Advertisement

அத்தியாயம் 10
உனக்காக நான்
தீட்டிய ஓவியம்
அனைத்துமே அழகான
கல்வெட்டுக்கள் அன்பே!!!
கோர்ட்டும் சூட்டுமாக சூர்யாவும், அழகிய மெரூன் பார்டர் வைத்த வெண்ணிற பட்டில் கலைமதியும் அந்த  ரிசப்ஷன் மேடையில் நின்றார்கள்.
பேசியல், கிரீம் என்று முகத்தில் வெள்ளை அடிக்காமல் கிராமத்தில் நடக்கும் கல்யாணத்தில் பெண்ணுக்கு என்ன மாதிரியான அலங்காரம் இருக்குமோ அதன் படி மதிக்கு செய்திருந்தாள் காவ்யா.
ஏன் என்று மற்றவர்கள் கேட்டதுக்கும் “இப்ப எல்லாரும் போடுற மாதிரி மேக்கப் போட்டா பொண்ணு கிழவி மாதிரி தான் தெரிவா. இப்படி இருந்தா தான் மதி அழகா இருப்பா. மதிக்கும் இது தான் பிடிச்சிருக்குனு சொன்னா”, என்று கூறி விட்டாள் காவ்யா.
மணப்பெண்ணாக அலங்கரிக்க பட்டிருந்த கலைமதியை சூர்யாவும் ரசித்தான். அவன் சென்று மேடையில் நின்ற பின்னர் தான் கலைமதியை அழைத்து வந்தாள் காவ்யா. அதனால் கலை எப்படி உடை அணிந்திருக்கிறாள் என்று சூர்யா முன்னேயே பார்க்க வில்லை. மணமேடைக்கு நடந்து வரும் போது பார்த்தவன் சிலையாகி போனான்.
“நான் எடுத்த சேலை சூப்பரா பொருந்திருக்கு கலைக்கு. கல்யாணம் அன்னைக்கு இவ முகத்தை கூட பார்க்கலை. ஆனா இன்னைக்கு எப்படி இருக்கா? எப்பா , செம. சும்மா தேவதை தான் போ. இந்த சுடிதார் போட்டா தான் எலிக்குஞ்சு மாதிரி குட்டியா இருக்கா. இப்ப பாரு பெரிய பொண்ணு மாதிரி கும்முனு இருக்கா”, என்று மேடை என்றும் பாராமல் சைட் அடித்து கொண்டிருந்தான்.
அவன் அருகில் கலைமதியை நிற்க வைத்த காவ்யா, சூர்யா அருகில் சென்று “அண்ணா கொஞ்சம் நீங்க முன்னாடி பாத்து நின்னா நல்லா இருக்கும். எல்லாரும் உங்களையே பாக்குறாங்க. நீங்க என்னடான்னா பக்கத்துல இருக்குற உங்க பொண்டாட்டியை பாக்குறீங்க? கொஞ்ச நேரம்  பொறுத்து கிட்டா, நாங்க எல்லாம் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிட்டு அவரவர் வீட்டுக்கு போயிருவோம். அதுக்கு பின்னாடி உங்கள் காதல் பார்வையை பரிமாறுங்களேன்”, என்று கிசுகிசுத்தாள்.
“ஹா ஹா, நீ சொல்றது எனக்கு புரியுது காவ்யா. ஆனா உன் பிரண்ட்க்கு புரியலையே. தேவதை மாதிரி அலங்கரிச்சு கூட்டிட்டு வந்துருக்க. அப்படியே சொக்குற மாதிரி இருக்கா. ஆனா நிமிர்ந்து ஒரு பார்வை என்னை பாக்க மாட்டிக்காளே? ஒரு ஓர பார்வை பாத்துட்டான்னா, நானும் முன்னாடி இருக்குற மக்களை பார்ப்பேன்”, என்று சிரித்தான் சூர்யா.
அவன் கிண்டலில் முகம் சிவந்தவள், தன்னுடைய கை அருகே இருந்த அவனுடைய கையில் அழுத்தி கிள்ளி விட்டாள்.
எறும்பு கடித்தது போன்ற அவளுடைய கிள்ளலை ரசித்தவன் கிள்ளிய அவள் விரல்களை பற்றி கொண்டு திருப்பி கொண்டான்.
