Advertisement

                                                            துளி – 1

“ஆர் யு ப்லிர்ட்டிங் மீ…?? ”

“நோ நோ… சீரியஸ்லி… ஐம் லவ்விங் யு…”

“வாட்…???!!!!”

“லவ்… காதல்…. பியார்… ப்ரேமம்… இதெல்லாம் தெரியாதா…???” என்று அவன் கைகளை விரித்து சொல்ல, அவன் கண்களோ எதோ கதை சொன்னது…

முதல் முறையாய் பார்க்கும் ஒருவர் நம்மிடம் இப்படியெல்லாம் பேசினால் எப்படி இருக்கும்..?? முதலில் என்ன சொல்வது என்று கூட தெரியாதே.. ஆனால் தேவிக்கு அப்படியல்ல. என்னடா இவன் இப்படியெல்லாம் பேசுகிறான் என்று தோன்றினாலும் அவள் வாய் பதிலுக்கு பதில் சொல்லிக்கொண்டு தான் இருந்தது.

“ஏன் இதெல்லாம் தெரிஞ்சா தான் இந்த பிளைட் கோவா போகுமா???” என்று சிலிர்த்துக்கொண்டு ஏகத்துக்கும் சலித்த தேவியை ஒரு தேவதையை பார்ப்பது போல் தான் பார்த்தான் சரவணன்.

இருவருக்கும் முன்னே பின்னே இருவரையுமே தெரியாது. பார்த்தது என்னவோ இப்போது தான். இவன் யார் என்று சுத்தமாய் அவளுக்கு தெரியாது. ஆனால் சரவணனோ ப்ளைட்டில் ஏறியதில் இருந்து இவளை தான் பார்த்திருந்தான்.

பார்த்தான்… பார்க்கிறான்… இனியும் பார்ப்பான்.. வினை தொகை போல.. 

அவன் அப்படி பார்ப்பதுவே அவளுக்கு எரிச்சலை தர, எப்போதடா பிளைட் ‘டபோலிம் விமான’ நிலையம் வரும் என்றிருந்தது. ஆம், தேவியும் சரவணனும் பறந்து கொண்டு இருப்பது கோவா நோக்கியே. அவள் சிங்கப்பூரிலிருந்து வர, இவன் சென்னையிலிருந்து.

இருவருமே மும்பையிலிருந்து ஒரே விமானம். விமானத்தினுள்ளே ஏறி அமர்ந்ததுமே இவளை கண்டுவிட்டான். பார்த்ததுமே சரவணனுக்கு முதலில் தோன்றியது ‘இவளை எங்கேயோ பார்த்திருக்கேனே…’ என்று தான்.

தேவிக்கு உள்ளே ஏறி அமர்ந்ததுமே, தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற, தெரிந்தவர்கள் யாரும் இங்கே இருக்கிறார்களோ  என்று கண்களை சுழல விட்டாள். அவளுக்கு தெரிந்து யாரும் அப்படி அங்கே இல்லை..

“ஏன் இப்படி பீல் ஆகுது… ஒருவேளை பிடிக்காம கிளம்பி வர்றனால இப்படி இருக்குமோ…” என்று எண்ணியவள் தலையை உலுக்கிக்கொண்டு மீண்டும் நன்றாய் சாய்ந்து அமர்ந்துகொள்ள, மீண்டும் யாரோ தன்னையே பார்ப்பது போல் ஓர் உணர்வு.

“ஹா என்ன இது….” என்று பல்லை கடித்தபடி மீண்டும் பார்வையை ஓடவிட்டாள்.. ‘யாருமில்லை…’ என்று தோன்றிய அடுத்த நொடி, அவள் பார்வை ஓரிடத்தில் நிலைத்து நிற்க,

“ச்சே.. யாரிவன்.. இவன் தான் அப்போ இருந்து பார்க்கிறதா.. கொஞ்சம் கூட மேனேர்ஸ் வேணாம்.. இடியட்.. இதுக்குனே பிளைட் ஏறி வருவாங்களோ…” என்று அவனை திட்டுவது போலவே பார்த்தவள் வெடுக்கென்று தலையை திருப்பிக்கொள்ள,       

அதே எண்ணம் மண்டைக்குள் வண்டாய் குடைய, அவனால் ஒருநிலையில் அமர்ந்திருக்க முடியவில்லை. என்ன செய்தானோ, யாரிடம் பேசினானோ, இவளருகே வந்தும் அமர்ந்துகொண்டான். அவன் வந்து அமர்ந்த விதமே சொல்லியது இது அவனது இருக்கை இல்லையென்று.

