Advertisement

அத்தியாயம் 4
மதியின் வண்டி அக்ஷய் சொன்ன விலாசத்தை அடைய வாயில் இருந்த இரண்டு காவலர்களில் ஒருவன் அவளின் அடையாள அட்டையை பரிசோதிக்க, மற்றவனோ அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டான். 
“வலது பக்கமாக உள்ள வழில போங்க” ஆங்கிலத்தில் சொன்னவாறே அவளுக்கு வாயிலை திறந்து விட, 
அவர்கள் சாதாரண காவலாளிகள் போல் அவளுக்கு தோன்றவில்லை. அவர்கள் காவலாளிகள் போடும் சாதாரண உடையும் அணிந்திருக்க வில்லை. படித்த பட்டதாரிகள் போல் தோற்றமளித்தவர்களின் உடையும் நேர்த்தியாக, காதில் ப்ளூடூத்தோடு பாதுகாப்பு படையினர் போல் இருந்தனர். 
பாதை நீண்டு கொண்டே போக ஆங்காங்கே வீடுகள் தெரிய ஆரம்பிக்க, மதியின் போலீஸ் மூளை சொன்னதை உறுதி படுத்துவதை போல் அந்த ஐந்து ஏக்கர் பரப்பளவில் அவளின் கண்களுக்கு எட்டிய தூரம் வரை பாதுகாப்பு படையினர் சிலர் தென்பட 
“இவ்வளவு பாதுகாப்பான இடத்துல இருக்கான் நம்மள எதுக்கு வர வச்சான்?” யோசனையாகவே வண்டியை வலது புறம் திருப்பியவளின் எண்ணத்தில் நேற்று அலைபேசியில் அக்ஷய் சொன்னது நியாபகத்தில் வந்தது, 
“ஹாய் மதி”
“சாபின்ஸ்பெக்டர் மதியழகி” பெண் சிங்கம் சீற ஒரு நொடி அமைதியாக இருந்த மறுமுனை 
“அக்ஷய் சாம்ராட் ஹியர்” 
“எஸ் மிஸ்டர் அக்ஷய்”
“மிஸ் மதி. நான் கமிஷ்னர் கிட்ட பேசிட்டேன். நீங்க போர்மல் ட்ரெஸ்ஸில் வரலாம். யூனிபார்ம் அவசியமில்லை” என்றவன் அலைபேசியை அனைத்திருந்தான்.
“என்ன நினைச்சி கிட்டு இருக்கான் இவன்? ஜனாதிபதியென்றா? ப்ரைமினிஸ்டர் என்றா? அவன் இஷ்டத்துக்கு ஆடர் போடுறான். பதில் பேச முன்பே போன வேற கட் பண்ணுறான். கொஞ்சம் கூட மேர்னர்ஸ் தெரியாதவன்” கோபமாக கத்தியவாறே கமிஷ்னரை அழைத்து அரைமணித்தியாளமாக அக்ஷையை வசை பாடியவள் கமிஷ்னர் சொன்ன “டூ வாட் ஐ சேய்” இல் அலைபேசியை அனைத்து விட்டு அவரையும் வசை பாடலானாள். 
“யாரு டி அந்த அக்ஷய்” லட்சுமி ஆவலாக கேக்க 
அன்னை அவளிடம் என்ன எதிர் பார்க்கின்றாள் என்று நொடியில் புரிந்துக் கொண்ட மதியோ அக்ஷையின் மேல் இருந்த கடுப்பில் இன்ஸ்பெக்டர் சித்ரா சொன்ன தகவலை சொல்ல முகம் சுளித்த முத்துலட்சுமி 
“கருமம் கருமம் இதெல்லாம் என் காதுல கேக்க வேண்டி இருக்கே, உனக்கு வந்து விடியிறதெல்லாம் இப்படி இருக்கு. போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணோமோ!” 
