Advertisement

                                                            துளி – 10

இரண்டே எட்டில் அவளை அணுகியவன், தன் மேல் சாய்த்துக்கொண்டு, “அப்.. அப்போ நீ போறியா.. போகப்போறியா…??என்ன விட்டு போக போறியா…??” என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்க, அவன் கண்களை சந்தித்தவளுக்கு ஆம் என்று சொல்லும் தைரியம் வரவில்லை.

தன் முகத்தை பிடித்திருந்தவனின் கைகளை மெல்ல விலக்கியவள் , “லீவ் மீ அலோன்…” என்று தொண்டை குழியில் எச்சில் கூட்டி எழும்பாத குரலில் சொல்ல,

“நோ…” என்று கத்தினான்.

“நான் உன்னை விடமாட்டேன்… போகாத… போக விடமாட்டேன்.. கொஞ்சம் டைம் குடு.. எல்லாம் சரியாகும்… பட் உன்னை போக விடமாட்டேன்..” என்று சொல்லியபடி அவளை இறுக அணைக்க, தேவிக்கோ தன்னுடம்பை சுத்தி இறுக இரும்பு கம்பிகள் கொண்டு கட்டியது போல் வலித்தது.

மனம் ஒருபக்கம் வலிக்க, உடல் ஒருபக்கம் வலிக்க, என்னதான் செய்வாள் அவள்.  

“சனு ப்ளீஸ்…”

“ப்ளீஸ் மோகினி….” என்றவன் இன்னும் இறுக அணைக்க, அவளுக்குமே அவன் கைளில் இருந்து பிரிந்து போக மனமில்லை போல, அழுதபடி அவன் மார்பில் ஒன்றியபடி அப்படியே நின்றிருந்தாள்..

அவள் தன்னிடம் ஒன்றிவிட்டாள் என்று சரவணன் மனம் உணரத் தொடங்கவும் அவன் பிடி லேசாய் தளர தளர, அடுத்து தேவி மெல்ல விலகி நின்றாள்,

தன் கைகள் கொண்டு முகத்தை அழுந்த துடைத்தவள், “ஹா….” என்று மூச்சு காற்றை வெளிவிட்டு,  “ஐம் கோயிங்…” என்று தீர்க்கமாய் சொல்ல, அடுத்த நொடி அவளது தோளை பற்றி சுவரில் சாய்த்து அவள் நகராதவாறு தன் இரு கைகளையும் கொண்டு தடுத்து நிறுத்தியிருந்தான் சரவணன்..

“நான் உன்னை போக விடமாட்டேன் மோகினி… போகாத.. ப்ளீஸ்.. நைட் அங்கிள் ஆன்ட்டி வர்றாங்க தானே.. பேசிக்கலாம்.. இப்போ எதுவுமே நீயா டிசைட் பண்ணாத. கொஞ்சம் என்னை நம்பேன் ப்ளீஸ்…” கிட்டத்தட்ட கெஞ்சியது அவன் குரல்.

“நோ.. அம்மாக்கு மெசேஜ் பண்ணிட்டேன்… நான் வர்றேன்னு.. அன்ட் நீ இப்போ இங்க இருக்க கூடாது.. உன் அம்மாகிட்ட போ…” என்று அவனை பிடித்து தள்ள, அவனோ அசைவேனா என்று நின்றிருந்தான்.

“ப்ளீஸ்….” என்று கெஞ்சியவளுக்கு, அதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“யூ ப்ளீஸ் டி.. அம்மாக்கு ஒண்ணுமில்லை சரியாகிடும். நான் அவங்கட்ட பேசிட்டு தான் வந்தேன்.. நீ போகாத… எப்படி உன்னால போறேன் சொல்ல முடிஞ்சது.. என்னை விட்டு.. நோ.. நோ.. ஐ கான்ட் லீவ் யு…” என்று சொன்னவன், நான் உன்னை விடப்போவதே இல்லை என்பதை உணர்த்த மீண்டும் மீண்டும் அவளது இதழ்களை தன்வசம் சிறைகொள்ள,

“எனக்கும் போக ஆசையில்லை ஆனால் போகவேண்டுமே… மீண்டும் உன் அருகாமை கிடைக்குமோ…” என்ற நிராசையில் அவளுமே அவனோடு லயித்து தான் நின்றாள்.

