Advertisement

அதன் மென்மையை அனுபவிக்க துடித்தது அவன்  ஆண்மை.
அவனுடைய உணர்வுகள் எதையுமே அறியாமல் அப்படியே அவன் தொடுகையை ரசித்து கொண்டிருந்தாள் மதி.
அவனுடைய உதடுகள் அவள் காதில் பட்டும் படாமலும் தீண்டியது. மெதுவாக உதடுகள் காதில் உரச “கலை”, என்று உச்சரித்தான்.
எப்போதுமே அவன் கலை என்று அழைத்தால் மயங்கி போவாள் கலை. இப்போது அந்த அழைப்பே மயக்கமாக வந்தால், அவளும் தான் என்ன செய்வாள்? ஏற்கனவே அவன் மீது சாய்ந்திருந்தவள் மேலும் அவன் மீது சாய்ந்தாள்.
அவளுடைய உடல் மொத்தமாக அவன் மீது உரசியதால் தவித்து போனான் சூர்யா. சூடான அவனுடைய மூச்சு காற்றை தன்னுடைய கன்னத்திலும், காதிலும் உணர்ந்தாள் மதி.
கலை என்று புலம்பியவனோ அவள் கழுத்தில் உதடு பதித்தான். ஒரு கையை அவள் வயிற்றோடு பிடித்திருந்ததால் மற்றொரு கையை சுதந்திரமாக அலைய விட அவன் எண்ணும் போது கண் முன் இருந்த செழுமை வேறு அவனை இம்சித்தது. வயிற்றில் இருந்து கையை மேல்நோக்கி அவன் கொண்டு செல்ல நகற்றும் போது “சூர்யா சூர்யா”, என்ற மங்களத்தின் குரல் கேட்டது.
அதில் நடப்புக்கு திரும்பினார்கள் இருவரும். அவனை விட்டு விலகி நின்றவள் அவன் முகம் பார்க்க முடியாமல் திரும்பியே நின்றாள்.
“மேலே இருந்து லேசா தான் தெரிஞ்சது. முன்னாடி பாத்திருந்தா எப்படி இருந்துருக்கும். இந்த அம்மா கொஞ்சம் நேரம் கழிச்சு கூப்பிட்டுருக்கலாம்”, என்றும் மற்றொரு மனம் “நல்லதா போச்சு கூப்பிட்டாங்க”, என்றும் நினைத்தது.
“சாரி கலை. நீ டிரெஸ் மாத்திட்டு வா”. என்று சொல்லி விட்டு கதவை மூடி விட்டு சென்று விட்டான்.
அவன் போன பின்பும் அப்படியே நின்றவளுக்கு வயிற்றுக்குள் பட்டாம் பூச்சு பறப்பது போல இருந்தது.
“நல்லதா போச்சு முன்னாடி அவன் பாக்கலை. கடைசி வரை திரும்பாம  நின்னு சமாளிச்சிட்டோம்”, என்று நினைத்து கொண்டே வயிற்றில் அவன் கை இருந்த தருணம், அவன் காதில்  கலை என்று முணுமுணுத்த தருணம் என்று ஒவ்வொன்றாக அசை போட்டாள்.
“இதை பத்தி தான் காவ்யா அடிக்கடி பேசுறாளா? அப்ப பொண்டாட்டி, புருஷனுக்குள்ள இப்படி தான் நடக்குமா? அப்பறம் எதுக்கு அத்தான் சாரி சொல்லிட்டு போறாங்க? ஓ நான் படிச்சு முடிச்ச அப்றமான்னா இந்த சாரி சொல்ல மாட்டாங்க போல? சே சீக்கிரம் காலேஜ் முடிஞ்சா நல்லா இருந்திருக்கும்”, என்று நினைத்து கொண்டே குளிக்க ஆரம்பித்தாள்.
சிரித்து கொண்டே வெளியே வந்தவன் “இதோ வரேன் மா. ஒரு நிமிஷம்”, என்று கூறி விட்டு ஏற்கனவே கோர்ட்டை கழட்டி இருந்ததால் பேண்டை மட்டும் கழட்டி விட்டு ஒரு லுங்கியை கட்டி கொண்டு போட்டிருந்த வெள்ளை சட்டையுடன் வெளியே சென்றான்.
