Advertisement

அத்தியாயம் 11
பாதைகள் இல்லாவிட்டாலும்
உன் காலடியே
எனக்கு புதிய பாதையே
உருவாக்குவது விந்தையோ!!!
முதல் பார்வையிலே மனதை கொள்ளை கொண்ட காவ்யா, ஷியாம் பிரகாஷ் மனதில் முழுவதுமாக நுழைந்து விட்டாள்.
அவள் நினைவிலே அன்றைய வேலையை துடங்கினான் ஷியாம். அன்று  மட்டும் அல்லாமல் அதற்கு பின்னரும் அவள் நினைவிலே அவன் வாழ்ந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவளை நேரில் கண்டு காதலை சொல்ல அவன் மனது பரபரத்தது.
அவனுக்கு கொடுக்க பட்ட புராஜெக்ட் வேலையை மின்னல் வேகத்தில் முடிக்க துடங்கினான்.
அங்கே காவ்யாவோ அவனை பற்றி எதுவும் அறியாமல் மதியுடன் காலேஜ் சென்று கொண்டிருந்தாள்.
கலைமதியும் சந்தோசமாக இருந்தாள். சூர்யாவோ  அவளை பொறுப்பாக கவனித்து கொண்டான். இப்படியே அனைவருடைய வாழ்க்கையும் சாதாரணமாக சென்று கொண்டிருந்தது.
ஆனால் கலைமதி மனதில் மட்டும் ஒரு குழப்பம் சூழ்ந்திருந்தது. அதை அவனிடம் வெளிப்படையாக சூர்யாவிடம் கேட்க முடியாமல் மனதினுள் வைத்து புழுங்கி கொண்டிருந்தாள். அவள் மனதில் இருக்கும் அந்த கவலையை சூர்யாவும் கவனிக்க தவறி விட்டான்.
அந்த செமஸ்டர் முடிய இன்னும் ஒரு மாதம் இருந்தது. அதற்கு முன் நடந்த மன்த்லி பரீட்சை பேப்பர் கொடுக்க பட்டது. எப்போதும் முதல் மதிப்பெண் வாங்கும் மதி அந்த பரிட்சையில் குறைந்திருந்தாள்.
அவளுடைய வகுப்பு பேராசிரியரும் வீட்டில் இருந்த எதுவோ கோபத்தில் மதி மதிப்பெண் குறைந்ததால் அவளிடம் அந்த மொத்த கோபத்தையும் அவளிடம்  காட்டி விட்டாள்.
தன் மீது தான் தவறு என்று மதிக்கு புரிந்தாலும் இது வரை அவள் இப்படி யாரிடமும் படிப்புக்காக திட்டு வாங்கியதில்லை என்பதால் இன்று வெகுவாக காய பட்டாள்.
காவ்யா தான் மதியை  சமாதான படுத்தினாள். அன்று மாலை மதியை  கூப்பிட வந்த சூர்யா பார்த்தது மதியின் கலங்கின  முகத்தை தான்.
குழப்பத்தில் புருவம் உயர்த்தியவன் அவள் காரில் ஏறி அமர்ந்ததும்  “என்ன மா, என்ன ஆச்சு?”, என்று பொறுப்பாய் விசாரித்தான்.
“ஒன்னும் இல்லை”, என்று பதில் சொன்னவள் அவன் முகம் பார்க்காமல் திரும்பி கொண்டாள்.
“சரி வீட்டுக்கு போன பிறகு கேட்டுக்கலாம்”, என்று நினைத்து கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
வீட்டுக்கு போனதும் அவளிடம் தனியே விசாரிக்க நேரம் பார்த்து கொண்டிருந்தவனுக்கு அந்த நேரத்தை மதி வழங்கவே இல்லை. எப்போதும் மங்களம் அருகிலே சென்று அமர்ந்து கொண்டாள். மங்களத்திடம் சிரித்து பேசி கொண்டு தான் இருந்தாள்.
தன்னை தான் தவிர்க்கிறாள் என்று புரிந்து கொண்டவனுக்கு அவன் மீது எதற்காக கோபம் கொண்டிருக்கிறாள் என்று மட்டும் புரியவே இல்லை.