“போன ஜென்மம் என்ன? இந்த ஜென்மத்துலயே நீ எனக்கு பண்ண பாவம் ஒன்னு போதும்” ராஜவேலு முத்துலட்சுமியை சுற்றி சுற்றி வந்து சொல்ல 
கண்களில் மிரட்ச்சியோடு “மதி உங்க அப்பா கிணத்துக்குள்ள இருந்து பேசுற மாதிரி கேக்குது டி” 
“போய் தூங்குமா… ” அன்னையை அனுப்பியவள் தந்தையை முறைத்து விட்டு தனதறைக்குள் புகுந்தாள். 
ஒருவாறு அக்ஷய்யின் வீட்டையடைய மதியின் புருவங்கள் தானாக உயர்ந்தது. வீடோ முற்றிலும் கண்ணாடியில் ஆக்கப் பட்டிருக்க உள்ளே இருப்பது வெளியே நன்றாக தெரிந்தது. 
“வாழ்வுதான்” முணுமுணுத்தவாறே உள்ளே நுழைய முற்பட்டவளை கை நீட்டி தடுத்தான் ஒருவன் 
“யார் நீ…”
“சாபின்ஸ்பெக்டர் மதியழகி” 
“யார் மதி இந்த ரெண்டும் கெட்டான்” ராஜவேலுதான் கேட்டான். 
மதியும் அவனைத்தான் ஆராய்ச்சி பார்வை பாத்திருந்தாள். கோட் சூட்டில் இருந்தாலும் உள்ளே பெண்கள் அணியும் சட்டையை அணிந்து கழுத்தில் மாலையும், விரல்களுக்கு நிறப் பூச்சும், உதட்டில் லிப்ஸ்டிக், கண்மை வேறு பூசி இருக்க, தான் ஒரு திருநங்கையென்று சொல்லாமல் சொன்னான் 
வாயில் சுவிங்கத்தை மென்றுக் கொண்டிருந்தவன் “எதுக்கு வந்திருக்குற? டொனேசனா?” கொஞ்சம் எள்ளலாக ஒலித்தது அவன் குரல் 
“மிஸ்டர் அக்ஷய்க்கு பாதுகாப்பு வழங்க வந்திருக்கேன்” குரலில் கம்பீரம் தெறிக்க மதி. 
ஏதோ பெரிய ஜோக் போல் சத்தமாக சிரித்தவன் கையை மடக்கி வாயில் வைத்து சிரிப்பதை நிறுத்தி “ஆர் யு கிட்டிங்” சுவிங்கத்தை மெல்ல ஆரம்பிக்க, 
கட்டுக்கடங்காத கோபம் மதிக்கு சுர்ரென்று ஏற, பல்லைக் கடித்து பொறுத்தவள் “ஹூ  ஆர் யு மேன்?” அமைதியாகவே கேட்டாள்.  
“இவன் மேனா? வுமனானே அவனுக்கு தெரியல, இவனையெல்லாம் மதிச்சு பேசிக் கிட்டு தல்ல ரெண்டு தட்டிட்டு உள்ள போ மதி” ராஜவேலு கடுப்பாகி சொல்ல தந்தையின் பேச்சை செவி சாய்க்காது வழி மரித்தவனின் பதிலை எதிர்பார்த்து நிற்க 
“வெல் ஐம் பிர்ஜு. இங்க எல்லாமே நான் தான். என் கீழ தான் எல்லாரும் வேல பாக்கணும்” 
அவன் மேலும் பேசும் முன் கை நீட்டி தடுத்த மதி “போய் உன் பாஸ் கிட்ட சொல்லு சப்பின்ஸ்பெக்டர் மதியழகி வந்திருக்காங்க னு” சொன்னவள் அங்கே இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கண்ணில் இருந்த கூலரை தலைக்கு கொடுத்தாள். 