அங்கு அமர்ந்திருந்த கலைமதி வீட்டினரை கவனிக்காதவன்  போல மங்களம் அருகில் சென்றவன் “என்ன மா?”, என்று கேட்டான்.
“உன் மாமா, அதான் கலை அப்பா இப்பவே எல்லாரையும் கூட்டிட்டு ஊருக்கு போறேன்னு சொல்றார் பா. நீ நாளைக்காவது போக சொல்லேன்”, என்றாள் மங்களம்.
“சரி அவரிடம் சொல்லலாம்”, என்று நினைத்து திரும்பியவன் கண்ணில் முகம் முழுவதும் முல்லை கட்டி கொண்டு அமர்ந்திருந்த வள்ளி பட்டாள். அவளை பார்த்து எரிச்சல் ஆனவன் “மாமா சொல்றது சரி தான். இப்ப கிளம்புனா ரெண்டு மணி நேரத்துக்குள்ள வீட்டுக்கு போயிருவாங்க. நாளைக்குன்னா ஒரு நாளே வீணா போன மாதிரி இருக்கும்”, என்றான்.
எல்லாருடைய முகமும் அவனுடைய பதிலில் சுருங்கி போனது. “அதான் சூர்யாவே சொல்லிட்டானே? எல்லாரும் கிளம்புங்க”, என்று கூறினார் சண்முகம்.
மதி குளித்து முடித்து வெளியே வரும் போது அனைவரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். “போகாதீங்க”, என்று சொல்வதுக்கு மனது வந்தாலும் வாய் வரவில்லை கலைக்கு.
மங்களம் வேறு, “நீயாவது சொல்லு மா கலை”, என்று அவளிடம் கூறினாள்.
வேறு வழி இல்லாமல் சித்தி மற்றும் பாட்டி, தாத்தா இருந்த அறைக்குள் நுழைய போனவள் காதில் தேன்மொழியின் குரல் கேட்டது.
“இந்த அத்தான் கோர்ட் சட்டைல நல்லாவே இல்லைல மா. சில நேரம் வெள்ளை சட்டை வெள்ளை வேஸ்டின்னு வருவாங்க பாரு. அப்படியே ஹீரோ மாதிரி இருப்பாங்க”, என்று கூறினாள் தேன்மொழி.
இதை கேட்டு உடல் எல்லாம் எரிந்தது மதிக்கு.
“லூசு தேனு. அவனே உனக்கு இல்லைனு ஆகிட்டு. அந்த சனியன் புடிச்சவ வந்து என்ன மாயம் மந்திரம் போட்டாளோ அவளே கதின்னு கிடக்கிறான் உன் அத்தான். இன்னும் தேவை இல்லாம அவனை பத்தி யோசிக்காத”, என்றாள் வள்ளி.
“அத்தானை எப்படி மா மறக்க முடியும்? நம்ம பாத்ததுலே அத்தான் தான் ரொம்ப அழகு தெரியுமா?”
“தேனு என்கிட்ட அடி வாங்காத. இனியொரு தரம் அவனை பத்தி பேசாத சொல்லிட்டேன்”, என்று கண்டிப்புடன் வள்ளி கூறியவுடன் வாயை மூடி கொண்டாள் தேன்மொழி.
“என் அத்தானை இவ எப்படி பாக்கலாம்? அத்தை சொன்ன மாதிரி இவங்களை நான் இருக்க சொல்ல மாட்டேன். இவங்க எல்லாரும் ஊருக்கே போகட்டும். வேஷ்டி சட்டையை கூட ரசிச்சிருக்கா”, என்று கடுப்புடன் நினைத்தவள் மங்களம் அருகில் வந்து “நான் சொல்லியும் அவங்க கேக்கலை அத்தை”, என்று பொய் உரைத்தாள்.
தனியாக அமர்ந்திருந்த சண்முகம் அருகில் சென்ற சூர்யா “சாரி மாமா”, என்று சொன்னான்.
