Advertisement

பொதுவாக சூர்யா மங்களத்திடம் மட்டும் தான் தன் கோபத்தை காட்டுவான். வேறு யார் மனதும் புண்படும் படி பேச மாட்டான். இன்று அனைவரையும் எடுத்தெறிந்து பேசியதில் அவன் மனது எந்த அளவுக்கு பாதிக்க பட்டிருக்கிறது என்று மங்களத்துக்கு புரிந்தது.
அது மட்டும் இல்லாமல், தன்னுடைய பொண்டாட்டியை இந்த அளவுக்கு அவன் தாங்குவதே மங்களத்துக்கு நிம்மதியாக இருந்தது. எங்கே விருப்ப மில்லாமல் கட்டாய படுத்தி நடந்த கல்யாணம், தன்னுடைய மகன் வாழ்க்கையை கெடுத்து விடுமோ என்று அஞ்சி இருந்தவள், இன்று வார்த்தைக்கு வார்த்தை என் பொண்டாட்டி, என் பொண்டாட்டி  என்று அவன்  சொல்வது அந்த தாய்க்கு நிம்மதியாக இருந்தது.
“எல்லாரும் வெளிய போங்க. அங்க போய் பேசிக்கலாம்”, என்று மங்களம் சொன்னவுடன் எல்லாரும் வெளியே சென்றார்கள்.
“சூர்யா கண்ணா, இனி உன் அத்தை எந்த பிரச்சனையும் செய்யாமல் நான் பாத்துக்குறேன் டா. நீ மதியை சமாதான படுத்து”, என்று சொல்லி அவன் தோளில் தட்டி கொடுத்து விட்டு வெளியே சென்றாள் மங்களம்.
எல்லாரும் சென்றவுடன் கதவு வரை சென்றான். அங்கே சண்முகம் மறுபடியும் வள்ளியை அடிப்பது கண்ணில் பட்டது.
“காலம் கடந்து வந்த வீரம்”, என்று நினைத்து கொண்டு கதவை அறைந்து சாத்தினான்.
“இப்ப தேவை இல்லாம எதுக்கு என்னை அடிச்சிட்டு இருக்கீங்க. அண்ணா நீயும் பாத்துட்டு இருக்க?”, என்று திமிராக கேட்டாள் வள்ளி.
“தேவை இல்லாம அடிக்கிறேனா? நீ செஞ்ச கேவலத்துக்கு யாரும் உன்னை அடிக்க வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க? உன்னை இப்பவே கொன்னு போட்டுருவேன். ஆனா ரெண்டு பேரை பெத்து வச்சிருக்கியே. அதுக்காக உன்னை சும்மா விடுறேன்”, என்று வள்ளியின் தலை முடியை இறுக்கமாக பிடித்து பேசினார் சண்முகம்.
வள்ளியும் சும்மா கிடக்காமல், “நான் என்ன தப்பா சொன்னேன்? அவ அனாதை கழுதை தான? அவளை எல்லாம் கொன்னு போட்டா கூட கேக்க நாதி இல்லை”, என்று சொல்லி மேலும் அரை வாங்கினாள்.
“நாதி இல்லையா? அனாதையா? அப்பன் நான் இருக்கேன் டி. இத்தனை நாள் நான் அவ மேல அன்பை காட்டினா நான் இல்லாத நேரம் அவளை நீ நோகடிப்பன்னு தான் விலகி இருந்தேன். ஆனா நான் அப்படி விலகி இருந்தும் நீ அப்படி தான் செஞ்சிருக்க. அது ஒரு பிள்ளை பூச்சு டி. ஒரு வார்த்தை கூட எதித்து பேசாது. இப்ப ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதை போய் அழிக்க நினைக்கிறியே? நல்லா இருப்பியா? வாழ வேண்டிய பொண்ணை பத்தி தப்பு தப்பா பேசிருக்கியே, நீ அந்த மாதிரி எவன் கூடவாது போக வேண்டியது தான? நீ அப்படி போய் சேந்தா நானும் என் பிள்ளைகளும் நிம்மதியா இருப்போம்?”, என்றார் சண்முகம்.
