Advertisement

ஆச்சர்யமாக அவனை பார்த்தாள் காவ்யா. “என்ன முழிக்குற? உங்க வீட்ல என்னை மாப்பிள்ளையா செலெக்ட் பண்ணா உனக்கு என்னை பிடிக்கும் தான?”
 
ம்ம்”, என்று முனங்கினாள் காவ்யா.
 
அப்படியா? அப்ப மட்டும் உனக்கு எதுக்கு பிடிக்கும்?”
 
ஏன்னா, எங்க அம்மா அப்பா உங்களை செலெக்ட் பண்ணுவாங்க. நீங்களும் படிச்சிருக்கீங்க? நல்ல வேலைல இருக்கீங்க? அதை விட அழகாவும் இருக்கீங்க? அப்புறம் என்ன? எனக்கும் பிடிக்கும்”
 
அட பாவி, பிடிக்கலை பிடிக்கலைன்னு  சொல்லி நான் அழகா இருக்கிறதை எல்லாம் கவனிச்சிருக்க?”
 
அதெல்லாம் அப்படி தான். விடுங்க, நீங்க”
 
அதெல்லாம் முடியாது. வேணும்னா நீயே ஓடி போ”
 
இப்படி நின்னா எப்படி போறதாம்?”
 
போகலைன்னா அப்படியே இரு. ஆனா நான் எதாவது செஞ்சா எதுவும் சொல்ல கூடாது”
 
ஏதாவதுன்னா?”
 
அது எப்படி சொல்றது? இதோ இப்படி இன்னும் கிட்ட வரலாம். உன்னை இப்படி பிடிக்கலாம்”, என்று சொல்லி அவள் இடுப்பில் கை வைத்தான். அதிர்ச்சியாக அவனை பார்த்து விழித்தாள் காவ்யா. அவன் கை அவள் சுடிதாரின் மேல் இருந்தாலும் கூட அவளுக்கு ஒரு மாதிரியான உணர்வை கொடுத்தது.
 
அதுவும் அவனுடைய நெருக்கம், அவன் கண்களில் இருந்த மயக்கம் அனைத்தும் அவளை சுயநினைவையே மறக்க வைத்தது.
 
தன்னையே மறந்து அவனை பார்த்த படி இருந்தாள் காவ்யா. அவள் கண்களில் மயக்கத்தை கண்ட ஷியாமும் அடுத்த நொடி அவளை இறுக்கி அணைத்து அவள் உதடுகளை சிறை செய்தான்.
 
அவள் கைகள் அவனுடைய சட்டையை இறுக்கி பிடித்தது. சில நிமிடம் கழித்து அவளை விட்டவன் “கூடிய சீக்கிரம் உன்னோட அம்மா அப்பா கிட்ட உன்னை பொண்ணு கேட்டுருவேன். அதுவரைக்கும் என்னை லவ் பண்ண வேண்டாம். அதுக்கப்புறம் என்னை எப்படி எல்லாம் லவ் பண்ணனும்னு யோசிச்சு வை சரியா?”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
 
அப்படியே சரிந்து அமர்ந்தவள் சுவரில் சாய்ந்து கொண்டாள். “என்ன தான் அவனை லவ் பண்ணலை பண்ணலைன்னு சொன்னாலும் இனி வேறு ஒருத்தனை என்னால எப்படி  நினைக்க முடியும்? இனி வேற யாரையும் நினைக்க முடியாத படி முத்தத்தை கொடுத்துட்டானே”, என்று எண்ணி கொண்டவளுக்கு சிரிப்பு வந்தது. கூடவே அவனை அவளுக்கு பிடித்திருப்பதையும் உணர்ந்தாள்.
 
அம்மா, அப்பாக்கு இவனை கண்டிப்பா பிடிக்கணும். கடவுளே நீ தான் எனக்கு உதவி செய்யணும். இவனை அவங்க வேண்டாம்னு சொல்லிட்டா நான் எப்படி ஷியாமை மறப்பேன்? கடவுளே கடைசில எனக்கும் காதலோட வலியை கொடுத்துட்டீங்களே”, என்று புலம்பி கொண்டிருந்தாள்.
 
அதே நேரம் கலைமதியிடம் காவ்யாவின் வீட்டு எண்ணை வாங்கி கொண்டிருந்தாள் காயத்ரி.
 
நம்பரை வாங்கி கொண்டு தன்னுடைய தந்தை மோகனை அழைத்தவள் இங்கு நடந்ததையும் அண்ணன் மனதில் இருக்கும் காதலையும் சொல்லி  காவ்யா வீட்டின் எண்ணையும் கொடுத்தாள்.
 