தேவிக்கு அதை பற்றியெல்லாம் கவலையே இல்லை. சரவணன் பக்கம் திரும்பக் கூட இல்லாமல் அமர்ந்திருந்தவளை “ஹாய்….” சொல்லி அவன் கலைக்க, பதிலுக்கோ என்வென்பது போல பார்த்தாள். அவள் மூக்கில் இருந்த சிறு கருப்பு கல் மூக்குத்தி உன்னை குத்தி கொன்று விடுவேன் என்று சொல்வது போல் இருந்தது அவனுக்கு.

ஆனால் அவன் விடுவானா என்ன..??

மீண்டும் அவன் “ஹாய்…” சொல்ல, இப்போது அவளாலும் சொல்லாமல் இருக்க முடியாதே.

‘யாரு டா நீ…’ என்ற ரீதியில் பார்த்தபடி “ஹாய்….” என்று சொல்ல,

“உங்களை.. சாரி ஐ திங் யு ஆர் யங்கர் தென் மீ… உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே…” என்று சொல்ல,

ஏற்கனவே கோவா வர பிடிக்காமல், வேறு வழியே இல்லாமல் அம்மாவின் கட்டாயத்திற்காக கிளம்பி வந்தாள். ஆயிரம் வேலைகள் அவளுக்காக அவளே உருவாக்கிக்கொண்டது இருக்கிறது. எல்லாம் விட்டு இந்த ஒருவாரத்திற்காக தன்னை அத்தனை தயார் படுத்திக்கொண்டு வந்திருக்கிறாள். அந்த எரிச்சலே இன்னும் போக வில்லை. இதில் கூடவே, அதுவும் அருகிலேயே வேறு ஒருத்தன் இப்படி இம்சை செய்ய,

“உலகம் எவ்வளோ அட்வான்ஸா போயிடுச்சு.. ஆனாலும் இந்த டையலாக் மட்டும் மாறாதோ…” என்று நக்கலாகவே பதில் கூறினாள்.

“வாவ்… ஸ்வீட் வாய்ஸ்… நீ பேசும் போது…” என்று என்ன சொல்ல வந்தானோ, அவள் பார்த்த பார்வையில் வாயை  மூடிக்கொள்ள,

சரவணன் மனசாட்சியோ  ‘டேய்… என்ன இப்படி வழியுற…. நீயெல்லாம் IPS ன்னு வெளிய சொல்லாத..’” என்று பொங்க,

‘ஹா.. போலிஸ்னா லவ் வர கூடாதா… இதென்னடா கொடுமை.. நோ ப்ராப்ளம்ஸ்… அடுத்த மாசம் தான் போஸ்டிங்..’ என்று தனக்கு தானே நியாயம் சொல்லிக்கொண்டான்.

“ஓ கண்டதும் காதலா…” அவன் மனமே அவனை நக்கல் பேச,

“நோ… நோ கண்டிப்பா இவளை எங்கோ பார்த்திருக்கேன்…” என்று பதில் சொல்ல, எங்கென்று தான் தெரியாமல் போக, ‘பேசி பார்ப்போம்…’ என்று நினைத்தவன்,    மீண்டும் பேச்சு கொடுத்தான்.

அவன் யாரென்றே தெரியாது. எதோ அருகில் வந்து அமர்ந்தான், சிறிது நேர பயணம். அவ்வளவே என்று இருந்தால், இவன் செய்வது எல்லாம் ரொம்பவுமாய் தோன்ற, தலை வலிப்பது போல் கூட இருந்தது தேவிக்கு.

அவன் பேசிக்கொண்டே வர, “ஸ்ஸ்…. என்ன தான் வேணும்….??” என்று பல்லை கடித்தாள்.

லேசாய் இதழின் ஓரம் ஒரு சுழி விழ, கண்களை ஒருமுறை இறுக மூடி திறந்தபடி அவள் எரிச்சலையும், கோபத்தையும் அடக்கியவிதம் அவனுக்கு இன்னும் பிடித்தது. 

