை ஈர்த்தது. பெருமையாகவும் இருந்தது.

“மிஸ். தேவி.. கிளம்பலாமா…” என்றபடி உடைமாற்றி வந்தவன் கேட்க, அவளுக்கு சரி என்று சொல்வதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

சரியாய் இவர்கள் அனைவரும் வெளியே வர, அங்கே தேவியின் அப்பாவும் வந்திருந்தார்.

“தேவி.. என்னம்மா ஆச்சு..??” என்று மகளை கண்டு கேட்டபடி முன்னே வர, அவரை கண்டு லேசாய் முகம் சுருக்கி தேவியை பார்த்தவனிடம்,

“அப்பா…” என்று மெல்ல சொன்னாள் அவனின் மோகினி.

ஆனால் சரவணனோ நொடியில் சுதாரித்து முன்னே வந்து, “ஹலோ.. அங்.. சார். ஐம் சரவணன் ஏ. சி. பி…” என்று தன் கரத்தை முன்னே நீட்ட,

திகைத்து போன தியாகு, ஆச்சர்யமாய் “ஹலோ…” என்று கை குலுக்கினார்.

“நத்திங் வொர்ரி சர்.. நான் பார்த்துக்கிறேன்… ஒன்ஸ் டான்ஸ் ஸ்கூல் பார்த்திட்டு.. பார்தர்ரா மூவ் பண்ணனும்.. டீம் போட்டிருக்கோம்..” என்று அனைவருக்குமே சொல்வது போல் சொல்லி சரவணன் முன்னே நடக்க,

“அப்பா நீங்க வீட்டுக்கு போங்க… அம்மா டென்சன்ல இருப்பாங்க… நான் வந்திடுறேன்.. ” என்று சொல்லியபடி தேவி  நடக்க,

“இல்லை தேவிம்மா…” என்று தியாகு தயங்க, சரவணன் லேசாய் திரும்பி அவரை பார்த்தவன், நான் இருக்கேன் என்பது போல் கண்கள் மூடி திறந்தான்.

அதன் பிறகே தியாகு கிளம்பி செல்ல, இவர்கள் அனைவரும் காருக்கு செல்வதற்குள் வேகமாய் வந்த ஒரு காவலதிகாரி,

“சர், அடையார் ஏரியால ஒரு ஸ்கூட்டி தனியா விழுந்திருக்கு.. நம்பர் ப்ளேட் இல்லை நீயுஸ் வந்திருக்கு…” என்று சொல்ல, அனைவரின் முகமுமே சட்டென்று இருண்டது..

ஆனால் சரவணன் அப்படி இருக்க முடியாதே, “ஓகே கம் பாஸ்ட் கிளம்பலாம்…” என்றவன், அந்த அதிகாரி சொன்ன தகவலை வைத்து அங்கே சென்று பார்க்க, நல்ல வேலை இது ஸ்ருதியினது வண்டி இல்லை என்றனர்.

ஸ்ருதியின் அம்மாவோ மயங்கும் நிலைக்கே போய்விட்டார்.. “என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகாதுல மேம்…” என்று தேவியின் கரங்களை பிடித்துகொண்டு கலங்க, அவளுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்லவென்று தெரியவில்லை. 

தேவிக்கு இருதயம் வேகமாய் துடித்துக்கொண்டு இருந்தது. இதற்குமேல் கார் ஓட்டமுடியும் என்று தெரியவில்லை. கீழே வீழ்ந்து கிடப்பது ஸ்ருதியின் வண்டியில்லை என்றாலும், அவளுக்கு என்னானதோ என்று அஞ்சாமல் இருக்க முடியவில்லை.

இருவரின் முகத்தையும் பார்த்த சரவணன், “நான் கார் டிரைவ் பண்றேன்…” என்றவன் தேவியின் சம்மதம் எல்லாம் எதிர்பார்க்கவில்லை.

ஒருவேளை வேறு யாராக இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பானோ, கண் முன்னே நிற்பது அவன் மோகினி அல்லவா..