“நைட் படுக்க வரும் போது கேக்கணும்”. என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தான்.
ஆனால் அவளோ அவன் உள்ளே சென்ற பின்னரும் உள்ளே வரவில்லை. “என்ன ஆச்சு?”, என்று எண்ணி கொண்டே வெளியே வந்தவன் திகைத்தான். அவள் ஹாலில் அமர்ந்து படித்து கொண்டிருந்தாள்.
“இத்தனை நாள் ரூம் குள்ள வச்சு தான படிப்பா? இப்ப ஏன் வெளிய உக்காந்து படிக்கிறா? அம்மா பாத்தா எதாவது நினைப்பாங்களே”,என்று எண்ணி மங்களம் அறையை பார்த்தான். அவர்கள் அறை பூட்டி இருந்தது.
“சரி தூங்க இங்க தான வருவா”, என்று நினைத்து விட்டு மறுபடியும் உள்ளே சென்று விட்டான். ஆனால் அவள் பதினோரு மணி ஆகியும் வராததால் மீண்டும் வெளியே வந்தவன் அவள் எதிரே சென்று அமர்ந்தான்.
“மணி பதினொன்னு ஆகிட்டு கலை. இன்னும் தூங்கலையா?”, என்று கேட்டான் சூர்யா.
“இல்லை படிக்க வேண்டி இருக்கு”, என்று புத்தகத்தில் கண் பதித்தவாறே பதில்  சொன்னாள்.
“நீ இவ்வளவு நேரம் படிக்க மாட்டியே? அது மட்டும் இல்லாம எதுக்கு ஹால்ல உக்காந்துருக்க? உள்ள வர வேண்டியது தான?”
“உள்ள வந்தா படிக்க தோணாது. அதனால தான்”
“கலை, என்ன டி ஆச்சு? ஒரு மாதிரி கோபமாவே பேசுற? எதனால உள்ள வந்தா படிக்க முடியாது? நான் தான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேனே?”
“அதனால தான என்னால படிக்க முடியலை”, என்று எண்ணி கொண்டே அமைதியாக இருந்தாள்.
“என்ன கலை அமைதியா இருக்க? என்ன ஆச்சு? நீ சாயங்காலத்துல இருந்தே சரி இல்லை. காரணம் சொன்னா தான தெரியும்? என் மேல கோபமா?”
“ம்ம்”
அவள் பதிலில் அவளை பார்த்து புன்னகைத்தவன் “என்ன கோபம்னு உள்ள போய் பேசுவோமா? இங்க இருந்து பேசுனா அம்மா எப்ப வேணாலும் எழுந்து வரலாம்”, என்று அழைத்தான்.
“சரி”, என்று எழுந்தவள் புத்தகத்தையும் எடுத்து கொண்டு அறைக்குள் சென்றாள். அவள் பின்னே சென்றவன் அறைக்கதவை அடைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தான்.
அவள் டேபிளில் எதோ செய்து கொண்டிருந்தாள். “மதி இங்க வா. இங்க உக்காரு”, என்று அழைத்தான் சூர்யா.
அவன் முகம் பார்க்காமல் நடந்து வந்தவள், அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.
“இப்ப சொல்லு டி. என் மேல என்ன கோபம்? நான் உன்னை என்ன செஞ்சேன்?”
“நீங்க ஒன்னும் செய்யலை”
“அப்புறம் என்ன கோபம்?”
“இன்னைக்கு மார்க் சீட் கொடுத்தாங்க. எப்பவும் போல மார்க்  வாங்காம இந்த தடவை குறைஞ்சிட்டேன். எங்க மேடம் திட்டிட்டாங்க”
“ஓ, அது தான் இப்படி இருக்கியா? சரி  நீ ஏன் இந்த தடவை சரியா படிக்கல? கல்யாண நேரத்துல கூட நல்ல மார்க் தான வாங்கி இருந்த?”
“என்னால படிக்க முடியல”
“படிக்க முடியலையா? ஏன் கலை?”
“சும்மா தான்”
“இப்படி சொன்னா எப்படி கலை? சொன்னா தான தெரியும்?”
