Advertisement

அத்தியாயம் 16
உன் முகம் கண்ட
ஒவ்வொரு நொடியுமே
தித்திப்பான நினைவுகளே!!!
“ஹ்ம்ம்  எனக்கு மட்டும் ஆசையா என்ன? நீ சொல்றததுல ஒரு விசயம் மறுக்க முடியாத உண்மை கலை.   சத்தியமா என்னால உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டே  விலகி இருக்க முடியலை டி. ரொம்ப தவிப்பா இருக்கு. அதே நேரம் மனசலவுள உன்னோட ஒன்றவும் முடியல. அதுக்காகவே இந்த பிரிவு அவசியம் தான்”
“போங்க அத்தான், சரி என்னைக்கு கிளம்பனும்?”
“அடுத்த மாசம் மூணாம் தேதி டி “
“அப்பாடி  இன்னும் ரெண்டு நாளில் போயிருவேன்னு சொல்லுவீங்களோன்னு  பயந்துட்டேன். நல்லதா போச்சு உங்க வாசனையை இன்னும் ரெண்டு வாரத்துக்கு மேல நான் சுவாசிப்பேன்”, என்று சொன்னவளை  இழுத்து அணைத்தவன் அவளை தன் மீதே  போட்டு கொண்டான். 
கேள்வியாக அவனை பார்த்தாள் கலைமதி. “ஷியாம்   காவ்யாவோட  நினைவுகளை சேகரிக்கணும்னு  சொன்னது எதுக்குன்னு இப்ப தான் எனக்கும் புரியுது டி. எனக்கும் உன்னோட சேர்ந்து இருக்குற நினைவுகள் அதிகம் வேணும். நான் போற வரைக்கும் என் கூடவே இரு டி செல்ல குட்டி”
“கண்டிப்பா  அத்தான். எனக்கும் இப்படி இருக்க தான் பிடிச்சிருக்கு”
“ஹ்ம்ம் கலை மா”
“என்ன  அத்தான்?”
“அது  வந்து? ரொம்ப வேண்டாம். கொஞ்சமே கொஞ்சம் எல்லை மீறிக்கவா ?”, என்று கேட்டவனின் கைகள் அவள் வயிற்றில் ஊர்ந்து கொண்டிருந்தது.
“ஹான், போங்க”
“ஏன் டி ?”
“வேண்டாம் அத்தான். அப்புறம் ரொம்ப தேடும்”
“அதுவும்  சரி தான். சீக்கிரம் உனக்கு படிப்பு  முடியனும். அதுக்குள்ளே எனக்கு டிரெயினிங்  முடிஞ்சிரும். அப்படியே முடியாம இருந்தாலும்  நீ எக்ஸாம்  எழுதிட்டு உடனே அங்க வந்துரு சரியா? அதுக்கு மேலயும் என்னால வெறும் முத்தம் மட்டுமே கொடுத்துட்டு இருக்க முடியாது செல்ல குட்டி” 
“கண்டிப்பா  அத்தான். அப்புறம்  என்ன சொன்னீங்க? வெறும் முத்தமா? வெறும் முத்தம் தான்னு உங்களுக்கு தோணுதா?”
“இல்லை  டி, அது வார்த்தையா சொன்னது. உன்னோட முத்தம் தான் எனக்கு இப்ப எல்லாம் எனெர்ஜி டிரிங்கா இருக்கு தெரியுமா?”, என்று கேட்டு கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அடுத்து வந்த நாள்கள் அனைவருக்கும் அழகானதாக சென்றது. அடுத்த நாளே  அனைவருக்கும் டிரான்ஸ்பர்  விசயத்தை சொல்லி விட்டான் சூர்யா. மங்களமும் சிவ பிரகாசமும் “மதியை  நாங்க பத்திரமா பாத்துக்குவோம் பா. நீ கவலை படாத”, என்று  ஆறுதல் கூறினார்கள்.
எப்போதுமே தான் மாமனார் மாமியாரை பெருமையாக நினைக்கும் மதி இன்று அவர்களை நினைத்து பூரித்தே போனாள். மகனின் மன நிலையையும், மருமகளின் நலத்தையும் விரும்பும் பெற்றவர்கள் கிடைப்பது அரிதல்லவா?
