Advertisement

அத்தியாயம் 14
காலங்கள் பல சென்றாலும்
அடிமனதில் தேங்கி நிற்கிறது
உன் நினைவுகள்!!!
 
என்னை அண்ணனு சொன்னதுக்கு தேங்க்ஸ் மா. ஒரு அண்ணனா இதை உனக்கு வாங்கி கொடுக்கும் போது நீ என்ன சொல்லுவியோ, என்னை திட்டுவியோன்னு  பயத்துல தான் மா கொடுத்தேன். ஆனா நீ என் பயம் அவசியமே இல்லாத மாதிரி வாங்கி கிட்ட. என்னை பொருத்த வரைக்கும் நீ நல்ல பொண்ணு அப்படிங்குறது  தான் என் எண்ணம். ஆனா என் நண்பனை மட்டும் தப்பா நினைக்கிறதை  தான் என்னால தாங்க முடியலை. நாங்க இங்க வந்துருக்குறப்ப  உன்னையும் இங்க வர வைக்கணும்னு ஆசை பட்டது நான் தான். எனக்காக தான் வலுக்கட்டாயமா ஷியாம் உன்னை இங்க வரவச்சான். உன் மேல  ஷியாமுக்கு ரொம்ப பாசம். எப்ப டா  என் தங்கச்சி என்னை அண்ணன்னு கூப்பிடுவான்னு ரொம்ப தடவை என்கிட்டே கேட்டு கஷ்ட பட்டுருக்கான். அட்லீஸ்ட் அதை என்னால நிறைவேத்த  முடியாமல் போனாலும் உன் கூட அவன் கொஞ்ச நாள் இருக்கிறான்  அப்படிங்குற சந்தோசத்தை அவனுக்கு கொடுக்கணும்னு தான் நான் உன்னை வர சொன்னேன்”
 
….
 
நீ விருப்பம் இல்லாம இங்க வந்தது எனக்கும் தெரியும். நாங்க ரெண்டு நாளுல கிளம்பிருவோம். நீ இது வரைக்கும் எங்க கூட சேரவே இல்லை. நீயும்  எங்க கூட சந்தோசமா இருக்கணும்னு தான் ஆசை பட்டேன். அது நடக்காம  நீ ஷியாமை திட்டி அவன் நிம்மதியா இல்லாம இருக்குறதும், நீயும் சொந்த வீட்டுலே கஷ்ட பட்டு இருக்குறதும் தான் நடக்குது. அதனால இன்னைக்கே நீ கிளம்பி போகலாம். ஆனா உனக்கு கல்யாணம் முடிஞ்சு உனக்கு பிறக் கபோற பிள்ளைங்களுக்கு தாய்மாமனாவது ஷியாமை இருக்க விடு மா. என் நண்பனுக்காக நான் இந்த கெல்ப்பை உன்கிட்ட பிச்சையா கேக்குறேன். ஷியாம், உன்னோட அப்பாவை வர சொல்லிரு டா. அவர் வந்து காயத்ரியை கூட்டிட்டு போகட்டும். மதி ஒரு நிமிஷம் என்கூட வா”, என்று சொல்லி விட்டு அறைக்கு சென்று விட்டான் சூர்யா.
 
காயத்ரியே அதிர்ந்து போய் நின்றாள். சூர்யா  இது வரை அவளிடம் பேசியது இல்லை. எதிரே சந்திக்க நேர்ந்தாலும் அவளை பார்த்து ஒரு புன்னகையை சிந்தி விட்டு சென்று விடுவான். அதனால் அவன் மீது அவள் எந்த உணர்வையும் காட்ட வில்லை. ஆனால் இன்று அவன் கண் கலங்கி பேசியது அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது.
 
அத்தான் சொன்ன மாதிரி எனக்கும் அந்த ஆசை தான் காயத்ரி. உன்னை சுத்தி இருக்குற எல்லாருமே உன் மேல பாசம் காட்டனும்னு தான் நினைக்கிறோம். அதுக்கு தான் உன்கிட்ட நான் எவ்வளவோ பிரண்டா பழக முயற்சி  செஞ்சேன். ஆனா நீ எங்களை ஒதுக்கியே வச்சிட்ட. பரவால்ல, இத்தனை நாள் எங்க கூட கோபமா இருந்தா கூட எங்க கூட தங்கினதுக்கு  தேங்க்ஸ்”, என்று சொல்லி விட்டு மதி தன்னுடைய அறைக்கு செல்லும் போது “இது என்னோட பரிசு மதி”, என்று அவள் கையில் ஒரு கவரை கொடுத்தான் ஷியாம் பிரகாஷ்.
 