“ஏய் நீயும் தான் உன் அத்தானை பாரேன் டி? அப்ப இருந்து என் அத்தானை பாக்கணும் பாக்கணும்னு சொல்லிட்டு, இப்ப பாக்காம இருக்க? நீ பாத்தா தான் அவங்க தலை திரும்புமாம்”, என்று சொன்ன காவ்யா சூர்யாவை பார்த்து திகைத்தாள். அவன் நேராக நின்றிருந்தான்.
“அண்ணா அவ பாக்காம, தலையை திருப்ப மாட்டேன்னு சொன்னீங்க? இப்ப திருப்பிடீங்க?”
“என் கலை தான் திரும்ப சொன்னா காவ்யா”
“அப்படியா? அவ பேசவே இல்லையே. அப்ப எப்படி சொன்னா?”
“கையிலே ஒரு கிள்ளு கிள்ளி முன்னாடி பாக்க சொல்லி சிக்னல் செஞ்சா”
“அட பாவிகளா? நான் இங்க ரெண்டு பேரும் கண்ணால பேசிக்குவீங்கன்னு நினைச்சு ஒரு லவ் சீனுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தா நீங்க கையால பேசிக்கிறீங்களே? சரி சரி நீங்க தொடருங்க. அங்க இருந்து எங்க அம்மா என்னை முறைக்கிறாங்க. இன்னும் உங்க கிட்ட ஸ்டேஜ்ல இருந்து வாயடிச்சா அவங்க என் கன்னத்துல அவங்க கையால பேசிருவாங்க”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.
அதன் பின் அனைவரும் வந்து வாழ்த்தினார்கள். அவனுடன் வேலை பார்ப்பவர்கள், கலைமதியின் காலேஜ் பேராசிரியர்கள், கூட படிக்கும் நண்பர்கள் என அனைவரும் வந்து பரிசு கொடுத்து வாழ்த்தினார்கள்.
காவ்யா அம்மா, திலகா வந்து இருவருக்கும் மோதிரம் கொடுத்து மாற்றி மாற்றி போட்டு விட சொன்னாள்.
அடுத்து சூர்யாவின் நண்பர்கள் வந்து இருவரையும்  கிண்டல் அடித்தார்கள்.
கலையுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்த நேரத்தில் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான் சூர்யா. “நான் அழகா இருக்கேனா?”, என்று.
ஆனால் அதற்கு “இல்லை”, என்று பதில் கூறி அவனை திகைக்க வைத்தாள் கலைமதி.
“விளையாட்டுக்கு சொல்றாளோ?”, என்று நினைத்து அவளுடைய முகம் பார்த்தவனோ இன்னும் திகைத்தான். ஏனென்றால் அவள் உண்மையாக தான் கூறி இருந்தாள். இப்போது அவனுக்கு கவலையே வந்திருந்தது.
“ஏன் என்னோட அழகு கலைக்கு புடிக்கலையா? அவளுக்கு புடிச்ச மாதிரி நான் அழகா இல்லையா?”, என்று யோசித்தான்.
அவன் குழப்பத்தை பார்த்தவளோ, “கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க?”, என்று அவன் காதில் உரைத்தாள்.
அவளுடைய அருகாமையும், கிசுகிசுப்பான அவளுடைய குரலும், அதுவும் அவள் சொன்ன வார்த்தைகளும், அதை அவள் ரசித்து சொன்ன விதமும் அவனை எங்கோ கொண்டு சென்றது.
காதல் இல்லாமல் கல்யாணம் செய்தாலும், காதல் வரும் என்று இவர்கள் கண்களை பார்த்து புரிந்து கொள்ளலாம். 
வேண்டாம் என்று கூறியவனை பிடித்து கல்யாணம் செய்து வைத்த மங்களமும், சுப்ரமணியமும் கூட இப்போது இவர்களை வியந்து பார்த்தார்கள்.
