Advertisement

“இல்லமா இவ அக்கா இவளை விட ரெண்டு வயசு பெரியவ” கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறே அப்பெண்மணி சொல்ல 
‘இரட்டையர்கள் இல்லையென்றால் அந்த ஆத்மா…” புரியாது குழம்பியவள் “அவங்க ரெண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்களா?” 
“இல்லமா ஸ்வீட்டி நீள முகம், கலரா  அழகா இருப்பா.. அவ அக்கா கொஞ்சம் குள்ளம், கலர் கூட கம்மி, வட்ட முகம், பெரிய கண்கள்” பெரியவர் சொல்ல முற்றாக குழம்பித்தான் போனாள் மதியழகி. 
“இவ என் சுவீட்டியே இல்ல. அவ இப்படி அதிர்ந்து பேச மாட்டா, எப்பொழுதுமே முகத்துல புன்னகையிருக்கும். என்ன பார்த்தாவே கண்கள் மின்னி முகத்துல அப்படியொரு வெக்க சிரிப்பு தோன்றும். அதுவே அவ மனசுல நான் இருக்கேன்னு எனக்கு உணர்த்தும்.  அமெரிக்கால இருக்கறப்போவே இப்படியெல்லாம் டிரஸ் போடவே மாட்டா. சத்தியமா இவ என் ஸ்வீட்டி இல்ல” 
நிர்மல் சந்தித்த சுவீட்டிக்கும் இவளுக்கும் இருக்கும் ஆயிரம் வித்தியாசத்தைக் கண்டு அதிர்ச்சியில் அவனின் காதல் மனம் சுக்குநூறாக உடைய நிலைகுலைந்து புலம்ப ஆரம்பித்தவனை  ஒரு வழியாக சமாதானப் படுத்தி வண்டியில் அமர்த்தியிருந்தாள் மதியழகி. 
அவர்கள் இருவரும் வீடு வருவதைக் அறிந்துக் கொண்ட அக்ஷய் நிர்மலுக்கு தேவை மன அமைதி என்று புரிய அவனை தூங்கவைக்க விஸ்கியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்திருந்தான்.
ஏற்கனவே குழம்பிப் போய் இருந்த மதியழகிக்கு ஸ்வீட்டியை பற்றிய தகவல்களில் பெரிதாக ஒன்றும் புரியவில்லை. வீட்டிலும் வெளியிலும் ஸ்வீட்டிதான் செல்லம். அவளின் அக்கா ஒரு ஆக்சிடண்டில் இறந்திருக்கின்றாள். அதன் பின் தான் அவள் முற்றாக மாறி இருக்கின்றாள். இதில் ஸ்வீட்டியை போல் இருக்கும் ஆத்மா யார்? அவளுக்கும் ஸ்வீட்டிக்கும் என்ன உறவு? ஸ்வீட்டியின் உடலை வேறொரு ஆத்மா அக்கிரமித்திருந்தால் அவளை தொட்ட உடன் அது மதிக்கு புரிந்திருக்கும். அப்படி எதுவும் அவள் உணரவில்லை. யாரிடம் என்னவென்று கேட்பது?
ஒன்றும் புரியாமல் இருக்கவே கண்கள் மூடி தூங்கும் அக்ஷையின் மேல் கண்கள் செல்ல “இவனுக்கு எப்படித் தெரியும் நான் ஸ்வீட்டியை பற்றி விசாரிக்கத்தான் வந்தேனென்று” யோசனையாக பார்த்திருக்க,
“நிர்மல் அப்சட்டாக வரும் பொழுதே பாஸ்கர விசாரிக்க சொல்லிட்டேன். நீங்க ரெண்டு பேரும் இந்த ரெடூரன்ட் வந்தது, இங்க நடந்தது எல்லாமே எனக்கு தெரிய வரவும் ஸ்வீட்டிய பத்தி விசாரிக்க சொன்னேன். அந்த மெயில் தான் உன் கைல இருக்கு” கண்களை மூடியவாறே அக்ஷய் சொல்ல 
“இவனுக்கு பிடரில கூட கண்ணு போல” மதி முணுமுணுக்க அவள் கண்களில் அக்ஷய் முத்தம் வைத்தது வந்து போக
 “அவன் தான் கொடுக்கிறான் என்றால் நீயும் அனுபவிச்சு கிட்டு இருக்கியே! இப்போ அவன் கூட அத பத்தி பேசி சண்டை கூட போட முடியல, நான் கிஸ் பண்ணும் போது நீயும் தான் நல்ல ஒத்துழைச்சனு உன்ன கேவலமா பார்ப்பான்” மதியின் மனசாட்ச்சி ஏகத்துக்கும் கிண்டல் செய்ய
அக்ஷையை மனதால் வெறுக்கும் தன்னால் எப்படி அவன் கொடுத்த முத்தத்தில் இருக்கும் இடம் மறந்து, தன்னையே தொலைத்து அவனுள் புதைய தோன்றியது என்று புரியவில்லை. 
