Advertisement

“அங்கிள் ஆண்ட்டி கிட்ட மதி சம்மதம் வாங்குவா. நீ கவலை படாதே”, என்று மதியை மாட்டி விட்டான் சூர்யா.
அதே மாதிரி அன்று வேலைக்கு போய் விட்டு வந்த சூர்யா மதியை அழைத்து கொண்டு காவ்யா வீட்டுக்கு சென்றான்.
முடியாது என்று பல காரணம் சொல்லி மறுத்த திலகாவையும் சுந்தரையும் மதி தான் சம்மதிக்க வைத்தாள். போதா குறைக்கு அவர்களையே அழைத்தாள்.
மதிக்காக சம்மதித்த அவர்களும் நாங்கள் வரவில்லை என்று கூறி காவ்யா மட்டும் செல்ல அனுமதி கொடுத்தார்கள்.
ஷியாம் பிரகாஷ் அவனுடைய வீட்டுக்கு சென்று திரும்பிய பின்னர் அவன் போன் செய்து சொன்னவுடன் இங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.
தன்னுடைய வீட்டுக்கு சென்ற ஷியாமோ  தயக்கத்துடன் தான் உள்ளே நுழைந்தான். அவனை பார்த்த அவனுடைய சித்தி விசாலாட்சி “ஓ நீயா? இந்த நேரத்துல யாருடா எந்த வழிபோக்கன்னு நினைச்சேன்”, என்று எள்ளலாக கேட்டு அவனுக்கு சினமூட்டினாள்.
இவனை கண்டு பாசமாக அவனுடைய தந்தை மோகன் ஓடி வந்ததும் “வா மகனே”, என்று நடித்து கொண்டிருந்தாள்.
அவளுடைய நடிப்பை கண்டு அவளை பார்த்து முறைத்து கொண்டிருந்தான் ஷியாம் பிரகாஷ்.
“உன்னோட சித்தி உன்னை எவ்வளவு பாசமா கூப்பிடுறா? நீ தான் டா அவ மேல வெறுப்பை வச்சிருக்க. சரி சரி இத்தனை நாளா பாக்க வராம இப்பவாது வரணும்னு தோணுச்சே. எங்க டா உன்னோட திங்ஸ் எல்லாம்? கார்ல இருக்கா? சரி சரி நீ உள்ள வா”, என்று அழைத்தார்.
எரிச்சலுடன் தான் உள்ளே நுழைந்தான் ஷியாம் பிரகாஷ். அப்போது மாடியில் இருந்து இறங்கி வந்தார்கள் அவனுடைய தங்கை காயத்ரியும், விசாலத்தின் மகன் விஷ்ணுவும். இருவருமே இவனை வெறுப்புடன் தான் கண்டார்கள்.
அதை பார்த்து மனம் கலங்கினாலும், “எப்படி இருக்க காயத்ரி? இந்தா உனக்கு பாரின்ல இருந்து நிறைய வாங்கிட்டு வந்தேன். விஷ்ணு உனக்கும் தான்”, என்று அவர்களிடம் நீட்டினான்.
அதை கண்ணால் கூட காணாதவர்கள் போல இருந்தவர்கள் நேராக விசாலம் அருகில் சென்று “சித்தி நான்  இன்னைக்கு ரெட்கலர் கார்ல போகட்டா?”, என்று காயத்ரியும் “ஆமா, நானும் அக்கா கூடவே ஸ்கூலுக்கு போறேன் அம்மா”, என்று விஷ்ணுவும் கேட்டு கொண்டிருந்தார்கள்.
“உங்களுக்கு பிடிச்சதை செய்ய இந்த அம்மா என்னைக்காவது தடை சொல்லிருக்கேனா? சந்தோசமா போயிட்டு வாங்க”, என்று தேனொழுகும் குரலில் கூறினாள் விசாலாட்சி.
அவர்களும் அவளிடம் சொல்லி விட்டு, மோகனிடமும் சொல்லி விட்டு  அவனை திரும்பி பாராமல் சென்று விட்டார்கள்.