அவள் கண்களில் கண்ணீர் கன்னம் வழிந்து, அவள் இதழ்களிலும் ஓரிரு துளிகள் தொட, அந்த உப்பு சுவை அவனுக்கும் தொட்டது. என்ன உணர்ந்தானோ, அவள் முகத்தை பார்த்தவன்,

“யூ கான்ட் கோ… எப்படி போக முடியும்… முடியாது.. உன்… உன் மனசில என்மேல இவ்வளோ.. இவ்வளோ..” என்று சொன்னவன் அவள் இமைகளின் ஓரம் துளிர்த்திருந்த கண்ணீரை தொட்டு,

“இதோ இந்த துளி அளவு கூடவா காதல் இல்லை.. இருந்தா இப்படி போக முடியுமா.. அம்மா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும் தென் பேசுவோம்.. ஆனா ப்ளீஸ் மோகினி இப்படி நீ கிளம்பி போகாத.. அது எல்லாருக்குமே சங்கடம்…” என்று ஆசையும், காதலும், எதாவது செய்து சொல்லி இவளை போகவிடாமல் தடுக்கவேண்டும் என்ற தவிப்புமாய் கேட்க,

அவளோ, அவன் விரலில் இருந்த அதே துளியை தொட்டு, “இதோ… இந்த ஒரு துளி உனக்கு போதாதா… நான் உன்ன எவ்வளோ லவ் பண்றேன்னு… உனக்கு தெரியலையா…?? ம்ம்…” என்றவள், அவளாகவே இறுக அவனை அணைத்து விடுவித்து,

“ஐம் கோயிங்… நீ போ அம்மாகிட்ட இரு…” என்று மீண்டும் சொல்ல,

“சோ நான் என்ன சொன்னாலும் நீ கேட்கிறதா இல்லை… அப்போ என்னை நம்பலை…” என்றவனின் குரலும், பிடியும் இறுக, தேவியோ மௌனம் காத்தாள்.

“பேசு….” என்று அவளை தோள்களை இறுக பற்ற,

சரவணனுக்கு எப்படி இத்தனை வலி வேதனை இருக்கிறதோ அது போலதானே அவளுக்கும் இருக்கும். ஆனாலும் அதை இவனிடம் வெளிக்காட்டினால் நிச்சயம் இன்னும் இன்னும் பிடிவாதம் செய்வானே தவிர புரிந்துகொள்ள மாட்டான்.இந்த சூழ்நிலையில் தான் இங்கிருந்து கிளம்புவது மட்டுமே நல்லது என்று அவளுக்கு பட, திடமாகவே சரவணன் சொல்வதை எல்லாம் மறுத்தாள்.

“இங்க பாரு சனு… ஏன்…?? அப்படி என்ன நான் உனக்கு பெருசாகிட்டேன்.. அங்க உன் அம்மா முடியாம இருக்காங்க.. ஆனா நீ இப்படி வந்து என்கிட்டே பேசிட்டு இருக்க..” என,

“ஹேய்…. நான் என்ன கேட்கிறேன்… நீ என்ன சொல்ற… இங்க பாரு எனக்கும் என் அம்மா மேல அக்கறை இருக்கு… ஷி இஸ் வெல். அவங்களை எப்படி சரி செய்யணும் எனக்கு தெரியும்… ஆனா நான் இப்போ பேசுறது நம்மை பத்தி… புரியுதா…” என்று உறும,

தேவிக்கு நிச்சயமாய் பயம் தந்தது அவன் குரலும், பார்வையும். இத்தனை தீவிரம் அவனுக்கு ஆகாது என்று நினைக்க, அதன் பின் என்ன சொல்ல வந்திருப்பாளோ,

“மாமா… மாமா…” என்று வேகமாய் ராகுல் அவ்விடம் வர, இருவரும் என்னவென்பது போல் பார்க்க,

