Advertisement

“இவன் என்ன இப்படி கேக்குறான்?”, என்று நினைத்து கொண்டு “பிடிச்சிருக்கு. ஆனா ஏன் வேற மாதிரி?”, என்று கேட்டாள்.
“இந்த உலகத்துல, எல்லாரையும் விட உனக்கு நான் ஸ்பெஷலா இருக்கணும்னு நினைக்கிறேன் கலை. அதனால நான் கலைன்னு  கூப்பிடுறேன்”, என்றான்.
அவன் குரலில், அவன் வார்த்தைகளில் திகைத்து போய் அவனை பார்த்தாள் கலை மதி.
அவள் பார்வையை உணர்ந்து, “நான் உனக்கு ஸ்பெஷல் தான கலை? இல்லைனு சொல்லிறாத. நான் அப்படி தான் நினைச்சிட்டு இருக்கேன். என்ன அமைதியாகிட்ட? நான்  ஸ்பெஷல் இல்லையா?”, என்று கேட்டான்.
முகத்தை அவனுக்கு மறைத்து கொண்டு அந்த பக்கம் திரும்பியவள் “ஸ்பெஷல் தான்”, என்றாள்.
“அப்பாடி, நான் கூட அப்படி எல்லாம் இல்லையேன்னு சொல்லுவன்னு  நினைச்சேன்”, என்று சிரித்தான் சூர்யா.
“இவன் இப்படி எல்லாம் பேசாம இருந்தா நல்லா இருக்கும்”, என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தாள்.
“என்ன இவன் இப்படி எல்லாம் பேசுறான்னு நினைக்கிறியா?”, என்று கேட்டான் சூர்யா.
வாயை பிளந்து அவனை பார்த்தாள்  மதி.
அவள் பார்வையை உணர்ந்து, அவளை பார்த்து சிரித்தவன், “சரியா கண்டு புடிச்சிட்டேனா?”, என்று கேட்டான்.
வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள்.
“நான் ரொம்ப பேசுவேன் கலை. அம்மா என்னை வாயாடின்னு  தான் சொல்லுவாங்க. ரொம்ப கோப படுவேன். ஆனா தப்புன்னு தெரிஞ்சா மன்னிப்பு கேப்பேன். உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும் கலை”
குழப்பமாய் அவனை பார்த்தவள் “என்கிட்டயா? எதுக்கு? அதெல்லாம் வேண்டாம். நீங்க என்னை ஒண்ணுமே செய்யலையே”, என்றாள்.
“என்ன வேகமா எனக்கு சப்போர்ட் பண்ற? நான் கொடுத்து வச்சவன் தான்”, என்று சிரித்தவன் “நான் தப்பு செய்யலை தான். ஆனா என்னோட அம்மா பண்ணிருக்காங்க”, என்றான்.
“அத்தையா? அத்தையும் ஒண்ணுமே செய்யலையே. அவங்க எனக்கு அம்மா மாதிரி தெரியுறாங்க”
“அப்ப மாமியார், மருமக சண்டை வராது. நான் அதை சொல்லலை. நம்ம கல்யாணத்துல நடந்த தாப்பை சொன்னேன் கலை”
“எதுக்கு டா  என்னை கல்யாணம் பண்ணுணோம்னு நினைச்சு  பீல் பண்றானோ? அதுக்கு தான் இப்படி சொல்றானா? ஆனா நான் என்ன செய்ய?”, என்று யோசித்து கொண்டே அவனை பார்த்தாள்.
அவள் குழப்பத்தை உணர்ந்தவன், “அந்த நாய் எவனையோ லவ் பண்ணி கல்யாணம் அன்னைக்கு அவன் கூட ஓடி போயிட்டான்னா, அம்மா உடனே உன்னை, எனக்கு கட்டி வச்சிட்டாங்க. அப்ப உனக்கு எப்படி இருந்துருக்கும். என் அளவுக்கு, உனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு கூட இப்ப புரியாத வயசு. அதான் சாரி சொன்னேன்”, என்றான்.