“இப்ப எதுக்கு அம்மாவையே எல்லாரும் திட்டுறீங்க? அவங்க சொல்றது சரி தான? அவ எங்கயாவது ஓடி போனா தான் எனக்கும் சூர்யா அத்தானுக்கும் கல்யாணம் நடக்கும். எனக்கு சூர்யா அத்தான் வேணும்”, என்று இடையில் புகுந்து பேசினாள் தேன்மொழி.
அடுத்த நொடி அவள் கன்னத்தில் இடி என இறங்கியது சுப்ரமணியத்தின் கரம். மங்களமும் “இன்னும் நாலு போடுங்க. இந்த வயசில் எப்படி பேசுது பாருங்க”, என்றாள்.
எப்போதுமே அன்பாக பேசும் மாமா இன்று அடித்ததில் அதிர்ச்சியாக விழித்தாள் தேன்மொழி.
“பொம்பளை பிள்ளைன்னு பாக்குறேன். இல்லைன்னா உன்னை கொன்னே போட்டுருவேன். வயசுக்கு தகுந்த மாதிரி பேசு. உன் அம்மா தான் தருதலையா இருக்கான்னா நீ அவளை மிஞ்சிறுவ போல? நீயும், உன் அம்மாவும் விளையாட என் மகன் வாழ்க்கை தான் கிடைச்சதா? நானும் கூட பிறந்த தங்கச்சி ஆச்சேன்னு நினைச்சா, அவ அந்த அளவுக்கு பேசுறா. நீ ஒன்னும் தெரியாத பச்சை மண்ணுனு நினைச்சா அவளை விட கேவலமா பேசுற? கலைமதி இந்த வீட்டு மருமக. என் மகனோட பொண்டாட்டி. அவளை விரட்டிட்டு நீ அந்த இடத்துக்கு வரணும்னு நினைக்கிறியா? உன் மனசுலயும் உன் அம்மா விஷத்தை கலந்து வச்சிருக்கான்னு இப்ப தான தெரியுது? நாளைக்கு ஒரு நாள் தான் நீங்க இங்க இருக்கணும். நாளைக்கு நைட் இந்த வீட்டை விட்டு கிளம்பலை, என் பையன் என்ன, நானே கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளிருவேன். முதலில் அம்மாவும், பிள்ளையும் பொண்ணுங்க மாதிரி நடந்துக்கோங்க”, என்று வள்ளியையும் தேன்மொழியையும் பார்த்து சொன்ன சுப்ரமணியம் சண்முகத்தை பார்த்து “என்னை மன்னிச்சிரு மாப்பிள்ளை. பொண்டாட்டியை இழந்துட்டு பச்சை பிள்ளையை வச்சிட்டு தனி மரமா நிக்குறியேன்னு தான் கூட பிறந்த தங்கச்சியை கட்டி கொடுத்தேன். ஆனா அவ உனக்கும், மதிக்கும் இப்படி சனியனா வந்து நிப்பான்னு நான் நினைக்கவே இல்லையே”, என்றார்.
“நீங்க என்ன மச்சான் செய்வீங்க? சொந்த வீட்ல நடந்துருக்குற அநியாயத்தை கண்டுக்காம இருந்துட்டேனே. நான் தான் எல்லாத்துக்கும் காரணம்”, என்று தலையில் கை வைத்து புலம்பினார் சண்முகம்.
“வீட்ல பெரியவங்க தான? ஒரு பொண்ணை இவ அந்த அளவுக்கு துன்முறுத்திருக்கா. அதை கண்டுக்காம இருந்துருக்கீங்க?”, என்று கலை மதியின் பாட்டி, தாத்தாவையும் நாலு திட்டு திட்டினார் சுப்ரமணியம்.