“அத்… அத்தைக்கு… மூச்சு விட முடியல… தூக்கி போடுது…” என்று பதற்றமாய் சொல்ல,

அவ்வளவு தான் தேவி சரவணன் இருவருக்குமே அந்த பதற்றம் தொற்றிக்கொள்ள, சரவணன் ஒருமுறை தேவியை பார்த்துவிட்டு வேகமாய் முன்னே ஓட,  ராகுலும் அவன் பின்னே ஓட, தேவிக்கு இன்னும் கண்களில் நீர் முட்டியது.

அங்கே போனால், கோதாவரியோ மூச்சு விடவே மிகவும் கஷ்டபடுபவர் போல வாய் வழியே மூச்சை இழுத்து இழுத்து விட, உடலோ இன்னும் தூக்கி போட்டது.

சரவணன்  “மாம்….” என்று வேகமாய் அவரிடம் செல்ல,

தன் மகனை கண்டதும், மெல்ல தன் கைகளை உயர்த்தி வா என சொல்ல, அவனோ வேகமாய் சென்று கோதாவரி கை பற்றினான்.

“மாம்… என்ன பண்ணுது… அப்பா என்னாச்சு… நல்லாதானே இருந்தாங்க…” என்று கோதாவரி கைகளை பிடித்தபடி தன் தந்தையிடம் வினவ, அவரோ,

“சரோ இப்போ பேச நேரமில்ல டா.. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போகணும்…” என்று சொல்ல,

“மாமா கார் எடுக்க சொல்லுங்க…” என்று சொல்லிக்கொண்டே கோதாவரியை தூக்கியவன், வேகமாய் வெளியே வர, அந்த அறையின் வாசலில் தான் தேவி நின்றிருந்தாள்.

சரவணன் வெளியே வந்த நேரம், அவளும் அங்கிருக்க, அவனுக்கு வேறெதுவும் சிந்திக்க எல்லாம் நேரமேயில்லை. முழு கவனமும் தன் அம்மா மீது இருக்க, மனத்தின் ஒரு ஓரத்தில் தேவி தன் பேச்சை மீறி சென்னை போக மாட்டாள் என்று ஒரு நப்பாசை இருந்தது. 

சரவணன், கோதாவரி, அசோக் குமார் ஒரு காரிலும், புண்ணியகோடியும், பிருந்தாவும் மற்றொரு காரிலும் விரைய, வீட்டிலோ கல்பனா, தேவி, ராகுல் மூவர் மட்டும் நின்றனர். 

அவர்கள் செல்லவும் கல்பனா பொத்தென்று அங்கிருந்த சாய்விருக்கையில் அமர, ராகுலோ என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்திருக்க, தேவி

“பாட்டி…” என்று அவரை இறுக கட்டிக்கொண்டாள்.

“சாரி பாட்டி.. எல்லாம் என்னால தான்… எல்லாமே என்னால தான்… ஐம் சோ சாரி பாட்டி..நீ.. நீங்க  கவலை படாதீங்க… ப்ளீஸ்.. ஆன்ட்டிக்கு ஒண்ணுமில்ல, சரியாகிடும்..” என்று தன் கவலை மறந்து அவருக்கு சமாதனம் சொல்ல,

கல்பனாவோ ஆழ மூச்செடுத்து விட்டவர், மெல்ல தேவியை தன்னிடம் இருந்து பிரித்து அமர வைத்தவர்,

“முதல்ல இப்படி அழறத நிறுத்து தேவி…” என்று சொல்ல, அவளோ என்ன இது என்பது போல் பார்த்தாள்.

சுத்தமாக அவர் குரலில் இருந்து எவ்வித உணர்வும் வெளிப்படவில்லை. அவர் முகத்தில் தான் எதாவது தென்படுகிறதா என்று காண அங்கேயும் சுத்தம் ஒன்றுமே அவளால் கண்டுகொள்ள முடியவில்லை.