அவளை ஒரு பார்வை பார்த்தவன் உள்ளே செல்லாது அங்கேயே நிற்க அலைபேசியை எடுத்தவள் அக்ஷய்க்கே அழைத்து விட்டாள். 
“என்ன மேடம் வேலைக்கு வர ஐடியாவே இல்லையா ஆல்ரெடி ஐஞ்சு நிமிஷம் லேட்” மதியை குற்றம் சாட்ட, 
“எக்ஸ் கியூஸ் மீ மிஸ்டர் அக்ஷய். சொன்ன நேரத்துக்கு நான் வந்துட்டேன். பட் உங்க எம்ப்லாய் கிட்ட என் வருகையை பத்தின தகவலை சொல்ல நீங்க தான் மறந்துட்டீங்க, மிஸ்டர் பிர்ஜு என்ன என்கொய்ரி பண்ணி உள்ள விட மாட்டேன்னு இங்க தான் நிக்குறாரு” என்றவள் அவனின் பதிலையும் எதிர்பார்க்காது அலைபேசியை துண்டித்திருந்தாள். 
உண்மையில் அக்ஷய் பிர்ஜூவிடம் மதியின் வரவை சொல்லி இருந்தான். ஆனால் இப்படியொரு அழகியை எதிர் பார்க்காதவன் அவளை சீண்டவேன்றே வழி மறிக்க, அவள் நேரடியாக அக்ஷயிடம் பேசுவாள் என்று எதிர்ப்பு பார்க்காதவன் தனது அலைபேசி அடிக்கவே நடுங்கிப் போனான். 
“பிர்ஜு லெட் ஹேர் இன்” என்ற அக்ஷய் அலைபேசியை நிறுத்தியிருக்க, அவனின் வாக்கை வேதவாக்காக கொண்டு மதியை மரியாதையாகவே அவனிடம் அழைத்து சென்று விட்டவன் அவர்கள் என்ன பேச போகிறார்கள் என்று ஆவலோடு அங்கேயே நின்று கொண்டான். 
உள்ளே நுழைந்த மதி அவ்வறையை ஆராய அது அவனுடைய காரியாலயம் போலும். நேர்த்தியாக கோப்புகள் அடுக்கப்பட்ட அலுமாரியும், மேசையும், சோபாவும் என்று ஆடம்பரமாகவே காட்ச்சியளித்தது. அறையை ஆராய்ந்தவள் அக்ஷையை நோக்க 
அக்ஷய் நைட் ட்ரெஸ்ஸில் இருப்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க வில்லை. கையில் ஒரு காப்பி மக்கோடு அவளுக்கு முதுகு காட்டி இருந்தவன் மானிட்டரில் வீட்டை சுத்தியுள்ள சீசீடிவி கேமராக்களைத்தான் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். 
“அப்போ இவனுக்கு நான் வந்தது தெரியும். தெரிஞ்சும் நா போன் பண்ணுறவரை வெயிட் பண்ணி இருக்கான்” மதிக்கு கோபம் தலைக்கேற அக்ஷையின் முதுகை தான் முறைக்க முடிந்தது. 
பிர்ஜு  அக்ஷையிடம் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்களாகி இருக்க இன்று தான் ஒரு பெண் அவனை நேரடியாக சந்திக்க வந்திருக்கின்றாள். தொழில் துறையில் சந்திப்பவர்களை கூட வீடியோ காலில் தான் தொடர்ப்பு கொள்வான். அப்படியே சந்திக்க வேண்டி இருப்பினும் அவன் பி.ஏ. பாஸ்கர் தான் சந்திப்பான். மதி சந்திக்க வந்தது மட்டுமல்லாது, நேரடியாக அவனை அலைபேசியில் அழைத்தது சுவாரஸ்யத்தை கூட்டி இருக்க, அங்கேயே நின்றவனை அக்ஷையின் குரல் அழைத்தது. 
