Advertisement

“இல்லை, நான் கேக்க போற விசயம் அப்படி பட்டது. இப்ப இதை பத்தி பேசுறது என் மகனுக்கே தெரியாது. அவனுக்கு உங்க பொண்ணை  தருவீங்களா? கண்டிப்பா கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவான். அவனுக்கு காவ்யா எங்க வீட்டுக்கு வந்தப்பவே பிடிச்சிட்டு. ஆனா அவ படிப்பு  முடிஞ்ச பிறகு பேசிக்கலாம்னு சொல்லிட்டான். ஆனா இப்ப அவளை பிரிஞ்சு போறதை  நினைச்சு தவிக்கிறான் போல? அட்லீஸ்ட் அவனுக்கு தான் காவ்யான்னு முடிவு தெரிஞ்சா கொஞ்சம் நிம்மதியா போவான். அவனுக்கு இது வரைக்கும் அப்பாவா நான் எதுவுமே செய்யலை. இப்ப அவனுக்கு புடிச்ச வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து என் தவறை  சரி செய்யலாம்னு நினைக்கிறேன். எங்க குடும்பத்தை பத்தி, அவனை பத்தி நல்லா விசாரிச்சிக்கோங்க”, என்று முடித்தார் மோகன்.
“ஐயோ, நீங்க இவ்வளவு சொல்லணுமா? ஷியாம் முகம் ரெண்டு நாளா சரியே இல்லை. இது தான் காரணமா? நான் சைட் ஒர்க்  முடியலைன்னு இப்படி இருக்கான்னு நினைச்சேனே? உங்க குடும்பம் எப்படின்னு எனக்கு தெரியாது தான். ஆனா ஷியாமை இத்தனை நாளா பாக்குறோம். அப்படி பட்டவன் எங்களுக்கு மாப்பிள்ளையா கிடைச்சா நாங்க கொடுத்து வச்சவங்க. எனக்கு முழு சம்மதம்”, என்றார் சுந்தர்.
“ரொம்ப சந்தோசம் சுந்தர். உங்க மனைவியும், பொண்ணும்  என்ன சொல்லுவாங்களோ?”
“திலகாவுக்கு  ஷியாமை கட்டாயம் பிடிக்கும். அப்புறம்  நாங்க பாக்குற பையனை தான் எங்க பொண்ணுக்கும் பிடிக்கும். நாளைக்கு நானே ஷியாம் கிட்ட சம்மதம் சொல்றேன். இங்க இருந்து போறவனுக்கு  இது ஒரு கிப்டா இருக்கட்டும் சரியா?”
“தேங்க்ஸ் சுந்தர். என் மகன் உண்மையாவே சந்தோச படுவான். நானும் இப்ப நிம்மதியா போய் தூங்குவேன். குட் நைட்”, என்று சொல்லி விட்டு எழுந்து போனார் மோகன்.
அவர் சென்றதும் யோசித்து கொண்டிருந்த சுந்தர் அருகில் வந்த திலகா  “எதுக்கு இல்லாத மூளையை கசக்கிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள்.
“எனக்கு மூளையா நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை திலகா? ஒரு முக்கியமான விசயம் பேசணும். இங்க வா”, என்று அழைத்தவர் மோகன் சொன்ன அனைத்தையும் சொன்னார்.
“சுந்தர் எனக்கு ஒரு சந்தேகம்”
“கேளு திலகா”
“ஷியாம், நம்ம காவ்யாவுக்காக தான் இங்க தங்க வந்திருக்காரோ?”
“திலகா????”, என்று அதிர்ச்சியாக அழைத்தார் சுந்தர். இப்போது தான் அவருக்கும் இப்படியும் இருக்குமோ என்று தோன்றியது.
….
“எப்படி அப்படி சொல்ற? எனக்கும் அப்படி இருக்கலாம்னு இப்ப தான் டி தோணுது”
“காதல்னு சொன்னப்பறம்  தான் தோணுச்சு. ஷியாம் மாதிரி ஒரு நல்ல பையன் கிடைச்சா எனக்கும் சந்தோசம் தாங்க. ஆனா ஷியாம் காவ்யாவுக்காக தான் இங்க தங்கிருக்கான்னு நமக்கு தெரிஞ்சதை காட்டிக்க வேண்டாம். வருங்கால மாப்பிள்ளைக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்க வேண்டாம்”
“சூப்பர் திலகா. மாப்பிள்ளைன்னே முடிவு பண்ணிட்டியா? நாளைக்கு ஷியாம் சந்தோசமா கிளம்பி போவான்”
அடுத்த நாள் அழகாக விடிந்தது. அன்று சூர்யா வீட்டுக்கு சென்று விட்டு அப்படியே ஊட்டி செல்வதாய் முடிவெடுத்திருந்தார்கள்.