அடுத்த சில நொடிகள் கார் பயணத்தில் ‘நடனாலயா’ வந்துவிட, தேவியின் காரை  பார்த்துவிட்டு வேகமாய் முருகன் கேட் திறக்க, பாக்கியமும் என்ன என்பது போல் வாசலுக்கே வந்துவிட்டார்.

தேவி, ஸ்ருதியின் அம்மா இருவரும் கலக்கமாய் இறங்க, சரவணனும் வேகமாய் இறங்கினான்.

பாக்கியமும், முருகனும் என்னவென்பது போல் பார்க்க,

“இன்னொரு டைம் செக் பண்ணலாம்னு வந்திருக்காங்க.. இவர் போலீஸ்…” என்று தேவி உள்ளே போன குரலில் சொல்ல,

“ஏற்கனவே இங்க எல்லாம் பார்த்திட்டோம் சார்…” என்றார் பாக்கியம்.

“ஹ்ம்ம் நீங்க பார்க்கிறதுக்கும் நாங்க பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு…” என்று லேசாய் சிரித்தபடி சொன்னவன், வெளியே தோட்டத்தை சுற்றி இருக்கும் அனைத்து விளக்குகளையும் போட சொல்லி ஒரு முறை சுற்றி வந்தான்.

பின் அனைவரும் உள்ளே செல்ல,

“ஸ்டுடண்ட்ஸ்க்கு தனி காப்போர் ஆர் ஸெல்ப் எதுவும் இருக்கா…” என்று கேட்க,

“எஸ்..” என்று வேகமாய் தலையாட்டிய தேவி, அதனினும் வேகமாய் ஸ்ருதிக்கு ஒதுக்கப்பட்ட செல்பை கட்ட, அதிலோ அவளுக்கு கொடுக்கப்பட்ட சலங்கை, மற்றும் சில பாடல் குறுந்தகடுகள் என்று இருந்தன.

“ம்ம்…” என்று சொல்லியபடி நெற்றியை தடவியவன்,

“Ms. தேவி, இங்க சிசிடிவி இருக்கா…??” என்று வினவ,

“ம்ம்… பார்க்கிங்ல அண்ட் வெளிய என்ட்ரன்ஸ்ல…” ரெண்டு பிளேஸ்ல கேமெரா செட் பண்ணிருக்கோம். என்று தேவி சொல்ல,

“குட்…..” என்றவன் அதை  பார்க்க விரைய, தேவியும் அவனோடு நடக்க, ஸ்ருதியின் அம்மாவிற்கோ நடக்க கூட முடியவில்லை.

“அக்கா, அவங்களுக்கு ஏதாவது குடிக்க இருந்தா குடுங்க…” என்று தேவி சொல்ல, பாக்கியமும் சரி என தலையசைக்க,

“நீங்க இங்கயே இருங்க,.. நத்திங் வொர்ரி.. சிட்டி முழுக்க அலர்ட் பண்ணியாச்சு.. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில ஸ்ருதி கிடைச்சிடுவா…” என்று ஆறுதல் சொன்ன சரவணன், தேவியை தன்னோடு வருமாறு அழைத்து சென்றான்.

சிசிடிவியில் அன்று மாலை இருந்து பதிவான காட்சிகளை பார்க்க, சரியாய் ஐந்து பத்திற்கு ஸ்ருதி தன் ஸ்கூட்டியில் கிளம்புவது நன்றாகவே தெரிந்தது. வேறு ஏதாவது க்ளூ கிடைக்கிறதா என்று மீண்டும் மீண்டும் அதே காட்சிகளை ஓட்டிப்பார்க்க ஏமாற்றம் மட்டுமே மிஞ்ச,

தேவிக்கோ இன்னும் மனம் பதைபதைத்தது..

“ச.. சனு… ஒன்னும் ஆகிடாதுள்ள..” என்று கண்ணீர் தளும்பிய விழிகளுடன் தேவி கேட்க,

வெகு நாளைக்கு பிறகான தனிமை இப்படியான ஒரு சூழலிலா அமைந்திட வேண்டும் என்று சரவணனுக்கு லேசாய் மனம் முரண்டினாலும்., வந்த வேலை மறக்கவில்லை.