“சூர்யா அப்படி எல்லாம் சொல்லாதப்பா. எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை. எனக்கு மதியை நினைச்சு சந்தோசமா தான் இருக்கு. அவளை நீ நல்லா பாத்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு அப்பனா அவளுக்கு எதையும் செய்ய முடியலைன்னாலும் உன்னை கட்டாய படுத்தி கட்டி வச்சதே அவளுக்கு நான் செஞ்ச பெரிய காரியம். அவளை நல்லா பாத்துக்கோ”, என்று கண்ணீருடன் கூறினார் சண்முகம்.
அனைவரும் கிளம்பியதும் “நான் பஸ் ஸ்டாண்டில் விடுறேன்”, என்று கிளம்பிய சூர்யாவை “நீ இரு பா. நான் விட்டுட்டு வரேன்”, என்று கூறி காரை எடுத்தார்  சுப்ரமணியம்.
மதி கன்னத்தை தட்டி “போய்ட்டு வரேன் பாப்பா. சந்தோசமா இரு டா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார் சண்முகம்.
அவர்கள் சென்றதும் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான் சூர்யா.
“இந்தா மதி, அவனுக்கும் கொடுத்துட்டு நீயும் குடிச்சிட்டு படுங்க”, என்று சொல்லி இரண்டு பால் டம்ளரை கொடுத்த மங்களம் பின் அவளுடைய அறைக்கு சென்று விட்டாள்.
இரண்டு டம்ளரை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தாள் மதி.
அவனோ குளிக்க சென்றிருந்தான். கட்டிலில் அமர்ந்தவள் ஒரு டம்ளரை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.
குளித்து முடித்து வெளியே வந்தவனோ வெறும் லுங்கியுடன் தான் வந்தான். “இவன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டான்”, என்று நினைத்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டாள்.
அவள் வெட்கத்தை அறிந்தவன் சிரித்து கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.
அவன் கையில் டம்பளரை திணித்தாள். அதை வாங்கி கொண்டவன்  “என்ன மேடம் அமைதியா இருக்கீங்க?”, என்று கேட்டான்.
“அத்தான் நான் ஒரு தப்பு செஞ்சிட்டேன்”, என்று பாவமாக சொன்னாள் மதி.
“தப்பா? என்ன தப்பு மா?”
“அத்தை கிட்ட பொய் சொல்லிட்டேன்”
“அம்மா கிட்டயா? என்ன பொய்? எதுக்கு அப்படி சொன்ன?”
“அது வந்து…”
“காரணம் இல்லாம நீ பொய் சொல்லிருக்க மாட்ட கலை. அதனால தயங்காம சொல்லு”
“ஹ்ம்ம் என்னை வெறுக்க மாட்டிங்கள்ல? வாழ்க்கைல எது இல்லாதப்பவும் யார் மேலயும் பொறாமை பட்டது இல்லை. யார் கூடவும் போட்டியும் போட்டது இல்லை. ஆனா இன்னைக்கு மனசுல கோபமா வருது”
“கலை, நீ சொல்றது எனக்கு புரியவே இல்லையே. யார் மேல கோபம் வருது? அம்மா எதாவது சொன்னாங்களா?”
“அத்தை ஒண்ணுமே சொல்லலை. நீங்க வேஷ்டி கட்டுவீங்களா?”
“ஏய் என்னடி ஆச்சு உனக்கு? சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுற?”
“நீங்க பதில் சொல்லுங்க”
“இதுல மிரட்டல் வேறையா? ஊருக்கு வந்தா எதாவது திருவிழான்னா கட்டுவேன் போதுமா? ஏன் கேக்குற?”
“இனி நீங்க ஊருக்கு வந்தா வேஷ்டியை கட்ட கூடாது சரியா?”
“சரி கட்டலை. ஏய் டார்லிங், என்ன மா ஆச்சு?”, என்று கேட்டு கொண்டே அவள் தோளில் கைகளை போட்டான்.
