Advertisement

அத்தியாயம் 9
உன் பெயர் ஒரு கவிதை
என்று எண்ணினேன் அது
தவறு, அது ஒரு
அழகான காவியம் அன்பே!!!

தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சூர்யாவை பார்த்த கலைமதி  “அத்தான் என்ன ஆச்சு?”, என்று பதறினாள்.
“என்ன ஆச்சா? இனி எப்ப ஆக? இவளுக்கு எப்ப விசயம் புரிஞ்சு? ஹ்ம்ம். விளங்கிரும்”, என்று நினைத்து கொண்டு  “ஒன்னும் ஆகல டா. சும்மா தான்”, என்று அவளை பார்த்து சிரித்தான்.
“இல்ல நீங்க பொய் சொல்றீங்க? என்னது தெரியாதான்னு கேட்டீங்க? காவ்யா ஏன் உங்க கிட்ட கேக்க சொன்னா?”, என்று கலக்கமான குரலில் கேட்டாள் கலைமதி.
அவள் கையை பிடித்து இழுத்து அவன் அருகில் அமர செய்தவன் “கலை, இப்ப எதுக்கு உன் முகம் சோகமா மாறுது?”, என்று கனிவுடன் கேட்டான்.
“நீங்க ஏதோ கேட்டீங்கள்ல? எனக்கு அது தெரியலைனு சொன்னா கோப படுவீங்களா? நீங்க பேசலைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும் அத்தான்”
“லூசு. அப்படி எல்லாம் இல்லை மா”
“பொய் சொல்றீங்க. இப்ப கூட கோபமா இருக்கீங்க. அதனால தான் என்கிட்ட ஒழுங்கா பேச மாட்டுக்கீங்க. என்ன கேக்க வந்தீங்கன்னும் சொல்ல மாட்டுக்கீங்க?”
“உன்கிட்ட பேசாம நான் யார் கிட்ட பேச கலை? நான் கேக்க வந்தது கல்யாணம் அப்புறம் புருசனும் பொண்டாட்டியும் வாழ்ற வாழ்க்கையை பத்தி. அதை பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாதா?”
“அதை பத்தி யோசிக்கிறது தப்புனு தெரியும். ஒரு பொண்ணும், பையனும் பக்கத்துல இருந்தாலே தப்புனு எங்க சித்தி சொன்னதுல புரிஞ்சிருக்கேன். ஆனா கல்யாணம் ஆனா அது சரினு தெரியும்”, என்று முகத்தில் சிறு சிவப்போடு  சொன்னவள் “படத்துல கிஸ் பண்றது, கட்டி பிடிக்கிறது எல்லாம் பாத்துருக்கேன். அது பாக்கும் போது என்னவோ போல இருக்கும். ஆனா சித்தி டிவி பாக்க விட மாட்டாங்க. அதனால அதுவும் அதிகம் தெரியாது. அப்புறம்  குழந்தை பிறக்குறதை பத்தி ஏதாவது நம்ம ஊர்ல பேசுவாங்க. புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் இடையில என்ன நடக்கும்னு தெரியாது. ஆனா எதுவோ ஒன்னு வெளிய தெரியாத விசயம் நடக்கும்னு தெரியும்”, என்று கூறி விட்டு தலை குனிந்து கொண்டாள்.
“வாறே வா. சேம குட்டி மா. உனக்கு எதுவோ ஒன்னு நடக்கும்னு தெரிஞ்சிருக்குறதே போதும். அப்புறம் ரொமான்ஸ் பத்தியும்  தெரிஞ்சிருக்கு. இது போதாதா? கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுங்களுக்கு  இவ்வளவு தான் தெரிஞ்சிருக்கணும். மத்தது எல்லாம் புருசன் தான் சொல்லி தரணும். சமத்து டி நீ”
“அப்படியா?”
“ஆமா கலை”
“அப்ப சொல்லி தாங்க”, என்று அசால்டாக சொன்னாள் கலைமதி.
“என்னது???”, என்று அதிர்ச்சியாக கேட்டான் சூர்யா.