“பிர்ஜு மீட் மிஸ் மதியழகி. எங்க ரெண்டு பேருக்கும் ப்ரேக்பஸ்ட் ரெடி பண்ணு” அவனை அனுப்ப 
“என்னது பாஸ் கூட ஒரு பொண்ணு ப்ரேக்பஸ்ட் சாப்பிட போகுதா?” என்ற ஆச்சரிய பார்வையுடன் அகன்றான் பிர்ஜு. 
மதி அமைதியாக நின்றிருக்க “உக்காரு மதியழகி” சாதாரணமாகவே சொல்ல 
“மிஸ்டர் அக்ஷய் நான் உங்க பாதுகாப்புக்கு வந்திருக்கேன். மறந்துட வேணாம்” 
“நான் என்ன உன் தோழியா கேசுவல பேசுற” என்பதை நியாபகப் படுத்தும் விதமாக இருந்தது அவள் பேச்சு. 
அக்ஷையின் உதட்டின் ஓரம் புன்முறுவல் பூத்து மறைய கையில் இருந்த காபியை உறிஞ்சியவாறே! மதியை ஆராய்ந்தான். 
“போர்மல் ட்ரெஸ்ஸில் வர சொன்னா, என்ன பாண்ட் ஷர்ட்டுல  வந்திருக்க” என்றது அவன் பார்வை 
“சேலைக் கட்டி வர இங்க ஒன்னும் பொண்ணு பாக்கும் படலம் நடக்கல, ஐம் ஒன் டியூட்டி” என்றது மதியின் பதில் பார்வை. 
“மதி மேடம் கன் எல்லாம் இருக்கா?” வேண்டும் என்றே மேடத்தில் அழுத்தத்தைக் கூட்ட 
“எஸ் ஒப்கொர்ஸ்”
“இட்ஸ் ஓகே கீப் திஸ் டூ. என்னோட பேர்ல தான் இருக்கு” என்றவன் ஒரு ரிவோல்வரை நீட்ட அதை வாங்க மறுத்தாள் மதியழகி. 
அலைபேசியை உயிர்ப்பித்து ஸ்பீக்கர் மூடில் போட்டவன் கமிஷ்னரை அழைத்துப் பேச பல்லைக் கடித்தாள் மதி. 
“மதி அடிக்கடி என்ன தொந்தரவு செய்யாத. அக்ஷய் சொல்றத செய்” என்றவர் அலைபேசியை துண்டித்திருக்க, அக்ஷையை நன்றாக முறைக்கலானாள். 
அதையெல்லாம் பொருட்படுத்தாது அவளின் கையை தொட்டு துப்பாக்கியை கையில் வைத்தவன் பாஸ்கரை அழைத்து அவளை அறிமுகம் செய்து வைத்தவன் “என்னோட டுடே ஷேடுவல் மேடமுக்கு சொல்லு” என்றவன் வெளியேறி இருந்தான். 
டுடே ஷேடுவல்  என்று பாஸ்கர் சொன்னவைகள் மதியை எரிச்சல் ஊட்டியது. அந்த ஐந்தேக்கருக்குள்ளேயே  தான் அக்ஷையின் அத்தனை வேலையும் இருந்தது. இங்கே இருக்கும் பாதுகாப்புப் படையினரே அவன் ஒருத்தனுக்கு அதிகம். இதில் தான் என்ன அவனுக்கு பாதுகாப்பளிப்பது. பிர்ஜுவின் கேலிச் சிரிப்பு மதியை தொடர்வது போலவே இருக்க, பாஸ்கரை ஏறிட்டவள்
“உங்க பாஸ்க்கு ஏற்கனவே பாதுகாப்புக்கு நிறைய பேர் இருக்காங்களே! என்ன எதுக்கு வரச் சொன்னாரு”   
மதியிடமிருந்து அப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத பாஸ்கருக்கும் இதே கேள்விதான் மண்டைக்குள் வண்டு குடைவது போல் இருந்தது. அக்ஷய் எந்த நேரத்தில் என்ன செய்வான், என்ன மாதிரியான முடிவெடுப்பான் என்பதை பாஸ்கரால் சரிவர இன்னும் புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்க, கொஞ்சம் நேரத்துக்கு முன் மதியழகியை அறிமுகப் படுத்தும் போதுதான் அவள் எதற்க்காக வந்திருக்கின்றாள் என்பதையே அவன் அறிந்துக் கொண்டான். இதில் மதி கேக்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வதாம். 
