Advertisement

“உங்க முகத்தை எனக்கு காட்டிட்டே  தூங்குங்களேன்”, என்று கலக்கமாக ஒலித்தது கலையின் குரல். அந்த குரலில் இருந்த கலக்கத்தில் தன் உணர்வுகளை அனைத்தும் மறந்து விட்டு படக்கென்று திரும்பினான் சூர்யா.
“என்ன ஆச்சு டா?”, என்று கேட்டு கொண்டே அவள் தலையை வருடி விட்டான்.
“இல்லை என்னோட அம்மா முகம் எனக்கு தெரியாதா. இத்தனை நாள் உங்க முகத்தை பாத்துட்டு தூங்குவேன். கண்ணு முழிச்சா கூட உங்க முகம் தெரியும். உங்க பக்கத்துல படுத்துட்டு உங்க முகத்தை பாத்துட்டே இருக்குறது எனக்கு எங்க அம்மா கூட இருக்குற மாதிரி இருக்கு. அதான் அத்தான்”, என்று அவள் கூறிய அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்து தன் மார்பின் மீது போட்டு கொண்டான் சூர்யா.
அவனுடன் ஒண்டி கொண்டவளுக்கு எண்ணற்ற ஆறுதல் கிடைத்தது. அவள் கலக்கத்தை உணர்ந்த அவனும் அவளை அப்படியே தட்டி கொடுத்த படியே தூங்க வைத்தான். அவள் மீது கொண்டிருந்த மோகம் அவனை விட்டு விலகி சென்றிருந்தது. அம்மா என்ற வார்த்தையில் அவனை தாயாக்கி அவன் மனைவி அவனின் சேயானாள்.
எல்லை இல்லா காதல் மட்டுமே கொண்டு தன் மனைவியை அணைத்த படியே உறங்க ஆரம்பித்தான் சூர்யா.
காலையில் கண் விழிக்கும் போதும் அவள் அவன் நெஞ்சில் தான் முகம் புதைத்திருந்தாள். தான் எழுந்து சென்று விட்டால் அவள் கண் விழிக்கும் போது தன்னை காண முடியாமல் தவிப்பாள் என்று நினைத்து அவனும் அவளையே பார்த்த படி படுத்திருந்தான்.
சிறிது நேரத்திலே கண் விழித்த கலைமதியும் அவனை பார்த்து அழகாய் புன்னகைத்தாள். அவளை பார்த்து அவனும் சிரித்து கொண்டே “என்னோட மகாராணிக்கு விடிஞ்சிருச்சு போல?”, என்று கேட்டான்.
“முன்னாடியே முழிச்சிட்டீங்களா அத்தான்?”
“ம்ம்”
“அப்புறம் ஏன் எந்திக்கல?”
“கண் முழிச்ச அப்புறம் நீ என்னை தேட கூடாதுல்ல அதான்”, என்று சிரித்து விட்டு எழுந்து சென்று விட்டான்.
அவன் பதிலில் அப்படியே உறைந்து கிடந்தாள் கலைமதி. பல லட்சம் செலவு செய்து இந்த உலகத்திலே அழகான இடத்துக்கு அவளை கூட்டி சென்று உன்னை காதலிக்கிறேன் என்று அவன் கூறி இருந்தால் கூட அவளுக்கு சந்தோசம் கிடைத்திருக்காது. ஆனால் அதை விட தெளிவாக காதலை சொல்லி சென்ற அவன் போன திசையையே பார்த்து கொண்டு படுத்திருந்தாள்.
புரிந்து கொள்ளும் உறவுகள் கிடைத்தால் வரம் என்று அவள் அறிந்ததே. ஆனால் அந்த சொந்தத்தை அவன் மூலமாக தான் அனுபவிக்கிறாள் மதி.
கணவன் என்று அல்லாமல் காதலனாகவே அவள் மனதில் பச்சை குத்தியது போல பதிந்து போனான் சூர்யா.
அவனை பற்றியே நினைத்து கொண்டு மூடி இருந்த போர்வையை எடுத்து மடித்து வைத்தாள். அவளுடைய உதடுகள் புன்னகையை தாங்கி இருந்தது.
“என்ன இன்னைக்கு மேடம் ஒரே சிரிப்பழகியா இருக்காங்க?”, என்று கேட்டு கொண்டே குளித்து முடித்து துண்டுடன் வந்தான் சூர்யா.
அவனை திரும்பி பார்த்தவள், அவனுடைய  தோற்றத்தில் வெட்கம் கொண்டு தலை குனிந்து கொண்டாள். அவள் வெட்கத்தை ரசித்தவன் “என்ன டி பதில் சொல்ல மாட்டியா?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
“பாத் ரூம்குள்ளேயே டிரெஸ் மாத்திட்டு வரலாம்ல அத்தான்?”, என்று ஒரு வழியாக தயக்கத்தை உதறி கூறி விட்டாள்.
வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “எதுக்காம்?”, என்று கேட்டான்.
“என்ன எதுக்கு? அடுத்தவங்க முன்னடியா டிரெஸ் மாத்துவாங்க? நான்லாம் உள்ள வச்சு தான மாத்துறேன்?”, என்று அவள் கேள்வி கேட்டு முடிக்கும் முன் அவளை நெருங்கி வந்து விட்டான் சூர்யா.
தோற்றதை பார்த்தே தடுமாறி நின்றவள் அருகில் வந்ததும் திகைத்து விட்டாள். ஆங்காங்கே நீர்துளிகளுடன் நின்றிருந்தான் சூர்யா.
அங்கிருந்து நகர பார்த்தவளின் கையை பிடித்தான். “அத்தான் கையை விடுங்க”, என்று பலவீனமாக ஒலித்தது அவளுடைய குரல்.
“நீ கேட்ட கேள்விக்கு பதில் வேண்டாமா?”
“பதில் வேண்டாம். இனி உள்ள வச்சு மாத்திட்டு வாங்க”
“எதுக்கு?”
“எனக்கு என்னவோ போல இருக்கு”
“இங்க பாரு. நான் என் பொண்டாட்டி முன்னாடி ஒன்னும் இல்லாம கூட இருப்பேனே ஒளிஞ்சு அவளுக்கு தெரியாம டிரெஸ் எல்லாம் மாத்த மாட்டேன் புரிஞ்சுதா? அது மட்டும் இல்லாம நீயும் அப்படி செஞ்சா எனக்கு டபுள் சந்தோசம் தான்”, என்று கூறி உல்லாசமாக சிரித்தான்.
“ஆன்”, என்று வாயை பிளந்த படி நின்றாள் மதி.
“கண் முன்னாடி கும்முன்னு இப்படி போஸ் கொடுத்துட்டு நின்னா நான் எப்படி சும்மா இருப்பேன். இன்னைக்கு கொடுக்க வேண்டிய முத்தத்தை கொடுக்கவா?”, என்று கேட்டான்.
“ம்ம் அப்புறம் கொடுங்க. இப்ப பள்ளு விளக்கலை”, என்று தயக்கத்துடன் கூறினாள் கலைமதி.
“ஏய் நான் விளக்கிட்டேன் டி”
“உங்களை சொல்லலை. என்னை சொன்னேன்”
“பரவால்ல. அது நான் தான் கவலை படணும்”, என்று கூறி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அதன் பின் அவனிடம் இருந்து தப்பித்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.
அப்போதும் கலைமதியை முறைத்த படியே தான் இருந்தாள் வள்ளி. அதை கண்டு மனம் கலங்கினாலும் முந்தைய நாள் சூர்யா  சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் நினைவில் கொண்டு வந்து வள்ளியை கண்டு கொள்ளாமல் மங்களம் அருகில் சென்றாள்.
“வா டா மதி. காபி குடிக்கிறியா?”, என்று கேட்டாள் மங்களம்.
“வேண்டாம் அத்தை. அப்புறம்  குடிச்சிக்கிறேன். எதாவது செய்யட்டுமா?”
“ஹ்ம்ம் பூண்டு மட்டும் உரிச்சு தரியா? காலைல மட்டும் தான் சாப்பாடு செய்யணும். மதியம் ஹோட்டல்ல வாங்கிக்கலாம். நைட் மண்டபத்துல சாப்பிட்டுரலாம் சரியா?”
“சரிங்க அத்தை”
“அப்புறம் மதி, பியூட்டி பார்லர்ல இருந்து ஆள் வர சொல்லணும். நான் சொல்லிரவா?”
“அதெல்லாம் வேண்டாம் அத்தை. தேவை இல்லாத செலவு. என் பிரண்ட் காவ்யா வருவா. வீட்லயே பண்ணிக்கிறேன்”
“சரி மா. எனக்குமே வீட்ல அலங்காரம் பண்ணுனா தான் பிடிக்கும்.  உன் கல்யாணத்தன்னைக்கு அவ்வளவு அழகா இருந்த. ஜாக்கெட் போட்டு பாத்த தான? சரியா இருக்கா?”
அதை போடும் போது அவனை வெளியே போக சொல்லி கெஞ்சியது நினைவில் வந்தது. “நான் பாக்க கூடாதா?”, சிரித்து கொண்டே வெளியே சென்ற சூர்யா முகம் மின்னி மறைந்தது. வந்த வெட்கத்தை மறைத்து கொண்டு “சரியா இருந்தது அத்தை”, என்றாள்.
