Advertisement

அத்தியாயம் 17
உன்னைக் காணும்
அழகான நிமிடங்கள் கூட
காதல் வரலாற்றில்
பதிந்து போனது அன்பே!!!
“எனக்கு வேணும் டி. நான் கொண்டு போக போறேன். அந்த ஊருக்கு உன்னோட நைட்டி  சுடிதாரை எடுத்துட்டு போக முடியுமா? அதனால நீ கட்டின சேலை வேணும். தினமும் நான் அதை மூடி தான் தூங்கணும்”
அவனுடைய அன்பில் நெகிழ்ந்தவள் ” இது அழுக்கு அத்தான்”, என்றாள்.
“அதனால தான் அது வேணும். கழட்டு”
“சரி நான் போய் கழட்டி எடுத்துட்டு வரேன்”
“ப்ளீஸ் டி, இங்கயே”
“ச்சி, போங்க”
“ப்ளீஸ் குட்டி மா”
“மாட்டேன், ப்ளீஸ்”, என்று கெஞ்சி கொண்டிருந்த அவளை நெருங்கி இருந்தவன் அவளுடைய தோளில் கிடந்த சேலையை சரித்து விட்டான்.
அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தவளின்  வாயை தன் வாயால் அடைத்து அவளை மயக்கியவன் அந்த சேலையை அவள் இடுப்பில் இருந்து அவனே கழட்டி விட்டான்.
அவன் முன்னே அப்படி நிற்க கூச்ச  பட்டு  அவன் மார்பிலே முகத்தை புதைத்த படி நின்றாள் கலை. சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் வெளியே மங்களத்தின் குரலில் தான் கலைந்தார்கள்.
பின் அவனிடம் இருந்து தப்பித்து  ஓடியவள் ஒரு நைட்டியை  எடுத்து  கொண்டு பாத்ரூம் சென்று விட்டாள்.
அவள் வெளியே வரும் போது அவன் கிளம்பி கொண்டிருந்தான். “இருங்க டீ எடுத்துட்டு வரேன்”, என்று வெளியே வந்து மங்களத்திடம் இருந்து வாங்கி இருவருக்கும் எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்.
டீ  குடித்ததும் அவன் எல்லாம் எடுத்து வைக்கட்டும் என்று நினைத்து மங்களத்துக்கு உதவி செய்ய சென்று விட்டாள்.
அதன் பின் அவன் கிளம்பும் நேரம் தங்கள் அறைக்குள் வந்தவள் அடுத்த நிமிடம் அவனுடைய இறுகிய அணைப்பில் இருந்தாள். துக்கத்தை மறைத்து இருவரும் சிரித்த படி இருந்தார்கள். தான் கொஞ்சம் வருத்த பட்டாலும்  கலை அழுவாள் என்பதால் அவன் சாதாரணமாக தன்னை காட்டி கொண்டான்.
கஷ்டத்தோடு  போற அவனை அழுது மேலும் கஷ்ட படுத்த வேண்டாம் என்று தன்னை கட்டு படுத்தி கொண்டாள் கலைமதி.
பின் நீண்ட பிரிவு முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தான். “காலை சாப்பிட  இட்லியும், மதியம் லெமன் சாதமும் வச்சிருக்கேன். நைட் வெளிய ஏதாவது வாங்கி சாப்பிடு சூர்யா”, என்று கொடுத்தாள் மங்களம்.
“அம்மா”, என்று மங்களத்தை அணைத்து கொண்டான் சூர்யா.
“டேய், உன் பொண்டாட்டியை இப்படி கட்டி பிடிச்சா கூட சரிங்களாம். எங்க கிட்ட ஒண்ணும் பாசத்தை பொழிய வேண்டாம். பாரின் போனப்ப பாய் அப்பா, பாய் அம்மான்னு சொல்லிட்டு போனவன் இப்ப பொம்பளை பிள்ளை மாதிரி கண் கலங்கிட்டு இருக்க?”, என்று கேட்டு அனைவரையும் சிறிது சிரிக்க வைத்தார் சுப்ரமணியம்.