பாஸ்கரின் அமைதி மதியை எரிச்சலூட்ட “சரியான கல்லூலி மங்கனா இருக்கான். பாஸுக்கேத்த பி.ஏ.” முறைத்து விட்டு “அந்த நகரத்துக்கு வெளியே உள்ள நாலு ஏக்கர் நில விஷயம் என்ன ஆச்சு பாஸ்கர்?” அன்று அக்ஷய் பேசியது காதில் விழுந்திருக்க, மதி வேண்டு மென்றே கேக்க பாஸ்கர்தான் திண்டாடிப் போனான். 
அக்ஷய் பேசும் போது மதி அருகில் இருந்தாள் என்று அறியாத பாஸ்கரோ! “பாஸ் பிசினஸ் விஷயங்களை இவங்க கிட்ட பகிர்ந்தது இருக்காங்க என்றால்? அவருக்கு இவங்க ரொம்ப முக்கியமானவங்களா இருப்பாங்க போல இருக்கே!” ஆழ்ந்து யோசித்தவனுக்கு கிடைத்தது ஒரே பதில்.
“பாஸ் இதுவரை எந்த பெண்ணையும் அழைத்து வந்ததுமில்லை., எந்த பெண்ணிடமும் நின்று பேசியதுமில்லை. ஒரு வேல இவங்கள காதலிக்கிறாங்களோ!” சரியாக தவறாக கணித்தான். 
மதி தன்னையே உற்று பாத்திருப்பதை கண்டு பாஸ்கர் “இன்னும் பேச்சு வார்த்த நடத்திக் கொண்டு தான் இருக்கோம் மேடம்” அந்த மேடத்தில் அழுத்தத்தை கூட்ட
“அந்த இடத்தில் என்ன செய்ய பிளான்?” ஏதோ அக்ஷையை பற்றி மேலும் சில விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாமே என்று மதி வினவ, 
 “ஒரு சில்ட்ரன் பார்க் கட்டலாம் னு பாஸ் சொன்னாரு” பவ்வியமாக பதில் சொன்னான் பாஸ்கர்.
மதி மேலும் என்ன கேட்டிருப்பாளோ! பாஸ்கரின் அலைபேசி அடிக்கவே அதை காதில் வைத்தவன் சொன்ன செய்தியை அப்படியே மதிக்கு பரிமாற்றினான். 
“பாஸ் உங்களுக்காக டைனிங் டேபிளில் வைட் பண்ணுறாராம்” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சாப்பாட்டறையில் விட்டு விட்டு வெளியேறி இருக்க மதி அமராமல் நின்று கொண்டாள். 
அக்ஷய் குளித்து தயாராகி அயர்ன் செய்த பாண்ட் ஷர்ட்டில்,  படிய வாரிய தலை முடியும், கையில் ரோலக்ஸ் வாட்ச்சும், காலில் ஷூவும் அணிந்து ஆணழகனாக இருந்தான். அவன் பூசியிருந்த வாசனை திரவியமோ! மனதை நிறைக்கும் மனம் வீசிக் கொண்டிருக்க, அவனின் நடையும், பேச்சும் அவனின் கம்பீரத்தையும், ஆளுமையையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.   