“மதி நீ அக்ஷய வெறுக்குற, உனக்கு அவனை சுத்தமா பிடிக்காது” ஜபம் போல் சொல்லிக் கொண்டவள் தலையை உலுக்கி அக்ஷையின் சிந்தனைகளை மூட்டை கட்டி வைக்க முயன்றாள்.
“இப்போ என்ன செய்ய போற மதி” அக்ஷையின் குரல் அவளை அவன் புறம் திருப்ப 
“தெரியல முதலில் அந்த ஆத்மாவை கண்டு பிடிக்கணும்”
“எந்த ஆத்மா?”
“ஸ்வீட்டிய போல் இருக்கும் ஆத்மா” என்றவள் அந்த ஆத்மாவை கண்டதையும், ஸ்வீட்டியின் பெற்றோர்கள் சொன்னதையும் அக்ஷையிடம் சொல்ல 
புரியாது பார்த்திருந்தவனோ! “அந்த ஆத்மாவை எப்படி கண்டு பிடிக்க போற?” 
“கேள்வியெல்லாம் நல்லா தான் கேக்குறான். பதில் தான் இல்ல” மதியின் மனம் சொல்ல வாயோ “தெரியல, இந்த ரெஸ்டூரண்ட்டுல போய் வெயிட் பண்ணனும்” என்றவள் இறங்கி நடக்க ஒரு பெரிய கொட்டாவியை விட்டவாறே கைகளைத் தேய்த்துக் கொண்டவன் வண்டியிலிருந்து  இறங்கி அவள் பின்னால் நடக்கலானான். 
அக்ஷையும் மதியும் ஒரே மேசையில் அமர்ந்துக் கொள்ள அக்ஷையின் இரு பாதுகாப்பாளர்கள் அவனின் பின் புறமும், பக்க வாட்டிலும் அமர்ந்துக் கொண்டனர். 
அவர்களைக் கண்டு புருவம் உயர்த்தியவள் இவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்று அக்ஷையிடம் பார்வையாலையே வினவ அவனும் “தெரியாது” என்று உதடு பிதுக்கி சொல்ல மதியின் பார்வை அவன் உதட்டிலையே நிலைத்தது. 
அவளின் சிந்தனை செல்லும் திசையை கண்டு கொண்டவன் முத்தமிடுவது போல் உதடு குவிக்க மதியின் கண்கள் அக்ஷையின் கண்களை சந்தித்தன.
குறும்பாக சிரித்தவாறே விரலால் அவனின் கீழுதடை தடவியவன், நாக்கால் ஈரப்படுத்தி 
“நால்லா தான் இருந்திச்சு, இன்னொரு நாள் ட்ரை பண்ணலாமா?” என்று கேட்க 
கன்னத்தில் முத்தமிட்டதுக்கே கையை ஓங்கியவள், உதட்டில் முத்தமிடவும் மெய்மறந்து நின்ற நிலை நியாபகத்தில் வர மதியழகிக்கு அப்படியே பூமிக்குள் புதைந்து விட மாட்டேனா என்று தோன்றியது. 
அவன் முகம் பார்க்க சங்கடப்பட்டு பார்வையை அங்கும் இங்கும் செலுத்தியவள் அவன் சொன்னது காதில் விழவே இல்லை என்பது போல் இருக்க முயற்சி செய்ய, 
எந்த நேரமும் கண்ணில் அனல் கக்கும் மதியழகியின் முகத்தில் வெட்கமும், தடுமாற்றமும் போட்டிப் போட அவளை ரசனையாக பார்த்திருந்தான் அக்ஷய். 
நேரம் தான் சென்று கொண்டிருந்ததே தவிர ஆத்மா வருவதாக இல்லை. அக்ஷய் நாலு காபி சாப்பிட்டிருப்பான், மதி ஒரு ஆப்பிள் ஜூஸ், ஒரு ஆரஞ்சு ஜூஸ் பாதுகாவலர்கள் என்ன சாப்பிட்டார்களோ வித விதமா மேசைக்கு வந்து கொண்டே இருந்தது. 