நினைத்தது போலவே ஷியாம் தான் சொன்னதால் தான் இப்படி ஆகி விட்டதோ என்று வருந்தினான்.
“என்னோட விதியை, உன் மூலமா எனக்கு கடவுள் முன்னாடியே தெரிய படுத்திருக்கார். அவ்வளவு தான் டா. இதுக்கு போய் பீல் பண்ணாத டா”,என்று சமாதான படுத்தினான் சூர்யா.
அதற்கு பிறகு வந்த நாள்களில் மதி சூர்யாவின் மீதே ஒட்டி கொண்டே திரிந்தாள். சும்மா இருக்கும் போது கூட அவன் நெஞ்சிலே சாய்ந்து கிடந்தாள். படிக்கும் போது அவன் மடியில் தலை வைத்து படித்தாள். ஹாஸ்டலுக்கு செல்லும் குழந்தை தாயை பிரிய முடியாமல் தவிப்பது போல இருந்தது அவளுடைய  செய்கை.
வளர்ந்தாலும் கூட அவளும் சிறு குழந்தை தான் என்று எண்ணி கொண்ட சூர்யாவும் அவளே கதி என்று கிடந்தான். முடிந்த அளவு அவளுடைய நினைவுகளை மனப்பெட்டகத்தில்  சேகரித்து வைத்தான்.
இங்கே இப்படி என்றால் காவ்யா வீட்டிலோ பெற்றவர்கள் முன்னால் தங்களின் காதலை  காட்ட முடியாமல் மனதுக்குள் வைத்தே மறுகினார்கள். ஷியாமும் அவளுடன்  தனியாக பேச கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளை கெஞ்சி கொஞ்சி சீண்டி  காதல் நினைவுகளை உருவாக்கி மனதுக்குள் பத்திர படுத்தினான்.
அன்று ஞாயிறு கிழமை. காலை எட்டு மணிக்கே உறவினர் கல்யாணத்துக்காக கிளம்பி கொண்டிருந்தார்கள் திலாகவும் சுந்தரும். கீழே  இறங்கி வந்த ஷியாம் கையில் காப்பியை கொடுத்த திலகா “நாங்க சாயங்காலம் தான் வருவோம். அது வரைக்கும் காவ்யாவ பாத்துக்கோங்க தம்பி”, என்றாள்.
அவன் பதில் சொல்வதுக்குள் “திலகா ஷியாமுக்கு வேலை  இருக்குமே”, என்றார் சுந்தர்.
பாலுக்கு காவல் இருக்க  எந்த பூனைக்காவது கசக்குமா என்ன?
“எனக்கு இன்னைக்கு வேலை இல்லை அங்கிள். நாளைக்கு தான் ஒரு ஆள் வர சொன்னார். நான் பாத்துக்குறேன்”, என்றான்.
“இப்படி எல்லாம் பொறுப்பை எடுக்காத ஷியாம். அது கஷ்டமான வேலை. மேடம் எந்திச்சு  வரவே பதினொன்னு  ஆகும். அப்புறம் டிவியே கதின்னு  கிடப்பா”, என்று சிரித்தார் சுந்தர்,
அவனும் சிரித்தான். “சும்மா இருங்க பா. அவ காதுல விழுந்ததோ உங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிருவா. அப்புறம்  ஷியாம். காலைல சாப்பிட டிபன் செஞ்சு ஹாட் பாக்ஸ்ல  வச்சிருக்கேன். மதியம் குழம்பு கூட்டு  எல்லாம் வச்சிட்டேன். காவ்யா குக்கர்ல சாதம் வச்சிருவா. காலைல நீங்களே சாப்பிட்டுருங்க. அவ வந்து எடுத்து கொடுத்தா நீங்க மதியம் தான் சாப்பிடணும்”, என்று சிரித்தாள் திலகா.
“நான்  பாத்துக்குறேன் ஆண்ட்டி. நீங்க கவலை படாம  போய்ட்டு வாங்க. எனக்கும் லேப்டாப்ல தான் வேலை  இருக்கு. வெளிய எல்லாம் போக மாட்டேன்”, என்று  சிரித்தான் ஷியாம்.