“நீங்க தான தெரியாலைன்னா புருசன் சொல்லி தரணும்னு சொன்னீங்க. அதான் சொல்லி தாங்கன்னு  சொல்றேன்”
“படுத்தாத டி லட்டு. அதெல்லாம் இப்ப சொல்லி கொடுக்க கூடாது”
“அப்புறம் எப்ப சொல்லி தரனும். நமக்கு தான் கல்யாணம் ஆகிட்டே. அப்புறம் கட்டி புடிச்சிருக்கோம். முத்தமும் கொடுத்தீங்க. அப்பறம் என்ன?”
“அதெல்லாம் செய்யலாம். இது இப்ப செய்ய கூடாது கலை”
“ஓ அப்ப ரிசப்ஷன்  முடிஞ்சு சொல்லி தருவீங்களா?”
“அப்ப இல்லை. நீ படிச்சு முடிச்ச பிறகு தான்”
“பாத்தீங்களா? புருசன் தான் பொண்டாட்டிக்கு சொல்லி கொடுக்கணும்னு சொன்னீங்க. இப்ப மாட்டேன்னு  சொல்றீங்க. அப்ப என்னை உங்க பொண்டாட்டியா நினைக்கலை தான?”
“ஏய் செல்லம், அப்படி எல்லாம் இல்லை டி. இப்படி பேசியே மனுசனை மூட் ஏத்தாத. நானே இன்னும் நீ படிச்சு முடிக்க மூணு செமஸ்டர் இருக்கேன்னு  கவலைல இருக்கேன்”
“படிப்புக்கும்  அதுக்கும் என்ன சம்பந்தம் அத்தான்?”
“சரியான கேள்வி தான். ஆனா நிலைமை அப்படி தான இருக்கு”
“என்ன நிலைமை? நான் படிச்சு முடிச்சதும் வேலைக்கு போவேன்னு  சொன்னது கோபமா? ஹாஸ்டல் போறேன்னு  சொன்னப்ப போ னு சொன்ன மாதிரி வேலைக்கு போறேன்னு  சொன்னதுக்கு படிச்சிட்டு வேலைக்கு போன்னு  என்னை  விரட்ட பாக்குறீங்களா உங்களை விட்டு?”
“அடியே ஜாங்கிரி”, என்று கொஞ்சி கொண்டே அவளை இழுத்து தன் மடி  மீது அமர வைத்தான் சூர்யா.
“அத்தான் என்ன பண்றீங்க, விடுங்க”, என்று இறங்க பார்த்தாள் கலைமதி.
“நீ தான சொல்லி தர சொன்ன? இப்ப விடுங்கனு சொல்ற?”
“சொல்லி தர சொன்னது இது வா?”
“ஹா ஹா அது இது இல்லை தான். ஆனா இப்படி தான் ஆரம்பிக்கணும்”
“ஓ அப்படியா? அப்ப சரி சொல்லுங்க”, என்று கூறி கொண்டே அவன் மடியில் அழுத்தி அமர்ந்தாள்.
அடுத்த நொடி  ஆ என்று அலறியவன் “இப்படியா டி உக்காருவ? ஒரு நிமிசத்துல வலி உயிர் போயிட்டு”, என்று சொல்லி அவளை சரியாக அமர வைத்தான்.
“நான் ஒன்னும்  அவ்வளவு குண்டு கிடையாது. என் வெயிட் பட்டு  உங்களுக்கு வலிக்குதா? போங்க அத்தான்”
“உன் வெயிட் பட்டு ஏன் வலிக்க போகுது. வெயிட் பட்ட இடம் தானே பிரச்சனை”, என்று நினைத்து கொண்டு “அதை விடு கலை. ஆமா  நீ இப்படி எல்லாம் பேசுவியா கலை?”, என்று கேட்டான்.
“உங்க கிட்ட மட்டும் தான் இப்படி. ஏன்னு தெரியலை. சரி  சொல்லி கொடுங்க”
“நீ இன்னைக்கு என்னை தெரிச்சு ஓட  விடனும் அப்படிங்குற முடிவுல  தான் இருக்க போல? ப்ளீஸ்  குட்டி மா. உன் அத்தான் தாங்க மாட்டேன்”
“இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?”