“ப்ளீஸ் சிட் மதி” அக்ஷய் சொல்ல 
“நோ சார் ஐ ஹாட் மை மீல்” 
அவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன் “மிஸ் மதி என் பாதுகாப்புக்கு தானே வந்து இருக்கீங்க? சாப்பாட்டுல யாராச்சும் எனக்கு விஷம் வச்சா? நா அத சாப்பிட்டு மேல போகவா? பாதுகாப்புக்கு இருக்குற நீங்கதான் டெஸ்ட் பண்ணி சொல்லணும்” அமர்ந்திருந்தவன் கழுத்தைக் கூட திருப்பாது கண்களால் அவளை பார்த்தவாறே சொல்ல
அவனை முயன்ற மட்டும் முறைத்தவள் “நா என்ன லேப் எலியா டா?” என்று முணுமுணுக்க அது அவன் காதில் விழுந்தாலும் கண்களாளேயே “நான் சொன்னதை செய்” என்றவாறு நின்றிருந்தான்” 
“மதி சாப்பாட்டுல விஷம் ஒன்னும் இல்ல உக்காந்து சாப்பிடு ஐட்டங்களை பாரேன் ராஜ போஜனம்” ராஜவேலு மதியின் காதுக்குள் வந்து சொல்ல அவளும் அப்பொழுதுதான் மேசையை கவனித்தாள். 
வேக வைத்த மரக்கறியும், பழங்களும், மூன்று ஜூஸ் வகைகளும். வேக வைத்த மீனும், சுட்ட பானும், பாலும் மேசையை நிறைத்திருக்க, 
“இவையெல்லாம் ஒருவனுக்கா? எல்லாவற்றையும் சாப்பிடுவானா? சாப்பிட்டு எப்படி இப்படி உடம்ப வச்சிருக்கான்?” ஒரு நொடியில் மதியின் மனம் ஆயிரம் கேள்விகளை எழுப்ப தன் எண்ணப்போக்கை நினைத்து நொந்துக் கொண்டவள் 
“ஏழைங்க ஒரு வாய் ஒழுங்கா சாப்பிட இல்லாம கஷ்டப் படுறாங்க இங்க என்னடான்னா ஒருத்தனுக்கு அளவுக்கதிகமாகவே இருக்கு” 
“என்ன மிஸ் மதி. கண்ணால பாத்தே வயிறு நிறைஞ்சதா? ட்ரை சம்”  என்றவன் அவளுக்கு பரிமாறியவாறே தானும் சாப்பிட்டான். 
வேலைக்கு வந்தவளை சரிசமமாக உக்கார வைத்து கவனிக்க வேண்டும் என்ற கட்டாயம் அக்ஷய்க்கு இல்லை. மதி சம்திங் ஸ்பெஷல் அவளின் மனதில் தன்னை பற்றி நல்லெண்ணம் இருந்தால் தான் அவளின் ரகசியங்களை பகிர்வாள் என்று அக்ஷய் கணக்குப் போட சாப்பிடச் சொன்னால் அவள் கண்டிப்பாக மறுப்பாள் என்று அறிந்தே!  விஷம் என்ற புரளியை கிளப்பினான்.
பிர்ஜுவின் மேற்பார்வையில் அவனுக்கு வரும் உணவை பற்றி அவன் கவலைக் கொண்டதே இல்லை. ஏனெனில் முதலில் சாப்பிடுவது பிர்ஜு என்பது அவர்களுக்குள் இருக்கும் ரகசியம்.
“ஐயோ ஐயோ இந்த அநியாயத்தை நான் யார் கிட்ட போய் சொல்வேன்? என் அக்ஷய என் கிட்ட இருந்து பரிக்கவென்றே வந்திருக்கிறாளே! அந்த மேனாமினிக்கி. அவ நாசமா போக, எடுபட்ட சிறுக்கி…, விளங்கா மூஞ்சி. நல்ல இருப்பாளா? அவ மூஞ்சியும் மொகரக்கட்டையும்” தனதறையில் தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தான் பிர்ஜு. 