“என்… என்ன பாட்டி…” என,

“போ… முதல்ல முகத்தை கழுவிட்டு வா…” என்று சொல்ல,

“பாட்டி….” என அதிர்ந்து விளித்தாள்.

“போ தேவி…” என மீண்டும் சொல்ல, அவளால் அதற்குமேல் தட்ட முடியவில்லை.

தேவிக்கு சத்தியமாய் கல்பனாவின் நடத்தை ஆச்சர்யமாய் இருந்தது. மருத்துவமனைக்கு சென்றிருப்பது அவர் மகள். அவர் ரத்தம்.. இந்நேரம் எப்படியும் நெஞ்சம் பதற தான் செய்யும்.. ஆனால் அவள்..

மருகளின் அக்காவின் மகள்.. உறவு… அவ்வளவே..

வயது கொடுத்த அனுபவமும், நிதானமும் அவரை நடுநிலையாய் சிந்திக்க வைத்தது. நிஜமாகவே தேவிக்கு அவரை கண்டு ஆச்சர்யம் தான். அவர் சொன்னது போல் முகம் கழுவி வர,

கல்பனாவோ ராகுலுக்கு பருக ஜூஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார். தேவியும் வரவும், அவளிடம் ஒரு கிளாசை நீட்ட, அவளோ

“முதல்ல நீங்க உட்காருங்க பாட்டி… நீங்க குடிங்க…” என்று சொல்ல,

“எனக்கும் இருக்கு தேவிம்மா…” என்றவர், பின் “ராகுல் நீ போய் டீவி பார்கிறதுன்னா பார்..” என்க,  அப்போது தான் கல்பனாவிற்கு நினைவு வந்தது, வீட்டில் பிருந்தாவின் மற்ற உடன்பிறப்பின் பிள்ளைகளும் இருந்தனர் என்று.

எங்கே என்பது போல் தேட, ராகுல் தான்,

“அவங்க எல்லாம், மாலுக்கு போயிருக்காங்க பாட்டி..” என,

நல்லது தான் இல்லையென்றால் இங்கே நடந்த அனைத்தும், அனைத்து பிள்ளைகளுக்கும் கசப்பான எண்ணங்களை மனதில் விதைத்திருக்கும். அடுத்த முறை இங்கே வரும் ஆசையே இல்லாமல் போகும் என்று தோன்றியது.

“நீயும் போயிருக்கலாமே டா…” என்று சொல்ல,

“ஹ்ம்ம் நான் இருந்து அக்காவையும் மாமாவையும் கூட்டிட்டு போகலாம்னு வெய்ட் பண்ணேன் பாட்டி..” என்று அவன் அப்பாவியாய் சொல்ல, மீண்டும் தேவிக்கு நெஞ்சம் அடைத்தது.

இனி அது முடியுமா?? சரவணனோடு இனி அப்படி வெளியே செல்ல முடியுமா?? அழையா விருந்தாளியாய் பீச்சுக்கு சென்று வந்தது எல்லாம் நினைவில் வந்து தொலைத்தது.

கல்பனாவிற்கு இது புரியாதா என்ன, தேவி கரங்கள் மீது கரம் வைத்தவர், “சரி ராகுல் நீ போ டீவி பாரு… பசங்களுக்கு போன் பண்ணி சொல்லிடு நீங்க வரலைன்னு… வெய்ட் பண்ணிட்டு இருக்க போறாங்க…” என்று சொல்ல,

“சரி பாட்டி..” என்றபடி எழுந்து சென்றான்.

அவன் போவதையே பார்த்திருந்தவர், சில நொடிகள் அமைதியாகவே இருந்தார். ஆனால் தேவிக்கு தான் சங்கடமாய் இருந்தது.

“பாட்டி…” என்று மெல்ல அழைக்க,

“ம்ம்.. நிஜமாவே ஊருக்கு போக போறியா தேவி…” என, ஆமாம் என்று தலையசைத்தாள்.

