Advertisement

“எனக்கு இங்க வேண்டாம். பாரின்கே போகலாம். காயத்ரியும் கல்யாணம் முடிஞ்சு பாரின் கிளம்பிருவா. அவ கல்யாணம் அப்புறம் தான நம்ம கல்யாணம்? அவ பின்னாடியே நம்மளும் போகலாம். உங்களுக்கும் அங்க இருக்க தான் பிடிக்கும்னு தெரியும். உங்களுக்கு புடிச்சது எனக்கும் ரொம்ப பிடிக்கும்”
“அப்ப ஓகே டி, உனக்கு பாஸ் போர்ட்  எடுக்கணும்”
“ஹ்ம்ம் என் கூடவே அம்மா அப்பாவுக்கும் எடுத்துறலாம். அவங்க எப்பவாது நம்மளை பாக்க வரணும்னு நினைக்கலாம்”
“கண்டிப்பா கவி. நாளைக்கே அதுக்கான ஏற்பாடு செஞ்சிரலாம். அடுத்த வாரத்துல இருந்து காயு கல்யாண வேலை ஆரம்பிக்கணும். அதான் இந்த வாரமே வந்தேன். இந்த கேப்ல பாஸ் போர்ட் வேலை முடிச்சிரலாம். சரி நீ எக்ஸாம் நல்ல பண்ணு. நான் ஊருக்கு கிளம்புறேன். நாளைக்கு மீட் பண்ணலாம் சரியா?”
“ஹ்ம்ம், சரி ஷியாம். அப்புறம் பாஸ்ப்போர்ட் அம்மா அப்பாவுக்கு தான் வாங்கணும். எனக்கு இருக்கு. காலேஜ் படிக்கும் போதே நானும் மதியும் அப்ளை பண்ணிட்டோம்”
“வாவ் அப்படியா? அப்ப வீசா மட்டும் ரெடி பண்ணா போதும். அத்தை மாமாக்கு மெதுவா பாஸ் போர்ட் எடுத்துக்கலாம். சரி டி. டேக் கேர்”, என்று சொல்லி கொண்டே அவள் காலேஜில் அவளை இறக்கி விட்டான்.
“சரி ஷியாம், பாத்து போங்க”, என்று சிரித்து கொண்டே அவனை வழி அனுப்பினாள் காவ்யா.
ஷியாம் வந்ததை கேட்ட மதியும் சந்தோச பட்டாள். அன்று பரிட்சையை முடித்து விட்டு “போன் பண்ணு டி. காயு கல்யாணத்துல மீட் பண்ணலாம்”, என்று சொல்லி இரண்டு தோழிகளும் விடை பெற்றார்கள்.
வீட்டுக்கு வந்த மதி அனைத்து பொருள்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். 
அன்று இரவு எட்டு மணிக்கு மங்களம் அவளை வழி அனுப்பினாள். சுப்ரமணியம் பஸ் ஏற்றி விட்டார்.
ஒரு வாரத்தில் பெரியவர்களும் திருநெல்வேலி வீட்டை காலி பண்ணி விட்டு தென்காசிக்கு கிளம்பி விடுவார்கள். 
பஸ் கிளம்பியதும் சூர்யாவை அழைத்து சொன்னாள் கலைமதி. “காலைல நான் உன்னை கூப்பிட வரேன்  கலை. . தூக்கம் வர வரைக்கும் பேசிட்டே இரு”, என்று பேச ஆரம்பித்தான் சூர்யா.
காலையில்  சொன்னது போல் அவள் பஸ் வருவதுக்கு முன்னர் அவன் வண்டியோடு காத்திருந்தான்.
அவனை பார்த்ததும் “அத்தான்”, என்று சந்தோசத்தோடு சிரித்தாள் கலைமதி.
களைத்து போய் வந்த அந்த நிலைமையிலும் அழகாக தெரிந்த மனைவியை ரசித்தவன் “கொல்ற டி, வா வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்லி அவள் பைகளை வாங்கி கொண்டான்.
சென்னைக்கு கவுன்சிலிங் போது வந்தவள் அடுத்து இன்று தான் வருகிறாள். ஊரை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவளை பைக் கண்ணாடி வழியாக பார்த்து கொண்டு வந்தான் சூர்யா. 
“செல்ல குட்டி இது தான் வீடு. வா. உனக்கு பிடிச்சிருக்கா?”