அவ்வறையை கடக்கும் போது அழுகை சத்தம் கேட்டு பாஸ்கர் கதவைத் தட்ட அவன் மேல் சாய்ந்து புலம்பித்தள்ளினான் பிர்ஜு. கண்ணாடியிலான வீடு என்பதால் இவர்கள் கட்டிப் பிடித்திருப்பது போல் தோற்றமளிக்க ரவுன்சில் வந்த காவலாளி ஒருவன் இவர்களைக் கண்டு சிரித்து விட்டு நகர பிரஜூவை தள்ளி விட்டான் பாஸ்கர். 
“அப்பா… ஒரு நிமிசத்துல என் கேரக்டரையே! தப்பா நினைக்க வச்சிட்டான்” தலையை உலுக்கியவன் “உனக்கு இப்படியொரு எண்ணம் இருக்கு னு பாஸ்க்கு தெரியுமா?”
பாஸ்கரின் கேள்வியில் திருதிருவென முழித்த பிர்ஜு “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ என் விசயத்துல தலையிடாத” 
“சிலதுக்கு பட்டாதான் புரியும்” பிர்ஜுவின் காதுபட சொன்னவன் அவ்வறையை விட்டு வெளியேற 
“அந்த மேனாமினிக்கிய ஒருவழி பண்ணி இந்த வீட்டை விட்டே துரத்தல நான் பிர்ஜு இல்ல” சபதம் எடுத்தான் பிர்ஜு. 
காலை சாப்பாட்டை முடித்துக் கொண்ட அக்ஷய் அன்றைய முக்கிய வேலையாக மதியை அழைத்துக் கொண்டு அவனுடைய ஐந்து ஏக்கர் நிலம் முழுவதும் சுத்திக் காட்டினான். 
அது இருவர் செல்லக் கூடிய ஒரு மினி ஜீப் வண்டி அக்ஷய் வண்டியை செலுத்த முன்னாடி அமர்ந்திருந்தாள் மதி. ஒரு பெரிய பங்களாவைக் கட்டினால் கூட இடம் எக்கச்சக்கமாக எஞ்சும் என்றிருக்க பிரித்து பிரித்துக் கட்டி இருந்தான் அக்ஷய். 
அவனின் கண்ணாடி வீட்டில் காரியாலய அறையும் அவனுடைய படுக்கையறையும், மினி சமையல் அறையும், உடற்பயிற்சியறையும், தொலைக்காட்ச்சி பார்க்கவென ஒரு அறையும், மேலதிகமாக ஒரு படுக்கையறை மாத்திரமே இருக்க இரண்டு படுக்கையறைக்கு குளியலறை அறைகளோடு சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. 
சமையலறை ஒரு இடத்திலும், வரவேற்பறை ஒரு இடத்திலும், வாகனம் நிறுத்தவென இரண்டு இடங்கள் இருந்தது. நேர்த்தியான தார் பாதையானாலும் பூமரங்களும், பழமரங்களும் ஒழுங்காக பாராமரிக்கப் படுகின்றன. ஜெனரேட்டரின் மூலம் தான் மின்சாரம், நீர் கூட நிலத்தடி நீர் என்று எல்லா வற்றிலும் கவனமாக இருந்தான்.  
சுத்திக் காட்டியவாறே அந்த இடத்தை பற்றியும், என்னென்ன எங்கே அமைந்திருக்கின்றன என்பதையும் ஒழுங்குமுறையாக விவரித்தவன். அனைத்தையும் மனதில் பதிந்துக் கொள்ளுமாறு சொல்லி அவளை அழைத்துக் கொண்டு வந்து கண்ணாடி வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் சொன்னதில் 
“நோ சார் உங்க கிட்ட வேல பார்க்க எனக்கு இஷ்டம் இல்ல. நான் ரிசைன் பண்ணுறேன்” என்று இறங்கி நடக்கலானாள் மதியழகி. 
 

Advertisement