Advertisement

“என்ன மா சீக்கிரம் எழுந்துட்டியா?”
“ஆன். அத்தான். எந்திச்சுடீங்களா? நானும் இப்ப தான் எழுந்தேன். காபி தரவா?”
“ஹ்ம்ம் சரி. ஆனா கஷ்டமா இருந்தா சமையல் செய்ய வேண்டாம். வெளிய சாப்பிட்டுக்கலாம்”
“இல்லை இல்லை. கஷ்டம் எல்லாம் இல்லை. நான் செய்றேனே ப்ளீஸ்”
நேற்று போட்டிருந்த நைட்டியை மாற்றி  விட்டு, வேறு ஒன்றை அணிந்திருந்தாள். குளித்ததுக்கு அடையாளமாக தலையை சுற்றி துண்டை கட்டி இருந்தாள்.
நெற்றியில் வியர்வை படிய, முகத்தில் சிரிப்போடு தலையை சரித்து அவள் கேட்ட கேள்வியில் இல்லை வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும் அவனால்?
“சரி செய். நான் பிரஸ் பண்ணிட்டு வந்து காபி குடிக்கிறேன்”, என்ற படியே அறைக்குள் சென்று மறைந்தான்.
காபி போட்டு ஆற்றியவள், அவன் வந்ததும் அவன் கையில் கொடுத்து விட்டு சமையலை ஆரம்பித்தாள்.
எழு மணிக்கு சமையலை முடித்தவள், அவனுக்கும் அவளுக்கும் மதியத்துக்கு எடுத்து வைத்தாள்.
வேலையை முடித்து வெளியே வந்தவளை பார்த்து சிரித்த சூர்யா “முடிச்சிட்டியா?”, என்று கேட்டான்.
“முடிச்சிட்டேன் அத்தான். உங்களுக்கு மதியத்துக்கு அடைச்சிட்டேன். காலைல தோசை சுட்டு ஹாட்பாக்ஸ்ல வச்சிருக்கேன்”
“சரி கலை. நீ கிளம்பலையா?”
“இதோ போறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
சுடிதார் எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றவள் நைட்டியை மாற்றி, டாப்ஸை அணிந்தாள்.
அப்போது தான் நினைவு வந்தது அது கேதரிங் பேன்ட் என்று. ஈரத்துக்குள் வைத்து மாற்ற முடியாமல் திண்டாடியவள், “இந்த மாடலை எதுக்கு இந்த காவ்யா தச்சிட்டு வந்தா? வெளிய போய் மாத்துவோம். அத்தான் பேப்பர் தான படிக்கிறாங்க”, என்று நினைத்து கொண்டு வெளியே வந்து கட்டிலில் அமர்ந்து போட ஆரம்பித்தாள்.
அவள் உள்ளே போனதை கூட மறந்து, உள்ளே வந்து விட்டான் சூர்யா. நுழைந்தவனின் கண்ணில் பட்டது பளிச்சென்று இருந்த அவள் தொடை தான்.
வெண்ணையை குழைத்தது போல போல வழுவழு வென்று இருந்த இடத்தை பார்த்து பிரம்மித்து விட்டான்.
அப்போது தான் ஏதோ நிழலாட தலையை நிமிர்ந்து பார்த்தாள் கலைமதி.
அடுத்த நிமிடம் “ஐயையோ”, என்று கூவி கொண்டே அருகில் இருந்த போர்வையை எடுத்து மூடி விட்டாள் கலை.
“நான் தெரியாம வந்துட்டேன் கலை. சாரி”, என்றான் சூர்யா.
“ஹ்ம்ம் பரவால்லன்னா  சொல்ல முடியும்?”, என்று நினைத்து கொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
அவளிடம் இருந்து பதில் வராது என்று அறிந்து கதவை மூடி விட்டு சென்று விட்டான்.
“பாத்துட்டானோ? பாத்துட்டானோ?”, என்று நினைத்து செக்க சிவந்து போனாள் மதி.
வெளியே போய் சோபாவில் விழுந்தவனுக்கு மனம் எல்லாம் அவன் பார்த்த இடமே நினைவில் வந்தது.
“அப்பா என்னா கலரு? தொட்டு பாத்தா எவ்வளவு மென்மையா இருக்கும்?”, என்று நினைவே அவனை விதிர் விதிர்க்க வைத்தது.