“அடியே, சொன்னா உனக்கு தான் டி பிரச்சனை  பரவால்லயா?”
“எனக்கா? எனக்கு  எதுக்கு பிரச்சனை? புருசன் பொண்டாட்டி சேர்ந்து வாழ்ந்தா நல்லது தான?”
“மக்கு பொண்டாட்டி அது சரி தான். ஆனா சேந்து வாழ்ந்தா அடுத்து என்ன ஆகும்னு தெரியுமா?”
“என்ன ஆகும்?”
“சேந்து வாழ்ந்தா உனக்கும் எனக்கும் பாப்பா வந்துரும் பரவால்லயா?”
“இது ஒரு பிரச்சனையா? கல்யாணம் ஆனா பாப்பா பிறக்கும் தான? ஐ ஜாலி. எனக்கும் பிறக்கும். எனக்கு கிடைக்காத அம்மா பாசமும், அப்பா பாசமும் நம்ம பிள்ளைக்கு கிடைக்கும்ல?”, என்று கூறியவளின் குரலில் உண்மையான எதிர்பார்ப்பு இருந்தது.
அப்படியே அவளை இறுக்கி கொண்டவன் “குட்டி பாப்பா வரது நல்ல விசயம் தான். நாம ரெண்டு பேரும் பாப்பாவை  நல்லா வளக்கலாம் தான். ஆனா நீயே குட்டி பாப்பாவா இருக்கியே கலை?”, என்றான்.
அவன் இறுக்கியதில்  அவன் நெஞ்சில் தலை சாய்த்தவள் “நான் ஒண்ணும் குட்டி பாப்பா இல்லை. பெரிய பொண்ணு ஆகிட்டேன். அதனால தான கல்யாணம் செஞ்சி வச்சாங்க”, என்று கேட்டாள்.
“ம்ம் பெரிய பொண்ணு தான். எனக்கும் அப்படி தான் பாக்க தோணுது. ஆனா என்ன பண்ண? கலை குட்டி இங்க பாரேன். கல்யாணம் அப்பறம் பாப்பா பெத்துக்குறது சரி தான். ஆனா அது படிச்சு முடிச்சிட்டு கல்யாணம் 
பண்றவங்களுக்கு. இப்ப நாம சேந்து வாழ்ந்தா நீ மாசமா ஆகிருவ. அப்புறம் என்ன ஆகும். உன் வயிறு பெருசா வளந்துட்டே  போகும். அப்புறம் உன் காலேஜ்ல எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க தான?”
“ஐயோ  ஆமா. எங்க கனி மொழி மேடம் மாசமா இருக்காங்க. அவங்க பெரிய வயித்தை தூக்கிட்டு காலேஜ் வரதே ஒரு மாதிரி இருக்கும். இதுல நான்னா அவ்வளவு தான். இதுக்கு தான் படிச்சு முடிச்ச அப்பறம் சேந்து வாழலாம்னு சொன்னீங்களா அத்தான்?”
“ஆமா டி”
“ஹ்ம் படிச்சு முடிஞ்ச பிறகே சேந்து வாழலாம். ஆனா சேந்து வாழ்ந்தா பாப்பா வந்துரும்னா, பாப்பா வந்த அப்பறம் புருசனும் பொண்டாட்டியும் சேந்து வாழ மாட்டாங்களா?”, என்ற பெரிய சந்தேகத்தை சூர்யாவிடம்  கேட்டாள் கலைமதி.
அதிர்ச்சியில் வாயடைத்து போன சூர்யா “எங்க இருந்து டி உனக்கு இப்படி எல்லாம் கேக்க தோணுது?”, என்று கேட்டான்.
“நீங்க சொன்னதுல இருந்து தான் தோணுச்சு. சரி பதில் சொல்லுங்க”
“பாப்பா வராமலும் சேந்து வாழலாம் டி. ஆனா அது கஸ்டம்”
“ஓ அப்ப அது எப்படின்னு உங்களுக்கு தெரியாதா?”, என்று கேட்டு அவன் இளமையை சோதித்தாள்.