“உள்ள போய் ரெஸ்ட் எடுப்பா. நீ இருந்து கவனிக்க வேண்டிய ஆபிஸ். நான் தனியா கஷ்ட போட்டுட்டு இருக்கேன். சரி நான் ஆபிஸ் கிளம்பி வரேன்”, என்று ஆபிஸ் அறைக்குள் சென்று விட்டார் மோகன்.
அதே இடத்தில் அடி பட்ட தோற்றத்துடன் நின்ற ஷியாமை பார்த்து ஏளனமாக சிரித்தாள் விசாலாட்சி.
அவளுடைய ஏளன சிரிப்பை காண முடியாமல் அப்படியே அங்கிருந்து திரும்பி விட்டான் ஷியாம் பிரகாஷ்.
அவன் இப்படியே சென்றால் “அந்த விசாலம் அப்பாவிடம் என்னை திட்டி விட்டுட்டு இங்கிருந்து போய்ட்டான். நான் எப்படி கெஞ்சுனேன் தெரியுமா? என்னை தள்ளி விட்டுட்டு போய்ட்டான்னு சொன்னாலும் சொல்லுவா”, என்று எண்ணிக்கொண்டான்.
“இவளை பத்தி இந்த காயத்ரி எப்ப தான் புரிஞ்சிக்க போறாளோ?”, என்று ஒரு விரக்தி புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
நேராக தன்னுடைய வீட்டுக்கு வந்தவன் சூர்யாவை அழைத்தான். அவன் அழைப்பு வந்ததும் குழப்பத்துடன் எடுத்தவனுக்கு அவனுடைய சோகமான குரலே என்ன நடந்திருக்கும் என்று உணர்த்தியதால் “இன்னைக்கு நாங்க கிளம்புறோம் டா”, என்று சொல்லி போனை வைத்து விட்டு மதியை கிளப்பி அவனும் கிளம்பி காரை எடுத்து கொண்டு காவ்யாவையும் அழைத்து கொண்டு கிளம்பி விட்டான்.
காரில் மதியும், காவ்யாவும் பின்னே அமர்ந்திருந்தார்கள். “நான் தனிமையை உணர கூடாதுன்னு நினைச்சு தான் அண்ணா மதியை பின்னாடி உக்கார வச்சிருக்காங்க”, என்று எண்ணி கொண்டாள் காவ்யா.
காரும் குளிர்ச்சியான மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. காவ்யாவும் மதியும் வழக்கடித்து கொண்டிருந்தார்கள்.
ஒரு பெரிய மாளிகையின் முன் காரை நிறுத்தினான் சூர்யா. அவனை கண்டதும் செக்யூரிட்டி உள்ளே அனுமதித்தான்.
காவ்யாவும், மதியும் அந்த அழகான மாளிகையும் சுற்றி பூத்து குலுங்கி கொண்டிருந்த மலர்களையும் கண்டு வியந்து போனார்கள்.
அவர்கள் வரும் நேரம் என்பதால் குளிருக்கு இதமாக டீ தயாரித்து கொண்டிருந்த ஷியாம் அவர்கள் வரவை அறிந்து வெளியே ஓடி வந்தான்.
வந்தவன் அங்கே பூவை ரசித்து கொண்டிருந்த அவனுடைய பூவான காவ்யாவை கண்டு திக் பிரம்மை அடைந்தான். சூர்யாவை வரவேற்க வேண்டும் என்பதை கூட மறந்து அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். ஒரு நிமிடம் “கனவு காண்கிறேனோ?”, என்று கூட எண்ணி கொண்டான். தன்னவள் தன்னுடைய வீட்டில் இருக்கும் அந்த நொடி அவனுக்கு வெகு அழகாக தோன்றியது. வெறும் நிழல் படத்தை பார்த்து மட்டும் காதல் கொண்டு அவளுடனே வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு அவள் வருகை இன்ப ஊற்றாக இருந்தது.
அவன் பார்வை போன திசையை கண்ட சூர்யா, “அது கலையோட பிரண்ட் காவ்யா டா. அவளுக்கும் லீவ்.  அதான் கூட்டிட்டு வந்தேன்”, என்று விளக்கம் கொடுத்தான்.
சூர்யா பேச ஆரம்பித்த பின்னர் தான் மதியும், காவ்யாவும் ஷியாம் பக்கம் திரும்பினார்கள். அப்போது தான் சுயநினைவுக்கே வந்தான் ஷியாம் பிரகாஷ்.