‘அள்ளுது…’ என்பார்களே அதுபோல உணர்ந்தான்.

“வாவ் பியுட்டிபுல்….” என்று அவனும் அறியாது அவன் மனம் உளறியதை வாயும் உளறிட, அதன் பின்னே தான்,

“ஆர் யு ப்லிர்ட்டிங் மீ…?? ” என்று அவள் கேட்க,

“நோ நோ… சீரியஸ்லி… ஐம் லவ்விங் யு…” என்று சரவணன் அசராமல் சொல்ல,

“வாட்…???!!!!” அதிர்ந்தே விட்டாள் தேவி.

அவள் அதிர்ச்சி பார்வை இன்னும் அவன் மனதை அள்ள, “லவ்… காதல்…. பியார்… ப்ரேமம்… இதெல்லாம் தெரியாதா…???” என்றான் எதோ தீவிரமாய்.

அவன் பேசிய விதமே எதோ பொழுது போகாமல் இவன் விளையாடுகிறான் என்று தோன்ற, “ஏன் இதெல்லாம் தெரிஞ்சா தான் இந்த பிளைட் கோவா போகுமா???” என்று ஏகத்துக்கும் சலித்த தேவியை ஒரு தேவதையை பார்ப்பது போல் தான் பார்த்தான் சரவணன்.

ஆம் தேவதை தான். இதற்கு முன்னே எங்கோ இவளை பார்த்திருக்கிறான். ஆனால் எங்கென்று தான் தெரியவில்லை. இப்போது கண்டவுடனோ கப்பென்று மனம் அவள்புறம் சாய, ‘ம்ம்ஹும் கவுந்துட்ட டா சரவணா….’ என்று அவனுக்கு அவனே சொல்லிகொண்டான்.

‘நீ ஒழுங்கா பேசினாலாவது அவ உருப்படியா எதுவும் பேசுவா..’ என்று புத்தி சொல்ல, ‘எல்லாம் எனக்கு தெரியும்…’ என்று அவனுள்ளே சொல்லிகொண்டவன்,

“கோவால எங்க….??” என்று அடுத்த கேள்விக்கு தாவினான்.

‘அவசியம் நீ தெரிஞ்சே தான் ஆகணுமா…’ என்பது போல் தேவி பார்க்க, ‘கண்டிப்பா நீ சொல்லியே தான் ஆகணும்…’ என்பது போல் அவனும் பார்க்க, தேவி வேகமாய் தலையை திருப்பிக்கொண்டாள்.          

“ஓ… காட்… நான் எத்தனை டைம்ஸ் மாம் கிட்ட சொன்னேன்.. ஐ கான்ட் கோன்னு.. இப்படி என்னை இந்த அரை லூசு கூட… ச்சே…” என்று முணுமுணுத்தவள், கண்களை மூடி இருக்கையில் சாய, சரவணனுக்கு என்ன தோன்றியதோ, அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. ஆனாலும் தன் கண்கள் அவளை காண்பதை தடுக்க இயலவில்லை.

‘பக்கா மாடர்ன்…’ என்பார்களே அதுபோல இருந்தாள்.

ஓவர் கோட்டை கலட்டி வைத்திருந்தாள். ஆண்கள் கூட அத்தனை சாயம் போன ஜீன்ஸ் அணிவார்களோ என்னவோ, அவனுக்கு சத்தியமாய் அந்த நிறம் கூட என்னவென்று புரியவில்லை. காணும் போதே அவனையும் அறியாது வாய் கோண,

“என்ன கலர் டேஸ்ட்டோ…” என்று முகத்தை சுருக்கி சொல்லிக்கொள்ள, அவளது உடைகளில் இருந்து சரவணனின் பார்வை தேவியின் முகத்திற்கு போனது.

‘தூங்குறவளை இப்படியெல்லாம் பார்க்க கூடாது சரவணா…’ என்று தோன்றினாலும், ‘நான் பார்ப்பேன்..’ என்று சண்டித்தனம் செய்தது. 