“தேன்மொழிக்கு நீங்க வேஷ்டி சட்டை போட்டா ரொம்ப பிடிக்குமாம். அழகா இருப்பீங்களாம். முன்னாடி எல்லாம் பாத்து ரசிப்பாளாம். அத்தை என்கிட்ட அவங்களை நாளைக்கு போக சொல்லுன்னு சொல்லி என்னை அனுப்புனாங்களா? அப்ப அவ இதை பத்தி பேசுனாளா? எனக்கு கோபமா வந்துட்டு. அவ எப்படி உங்களை பாக்கலாம்? உங்களை பத்தி பேசலாம்னு எரிச்சலா வந்துச்சு. அதனால நாளைக்கு போங்கன்னு அத்தை சொல்ல  சொன்னதை சொல்லாமலே அத்தை கிட்ட போய் நான் சொன்னேன் அவங்க கேக்கலைன்னு பொய் சொல்லிட்டேன் அத்தான். நான் யார் மேலயும் கோபமே பட மாட்டேன் தெரியுமா? ஆனா இப்ப கோபமா வருது. பொய் வேற சொல்லிட்டேன்”, என்று அவன் தோள்களில் சாய்ந்து கொண்டே கூறினாள்.
அவள் கூறியதை கேட்ட சூர்யாவுக்கு ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போல இருந்தது. காதல் என்று தெரியாமலே காதலை சொல்லி கொண்டிருந்த மனைவியை ரசித்தவன் அவளை அப்படியே இறுக்கி கொண்டு “இந்த விசயத்துல உன் கோபமும் தப்பு இல்லை. உன்னோட பொய்யும் தப்பு இல்லை டா”, என்றான்.
விழி விரிய அவனை பார்த்தாள் மதி. அந்த குண்டு கண்களின் இமைகளில் முத்தமிட்டவன் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
“நிஜமாவே வா? ஏன் அப்படி சொல்றீங்க? கோப படுறதும், பொய் சொல்றதும் தப்பு தான அத்தான்?”
“மக்கு பொண்டாட்டி, நீ என்னை ரொம்ப ரொம்ப காதலிக்கிற. அதனால தான் அவ அப்படி பேசுன உடனே உனக்கு கோபம் வருது. இப்ப எந்த பையனாவது லவ் பண்றேன்னு சொல்லி உன்கிட்ட பேசுனா எனக்கு கோபம் வரும். அது உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சதுனால தான? அது மாதிரி தான். என்னை நீ உனக்கு மட்டும் சொந்தமா நினைக்கிற. அதனால இந்த கோபம் வருது. என்னை ரசிக்கிறவ இங்க இருந்து போகணும்னு நினைக்கிற. அதனால தான் அவங்க போகட்டும்னு நினைச்சு பொய் சொல்லிருக்க. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?”
“ஆமால்ல. நீங்க சொல்ற காரணத்துக்கு தான் எனக்கு கோபம் வந்துருக்கு. நீங்க எனக்கு தான அத்தான். அவளுக்கு எல்லாம் இல்லைல. அவ எப்படி உங்களை அப்படி சொல்லலாம்? நீங்க என்னோட அத்தான்”
“ஆமா டி செல்ல குட்டி, நான் உனக்கு தான் அத்தான். உன்னோட புருஷன் மட்டும் தான் போதுமா? அவ சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காத. சின்ன பொண்ணு. அவளை அப்படி வளத்து வச்சிருக்காங்க. கொஞ்ச நாள்ல அவ மாறிருவா. சரியா?”
“ஹ்ம்ம்”
“சரி கலை, நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்”
“என்ன அத்தான்?”
“அப்ப பல்லியை விரட்டும் போது நான் கொடுத்த முத்தம் உனக்கு புடிச்சிருந்ததா?”
அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் மார்பிலே முகம் புதைத்தாள் கலைமதி.
அதை ரசித்தவன் “என்னடி வெக்க படுற? பதில் சொல்லு. அப்ப என்ன நினைச்ச?”, என்று கேட்டான்.
அவன் மார்பில் முகம் புதைத்த படியே “சீக்கிரம் காலேஜ் முடியணும்னு நினைச்சேன்”, என்றாள்.