மதியால் தான் அவளுடைய அம்மா இறந்தாள் என்று நினைத்து தன் பேத்தியை வெறுத்து ஒதுக்கிய பாட்டி, தாத்தாவும் இப்போது தங்கள் தவறை நினைத்து வருந்தினார்கள்.
இங்கே இவர்கள் பேச்சு நடக்கையில் உள்ளே மதியை தாங்கி கொண்டிருந்தான் சூர்யா.
அவள் அருகில் அமர்ந்தவன் அவள் முகத்தை நிமிர்த்த பாடு பட்டான்.
ஆனால் முகத்தை மறைத்து கொண்டு அழுது கொண்டே இருந்தாள் மதி.
“கலை இங்க பாரு மா. ப்ளீஸ் டா அழாத”, என்று அவன் சொன்ன சமாதானம் எதுவுமே அவள் காதில் ஏறவே இல்லை.
“நான் தான் நேத்தே சொன்னேன்ல கலை மா. இப்ப எதுக்கு இப்படி அழுது கறையுற. உங்க அப்பா அவங்களை நல்லா அடிச்சிட்டார் டா. நானும் திட்டிட்டேன்ல. இனி உன்னை அவங்க எதுவுமே சொல்ல மாட்டாங்க. பாரு மா, அழாத டா. நீ இப்படி அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு மா”
….
“மதி அழாதேன்னு சொல்றேன்ல? மதி இங்க பாரு. முதலில் என் முகத்தை நிமிர்ந்து பாரு”, என்று சொல்லி கஷ்ட பட்டு நிமிர்த்தினான்.
நிமிர்ந்த அவள் முகம் சிவந்து, வீங்கி போய் இருந்தது. அவள் கண்ணீரை துடைத்தவனுக்கும் கண்கள் கலங்கியது.
அவன் துடைக்க துடைக்க அவள் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“அழாத குட்டி மா. இனி அப்படி நடக்காது டா”
..
“கலை நான் உன் புருஷன் சொல்றேன் மா. இனி யாரும் உன்னை எதுவும் சொல்ல விடாம பாத்துக்குவேன். அம்மா, அப்பா கூட இனி உன்னை கஷ்ட படுத்த மாட்டாங்க டா. நாங்க தான் உனக்கு இருக்கோம்ல? நீ அனாதை எல்லாம் கிடையாது கண்ணம்மா. கேளு டா. அழாத டா”
“எனக்கு யாருமே வேண்டாம். நீங்க எல்லாம் கிடைச்சதுனால தான் அவங்க இப்படி எல்லாம் சொல்றாங்க. யாரும் இல்லைனா நான் நிம்மதியா இருப்பேன்”, என்று சொல்லி அவன் கையை தட்டி விட்டாள் மதி.
“அப்படி எல்லாம் சொல்ல கூடாது கலை”
“இல்லை அவங்க சொல்ற மாதிரி நான் அனாதை தான். அனாதையாவே செத்து போறேன். உங்களை கல்யாணம் பண்ணதுல தான் அவங்களுக்கு இப்படி வன்மம். இந்த கல்யாணம் நடக்காம இருந்திருந்தா என்னை இப்படி எல்லாம் பேசியிருக்க மாட்டாங்க. தினமும் ஒருத்தன் கூட..”