அவன் வருந்துவது பொறுக்காமல் “அப்படி எல்லாம் இல்லை. அதை பத்தி பேச வேண்டாமே. அது முடிஞ்சு போனது”, என்று சொன்னாள் கலைமதி.
“சரி அது பேச வேண்டாம். நம்மளை பத்தி பேசுவோமா?”, என்று கேட்டு சிரித்தான்.
“இவன் ஏன்  சிரிக்கும் போது இவ்வளவு அழகா இருக்கான்?”, என்று நினைத்த மதி அதிர்ச்சியானாள். “நான் எதுக்கு இப்ப இப்படி அவனை ரசிச்சிட்டு  இருக்கேன்?”, என்று நினைத்து  கேள்விக்கு விடை தெரியாமல் யோசித்தாள்.
அவள் யோசனையை தடை செய்தது அவன் குரல்.
“நம்மளை பத்தி பேசுவோமான்னு கேட்டேன். நீ என்ன பதிலே பேசாம யோசிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டான் சூர்யா.
“ம்ம்”
“என்னை உனக்கு பிடிச்சிருக்கா கலை?”
கண்ணை உருட்டி அவனை பார்த்தாள்.
“பிடிச்சிருக்கான்னு தான கேட்டேன்? அதுக்கு ஏன் இப்படி முழிக்கிற? கண்ணு வெளிய வந்துற போகுது. சரி சாயங்காலம் இந்த கேள்விக்கு பதில் சொல்லு. உன் காலேஜ் வந்துடுச்சு”, என்றான்.
அப்போது தான் சுயவுணர்வுக்கே வந்தாள்.
“சாயங்காலமா? அப்ப இவனுக்கு என்ன சொல்லணும்?”, என்று யோசித்து கொண்டே கீழே இறங்கியவள் அவனை பார்த்து குனிந்து “தேங்க்ஸ்”, என்று சொன்னாள்.
அவளை பார்த்து சிரித்தவன், “தேங்க்ஸ் வேண்டாம். சாயங்காலம் பதில் வேணும். பை”, என்று சொல்லி விட்டு காரை திருப்பினான்.
அவன் கார் அங்கே இருந்து மறையும் வரை அங்கயே நின்றவள் அதன் பின் கிளாஸை நோக்கி நடந்தாள்.
கிளாஸில் போய் அமர்ந்த கலைமதியின், காதுகளில் சூர்யாவின்  குரலே ஒலித்து கொண்டிருந்தது.
அவன் புன்னகை கண் முன் வந்து இம்சித்தது.
“நான் ஏன் அவனை பத்தியே யோசிச்சிட்டு  இருக்கேன்?”, என்று யோசித்தே குழம்பி போனாள்.
அப்போது தான் வந்து சேர்ந்தாள் காவ்யா.
மதியை பார்த்ததும் ஓடி வந்து, அருகில் அமர்ந்தவள் “மதி மதி வந்துட்டியா? எப்படி இருக்க?”, என்று நெடு நாள்கள் கழித்து பார்ப்பது போல விசாரித்தாள்.
அவள் குரலில், தன்னுடைய சிந்தனைகளில் இருந்து வெளியே வந்த மதி “நேத்து தான காவ்யா பாத்தோம்? அதுக்குள்ள இப்படி கேக்குற?”, என்று கேட்டாள்.
“ஏன் கேக்க மாட்ட? நீ போனது புலிக்குகையா, சொர்க்க வாசலான்னு  தவிச்சு போய் வந்துருக்கேன். அவங்க வீட்ல யாரெல்லாம் இருக்கா? உன்னை நல்லா பாத்துக்கிட்டாங்களா? உங்க சித்தி மாதிரி திட்டினாங்களா? உன்னை எப்படி பாத்துக்கிட்டங்க? அதை விட உன்னோட  வீட்டுக்காரர் என்ன சொன்னார்? உன்கிட்ட அன்பா நடந்துக்கிட்டாரா? சொல்லு டி ப்ளீஸ்”
“எனக்கு  அம்மா இருந்தா, கல்யாணம் பண்ணி கொடுத்து புருசன் வீட்டுக்கு போய்ட்டு வரும் போது இப்படி தான் கேட்டுருப்பாங்க”,  என்று நினைத்து கொண்டே காவ்யாவை இமைக்காமல் பார்த்தாள் மதி.