“வாவ்,  நிஜமாவா? நீயாடி அப்படி எல்லாம் நினைச்ச? நம்ப முடியலையே? சரி செல்லம் எதுக்கு அப்படி நினைச்சீங்க?”
“அதுவா?”
“ம்ம்”
“அதுவந்து… நீங்க செய்றது பிடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருக்குன்னு தெரியுது? ஆனா நான் காலேஜ் முடிக்கலைன்னு தான சாரி எல்லாம் சொல்றீங்க? முடிஞ்ச அப்புறம் என்ன செஞ்சாலும் சாரி சொல்ல மாட்டிங்கள்ல? அதான். நீங்க அப்படி எதாவது செஞ்சிட்டு சாரி கேக்கும் போது எனக்கு எப்படியோ இருக்கு அத்தான். அது மட்டும் இல்லாம நீங்க என் கிட்ட வரதும் எனக்கு பிடிச்சிருக்கு”, என்றாள்.
“முழுசா வளரலைன்னாலும் கொஞ்சமே கொஞ்சம் வளந்துட்ட கண்ணம்மா. முத்தம் கொடுத்தே உன்னை மாத்திருவேன் போல?”, என்று சொல்லி சிரித்தான்.
எந்த மனைவியும் என்னை தொடுறது பிடிச்சிருக்கு என்று கணவனிடம் கூற மாட்டாள். மனதுக்குள் அந்த நினைப்பு இருந்தாலும் அதை வெளியே கூற மாட்டார்கள். ஆனால் வெகுளியாக அதை கூட சொல்லும் தன் மனைவியை பார்த்தவன் “இன்னைக்கு உள்ள கோட்டா இன்னும் ஆரம்பிக்கலை”, என்று சொல்லி அவளுடைய உதடுகளில் தன்னுடைய உதட்டை பதித்தான்.
அதே நேரம் ஆபிஸ்க்கு கிளம்பி முடித்த ஷியாம் பிரகாஷ் இன்னும் நேரம் இருப்பதால் சோபாவில் அமர்ந்து சூர்யா அனுப்பிய போட்டோக்களை பார்த்து கொண்டிருந்தான்.
ஒவ்வொன்றாய் பார்த்து கொண்டே வந்தவனுக்கு ஒரு போட்டோவை விட்டு அங்கே இங்கே பார்வையை திருப்பவே முடிய வில்லை.
கலைமதி அருகில் காவ்யா நின்றிருக்கும் போது எடுத்த போட்டோ தான் அது. சூர்யா கூறியதை வைத்தும், மதி முகத்தில் இருந்த சந்தோஷமும், சூர்யா முகத்தில் இருந்த சிரிப்பையும் பார்த்தவனுக்கு இவள் தான் காவ்யா என்று தோன்றியது.
தோன்றியது மட்டும் அல்லாமல் அவளை பார்த்து மதி மயங்கியும் போனான். கண்கள் கூட சிரித்து கொண்டிருந்த அவளுடைய முகத்தை பார்த்தவனுக்கு ஏனோ அவள் அவனுடையவளாகவே தோன்றினாள்.
மெய் மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் இருந்த புகை படங்களை எல்லாம் மறுபடி மறுபடி பார்த்தான்.
பின் நடப்புக்கு வந்தவன் “லூசா டா நீ? யாருன்னே தெரியாத பொண்ணை இப்படி பாத்துட்டு இருக்க? அவளுக்கு லவ்வர் கூட இருக்கலாம். தேவை இல்லாம மனசை அலைபாய விடாத. வேலையை தவிர சொந்தங்களுக்கு மதிப்பு கொடுத்தா நீ நிம்மதி இல்லாம தான் இருக்கணும். கடைசி வரைக்கும் உனக்கு வேலை மட்டும் தான் துணை”, என்று தனக்குள் கூறி கொண்டு எழுந்து கொண்டான்.
ஆனால் சில நிமிடங்களிலே காவ்யா முகம் மட்டும் கொண்ட போட்டோ  அவனுடைய போனில் ஸ்கிரீன் பிக்ச்சராக வைக்க பட்டிருந்தது.
தித்திப்பு தொடரும்……

Advertisement