“பிளீஸ் டி செல்லம். இந்த பேச்சை விட்டுறேன். இப்பவே என்னன்னவோ  ஆகுது. முடில டி”, என்று கூறி கொண்டே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
“கூசுது அத்தான் விடுங்க. ஏன் அத்தான், நீங்க ஏன் இப்படி செய்ய கூடாது?”, என்று கேட்டாள்.
“இவ எதை சொல்றா?”, என்று நினைத்து கொண்டு “எப்படி செய்யணும்?”, என்று கேட்டான்.
“உங்களுக்கு கல்யாணம் முடிஞ்ச பிரண்ட்ஸ்  இருப்பாங்கல்ல? அவங்க கிட்ட பாப்பா வராம எப்படி சேந்து வாழணும்னு  கேளுங்களேன்”
அடுத்த நொடி மடியில் அமர்ந்திருந்தவளை கட்டிலுக்கு நகற்றியவன் அவளையே குறுகுறுவென்று  பார்த்தான்.
அவன் பார்வையில் ஏதோ புரியாத உணர்வை அடைந்தாள் கலை. அவனை பார்க்க முடியாமல்  அவள் தலை குனிந்தது.
மெதுவாக தன் இரு கைகளையும் அவள் தோள் மீது வைத்தான் சூர்யா. “என்ன செய்றான்?”, என்று நினைத்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தாள் கலைமதி.
தோள்களில் கை வைத்து அவளை அப்படியே படுக்கையில் படுக்க வைத்தான். “யார் கிட்டயாவது கேக்க சொன்னா நீங்க என்ன செய்றீங்க அத்தான்?”, என்று கேட்டாள்.
“யார் கிட்டயும் கேக்காமலே  எனக்கு தெரியும் டி. ஆனா என்னால பாலோ பண்ண முடியுமானு தெரியாது”, என்று மனதுக்குள்ளே  பேசியவன் அவள் மீதே கவிழ்ந்து அவள் உதடுகளை சிறை செய்தான்.
இப்படி செய்வான் என்று அறியாமல் திகைத்தாள் கலைமதி. இத்தனை நாள் முத்தம் கொடுத்திருக்கிறான் தான். ஆனால் அவளுடைய கைகள், முகம் தவிர வேறெங்கும் தொட்டது இல்லை. ஆனால் இன்று அவனுடைய உடல் சுமை முழுவதும் அவள் மேல் இறங்கியது.
“ஏன் இப்படி செய்றாங்க?”, என்று நினைத்து கொண்டே அவன் தோளில் கை வைத்து அவனை விலக்க பார்த்தாள். ஆனால் அவள்  கைகள் இரண்டையும் பிடித்து தன் முதுகில் படர விட்டான் சூர்யா.
அதன் பின் அவளும் அவனை விலக்குவதை விட்டு விட்டு அவன் முதுகில் கை வைத்தாள். ஆனால் சூர்யா அவளுடைய உதட்டில் தன்னுடைய உதட்டை அழுத்த அழுத்த அவளுடைய கைகள் அவன் முதுகில் ஆங்காங்கே பயணித்து அழுந்தியது.
அவளின் கை விரல் அழுத்தத்தில் அவன் இன்னும் அவளுக்குள்ளே புதைந்தான். உதட்டை அவளுடைய உதட்டை விட்டு விலக்கவே அவனுக்கு மனம் வர வில்லை. அவன் உணர்வுகள் அனைத்தும் பேயாட்டம் போட்டன. கடைசியில் அவனுடைய உணர்ச்சிகள் வெடித்து சிதறியதை அவனே உணர்ந்தான்.
“இதுக்கு மேல இப்படியே இருந்தா ஆபத்து”, என்று நினைத்து கொண்டு அவள் மேலிருந்து நகன்று அவள் அருகில் படுத்தான்.
கண்களை மூடி அவன் முத்தத்தில் மூழ்கி இருந்தவள் ஒரு பக்கமாக திரும்பி படுத்து அவனை பார்த்தாள்.
அவள் குழப்பமான பார்வையை பார்த்து ரசித்தவன்  அவளை மாதிரியே அவள் புறம் திரும்பி படுத்து கொண்டு “என்ன டி?”, என்று கேட்டான்.