“டோன்ட் வொர்ரி…” என்று என்றவன் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அடுத்தடுத்து தான் அமைத்த குழுவில் இருப்பவர்களுக்கு அழைப்புவிடுத்து பேச வந்த பதில்கள் எதுவும் சாதகமாய் இல்லை.

“ஓ காட்….” என்று தலையை இடமும் வலமும் ஆட்டியவன், அடுத்து என்ன செய்வது என்பது போல் யோசித்தான்.

கடத்தல் என்றால் இதுநேரம் வரை கண்டிப்பாய் கடத்தியவர்களிடம் இருந்து ஏதாவது ஒரு தகவல் வந்திருக்கும். ஆனால் அதுவும் வரவில்லை. மற்றபடி விபத்து அது இதென்று வேறெதுவும் நிகழவும் இல்லை.. ஒன்று தானாக காணாமல் போயிருக்க வேண்டும் இல்லை என்று யோசிக்கும் போதே, சரவணனுக்கு மனம் அப்படியே நின்றது.

“பர்பஸா காணோம்னா ஒன்னு யாருகூடவாது போயிருக்கனும்.. இல்லை அவளா எங்கயாது போயிருக்கனும்…” என்று எண்ணம் ஓட  சட்டென்று தேவி பக்கம் திரும்பியவன்,

“மோ… தேவி… நான் கேட்கிறதுக்கு சரியா பதில் சொல்லணும் ஓகே.. பிகாஸ்.. இது.. இதெல்லாம் ஸ்ருதி அம்மாக்கிட்ட கேட்க முடியாது.. இன்னும் ஹர்ட் அவங்க…” என்று வேகமாய் பேசியவன்,

அவளது தோள்களை பற்றி எதிரே இருந்த இருக்கையில் அமரவைத்தவன், தானும் ஒன்றை இழுத்து போட்டு அமர்ந்தான்.

என்ன கேட்க போகிறான் இவன், எதற்கு இந்த பீடிகை என்பது போல் தேவி பார்க்க,

“ஸ்ருதி… ஸ்ருதி எப்படி பட்ட பொண்ணு..??” என்று, அவள் முன்னே சற்றே குனிந்து,  புருவம் உயர்த்தி கேட்டவனுக்கு சட்டென்று என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை..

“பு.. புரியல…” என்று தேவி முகத்தை சுருக்க,

“சி… ஸ்ருதி.. ஐ மீன்.. அவளுக்கு ஏதாவது பாய் பிரண்ட்ஸ் இப்படி…” என்று கைகளை ஆட்டி கேட்கும் போதே,

“ஹே.. ச.. சனு… அவ.. சின்.. சின்ன பொண்ணு.. ஜஸ்ட் பதினாலு வயசு…” என்றாள் சற்றே கோவமாய்.

“ம்ம்ச்…” என்று தலையை ஆட்டியவன்,

“தேவி.. ப்ளீஸ் நான் தப்பா எதுவும் கேட்கலை.. இப்போ இருக்க காலம் அப்படிதான் இருக்கு.. பத்து வயசு பையன் அவன் கிளாஸ்ல எந்த பொண்ணுங்களும் பேசலைன்னு கவுன்சலிங் போற நிலைமை.. நம்ம கிட்ஸ்னு நினைக்கிறோம் ஆனா எல்லாரும் நம்மைவிட பெரிய பசங்க போல தான் பீகேவ் பண்றாங்க…” என, அப்போது  தான் தேவிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தது.

“ம்ம்… ஸ்ருதி.. ஐ க்னோ ஹேர் மோர் தென் டூ இயர்ஸ்.. வெரி இன்னொசென்ட்.. நல்ல பொண்ணு.. வேற மாதிரி எதுவுமில்லை…” என்று சொல்ல,

“ஓ….” என்றவனுக்கு மனமும் மூளையும் ஒன்றோடு ஒன்றிணைந்து வேகமாய் ஒடியாது.