அனைத்தையும் கேட்ட மோகன் இனி தான்  பார்த்து கொள்வதாய் சொல்லி அழைப்பை அணைத்து விட்டு தன் நண்பரை அழைத்து காவ்யாவின் குடும்பத்தை பற்றி சொல்லி விசாரிக்க சொன்னார்.
 
அடுத்து வந்த நாள்கள் ஐந்து பேருக்கும் சந்தோசமாக இருந்தது. ஊரை சுற்றி பார்க்க சந்தோசமாக சென்றார்கள்.
 
கலகலப்பான காயத்ரியுடன் வாயாடியான காவ்யா சேர்ந்தவுடன் ஷியாமின் நிலைமை தான் படுமோசமாக இருந்தது. அவர்கள் தன்னை கிண்டல் அடிப்பதை ஷியாமும் வெகுவாக ரசித்தான்.
 
தங்களை யாரும் தொந்திரவு செய்யாததால் மதியும் சூர்யாவும் காதல் உலகில் சஞ்சரித்தார்கள்.
 
கடைசியாக அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது. காவ்யாவை பிரிய முடியாமல் ஷியாம் தான் தவித்தான். கடைசியாக அவன் முத்த மிட்டதில் இருந்து காவ்யா ஷியாமிடம் எதுவுமே பேசவில்லை. காயத்ரியுடன் சேர்ந்து கிண்டல் அடித்தாலும் அவனிடம் நேரடியாக பேசுவதுக்கு அவளுக்கு தைரியம் இல்லை. அதுமட்டும் அல்லாமல் மறுபடியும் முத்தத்தை கொடுப்பானா என்று பயம் வேறு இருந்தது.
 
ஆனால் அவன் அவளை பார்க்காத போது கள்ள பார்வை மட்டும் பார்ப்பாள். அதை உணர்ந்த ஷியாமுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
 
ஆனால் இன்று அவள் சென்று விடுவாள் என்னும் போது மனதுக்கு வருத்தத்தை கொடுத்தது. அவளும் அவனை தன் கண்களால் பார்த்து மனதுக்குள் நிறைத்து கொண்டு தான் இருந்தாள்.
 
இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பனும்”, என்று சூர்யா சொன்ன பிறகு தன்னுடைய அறையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் காவ்யா. அவளுடன் அரட்டை அடித்த படியே அங்கு அமர்ந்திருந்தாள் காயத்ரி.
 
அப்போது தான் காயத்ரி காவ்யாவை நன்கு பார்த்தாள். இவளுடைய பேச்சை காவ்யா கவனித்தது போல இருந்தாலும் அவள் கவனம் வேறெங்கோ இருந்தது. அதை உணர்ந்த காயத்ரியும் சிரித்து கொண்டு  வெளியே வந்து தன் அண்ணனை தேடினாள்.
 
அவனும் தனியே அமர்ந்து வானத்தை வெறித்து கொண்டு அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்ற காயத்ரி “அண்ணா உன்னை காவ்யா தேடுனா. பாத்தா அவ ரூம்க்கு உன்னை வர சொன்னதா சொல்ல சொன்னா”, என்று சொல்லி விட்டு டிவி முன்னர் போய் அமர்ந்து விட்டாள்.
 
சந்தோசத்துடன் கிளம்பினான் ஷியாம். காவ்யாவோ அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு கடைசியாக அவன் வாங்கி தந்த சேலை கவரை கையில் எடுத்தாள். சந்தோசமாக அதை வெளியே எடுத்தவள் முகம் முழுவதும் சிரிப்புடன் அதை வருடி கொடுத்தாள். பின் கண்ணில் பட்ட விலையை பார்த்தவள் திகைத்தாள். அதில் நாலாயிரம் என்று போட்டிருந்தது.
 
அவள் அந்த கவரில் இருந்து சேலையை எடுக்கும் போதே அங்கு வந்து விட்டான் ஷியாம். அவள் அதை வருடி கொடுத்ததும் இவனுக்கு இங்கே சிலிர்த்தது.
 
அவள் விலையை பார்த்து அதிர்ச்சி அடைவதை பார்த்தவன் “என்ன மேடம்? மிச்ச ரெண்டாயிரத்தை தரதுக்காக தான் என்னை தேடுனியா?”, என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தான்.
 
அவனை பார்த்து புன்னகைத்தவள் “ரெண்டுமே தப்பு. நான் உங்களை தேடவும் இல்லை. அப்புறம் ரெண்டாயிரம் தரவும் மாட்டேன்”, என்றாள்.
 
ஹா ஹா, நீ என்னை தேடலை அப்படிங்குறதை வேணும்னா ஒத்துக்குறேன். ஆனா விலையை பாத்த உடனே பணம் கொடுக்கணும்னு நினைச்ச? அப்படி தான?”
 