தேவியை முதலில் பார்த்ததுமே என்னவோ வித்தியாசமாய் பட்டது. இப்போது தான் என்னவென்று பார்த்தான், பச்சை நிறத்தில் ஐ லைனர் போட்டிருந்தாள். அதை பக்க வாட்டில் நீட்டி வேறு விட்டிருந்தாள். காதுகளில் தோடு போடும் இடத்தில் வெறும் துளை மட்டுமே கண்ணு தெரிய, காது மடலிலோ ஏகப்பட்ட சிறு சிறு தோடுகள்.  

‘ஷப்பா… இந்த கலர்ல கூட ஐ லைனர் இருக்கா…’ என்று வினோதமாய் பார்க்க, ‘நல்ல வேலை பச்சை கலர்ல லிப்ஸ்டிக் எதுவும் போட்டு வைக்கலை….’ என்று எண்ணியவனின் பார்வை தன்னப்போல் அவளது உதடுகளுக்கு செல்ல, மெரூன் நிறத்தில் நான்கு ஐந்து கோட்டிங் கொடுத்தது போல் லிப்ஸ்டிக் இவனை பார்த்து ஹாய் சொல்லியது.

‘அம்மாடி… இவளுக்கு லிப்ஸ்டிக் வாங்கி குடுத்தே உன் சம்பளம் போயிடும்டா  சரவணா….’ என்று நெஞ்சில் கை வைத்தான்.

சத்தியமாய் இவளது ஆடை அலங்காரத்திற்கும், பேசும் விதத்திற்கும் அவனது வட்டாரத்தில் எங்கேயும் இவளை கண்டிருக்க முடியாது. ஆனாலும் ஓர் உணர்வு எங்கேயோ பார்த்தது போல. ஒருவேளை இதற்கு பெயர் தான் பூர்வ ஜென்ம பந்தமோ…

யாருக்கு தெரியும் என்று அவனாகவே தோளை குலுக்கிகொள்ள, மீண்டும் பார்வை அவள் மேல் படர, சரவணன் மனதிலோ சொல்லாமல் கொள்ளாமல் அவன் வீடும் நினைவு வந்தது. கூடவே அவன் அம்மாவும்..    

என்னதான் சரவணின் குடும்பம் சென்னையில் செட்டில் என்றாலும், பட்டினத்து வாழ்விற்கு பழக்கம் என்றாலும் சரவணின் அம்மா கொஞ்சம் கட்டுப்பெட்டி தான். காலையில் எழுந்து சுப்ரபாதம் ஒலிக்க, வீட்டில் சாம்பிராணி புகை படர, பூஜை முடித்தால் தான் அவருக்கு அந்த நாளே தொடங்கும்.

‘சுப்ரபாதம்…… ஹ்ம்ம் இவளுக்கு இந்த வார்த்தையாவது வாய்ல வருமா….’ என்று தோன்ற, அருகிலிருப்பவளையும் சரி அவன் அம்மாவையும் சரி சமாளிப்பது கடினம் என்றே தோன்றியது.      

இது இது இப்படிதான் இருக்க வேண்டும் என்றால், அது எல்லாம் அப்படியே தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் சரவணின் அம்மா கோதாவரி. சரவணின் அப்பா அசோக் குமார் வக்கீல். ஆனால் வீட்டில் வக்கீல் நீதிபதி எல்லாமே கோதாவரி தான்.  

சரவணனையும், வக்கீல் ஆக்கிட வேண்டும் என்பதே அசோக்குமாரின் கனவாய் இருக்க,

“இந்த வீட்டுக்கு ஒரு வக்கீல் போதும் டாட்… நீங்க வாங்கின வாய்தாவே இன்னும் நிறைய இருக்கு…” என்று அழகாய் அதை தவிர்த்து போலீஸ் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து, பரீட்சையும் எழுதி அதில் வெற்றியும் பெற்று, பயிற்சியும் முடித்து இதோ அடுத்த மாதம் போஸ்ட்டிங் சரவணனுக்கு.

