Advertisement

அருகில் வந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து என்ன என்னும் விதமாய் கண்களை தூக்கி சைகை செய்தான். அதை கூட ரசிக்க தோன்றியது அவனுடைய கலைக்கு.
“காவ்யா சொன்ன மாதிரி  அத்தான் ரொம்ப அழகு தான்”, என்று அவள் மனது அவனை பார்த்து ஜொள்ளு விட்டது.
அவள் பார்வையை அவனுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. சாதாரண பெண்ணாக இருந்தாலாவது இப்படி பார்த்தால் என்னோட பொண்டாட்டி என்னை சைட் அடிக்கிறா என்று நினைத்திருப்பான். 
ஆனால் அவனுடைய கலை தான் விசித்திரமானவளாச்சே? மனதில் இருப்பதையே வெளியே சொல்லாதவள் அவனை என்ன காதல் பார்வையா பார்ப்பாள்?
“என்ன கலை? எதாவது தொலைச்சிட்டியா? எங்க இருக்குன்னு தேடி தரணுமா?”, என்று கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை”
“அப்புறம் என்ன? எடுத்து வைக்க எதாவது உதவி செய்யணுமா?”
“அதுவும் இல்லை”
“பின்ன என்ன தான் வேணும்?”
“எனக்கு ஒரு கேள்விக்கு விடை தெரியணும்”
“கேளு கலை”
“நான் ஹாஸ்டல் போய்ட்டா நீங்க சந்தோசமா இருப்பீங்களா?”
“வாறே வா. மேடம் செம கேள்வி கேக்குறா?”, என்று குதித்தது அவன் மனது. “ரொம்ப குதிக்காத. இவளை புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்”, என்று அவனை அடக்கியது மனசாட்சி.
“இந்த வீட்டை விட்டு, என்னை விட்டு போக போறேன்னு சொன்னது நீ தான் கலை. நான் உன்னை போக சொல்லலை. நீ போறது கஷ்டம் தான். ஆனா உனக்கு பிடிக்காதவங்க வீட்ல நீ ஏன் இருக்கணும்? நமக்கு கல்யாணம் நடந்ததே தப்பு. நீ நல்ல படிச்சு வேலைக்கு போயிருப்ப. வேற நல்ல மாப்பிள்ளையா, அதுவும் உனக்கு மனசுக்கு புடிச்சவனா கிடைச்சிருப்பான். அம்மா அவசர பட்டுட்டாங்க. வேணும்னா என்னை விட்டு போன பிறகு வேற மாப்பிள்ளை…”, என்று சொல்ல வந்தவனின் வாயை தன் விரலால் மூடினாள் மதி.
அவளையே இமைக்காமல் பார்த்தான்.
கையை விலக்கி கொண்டவள் “அப்படி மட்டும் சொல்லாதீங்க அத்தான். உங்களை விட நல்ல மாப்பிள்ளை, எந்த பொண்ணுக்கும் கிடைக்க மாட்டான்”, என்று அழுகையினூடே சொன்னாள்.
அமைதியாக இருந்தான் சூர்யா. அவன் பதில் பேசாததால் “உங்களை தவிர  வேற  மாப்பிள்ளை எல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு நீங்க தான் வேணும்”, என்றாள்.
“சரி சந்தோசம்”, என்று சந்தோசமே இல்லாமல் சொன்னவன் மனது குத்தாட்டம் போட தயாராய் இருந்தது.
அவளும் இப்போது அமைதியாக இருந்தாள்.
“இன்னும் என்ன கலை? சரி கடைசி வரைக்கும் நாம தான் புருஷன் பொண்டாட்டி போதுமா? இப்ப ஹாஸ்டல் போறதுக்கு எடுத்து வை”, என்றான்.
அடுத்த நொடி அவனை முறைத்தவள் “என்ன சும்மா சும்மா என்னை ஹாஸ்டல் போக சொல்லிட்டு இருக்கீங்க? அதெல்லாம் போக முடியாது”, என்று மிரட்டலான குரலில் சொன்னாள் கலைமதி.
ஆச்சர்யத்தில் அவன் கண்கள் அகல விரிந்தது. “என்ன முழிக்கிறீங்க? உங்களை விட்டு, இந்த வீட்டை விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்”, என்று சிரிப்புடன் சொன்ன மதிக்கு “அதெல்லாம் வேண்டாம் நீ ஹாஸ்டல்கே போயிருன்னு  சொல்வானோ?”, என்று நினைத்து உதறல் எடுத்தது.
அவளை அப்படியே தூக்கி சுத்த வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கி விட்டு “அதெல்லாம் சரி பட்டு வராது கலை. நீ ஹாஸ்டல் போயிரு”, என்று சொன்னான்.
கவலையாக அவனை பார்த்தவள் “பெத்த அப்பாவுக்கு தான் என்னை பிடிக்கலை. உங்களுக்கும் என்னை பிடிக்கலையா அத்தான்?”, என்று கண்ணீருடன் கேட்டான்.