“சே.. அது ஒரு பொம்பளையே இல்லை மதி மா. இனி அது அப்படி பேசாது டா. நான் பாத்துக்குறேன் டா”
“இல்லை எனக்கு வேண்டாம். நான் உண்டு, என் படிப்பு உண்டுன்னு இருந்தேன். உங்களை கல்யாணம் செஞ்சதுனால தான் இப்ப இப்படி எல்லாம் நடக்குது. நீங்க அவங்க சொன்ன மாதிரி அவங்க பொண்ணையே கட்டிக்கோங்க”
“அடி வாங்க போற கலை. இப்படி எல்லாம் பேசாத டா. கஷ்டமா இருக்கு”
“எனக்கு தான் இப்ப கஷ்டமா இருக்கு. இந்த கஷ்டத்துக்கு காரணம் நீங்க தான். நீங்க அவளை கட்டிக்கிட்டிங்கன்னா, எனக்கு இந்த பிரச்சனையே இல்லை. நான் என் மீதி படிப்பை முடிச்சிட்டு எதாவது வேலை வாங்கிட்டு அனாதையாவே செத்துருவேன். நான் இந்த வீட்டை விட்டு போகணும். எனக்கு யாரும் வேண்டாம்”
“மதி எனக்கு கோபத்தை உண்டாக்காத. நீ கோபத்துல பேசுற. அதுக்காக என்னவேனும்னாலும் பேசணும்னு இல்லை. உன்னை எங்கயும் அனுப்ப மாட்டேன். நீ என் பொண்டாட்டி டி. கண்டவங்க சொல்றதுக்கு நீ என்னை பிரியணும்னு நினைப்பியா?”
“ஆமா எனக்கு யாரும் வேண்டாம். நான் எங்கயாவது போயிறேன். நான் ஹாஸ்டலுக்கு போகணும். என்னை விட்டுருங்க. ஆனா அதை விட செத்து போனா நிம்மதியா இருக்கும். ஆமா செத்து போயிரணும். அப்ப தான் யார் முகத்துலயும் முழிக்க வேண்டாம். எங்க அம்மா அவங்க கூடவே என்னை கூட்டிட்டு போயிருக்கலாம். பரவால்ல, நான் இப்ப செத்து போறேன். நான் இந்த உலகத்துல வாழ கூடாது”
அடுத்த நொடி அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்து அவன் கை.
அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் கலைமதி. கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.
“சாவு டி, போ போய் சாவு. உனக்கு செத்தா தான நிம்மதி? போய் சாவு போ. இருக்குற எங்க யார் மேலயும் உனக்கு கவலை இல்லை, நீ சாகணும் அதானே? போய் சாவு. ஒவ்வொரு நிமிஷமும் உன்னையே நினைச்சு உருகிட்டு இருக்கேன் தெரியுமா டி உனக்கு அது? நீ தான் எல்லாமேன்னு பைத்தியமா  இருக்கேன். வேலை செய்ற நேரத்துல கூட எனக்கு உன்னோட நினைவு  தான் வருது. அன்னைக்கு முத்தம் கொடுத்ததுல இருந்து நான் நானாவே இல்லை. அந்த அளவுக்கு உன்னை பைத்தியமா லவ் பண்றேன். அந்த லவ்வை கூட இப்ப சொல்ல கூடாதுன்னு நினைச்சிருந்தேன்”
“எப்படி எப்படில்லாம் வாழணும்? எப்படி எல்லாம் உன் கூட சந்தோசமா இருக்கணும்? எந்த அன்பும் கிடைக்காத உன்னை என் உயிரா தாங்கணும்? இதை எல்லாம் யோசிச்சு வச்சிருந்தேன். ஏன் எப்ப குழந்தை பெத்துக்கணும்னு கூட யோசிச்சு வச்சிருக்கேன். ஆனா இவ சாவ போறாளாம். போ போய் சாவு. உன்னை யாரும் பிடிச்சிட்டு இருக்கல? நீ போய் சேந்தவுடனே நானும் உன் பின்னாடியே வர போறேனா? இல்லை, நீ இல்லைனாலும் அம்மா, அப்பாவுக்காக வாழ தான் போறேன். என்ன? உன்னோட நினைப்பை மட்டும் நினைச்சிட்டு வாழுவேன். நீ சொல்ற மாதிரி எவளையும்  கட்டிக்க மாட்டேன். எனக்கு பொண்டாட்டின்னா அது நீ மட்டும் தான். சாகுற காலம் வரைக்கும் நீ தான் என் நெஞ்சில் இருப்ப”
….