எல்லாரும் காவ்யா வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.
ஷியாம் மட்டும் கீழே  வர வில்லை.
“நான் சாப்பாடு தயார் செய்யவா?”, என்று கேட்டாள் திலகா.
“வேண்டாம் மா , ஷியாம் காலைலே  சூர்யா வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டான். சூர்யா வீட்டில தான் காலைலயும் மதியமும் சாப்பாடு. அதனால கிளம்ப வேண்டியது தான். அவன் தான் இன்னும் வரலை. அம்மாடி காவ்யா, ஷியாமை கீழ வர சொல்லு மா”, என்றார் மோகன்.
“சரி அங்கிள்”, என்று சந்தோசமாக ஓடினாள் காவ்யா. அவள் முகத்தில் இருந்தே அவள் மனதையும் திலகாவும்  சுந்தரும் உணர்ந்தார்கள்.
கிளம்பி கண்களை மூடி அமர்ந்திருந்தான் ஷியாம். அவளை  விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்து அவனுக்கு வெகுவாக வலித்தது.
அவனை பார்த்த உடனே அவன் மன நிலையை உணர்ந்தவள் அவனை நெருங்கி அவன் தலையை கோதி விட்டாள்.
கண் விழித்தவனின் கண்களில் ஒளி வந்தது. “கவி”, என்று அழைத்தவனின்  கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“இது என்ன சின்ன பிள்ளையாட்டம்? நான் காலேஜ்ல இருந்து திருட்டு  தனமா கால் பண்றேன் சரியா? என் ஷியாம் இப்படி எல்லாம் சின்ன பையன் மாதிரி அழ கூடாது”, என்று சமாதான படுத்தியவளுக்கும் கஷ்டமாக  இருந்தது.
எழுந்து நின்றவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான். அவள் தோள் வளைவில் முகம் புதைத்தவன் “சீக்கிரம் ஒரு வருசம் போகணும் டி. என்னால உனக்கு கால் பண்ண முடியாது. உன்னால முடிஞ்சா பண்ணு. இல்லைன்னா கண்டிப்பா வாரத்துல ஒரு தடவையாவது மெயில் அனுப்பிரு”, என்றான்.
“கண்டிப்பா ஷியாம், அப்பறம் உங்க பேக்ல ஒரு கிப்ட் உங்களுக்கே தெரியாம வச்சிருக்கேன். அதை பார்த்தா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சரியா? கீழே  எல்லாரும் கூப்பிடுறாங்க  போகலாமா?”
“ஹ்ம் சரி”, என்று பேகை எடுத்தவன் “ப்ளீஸ்  டி ஒரே ஒரு  முத்தம்”. என்று சொல்லி அவள் உதடுகளை சிறை செய்தான். 
பின் அவளுக்கு முன்னே கிளம்பி முன்னே நடந்தான். ஆனால் கண்களில் நீரோடு “மாமா”, என்று அழைத்தாள் காவ்யா.. கையில் இருந்த பேகை அப்படியே கீழே போட்டவன்  அதிர்ச்சியாக திரும்பி அவளை பார்த்தான்.
“மாமா”, என்ற கதறலோடு  அவன் அருகே ஓடி  வந்தவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்து அவன் முகம் முழுவதும் முத்தங்களை பதித்தாள்.
அவனை சமாதானம் செய்தவளுக்கு அவன் கிளம்பியதும் தன்னையே அடக்க முடிய வில்லை.
இந்த வேகத்தை எதிர்பார்க்காத ஷியாமோ திகைத்து ஆனந்தமாக அவளிடம் முகத்தை காட்டிய படி நின்றான். பின் அழும்  அவளை சமாதான படுத்துவது அவனுடைய முறையானது.
பின் இருவரும் கண்ணீரை துடைத்து கொண்டு போலி புன்னகையுடன் கீழே வந்தார்கள். அவர்களை பார்த்தே அவர்கள் நிலைமையை  அனைவரும் உணர்ந்தார்கள்.
“உன்னை ஷியாமை கூட்டிட்டு வர சொன்னா? இவ்வளவு நேரமா காவ்யா?”, என்று சிரித்து கொண்டே கேட்டார் சுந்தர்.
என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக தலை குனிந்தாள் காவ்யா.
“சரி நான் கிளம்புறேன். என்னை இத்தனை நாள் தங்க வச்சதுக்கு தேங்க்ஸ் அங்கிள். எங்க அம்மாவோட சாப்பாட்டை சாப்பிட்ட நினைவுகள் கூட எனக்கு இல்லை. ஆனா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி பாசமா சாப்பாடு போட்ட உங்களுக்கு தேங்க்ஸ் ஆண்ட்டி”, என்றான் ஷியாம்.