“இது தான் நீ கலை. உன்னால மாறவே முடியாது. எப்படி அந்நியன் மாதிரி நடந்துக்குற பாரு? இப்ப தான் உங்களை விட்டு போக மாட்டேன்னு தைரியமா சொன்ன. அடுத்த நிமிஷம் அழுதுட்டு இருக்க. உன்னால யார் என்ன சொன்னாலும் எனக்கென்னன்னு போக முடியாது. நம்மளை சுத்தி இருக்குறவங்க நல்லவங்களா இருக்கலாம், கெட்டவங்களா இருக்கலாம். அவங்களை யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கனு யோசிச்சிட்டு இருந்தாலோ, அவங்க பேசுற ஓவ்வொரு வார்த்தைக்கும் கலங்கிட்டு இருந்தாலோ, நம்ம வாழ்க்கையை தொலைச்சிட்டு தான் இருக்கணும். காலம் முழுக்க உன் கூட வர போறது நான் மட்டும் தான். நான் எப்படினு தான் நீ யோசிக்கணும். நான் எதாவது உன்னை காய படுத்தினா தான் நீ கலங்கனும். கலங்க கூட வேண்டாம். நான் என்ன செஞ்சாலும் என் சட்டையை பிடிச்சு கேள்வி கேளு. தப்பு பண்ணிருந்தா செருப்பால கூட அடி. இது நம்ம வாழ்க்கை. எப்ப நம்ம ரெண்டு பேருக்கும் கடவுள் முடிச்சி போட்டாரோ, அப்பவே நாம மட்டும் தான் நம்ம வாழ்க்கையை வாழணும்”
“நமக்கு நடுவுல வர எங்க அம்மா, அப்பா, உங்க அப்பா யாருக்குமே உரிமை இல்லை. நம்ம பிள்ளைங்களுக்கு கூட உரிமை கிடையாது. அப்படி இருக்கும் போது கண்டவங்க பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு என் பொண்டாட்டி கலங்கி நின்னா எனக்கு பிடிக்காது. உன் சித்தி நேத்து பேசுனது பெரிய வார்த்தைகள் தான். நான் இல்லைனு சொல்லலை. அதை நினைச்சு, நமக்குள்ள வர வேண்டிய சந்தோசத்தை இழந்துட்டு இப்படி அழுதுட்டு இருக்குற பொண்டாட்டி எனக்கு  வேண்டாம்”
“யார் என்ன சொன்னா எனக்கென்ன? எனக்கு என் புருஷன் தான் முக்கியம். மித்தவங்க பேசுறதை  காது கொடுத்து கேட்டா கூட கண்டுக்க மாட்டேன்னு நீ எனக்கு உறுதி கொடுத்தா  நீ ஹாஸ்டல் போக வேண்டாம். அப்படி இல்லையா எனக்கு இந்த அழுமூஞ்சி பொண்டாட்டி வேண்டாம். நீ கிளம்பி போயிட்டே இரு”, என்று சொல்லி முடித்து விட்டு அவளையே பார்த்தான்.
“எனக்கு உங்க அன்பு வேணும் அத்தான். நீங்க என் லைஃப்ல வந்த அப்புறம் தான் சந்தோசமா இருக்கு. உங்களை விட்டு பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. நான் போக மாட்டேன். உங்க கூட இருக்குறதுக்கு அது தான் கண்டிசன்னா நான் இனி கண்டிப்பா அடுத்தவங்க பேச்சை கண்டுக்காம இருக்க முயற்சி பண்றேன். சின்ன வயசுல இருந்து எங்க சித்தி கிட்ட திட்டு வாங்குறேனா? அவங்க சத்தத்தை கேட்டாலே ரொம்ப பயந்து போயிறேன். தன்னால  அழுகை வந்துருது. இன்னைக்கு ரொம்ப பேசிட்டாங்க. அதான் அம்மா இருந்திருந்தா இப்படி எனக்கு ஒரு நிலை வந்திருக்குமான்னு தோணுச்சு. ஆனா எங்க அம்மா தான் எனக்கு இன்னொரு அம்மாவா உங்களை அனுப்பிருக்காங்களே. உங்களை விட்டு எனக்கு எப்படி போக முடியும். உடனே என்னோட குணத்தை மாத்திக்க முடியுமான்னு தெரியலை. ஆனா கண்டிப்பா இனி அவங்க பேசுறதை கேட்டு கஷ்ட படாம இருக்க உங்களுக்காக முயற்சி செய்வேன். ப்ளீஸ் ஹாஸ்டல் போக சொல்லாதீங்க அத்தான்”, என்று சொன்ன அடுத்த நொடி அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் சூர்யா.
இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்காததால் காலை சரியாக ஊன்றி சமாளிக்க முடியாமல் அவன் மேலே விழுந்தாள் மதி.
பூங்கொத்து போல் மேலே விழுந்தவளை அப்படியே அணைத்து கொண்டான் சூர்யா.
ஆச்சர்யமாக அவனை பார்த்தாள் மதி. அவளை பார்த்து கண் சிமிட்டியவன் “என் பொண்டாட்டி இந்த அளவுக்கு திருந்துனதே போதும். கொஞ்சம் கொஞ்சமா நானும் மாத்திருவேன்”, என்று சிரித்தான்.