அவனுடைய உரிமையான அழைப்பில் தலை குனிந்து கொண்டாள் கலைமதி.
“இத்தனை நாள் நின்னுட்டு, உக்காந்துட்டு இருக்கும் போது தான முத்தம் கொடுத்தீங்க? இப்ப எதுக்கு இப்படி படுத்துட்டு….?”, என்று தலை குனிந்த படியே  கேட்டாள்.
“தெரியலை தோணுச்சு. உனக்கு பிடிச்சிருந்ததா?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் சூர்யா.
அவனுடைய கையில் கிள்ளி விட்டாள்  கலை.
“ஆ, வலிக்குது டி. அப்புறம் இப்படி எல்லாம் இனி பேசாத கண்ணம்மா. உன் அத்தான் பாவம்”
“நான் இப்ப என்ன பேசுனேன்? கிள்ள தான செஞ்சேன்?”
“இப்ப சொல்லலை. சேந்து வாழுறதை  பத்தி அப்ப பேசின மாதிரி  பேசாதேன்னு  சொன்னேன். உன் படிப்பு  முடியட்டும் சரியா டா?”
“ஹ்ம் சரி”
“நல்ல பொண்ணு. சரி இரு நான் போய் குளிச்சிட்டு வரேன்”, என்று எழுந்தான்.
“ஒரு நாளைக்கு ரெண்டு தடவை தான குளிப்பீங்க அத்தான். இன்னைக்கு என்ன மூணாவது தடவை?”
“இன்னைக்கு நிலைமை சரி இல்லை. அதனால தான்”
“என்ன நிலைமை?”
“சும்மா தான்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
சவரின் அடியில் நின்றவனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்து  சிலிர்த்தது. முதல் முறை தன் உணர்வை தூண்டி விட்ட அவள் பெண்மையை நினைத்து வியந்தான்.
“அவளை உரசி முத்தம் கொடுத்ததுக்கே இப்படியா? கடவுளே எப்படி இனி சமாளிக்க? கொல்றாளே  ராட்சசி “, என்று புலம்பியவனுக்கு அவள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நினைவு வந்தது.
அவனை அறியாமலே அவள் மூலம் அவனுடைய ஆண்மை சோதிக்க பட்டதை  நினைத்து முகமெல்லாம் வெட்கம் வந்தது அவனுக்கு . “நல்ல வேளை அவளுக்கு எதுவும் தெரியலை. இனிமே கவனமா இருக்கணும்”, என்று தனக்கு தானே கூறி கொண்டு குளித்து முடித்து வெளிய வந்தான்.
ஆனால் அவளோ அவனையே குழப்பமாக பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
மறுபடியும் அவளை நெருங்க துடித்த கை, கால் மற்றும் மனதை அடக்கியவன் “என்ன கலை அப்படி பாக்குற? உனக்கு தூக்கம் வரலையா?”, என்று கேட்டான்.
“ஹ்ம் தூங்கலாம். நீங்களும் வாங்க”, என்ற படியே  கட்டிலில் ஒரு ஓரம்  படுத்தாள்.
“ஹ்ம் சரி”, என்று  சொல்லி  விட்டு விளக்கை அனைத்தவன் விடி  பல்ப்பை போட்டு விட்டான். குளித்து முடித்ததும் அவன் உணர்வுகள் சிறிது மட்டு பட்டன. “இனி அவளை தொட கூடாது”, என்று தனக்குள்ளே  சொல்லி கொண்டு அவள் அருகில் மற்றொரு பக்கம் படுத்தான்.
முதுகு காட்டி படுத்த சூர்யாவையே  பார்த்த கலை  அவன் எப்போது திரும்புவான் என்று காத்திருந்தாள். அவனோ அவள் பக்கம் திரும்பினாலே வம்பு என்று நினைத்து கொண்டு படுத்திருந்தான்.
அவன் அவள் புறம் திரும்பவே இல்லை. அதுக்கு மேல் பொறுக்க முடியாமல் “அத்தான் “, என்று அழைத்தாள். அவள் புறம் திரும்பாமலே “ம்ம்”, என்று சத்தம் கொடுத்தான் சூர்யா.

Advertisement