“போங்கப்பா, அப்ப வேலை பாக்கணும்னு ஆர்வம். இப்ப அப்படியா? அம்மா அப்பாவை எப்படி பிரிஞ்சு இருக்கன்னு வருத்தம் தெரியுமா?”, என்றான் சூர்யா.
“அம்மா அப்பாவையா? இல்லை பொண்டாட்டியையா?”
“சும்மா இருங்க நீங்க. அவனை கிண்டல் பண்ணிக்கிட்டு. அப்புறம்  சூர்யா, என்கிட்ட வாரம் ஒரு தடவை பேசினாலும்  பரவால்ல. ஆனா மதிக்கு தினமும் போன்  பன்னிரு. ஒழுங்கா சாப்பிடு. லீவ்  கிடைச்சா வந்துட்டு போ”, என்றாள் மங்களம்.
“சரி மா , நீங்களும் உடம்பை பாத்துக்கோங்க. அப்பா நீங்களும் தான். அப்புறம் ஊருக்கு போனா கலையை கூட்டிட்டு போக வேண்டாம் மா. அத்தை அவளை ஏதாவது சொல்லுவாங்க”, என்றான் சூர்யா.
“சரி பா, அவ இனிமே என்னோட பொறுப்பு. நீ திரும்பி வரும் போது அவளை பத்திரமா உன்கிட்ட ஒப்படைப்பேன்  போதுமா?”, என்று சிரித்தாள் மங்களம்.
கண்ணீருடன் அவன் தன் மீது காட்டும் அக்கறையை பார்த்து கொண்டிருந்தாள் கலைமதி. 
கண்களில் வலியுடன் உதட்டில் சிரிப்புடன் அவளிடம் போய் வருவதாய் தலை அசைத்தான் சூர்யா. சரி என்று மண்டையை ஆட்டினாள் கலைமதி.
பின் மறுபடியும் அம்மாவிடமும் மதியிடமும் சொல்லி விட்டு கிளம்பி விட்டான். அவனை ஸ்டேசனில் விட சுப்ரமணியம் கிளம்பினார்.
முகத்தை தொங்க போட்டு கொண்டு திரிந்த மதியை மங்களம் தான் பல வேலைகள் கொடுத்து அவளை திசை திருப்ப பார்த்தாள். ஆனாலும் அவள் தெளியாததால் “ரூம்ல போய் அவன் கிட்ட போன்ல பேசு மதி”, என்று சொல்லி அனுப்பினாள்.
அதன் பின் டிரைன்ல ஏறியாச்சா? சீட் எப்படி இருக்கு? கிளம்பிருச்சா? சாப்பிடலையா? என்று ஆரம்பித்து போன்  உரையாடல் தொடர்ந்தது.
பிரிந்து இருக்கும் காதலர்களுக்கு மட்டுமே போன் அருமை தெரியும்.
அதன் பின் இரண்டு நாள்களில் ஷியாமும் பாரின் கிளம்பி விட்டான். காவ்யா அவனுடைய பேகில் வைத்திருந்த கிஃப்ட்டை ஊட்டி சென்றவுடன்  எடுத்து  பார்த்த போதே அசந்து போனான்.
அதில் காவ்யாவின் சின்ன வயதில் இருந்து எடுத்த பல போட்டோக்களை வைத்திருந்தாள். ஒரு போட்டோவை வைத்தே காதலில் விழுந்தவன் இன்று அவளுடைய பல போட்டோகளை அள்ளி கொண்டு சென்றான்.
மதியும், சூர்யாவும் போனில் குடித்தனம் நடத்தினார்கள் என்றால் ஷியாமும், காவ்யாவும் மெயிலில் குடும்பம் நடத்தினார்கள்.
ஞாயிறு அன்று மட்டும் ஷியாம், காவ்யா வீட்டுக்கு போன்  செய்து பேசுவான். பெரியவர்களும் சிரித்து  கொண்டே அவளிடம் கொடுத்து விடுவார்கள்.