அவர்கள் சென்றதும் பேருக்கு  லேப்டாப்பை தூக்கி கொண்டு கீழே  வந்தவன் அதை வைத்து விட்டு டிவி யை   பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்.
அம்மா அப்பா கல்யாணத்துக்கு போவது தெரிந்தாலும் தூங்கி எழுந்தவள் அதை  மறந்து போனாள். தூக்க கலக்கதோடு வந்தவள் “அம்மா  காப்பி தா”, என்ற படியே  கீழே இறங்கினாள்.
அவள் குரலில் அவளை திரும்பி பார்த்தவன் அப்படியே அதிர்ந்தான்.
அவனை பார்த்ததும் அதற்கு மேல் அதிர்ந்தாள் காவ்யா. கழுத்தில் துப்பட்டாவை  தூக்கி போடாத தன் மடத்தனத்தை நொந்த படி அவனை பார்த்தாள். இப்போது போய் சாலை எடுத்து போட்டால் ஒரு மாதிரி இருக்கும் என்பதால் வேகமாக கிட்சன்  அருகே சென்று நின்று கொண்டாள். 
அம்மா இல்லாதது அதன் பின்னர் தான் நினைவே வந்தது. தலையிலே தட்டி கொண்டவள் பாலை சூடு பண்ணி இரண்டு டம்பளரில் காப்பியை போட்டு எடுத்து கொண்டு அவன் அருகே வந்தாள்.
வந்ததில் இருந்தே அவள் செய்கையை தான் கவனித்து கொண்டு சிரித்து கொண்டு அமர்ந்திருந்தான் ஷியாம்.
அவன் அருகே வந்ததும் அவன் எதிரே இருந்த டீபாயில் டம்ளரை வைத்தவள் ” காபி எடுத்துக்கோங்க ஷியாம் “, என்று  சொல்லி விட்டு மாடிக்கு போக பார்த்தவளின்  கையை பிடித்து சுண்டி இழுத்தான் ஷியாம்.
இப்படி எதாவது செய்வான் என்பதால் கவனமாய் இருந்தாள் காவ்யா. அதனால் காபி கொட்டாமல் தப்பித்தது. டம்ளரை கீழே வைத்தவள் அவனை முறைத்தாள். மறுபடியும் பிடித்து இழுத்தான் ஷியாம்.
அவன் அருகில் போய் விழுந்தவன் அவனை போலியாக மறுபடியும்  முறைத்தாள்.
“இப்ப எதுக்கு இழுத்தீங்க?”
“என் பக்கத்துல உக்காந்து குடி டி “, என்று சொல்லி அவள் கையில் ஒரு டம்ளரை கொடுத்தான்.
அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள். குடித்து முடித்து டம்பளரை  கீழே வைத்தவள் அருகில் சென்றவன் அவளை பிடித்து வைத்து கொண்டு அவள் முகம் நோக்கி குனிந்தான்.
“ஷியாம் பல்லு விளக்கலை, வேண்டாம் விடுங்க”
“அதெல்லாம் விட முடியாது”, என்று சொல்லி கொண்டே அவள் உதட்டை விரலால் பிடித்தவன் “இந்த உதடு என்னோட புராபர்ட்டி. அது மட்டுமில்லாம இன்னைக்கு புல்லா அது என் கூடவே தான் இருக்கும்”, என்றான்.
“உங்களை நம்பி என்னை விட்டுட்டு போய்ருக்காங்க பாருங்க”
“பொண்டாட்டியை புருசனை நம்பி தான விட்டுட்டு போக முடியும்? டிஸ்டர்ப் பண்ணாத டி. கிஸ் பண்ணனும்”, என்று சொல்லி தன் வேலையை தொடர்ந்தான்.
அவனிடம் இருந்து விலகியவள் “நான் குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு ஓடி  விட்டாள்.