“எங்க மாப்பிள்ளைக்கு நாங்க செய்யாம வேற யார் செய்வா?”, என்று சிரித்து கொண்டே கேட்டார் சுந்தர்.
அதிர்ச்சியாக அவரை பார்த்த ஷியாம் அதே அதிர்ச்சியோடு காவ்யாவை  பார்த்தான். அவளும் திரு திருவென்று விழித்து கொண்டிருந்தாள்.
மற்றவர்கள் அனைவரும் சிரித்து  கொண்டிருந்தார்கள்.
அதை பார்த்து எல்லையில்லா மனநிறைவு ஷியாமுக்கு வந்திருந்தது.  “காவ்யா படிச்சு முடிச்ச அப்புறம்  உங்க ரெண்டு பேருக்கும்  கல்யாணம் பண்ணி வைக்கிறதா நானும் சம்பந்தியும் பேசிட்டோம் . அதுக்கப்புறம் நீங்க  பாரினுக்கு   அவளை கூட்டிட்டு போனாலும் சரி, இல்லை  இந்தியால வேலை பாத்தாலும் சரி. அவ எக்ஸாம்  எழுதின அடுத்த முகூர்த்ததுல உங்களுக்கு கல்யாணம் தான்”, என்று சிரித்தார் சுந்தர்.
“தேங்க்ஸ் அங்கிள்”, என்று சந்தோசத்துடன்  சொன்ன ஷியாம் “அப்பா”, என்று சொல்லி மோகனை அணைத்து கொண்டான். அவர் கண்களில் ஆனந்த கண்ணீர்  வழிந்தது. தன்னுடைய மகனின் பாசத்தை முழுமையாக திரும்ப பெற்ற நிறைவு மோகனிடத்தில் வந்திருந்தது. காயத்ரியும் காவ்யாவைக் கட்டிக் கொண்டாள்.
பின் அவர்கள் அனைவரும் சூர்யா வீட்டுக்கு கிளம்பும் போது தன்னுடைய மகளின் முகத்தை பார்த்த சுந்தர் “நாங்களும் சூர்யா வீட்டுக்கு வரோம்”, என்று சொல்லி அவள் முகத்தில் புன்னகையை வரவைத்தார்.
ஷியாமும் காவ்யா அன்று சாயங்காலம் வரை தன்னுடன் இருப்பாள் என்று சந்தோசமாக நினைத்தான்.
எல்லாரும் சூர்யா வீட்டுக்கு சென்றார்கள். சூர்யா வீட்டில் அனைவரையும் வரவேற்றவர்கள் காவ்யா வீட்டில் இருந்து வந்திருப்பதை பார்த்து வியந்தாலும் சந்தோசமாகவே வரவேற்றார்கள்.
அதன் பின் அவர்களின் திருமண விசயம் என அனைத்தும் அலச பட்டது. மங்களத்துக்கு சமையலுக்கு உதவியாக திலகாவும் சேர்ந்து கொண்டாள்.
காலை சாப்பாடு அனைவருக்கும் கொடுத்து விட்டு மதியம் சமைக்க ஆரம்பித்தார்கள். ஆண்கள் அனைவரும் பேசி கொண்டிருந்தார்கள்.
மதியும், காவ்யாவும் மங்களத்திடம் “நாங்களும் உதவி செய்றோம்”, என்றார்கள்.
ஆனால் மங்களமோ “காவ்யா உன்னை கட்டிக்க போறவன்  இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவான். மதி, உன்னை கட்டி கிட்டவன்  நாளைக்கு ஊருக்கு போயிருவான். அதனால ரெண்டு பேரும் அவங்க கூட பேசிட்டு இருங்க”, என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டாள்.
சூர்யா அறையில் இரண்டு ஜோடிகளும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். காயத்ரி டிவியில் போட்ட ஒரு படத்தில் மூழ்கி விட்டாள். அதன் பின் மதியம் அனைவரும் சாப்பிட்டார்கள்.  
சாப்பிட்டு மாலை வரை இருந்து விட்டு மோகன், ஷியாம் காயத்ரி மூவரும் ஊட்டியை நோக்கி பயண பட்டார்கள்.
காவ்யா வீட்டினரும் அப்போதே சென்று விட்டார்கள். அதன் பின் மதியும், சூர்யாவும் தங்களின் அறையில் தங்கள் பிரிவை நினைத்து வருந்தி கொண்டிருந்தார்கள்.
வீட்டுக்குள்ளே இருந்தால் அவள் வருத்த பட்டு  கொண்டே இருப்பாள் என்பதால் “கோயிலுக்கு போய்ட்டு வரலாமா?”, என்று கேட்டான் சூர்யா.