இப்படியே அவர்களின் காதலும் படிப்பும் தொடர்ந்தது. கடைசி செமஸ்டரில்  இருந்தார்கள் மதியும் காவ்யாவும்.
இடையில் சூர்யா இரண்டு முறை வந்து போனான். வரும் போது முகம் மலரும் மதி, போகும் போது சுருங்கி போவாள். அவளை பிரிய முடியாமல் சூர்யாவும் தவித்து தான் போனான்.
இந்த இடைவெளியில் மற்றும் இரண்டு விசயங்கள் நடந்தது. ஒன்று கலைமதியின் தங்கை தேன்மொழி, கூட படிக்கும் ஒருவனை விரும்பி காலேஜ் ஹாஸ்டலில் இருந்து அவனுடன் ஓடி போனது. அது பெரிய பிரச்சனையாகி  போனது.
அதன் பின் அவர்களை போலீஸ் கண்டு பிடித்து, காலேஜில் மன்னிப்பு கேட்டு, படிப்புக்காக அவர்களும் மன்னித்து விட்டார்கள்.
ஆனால் அனைவரும் வள்ளியை தான் பேசி தீர்த்து விட்டார்கள். “அந்த கலைமதியை எப்படி கொடுமை செஞ்ச? அதான் உன் மக இப்படி குடும்பத்தை சந்தி சிரிக்க வச்சிட்டா. நீ கொடுத்த செல்லம் தான் காரணம்”, என்று அவர்கள் கேட்ட கேள்வியில் கூனி குறுகி போன வள்ளிக்கு ஒழுக்கமாக இருந்த மதியை நினைத்து பெருமையாகவும், தான் நடந்து கொண்டது கீழ்தனமான செயல் என்றும் புரிந்து போனது.
ஒரு முறை கலைமதியை பார்க்க அவளே வந்தாள். அவளை பார்த்து அதிர்ந்த மதியை, வள்ளி கேட்ட மன்னிப்பு பிரம்மிக்க வைத்தது.
அப்பாவியான மதியும் “பெரியவங்க நீங்க. என்கிட்ட  எல்லாம் மன்னிப்பு கேக்கலாமா? அதை விடுங்க சித்தி”, என்று பேச்சை மாற்றி  விட்டாள். அதை மதி, சூர்யாவிடம் சொன்ன போது “ஒருநாளும் உன்னை மாதிரி நல்லவளா  என்னால இருக்க முடியாது கலை. உன்னோட கண்ணீரை அன்னைக்கு பாத்தது இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. இனி அவங்களை பத்தி என்கிட்ட பேசாதே”, என்று சொல்லி விட்டான்.
மற்றொரு விசயம் ஷியாமின் சித்தி விசாலாட்சி, மோகனிடம்  காயத்ரிக்கு ஒரு வரன் பாத்திருப்பதாக  சொன்னாள். மாப்பிள்ளை யார் என்று விசாரித்த மோகன் அவள் சொன்னதை கேட்டு கொதித்து போனார்.  ஏனென்றால் ஒரு பொறுக்கியை பார்த்து வைத்திருந்தாள் விசாலம். 