“என்ன மா உன் மருமக முகம் ஒரு மார்க்கமா இருக்கு?”, என்று கேட்டு கொண்டே வந்து வம்பிழுத்தான் சூர்யா.
“அவளை ஏண்டா ஓட்டுற?”, என்று கேட்டு கொண்டே அந்த பக்கம் எதையோ எடுக்க சென்றாள் மங்களம்.
“நேத்து உன் மேல படுத்த சீன நினைச்சு தான வெக்க பட்ட?”, என்று அவளிடம் கேட்டான் சூர்யா.
“அது சேலை கட்டும் போது உங்களை வெளிய போக சொன்னதை  தான் நினைச்சேன்”, என்று உளறி நாக்கை கடித்து கொண்டாள் மதி.
“ஆக மொத்தம் உன் புருசனோட நினைப்புல தான் சுத்திகிட்டு இருக்கன்னு சொல்லு”. என்று அவளை பார்த்து சிரித்தான். பதிலுக்கு அவளும் வெட்கத்துடன் சிரித்தாள்.
தூரத்தில் இருந்து இதை பார்த்து கொண்டிருந்த வள்ளிக்கு பற்றி கொண்டு வந்தது.
அவள் வயிற்றெரிச்சலை இன்னும் கூட்டவென்றே கலைமதியை நோக்கி சென்றார் அவளுடைய அப்பா சண்முகம்.
“மதி மா. இந்தா டா உன் அம்மாவோட நகை. அன்னைக்கே கொடுக்க நினைச்சேன். முடியலை. இந்தா வாங்கிக்கோ”, என்று கூறி ஒரு பையை நீட்டினார்.
அதை பார்த்ததும் அப்படியே சூர்யா பின்னாக மறைந்து நின்றாள் மதி.
சூர்யா முன்னால் எதையும் சொல்ல முடியாமல் பல்லை கடித்து கொண்டு நின்றாள் வள்ளி.
“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க மாமா. கலைக்கு இந்த நகை வேண்டாம்”, என்றான் சூர்யா.
“நீ சும்மா இரு சூர்யா. இது அவளோட அம்மா நகை. அவளுக்கு தான் சீரா போகணும்”
“அம்மாவோட நகை பொண்ணுக்கு தான் சீரா போகணும். ஆனா கல்யாணம் முடிஞ்சு இத்தனை நான் கொடுக்காம இப்ப கொடுக்க என்ன காரணம் மாமா? இத்தனை நாள் கொடுக்க கூடாதுன்னு உங்களை தடுத்து நிறுத்துனவங்க இப்ப தடுக்கலையா?”
“யாருப்பா என்னை தடுத்து நிறுத்த முடியும்? இது அவளுக்கு தான் போய் சேரனும்”
“திடிர்னு நீங்க வீரனானது அதிசயம் தான். அப்பறம் அவளோட அம்மாவே உயிரோட இல்லை. அந்த நகையை மட்டும் வச்சு என்ன செய்ய போறா”
“சூர்யா”
“விட்டுருங்க மாமா. என்னோட பொண்டாட்டிக்கு எனக்கு நகை எடுத்து கொடுக்க தெரியும். அம்மா கிட்ட நேத்தே நான் வாங்கி கொடுத்துட்டேன். அதனால இதை நீங்களே வச்சிக்கோங்க”
“மதி வாங்கிப்பா தம்பி”
“என் பொண்டாட்டி நான் வாங்கி கொடுத்ததை மட்டும் தான் போடுவா”
“மதிமா சூர்யா தம்பி தான் கோபத்துல பேசுது. நீயாவது இதை வாங்கிட்டு அவருக்கு எடுத்து சொல்லு மா”
அவனை விட்டு நகர்ந்து முன்னே வந்தவள் கழுத்தில் கையை வைத்து அவன் கட்டிய தாலியை வெளியே எடுத்தாள்.
“அத்தான் கட்டின இந்த தாலியை விட உயர்ந்த நகை எதுவுமே எனக்கு இல்லை பா.  எனக்கு வேற நகை மேல ஆசையும் இல்லை. அப்படியே போட்டுக்கணும்னாலும் அது என்னோட அத்தான் வாங்கி கொடுத்ததா தான் இருக்கணும். இதெல்லாம் வேண்டாம். தம்பியோட படிப்பு செலவுக்கு இதை வச்சிக்கோங்க”, என்று சொன்னாள் கலைமதி.
சண்முகம் தான் சோகமாக முகத்தை வைத்திருந்தார். தன் மகள் தன்னை விட்டு வெகு தொலைவில் சென்று விட்டாள் என்று புரிந்தது அவருக்கு. 
“பெற்ற தகப்பனாக என்றைக்கு அவளுக்கு எதுவும் செய்ய வில்லையோ அப்போதே நீ உன் மகளை இழந்து விட்டாய்”, என்று எடுத்துரைத்தது மனசாட்சி. 