தேவியோ அவன் முகத்தையே தான் பார்த்திருந்தாள்.. என்ன செய்வது என்று அவளுக்கும் தெரியவில்லை. எப்படியாவது ஸ்ருதி கிடைத்தால் போதும் என்று இருந்தது.

மீண்டும் சரவணன் மற்றொரு காவலதிகாரிக்கு அழைத்து பேச, அவரும் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்றே சொன்னார்.

“எதுவும் பதில் வந்ததா சார்…” என்று பாவமாய் ஸ்ருதியின் அம்மா குரல் கேட்க, அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சரவணன் பார்த்தான்.

“தேடிட்டு இருக்கோம்… ப்ளீஸ் டோன்ட் லூஸ் யூவர் ஹோப்…” என,

“எப்படி சார்… ஒரே பொண்ணு.. அவ்வளோ செல்லமா வளர்த்தோம்.. இப்படி திடீர்னு காணோம்னா எப்படி மனசு கேட்குமா…” என்று அழுது புலம்ப, தேவி தான் சமாதானம் செய்தாள்.

காவல் நிலையத்தில் இருந்து,  சரவணனுக்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசியவன் நெற்றியை சுருக்கி “ம்ம்.. ஓகே… கோ அஹெட்…” என்றுமட்டும் கூறி வைக்க, அனைவரும் என்னவென்பது போல் அவன் முகம் பார்க்க,

“ஸ்ருதி போன் லாஸ்ட்டா உங்க வீட்டு எரியால தான் ஷோ ஆகுது…” என்றவன் சட்டென்று கண்கள் கூர்மையுற,

“மேம் உங்க பொண்ணோட, வாட்ஸ் அப் வியு பாருங்க…” என, ஸ்ருதியின் அம்மாவும் நடுங்கும் கைகளோடு தன் அலைபேசியில் பார்க்க, அதுவோ கடைசி பார்வையிட்ட நேரம் ஏழு என்று காட்டியது.

“செவென்….. சோ அஞ்சு மணிக்கு இங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு போய் அகைன் அங்கயிருந்து கிளம்பிருக்கா.. லாஸ்ட் சிக்னல் உங்க ஏரியா தான்.. ஆனா வாட்ஸ் அப் டைம் படி பார்த்தா செவேனோ கிளாக் வர ஷி இஸ் இன் யூவர் ஹோம் ஆர் பக்கத்துல எங்கயாது இருக்கணும் இல்லையா..” என்று தன் மனதில் தோன்றிய கணக்கை சொல்லி விவரம் கேட்க,

ஸ்ருதியின் அம்மாவோ என்ன சொல்ல என்று தெரியாமல் முழித்தார்.

“சோ ஸ்ருதி உங்க வீடு இருக்க ஏரியா தாண்டி எங்கயும் போக சான்ஸ் இல்லை.. ஓகே அவளுக்கு அங்க யாராவது பிரண்ட்ஸ் இருக்காங்களா…” என,

“இல்ல சார்.. அப்படியெல்லாம் அவ யாருகூடவும் பழக மாட்டா…” என்று ஸ்ருதி அம்மா சொல்ல,

“நோ… இந்த டைம்ல அப்படி எதையுமே ஈசியா நம்ம விட கூடாது…” என்றவனுக்கு சட்டென்று புத்தியில் மின்னல் வெட்டுவது போல் ஓர் எண்ணம்.

“ஸ்ருதி பேஸ் புக் அக்கவுன்ட் வச்சிருக்காளா…” என,

தேவி சட்டென்று “எஸ்.. என்னோட மியூச்சுவல் பிரன்ட்ல இருப்பா…” என்று சொல்ல,

“ஹ்ம்ம் நினைச்சேன்…” என்றவன், வேகமாய் ஸ்ருதியின் பக்கத்தை காட்ட சொல்ல, தேவியும் ஸ்ருதியின் முக புத்தக பக்கத்தை காட்ட, சரவணின் கண்கள் ஏதாவது தங்களுக்கு சாதகமாய் கிடைக்குமா என்று அலசியது.        

 

 

 

 

 

 

Advertisement