மகன், மருமகள் முகங்களில் இருந்த பூரிப்பை பார்த்து பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“தப்பு பண்ணிட்டோமோன்னு நினைச்சு ரொம்ப கலங்கிருக்கேங்க. ஆனா பாருங்களேன். ரெண்டு பேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் படைக்க பட்டது மாதிரி இருக்காங்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு”, என்று கூறினாள் மங்களம். ஆம் என்னும் விதமாய் சுப்ரமணியமும் தலை அசைத்தார். சண்முகமும் அவ்வாறே சந்தோச பட்டார்.
“முகத்தை பார்க்காம  ரெண்டு பேரும் கல்யாணத்தில் இருந்தது என்ன? இப்ப பார்வையை எடுக்க முடியாம பாத்துட்டு இருக்குறது என்ன?”, என்று மனதுக்குள் புகைந்தாள் வள்ளி.
அதன் பின் உணவு வேளை ஆரம்பமானது. மணமக்களை அமர வைத்து விட்டு ஒருவருக்கொருவர் ஊட்டி விட வேண்டும் என்று தொல்லை செய்து கொண்டிருந்தார் போட்டோ கிராபர்.
கல்யாண தினத்தன்று அவன் தாலி கட்டி விட்டு எழுந்து சென்றதால் இப்போது விருப்பமாகவே அனைத்தையும் செய்தான்.
காவ்யாவும் அவளுடைய அம்மா அப்பாவுடன் கிளம்பி விட்டாள். அடுத்து அனைவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
காரில் வீட்டுக்கு வரும் போதும் அவள் கையை பற்றிய படி தான் வந்தான் சூர்யா.
வீட்டுக்கு  சென்றதும் அவர்களுக்கு ஆரற்றி சுற்றி உள்ளே வர விட்டாள் மங்களம். இருவரும் அவர்கள் அறைக்குள் சென்றார்கள்.
குளிக்க உடை எடுத்தவளை “கொஞ்ச நேரம் இரு கலை. அப்பறம் மாத்தலாம்”, என்றான் சூர்யா.
“எதுக்கு அத்தான்?”, என்று கேட்டவளை “கிட்ட வா”, என்று அழைத்து அருகில் வந்தவளை தன் அருகே அமர வைத்து கொண்டான்.
“இந்த டிரஸ்சல எப்படி இருக்க தெரியுமா?”, என்று கூறி அவள் நெற்றி கன்னம், உதடு என்று விரலால் வருடியவன் அழுத்தமாக உதட்டில் முத்தத்தை பதித்தான்.
முத்தத்தில் திளைத்தவள் அவன் விலகியதும் “இதுக்கு தான் இருக்க சொன்னீங்களா?”, என்று சிணுங்களாக கேட்டாள்.
“என்னோட பிரண்ட் ஷியாம் பிரகாஷ் பாரின்ல இருக்கான். நானும் அவனும் ஒண்ணா தான் படிச்சோம். அப்புறம் பாரின்க்கு ஒண்ணா தான் போனோம். அங்க உடம்பு சரி இல்லாம தான் நான் திரும்பி வந்துட்டேன். அவனால கல்யாணத்துக்கு வர முடியலை. அதனால இப்ப அவன் கிட்ட பேசலாம். உன்னை பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தான். அவன் கிட்ட நாம இப்ப பேச போறோம்.  அதுக்கு தான் இப்ப டிரெஸ் மாத்த வேண்டாம்னு சொன்னேன். அதுக்கு முன்னாடி நம்மளும் ஒரு போட்டோ எடுத்துக்கலாம்”, என்று கூறி தன்னுடைய போனை எடுத்து இருவரையும் புகைப்படம் எடுத்தவன் தன் லேப்டாப் எடுத்து முன்னால் வைத்து ஆன் செய்தான்.
அவனையே அமைதியாக பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் கலைமதி.
அதேநேரம் தூங்கி எழுந்து தன்னுடைய கையினால் ஒரு காப்பியை போட்டு கொண்டிருந்தான் ஷியாம். அப்போது அவனுடைய மொபைல் அடித்தது.
எடுத்து நம்பரை பார்த்தான். அது சூர்யா என்று தெரிந்ததும் அவன் முகத்தில் புன்னகை ஒட்டி கொண்டது.
அதுவும் வீடியோ காலில் அவன் அழைத்திருப்பதால், அவனுடைய காலை கட் செய்து விட்டு போனை லேப்டாப்பில் கனெக்ட் செய்து விட்டு சூர்யாவை அழைத்தான் ஷியாம்.