“சரி அத்தான்”, என்று எழுந்தவள் சேலை கட்டி கொண்டு மங்களம்  மற்றும் சுப்ரமணியத்திடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.
நெல்லையப்பர் கோயில் சென்று தரிசனத்தை முடித்து விட்டு மௌனமாக அவனுடன் அமர்ந்திருந்தாள் கலைமதி.
“கலை,  கவலை படமா இரு சரியா. அப்புறம்  அம்மா அப்பாவை நீ தான் நல்லா பாத்துக்கணும். அதுக்காகவே நீ சரியா சாப்பிடணும். எந்த கஷ்டமா  இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் எனக்கு போன்  பண்ணி சொல்லணும் சரியா குட்டி?”, என்று சொன்னான் சூர்யா.
“ஹ்ம் சரி”, என்று மண்டையை ஆட்டி கேட்டு கொண்டிருந்தவள் அவனுடைய கையை விடாமலே இருந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் பெரியவர்களுக்கு பிரசாதத்தை கொடுத்து விட்டு இரவு உணவையும் முடித்தார்கள்.
“காலைல ஆறு மணிக்கு டிரைன் மா. அஞ்சு மணிக்கே கிளம்பனும். அதனால முன்னாடியே  எழுப்பி விடுங்க”, என்று சொன்னான்  சூர்யா.
 அதன் பின் சிறிது நேரம் பேசி விட்டு  மதியும் சூர்யாவும்   தங்கள் அறைக்கு சென்றார்கள்.
உள்ளே வந்ததும் உடை மாற்ற பாத்ரூம் கிளம்பியவளை கைகளை பிடித்து தடுத்தவன் “சேலை கழட்ட வேண்டாம் டி”, என்று சொல்லி அணைத்து  கொண்டான்.
அவளும் அவனை அணைத்து  கொண்டாள். கட்டிலில் அமர்ந்து அவள் முதுகை நீவி விட்டு கொண்டே இருந்தான் சூர்யா. அவளுடைய கண்ணீர் அவன் மார்பை நனைத்து கொண்டிருந்தது. 
பின் அவளை படுக்க வைத்து அவள் அருகே படுத்து கொண்டவன் அவளை இழுத்து அணைத்து அவள் முகத்தில் மூத்த ஊர்வலத்தை நடத்தினான். அவன் தரும் ஒவ்வொரு முத்தையும் ஆழ்ந்து அனுபவித்து  அந்த நினைவுகளை தன் மனப்பெட்டகத்துக்குள்  சேகரித்தாள் கலைமதி. 
நாளைக்கு இருவரும் இப்படி அருகருகே இருக்க முடியாது என்ற எண்ணமே இருவரையும் விலக விட வில்லை. அவளுடைய வெற்றிடையில் பதிந்த அவனுடைய கை  அங்கே இங்கே பயணித்து அவளை நிலை குழைய வைத்தது. அவளும் எந்த மறுப்பும் சொல்லாமல் அவனுடைய அருகாமையை  மட்டும் அனுபவித்தாள்.
அந்த சரணாகதியே அவளுடைய மன நிலையை அவனுக்கு உணர்த்தி அவனை எல்லையை கடக்க விடாமல் செய்தது. ஒருவர் அணைப்பில் ஒருவர் அசையாமல் கிடந்தார்கள். அருகாமையை மட்டும் பொக்கிஷமாக சேர்த்து வைத்தார்கள். இருவரும் அன்று இரவு ஒரு பொட்டு  கூட தூங்க வில்லை. காலை நான்கு மணிக்கு அவர்கள் அறைக்தவை தட்டினாள் மங்களம்.
“எந்திச்சிட்டோம் அத்தை”, என்று உள்ளே இருந்து மதி குரல் கொடுத்ததும் “சரி மா நான் டீ போடுறேன்”, என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் மங்களம்.
எழுந்து குளித்து முடித்து துண்டை மட்டும் கட்டி கொண்டு வந்த சூர்யா, அவனையே   ஆசையாக பார்த்து கொண்டிருந்த மதி அருகில் வந்து அவள் கன்னத்தை தொட்டான்.
“முதல் நாள் இந்த வீட்டுக்கு வந்தப்ப இப்படி தான வந்தான்? அதுக்கு பின்னாடி எல்லாமே பழகிருச்சு. அவன் எனக்குள்ளே புதைஞ்சு போய்ட்டான்”, என்று நினைத்து கொண்டே அவனை பார்த்தாள்.
அவளுடைய பார்வையில் இருந்த காதலில் உருகியவன் “இந்த சேலையை  இப்ப கழட்டி  தா”, என்றான். திகைப்பாக அவனை பார்த்தவள் “எதுக்கு அத்தான்?”, என்று கேட்டாள்.
தித்திப்பு தொடரும்……

Advertisement