மகன் போலீஸ் ஆனதில் அத்தனை பெருமை கோதாவரிக்கு. சாதாரணமாகவே கொஞ்சம் பெருமை பேசும் ரகம், இதில் சொல்லவும் வேண்டுமா?? மகனுக்கு போஸ்டிங் ஆக போகிறது என்றதுமே பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பிக்க,

“ம்மா ப்ளீஸ்… இப்போவே என்ன அவசரம்..” என்று வந்து நின்ற மகனிடம் “எல்லாம் எனக்கு தெரியும் நீ சும்மா இரு..”என்று சொல்ல,

“டாட் நீங்களாவது சொல்லுங்க… இப்போ என்ன அவசரம்…” என,

“ஏன் சரோ.. யாரையும் லவ் பண்றியா…???” என்று அவர் கேட்க,

“ஓ… லவ் பண்ணா இப்போ இதெல்லாம் பார்க்க மாட்டீங்களா?? குட்.. கோவா போய்ட்டு வரும்போது கண்டிப்பா என் லவ்வரோட தான் வருவேன்…”  என்று அவனும் சவால் விட, பட்டென்று முதுகில் ஒரு அடி வேறு விழுந்தது.

“ம்மா….” என்றபடி முதுகை தேய்த்து திரும்ப,

“என்ன டா.. அம்மா… அப்பாவும் மகனும் பேசுற பேச்சா. அங்க போனா அடக்க ஒடுக்கமா இருக்க பாரு. கோதாவரி பையன் இப்படி பண்றான் அப்படி பண்றான்னு பேச்சு வந்திட கூடாது. உன் அப்பாக்கு ஹியரிங் இருக்கு, இல்லை நாங்களும் வருவோம். சொல்ல முடியாது வந்தாலும் வருவோம்…” என்று அறிவுரை சொல்ல,

“ம்மா… நான் பையன் மா.. பொதுவா பொண்ணுங்களுக்கு தான் இப்படியான அட்வைஸ் எல்லாம் சொல்வாங்க.. அதுலையும் நான் போலீஸ் மா…” என்று பாவம் போல சொன்னான்.

“நீ என்னவா வேணும்னாலும் இரு.. ஆனா முதல்ல எனக்கு மகன் அப்புறம் தான் எல்லாமே…” என்றபடி தான் மகனை கோவா அனுப்பிவைத்தார்.      

கோவா அனுப்புவது கூட சரவணன் ஒன்றும் சுற்றி பார்க்க இல்லை. அங்கே அவனது தாய் மாமா, கோதாவரியின் அண்ணன், புண்ணியகோடி நான்கைந்து  ரீசார்ட்டுகளுக்கும், நட்சத்திர ஹோட்டல்களுக்கும் சொந்தக்காரர்.

எப்பொழுதுமே வருடா வருடம் தன் சொந்த பந்தம், நட்பு வட்டம், தொழில் முறை பழக்கம் என்று அனைவரையும் அழைத்து ஒரு பார்ட்டி போல் வைப்பார். எப்போதுமே கோதாவரியும், அசோக்குமாரும் தான் போவர்.

சரவணன் ஹாஸ்ட்டல் வாசி. ஆகையால் இதுவரை அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சொல்லபோனால் இவர்களை எல்லாம் பார்த்து கூட பல வருடம் ஆகிவிட்டது. இந்த வருடம் அவன் தந்தைக்கு தேதி தோதாய் இல்லை. இவனும் வீட்டில் இருக்க, கோதாவரி மகனை போக சொல்ல,

‘கோவா….’ என்றதும் கலர் கலர் கனவுகள் கண்ணில் விரிய, அடுத்த நொடி அவன் அம்மா சொன்ன அறிவுரைகளில் அனைத்தும் காணமல் போனது.

‘போறது பார்ட்டிக்கு.. அடக்கமா ஒடுக்கமா இருக்கனுமாம்… ஹ்ம்ம்.. வெறும் வணக்கம் மட்டும் தான் சொல்ல முடியும் போல.. மாம் ஓட அண்ணன் எப்படி இருக்க போறார்…?? கண்டிப்பா மாம்ல பாதி இருக்காது கேரக்டர்… சுத்தம்… இதுல பாட்டி வேற.. அம்மாக்கு அப்படியே ஒருபடி மேல… ஷ்ஷ்…. இவங்க எல்லாம் பார்ட்டி வைக்கலைன்னு யார் சொன்னா..பேசாம பிரண்ட்ஸ் கூட எதா ட்ரிப் போயிருக்கலாம்…’ என்று எண்ணியபடி விமானம் ஏறியவனுக்கு இப்போது சுத்தமாய் மனநிலை மாறியிருந்தது.