அவளை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார். “என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்க  நீ யாரு? உன்னை நான் கேட்டேனா? என்ன மொத்த சொத்தையும் அமுக்கலாம்னு பாக்குறியா? நீ இப்படி செய்வேன்னு  தெரிஞ்சு தான் சொத்தை மூணு பிள்ளைங்க  பேருக்கும்  பிரிச்சு எழுதிட்டேன். ஒழுங்கா வீட்டுல சாப்பாட்டை தின்னுட்டு  கிடக்கலைன்னா உன் பேர்ல எழுதி வச்சிருக்க இந்த வீட்டையும் உனக்கு இல்லாம  செஞ்சிடுவேன். அப்புறம்  என் பையன் ஷியாம், காயத்ரிக்கு  நல்ல மாப்பிள்ளையா பாத்துட்டான். மாப்பிள்ளை ஷியாம் கூட தான் வேலை செய்றார். காயத்ரி படிச்சு முடிச்ச உடனே அவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு பாரின்க்கு  அனுப்பிருவேன்.  நாங்க அந்த பையனையும் பாத்துட்டோம். காயத்ரியும் இதுக்கு சம்மதம் சொல்லிட்டா. அப்புறம்  ஷியாமுக்கும் பொண்ணு பாத்தாச்சு. உன்னோட பையன் விசயத்துல மட்டும் நீ தலையிட்டா  போதும். அதுவும் நான் எதுக்கு அவனை   உன்கிட்ட விடுறேன்னா, உன் பையன் விசயத்துல நீ எந்த தப்பும் செய்ய மாட்ட. அதனால தான். புரிஞ்சதா?”, என்று அவர் போட்ட போடில் கப் சிப் என்று அமைதியாகி விட்டாள் விசாலம்.
கலைமதி சென்னையில் உள்ள ஒரு பெரிய எம். என். சி கம்பெனியில் செலெக்ட்  ஆகி இருந்தாள். கலைக்கும் காவ்யாவுக்கும் பரிட்சை மட்டும் இருக்கும் போது சூர்யா டிரெயினிங்  முடிந்து இங்கு வந்து விட்டான். ஆனால் பதவி உயர்வோடு சென்னையில் அவனுக்கு போஸ்டிங் போட்டிருந்தார்கள்.
எப்படியும் மதியும் சென்னையில் தான் வேலை பார்க்க வேண்டும் என்பதால் மங்களமும், சுப்ரமணியமும் அவனை சென்னையில் வீடு பார்க்க சொல்லி விட்டார்கள். தீவிரமாக வீடு தேடுவதில் கவனம் செலுத்தினான் சூர்யா.
“நீங்களும் எங்க கூட வந்துரனும்”, என்றாள் கலைமதி.
“இல்லை மா, நானும் உன் அத்தையும் ஊருக்கு போறோம். எங்களுக்கு அங்க இருக்க தான் பிடிச்சிருக்கு. சூர்யாவுக்காக தான் திருநெல்வேலிக்கே  வந்தோம்”, என்றார் சுப்ரமணியம்.
“நீ சீக்கிரம் ஒரு பேர பிள்ளையை பெத்து கொடு. அவனை பாத்துக்க நானும் மாமாவும் சென்னைக்கே வந்துறோம். அது வரைக்கும் நீயே உன் புருசனை பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டாள் மங்களம்.
சென்னையில் வீடு பார்த்து அங்கே அனைத்து பொருள்களையும்  வாங்கி போட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தான் சூர்யா. மதி பரிட்சை முடிந்து அங்கு செல்வதாய் இருந்தது.
கடைசி நாள் புராஜெக்ட் வைவா. அன்றொடு காலேஜ் முடிந்தது.  
“என்ன மா  காலேஜ் கிளம்பிட்டியா?”, என்று கேட்டாள் மங்களம்.
“கிளம்பிட்டேன் அத்தை. போகலாமா  மாமா? அப்புறம்  மதியம் எப்ப காலேஜ் முடியும்னு தெரியலை மாமா. அதனால கூப்பிட நீங்க வர வேண்டாம். நானே பஸ்ல வந்துருவேன்”, என்றாள் கலைமதி.
“சரி மா, மங்களம் மதியை விட்டுட்டு வறேன். ஏதாவது வாங்கிட்டு வரணுமா?”, என்று கேட்டார் சுப்ரமணியம்.
“அதெல்லாம் வேண்டாம் பா. மதிக்கு நைட்டுக்கு  பஸ் டிக்கட் மட்டும் புக் பண்ணிட்டு வாங்க”, என்றாள் மங்களம்.
இன்று நைட் கிளம்பி காலையில் அவனை பார்த்து விடலாம் என்று நினைத்து மதி முகம் மலர்ந்தது. அந்த சந்தோசத்துடனே சுப்ரமணியத்துடன் கிளம்பினாள்.