“இவ்வளவு காபி உடம்புக்கு ஆகாது” அக்கறையா? கேலியா? என்று புரியாதவாறு மதி சொல்ல 
“எங்கம்மா நல்லா காபி போடுவாங்க, அப்பா விரும்பி சாப்பிடுவாங்க. அவங்க நியாபகம் வரும் பொழுது சாப்பிட ஆரம்பிச்சது விட முடியல, நீ வேறேதாவது சஜஸ் பண்ணேன்” சொல்லியவாறே அவளின் உதடுகளை பார்வையால் மொய்க்க
“உனக்கு போய் அட்வைஸ் பண்ணேன் என்ன சொல்லணும்” முணுமுணுத்தவள் பேச்சை மாற்றும் பொருட்டு “உங்க பாடிகாட்ஸுக்கு சாப்பாடு போட மாட்டிங்களா? இந்த கட்டு கட்டுறாங்க, விட்டா நூறு மாடி கட்டுவாங்க போல இருக்கு” 
அவர்களின் பக்கம் பார்வையை திரும்பியவன் “அவங்களே சமைச்சி சாப்பிடுவாங்க, போரடிக்காதா?  இந்த மாதிரி வித, விதமா கிடைக்கும் பொழுது சாப்பிடுறதுல என்ன தவறு. அதுவும் அவங்க சொந்த காசுல” 
அக்ஷையின் காசில் சாப்பிடுவதாக மதி நினைக்க, இது அவளுக்கு புதிய செய்தி. பாதுகாவலர்களை பொறுத்த மட்டில் சரி என்றாலும், அவர்களின் சாப்பாட்டு செலவைக் கூட நீ ஏற்றுக்கொள்ள மாட்டாயா என்று அவனை கேவலமாக பார்த்தவள் “கஞ்ச பி……” என்று முணுமுணுக்க 
அவள் சொன்னதில் பாதி காதில் விழ “அவங்களுக்கு போதிய அளவுக்கும் அதிகமாக சம்பளம் கொடுக்கிறேன். நான் கொடுக்கிறதா இருந்தா அவங்களுக்கு பிடிச்சதை சாப்பிட்டு இருக்க மாட்டாங்க” அதற்கு மேலும் விளக்கமளிக்க பிடிக்காது அமைதி காக்க மதியும் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள். 
இரண்டு மணித்தியாலங்கள் கடந்த நிலையில் குடித்த பாணம் வேலையை காட்ட ஆரம்பிக்க மதி வாஸ்ரூம் போவதாக அக்ஷையிடம் சொல்லிக் கொண்டு அப்பக்கம் நகர்ந்தாள்.
அந்த ரெஸ்டூரண்ட்டின் பின் பக்கம் அவர்களின் வீடாக இருக்க ரெஸ்டூரண்ட்டுக்கும், வீட்டுக்கும் கம்பியிலான வாயில் வைத்து தடுப்பு போடப்பட்டிருந்தது.  வாஷ்ரூம் சென்றவளின் கால்கள் தானாக அங்கே செல்ல வீட்டை ஆராய்ந்தாள்.
பழைய வீடு தான். முன்பக்க இடத்தில் ரெடூரன்ட் கட்டி இருக்க, பக்க வாட்டில் ஒரு சிறிய வாயில் அமைத்து வீட்டுக்குள் வந்து போக வழி செய்திருக்க, இரண்டு மாடிகளை கொண்டாலும் அளவில் சிறியதாக இருந்தது. மெதுவாக மாடியேறியவள் நோட்டமிட மாடியில் இரண்டு அறைகள் இருக்கவே திறக்க முயற்சி செய்ய ஒரு அறை பூட்டியிருக்க மறு அறை திறந்துக்கொள்ள உள்ளே தலையை விட்டவள் கண்டது  அங்கே அந்த ஆத்மா அமர்ந்து அழுது கொண்டிருப்பதை.
மதியின் கண்களுக்கு தான் தெரிவது அறியாததால் அவளை பார்த்திருக்க மதி “ஹாய்” என்று கையசைத்தாள். 
“உங்க கண்ணுக்கு நான் தெரிகிறேனா” என்றவாறே ஓடி வந்தவள் “என்னை காப்பாற்றுங்கள் என்று கதற ஆரம்பிக்க”
“உதவத்தான் வந்தேன். ஆனால் நீ யார்” என்று மதி கேட்க 
“நான் ஸ்வீட்டி. எங்க அக்காவோட ஆத்மா என் ஆத்மாவை துரத்தி விட்டு என் உடம்ப ஆக்கிரமிச்சு. என்ன இந்த வீட்டுல இருந்து எங்கயும் போகாத படி சிறைசெய்து வச்சிருக்கு”
“என்ன சொல்லுற? உயிரோடு இருக்குற ஒருத்தருடைய உடம்புல ஆத்மா புகுந்து அட்டகாசம் செய்றத பார்த்திருக்கின்றேன். அது எப்படி உன்ன துரத்திட்டு உன் இடத்துல”
“ஐயோ இங்க இருந்து ஒன்றும் பேச முடியாது முதல்ல என்ன இங்கிருந்து கூட்டிட்டு போங்க, அவ வந்துடப் போறா. வாசல்ல மாவிலை கட்டியிருக்கில்ல அத கழட்டுங்க அதுல ஏதோ மந்திரக் கட்டு கட்டி வச்சிருக்கா. அதை கழட்டினால்  தான் நான் வெளில போக முடியும்” என்றவாறே மதியை இழுத்துக் கொண்டு ஸ்வீட்டி ரெடூரன்ட் பக்கம் நகர
இதுவரை தான் சந்தித்த ஆத்மாக்களில் ஸ்வீட்டியின் நிலை வித்தியாசமான நிகழ்வாக இருக்க இதை எவ்வாறு தீர்த்து நிர்மலின் வாழ்க்கையை சரி செய்ய போகிறேன். ஸ்வீட்டி நிர்மலை விரும்புகின்றாளா? இல்லையா?  குழம்பினாள் மதியழகி.

Advertisement