“நீங்க தான் காரணம். உங்களால தான் இந்த மாசம் நான் சரியாவே படிக்கல. படிக்கவும் முடியல”
“என்னாலயா? நான் என்ன செஞ்சேன்? தினமும் வேலைக்கு போயிட்டு வந்து சாப்பிட்டுட்டு படுத்துறேனே? நீ அமைதியா உக்காந்து படிக்கணும்னு தான நான் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தேன்”
“பொய்”
“பொய்யா? என்ன பொய்”
“நான் படிக்கணும்னு டிஸ்டர்ப் பண்ணாம இருந்தேன்னு சொன்னது பொய்”
“ஏன் டி அப்படி சொல்ற?”
“முன்னாடி எல்லாம் என்கிட்ட அன்பா பேசுவீங்க? அப்புறம் அப்புறம் என்கிட்ட…. ப்ச் இப்ப சரியாவே பேசுறது இல்லை. என்னை உங்களுக்கு பிடிக்கலை. அதனால தான் என்கிட்ட பேச மாட்டிக்கிங்க. முன்னாடி எல்லாம் ஒண்ணா தான் படுத்துருப்போம். இப்ப எல்லாம் என்னை விட்டு தள்ளி தான் படுக்குறீங்க?”, என்று திக்கி திணறி சொல்லி விட்டாள்.
“இதுக்கும் இவ படிப்புக்கும் என்ன சம்பந்தம்?”, என்று நினைத்தவனுக்கு அடுத்த நிமிடம் விடை கிடைத்தது.
அவள் கையை பற்றி கொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி அவனை பார்க்க வைத்தான்.
தன் நாடியில் இருந்த அவனுடைய  கையை தட்டி விட்டாள் கலைமதி. “ஏய், கலை இங்க என்னை பாரேன். இப்ப நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. நான் முன்னாடி மாதிரி உன்னை கிஸ் பண்றது இல்லை. கட்டி பிடிக்கிறது இல்லை. அது எதுக்குன்னு உனக்கு குழப்பம். அதனால தான் நீ சரியா படிக்கிறது இல்லையா?”, என்று கேட்டான் சூர்யா.
“ஆமா”, என்று சொல்லாமல் அமைதியாக இருந்தாள் கலை. “ஏய் லூசு, இதை என்கிட்ட முன்னாடியே கேட்டுருக்கலாம்ல? இதை நினைச்சு கவலை பட்டுட்டு இருந்தியா? நான் உனக்காக தான் டி உன்னை விட்டு விலகி இருந்தேன்”, என்று புன்னகையுடன் கூறினான் சூர்யா.
குழப்பமாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் கலைமதி. “நிஜமா தான் கலை மா. நான் அப்படி எல்லாம் உன்னை சீண்டிட்டு இருந்தா நீ படிக்க மாட்டேன்னு நினைச்சேன். அதனால தான் விலகி இருந்தேன்”
“அப்படின்னு யார் சொன்னா? நீங்க என்கிட்டே பேசாம இருந்தது தான் கஷ்டமா இருந்தது. என்னால படிக்கவே முடியலை. எதனாலன்னு யோசிச்சிட்டே இருந்தேன் தெரியுமா அத்தான்?”
“சாரி கலை. நீ இப்படி யோசிச்சிருப்பன்னு  எனக்கு தெரியாது டா. எனக்கும் உன்னை விட்டு விலகி இருக்குறது கஷ்டமா தான் இருந்தது தெரியுமா?”
“அப்புறம் ஏன் அப்படி இருக்கணும்?”
“அதுவா? நம்ம ரிசப்ஷன் முடிஞ்சு ஒரு நாலு நாள் கழிச்சு நீ ஹால் சோபால உக்காந்து படிச்சிட்டு இருந்த. நியாபகம் இருக்கா?”
“ஹ்ம்ம், ஆமா என் ரூம்ல உக்காந்து தான் படிச்சிட்டு இருந்தேன். எதுக்கோ மாமா கூப்பிட்டாங்கன்னு வெளிய வந்தேன். அப்புறம் அங்கேயே உக்காந்து படிச்சிட்டு இருந்தேன். அதை எதுக்கு கேக்குறீங்க?”