சூர்யாவை கட்டி கொண்ட ஷியாம் “எப்படி டா இருக்க? ரொம்ப வருஷம் ஆச்சு பாத்து. மதி எப்படி மா இருக்க? உள்ள வா டா.  நீயும் உள்ள வா மா. நீங்களும் உள்ள வாங்க”, என்று காவ்யாவையும் அழைத்தான்.
“நல்லா இருக்கேன் டா”, என்று சூர்யாவும் “எப்படி அண்ணா இருக்கீங்க?”, என்று மதியும் கேட்டார்கள்.
அவர்களுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு “செமையா இருக்கான் இவன்”, என்று தோன்றியது. “பாவம் இவன் தான் அண்ணாவோட ஏழை பிரண்ட் போல? இந்த பங்களாவை பாத்துக்குற வேலை தான் செய்றானா? கண்டிப்பா இவனை இவன் தங்கச்சி கூட சேத்து வைக்கணும்”, என்று எண்ணி கொண்டாள்.
அடிக்கடி அவள் பக்கம் போக துடித்த பார்வையை அடக்கி ஆள்வதுக்குள்  வெகுவாக களைத்து போனான் ஷியாம்.
எல்லாரையும் உள்ளே அழைத்த ஷியாம் சூர்யாவை கை பிடித்து அழைத்து சென்றான். “இவன் தான் அண்ணாவோட பிரண்டா டி? செமையா இருக்கான்ல?”, என்று மதியின் காதை கடித்தாள் காவ்யா.
“ஏண்டி, யாரை பாத்தாலும் இந்த டயலாக்கை சொல்ல மறந்துறாதே. அமைதியா வா”, என்று அவளை பேச விடாமல் செய்து உள்ளே அழைத்து வந்தாள் கலைமதி.
அனைவரையும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர வைத்து விட்டு எல்லாருக்கும் டீ கொடுத்த ஷியாம் “எனக்கு மட்டும் சமைக்க எதுக்கு வேலைக்காரின்னு வேண்டாம்னு நினைச்சேன் டா. இப்ப தான் நீங்க வந்துடீங்களே? வாட்ச்மேன் கிட்ட சொல்லி நல்ல ஆளை வேலைக்கு வர சொல்லி சொல்லிட்டு வரேன்”, என்று வெளியே சென்றான்.
பின் வாட்ச்மேனிடம் சொல்லி விட்டு இவர்களிடம் வந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு இரண்டு அறைகளை காட்டி ஓய்வெடுக்க அனுப்பினான்.
அறைக்குள் சென்றவுடன் “இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு அத்தான். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க இருந்து அண்ணா எதுக்கு பாரின்ல போய் கஷ்ட படுறாங்க?”, என்று கேட்டாள் கலைமதி.
“அவன் தலை எழுத்து கலை. சொந்த குடும்பத்தை கைக்கு எட்டுற  தூரத்துல வச்சிக்கிட்டு அவங்க கிட்ட இருந்து பிரிஞ்சு இருக்கணும்னா இன்னும் வேதனை தான? அதனால தான் அங்கேயே செட்டில் ஆகிட்டான். சரி உனக்கு இந்த இடம் மட்டும் தான் பிடிச்சிருக்கா?”, என்று விஷமமாக கேட்டான் சூர்யா.
“ஆமா, வேற என்ன சொல்லணும்?”
“இந்த குளிர் பிடிக்கலையா கலை?”, என்று கிசுகிசுப்பாக ஒலித்தது சூர்யாவின் குரல்.
“குளிர் எப்படி பிடிக்கும்? இதுல குளிக்கணும்னு நினைச்சாலே கடுப்பா இருக்கு. ஆனாலும் கேரளா காஷ்மீர்ல இதை விட குளிரா இருக்கும்ல? அங்க எல்லாம் எப்படி தான் இருக்காங்களோ?”
“அவங்களுக்கு பழகிருச்சு கலை. புதுசா வர நமக்கு தான் தாங்கிக்கிறது கஷ்டம். ஆனா நமக்கும் ஒரு வழி இருக்கு குளிரை குறைக்க”
“என்ன வழி அத்தான்?”