தேங்க்ஸ்  அண்ணா”, என்று சொல்லி அதை வாங்கி கொண்ட மதி தங்கள் அறைக்கு சென்று விட்டாள்.
 
இத்தனை பேர் சொன்னாலும் நீ எல்லாம் புரிஞ்சிக்க மாட்டல்ல? உங்க குடும்ப விசயம் எனக்கு மதி சொல்லி தான் தெரியும். என் வயசு தான உனக்கும்? யார் என்ன சொன்னாலும் நம்பிருவியா? சித்தியாம் சித்தி. இது வரை எந்த ரெண்டாவது தாரமா வந்த பொண்டாடியும் மூத்தவ பிள்ளைங்களை பாசமா வளத்துருக்குறதா நீ கேள்வி பட்டிருக்கியா? அவங்களுக்கு முதல் தாரதோட பிள்ளைங்க எதிரிகளா  தான் தெரிவாங்க. உன்னை மட்டும் பாசமா வளக்குறாங்கன்னா அது பெரிய விசயம் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அதுக்கு பின்னாடி மறைஞ்சிருக்குற காரணத்தை தான் நீ யோசிக்காம இருக்குற. நல்லா யோசிச்சு பாரு. இது வரைக்கும் ஒரு தடவையாவது உன்னோட அண்ணனை பத்தி உங்க சித்தி உங்க அப்பா கிட்டயும் உன் கிட்டயும் பாராட்டி பேசிருக்காங்களா? நல்ல அம்மாவா  இருந்தா சொந்த பிள்ளைங்களா நினைச்சு அவங்க செய்ற  தப்பையும் நிறைவா தான் சொல்லுவாங்க. குத்தம் சொல்லி வெறுக்க வைக்க மாட்டாங்க. காக்கைக்கு தான் குஞ்சு பழமொழி அப்படிங்குற மாதிரியா நடந்து உங்க சித்தி நல்ல அம்மாவா இருக்காங்க? கடவுள் கொடுத்துருக்க மூளையை கொஞ்சமாவது உபயோக படுத்து காயத்ரி”, என்றாள் காவ்யா.
 
இதை எல்லாம் காயத்ரியே யோசித்து உணர்ந்திருந்தாலும்  “ஏய், என்னை மூளை இல்லாதவள்ன்னு சொல்றியா?”, என்று கோபமாக காவ்யாவை பார்த்து கேட்டு விட்டாள்.
 
எதையோ சொல்ல போன காவ்யாவை தடுத்த ஷியாம் “காவ்யா  நீ அமைதியா இரு. தேவை இல்லாம நீங்க ரெண்டு பேரும் சண்டை போட வேண்டாம். எனக்காக நீ என் தங்கச்சி கிட்ட பேச வேண்டாம் காவ்யா. இங்க பாரு காயு, யார் என்ன சொன்னாலும் உன்னோட மனசு மாறாதுன்னு எனக்கு தெரியும். ஆனா எனக்கு உன்மேல உள்ள பாசம் மாறாது. உன்கூட கொஞ்ச நாள் சேர்ந்து  இருக்கணும்னு தான் அப்பா கிட்ட சொல்லி உன்னை இங்க கூப்பிட்டேன். ஆனா நீ இங்க வந்து சந்தோசமா இல்லைன்னு தெரியும். அதனால இன்னைக்கே அப்பா கிட்ட உன்னை கூட்டிட்டு போக சொல்றேன். அப்புறம் தங்கச்சின்னு உரிமைல தான் இந்த டிரெஸ் வாங்கிட்டு வந்தேன். ஆனா அதை நீ வாங்க மாட்டேன்னு தெரியும்”, என்று சொல்லி கொண்டே அந்த கவரை காயத்ரி அருகில் இருந்த சேரில் வைத்தவன் “காவ்யா, இது உனக்கு”, என்று சொல்லி  அவள் கையில் ஒரு கவரை கொடுத்தான். அப்போதிருந்த சூழ்நிலையில் ஷியாம் கொடுத்ததை மறுக்க தோன்றாமல் அதை அமைதியாக வாங்கி கொண்டாள் காவ்யா.
 
அப்புறம் காவ்யா, இந்த டிரெஸ்ஸை காயத்ரி  கட்டாயம் எடுத்துக்க  மாட்டா. அவளுக்கு வாங்கினதை நீ வச்சிக்கோன்னு உன்கிட்ட சொல்றதும் நாகரிகமா இருக்காது. அதனால உனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க யாருக்காவது இதை கொடுத்துரு”, என்றான் ஷியாம்.
 