கல்பனாவின் வருத்தம் அவர் முகத்தில் தெளிவாகவே தெரிய, “நீங்க எதுவும் நினைக்காதீங்க பாட்டி.. நான் மனசில எதுவும் வச்சுக்கலை.. என்னிக்கு இருந்தாலும் நான் கிளம்பி தானே ஆகணும். அது இப்போ போறதா நினைச்சுக்கோங்களேன்…” என்று தன்மையாகவே சொன்னாலும் அவள் குரலும் பிசிறு தட்டியது.

எப்படி மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியும்?? முதலில் அவள் மனமே வேறொருவனிடம் அல்லவா இருக்கிறது?? சாதாரணமாய் கிளம்பி போவதற்கும், சங்கடப்பட்டு மனம் வருந்தி கிளம்பி செல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதே.

அது அந்த பெரிய மனுசிக்கு தெரியாதா என்ன.

“ஹ்ம்ம்…” என்று சிரித்தவர்..

“உன் வயசு எல்லாம் தாண்டி தானே வந்திருக்கேன்.. எனக்கு புரியாதா என்ன.. நீங்க எல்லாம் வந்த பிறகு தான் வீடு கொஞ்சம் கலகலன்னு இருந்தது. இல்லாட்டி இதோ இப்படி இருக்கே அமைதியா இப்படிதான் இருக்கும்.. எனக்கும் வயசாச்சு இல்லையா, சின்ன சின்ன விசயத்துக்கு கூட மனசு ஏங்குது..

ஆனா இதில நாங்க பண்ணதும் தப்பு தான் தேவிம்மா. கோதாவரி பேசினது ரொம்ப தப்பு.. ஆனா அதுக்கு முன்னாடி நாங்களும் கொஞ்சம் பெரிய மனுசங்க மாதிரி நடந்திருக்கணும்.. உனக்கு தெரியுமா நீயும் சரவணனும் ஊரில இருந்து வர முன்னாடி உன் சித்தியும் சித்தப்பாவும் கூட என்கிட்டே உங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தம் பேசலாம் கேட்டாங்க.. ஆனா நான் தான் வேணாம் சொல்லிட்டேன்..

அப்புறம் நீங்க வந்து, எல்லாரும் பழகிற விதம், அது இதுன்னு பார்த்து இது நடந்தா சந்தோசமா இருக்கும்னு தோணிச்சு.. சொந்தமும் விட்டு போகாது இல்லையா.. ஒரு சின்ன சுயநலம் தான்.. என்ன உங்க வயசுக்கு நீங்க பார்த்ததும் ஆசை பட்டீங்க.. ஆனா எங்க வயசுக்கு நாங்க நிதானிச்சு செயல்பட்டிருக்கணும்..

ஆசை யாரை விட்டுச்சு… எல்லாருமே அவசர பட்டோம். கோதா பத்தி தெரிஞ்சும் நான் இதை பேசினேன் எப்படியாவது சம்மதிக்க வைக்கலாம்ன்னு.. ஆனா எங்க..” என்று வருத்தமாய் சொல்ல,

தேவிக்கோ இன்னும் மனம் கலங்கியது. தங்கள் இருவரின் ஆசையால் எத்தனை பேர் மனம் வருந்துகின்றனர் என்று தோன்ற, மனதில் இன்னும் ஆழமாய் ஊருக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. 

“சாரி பாட்டி…” என்று சொல்ல,

“நீ சாரி கேட்க எல்லாம் ஒன்னுமே இல்ல டா.. கோதா சின்ன வயசில இருந்தே இப்படிதான் கொஞ்சம் டென்சன் ஆனாலோ இல்லை அவளுக்கு பிடிக்காதது எதுவும் செய்தலோ இப்படிதான் உடம்புக்கு எதுவாது வந்திடும்.. நீ ஒன்னும் பயப்படாத, எல்லாம் சரியாகும்..” என,

சரியாய் அதே நேரம் வந்து புண்ணியகோடியின் கரியதசி வந்து,

“மேம் உங்க டிக்கெட். அடுத்து டூ ஹவர்ஸ்ல பிளைட்” என்று தேவியிடம் கொடுக்க, அதை கண்ட தேவிக்குமே மனதில் பக்கென்று இருந்தது.