சிரித்து  கொண்டே அமர்ந்திருந்தான் ஷியாம். அதன் பின் குளித்து முடித்து நைட்டி அணிந்து வந்தவளை வெகுவாக ரசித்தான். அவன் ரசணையில் முகம் சிவந்தவள் “வேற டிரெஸ் எல்லாம் அம்மா துவைச்சு போட்டுருக்காங்க. வீட்டுல சுடிதார் போட கடுப்பா இருக்கும். அம்மா கிட்ட நைட்டி போட்டதை சொல்லிறாதீங்க. காஞ்ச உடனே அதை மாத்திருவேன்”, என்றாள்.
“லட்டு சான்சை போய் மிஸ் பண்ணுவேனா டி? மழை பேஞ்சு அந்த டிரெஸ் காயவே வேண்டாம். இந்த டிரெஸ்ல தான்  சும்மா கும்முன்னு இருக்க டி”, என்று சொல்லி கொண்டே அவளை நெருங்கினான்.
“கிட்ட வந்தா கொன்னுருவேன். வாங்க சாப்பிடலாம்”, என்று சொல்லி கொண்டே சாப்பிட அமர்ந்து விட்டாள் காவ்யா. அவனும் சிரித்து கொண்டே அவளருகே சென்று அமர்ந்தான்.
சாப்பிடும் போது புரை ஏறிய போது அவனை நெருங்கியவள் அவன் தலையில் தட்டி கொடுத்தாள்.
கண்களில் நீரோடு “தேங்க்ஸ் டி”, என்றான். 
“என்ன ஷியாம் இதெல்லாம்?”
“எனக்கு இப்படி யாருமே செஞ்சது இல்லை கவி. நீ எனக்கு அம்மாவா இருப்பேன்ணு எனக்கு முன்னாடியே தோணுச்சு. ஆனா இப்ப அதை உணர்ந்துட்டேன் டி”
“ஷியாம்”, என்ற படியே அவனை அணைத்து கொண்டாள். அவள் மார்பில் முகம் புதைத்திருந்தவன் இந்த அழகான நிமிடத்தை ரசித்தான்.
அதன் பின் அவளை ஊட்டி விட சொல்லி அவனும் அவளுக்கு ஊட்டி விட்டு சாப்பிட்டு முடித்த போது மணி பதினொன்று ஆகி இருந்தது. அவனை டிவி பார்க்க சொல்லி அனுப்பி விட்டு அனைத்தையும் எடுத்து  வைத்தாள்.
பின் இருவரும் பேசிய படியே டிவி பார்த்து கொண்டிருந்தாள். ஒரு மணி ஆகி இருக்கும் போது எழுந்தாள் காவ்யா..
“என்ன கவி எங்க போற?”, என்று கேட்டான் ஷியாம்.
“மதியத்துக்கு சாதம் வைக்க வேண்டாமா ஷியாம்?”
“ஏண்டி காலைல சாப்பாடையே இப்ப தான சாப்பிட்டோம்? ரெண்டு மணிக்கு மேல வையேன்”
“ரெண்டு மணிக்கு மேல வச்சா நான் எப்படி நாடகம் பாக்க?”
“என்னது நாடகமா?  என்ன டி சொல்ற?”
“அன்னைக்கு சொன்னேன்ல? நினைத்தாலே இனிக்கும், அது தான்”
“ஏய் அது தினமும் ஈவினிங் தான போடுவான்னு சொன்ன?”
“தினமும் போடுறதை மொத்தமா சண்டே மதியம் போடுவான். அம்மா தினமும் சாயங்காலம் பாக்க விட மாட்டாங்க. அதனால மொத்தமா  பாப்பேன்”
“ஹா ஹா, சரி போய் சாதம் வை, நானும் இன்னைக்கு உன் கூட பாக்குறேன்”, என்று சிரித்தான் ஷியாம்.
சாதம் வைத்து முடிக்கும் போது மணி ஒன்றரை ஆகி இருந்தது. பிறகு அவனுடன் அமர்ந்து நாடகம் பார்த்தாள். இரண்டு மணிக்கு குழம்பை சூடு செய்து அவனுக்கும் இவளுக்கும் சேர்த்து ஒரே தட்டில் எடுத்து வந்து அவனுக்கு ஊட்டிய படியே அவளும் சாப்பிட்டாள்.