சரி”, என்று சொல்லி விட்டு அதை காவ்யா கையில் எடுக்க போகும் போது முந்தி கொண்டு அதை எடுத்து கொண்ட காயத்ரி அதை நெஞ்சோடு அணைத்து கொண்டு “என் அண்ணன் வாங்கி தந்தது எனக்கு தான்”, என்றாள்.
 
அந்த வார்த்தையில் காவ்யாவுக்கும், ஷியாமுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஷியாம் கண்களில் சந்தோஷத்தில் கண்ணீரே வந்து விட்டது. அப்போது தான் மதியும், சூர்யாவும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். அவர்களும் திகைத்து போனார்கள்.
 
ஷியாம் கண்களில் இருந்து வழிந்த நீரை கண்ட காயத்ரி “என்னை மன்னிச்சிரு அண்ணா. சித்தி சொன்னது அத்தனையும் நம்பி உன்னை தப்பா நினைச்சிட்டேன். நான் காவ்யா சொன்னது மாதிரி மூளை இல்லாம தான் நடந்துக்கிட்டேன். சூர்யா அண்ணா மாதிரி நல்லவங்களோட பிரண்டா இருக்குற நீ எப்படி கெட்டவனா  இருக்க முடியும் அப்படின்னு நான் யோசிக்க ஆரம்பிச்சு ரெண்டு நாள் ஆகிட்டு. அது மட்டும் இல்லாம நீ நல்லவன்னு எனக்கு அன்னைக்கே புரிஞ்சது. நான் உன்னை  தப்பா நினைச்சு வெறுத்து ஒதுக்கி உனக்கு  மன கஷ்டத்தை கொடுத்துட்டேன். என்னை மன்னிச்சிருவ தான?”, என்று கண்ணீருடன் கேட்டாள்.
 
அவளை பார்த்து தன்னுடைய இரண்டு கைகளையும் விரித்து வா என்னும் விதமாய் கண்களில் நீருடன் அழைத்தான் ஷியாம்.
 
அண்ணா”, என்று அழைத்து கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் காயத்ரி. அவனும் அவள் தலையில் தன் நாடியை பதித்து ஆதரவாக அவளை  அணைத்து கொண்டான். அவன் கண்களில் இருந்து வழிந்த நீர் அவள் தலையை நனைத்தது.
 
இந்த காட்சியை காவ்யாவும் சந்தோசத்துடன் பார்த்து கொண்டு நின்றாள். அவளை பார்த்து நிறைவான புன்னகையை சிந்தினான் ஷியாம்.
 
சிரிக்கும் அவனை பார்த்தவள் அந்த நேரத்திலும் “எப்பா செம சிரிப்பு. சும்மா ஹீரோ மாதிரி இருக்கான்”, என்று எண்ணி கொண்டு பார்வையை திருப்பி கொண்டாள்.
 
பின் தன்னிடம் இருந்து காயத்ரியை பிரித்த ஷியாம் அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டு “அழாத டா குட்டி”, என்றான்.
 
ஹ்ம்ம் சரி”, என்று சிரித்த காயத்ரி காவ்யா கையில் இருந்த ஷியாம் அவளுக்காக  கொடுத்த கவரையும் பிடுங்கி கொண்டாள். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியானார்கள்.
 
அது காவ்யாவுக்கு நான் வாங்கி கொடுத்தது மா.  இன்னும் நிறைய டிரெஸ் உனக்காக எடுத்து வச்சிருக்கேன். மேல என்னோட ரூம்ல இருக்கு. அதை அவ கிட்ட கொடுத்துரு”என்றான் ஷியாம்.
 
நிச்சயம் முன்னாடி மாப்பிள்ளை பொண்ணுக்கு சேலை வாங்கி கொடுக்க கூடாது”, என்று அனைவருக்கும் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தாள் காயத்ரி.
 
என்ன காயத்ரி சொல்ற?”, என்று கேட்டான் சூர்யா.
 
ஆமா சூர்யா அண்ணா. அண்ணனுக்கும் காவ்யாவுக்கும் இன்னும் நிச்சயம் பண்ணலைல்ல. அதுக்குள்ளே சேலை வாங்கி கொடுக்க கூடாதே”
 
ஏய், இது உனக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டாள் கலைமதி.
 
எங்க அண்ணன் பார்வையை எல்லாருமே கண்டு பிடிச்சிருவாங்க அண்ணி. நான் கண்டு பிடிக்காம இருப்பேனா?”, என்று சிரித்தாள் காயத்ரி.
 
ஷியாமும் அவளை பார்த்து சிரித்தான். “அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ சும்மா உளறாத. நான் உங்க அண்ணனை எல்லாம் கட்டிக்க மாட்டேன்”, என்றாள் காவ்யா.
 