ஊருக்கு போகவேண்டும் என்று முடிவெடுத்தாள் தான் ஆனால் அவளுக்குமே போகவேண்டும் என்ற தருணம் வரும் பொழுது மனம் வலிக்க தான் செய்தது.

சரவணன் அவ்வளவு சொன்னான்.. பாட்டி வேறு சொல்கிறார்.. இதெல்லாம் பார்த்தாலுமே அவளுக்கு அங்கே இருக்க ஒரு நொடி கூட முடியவில்லை.. ஏனோ சென்றுவிட வேண்டும் என்ற உந்துதல்.

“தேவிம்மா அவசரப்படாத…” என்று கல்பனா சொல்ல,

“இல்ல பாட்டி.. ஆன்ட்டி இங்க வரும்போது நான் இல்லைனா தான் அவங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…” என்று சொல்ல,

“ம்ம்…. உன்னை இப்படி தனியா அனுப்ப சங்கடமா இருக்கே டா.. சந்தோசமா வந்து பொண்ணு இப்படி போறது கஷ்டமா இருக்கே..” என்று வருத்தப்பட,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி.. தனியா தானே வந்தேன்..” என்றவளுக்கு அவள் தனியாகவா வந்தாள் என்று தோன்றியது.

ஒரே ஒரு முறை சரவணனை காண வேண்டும் போல், பேச வேண்டும் போல், அவனது இறுகிய அணைப்பு மீண்டும் வேண்டும் போல் இருக்க, அவள் மனம் போகும் பாதை அவளையே அசைக்க, வேகமாய் தலையை உலுக்கி கொண்டவள்,

“நான் திங்க்ஸ் எடுத்திட்டு வரேன் பாட்டி…” என்று அறைக்கு சென்றுவிட்டாள்.

இனி சிறிது நேரம் கூட இங்கே இருக்கே கூடாது என்று நினைத்தவள், பிருந்தாவிற்கு அழைத்து போவதாய் சொல்லிவிட்டு, இப்போது சரவணனிடம் எதுவும் சொல்லவேண்டாம் என்றும் சொல்லி, வெளியே வந்தவள் ராகுல், கல்பனா இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.

கிளம்பியே விட்டாள்…..

அங்கே மருத்துவமனையிலோ, சரவணனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது. தான் சொன்னதை மீறி தேவி போகமாட்டாள் என்று தோன்றினாலும் ஒருவேளை சென்றுவிட்டால் என்ன செய்ய என்றும் இருந்தது.

இன்னொரு பக்கம் அவன் அம்மா.. மூச்சு விட அவர் சிரம பட்டதை கண்டதும் அவனுக்கு மனம் அத்தனை வேதனை பட்டது.. சொல்லபோனால் அந்த நொடி அவன் மனதில் தேவி பற்றிய நினைப்பே இல்லையெனலாம்.

ஆனால் மருத்துவமனை வந்து, கோதாவரியை சேர்த்து அதன் பின் சற்றே நிதானம் அடைந்து தன்னிலை உணரும்போது அவன் மனம் மீண்டும் அவன் மோகினியிடம் சென்றிருந்தது.

கோதாவரியை மருத்துவர்கள் பரிசோதிக்க, வெளியே இருந்த அனைவருக்கும் ஒவ்வொரு மனநிலை. சரவணனுக்கு ஒருமாதிரி தவிப்பு என்றால் அவனைவிட அதிகம் தவித்தது பிருந்தா தான். நாளை மஞ்சு கேட்டால் என்ன சொல்வது என்று. கோதாவரிக்கு ஒன்றேன்றால் என்ன செய்வது என்று.

இப்படி தவித்து அமர்ந்திருக்க,அதேநேரம் தேவி அழைத்து தான் கிளம்புவதாய் சொல்ல, என்ன சொல்லி அவளை சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.

“ம்ம்.. பார்த்து போ…” என்று சொல்லும் போதே குரல் உள்ளே சென்றுவிட, சரவணன் வேறு அவரையே பார்க்க, ஒன்றும் விரிவாய் பேசவும் முடியவில்லை.