அவன் காலை பார்த்தான். அங்கே முடி படர்ந்திருந்தது. “அவளோட கால் எவ்வளவு வழு வழுன்னு இருக்கு. எனக்கும் இருக்கே கரடி மாதிரி”, என்று நினைத்து “ச்சி எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிறேன்?”, என்று நினைத்து நினைவுகளை வேறு பக்கம் திருப்ப முயன்றான். ஆனால் அதுவோ போவேனா என்று அடம் பிடித்தது.
கட கட என்று பேன்ட்டை போட்டவளுக்கு எப்படி அவன் முகத்தை பார்க்க என்று தயக்கமாக இருந்தது.
“சித்தி எவனை மயக்க போறன்னு கேக்குற மாதிரி, நான் வேணும்னே செஞ்சேன்னு தப்பா நினைப்பானோ?”, என்று நினைத்து தவித்து போனாள்.
தயக்கத்தை உதறி வெளியே வந்தவள் அவன் முன்பு போய் தலை குனிந்த படியே நின்று “பாத்ரூம்ல ஈரமா இருந்தது அத்தான். அதான் உள்ள வச்சு மாத்தினேன் சாரி”, என்று சொல்லி விட்டு கிட்சன் உள்ளே ஓடி விட்டாள்.
சூர்யா இதழ்களில் சிரிப்பு தவழ்ந்தது. “மறக்கணும்னு நினைச்சா இவளே விட மாட்டா போல?”, என்று நினைத்து கொண்டு குளிக்க சென்றான்.
அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது, இவள் தோசையை விழுங்கி கொண்டிருந்தாள்.
அவனை பார்த்ததும் “கிளம்பலாமா அத்தான்?”, என்று எழுந்தவளை “இன்னொரு தோசை சாப்பிடு. நேரம் ஆகலை”, என்று உக்கார சொன்னான்.
“நீங்க சாப்பிடலையா?”
“உன்னை விட்டுட்டு வந்து சாப்பிட்டுக்குறேன்”
“நான் வேணா தனியா போய்க்கவா?”
“காலேஜ் வரைக்கும் வரலை. ஆனா பஸ் ஸ்டாண்ட்ல விடுறேன். போயிருவன்னா சொல்லு. இல்லைன்னா காலேஜ்லே விடுறேன்”
“இல்லை இல்லை நீங்க பஸ் ஏத்தி விடுங்க போதும்”
“சரி சாப்பிடு”, என்று சொல்லி விட்டு தன் பைக்கை வெளியே எடுக்க சென்றான்.
பேகை எடுத்து கொண்டு, வீட்டு சாவியையும் அதன் அருகில் இருந்த அவனுடைய பர்ஸையும் எடுத்து கொண்டு வீட்டை பூட்டி  விட்டு வெளியே வந்த மதி திகைத்தாள். 
“இவன் என்ன காரை எடுக்காம வண்டியை எடுத்து நிப்பாட்டிருக்கான்?”, என்று நினைத்து கொண்டு “என்ன அத்தான் வண்டியை எடுத்துட்டீங்க? கார் எடுக்கலையா?”, என்று கேட்டு உதட்டை கடித்து கொண்டாள்.
“காருக்காக அலையுறேன்னு சொல்லிருவானோ?”, என்று பயந்தாள்.
“நான் ஆபிஸ்க்கு வண்டில தான் மதி போவேன். அன்னைக்கு உன்னை கூப்பிட, நேத்து அம்மா அப்பா ஊருக்கு போறேன்னு சொன்னதுனால தான் காரை எடுத்தேன். வா ஏறு”
“கேட் பூட்டவா?”
“உள்ள கதவை பூட்டிட்டல்ல? அது போதும். நான் இப்ப வந்துருவேன்ல? நான் பாத்துக்குறேன். சும்மா கொண்டி மட்டும் போடு”
“ஹ்ம்ம் சரி. இந்தாங்க சாவி, பர்ஸ்”
“தேங்க்ஸ்”, என்று அதை வாங்கி சட்டை பையினுள் போட்டவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
“எப்படி உக்கார?”, என்று வியர்த்து போனாள் மதி. “முன்ன பின்ன செத்தா தான சுடுகாடு தெரியும்? யார் கூட இது வரைக்கும் பைக்ல போயிருக்கேன். இப்ப இவன் பின்னாடி உக்காந்து விழுந்து வைக்க போறேன். திட்ட போறான்”, என்று நினைத்தாள்.
“உக்காரு கலை”
“ஹ்ம்ம்”, என்ற படியே ஏறி அமர்ந்தாள்.