“இந்த வழி தான்”, என்று சொல்லி கொண்டே அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.
அவன் தோள் வளைவில் முகம் புதைத்தவள் அவன் முதுகில் கை கோர்த்து இறுக்கி கொண்டு “யாரோ படிப்பு முடியுற வரைக்கும் சும்மா இருக்கணும்னு சொன்னாங்க”, என்றாள்.
“ஹ்ம்ம் ஆமா, அதுக்காக இங்க வந்து கட்டி பிடிக்க கூடாது, முத்தம் கொடுக்க கூடாதுன்னு இருக்கா என்ன? உன்னை படிக்கும் போது தானே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன்? லீவுல எப்படி வேணும்னாலும் தொல்லை செய்யலாம்”, என்று சொல்லி கொண்டே அவள் உதட்டை குறுகுறுவென்று பார்த்தான்.
அவன் பார்வையில் முகம் சிவந்தவள் “விடுங்க குளிக்க போகணும்”, என்று சொன்னாள்.
“அதுக்குள்ளே குளிச்சு என்ன செய்ய போற? இந்த அம்மாவால இத்தனை நாள் ஒரு முத்தம் கூட கொடுக்கல. இப்ப கொடுத்துக்குறேன் டி”, என்று சொல்லி கொண்டே அவன் முகம் நோக்கி குனிந்தவன் அவள் உதடுகளை சிறை செய்தான். அவனுடைய முத்தத்தில் அவளும் அவனுக்குள்ளே தொலைந்து போனாள்.
காவ்யாவை ஒரு அறையில் விட்ட ஷியாமோ, “இந்த ரூம் உங்களுக்கு ஓகே தானே?”, என்று கேட்டான்.
“ஓகே இல்லைனா பெரிய மாளிகையை தர போறீங்களா சார்? பாவம் நீங்களே பரம ஏழை. எங்களுக்காக ரொம்ப வேலை வேற செய்யணும்? அதனால எப்படி இருந்தாலும் நான் அட் ஜஸ்ட் பண்ணிக்குவேன்”, என்று சொன்னாள் காவ்யா.
“இவ கிண்டல் பண்றாளா?”, என்று நினைத்து அவள் முகத்தை பார்த்தான் ஷியாம். அவளோ சீரியாசாக தான் சொல்லி கொண்டிருந்தாள்.
“என்ன ஏழை? என்ன சொல்றீங்க?”, என்று கேட்டான் ஷியாம் பிரகாஷ்.
“சாரி, உங்க கஷ்டத்தை நான் நியாபக படுத்திட்டேனா? சாரிங்க. நீங்க ரொம்ப ஏழைன்னு எனக்கு தெரியும். நாங்க  கெஸ்ட்டா வந்து தங்கி சாப்பிடுறதுக்கு கூட நீங்க அதிகமா வேலை செய்யணும்.  கவலை படாதீங்க. உங்களுக்கு அதிகமா செலவு வைக்க மாட்டோம். இந்த மாளிகையை பாத்துக்குற வேலை தான பாக்குறீங்க? இங்க சரியா சம்பளம் கொடுத்துருவாங்களா?”, என்று கேட்டாள் காவ்யா.
அவள் கேள்வியில்  மனதுக்குள் சிரித்து கொண்டவன் அவளை பார்த்தும் சிரித்த படி “சரியா கொடுத்துருவாங்க.  இந்த ரூம் வசதி இல்லைன்னா வேற ரூம் கொடுக்கலாம்னு தான் கேட்டேன்”, என்றான்.
“இந்த ரூமே வசதியா தான் இருக்கு. நான் குளிச்சிட்டு வரேன்”, என்று திரும்பினாள்.
“இருங்க, உங்களுக்கு ஹீட்டர் ஆன் பண்ண தெரியுமா? விலகுங்க, நான் சொல்லி தரேன்”
“அதெல்லாம் தெரியும். நீங்க போங்க”, என்று புன்னகையுடன்  சொன்ன காவ்யாவை அப்படியே அள்ளி அணைக்க ஆவல் வந்தது ஷியாமுக்கு. அதை மறைத்தவன் “ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

Advertisement