“என்ன கட் பண்ணிட்டாங்க?”, என்று கேட்டு கொண்டிருந்த கலைமதியிடம் “திருப்பி கூப்பிடுவான்”, என்று சூர்யா சொல்லி கொண்டிருக்கும் போது ஷியாம் அழைப்பு வந்தது. அதை ஆன் செய்தான் சூர்யா.
“டேய் மச்சி”, என்று சந்தோஷமாக அழைத்தான் ஷியாம்.
“எப்படி டா இருக்க? தூங்கி எழுந்துட்டியா?”, என்று கேட்டான் சூர்யா.
“ஹ்ம்ம் இருக்கேன் டா. இப்ப தான் எழுந்தேன். நீ எப்படி இருக்க? ஹாய் தங்கச்சி எப்படி மா இருக்க?”, என்று ஷியாம் கேட்டதும் அவனுடைய தங்கச்சி என்ற குரலில் கனிந்தவள் “நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டாள்.
அந்த அண்ணா என்ற அழைப்பில் ஷியாம் மனதில் பல நினைவுகள் வந்து போனது.
அதை அறிந்த சூர்யாவும் அவனை திசை திருப்ப “எப்படி டா கலையை உன் தங்கச்சின்னு கண்டு பிடிச்ச? என்னோட பிரண்டா கூட இருக்கலாம்ல?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
கலை அவனை பார்த்து முறைத்தாள்.
ஷியாமோ “முறைக்க கூடாது தங்கச்சி. முதுகுல நாலு போடணும். ஆனா நீ அதை செய்ய எல்லாம் அவசியமே இல்ல மா. அவன் கிட்ட வேற எந்த பொண்ணும் இப்படி நெருக்கமா உக்கார முடியாது. பக்கத்துல வந்து பேச வந்தாலே சிங்கம் மாதிரி தான் பாப்பான். நீ அவன் கிட்ட இப்படி நெருக்கமா உக்காந்திருக்கும் போதே அது உரிமைக்காரின்னு எனக்கு தெரியாதா?”, என்று கேட்டான்.
அதில் அவளும் சிரித்தாள். சூர்யாவோ அவளை தோளோடு தோளாக அணைத்து கொண்டான்.
“டேய் எனக்கு போன் பண்ணிட்டு அங்க என்ன ரொமான்ஸ்? என் தங்கச்சி தோளில் இருந்து கை எடு”, என்று கூறினான் ஷியாம்.
“ஏய் என்னோட பொண்டாட்டி, நான் என்ன வேணாலும் செய்வேன். அண்ணனுக்கு எல்லாம் கேட்க உரிமை இல்லை”, என்று சொல்லி அவளை வெட்க பட வைத்தான். “நான் அப்புறம் பேசுறேன் அண்ணா”, என்று ஷியாமிடம் கூறிய கலை சூர்யா காதில் எதோ சொல்லிவிட்டு சென்றாள்.
“என்ன டா தங்கச்சி கிளம்பிட்டா?”, என்று கேட்டான் ஷியாம்.
“நீ கிண்டல் பண்ணல்ல? அதான் மேடம்க்கு  வெட்கம்”, என்று சிரித்த சூர்யா “காவ்யா வீட்ல வீட்டுக்கு போய்ட்டாங்களான்னு போன் பண்ணி கேட்டுட்டு வரேன்னு போயிருக்கா டா”, என்றான்.
“காவ்யாவா அது யாரு? சிஸ்டரோட சிஸ்டரா?”
“இல்லை மச்சான். அது அவ கூட படிக்கிறவ. எனக்கு தங்கச்சின்னு வச்சுக்கோயேன். செம வாலு. எங்க ரெண்டு பேரையும் கிண்டல் பண்ணிட்டே இருப்பா. இன்னொரு காமெடி தெரியுமா? முதல் நாள் கலையை பாக்க காலேஜ் போயிருந்தேன் டா. அப்ப நான் தான் கலையோட ஹஸ்பன்டுன்னு தெரியாம என் பிரண்டுக்கு ஒருத்தனை கட்டி வச்சிட்டாங்க சார். அவன் மட்டும் என் பிரண்டை கொடுமை படுத்தட்டும் அவனை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிருவேன்னு மிரட்டினா டா”
“வாவ் இன்டெரெஸ்ட்டிங். அப்பறம் என்ன ஆச்சு?”