எத்தனை நேரம் தான் அமைதியாய் இருக்க முடியும்..???  

‘இவள் என்னடா செய்கிறாள்…’ என்பது போல் பார்க்க, அவளோ விமானம் தரையிறங்காமல் நான் கண் விழிக்க மாட்டேன் என்பது போல் அதே நிலையில் இருந்தாள். ஏனோ அவளை கண்டதும் ஒரு பெருமூச்சு வந்தது.

‘யாருன்னு தெரியாது.. பேர் தெரியாது.. ஆனாலும் உன்னை பிடிச்சிருக்கு…’ என்று அவளிடம் சொல்வது போல் மென்மையாக தனக்குள்ளே சொல்லிக்கொள்ள, இவளை என் அம்மாவின் முன்னாடி இதே கோலத்தில் நிறுத்தினால் எப்படி இருக்கும் என்று தோன்ற,

“ஐயோ…!!!!!!!” என்று நெஞ்சடைத்தது.

“செத்த டா சரவணா… அவ்வளோ தான்… ஏன்மா உங்க வீட்ல ட்ரெஸ் வாங்க கூட வசதி இல்லையா.. இப்படி கை கிழிஞ்சு இருக்கு…” என்று முகத்திற்கு நேராகவே கோதாவரி கேட்பார், இதில் காலம் பூராவும் எப்படி என்று தோன்ற,

“நோ நோ… எனக்கு இவ தான் வேணும்… அம்மா சரின்னு சொல்வாங்க.. சொல்லணும்.. சொல்ல வைப்பேன்….” என்று உறுதி பிறந்தது.

உறுதி என்னவோ பிறந்து விட்டது, ஆனால் அருகில் இருப்பவளுக்கு இவன் மீது காதல் பிறக்க வேண்டுமே..??

“பிளைட் லேண்ட் ஆக போகுது….” என்று மெல்ல தேவியின் காதில் கிசுகிசுக்க, சட்டென்று கண் விழித்து பக்கவாட்டில் பார்க்க, அவன் முகம் அருகே தெரிய, ஒரு நொடி தேவி திகைத்து கண்களை விரிக்க, அந்த பச்சை நிற ஐ லைனரும், கண்களுக்கு கீழே ஒட்டி, குட்டியாய் இருந்த சிவப்பு நிற மச்சமும், அவனை மொத்தமாய் மயக்க, சரவணனுக்கு அவ்வளவு தான் செத்து பிழைத்தேன் என்பார்களே அது போல தான் உணர்ந்தான் இந்த ஒரு நொடியில்.            

காதில் ரகசியம் சொன்னது போல் சொன்னவன் அப்படியே அந்த நிலையிலேயே இருக்க, அவன் கண்கள் காட்டிய மயக்கம் தேவிக்கு என்ன உணர்த்தியதோ, தான் விலகி அமர வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது ஒரு தவிப்பை கொடுக்க,

நிஜமாகவே விமானம் தரையிறங்க போகும் அறிவுப்பை ஏர் ஹோஸ்டஸ் சொல்ல, அத்தனை நேரம் அமைதியாய் இருந்த விமானத்தில் இப்போது சலசலப்பு எழ,

தேவி தன்னை தானே உலுக்கிக்கொண்டாள்.. விலக்கியும் கொண்டாள்.            

“எங்க போனா இவ…????” என்று கிட்டத்தட்ட நான்கு முறை அந்த விமான நிலையத்தை சல்லடை போடாத குறையாக தேடி சலித்துவிட்டான் சரவணன்.

தேவிக்கு பின்னாலே தான் இறங்கினான். எப்படியாவது அவளது பெயரும், கோவாவில் எங்கே போகிறாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலும் அவனை போட்டு பாடாய் படுத்த, கால்களோ அவள் பின்னே தான் சென்றுகொண்டு இருந்தது.