“என்ன டி நான் கேட்டுட்டே இருக்கேன்? நீ என்னையே பாத்துட்டு இருக்க?”, என்று கேட்டாள் காவ்யா.
“எனக்கு இப்ப உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு காவ்யா”
“தயவு செஞ்சு அப்படி செஞ்சிறாத டி. எல்லாரும் நம்மளை தப்பா பேசுவாங்க. நீ பதில் சொல்லு. சந்தோசமா தான இருக்க? பிரச்சனை ஒண்ணும் இல்லைல?”
“நீ  எனக்கு  தோழியா  கிடைச்சதுக்கு, நான்  புண்ணியம்  பண்ணிருக்கணும்னு  அத்தான்  சொன்னாங்க  காவ்யா. அதை  தான்  நான்  இப்ப  நினைச்சேன்”
“போடி. அதை விடு. வீடு புடிச்சிருக்கா?”
“ரொம்ப பிடிச்சிருக்கு. அத்தையும், மாமாவும் அன்பா பாத்துக்குறாங்க. அதை விட அத்தான் ரொம்ப நல்லவங்க. நீ கவலை படாத”
“அத்தான்னு  சொன்ன  உடனே  உன்  முகம்  அப்படியே  பூ பூத்த மாதிரி இருக்கு. வேற  என்ன  சொன்னாங்க  உங்க  அத்தான்?”
“எதை  சொல்லணும்? எதை  சொல்ல  கூடாதுன்னு  தெரியலையே”,  என்று  முழித்து  விட்டு  வீட்டில்  நடந்தது  அனைத்தையும்  சொன்னாள்.
அவன்  குளித்து  விட்டு  துண்டுடன்  வந்ததை  மட்டும்  மறைத்தாள்  மதி.
“ரொம்ப  சந்தோசம்  டா  மதி. அழகான  வீடு, சூப்பர்  லைஃப். இது உனக்கு எப்பவும் சந்தோசத்தை கொடுக்கணும். ஆனா இப்படியா உன் மாமியார் கிட்ட போய் அழுவ. அவங்க என்ன என்ன நினைச்சாங்களோ?”
“என்ன, என்ன நினைச்சாங்கன்னா?”
“அதை உன் அத்தான் கிட்ட போய் கேளு. சரி இப்ப எப்படி வந்த?”
“அத்தான் தான் கார்ல விட்டாங்க. கல்யாணம் ஆனது இங்க யாருக்கு தெரிஞ்சாலும் பரவால்லயாம். காலேஜ்ல சொல்ல சொல்லிட்டாங்க. ரிசப்சன்க்கு கூப்பிட சொன்னாங்க”
“ஹ்ம்ம் அப்ப சந்தோசம். எதுக்கும் பத்திரிகை அடிச்ச உடனே சொல்லு. இல்லைனா கிண்டல் பண்ணுவாங்க. சரி வேற என்ன சொன்னாங்க?”
“ஆன்… உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் டி. அந்த பொண்ணு கல்யாணத்து அன்னைக்கு ஓடி போச்சுல்ல. அது யாரையோ லவ் பண்ணுச்சாம். அதுக்கு என்கிட்ட அத்தான் சாரி கேட்டாங்க”
“அண்ணா நல்லவங்களா தான் மதி இருக்காங்க. வேற என்ன சொன்னாங்க?”
“அவங்க மட்டும் என்னை கலைன்னு ஸ்பெஷலா கூப்பிடுவாங்களாம்”
“வாவ் சூப்பர். அப்புறம்?”