அப்படி எல்லாம் இல்லையே. நான் எதுக்கு கொடுக்கணும்?”
 
நீ கொடுத்த ரெண்டாயிரத்துக்கு தான அந்த சேலையவே வாங்கி கிட்ட. அப்ப மிச்ச ரூபாயை தரணும்னு தான நினைப்ப?”
 
எங்கயாவது பொண்டாட்டிக்கு புருஷன் சேலை எடுத்து கொடுத்தா அதுக்கு பணம் கொடுக்கணுமா?”, என்று கேட்டு விட்டு முகத்தை அவனுக்கு காட்டாமல் அந்த பக்கம் திரும்பி கொண்டாள் காவ்யா.
 
காதில் விழுந்த வார்த்தையை நம்ப முடியாமல் ஆனந்த திகைப்பை அடைந்த ஷியாம் மெதுவாக அவளை நோக்கி நடந்தான்.
 
அவளுக்கு பின்னே நின்றான் ஷியாம். அவனுடைய மூச்சு காற்றை அவள் முதுகு உணர்ந்தது. அவளுக்கு படபடப்பாக இருந்தது. “என்ன சொல்லுவானோ?”, என்று எதிர்பார்த்து காத்திருந்தவளின் கழுத்தில் தன்னுடைய உதட்டை பதித்தான் ஷியாம்.
 
ஒரு வித சிலிர்ப்புடன் அவனை நோக்கி திரும்பியவளை இழுத்து அணைத்தவன் அவளுடைய முகமெல்லாம் முத்தமிட்டான். அதை அவளும் ஆவலாக எதிர்கொண்டு அவனை அணைத்து கொண்டாள்.
 
எப்படி டி லவ்னு ஒத்துக்கிட்ட?”, என்று வியப்பாக கேட்டான் ஷியாம்.
 
ஆமா, பொசுக்கு பொசுக்குன்னு முத்தம் கொடுத்து மயக்குனா மயங்காம என்ன செய்ய?”, என்று சிரித்தாள் காவ்யா.
 
தேங்க்ஸ் டி. பாரின்ல இருந்து நான் வரும் போது இருந்த மனநிலை என்ன? இப்போ இருக்குற மன நிலை என்ன? ரொம்ப சந்தோசமா இருக்கு. கிடைக்கவே கிடைக்காதுன்னு நினைச்ச அப்பா, தங்கச்சி பாசம் கிடைச்சிருச்சு. கலைன்னு புது தங்கச்சி கிடைச்சிருக்கா. உன்னை பத்தி இங்க வந்த அப்புறம் தான் விசாரிக்கனும்னே நினைச்சிட்டு வந்தேன். ஆனா உன் காதலே கிடைச்சிருச்சு. தேங்க்ஸ் கவி. இப்ப கிளம்பிருவல்ல? இனி எப்ப பாக்க போறேனோ? அது வரைக்கும் தாங்குற மாதிரி ஒரு முத்தம்”, என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தான்.
 
தன்னை ஒப்பு கொடுத்தவளும் அமைதியாக நின்றாள். அடுத்து கொஞ்ச நேரத்தில் அனைவரும் கிளம்பி விட்டார்கள்.
 
ஷியாமும், காயத்ரியும் “திருப்பியும் வரணும்”, என்ற கட்டளையோடு விடை கொடுத்தார்கள். கார் திருநெல்வேலியை நோக்கி சென்றது.
 
ஊருக்கு வந்தவர்களை பாசமாக வரவேற்றார்கள் திலகாவும் சுந்தரும். காவ்யாவை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தங்கள் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் சூர்யா.
 
மங்களமும் சுப்ரமணியமும் வயல் வேலைக்காக ஊருக்கு சென்றிருப்பதால் தன்னுடைய கார் சாவியுடன் கோர்த்திருந்த வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றான் சூர்யா.
 
அவனுடன் சிரித்து கொண்டே உள்ளே சென்ற கலைமதி அடுத்த நிமிடம் அவனுடைய போனை பிடுங்கி மங்களத்தை அழைத்து வந்து விட்டதாக கூறினாள். நாங்களும் இரண்டு நாள்களில் வருகிறோம் என்று சொல்லி போனை வைத்தாள் மங்களம்.
 
அடுத்த நாளில் இருந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தான் சூர்யா.
 
மதிக்கு காலேஜ் திறக்க இன்னும் ஐந்து நாள்கள் இருந்ததால் அவள் மட்டும் வீட்டில் இருந்தாள்.
 
ஆனால் இவர்கள்  வந்து சேர்ந்த  இரண்டே நாளில் பின்னாடியே இங்கே வந்தான் ஷியாம்.
 