“சூப்பரா இருக்கு அத்தான். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு”, என்று சொல்லி கொண்டே திரும்பியவள் அவன் கண்களில் தெரிந்த வேட்கையில் சிலிர்த்தாள்.
அருகில் நெருங்கியவனை மார்பில் கை வைத்து தள்ளி விட்டவள் “குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.
சிரித்து கொண்டே அங்கே அமர்ந்திருந்தான் சூர்யா.
குளித்து முடித்தவள் அவனை பார்த்து கொண்டே காபி போட சென்றாள்.
இருவருக்கும் காபி எடுத்து வந்தவள்  “நீங்க எப்ப ஆஃபீஸ் கிளம்பனும்?”, என்று கேட்டாள்.
“நான் இன்னைக்கு லீவ் போட்டிருக்கேன்”, என்று விஷமமாக சிரித்தான்.
“லீவா? எதுக்கு?”, என்று உள்ளே போன குரலில் கேட்டாள் கலைமதி. அவள் மனதில் ஒரு படபடப்பு வந்திருந்தது. போனில் அவன் அடிக்கடி சொன்ன  “எப்ப நீ படிச்சு முடிச்சு என்கிட்டே வருவேன்னு இருக்கு டி”, என்ற  வார்த்தை நினைவில் வந்தது.
“இன்னைக்கு……”, என்று சொல்லி கொண்டே அவளை நெருங்கி அமர்ந்தான் சூர்யா.
“இன்னைக்கு என்ன?????”
“உனக்கு தெரியாதா????”
“போங்க அத்தான். ஆனா இன்னைக்கு எங்கயாவது வெளிய போகலாமா?”
“சும்மா சொன்னேன் டி. நேத்து சரியா தூங்கிருக்க மாட்ட. நல்லா படுத்து தூங்கு. எனக்கு இன்னைக்கு வேலை இருக்கு. நாளைக்கு தான் லீவ்”
“ஹ்ம்ம் சரி காலைல ஏதாவது டிபன் செய்றேன்”
“ஹ்ம்ம், மதியத்துக்கு நீ அப்புறமா செஞ்சிக்கோ. எனக்கு டிபன் மட்டும் போதும். எல்லாமே கிச்சன்ல வாங்கி வச்சிருக்கேன்”
“சரி அத்தான்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றவள் இருவருக்கும் சமைத்து விட்டு அவனுடன் அமர்ந்து சாப்பிட்டாள். பின் அவனை அனுப்பி விட்டு படுத்து தூங்கியே போனாள்.
நான்கு மணிக்கு அவன் வந்து காலிங் பெல் அடிக்கும் போது தான் எழுந்து கதவை திறந்தாள்.
“ஒண்ணும் சாப்பிடலையா டி?”
“நல்ல தூக்கம்  அத்தான். நல்லா  தூங்கிட்டேன்”
“சரி குளிச்சிட்டு கிளம்பு. வடபழநி கோயிலுக்கு போய்ட்டு வெளிய சாப்பிட்டுட்டு வரலாம்”, என்று சொல்லி அவளை கிளம்ப வைத்து அவனும் கிளம்பினான்.
ஆறரைக்கு கோயிலுக்கு  வந்தவர்கள் முருக பெருமானை வணங்கி விட்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு விருப்ப பட்டதை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
இப்போது முழுமையான காதல் போதையில் அவளை அனுகினான் சூர்யா. அவனுடைய நெருக்கத்தில் அவள் அடி வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்தன.
இத்தனை நாள் காத்திருப்புக்கு பின்னர் கிடைத்த இந்த சந்தர்ப்பம் சூர்யாவின் உணர்வுகளை விழித்தெழ வைத்தது. அவன் கண்களை காண முடியாமல் வெட்கத்தில் சிவந்தாள் மதி.
அவள் முகத்தில் இருந்த வெட்கம் அவனுடைய உணர்வுக்கு தூபம் போட்டது போல இருந்தது. மெதுவாக அவளை நெருங்கியவன் அவள் இடையில் கை கொடுத்து இழுத்தான்.
அவன் கையில் இருந்து விலகி ஓடியவள் ஜன்னல் கம்பிகளில் முகத்தை புதைத்து நின்றாள். அவள் பின்னே வந்து நின்றவன் அவள் முதுகில் தன் உதடுகளை பதித்தான். அந்த தொடுகையில் சிலிர்த்தவள் கண்களை இறுக்கி மூடி கொண்டாள்.