அதையும் பாக்கலாம் காவ்யா. அப்பறம் அண்ணன் தான் உனக்கு டிரெஸ் வாங்கி கொடுக்க கூடாது. ஆனா நான் என் அண்ணிக்கு எடுத்து கொடுக்கலாம். இந்தா”, என்று பிடுங்கிய கவரையே திருப்பி கொடுத்தாள் காயத்ரி.
 
உங்க அண்ணன் ரொம்ப ஏழைன்னு நினைச்சு ஒரு இரண்டாயிரம் ரூபாயை கொடுத்தேன். அதுக்கு பதிலா இந்த சேலையை வாங்கிக்கிறேன்”, என்றாள் காவ்யா.
 
என்னை மட்டும் அண்ணின்னு சொல்ற? காவ்யாவும் உனக்கு அண்ணி தான் காயத்ரி”, என்று சிரிப்புடன் சொன்னாள் கலைமதி.
 
தெரியும் அண்ணி. ஆனா கல்யாணம் ஆகுற  வரைக்கும் காவ்யான்னு தான் சொல்லுவேன். கல்யாணம் அப்புறம் தான் அண்ணி”, என்று சொன்னாள் காயத்ரி.
 
எம்மா தாயே, நீ என்னை அண்ணி பன்னின்னு எல்லாம் சொல்லவே வேண்டாம். உங்க அண்ணனும்  எனக்கு வேண்டாம். இப்படி சேட்டை பண்ற நாத்தனாரும் வேண்டாம்”, என்று சொல்லி இருவரையும் முறைத்து விட்டு சென்று விட்டாள் காவ்யா.
 
என்ன அண்ணா இப்படி சொல்லிட்டு போறா?”, என்று கேட்டாள் கலை.
 
அதெல்லாம் சரியாகிருவா மா. அவளை பத்தி தான் உனக்கு தெரியுமே. சரி நாலு மணிக்கு எல்லாரும் வெளிய கிளம்பலாம். காயு இன்னைக்காவது எங்க கூட வருவ தான?”, என்று கேட்டான் ஷியாம்.
 
ஆமா அண்ணா”, என்று சிரித்தாள் காயத்ரி. “சரி அது வரைக்கும் ரெஸ்ட் எடுங்க”, என்று ஷியாம்  சொன்னதும் அனைவரும் அவரவர் அறைக்கு சென்று விட்டார்கள்.
 
ஷியாமோ நேரடியாக காவ்யாவின் அறைக்குள் நுழைந்து விட்டான். அவனை பார்த்து திகைத்தவள் “என்ன? என்ன ஆச்சு?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.
 
என்ன? என்ன ஆகணும்?”, என்று கேட்டு கொண்டே கதவை தாளிட்டவன் அவளை நெருங்கினான்.
 
என்னோட ரூம்க்கு எதுக்கு வந்தீங்கன்னு கேட்டேன்”, என்று சொல்லி கொண்டே பின்னே நடந்தாள்.
 
எல்லார் முன்னாடியும் நான் வேண்டாம்னு சொல்ற? நீ எப்படி அப்படி சொல்லலாம்?”
 
இங்க பாருங்க ஷியாம். என் மனசுல பட்டதை சொன்னேன். இதுக்காக இப்படி எல்லாம் உள்ள வந்து கிட்ட வர கூடாது”, என்று அவள் சொல்லும் போது சுவரோடு பல்லி போல ஒட்டி இருந்தாள் காவ்யா.
 
அவனும் அவளை நெருங்கி இரு பக்கமும் தன்னுடைய கையை வைத்து சிறை செய்திருந்தான். சிறிது அசைந்தாலும் அவனை தீண்டி விடுவோம் என்பதால் அசையாமல் இருந்தாள் காவ்யா.
 
மனசுல பட்டதை சொல்லுவியா? அதை எல்லாம் ஏத்துக்க முடியாது. நீ என்னோட பொண்டாட்டி. என் தங்கச்சி உன்னை அண்ணின்னு தான் சொல்லுவா. நீயா எப்படி அப்படி சொல்லலாம்”
 
நான் உங்களை எல்லாம் லவ் பண்ண மாட்டேன். நான் லவ்வே பண்ண மாட்டேன்”
 
உங்க அம்மா அப்பா பாக்குற பையனை கட்டிக்கிட்டு லவ் பண்ணுவ தான?”
 
தெரியுதுல்ல? அப்புறம் எதுக்கு இப்படி இம்சை பண்றீங்க? நகருங்க”
 
ஏய் லூசு, உன்னோட அம்மா அப்பா பாக்குற பையன் நானா இருந்தா???”
 

Advertisement