அழைப்பை துண்டிக்கவும், சரவணன் என்னவென்பது போல் பார்க்க,

‘ஐயோ இவனுக்கு என்ன பதில் சொல்ல..’ என்று யோசிக்கும் நேரம், மருத்துவர் வந்துவிட்டார்.

“ஒன்னும் பிரச்சனை இல்லை. ஹெல்த் கண்டிசன் நல்லா இருக்கு. பயப்பட தேவை இல்லை.. கொஞ்சம் டென்சன் ஜாஸ்தி.. அவ்வளோதான்.. அவங்களை ரிலாக்ஸா பார்த்துக்கோங்க.. இப்போ தூங்கிறாங்க.. ஒரு ஒன் ஹவர்ல முழிச்சதும் வீட்டுக்கு போகலாம்.. ஒரு டூ டேஸ்க்கு நான் தர்ற டேப்லட்ஸ் மட்டும் கொடுங்க போதும்..” என்று சொல்லி அனைவரின் நெஞ்சிலும் பாலை வார்க்க, எல்லாருக்குமே அப்படி என்று இருந்தது.

அசோக் குமார் அப்போது தான் நிம்மதியாய் அமர்ந்தார். புண்ணியகோடிக்கும் அப்போது தான் மனம் லேசாக, பிருந்தாவோ யாருக்கும் கேட்காமல்,

“தேவி கிளம்பிட்டா…” என்று சொல்ல, மீண்டும் மனதில் பாரம் வந்து ஒட்டிக்கொண்டது.

வருத்தமாய் மனைவி முகம் பார்க்க “வீட்ல போய் பேசிக்கலாம்…” என்று சின்ன பிருந்தா சரவணனை கண் காட்டினார்.

சரவணனோ இறுகி போய் அமர்ந்திருந்தான். இதுநேரம் வரைக்கும் அம்மாவிற்கு என்னவோ என்று ஓர் பதற்றம் இருக்க, இப்போது ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், அடுத்து அவன் மனம் தாவிய இடம் தேவி..

கிளம்பியிருப்பளோ என்றே தோன்ற, கிளம்பியிருக்க கூடாது என்று அவன் மனம் ஆசை கொண்டது. ஏனோ அவளை அப்படி தனியே அதுவும் அப்படி ஒரு மனநிலையில் அனுப்ப மனமில்லை… என்னவோ மனம் அடித்து கொண்டது.

உடனே சென்று தேவியை பார்க்கவேண்டும் போல் தோன்ற, தன்னை அடக்கவே மிகவும் சிரமமாய் இருந்தது. இப்போது கிளம்பவும் முடியாது.. கூடவும் கூடாது. இறுகிய மனத்துடன் அப்படியே அமர்ந்திருந்தான்.

மருத்துவர் சொன்னது போல்ம் கோதாவரியும் அடுத்து கண் முழித்துவிட, அடுத்து செய்யவேன்டியதெல்லாம் செய்து முடித்து ஒருவழியாய் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

கோதாவரியை ஒரு கை தாங்கி பிடித்திருந்தாலும், அவரை நடத்தி கூட்டி வருவதில் கவனம் இருந்தாலும் சரவணனின் கண்கள் வீடு முழுவதும் அலசியது. தேவி எங்கேயும் இருக்கிறாளா என்று.

கண்கள் பார்த்த மட்டில் அவள் இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் இங்கே முன்னடியல்லவா வந்திருப்பாள். ஆனால் இல்லை. சென்றுவிட்டாள்..

சென்றுவிட்டாள் என்று புத்திக்கு எட்ட, மனமோ ஏற்றுகொள்ள மறுத்தது.. எப்படி முடியும் என மருகியது. நான் வரும் வரைக்குமாவது காத்திருக்கலாமே என்று ஏங்கியது. 

“போயிட்டா… போயிட்டா…” என்று மனம் அடித்துக்கொள்ள, அப்படியே இறுகி போனான்..

 

 

 

 

 

 

 

 

Advertisement