இதை விட அழகான தருணம் வாழ்வில் வராது என்று இருவருமே உணர்ந்தார்கள். நாடகம் முடிந்ததும் “எப்படி இருக்கு?”, என்று கேட்டாள் காவ்யா.
“ரொமான்ஸே இல்லை டி. பட் ரொமான்டிக்கா இருக்கு. அதை விட உன் கூட உக்காந்து பாக்குறது பிடிச்சிருக்கு”, என்றான் ஷியாம்.
அதன் பின் மாலை வரை அவர்களின் சீண்டல்கள் தொடர்ந்தது. திலகாவும் சுந்தரும் வந்துவிடுவார்கள் என்பதால் அவனிடம் இருந்து தப்பித்து அவளுடைய அறைக்கு சென்று விட்டாள் காவ்யா.
இரண்டு காதலர்களுக்கும் நாட்கள் றெக்கை கட்டி கொண்டு பறந்தது.
அடுத்த வாரம் ஞாயிறு அன்று சூர்யாவும், மதியும் குற்றாலம் செல்லலாம்  என்று கிளம்பினார்கள். அப்போது “ஷியாமையும் காவ்யாவையும் கூப்பிடலாம்”, என்றாள் மதி.
திலகாவும், சுந்தரும் பெர்மிசன் தரவே நால்வரும் சென்றார்கள். அன்றைய நாளும் நால்வருக்கும் அழகாக அமைந்தது. முன்பு போலவே அவர்களுக்கு பார்சலில் சாப்பாட்டை கட்டி கொடுத்திருந்தார்கள் மங்களமும் திலகாவும்.
அங்கே தண்ணீரில் குளித்து ஆர்ப்பாட்டம் போட்டு மகிழ்ச்சியாக  அந்த நாளை களித்தார்கள்.
ஷியாம் ஊட்டி கிளம்புவதற்கு முந்தைய நாள் அவனை அழைக்க மோகனும் காயத்ரியும் வந்தார்கள்.
அவர்களை திலகாவும், சுந்தரும்  அன்பாக வரவேற்றார்கள். மாலை சூர்யாவும், மதியும் வந்து இவர்களை பார்த்து விட்டே அவர்களின் வீட்டுக்கு சென்றார்கள்.
அடுத்த நாள் ஊட்டிக்கு  ஷியாம் செல்ல இருப்பதால் காவ்யாவை பிரிய வேண்டுமே என்று தவித்தான் ஷியாம்.
அன்று இரவு தன் மகன் முகத்தில் இருந்த கவலையை கண்ட மோகன்  நேராக சுந்தரை காண சென்றார்.
“என்ன சார்  புது இடம்னு தூக்கம் வரலையா? ஷியாம் தூங்கிட்டானா?”, என்று கேட்டார் சுந்தர்.
“ஷியாம் தூங்கலை. சும்மா படுத்துருக்கான். காயத்ரியும் காவ்யாவும் தான் கதை பேசுற சத்தம் இன்னும் கேக்குது. நீங்க தூங்கலையா?”
“இனி தான் தூங்கணும்”
“ம்ம்”
“என்ன சார் ஒரு மாதிரி இருக்கீங்க?”
“மிஸ்டர் சுந்தர் உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் பத்தி பேசணும்?”
“என்கிட்டயா? என்ன விஷயம்? சொல்லுங்க”
“சொல்றதை எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை”
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை. என்ன சொன்னாலும் தப்பா எடுத்துக்க மாட்டேன். சொல்லுங்க”
“என்னோட குடும்ப விவரம் எல்லாமே  உங்களுக்கு தெரியும்”
“ஆமா, மதி சொல்லிருக்கா. அது மட்டுமில்லாம ஷியாம் இத்தனை வருசம் தனிமையில் வாடுனது எல்லாமே தெரியும்”
“ஹ்ம், அது எல்லாமே என்னோட தப்பு தான். அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”
“ஐயோ, என்ன மன்னிப்பு எல்லாம் கேக்குறீங்க? அதுவும் என்கிட்ட?”

Advertisement