அவனை பார்த்ததும் “உள்ள  வாங்க அண்ணா”, என்று வரவேற்று அமர வைத்த கலைமதி “அத்தான் ஷியாம் அண்ணா வந்துருக்காங்க”, என்று சொல்லி சூர்யாவை அழைத்தாள்.
 
அங்கு வந்த சூர்யா ஷியாமை பார்த்து வியப்பான பார்வை பாத்து கொண்டே “என்ன டா  வரேன்னு  சொல்லவே இல்லை”, என்று கேட்டான்.
 
உங்களை எல்லாம் பாக்கணும் போல இருந்துச்சா. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்”, என்று சிரித்தான் ஷியாம்.
 
எங்களை பாக்க வந்துட்டியாநம்பிட்டோம் டா நம்பிட்டோம். சரி சரி எங்களை தான் பாத்துட்டியே? கிளம்பு”என்று சிரித்தான் சூர்யா.
 
அத்தான், எதுக்கு இப்படி வந்த உடனே அண்ணனை போக சொல்றீங்க?”, என்று கேட்டாள் கலைமதி .
 
கலை, உனக்கு ஒண்ணும் தெரியாது. அவன் நம்மளை பாக்க வந்துருக்கான்னு நினைக்கிறியா? அவன் வந்துருக்குற தோரணையே  சரி இல்லை. இங்கயே தங்கி குடுத்தனம் நடத்த போறவன் மாதிரி எவ்வளவு பெரிய பைகளோட வந்துருக்கான் பாரு? இது எதுக்குன்னு புரியலையா உனக்கு?’, என்று கேட்டான் சூர்யா.
 
ஹா ஹா, நண்பன் டா நீ, சரியா கண்டு புடிச்சிட்டியே. இங்க தங்க தான் வந்திருக்கேன்”, என்று அசடு வழிந்தான் ஷியாம்.
 
அண்ணா??”, என்று வியப்பாக அழைத்த மதி “இப்ப தான் புரியுது. நீங்க காவ்யா  தேடி வந்தீங்களா? எத்தனை நாள் வேணும்னாலும் இங்க தங்குங்க”, என்று சிரித்தாள்.
 
இன்னும் இருபத்தஞ்சு நாள் லீவ் இருக்கு மா. ஒரு பத்து நாள் இங்க இருந்துட்டு ஊருக்கு போவேன். அப்புறம் பாரின் கிளம்பிருவேன்”, என்றான் ஷியாம்.
 
இருபத்தஞ்சு நாள் லீவ் இருக்குல்ல? அப்புறம் எதுக்கு பத்து நாள்ல போகணும்? கூட கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம். நாளைக்கே அத்தையும், மாமாவும் ஊரில இருந்து வந்துருவாங்க. அவங்களே உங்களை போக விட மாட்டாங்க. அப்படி தான அத்தான்?”
 
ஆமா கலை, மாடி ரூமை நீ எடுத்துக்கோ டா. நான் உன் பேகை எல்லாம் அங்க வைக்கிறேன்.  அப்புறம் கலை அவனுக்கு ஏதாவது சாப்பிட  கொடு”, என்று சொல்லி கொண்டே ஷியாமின்  இரண்டு பேகையும் எடுத்து கொண்டான் சூர்யா.
 
சரி அத்தான்டீ போடுறேன்”, என்று சொல்லி விட்டு மதி சென்ற பின்னர் சூர்யாவிடம் இருந்து ஒரு பையை வாங்கி கொண்டு சூர்யா பின்னே சென்றான் ஷியாம்.
 
சரி டா. நீ குளிச்சிட்டு கீழ வா”, என்று சூர்யா சொன்னதும் அவனும் சரி என்று சொல்லி விட்டு குளித்து உடை மாற்ற சென்றான்.
 
பின் மதி கொடுத்த டீயை இருவரும் குடித்து  விட்டு பேசி கொண்டிருந்தார்கள். மதியும் சமையலை முடித்து விட்டு அவர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தாள்.
 
எனக்கு காவ்யாவை  பாக்கணும் மா. எப்படி பாக்க?”, என்று கேட்டான் ஷியாம்.
 
ஒரு நாள் பொறுங்க அண்ணா. அவ நாங்க இங்க வந்த மறுநாளே ஊருக்கு கிளம்பிட்டா. நாளான்னைக்கு காலேஜ் ஆரம்பிக்குது. அப்ப பாக்கலாம்”, என்று சிரித்தாள் கலைமதி.
 
அதன் பின் ஒரு நாளை கஷ்ட பட்டு நெட்டி தள்ளியவன்  அவளை பார்ப்பதற்காக  ஆவலாக இருந்தான்.
 

Advertisement