“காரணமா தான் கேக்குறேன். அன்னைக்கு நீ அப்பா கிட்ட பேசி முடிச்சு அப்புறம் அவர் அவரோட ரூம்க்கு போன அப்புறம் என்ன நடந்தது?”
நினைத்து பார்த்தவளுக்கு முகம் சிவந்தது. அன்று அவர் எழுந்து போனதும் அமைதியாக படித்து கொண்டிருந்தவள் அருகில் அமர்ந்த சூர்யா, அவளை சீண்ட ஆரம்பித்தான்.
அன்றைய நினைவு இருவருக்கும் வந்தது. படித்து கொண்டிருந்தவள் அவனை பார்த்து சிரித்து விட்டு திரும்பி விட்டாள். ஆனால் அவளுக்கு நெருக்கமாக அமர்ந்த சூர்யாவோ, முதலில் அவள் கையை பிடித்து தன் கைக்குள் வைத்து கொண்டான். பின் ஒவ்வொரு விரலாக நீவி விட்டவன் பின் ஒவ்வொரு விரலுக்கும் முத்த மிட ஆரம்பித்தான். அதில் முற்றிலுமாக கலைமதியின் கவனம் படிப்பில் இருந்து சிதைந்தது.
அவன் சேட்டையை தாங்க முடியாமல் “நான் ரூம்குள்ள போய் தூங்க போறேன்”, என்று எழுந்து சென்று விட்டாள். சிரித்து கொண்டே அமர்ந்திருந்தவனின் கையில் பால் டம்பளரை கொடுத்த மங்களம் அவன் எதிரே அமர்ந்து கொண்டாள்.
“உனக்கு மதியை ரொம்ப பிடிச்சிருக்கு அப்படி தான சூர்யா?”, என்று கேட்டாள் மங்களம்.
“ஆமா மா, இப்ப எதுக்கு இதை கேக்குறீங்க?”, என்று குழப்பமாக கேட்டான்  சூர்யா.
“அந்த பிள்ளை, இந்த அளவுக்கு படிக்கிறதுக்கு ரொம்ப கஷ்ட பட்டிருக்கு சூர்யா. கிட்ட தட்ட அவ படிப்பை பிச்சை வாங்கிருக்கான்னு தான் சொல்லணும். உன் அத்தை காரி அவளுக்கு படிப்புக்குன்னு ஒத்த பைசா தரலையாம். அப்பா இருந்தும் அனாதை மாதிரி ஒரு டிரஸ்ட்ல இருந்து பணம் வாங்கி படிக்கிறது எவ்வளவு கொடுமை? அந்த கொடுமையை தான் மதி அனுபவிச்சிருக்கா. உங்க கல்யாணம் ஆன அன்னைக்கு ஐயோ என் பையன் வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு என் மனசு பரிதவிச்சது உண்மை. ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்ந்து எனக்கு பேரன் பேத்தி பாக்கணும்னு ஆசை. ஆனா மதி படிப்புக்காக எவ்வளவு ஏங்கிருக்கான்னு அவ சொன்னப்ப அவ நல்ல படியா படிச்சு முடிக்கணும்னு ஆசை பட்டேன். அவளோட ஆசையும் அது தான். இன்னும் ஒரு வருசத்துல அவ படிப்பை முடிச்சிருவா. அதுக்கப்புறம் எங்களுக்கு பேரன் பேத்தியை பெத்து கொடுத்தா போதும். உங்க ரெண்டு பேருக்கும் வயசு இருக்கு. அவ முதலில் நல்ல படிக்கட்டும் சூர்யா. ஒரு பெண் படிச்சா அவளோட தலை முறையே படிக்கிற மாதிரி. இப்ப இவ்வளவு நேரம் நல்லா படிச்சிட்டு இருந்தவ நீ வந்த பிறகு தூங்க போய்ட்டா. நீ அவளோட கவனத்தை கலைக்கிறியோன்னு தோணுச்சு. நீ இன்னும் சின்ன பையன் இல்லை சூர்யா. அவள் படிச்சு முடிக்கிற வரைக்கும் அவளை தொல்லை செய்யாத”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் மங்களம்.

Advertisement