விடாமல் அவள் பின்னே சென்றவனை இரண்டொரு முறை திரும்பி பார்த்தாள். அவ்வளவு தான். அவளாக பேசவில்லை. அடுத்து செய்யவேண்டியதை எல்லாம் செய்து முடித்து அவரவர் பொருட்கள் உரியவர்களிடம் வந்து சேர, தன் பெட்டியை தூக்கிக்கொண்டு நிமிர்ந்தவனுக்கு, தேவி நின்ற இடத்தில்  ஒரு வேறு ஒரு பெண் நின்றிருக்க,

‘எங்க இவ…’ என்று பார்வை அலச, ம்ம்ஹும் கண்ணுக்கு எட்டிய தூரம் அவளை காணவில்லை.

‘டஸ்ஸுன்னு மறஞ்சிட்டா.. மோகினியா இருப்பாளோ…’ என்று எண்ணியவனுக்கு,

‘சரவணா நீ போலீஸ் டா.. ஒரு பொண்ணை கண்டுபிடிக்க முடியாதா…’ என்று அவன் மனசாட்சி அவனை போட்டு தாக்க,

“அதானே.. கண்டிப்பா இங்க இருந்து வெளிய போயிருக்க முடியவே முடியாது.. வர்றேன் மோகினி.. நீ எங்க போனாலும் வருவேன்….” என்று சொல்லிக் கொண்டவன், இதோ இப்பொழுதும் அவளை கண்டுபிடிக்காமல், கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறான்.

சாதாரணமாய் சென்றவளை கண்டுபிடித்து விடலாம். ஆனால் வேண்டுமென்றே இவன் கண்களில் பட்டுவிட கூடாது என்றே சென்றவளை எங்கே சென்று பிடிப்பான்…. கண்டு…

“ஹப்பா.. சரியான இம்சை… ச்சே… இன்னும் கொஞ்ச நேரம் அவன்கூட இருந்திருந்தேன்.. தொல்லை தாங்காம நானே ‘ஐயா சாமி நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்னு…’ சொல்லிருப்பேன்..” என்று காரில் சென்றுகொண்டிருந்த தேவிக்கு இதழ்களில் ஒட்டிய புன்னகை மட்டும் மறையவே இல்லை.

அவள் நெஞ்சில் ஒட்டிய அவன் நினைவுகளும் மறையவில்லை. மறையமாட்டேன் என்று கண்டிப்பாய் சொல்லியும் விட்டது.

‘சரி ஒரு ஓரமாக இருந்துவிட்டு போ என்னை தொல்லை செய்யாமல்…’ என்று தேவியும் போனால் போகிறதென்று பெரியமனது பண்ண,

‘யாரு டா நீ??? எங்கிருந்து வந்த?? பார்க்க மெட்ராஸ் பையன் போல இருக்க…’ என்று தேவி நினைக்க,

‘அவனை பார்த்தா பையன் போலவா இருக்கு…??’ என்று அவள் மனம் கேட்க, ஒருமுறை சரவணின் தோற்றத்தை மனதில் ஓட்டி பார்த்தாள்.

‘ஹ்ம்ம் ஆள் பார்க்க நல்லாத்தான் இருக்கான்.. ஆர்ம்ஸ் வச்சு.. பிட்டா… மிலிடரி காரனோ…’ என்று அவள் மனம் தீவிர யோசனைக்கு செல்ல,

“ம்ம்ச் யாரா இருந்தா எனக்கென்ன.. தொல்லை விட்டது… இனி ஊருக்கு போறவரை அவன் கண்ணில மட்டும் பட கூடாது….” என்று தோளை குலுக்கிக்கொண்டு தான் செல்ல வேண்டிய இடம் நோக்கி செல்ல,

அங்கே இன்னும் சரவணன் விமான நிலையம் விட்டு வெளியேற வில்லை.

 “இன்னும் ஒன் டைம் இப்படி சுத்தின.. சந்தேக கேஸ்ல பிடிச்சு உள்ள வைக்க போறாங்க….” என்று சரவணனுக்கு மனது எச்சரிக்கை செய்ய,

“எல்லாம் எங்களுக்கு தெரியும்.. இன்னும் ஒரே ஒரு தடவை..” என்று தண்ணீர் பாட்டிலை வாயில் வைத்தபடி மீண்டும் தன் தேடும் படலம் ஆரம்பிக்க போக,

“சரவணன் மாமா…..” என்று குரல் தடுத்து நிறுத்தியது.

 

Advertisement