“எங்க அம்மா, அப்பாவும் நான் உன்னையே மனசுல வச்சு  வாழாம இருக்கேன்னு நினைச்சு அவங்களும் நிம்மதி இல்லாம போயிருவாங்க. உனக்கு தான் யாரை பத்தியும் கவலை இல்லையே. போய் சேரு போ”, என்று சொன்னவன் கண்களிலும் கண்ணீர் வந்தது.
அந்த கண்ணீரை பார்த்து சிலிர்த்து போனாள் மதி. அவளுக்காக அவன் விடும் இந்த கண்ணீர் அவளை பொறுத்தவரை பொக்கிஷம்.
“அத்தான்”, என்று உதடு துடிக்க அழைத்தாள் மதி. 
“என்ன அத்தான்? ஆங்? நேத்து படிச்சு படிச்சு சொன்னேன்? இன்னைக்கு அந்த பொம்பளை பேசும் போது வாய மூடி அழுதுட்டு இருக்க? எதுத்து நாழு கேள்வி கேக்க வேண்டியது தான? இதுல சாக போறாளாம். போ போய் சாவு டி. எப்ப உன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்துச்சோ, அப்பவே புரிஞ்சிட்டு உன் மனசுல நான் இல்லைனு. என் மனசுல இருக்குற காதல் உனக்கு என்மேல இல்லை டி. சும்மா கட்டாயத்துனால தான கல்யாணம் செஞ்சிகிட்ட. அதான் சாக போறேன்னு முடிவு எடுக்குற. என்னை லவ் பண்ணிருந்தா, கடைசி வரைக்கும் உங்க கூட வாழ போறேன்னு சொல்லிருப்பல்ல? நாளைக்கு ரிசப்ஷன் முடிஞ்சு நீ உன் ஹாஸ்டலுக்கு போ. போய் செத்தாலும் சரி. இல்லை நீ சொன்ன மாதிரி படிச்சு வேலை வாங்கி தனியா வாழ்ந்தாலும் சரி. என்னை விரும்பலைல? நீ எனக்கும் வேண்டாம் போ டி”, என்று எழுந்து கொள்ள பார்த்தான் சூர்யா.
அவன் விலகி விடுவானோ என்ற வேகத்தில் அவன் கைகளை பிடித்து இழுத்தாள் மதி. அவள் மேலேயே விழுந்து, பின் விலகி அவள் அருகில் அமர்ந்தான்.
அடுத்த நொடி “அத்தான்”, என்ற கதறலுடன் அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள் மதி.
அவளை எலும்புகள் உடையும் அளவுக்கு இறுக்கி அணைத்தவன், அடுத்து என்ன நினைத்தானோ அவளை தன்னிடம் இருந்து விலக்கினான்.
“கோபத்தில் தான் என்னை விட்டு விலகுறானோ?”, என்று நினைத்து பரிதவித்தாள் மதி.
அவள் கண்களில் அலைப்புறுதலையும், தன் தோள்கள் மேல் படிந்திருந்த அவள் கைகளில் இறுக்கத்தையும் கண்டவன் அவளை இழுத்து அணைத்து, அவள் உதடுகளில் அழுந்த முத்த மிட்டான்.  
கண்களை மூடி அவன் முத்தத்தில் கரைந்தாள் மதி. ஆனாலும் அவளுக்கு உதடு வலித்தது. அந்த அளவுக்கு கடுமையானதாக இருந்தது அவன் முத்தம். அவளிடம் இருந்து பிரியவே விரும்பாதவன் போல, மேலும் மேலும் அழுத்தி முத்தமிட்டான் சூர்யா. மூச்சு முட்டி போனாள் அவனுடைய கலை. 
தித்திப்பு தொடரும்……

Advertisement