“நான் ஹாஸ்டல் போக வேண்டாம் தான அத்தான்?”
“லூசு பொண்டாட்டி நான் ஹாஸ்டலுக்கு போக மாட்டேன்னு நீ உறுதியா சொல்லணும். என்கிட்ட உரிமையா பேசணும்னு தான் டி நான் நினைச்சேன். என்னால மட்டும் உன்னை பிரிஞ்சு இருக்க முடியுமா?”
“பிராடு அத்தான். அப்ப சும்மா தான்  ஹாஸ்டல் போக சொன்னீங்களா? நான் கிளம்பி இருந்தா போக விட்டிருக்க மாட்டிங்க தானே?”
“இல்ல கலை. நீ கிளம்பி இருந்தா உன்னை தடுத்திருக்க மாட்டேன். போ ன்னு விட்டுருப்பேன். உடனே கண்ணை வச்சு முழிக்காத. உன்னை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது தான். அது தான் உண்மை. ஆனாலும் உன்னை போக விட்டுருப்பேன்னு சொன்னதுக்கு ரெண்டு காரணம் இருக்கு?”
“என்ன காரணமாம்? என் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சிருப்பீங்க?”, என்று சிணுங்கினாள் கலைமதி.
“இப்படி எல்லாம் சிணுங்காத கலை. உன் அத்தான் பாவம்”
“ஆமா, ஆமா ஹாஸ்டல் போக சொல்லிருப்பேன்னு சொல்ற நீங்க பாவமா போங்க?”
“லூசு அது இல்ல டி. முழுசா கேளு. ஒரு காரணம் இன்னைக்கு நீ அழுதது. அதை கண் கொண்டு என்னால பாக்க முடியலை டி. என் முன்னாடி நீ அப்படி உயிரே உருகி போற மாதிரி அழுததை  என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியலை. மறுபடியும் உன்னை யாராவது எதாவது சொல்லி மறுபடி அழுதேன்னா நான் செத்தே போயிருவேன். நீ படிச்சு முடிச்ச அப்புறம் அம்மா அப்பாவை கூட்டிட்டு நாம நாலு பேரும் சொந்த காரங்களை பாக்காத ஊருக்கு போகலாம்னு நினைச்சேன்”
“அத்தான்”, என்று சொன்னவளுக்கு மறுபடியும் கண்ணீர் வந்தது அவன் காதலை நினைத்து.
“இப்ப தான அழாதேன்னு சொன்னேன்”
“இது சந்தோஷத்துல வர அழுகை, போங்க”
“போடி அழுமூஞ்சி”, என்று அவள் மூக்கை பிடித்து கொஞ்சினான் சூர்யா.
“கொஞ்சினது போதும். ரெண்டாவது என்ன காரணம்னு சொல்லுங்க”
“ரெண்டாவது காரணம் என்ன தெரியுமா? நான் ஆசையா முத்தம் கொடுக்க உன் கிட்ட வரேன்னா?”
“ஆமா அதுக்கென்ன? எனக்கு வாய் எல்லாம் வலிச்சு போயிருது தெரியுமா? இதுல கடிச்சு வேற வச்சிருதீங்க? இதுல  என்ன காரணம் இருக்கு?”
“முழுசா கேளு டார்லிங்”
“ஹ்ம்ம்”
“அப்படி கிட்ட வந்து கிஸ் பண்றேனா? அப்ப எனக்கு என்னன்னவோ தோணுது. என்னையே என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை. அதனால தான் நீ படிச்சு முடிகிற வரைக்கும் ஹாஸ்டல்ல இருக்கட்டும்னு நினைச்சேன். நான் சொல்ல வரது புரியுதா?”, என்று கேட்டான் சூர்யா.
“புரியுது, ஆனா என்னனென்னவோன்னா என்ன? அது தான் புரியலை”, என்று அவனை பார்த்து அப்பாவியாக சொன்னாள் கலைமதி.
“என்னது புரியலையா? அட பாவி பொண்டாட்டி, முத்தம் அப்பறம் என்ன னு தெரியலையா டி?”
“முத்தமே தப்பு தான். ஆனா புருஷன் பொண்டாட்டிக்குள்ள தப்பு இல்லைனு காவ்யா சொன்னா. ஆனா என்னனென்னவோன்னா என்ன? அவ அன்னைக்கு எதோ பேசுனா? நான் முழிச்சேனா? அண்ணா கிட்ட கேளு. அவங்க சொல்லி தருவாங்க. அண்ணா ரொம்ப பாவம்னு சொன்னா”
அவளை எழுப்பி கட்டிலில் அவன் அருகே அமர வைத்தவன் “அட பாவி, உனக்கு அதுக்கப்புறம் என்ன நடக்கும்ன்னு விசயமே  தெரியாதா?”, என்று தலையில் கை வைத்து விட்டு அமர்ந்து  விட்டான்.
தித்திப்பு தொடரும்……

Advertisement