“அப்புறம் என்னை பிடிச்சிருக்கானு கேட்டாங்க”, என்று வெட்கத்துடன் சொன்னாள் மதி.
“ஹா ஹா. பாரு டா. சூப்பர் கேள்வி கேட்டுருக்காங்க. நீ என்ன பதில் சொன்ன?”
“ஒண்ணுமே சொல்லலை. அப்படியே பே ன்னு பாத்துட்டு நின்னேன்”
“லூசா நீ? பிடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டியது தான?”
“நான் எப்படி காவ்யா சொல்ல முடியும்? எனக்கு கூச்சமா இருக்கு”
“ஹ்ம்ம் அதுக்கு இன்னொரு வாயா கடன் வாங்க முடியும்? நல்ல சான்ஸ் சொதப்பிருக்க. சொல்லிருக்கலாம்ல?”
“சாயங்காலம் தான் காவ்யா பதில் சொல்ல சொன்னாங்க டி”
“வாரே வா. அப்புறம் என்ன. செம. அப்ப சொல்லிரு. பிடிச்சிருக்குன்னு. பிடிச்சிருக்கு தான?”
“பிடிச்சிருக்கு”, என்று வெட்கத்துடன் சிரித்தாள் மதி.
அவள்  வெட்க படுவதை ரசித்து பார்த்த காவ்யா, “நீ வெட்க படுறதை பாத்தா அவ்வளவு குயூட்டா இருக்கு டி. அண்ணா பாவம்”, என்றாள்.
“எதுக்கு?”
“ஹ்ம்ம் அதை அவங்ககிட்டயே கேளு”
“நீ ஏன் புரியாத மாதிரியே பேசுற டி லூசு”
“லூசா? ஆமா டி நான் லூசு தான். எல்லாம் தெரிஞ்ச நான் லூசு. ஒன்னும் தெரியாத நீ அறிவாளி தான்”
“ஓய் யாருக்கு ஒன்னும் தெரியாது? நான் காலேஜ் பர்ஸ்ட்டாக்கும்”
“ரொம்ப பெருமை பீத்தாத. எனக்கு தெரிஞ்சது உனக்கு தெரியுமாடி மதி”
“தெரியுமே? எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவேன்”
“கிழிச்ச? லவ் எப்படி பண்ணனும்னு தெரியுமாடி? எப்படி கிஸ் அடிக்கணும்னு தெரியுமா? கட்டி பிடிக்க தெரியுமா? அதுக்கு மேல மேட்டர்ன்னா என்னன்னு தெரியுமா டி? இப்ப சொல்லு நீ அறிவாளியா? நான் அறிவாளியா?”
“ச்சி காவ்யா தப்பு தப்பா பேசுற”
“கொன்னுருவேன். நீ பதில் சொல்லு. இதெல்லாம் தெரியுமா உனக்கு”
“தெரியும். ஆனா இதெல்லாம் தப்புன்னு தெரியும்”
“சரின்னு உனக்கு அண்ணா சொல்லி தருவாங்க. அந்த பங்கஜம் வந்துருச்சு, கிளாஸை கவனி. உனக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. எனக்கு இந்நேரம் பண்ணி வச்சிருந்தா, நான் எங்க எப்படி டூயட் பாடிட்டு இருந்துருப்பேன்”, என்று சொல்லி பெரு மூச்சு விட்டாள்.
“சும்மா இரு காவ்யா. இன்னைக்கு மேம் முக்கியமான பதினாறு மார்க் கேள்வி நடத்த போறேன்னு சொன்னாங்க. அது கண்டிப்பா டெஸ்டுக்கு வருமாம் கவனி”, என்று பாடத்தில் ஆழ்ந்தாள் மதி.
“மிஸ்டர் சூர்யா சார் உங்களுக்கு ஒரு ஸ்கூல் படிக்கிற பொண்ணை கட்டி வச்சிருக்காங்க. என்ன ஆக போறீங்களோ”, என்று சிரித்தாள் காவ்யா.
தித்திப்பு தொடரும்……

Advertisement