அவள் தலையில் இருந்த மல்லிகை பூவின் வாசனை அவன் நாசியில் நுழைந்து அவனை மேலும் போதை கொள்ள வைத்தது.
மெதுவாக அவள் தோளை பிடித்து தன் பக்கம் திருப்பியவன் மூடி இருந்த அவளுடைய இமைகளின் மேல் முத்தத்தை பதித்தான்.
பின் அவளுடைய நெற்றி, கன்னம் என்று அவன் உதடுகள் பயணித்தது. தன்னுடைய நெஞ்சில் சாய்ந்திருந்தவளை கைகளில் அள்ளி கொண்டவன் அப்படியே படுக்கையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தான். மூடி இருந்த கண்களை திறக்க கூட தோன்றாமல் மெய் மறந்து இருந்தாள் கலைமதி.
“கலை, இன்னைக்கு உன்னை பொண்டாட்டியா பாக்கட்டுமா டி?”, என்று அவள் காதில் முணுமுணுத்தான். அவள் கைகள் அவனுடைய முதுகில் அழுந்தி படிந்து அதற்கு  சம்மதம்   சொன்னது.
அந்த ஒப்புதலில் இது வரை காத்திருந்த பொறுமை பறக்க வன்மையாக அவளை ஆக்கிரமித்தான். அவனுடைய எல்லை கடக்கும் செயலை தடுக்கவும் முடியாமல் தாங்கவும் முடியாமல் துடித்தாள் மதி. இது வரை புரியாத அனைத்தையும் புரிய வைத்தான் சூர்யா. முன்னர் அவன் பேசிய பேச்சு அனைத்துக்கும் இப்போது அவளுக்கு விடை கிடைத்தது.
அன்றைய இரவை தூங்கா இரவாக்கி அவளை மீண்டும் மீண்டும் நாடினான் சூர்யா. விடிந்த பின்னர் தான் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்த படி தூங்கவே ஆரம்பித்தார்கள். 
அதன் பின்னர் வந்த நாட்கள் இருவருக்கும் தேனிலவாகவே இருந்தது. அந்தரங்கமான அவனுடைய பேச்சுக்களை கேட்டு சிலிர்த்து சிவந்து அவனுடன் ஒன்றினாள் மதி.
அதன் பின் காயத்ரியின் திருமணத்துக்கு சென்றார்கள். காயத்ரி கல்யாணம் முடிந்து இரண்டு வாரம் கழித்து ஷியாம் காவ்யா திருமணம் நிச்சயம் செய்ய பட்டிருந்தது.
காயத்ரி கல்யாணத்துக்கு சென்ற கலையும், சூர்யாவும் ஷியாம் காவ்யா திருமணம் முடிந்த பிறகு திரும்பி வரலாம் என்று நினைத்து ஊட்டியில் தங்கள் தேனிலாவை கொண்டாடினார்கள்.
கல்யாணத்துக்கு முந்தைய நாள் காவ்யாவை பெண்ணழைத்து கொண்டு ஊட்டிக்கு சென்றார்கள்.
காவ்யா கல்யாணம் அன்று மதி அவளை அலங்கரித்து கொண்டு இருந்தாள். பூரிப்பாக இருந்தாள் காவ்யா. இன்றைய கல்யாண நாள் அவளுடைய கனவு. அதனால் ஒவ்வொரு நிகழ்வையும் அழகான பொக்கிஷமாக அவளுடைய மனதுக்குள் சேகரித்து வைத்தாள்.
அழகு சிலை என அழைத்து வர பட்டவளை வாயை திறந்து பார்த்து கொண்டிருந்தான் ஷியாம். அவனை “வாயை மூடு டா, எல்லாரும் பாக்குறாங்க”, என்று சொல்லி சூர்யா தான் அடக்கினான்.
அருகில் வந்து  அமர்ந்தவளின் காதில் “நகை கடை விளம்பரத்துக்காடி வந்திருக்க? நைட் ரூமுக்கு வரும் போது தாலி கயிறை தவிர ஒண்ணுமே தொந்தரவா இருக்க கூடாது. சொல்லிட்டேன்”, என்று முணுமுணுத்து அவளை வெட்க பட வைத்தான்.
வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள் காவ்யா.