அதே நேரம் ஷியாம் எப்போது வருவான் என்று எதிர்பார்ப்போடு இருந்தாள் காவ்யா.
“பெரிய இவனாட்டம் காலேஜ் முடிஞ்ச அடுத்த நாள் உன்னை தேடி வந்துருவேன்னு  சொன்னான். ஆனா இன்னைக்கு பரிட்சை முடியுது. நாளைக்கு எப்படி வருவானாம். சரியான பிராடு”, என்று நினைத்து கொண்டு கடுப்புடன் காலேஜ் கிளம்பினாள்.
ஆனால் பஸ் ஸ்டாண்ட்க்கு  நடந்து போகும் வழியில் ஒரு காரில் இருந்து இறங்கிய தன்னவனை  பார்த்து விழி விரித்தாள். கண்களில் நீரோடு “ஷியாம்”, என்று அழைத்து கொண்டே அவனருகே ஓடினாள்.
“ப்ளீஸ்  டி சீக்கிரம் காரில் ஏறு”, என்று அவசர படுத்திய ஷியாம் அவள் கையை பற்றி முன் சீட்டில் அமர வைத்து கதவை அடைத்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்ட ஆரம்பித்தான்.
இது கனவா நினைவா என்று தெரியாமல்  அவனையே பார்த்து கொண்டிருந்தாள் காவ்யா.  சிறிது தூரம் சென்றதும் ஆள் இல்லாத ரோட்டில் காரை நிறுத்தியவன் வன்மையாக அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.
எலும்புகளே நொறுங்கி விடும் போல இருந்தது அவன் அணைப்பு. அவளுக்கும் அந்த நெருக்கம் தேவையானதாக இருந்தது.
எல்லையில்லா நிம்மதியுடன் அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். கட்டி பிடித்து கொண்டிருந்தவர்களின் உதடுகளும் மற்றவரின் முகத்தில் ஊர்வலம் போனது.
நிதானத்துக்கு வந்த பின்னர் தான் காரை எடுத்தான் ஷியாம்.
“எப்ப வந்தீங்க ?”, என்று கேட்டாள் காவ்யா.
“நேத்து நைட்ல  டி. இன்னைக்கு எக்ஸாம் முடியுதுன்னு தெரிஞ்சும் அங்க இருக்க முடியுமா? அப்புறம் நான் இன்னைக்கு வந்தது அத்தை, மாமாக்கு தெரிய வேண்டாம் சரியா? நாளைக்கு அப்பா, மாமா கிட்ட நிச்சயம் பத்தி பேசுவாங்க”
“ஹ்ம் சரி. எனக்கு சந்தோசமா இருக்கு தெரியுமா உங்களை பாத்தது?”
“எனக்கும் தான். அதுவும் கடைசி நாள் மாமா ன்னு கூப்பிட்டியா? அந்த சத்தம் கேட்டுட்டே இருந்தது என் காதுல. அடிக்கடி அப்படி கூப்பிடு கவி. கிக்கா இருக்கு”
“ஹ்ம்ம் எனக்கும் உங்க ஞாபகம் தான். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம், மதி இன்னைக்கு அண்ணாவை பாக்க சென்னை கிளம்புறா”
“ஹ்ம்ம் சூர்யா சொன்னான். சென்னை ஏர் போர்ட்டுக்கு அவன் தான் என்னை கூப்பிட வந்தான். அவனை பாத்துட்டு தான் ஊட்டிக்கு போனேன். அங்கே பெட்டியை போட்ட கையோட உன்னை பாக்க வந்துட்டேன் செல்ல குட்டி”
“ஹ்ம்ம் “
“சரி, நீ சென்னைல இருக்கணும்னு நினைக்கிறியா? இல்லை நாம பாரின்ல இருக்கலாமா? இப்ப சொன்னா தான் கல்யாணம் முடிஞ்ச கையோட நாம கிளம்பலாம். இல்லைன்னா சென்னைல ஜாப் பாக்குறேன்”

Advertisement