“என்ன ஆச்சா? நான் தான் கலை ஹஸ்பன்ட்ன்னு தெரிஞ்ச அப்பறம் ஒரு மாதிரி அசடு வழிஞ்சா பாரு. சின்ன குழந்தைங்க கூட தோத்து போயிரும்”, என்று சிரித்தான் சூர்யா.
“சிரிப்பா இருந்துருக்கும். செம பல்ப் வாங்கின மாதிரி முழிச்சிருப்பா. ஹ்ம்ம் சரி டா. ரிசப்ஷன் போட்டோ இருக்கா? இருந்தா அனுப்பேன்”
“ஹ்ம்ம் அது பிரிண்ட் போட்டு வர நாள் ஆகும் டா. அப்பா என்னோட மொபைல்ல கொஞ்சம் எடுத்து வச்சிருக்காங்க. இப்பவே அனுப்புறேன்”, என்று சொல்லி அதை அனுப்பியும் விட்டான்.
“ஹ்ம்ம் சரி டா. உன்கிட்ட பேசுன அப்புறம் பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு எதை எதையோ பேசி கொண்டிருந்தார்கள். ஆனால் ஷியாம் மனதில் மட்டும் அந்த காவ்யா என்ற பெயர் பதிந்து போனது.
அதற்கு பிறகு கலைமதி வந்தாள். பின் நண்பர்கள் இருவரும் காலேஜில் செய்த அரட்டையை அவளிடம் கூறி அவளை சிரிக்க வைத்து கொண்டிருந்தார்கள்.
அதற்கு பிறகு ஷியாம் ஆபிஸ் செல்ல நேரம் ஆனதால் “நைட் கூப்பிடுறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
“இப்ப டிரெஸ் மாத்த போகட்டா?”, என்று கேட்டாள் கலை.
“ஹ்ம்ம் சரி மா. எதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடு”, என்று சிரிக்காமல் சொன்னான் சூர்யா.’
“இல்லை வேண்டாம். இதுல என்ன ஹெல்ப் பண்ண இருக்கு?”, என்று சொல்லி விட்டு எழுந்து போனாள்.
“தத்தி, டிரெஸ்ஸை கழட்டி விட ஹெல்ப் வேணுமான்னு கேட்டா, எல்லாம் தெரிஞ்சவளா இருந்தா ச்சி போங்க  அப்படின்னு சிணுங்கிருப்பா? என்ன ஹெல்ப்புனு கேட்டுட்டு போறா பாரு?”, என்று சிரித்து கொண்டிருக்கும் போதே “அத்தான் அத்தான் ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்”, என்று கத்தினாள்.
“என்னவோ எதுவோ?”, என்று ஓடி போனான். அவளோ கழட்டிய சேலையை நெஞ்சோடு சுருட்டி வைத்து கொண்டு மேலே பார்த்து “அந்த பல்லியை விரட்டி விடுங்களேன்”, என்று சொன்னாள்.
“பல்லிக்கா இப்படி கத்தினா?”, என்று நினைத்தவனுக்கு  அவள் முகத்தில் இருந்த பயம் பல்லியின் மீது அவளுக்கு இருந்த பயத்தை தெள்ள தெளிவாக உணர்த்தியது.
“பாப்பா தான்”, என்று நினைத்து கொண்டு பாத்ரூம் வாசலில் இருந்த துடைப்பத்தை  எடுத்து பல்லியை வெளியே  தள்ளியவன் அந்த ஜன்னலையும் அடைத்து விட்டான்.
“இதுக்கெல்லாமா டி பய படுவ?”, என்று கேட்டவனை பார்த்து அசடு வழிந்தாள்.
“நல்ல ஆள் தான் போ”, என்று சொல்லி விட்டு வெளியே வர பார்த்தவன் அவளை பார்த்து சிரிப்பதற்காக  திரும்பினான்.