அதன் பின் தாலியை கட்டியதும், மணமக்களை சூர்யாவும் மதியும் ஓட்டி கொண்டிருந்தார்கள். புது பெண்ணான காயத்ரியும் அவளுடைய கணவன் கிஷோரும் இந்த கலகலப்பில் கலந்து கொண்டார்கள்.
அந்த நாள் அனைவருக்கும் அழகாக இருந்தது. அன்று இரவு  சாதாரண காட்டன் புடவையில் எளிமையான அலங்காரத்தில் இருந்தாள் காவ்யா.
அவள் அருகில் வந்த மதி “அண்ணா வெயிட் பண்றாங்க டி. சீக்கிரம் போ”, என்றாள்.
“என்னையாவது இன்னைக்கு தான் உங்க அண்ணா தேடுறாங்க . ஆனா சூர்யா  அண்ணா எப்ப டா  நீ கண்ணுல சிக்குவன்னு  காத்துட்டு இருக்காங்க”, என்று சிரித்தாள் காவ்யா.
“ப்ளீஸ்  டி, நீயும் கிண்டல் பண்ணாத. ஏற்கனவே காயு என்னை ஒரு வழி பண்ணிட்டா. நீ தான் கல்யாண பொண்ணு. அதனால உன்னை தான் கிண்டல் பண்ணனும். சரி சரி சீக்கிரம் போ. அம்மா உன்னை அனுப்ப சொன்னாங்க”, என்று சொல்லி ஷியாம் அறைக்குள் அவளை விட்டாள்.
 வெட்கத்துடன் மனைவியாக அறைக்குள் வந்தவளை இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தான் ஷியாம்.
அவன் பார்வையில் இயல்பாக முகம் சிவந்த படி அவன் அருகில் சென்றவள் “அம்மா கொடுக்க சொன்னாங்க”, என்று அவன் கையில் பால் சொம்பை கொடுத்தாள்.
“அதெல்லாம் அப்பறம் தான் தேவை. இப்ப தேவையே நீ தான்”, என்று சொல்லி அவளை படுக்கையில் அமர வைத்தவன் அவள் அருகில் அமர்ந்தான்.
பின் அவள் கையை பற்றி கொண்டு ஒவ்வொரு விரலாக  பிடித்து முத்தமிட்டான். அவன் செய்கையை கூச்சத்துடன் ரசித்து கொண்டிருந்தாள். மேலும் அவளை நெருங்கியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். பின் அவன் உதடுகள் அவள் கழுத்து, காது மடல் என்று ஊர்வலம் போனது.
அவளை இறுக்கி கொண்டு அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் அவளை படுக்கையில் கிடத்தி இத்தனை வருட பிரம்மசரியத்தை முடிக்க துடங்கினான். அவளும் அவனுடன் வாகாக ஒண்டி கொண்டாள்.
அதே நேரம் பக்கத்து அறையில் இருந்த சூர்யாவும், மதியும் கூட தங்களின் காதலில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தார்கள்.
“எல்லாரும் என்னை எப்படி கிண்டல் பண்றாங்க தெரியுமா?”, என்று திட்டி கொண்டிருந்தாள் கலைமதி.
“ஏய், இது என்ன டி நியாயம்? என் பொண்டாடியை நான் பாப்பேன். யார் என்ன சொல்ல முடியும்?”, என்று கேட்டு கொண்டே அவளுடன் இழைந்து கொண்டிருந்தான் சூர்யா.
“ஆமா ஆமா பெரிய உரிமை தான் போங்க. ரூம்குள்ள வந்தா என்னை ஒட்டிகிட்டே தான இருக்கீங்க?  அப்புறம் மித்தவங்க முன்னாடியாவது…..”, என்று பேசி கொண்டிருந்தவளின் உதடுகளை அவன் சிறை செய்திருந்தான்.
அந்த முத்தத்தில் மூச்சு முட்டி போனவள் அவனை இறுக்கி கொண்டு சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கிய  மதியாக சிவந்தாள்.
ஷியாமும், காவ்யாவும் பாரின் கிளம்பும் போது சூர்யாவும், மதியும் ஹனி மூனுக்காக  அவர்களுடனே கிளம்பினார்கள்.
இரண்டு ஜோடிகளுக்கும் கிடைத்த காதல் தித்திப்பாக இருந்தது. அந்த தித்திப்பான காதலை ருசித்து அனுபவித்தார்கள் நால்வரும்.
காதல் தித்தித்தது …… முற்றும்!!!

Advertisement