அவள் அமர்ந்தவுடன் வண்டியை எடுத்தான் சூர்யா. அடுத்த நொடி அவன் மீது போய் விழுந்தாள். “ஐயோ இப்ப திட்ட போறான்”, என்று நினைக்கும் போதே, “தோளை பிடிச்சுக்கோ கலை”, என்று சொல்லி விட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.
சிறு நடுக்கத்துடன் அவன் தோள் மீது கை வைத்தாள் மதி.
அவளை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டவன், “சாயங்காலம் நானே கூப்பிட வரேன் சரியா? நீ காலேஜ்லே நேத்தே மாதிரி நில்லு. அப்புறம் உன்னோட பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு ரிசப்ஷனுக்கு சொல்லிட்டு வரலாம்”, என்றான்.
“ஹ்ம்ம் சரிங்க அத்தான்”
“கலை பஸ் வந்துட்டு பாரு? உன் காலேஜ் சொல்லியே டிக்கட் எடு”
“சரி அத்தான் வரேன்”, என்ற படியே ஏறி கொண்டவள் உள்ளே போய் அமர்ந்ததும் தலையை திருப்பி அவனை பார்த்தாள்.
தன்னை அறியாமலே அவள் உதடுகள் புன்னகையையும், அவள் கைகள் சின்ன டாட்டாவையும் அவனுக்கு வழங்கின.
அவனும் சிரித்து கொண்டு அவளுக்கு கை ஆட்டினான்.
கிளாசில் போய் அமர்ந்தவுடனே ஆவலுடன் “நேத்து என்ன ஆச்சு?”, என்று கதை கேட்க ஆரம்பித்தாள் காவ்யா.
நடந்ததை கலைமதி சொன்னவுடன், “அப்பாடி அப்ப உன் புருஷன் உனக்கு மட்டும் தான். நீ நிம்மதியா இருக்கலாம். ஆனா நீ லூசு டி மதி”, என்றாள் காவ்யா.
“நான் என்ன செஞ்சேன் காவ்யா?”
“பின்ன, அண்ணா இன்னும் நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் காத்துட்டு இருக்கணும்னு சொல்லிருக்காங்க. நீ பேசாம நின்னுருக்க?”
“வேற என்ன செய்ய சொல்ற?”
“லூசு, எதுக்கு அவ்வளவு நாள் காத்துருக்கணும்னு கேட்டுருக்கலாம்ல?”
“என்னது????”
“என்ன இப்படி அதிர்ச்சியாகுற? சட்டு புட்டுன்னு, கட்டி புடிச்சு உம்மா கொடுக்காம, வாயை மூடிட்டு நின்னுருக்கா”
“ச்சி போடி., தப்பு தப்பா பேசுற”
“தப்பு தப்பா பேசுறேனா? நேரம் தான். என் கல்யாணத்துக்கு முன்னாடி வயித்தை தள்ளிட்டு வந்து நில்லு. அப்ப இருக்கு உனக்கு? இப்ப மட்டும் தப்பு இல்லையான்னு கேப்பேன்”
அவள் கையை கிள்ளிய மதி வெட்கத்துடன் சிரித்தாள்.
அன்று மாலையும் அவளை கூப்பிட வந்தான் சூர்யா. காவ்யா, வீட்டுக்கு போவதுக்கு  முன்பே அவள் வீட்டில் இருந்தார்கள் இருவரும். அதுக்கு பின் தான் காவ்யா சென்றாள்.
ஏற்கனவே அவளுக்கு விஷயம் தெரியும் ஆதலால் “ஹாய் அண்ணா”, என்ற படியே உள்ளே சென்றாள் காவ்யா.
முறை படி அவர்களை அழைத்து விட்டு அவர்கள் கொடுத்த காபியையும் குடித்து விட்டு வீட்டை நோக்கி பைக் சென்றது.
அடுத்து இரண்டு நாள்களில் ஊரில் இருந்து அனைவரும் ரிசப்ஷனுக்கு வந்து விட்டார்கள். அது சந்தோசமாக இருந்தாலும் கொலை வெறியுடன் தன்னை முறைக்கும் சித்தியையும், அவள் மகள் தேன் மொழியையும் பார்த்து இத்தனை நாள் இருந்த உற்சாகம் வடிந்தது போல உணர்ந்தாள் கலைமதி.
அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை படிக்க முயற்சி செய்து முடியாமல் “இவளுக்கு என்ன ஆச்சு?”, என்று யோசித்தான் சூர்யநாராயணன்.
தித்திப்பு தொடரும்……

Advertisement