“எல்லாத்துக்கும் பதிலா அன்னைக்கு கட்டாய படுத்தியாவது மதியை சூர்யாவுக்கு கட்டி வச்சிட்டேன். அதனால தான் அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு. இனி என் பொண்ணு ரொம்ப சந்தோசமா தான் இருப்பா. அதுவே போதும்”, என்று நினைத்து மனதை அமைதி படுத்தி கொண்டார்.
மங்களத்திடம் சென்று நேற்று மதிக்காக வாங்கிய நகைகளை எடுத்து வந்து கொடுத்தான். நொடிக்கொருதரம் அவளை கட்டி அணைக்கவும் அவன் மறக்க வில்லை.
சும்மாவே அவளை தொட வாய்ப்பு தேடி அலைபவன் இன்று அவன் கட்டிய தாலியை கவுரவ  படுத்தினால் சும்மா இருப்பானா? முத்தத்தின் எண்ணிக்கை தான் அதிகமாகி கொண்டே போனது.
“உன்னை கூட்டிட்டு தான் போகணும்னு நினைச்சேன் மதி. அதுக்குள்ள தான் பிரச்சனை வந்துட்டு. அதான்  நானே எடுத்துட்டேன். உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று அவள் கழுத்தில் நெக்லஸை வைத்து கொண்டே கேட்டான்.
“சூப்பரா செலெக்ட் பண்ணிருக்கீங்க அத்தான். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களை நேத்து அம்மானு சொன்னேன்ல அத்தான். எனக்கு இனி அப்பாவும் நீங்க தான்”, என்று சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அதில் நெகிழ்ந்தவன் அவள் மனநிலையை மாற்ற எண்ணி “ஏய் நான் தான் பொசுக்கு பொசுக்குன்னு உன்னை ஒட்டி கிட்டே இருப்பேன். இப்ப நீயும் அப்படி பண்ற?”, என்று கிண்டல் அடித்தான்.
“உங்க கூட சேந்து தான் நானும் இப்படி ஆகிட்டேன். எனக்கும் உங்களை ஒட்டிகிட்டே இருக்கணும்  போல தான் இருக்கு”
“ஹா ஹா, ஆனா கலை இப்படி ஒட்டுனா நல்லாவே இல்லை. நேத்து மாதிரி உன் மேலே விழுந்தா தான் நல்லா இருக்கு. அப்படி ஒட்டிக்கலாமா?”, என்று விஷமமாக கேட்டான் சூர்யா.
“எதுக்கு அப்புறம்  குளிக்க ஓடுறதுக்கா?”, என்று கேட்டு அவனுக்கு பல்ப் கொடுத்தான் கலைமதி.
“என்னனு தெரியாமலே இந்த ஓட்டு ஓட்டுறா. நேத்து நடந்தது தெரிஞ்சிருந்தா….”, என்று நினைத்து மனதுக்குள் அலறினான் சூர்யா.
அடுத்து இவர்களின் ரொமான்சுக்கு இடையூறாக காவ்யா வந்து விட்டாள்.
காவ்யாவுடன் ஒட்டி கொண்ட மதியின் பார்வை மட்டும் அடிக்கடி அவள் கணவனையே வட்டம் இட்டது.
“அட பாவி எங்க அம்மா அப்பாவை நேரா மண்டபத்துக்கு வர சொல்லிட்டு உனக்கு துணைக்கு நான் வந்தா நீ என்னை கண்டுக்காம அண்ணாவை சைட் அடிச்சிட்டு இருக்க. தேறிட்ட டி. சைட் அடிக்க மட்டும் தான் சொல்லி தந்தாங்களா? இல்லை மத்தது எல்லாமா?”, என்று கிண்டல் அடித்தாள் காவ்யா.
“சும்மா இரு காவ்யா”, என்று சிணுங்கி வெட்க பட்டாள் மதி. மதியின் அழகான புன்னகையில் காவ்யா மனம் சந்தோஷத்தில் திளைத்தது. அவளை இப்படி பார்க்க தான காவ்யா ஆசை பட்டாள். அது நடந்ததில் காவ்யா முகமும் மலர்ந்தது.
“சும்மா இருன்னு என்னை சொல்றியா டி மதி? உன் பார்வையை  வச்சே அண்ணனை சுரண்டி எடுத்துருவ போல? செம லவ் சீனா இருக்கு. நான் முன்னாடி சொன்னது தான் நடக்க போகுது. என் கல்யாணத்துக்கு நீ வயித்தை தள்ளிட்டு தான் வர போற பாரு”, என்று சிரித்த  காவ்யா அதன் பின் மதியை ஓட்டி கொண்டே தான் இருந்தாள்.
தித்திப்பு தொடரும்……

Advertisement