அப்போது அவன் கண்ணில் பட்டது ஜாக்கெட் மறைக்காத அவள் முதுகும், சட்டைக்கும் பாவாடைக்கும் இடையே தெரிந்த இடமும் தான். மெரூன் கலர் சட்டையும், மெரூன் கலர் பாவாடையும் சேர்ந்து அந்த உடை மறைக்காத அவள் உடலை பளீரென்று தூக்கி காட்டியது. அதுவும் அந்த டியூப் லைட் வெளிச்சத்தில் மின்னியது என்றும் சொல்லலாம்.
அதையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவனுக்கு ஊமத்தம் பிடித்தது போல இருந்தது.
“அப்படியே வெளிய போயிரு டா”, என்று ஒரு மனமும், “ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கவா?”, என்று மற்றொரு மனமும் கூறியது.
அவளோ அவன் உணர்வுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த பல்லி இனி உள்ள வராதுல்ல என்று கணக்கிட்டு கொண்டிருந்தாள்.
“நான் என்ன செஞ்சாலும், அதுக்கப்புறம் என்ன ஆகும்னு கலைக்கு தெரியாது. நான் எல்லை மீறினா தான ஆபத்து? அதனால முத்தம் கொடுத்தா  தப்பு இல்லை”, என்று தனக்கு தானே கூறி கொண்டு அவளை நெருங்கினான்.
“இப்ப டிரெஸ் மாத்தலாம்”, என்று நினைத்து கையில் இருந்த சேலையை அங்கு இருந்த ஹேங்கரில் போட்டாள் கலைமதி. அதுக்கு பின்னர் தான் கதவை பூட்ட வேண்டும் என்ற நினைவே வந்தது.
அவள் திரும்புவதுக்குள் அவனுடைய முதுகில் அழுத்தமாக உதடு  பதித்தான் சூர்யா. அவன் கைகளோ அவள் இடுப்பில் பதிந்தது.
அதிர்ச்சியானாள் மதி. அப்படியே அவள் கண்கள் இறுக மூடி கொண்டது. அவளுடைய முதுகில் அவன் உதடுகள் பயணித்தது என்றால் அவனுடைய இடையில் அவன் கைகள் ஊர்ந்தது.
இடுப்பில் இருந்த கை மெதுவாக அவள் வயிற்றுக்கு வரும் போது தான் முன்னே சேலை இடைஞ்சல் இல்லாமல் அவள் தூக்கி போட்டதே நினைவில் வந்தது. மெதுவாக ஊர்ந்த கை அவளுடைய இடையை இறுக்கி பிடித்தது.
 
அவன் ஏற்படுத்திய உணர்வுகளில் கண்களை மூடி இருந்த மதிக்கு அவனுடைய கை பயணிக்கும்  இடத்தை மூளை எடுத்து காட்டியது.
வயிற்றில் இருந்த அவனுடைய கை மீது தன்னுடைய கையை வைத்து அழுத்தமாக பிடித்தாள்.
அவளோ தடுக்க நினைத்து செய்தாள். அவனோ கிடைத்தது வாய்ப்பு என அவள் வயிற்றிலே கைகளால் வருடி கொண்டிருந்தான்.
அது அவளுக்கு கூச்சத்தை கொடுக்க அவன் மீதே சாய்ந்தாள். அப்படி சாய்ந்ததால் முதுகில் இருந்த உதட்டை அவளுடைய முதுகில் இருந்து எடுத்து விட்டு அவளை தன் மீதே சாய்த்து கொண்டான்.
இப்போது அவன் மீது அவள் முழுவதுமாக  சாய்ந்து இருந்ததால் பின் பக்கமாக அவளை கட்டி   இருந்தவன் அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தான் .
ஆனால் அதன் பின் கண்ணில் தெரிந்த காட்சியில் விக்கித்து நின்றான்.
அவளுடைய சட்டை கொஞ்சம் இறங்கி இருந்ததாலும், மிக அருகில் மேல் பக்கமாக இருந்து பார்த்ததாலும்  அவளுடைய பெண்மை இவனுடைய கண்ணில் தெளிவாக விழுந்தது. வெண்ணிறமாக தெரிந்த முதுகை பார்த்தே பித்து பிடித்தவன் போல அவளை நெருங்கியவன், இப்போது கண்ட காட்சியில் திகைத்து போனான்.

Advertisement